ஜனவரி 18, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் ரத்ததான முகாம்
துபாய் : துபாய் ஈமான் கல்சுரல் செண்டரின் சார்பில் ஜனவரி 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு ரத்ததான முகாம் துபாய் சலாஹுதீன் சாலையில் உள்ள அஸ்கான் ஹவுசின் கீழ் நடக்க இருக்கிறது. இந்த ரத்ததான முகாம் துபாய் ரத்ததான மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
இந்தியாவின் 70-வது குடியரசு தினத்தையொட்டி இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் அமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.
அமீரகத்தில் விபத்து உள்ளிட்டவை காரணமாக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ரத்தத்தின் தேவை அத்தியாவசியமாக இருந்து வருகிறது.
உயிர்காக்க உதவும் இந்த பணியில் இணைந்து ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் 050 352 5305 / 050 51 96 433 / 050 548 7083 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.