மர்க்கட ஞாயம்

95 views
Skip to first unread message

Thamizth Thenee

unread,
Dec 26, 2007, 3:01:45 AM12/26/07
to இல்லம் (your HOME)




பக்தி என்று நினைத்தவுடன்
பலவகை பக்திகள் நினைவுக்கு வருகிறது
இறைவனைப் பற்றிக் கொள்ள ஒரு வழிதான்
பற்றுதல் ,அல்லது பக்திகொள்ளல்
அந்தப் பற்று அதை நாம் வெளிகாட்டும் முறையில்தான்
எத்தனை வேறுபாடுகள்,ஒவ்வொரு மதமும் ,ஒவ்வொரு
வழிகளைக் கடைப்பிடிக்கின்றன,கடைப்பிடிக்கும்வழிகள் வெவ்வேறு விதமாக
இருந்தாலும்,பலன் ஒன்றுதான்,
பக்தி மார்க்கம் அறிந்த பெரியோர்கள்
மர்க்கட ஞாயம் ,மார்ஜால ஞாயம் என்று இரண்டு
விதமான பக்திப் ப்ரயோகங்களை சொல்வர்
அதாவது இறைவன் நமக்கு ஞானத்தை அளித்திருக்கிறான்
சகல ஜீவரசிகளுக்கும் அது அதற்குத் தக்கவாறு
ஞாயங்களையும் தர்மங்களையும் அளித்திருக்கிறான்
நாம் இறைவனிடத்து செலுத்தும் பக்தி, வாத்சல்யம்
என்பது பலவகைப்படும் ,பொதுவாக நாம் நமக்குத்
தெரிந்த முறையில் பக்தி செய்கிறோம்
ஆனால் இறைவன் நாம் செலுத்தும் பக்தியின்
முழுமையை ஏற்றுக் கொள்கிறான்
த்ரேதாயுகம் ,த்வாபரயுகம், என்னும் யுகங்களில்
அன்றைய பெரியோர்கள் பல் நூறு ஆண்டுகள் தவம் இயற்றி உள்ளனர், பக்தி
செலுத்துதல் என்பது யுகத்துக்கு யுகம் ,
பரிமாண வளர்ச்சியில் மாறுபட்டு , இக் கலியுகத்துக்கு என்று ஒரு விதி
ஏற்படுத்தப்பட்டு உள்ளது ஒரு சாதாரணமானவன் அவனால் முடிந்த அளவு
மனப்பூர்வமாக பக்தி செலுத்தினாலே போதும் அதுவே பல ஆண்டுகள் தவம்
இயற்றுவதற்கு சமானம்
என்று சொல்லுகிறார்கள்

ஆக்வே பெரியோர்கள் சொல்லிய இரு வகையான
பக்தி மார்க்கங்களைப் பார்ப்போம்

1. மர்க்கட ஞாயம் :
மர்க்கடம் என்பது குரங்கைக் குறிக்கும் சொல்
குரங்குகள் தங்கள் குட்டிகளை அவை பற்றாது
குட்டிக் குரங்குகள்தான் தாய்க் குரங்குகளை
கெட்டியாகப் பற்றி இருக்கும் அவைகளை பற்றியே கவலைப்படாமல் குரங்குகள்
தான் பாட்டுக்கு தாவித் தாவிப் போய்க்கொண்டிருக்கும் ,குட்டிக்
குரங்குகள் தாய்க் குரங்குகளைக் கெட்டியாகப் பற்றியபடி செல்லும், அவைகள்
அஜாக்கிறதையாக இருந்தால் கீழே விழவேண்டியதுதான்,இதுபோல்
இறைவன் அவன் பாட்டுக்கு இருப்பான் நாம்
நம் அறிவைக் கொண்டு பக்தி செலுத்தி அவனைப்
பற்றிக் கொண்டு இந்த
கட்டிலிருந்து விடுபடவேண்டும் , நாம் எவ்வளவு அழுத்தமாய்
அவனைப் பற்றிக் கொள்கிறோமோ அவ்வளவு நாமும்
அவனுடன் ஒன்றிப் போகலாம், ஆத்ம சமர்ப்பணம் செய்யலாம்
அதைத்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் செய்தனர்
ஆழ்வார் ஆண்டாள் ஒரு சிறந்த உதாரணம்
கோதை ஆண்டாள் அரங்கனுக்காக உருகி அவனைக்
கெட்டியாகப் பற்றிக் கொண்டு அவனுடனே ஐக்கியமானாள்
இது ஒரு வகை பக்தி
இறைவனைப் போய் அவனுடைய கோவிலுக்குச் சென்று மூலவரை
தரிசிப்பது ,அல்லது அவனை நம் மனத்திலேயே
கோயில் கட்டி அங்கு குடிவைத்து அங்கேயே
பக்திக் கட்டால் கட்டிப்போட்டு அவனை அடைவது




இன்னொரு வகை பக்தி இருக்கிறது
அதுதான் மார்ஜால ஞாயம்
அது எப்படியென்றால்
அதே தெய்வம் உற்சவர் என்று ஒரு வடிவம் கொண்டு
திருவீதி உலா வந்து இயலாத ,கோவிலுக்கு வர இயலாத
பக்தர்களை அவனே அவர்களருகில் வந்து காட்சி கொடுத்து
அவர்களை ஆட்கொள்ளும் விதம்
அது போல பூனையை உதாரணமாக சொல்லுவார்கள்
பூனை தான் எங்கு சென்றாலும் தன்னுடைய குட்டியை
தன்னுடைய வாயால் கவ்வி எடுத்துப் போகுமாம் ,
ஆனல் அதிலும் நுணுக்கமாக அப்படிக் கவ்வும்
போதும் அந்தக் குட்டிக்கு தன்னுடைய பல் பட்டு
கொஞ்ஜமும் வலிக்காத வகையில்
அவ்வளவு இதமாக ஆனால் கெட்டியாகப்
பற்றி எடுத்துச் செல்லுமாம்,
அது போல இறைவன் இயலாதவர்களுக்கு
ஒரு பூனை போல இதமான பற்றுதலை
அளித்துக் காக்கிறான் என்பது இன்னொரு வகை

ஆகவே நாம் சுய தர்மத்தைக் கடைப்பிடித்தால்
நாம் ஒன்றுமே செய்யாவிடினும்
நாம் எது செய்யவும் இயலாதவர்களாயினும்
இறைவன் அவனே கருணை கொண்டு
அவன் நம்மை அளித்துக் காப்பான் என்று
ஆழ்வார்களும்,நாயன்மார்களும் சொல்லிய வண்ணம்
அவனே அளித்துக் காப்பான் நம் முயற்ச்சியும் இருந்தால்


அன்புடன்
தமிழ்த்தேனீ
rkc...@gmail.com

N Suresh, Chennai

unread,
Dec 26, 2007, 4:25:08 AM12/26/07
to il...@googlegroups.com, தமிழ்த் தேனீ
அன்பர்களே,
 
மர்க்கட ஞாயம் என்றெல்லாம்
மனம் கனிய பேசிவரும்
அதிசய்த் தமிழ்த்தேனியிவர்
யார் தெரியுமா?
 
மூத்த
நாடக திரைப்பட நடிகர்
சிறந்த கவிஞர்
கதை திரைக்கதை வசனகர்த்தா!
 
டிவிஸ் நிறுவனத்தில்
பணிபுரிந்து முடித்தவர்
 
இன்றும் மாணவர் என்றும் மாணவர்
இன்றும் ஆசிரியர் என்றும் ஆசிரியர்
 
நல்ல ரசிகர்
பாசம் நிறைந்த குடும்பத்தலைவன்
பிள்ளைகளை கரை சேர்த்து மகிழ்பவர்
 
தன்னுயிரை விட - தன்
மனைவியை நேசிப்பவர்
 
தன்னுடலில் அறுவைச்சிகிட்சை
ஒன்றிரண்டை
தயவாய் அனுமதித்தவர்
 
நன்றாக சிரித்து
மிக நன்றாக சிரிக்கும்
நகைச்சுவையாளர்
 
தகவல் களஞ்சியம்
கருத்துப்பெட்டகம்
கனிவின் அவதாரம்
 
கிருஷணமாச்சாரி
இவர் பெயர்
ஆனால்
இவருக்கு ராமரென்று தானே
பெயர் சூட்டவேண்டுமென்று
என் போன்ற
லட்சுமணர்களள
வியக்க வைப்பவர்
 
மனம் நிறைந்த பாராட்டுக்கள்
அள்ளிக்கொடுப்பதில் இவர் கர்ணன்
 
தைரியத்தில் அர்ஜுனன்
சாகசத்தில் கண்ணன்
புன்னைகையிலும்
கண்ணன்
 
ஜாதி மதம் இன மொழி
வெறிகளை வெறுப்பதில் பெரியார்!
 
ராவணன் இல்லாத
இவரின் ராமாயண வாழ்க்கையில்
இவரே உத்தம ராமர்
இவர் வாழ்க்கையிலென்றுமே
இனிமையான அன்பின் காண்டம்
 
இல்லத்திற்கு வந்தோரை
இவர் உள்ளத்திற்கு கொண்டுசெல்பவர்
உண்மை பாசமும் நேசமும் நிறைந்த
இவரின் தாயுள்ளத்தால் - யாரையும்
ஆனந்தக் கண்ணீரில் மூழ்கவைப்பவர்
 
இவர்போல் மனிதரை
இதுவரை நான் கண்டதில்லை
இனிமேல் காண - நான்
கண்ணாடி முன்
நிற்பதை விட
வேறு வழியில்லை :-) !!!
 
ஆனந்தமுடன்
என் சுரேஷ்

vishalam raman

unread,
Dec 27, 2007, 3:46:17 AM12/27/07
to il...@googlegroups.com
அன்பு தமிழ்த்தேனி விளக்கம் மிகவும் அருமை ,
அன்புடன் விசாலம்

 
On 26/12/2007, Thamizth Thenee <rkc...@gmail.com> wrote:

vishalam raman

unread,
Dec 27, 2007, 3:54:54 AM12/27/07
to il...@googlegroups.com
அன்பு சுரேஷ் புன்ன்கையில் புத்தன்  என்று சொல்லலாமே
மிக உண்மையான சித்திரம்   அன்புடன் விசாலம்

 
Reply all
Reply to author
Forward
0 new messages