19.11.2018 துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாதுப் பெருவிழா
துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் மீலாதுப் பெருவிழா இன்ஷா அல்லாஹ் வரும் 19.11.2018 திங்கட்கிழமை மாலை 7.30 மணியளவில் இஷா தொழுகைக்குப் பின்னர் நடக்க இருக்கிறது. இந்த விழா துபாய் தமிழ் பஜாரில் அமைந்துள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி) நடக்கிறது.
இந்த விழாவுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகிக்கிறார்.
தாயகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தரும் சென்னை மந்தவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஜ் கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி ஹழ்ரத் மீலாது விழாப் பெருவிழாவில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இந்த விழாவில் அனைத்து ஜமாஅத்தார்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு பள்ளியின் மேல்மாடியில் தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 050 3525305 / 055 8007909 / 055 6243580 / 050 51 96433 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433