பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

3 views
Skip to first unread message

Muduvai Hidayath

unread,
Oct 30, 2019, 11:40:58 PM10/30/19
to

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மனைவி மரணம் : துபாய் ஈமான் அமைப்பு இரங்கல்

துபாய் : 

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் ஜி. லத்தீபா பேகம் (வயது 72)  நேற்று (30-10-2019) புதன்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சியில் உள்ள சுந்தரம் மருத்துவமனையில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் 

அவரது உடல் திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் நல்லடக்கம் இன்று  (31-10-2019) வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹுசைனி ஜூம்மா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு  94434 45697, 94435 29734

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் என்னும் சுவனத்தை வழங்கவும்,
அன்னாரை பிரிந்து வாடும் தலைவருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் "ஸப்ரன் ஜமீலா" எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் ஈமான் அமைப்பின் சார்பில் பிரார்த்திக்கின்றோம்.



--  நிர்வாகக் குழு,
ஈமான் கல்சுரல் செண்டர்,
துபாய் 

Reply all
Reply to author
Forward
0 new messages