தினம் ஒரு பாடல்

115 views
Skip to first unread message

AKR

unread,
Sep 16, 2009, 10:42:22 AM9/16/09
to il...@googlegroups.com
கடலில் வழியாகவும் ஆற்று வழியாகவும் கப்பலிலோ, படகுகளிலோ பயணம் செய்யும் மனிதர்கள் எதிர்பாராமல் வரும் புயல், வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படுகையில் அவர்களுள் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரை சேர முயற்சி செய்கின்றனர். நீந்தத் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி மடிகின்றனர். இவை தவிரப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் வெள்ளச் சூழ்நிலைகளிலிருந்தும் மீள ஒவ்வொருவரும் நீச்சல் அறிந்திருத்தல் அவசியம்.
 
அது போலக் காலமெனும் கடலிலே வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் செய்யும் நாம் ஒவ்வொருவரும், இன்னல்கள் எனும் பேரலை வந்து ஓடத்தைத் துன்பங்கள் எனும் நீரில் முழ்கடிக்கையில் முயற்சியுடையவன் நீந்திக் கரை சேர்கிறான். முயற்சியற்றவன் மீள முடியாமல் தவிக்கிறான். வாழ்க்கைப் பயணத்தில் நீச்சல் கற்பது என்பது தொழில் செய்யக் கற்றுக் கொள்ளுதல் எனக் கொள்ளலாம். தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும் என மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் குறிப்பபிட்டுள்ளார்.
 
வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் சோதனைகள் எனும் நீரோட்டத்தை எதி்த்துப் பயணிக்க எதிர்நீச்சல் போடுவது அவசியமாகிறது.
 
படம்: எதிர்நீச்சல்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1968
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
 
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றால் இங்கு எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
 
பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு பத்து மாதமும் எதிர்நீச்சால்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில் தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும் அப்பனுக்கது தான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும் பரிட்சை வந்தா எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
 
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
 
கடற்கரையோரம் நடக்குற காதல் கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையைப் பெத்து காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக் கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருவது எதிர்நீச்சல் எதிர்நீச்சல்
 
வெற்றி வேண்டுமா? போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சர்தாம் போடா தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தாலின்று என்ன நடக்காதது
கொஞ்சம் முயன்றாலின்று எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

bala murali

unread,
Sep 16, 2009, 4:20:14 PM9/16/09
to tamila...@googlegroups.com, il...@googlegroups.com

2009/9/16 AKR <akrcons...@gmail.com>

கடலில் வழியாகவும் ஆற்று வழியாகவும் கப்பலிலோ, படகுகளிலோ பயணம் செய்யும் மனிதர்கள் எதிர்பாராமல் வரும் புயல், வெள்ளம் போன்ற அபாயங்கள் ஏற்படுகையில் அவர்களுள் நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திக் கரை சேர முயற்சி செய்கின்றனர். நீந்தத் தெரியாதவர்கள் நீரில் மூழ்கி மடிகின்றனர். இவை தவிரப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் வெள்ளச் சூழ்நிலைகளிலிருந்தும் மீள ஒவ்வொருவரும் நீச்சல் அறிந்திருத்தல் அவசியம்.
 
அது போலக் காலமெனும் கடலிலே வாழ்க்கை எனும் ஓடத்தில் பயணம் செய்யும் நாம் ஒவ்வொருவரும், இன்னல்கள் எனும் பேரலை வந்து ஓடத்தைத் துன்பங்கள் எனும் நீரில் முழ்கடிக்கையில் முயற்சியுடையவன் நீந்திக் கரை சேர்கிறான். முயற்சியற்றவன் மீள முடியாமல் தவிக்கிறான். வாழ்க்கைப் பயணத்தில் நீச்சல் கற்பது என்பது தொழில் செய்யக் கற்றுக் கொள்ளுதல் எனக் கொள்ளலாம். தொழிலுக்குத் தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம் எனப்படும் என மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் குறிப்பபிட்டுள்ளார்.
 
"வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் சோதனைகள் எனும் நீரோட்டத்தை எதி்த்துப் பயணிக்க எதிர்நீச்சல் போடுவது அவசியமாகிறது."
சரியாக சொன்னீர்கள்!
நல்லதொரு பாடல் தெரிவு..

--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.com

AKR

unread,
Sep 17, 2009, 12:31:03 PM9/17/09
to il...@googlegroups.com
காதல் கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த உலகமே மறந்து விடுமோ? காதலனுக்கு இவ்வுலகிலுள்ள சிறப்பானவை அனைத்தும் தன் காதலி உருவில் தெரியும் போலும்! அவளூக்கும் தனக்கும் முன் ஜன்மத்திலிருந்தே உறவு உண்டென்று கற்பனை செயது கொண்டு அவளிடம் அவன் சென்று தன் எண்ணங்களைச் சொன்னதும் அவளும் அவன் கற்பனையில் மயங்கி, தன் பங்குக்கு ஏதேதோ கற்பனைகளில் மிதப்பதுடன், தன் வாழ்வே அவனோடு தான் என்று முடிவெடுக்கிறாள்.
 
இத்தகைய மயக்கம் இருவரின் காதலும் உண்மையாய் இருப்பின் சுகமாகவே இருக்கும், காதல் கனிந்து கைகூடினால் வாழ்வும் இனிமையாகவே விளங்கும்.
 
படம்: காக்கும் கரங்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
 
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம் ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
 
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
 
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
நேற்றைய பொழுது கண்ணோடு இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
 
ஊருக்குத் துணையாய் நானிருக்க எனக்கொரு துணையை எதிர்பார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
உள்ளத்தின் கோவிலில் விளக்கேற்ற மைவிழிக் கிண்ணத்தில் நெய் வார்த்தேன்
 
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு
 
முன்னொரு பிறவி எடுத்திருந்தேதேன் உன்னிடம் மனதைக் கொடுத்திருந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
பின்னொரு பிறவி எடுத்து வந்தேன் பேசிய பதிலைக் கொடுக்க வந்தேன்
 
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
நாளைய பொழுதும் உன்னோடு நிழலாய் நடப்பேன் பின்னோடு

AKR

unread,
Sep 18, 2009, 12:52:17 PM9/18/09
to il...@googlegroups.com
ஒரு பாடலில் இறுதிச் சொல்லை அடுத்த பாடலின் முதற் சொல்லாக வைத்துப் பல பாடல்களைக் கோவையாகப் பாடுவது அந்தாதி என அறியப் படுகிறது. இத்தகைய பாடல்களும் திருக்கடவூர் அபிராமி பட்டர் அருளிச் செய்த அபிராமி அந்தாதி மிகவும் பிரசித்தமானது.
 
பட்டர் ஆலயத்தில் மோன நிலையிலிருக்கையில் அப்போதைய சோழ நாட்டு மன்னன் இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே ஆலய தரிசனத்துக்கு வர, யோக நிலையிருந்த பட்டர் மன்னரைக் கவனிக்கவில்லை. இது கண்ட மன்னன் அவரிடம் சென்று, "இன்று என்ன திதி?" என வினவ, பட்டர் அன்னையின் முகதரிசனத்தை மனதில் கண்டு "பௌர்ணமி" எனச் சொல்கிறார். அன்று உண்மையில் அமாவாசை. மன்னவன் மீண்டும், "இன்று பௌர்ணமியானால் இரவில் முழு நிலவு வானில் வர வேண்டுமல்லவா? நிலவு வருமா?" என்று கேட்க, "வரும்" என்று யோக நிஷ்டையிலிருந்தவாறே கூறி விடுகிறார் பட்டர்.
 
தன்னை அவர் பரிகாசம் செய்வதாகத் தவறாக எண்ணிய மன்னன், "இன்றிரவு முழு நிலவு வரவில்லையெனில் நீர் மரண தண்டனை பெறுவீர்" எனக் கூறிச் சென்றவன் பட்டரை அந்தரத்தில் தொங்கும் ஊஞ்சல் போன்றதொரு பலகையின் மேல் நிறுத்தி வைத்து அதன் கீழே நெருப்பு மூட்டி நிலவு வராமை கண்டதும் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம் செய்துவிடுகிறான்.
 
அபிராமியை மனதில் துதித்து
 
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே.
 
என்ற பாடலில் துவங்கி
 
குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
 
என்ற பாடலில் முதல் பாடலின் முதல் வார்த்தை இறுதிப் பாடலின் இறுதி வார்த்தையாக முடியுமாறு நூறு பாடல்களைப்
 
பாடுகிறார்.
 
விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு; வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு; அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே செய்து, பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்தம்மோடு என்ன கூட்டு இனியே?
 
என்ற 79-ஆம் பாடலைப் பாடுகையில் அம்பிகைத் தன் காதில் அணிந்திருந்த ஸ்ரீசக்ர ரூபமாகிய 'தாடங்கம்' என்னும் திருத்தோட்டினை எடுத்து விண்ணில் வீச அது பூரண சந்திரனாகத் தோற்றமளிக்கிறது. தமிழ்த் திரையில் இக்காட்சியை அருமையாகப் படமெடுத்துள்ளனர். இக்காட்சியில் மேற் சொன்ன அபிராமி அந்தாதி பாடல்களுக்கு பதிலாகக் கவிஞர் கண்ணதாசன் அபிராமி அந்தாதியின்
 
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
 
என்ற வேறொரு பாடலை முதல் பத்தியாகக் கொண்டு எழுதிய ஜனரஞ்சகமான பாடல் இடம் பெறுகிறது.
 
அன்னையின் திருப்பெயரைச் சொல்லும் அப்பாடலும் அருமையானதே.
 
படம்: ஆதி பராசக்தி
இயற்றியவர்ள: கவிஞர் கண்ணதாசன்

இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
 
மணியே மணியின் ஒளியே ஒளிரும் அணிபுனைந்த வணியே
அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே
பிணிக்கு மருந்தே அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
 
சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி  வானில்
சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி
நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு
நிலவினைக் காட்டு உன் கண்ணாலே
 
சொல்லடி அபிராமி
 
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி
படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?
 
சொல்லடி அபிராமி
 
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
 
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்
நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட
 
வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை தாராயோ?
 
செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று
ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட
விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ
 
காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்
கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

AKR

unread,
Sep 19, 2009, 9:30:13 AM9/19/09
to il...@googlegroups.com
உறவுகள் வளர் அன்பு மலர வேண்டும். அன்பு மலரக் கனிவு பிறக்க வேண்டும். கனிவின் பிறப்பிடம் எதுவோ? சற்றும் தயங்காமல் கூறலாம் தாயென்று. தாயை விடவும் மேலான கனிவுடன் அருள்புரிபவன் இறைவன் என்று அடியார்கள் குறிப்பிடுகின்றனர்.
 
பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கு உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சுரந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே
 
என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளார்.
 
இறைவனை நாம் காண்கிறோமோ இல்லையோ? உணர்கிறோமோ இல்லையோ? ஆனால் தாயினைக் கணந்தோறும் காண்கிறோம், உணர்கிறோம் ஒவ்வொரு பெண்ணிடத்திலும். தாயாக விளங்குவது பெண்மையல்லவா? அப்பெண்மைக்கு அணிகலன் கனிவல்லவா?
 
ஒரு பெண்ணின் மேல் ஒருவருக்கு உண்மையான காதல் அரும்ப அவள் கனிந்த மனம் கொண்டவளாக இருத்தல் அவசியம். கனிவு கொண்ட பெண்ணிடம் காதல் கொண்டால்...........
 
படம்: இது சத்தியம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
ஆண்டு: 1963
 
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
ஆஹஹ ஹஹ ஹஹ ஹஹ ஹஹஹாஹாஹாஹா
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்
 
பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம்ம் ம்ம் ம்ம்ம்ம்ம்
பாதிக் கண்ணை மூடித் திறந்து பார்க்கும் பார்வை காதல் விருந்து
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
 
மனம் கனிவான அந்தக் கன்னியைக் கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
ஆஹா முள்ளும் மலராகும் ஆஹா கல்லும் கனியாகும்
 
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆஅ
 
வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள் ஆஆஆ....
வாழைத் தோட்டம் போல இருந்தாள் வண்டு போல பாடித்திரிந்தாள்
தென்னம் பாளை போல சிரித்தாள் சின்னக் கண்ணில் என்னை அழைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?
கன்னம் என்ற கனிகளின் மீது இன்னும் நாணம் மோதுவதேனோ?
 
அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
 
வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
வானம்பாடி போலப் பறந்தாள் வாழ்வு தேடித் தேடியலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள் கன்னி தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள் நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
 
அவள் இவள் தானா இவள் அவள் தானா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
அவள் வரலாமா நலம் பெறலாமா அவர் சம்மதம் தரலாமா?
அவர் சம்மதம் தரலாமா அதைத் தெளிவாய்ச் சொல்லலாமா?
ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா ஆஹஹஹ ஹாஹாஹா
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Sep 20, 2009, 1:54:19 PM9/20/09
to il...@googlegroups.com
 
நாம் இன்பமாய் வாழ மிகவும் அவசியமானவை முழுமையான அறிவு தரும் கல்வி, நீண்ட ஆயுள், உண்மையான,  ஆபத்ததி்ல் உதவு்ம் நணபர்ககள், அழியாத செல்வங்கள், முதுமையிலும் இளமையுடன் திகழும் வன்மையுடன் கூடிய உடல் நலம், நோயற்ற உடல், எப்பொழுதும் உற்சாகமாக சோர்வின்றி இயங்கும் மனம், என்றும் மாறாத அன்பைப் பொழியும் மனைவி, சொன்ன சொல் தவறாத குழந்தைகள், என்றும் குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் காக்கும் திறம், பிறருக்குத்  தேவையான  உதவிகளைச்  செய்யத் தடையில்லாத வாழ்க்கை  நிலை, நாட்டில் தர்ம நீதி தவறாத  ஆட்சி,  துன்பம்  இல்லாத  வாழ்க்கை,  நல்லோர் சேர்க்கை  முதலியன ஆகும். 
 
இவை அனைத்தினையும் குறைவறத் தருபவள் அன்னை அபிராமியே.
 
படம்: திருமலை தென்குமரி
இயற்றியவர்: அபிராமி பட்டர்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவ்ர்: சீர்காழி கோவிந்தராஜன்
 
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடு வாராத நட்பும்
 
கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்
கழுபிணியிலாத உடலும்
 
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
 
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பமில்லாத வாழ்வும்
 
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
 
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூரின் வாழ்வே!
 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!
 
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
 
ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Sep 21, 2009, 1:27:49 PM9/21/09
to il...@googlegroups.com
காதல் என்பது ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உணர்ந்து கொண்டு இருவரும் இணைந்து வாழ விரும்பும் நிலையாகும். காதல் ஒருவரின் செல்வத்தைப் பார்த்தோ, ஜாதி மதங்களைப் பார்த்தோ வருவதில்லை. உள்ளங்கள் ஒன்றோடொன்று உறவாடி ஒன்று கூடும் உணர்வே காதல். இருப்பினும் காதல் கைகூடும் சாத்தியக் கூறுகளை நன்கு ஆராய்ந்தறிந்து அறிவுபூர்வமாக செயல்படுவதே செய்யத்தக்கது. பொருளாதார ஏற்றத் தாழ்வும் ஜாதி மத வேறுபாடுகளும் காதலின் வெற்றி தோல்விகளைப் பெரிதும் பாதிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
 
ஒரு அரசனின் மகள் ஒரு சாதாரணக் குடிமகனையோ அல்லது அரசாங்கத்தில் பணிசெய்யும் ஒரு வீரனையோ காதலிப்பது இருவருக்கும் ஆபத்தை விளைவிக்கும் நிலைமையையே உருவாக்கியதை வரலாறுகள் சொல்கின்றன.
 
இவ்வரலாறுகளை நன்கு அறிந்த போதிலும் காதலர்கள் காதலிப்பதை விட்டுவிட்டனரா எனில் இல்லை என்பதே உண்மை. எவ்வாறாயினும் இந்தக் காதல் படுத்தும் பாடு சொல்லி மாளாது. காதல் வியாதி தொற்றிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் போலவே தோன்றுகிறது.
 
திரைப்படம்: வீரத் திருமகன்
பாடியோர்: பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா

எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1962
 
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?
 
வாராய் அருகே மன்னவன் நீயே காதல் சமமன்றோ?
வேதம் நிலையன்றோ காதல் நிலையன்றோ?
 
ஏழையென்றாலும் ராஜகுமாரன் ராஜாமகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ?
 
வானத்தின் மீதே பற்ந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடியலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலருண்டு
 
மன்னவன் நாடும் மணிமுடியும் மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும் குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர்போல் மறையாதோ
 
ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா ஹோய் வருவதும் சரிதானா உறவும் முறை தானா?
 
பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடைத் தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களே

AKR

unread,
Sep 22, 2009, 11:33:08 AM9/22/09
to il...@googlegroups.com
சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையில் பெண்களின் அழகை வர்ணிக்காத கவிஞர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. பெண் என்றாலே இக் கவிஞர்களுக்கு அவளது அழகு ஒன்றே முன்னிலையில் வரும் போலும். பெண்களின் வனப்பை வர்ணித்த கவிஞர்கள் அவர்களது கூந்தலை வர்ணிக்கத் தவறுவதில்லை.
 
பெண்களின் கூந்தலில் அப்படி என்ன மாயமிருக்குமோ தெரியவில்லை. முத்தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையைத்  தலைநகராகக்  கொண்டு  பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவனான ஷெண்பகப் பாண்டியன் தன் மனையாளின் கூந்தலினின்று வரும் நறுமணத்தில் மயக்கமுற்று அமமணம் கூந்தலின் இயற்கையான மணமா அன்றி வாசனாதி திரவியங்களைப் பூசிக் கொள்வதினாலும் மணம் வீசும் மலர்களைச் சூடிக் கொள்வதனாலும் ஏற்பட்டதா என ஐயமுற்று, புலவர்களிடையே இது குறித்த பெரும் சர்ச்சசை ஏற்படக் காரணமாயிருந்து உலகத்தையே ரக்ஷித்துக் காக்கும் அந்த சிவபெருமானையே மண்ணில் எழுந்தருளச் செய்யத் தூண்டுகோலாக ஆனான்.
 
இன்னொரு பாண்டிய மன்னனான சுந்தரபாண்டியன் தன் காதலியின் கூந்தலை மழை மேகத்துக்கு நிகராக எண்ணி மயங்குகிறான் இங்கே.
 
பட்ம்: மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியோர்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
ஆண்டு: 1978
 
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்?
 
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்?
மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம்? அந்தி
மாலையில் இந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம்?
 
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
 
பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ?
பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ?
 
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன்
வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்
 
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
 
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ?
 
கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ?
காலை வரை கேட்பதுண்டோ?
 
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
 
கறபகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ?
விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ?
காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே
சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ?
மோகனப் பண் பாடியதோ?
 
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் - என்
தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்

AKR

unread,
Sep 23, 2009, 2:03:37 PM9/23/09
to il...@googlegroups.com
பிரபல தமிழ்த் திரைப்பட நடிகையும் பாடகியுமான திருமதி எஸ். வரலக்ஷ்மி தனது 84ஆவது வயதில் நேற்று சென்னையில் ஒரு மருத்துவமனையில் காலமானார் எனும் செய்தி கேட்டு பெற்ற தாய்க்கு இணையான ஒருவரைப் பிரிந்த உணர்வு எழுகிறது. தேனூறும் குரல் கொண்ட தாயாக விளங்கிய அவரது பாடல்கள் அமுத கானங்களாகும். வீரபாண்டியக் கட்டபொம்மன், கந்தன் கருணை, பூவா தலையா?, பணமா பாசமா? மாட்டுக்கார வேலன், நீதிக்குத் தலை வணங்கு உட்படப் பல தமிழ்த் திரைப்படங்களில் தனது அபார நடிப்புத் திறமையால் தமிழ்த் திரையுலக ரசிகர்களது மனதைக் கொள்ளை கொண்ட அவருக்கு என் இதயபூர்வமான அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.
 
சிவபெருமானைக் குறித்துக் கடும் தவம் புரியும் சூரபத்மன் எனும் கொடிய அரக்கன் சிவனது சக்தியைத் தவிர வேறு யாதொரு சக்தியாலும் தனக்கு மரணம் இல்லையெனும் வரத்தை சிவபெருமானிடம் பெற்ற பின்னர் ஆணவத்தால் மதி மயங்கி, தேவேந்திரன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளுகிறன். தேவேந்திரனின் மனைவியான இந்திராணி சூரபன்மனிடமிருந்து எப்படியோ தப்பிச் சென்று சிவபெருமானின் கருணையை வேண்டிப் பாடுகிறாள்.
 
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ
 
அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா?
ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா?
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ
அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா?
அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?
 
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ
 
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?
சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன?
 
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு
அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு
ஆ...
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?
வெள்ளி மலை மன்னவா ஆ

AKR

unread,
Sep 24, 2009, 3:19:01 PM9/24/09
to il...@googlegroups.com
காதலின் உயர்வைப் பாடாத கவிஞர்கள் யாருளர்? காதலுக்கு ஜாதியில்லை, மதமுமில்லை, நாடு நகர பேதம் ஏதுமில்லை. உள்ளங்கள் சங்கமித்து ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டு உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால் இருவர் என்பது மாறிவிடும், இரண்டும் ஒன்றாய்க் கலந்துவிடும்.
 
இதனை உலகுக்கு உணர்த்தும் வகையில் சீனாவில் வசிக்கும் நம் அருமை நண்பர் ஒருவர் உயர்ந்த அன்பினாலும் தெளிந்த அறிவாலும், அனைவரும் போற்றும் பண்பாலும் தன் மனம் கவர்ந்த சீனப் பெண் ஒருத்தியைத் தன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்துள்ளார். விரைவில் அப்பெண்ணுடன் இந்தியா வந்து தன் தாய் தந்தையர் ஆசிகளுடன் திருமணம் புரிந்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நம் நண்பர், விரைவில் மனைவியாக இருக்கும் தன் காதலியிடம் தன் காதலை எவ்வாறு எடுத்துரைத்திருப்பார், அவரது காதலி அவரது காதலை எவ்வாறு ஏற்றார் எனும்  சூழ்நிலையை  எண்ணிப் பார்க்கையில் மனதில் ஓடியது ஒரு இனிய பழந்தமிழ்த் திரைப் பாடல்.
 
இருமனம் ஒன்றுபட்டு இல்வாழ்வில் இணையவிருக்கும் இளம் இன்டர்நேஷனல் தம்பதியருக்கு எனது அன்புப் பரிசாக மலர்கிறது இப்பாடல்:
 
படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: எஸ். தக்ஷிணாமூர்த்தி
பாடியவர்: எஸ்.ஜி. கிருஷ்ணன், ஜமுனா ராணி
 
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா நீ கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே
 
சிட்டு என்றும் பட்டு என்றும் யாரை ஏய்க்கப் பாக்குறே
தட்டாதே என் சொல்லை தவுலத் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
நான் உன்னை ஏய்க்கப் பாக்கல்லே
கட்டிக் கொள்ளும் முன்னே நம்ப மாட்டா புல்புல்லே
 
சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி நீ கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சைத் தொட்டுத் தான் பாரேண்டி
 
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
 
நம்பச் செய்து ஓடிப் போனா நான் என்ன செய்வது?
நல்லா இல்லே என்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை உன்னை நிக்காஹ் செய்வது நிக்காஹ் செய்வது
 
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்த கோமாளி ராஜா என் கோமாளி ராஜா
கெஞ்சிக் கெஞ்சிக் கிட்டே வந்து செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே என்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே
ஜில்ஜில் என்று ஆடிக்கொண்டு வா பொன்வண்டே கிட்டே வா பொன் வண்டே
Reply all
Reply to author
Forward
0 new messages