அக்டோபர் 12, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் வரும் 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரத்ததான முகாம் துபாய் அல் நக்தா பகுதியில் உள்ள டேலண்ட் ஜோன் நிறுவனத்தில் நடக்க இருக்கிறது. இந்த ரத்ததான முகாம் துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.
அமீரகத்தில் விபத்து உள்ளிட்டவை காரணமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ரத்தத்தின் தேவை அத்தியாவசியமாக இருந்து வருகிறது.
உயிர்காக்க உதவும் இந்த பணியில் இணைந்து ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 405 88 95 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.