கற்பனைக்கு எட்டாத அற்புதம், திருமயிலை கற்பகம்

167 views
Skip to first unread message

Adiyen -- A.Muthuchamy

unread,
Sep 19, 2009, 2:22:13 AM9/19/09
to இல்லம் (your HOME)
கற்பகமே ....
கற்பகமே....
கற்பனைக்கு எட்டாத
அற்புதமே.....

ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

திருமயிலை தல புராணம்.
இன்று, இறைவி, இறையனாரின் திருவிளையாடலில் ஒன்றினை காண்போம்....

பிறை கொண்டான்...
வார்சடையில் புனல் கொண்டான்...
நுதல் நடுவே கனல் கொண்டான்...
தன் திருவடியாய் மறை கொண்டான்...
கைத்தலத்தில் மான் மழுவும் எம்முடைய இறை கொண்டான்....
அன்னவனின் இணையடிகள் போற்றி...போற்றி.....

திருக்கயிலை மாமலையில் இறையனார் அன்பே வடிவாக உலகுய்ய பஞ்சக்ருத்ய நடனமான
திருத்தாண்டவம் அருளுகையில், உலகினை ஈன்ற உலகம்மை அங்கு எழுந்தருளி
அய்யனுக்கு தண்டன் சமர்பிக்கிறாள். தன் மணாளனிடம் பிரணவத்திற்கு பொருள்
உரைக்குமாறு வேண்டி நின்றாள். இறையனாரும் கருணை கூர்ந்து அம்மைக்கு
உபதேசம் புரியத் திருவுள்ளம் கொண்டார்.
அம்பிகையும் இறையனாரை குருவாக பாவித்து மிகுந்த பணிவுடன் சிஷ்ய பாவத்தில்
அய்யனின் திருவுரையை கேட்கலானாள்.

உபதேசம் செய்கின்றான்...
ஐயன் உமையாளுக்கு...தன் இணையாளுக்கு ....
ஞான உபதேசம் செய்கிறான்....

(இதனை படிக்கையில், நமக்கு ஒரு சந்தேகம்
எழும்....அதென்ன...லோகமாதவுக்கே...பிரணவத்திற்கு பொருள் தெரியாதா??
சகலமும்...அவள் தானே...அந்த பிரணவமும் அவள் தானே...அப்படி இருக்கையில்
இப்படி விநோதமாக நடந்து கொள்வதன் தாத்பர்யம் என்ன??
...
சிஷ்யன், தன் குருவிடம், எந்த முறையில் பாடம் கேட்க வேண்டும் என்றும்,
புவியில் சிவ பூஜை செய்யும் முறையினை (சிவ ஆகமம்) எடுத்து இயம்பவும்
தான் அன்னையும் ஐயனும் இப்படி ஒரு திருவிளையாடலை புரிகின்றனர். லலிதா
த்ரிசதி ஸ்தோத்ரத்தில், காமேஸ்வர விலாசினி என்று ஒன்று திருநாமம்
உண்டு...அதாவது காமேஸ்வரனை பக்தர்களுக்கு அறியப்படுத்துபவள். அதோடு
நில்லாமல் அவரை பூசனை செய்யும் முறையினையும் எடுத்து இயம்பவே இப்படி ஒரு
நாடகம்.)

உபதேசம் நடந்துகொண்டிருக்கும் பொழுது, கயிலை மாமலையில் அழகிய மயிலொன்று
தன் தோகையை விரித்து நடனமாடத் தொடங்கியது. இதனைக்கண்ட அன்னை,
உபதேசத்தில் மனம் செலுத்தாமல், ஆடும் மயிலில் தன் கவனத்தை செலுத்தினாள்.
இது கண்டு, சினம் கொண்ட இறையனார், அம்மையை பூலோகம் சென்று மயிலாய்
ஜனிக்கும்படி சாபம் (அன்பு கட்டளை என்று தான் சொல்ல வேண்டும்) இட்டார்.
(சகல லோகத்திலும் மிகுந்த அழகுடைவள் என்பதால், மஹா திரிபுரசுந்தரி என்ற
திருநாமம் கொண்ட அன்னை, மயிலின் அழகை கண்டு வியந்தாளாம்!!!!! என்னே ஒரு
நாடகம்???)

அங்கொரு மயிலாட....
அன்னையின் மனம் நாட....
சங்கரன் கோபம் கொண்டார்....
மயிலாய் ஜனித்திட சாபம் தந்தார்....
செய்பிழை பொருத்தாள பைரவி சிவகாமி...
கைகளை துதித்தாலம்மா ... ஐயன் கருணையில் உரைத்தானம்மா....

ஆயினும் தன் தவறிக்காக அய்யனிடம் மன்னிப்பு கோரினாள். ஐயனும் கருணை
கூர்ந்து, " நீ புவியில் புன்னை வனத்தில் மயிலாய் ஜனிக்கும் பொழுது,
அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றும். அதனை மலர் தூவி வழிபட்டு சாபம்
நீங்கப்பெருமாறு அருளினார்.

நீ புன்னை வனம் சென்று புள்ளி மயிலாகி
உன் அங்கம் அசைந்தாடும் போதிலே...
சிவ லிங்கம் தோன்றும் புவி மீதிலே...
அதை வண்ண மலர் தூவி
வாழ்த்தி இசை பாடி....
உன்னை ஆட்கொள்ளும் நாளிலே...
நான் வந்து தோன்றுவேன் நேரிலே....

அந்த கட்டளையை சிரமேற்கொண்டு அன்னை பூவுலகம் எழுந்தருளினாள். மலர்களே
இல்லாமல் சோக ரசத்தில் ஆழ்ந்திருந்த புன்னை வனம், அன்னையின் திருவடி
ஸப்ரிஸத்தால்...அவளது திருவடியின் அநுக்ரஹ விசேஷத்தால்
பூத்துக்குலுங்கியது. மயிலாய் வந்த அன்னை, தன் அலகினால் மலர் கொய்து
இறையனார் திருமேனிக்கு அர்ச்சனை புரிந்தாள்.

சுவாமிக்கு இடமாய் சந்ததம் வாழ்பவள் ....
பூமிக்கு வந்தாள் மயிலாக .....
பட்ட புன்னை வனமெல்லாம் மலராக....
தன் அலகுகலாலே மலர் பறித்தாளே....
ஆண்டவன் சேவடி சேர்த்தாளே...
தன்னை அண்டிய சாபத்தை தீர்த்தாளே....

இறைவியை பிரிந்து வருந்திய இறையனாரும், (தானே சங்கல்பம் செய்து அதன் படி
நாடகத்தை நடத்தும் ஐயன் வருந்தினாராம்!!!!!) கபாலம் ஏந்தி பிக்ஷாடனர்
திருகோலத்தில், புன்னை வனத்துக்கு எழுந்தருளினார். மயிலாய் திரு அவதாரம்
கண்டருளி, தன்னை வழிபடும் அன்னையை ஆட்கொள்ள திருவுள்ளம் கொண்டு, அவள்
பூசனை செய்த லிங்கத் திருமேனியிலிருந்தே கபாலீஸ்வரர் என்னும்
திருநாமதேயத்துடன் தோன்றி, உலகம்மையை திருமணம் புரிந்தருளினார்.
அன்னையும், தன்னை வழிபடும் அன்பர்களுக்கு இம்மைக்கு தேவையான சகல
சம்பத்தும் அருளி, மறுமைக்கு வீடுபேறும் (முக்தி) தந்தருளத் திருவுள்ளம்
கொண்டு, கற்பகாம்பாள் என்ற திருநாமத்துடன் அய்யனின் திருக்கரம்
பற்றினாள்.

நல்ல மயிலாபுரி என்னும் இந்த இடம்...
அன்னை மயிலாய் அன்று வந்த இடம்...
கற்பகம் கபாலி இணைந்த இடம்....
இது அற்புதம் ஆயிரம் நிகழ்ந்த இடம்....

இன்றும் திருமயிலை திருத்தலத்தில், வெள்ளிகிழமை தோறும், மறைமலர்ப்
பதவல்லி, அடியவர்க்கருளும் பொற்பதவல்லி, திருமயிலை கற்பகவல்லி புன்னை
வனநாதர் திருச்சந்நிதிக்கு எழுந்தருளி சிவ பூஜை செய்வதை காணலாம்.

ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
--
Regards,
Muthu.

Message has been deleted

Adiyen -- A.Muthuchamy

unread,
Sep 19, 2009, 4:00:04 AM9/19/09
to இல்லம் (your HOME)
kandippa...muyarchi seigiren....
தீக்ஷா விவரம், சக்தி பிரபாவம் endraal...enna enbadhai..adiyenukku
vilakka vendumaai panivanbodu kettuk kolgiren...


On Sep 19, 12:51 pm, kaazhi yuran <kaazhiyu...@gmail.com> wrote:
> அன்புடை முத்துசுவாமி ஜி
>
> முந்திய கட்டுரை அளவிற்கே இதையும் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
>
> தல புராணத்தோடு, தீக்ஷா விவரம், சக்தி பிரபாவம் என கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து
> எழுதினால் உங்களது ஒவ்வொரு கட்டுரையும் மிளிரும்.
>
> 2009/9/19 Adiyen -- A.Muthuchamy <muthucham...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Adiyen -- A.Muthuchamy

unread,
Sep 19, 2009, 4:02:17 AM9/19/09
to இல்லம் (your HOME)
annai karpagam vazhangum dheekkshaiyinai ketkireergala?


On Sep 19, 12:51 pm, kaazhi yuran <kaazhiyu...@gmail.com> wrote:
> அன்புடை முத்துசுவாமி ஜி
>
> முந்திய கட்டுரை அளவிற்கே இதையும் எழுத வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
>
> தல புராணத்தோடு, தீக்ஷா விவரம், சக்தி பிரபாவம் என கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து
> எழுதினால் உங்களது ஒவ்வொரு கட்டுரையும் மிளிரும்.
>
> 2009/9/19 Adiyen -- A.Muthuchamy <muthucham...@gmail.com>
>
>
>

Reply all
Reply to author
Forward
0 new messages