துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் சார்பில் நாளை வெள்ளிக்கிழமை மாலை நூல் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது.
அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்களின் ஞான கருவூலமாக இருந்து வருவது மஸ்னவி ஷரீப் என்ற நூலாகும். இந்த நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நூலின் நான்காம் பாக அறிமுக நிகழ்ச்சி நாளை வெள்ளிக்கிழமை மாலை 7.15 மணிக்கு நாசர் ஸ்கொயர் பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ஓட்டலில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் ஏ. ஹமிது யாசின் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
நூல் பற்றிய சிறப்புரையை துணைத்தலைவர் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் வழங்குகிறார். சமூக ஆர்வலர்கள் கல்லிடைக்குறிச்சி முஹம்மது மைதீன், இளையான்குடி அபுதாகிர் ஆகியோர் ஆய்வுரை வழங்க இருக்கின்றனர்.
விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுறை நிகழ்த்துகிறார்.
அலுவலக மேலாளர் தேவிபட்டினம் நிஜாம் அக்பர் உள்ளிட்ட குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பெண்கள் கலந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.