வந்தாயிற்று எலியைக்கொல்லும் சாக்கலேட் . வீட்டில் முக்கிய இடங்களில்
அவைகளை வைத்து விட்டாயிற்று. மறு நாள் பாவம் அந்த எலி
செத்துப்போயிருக்கும் ! ஜாக்கிரதையாக உடனே எடுத்து அப்புறப்படுத்த
வேண்டும் என்று நினைத்தேன் மனதுக்குள் எதோ தவறு செய்கிறொமோ என்ற
உறுத்தல் வேறு . என்ன செய்வது ? கம்ப்யூடர் ஒயரையெல்லாம்
கடிச்சுவைச்சுதுனா என்ன செய்வது !
மறுநாள் .அது ஒரு இடத்திலும் இல்லை நாங்கள் வைத்த விஷத்தை அது
தின்றுவிட்டது ஆனால் அது வீட்டில் ஒரு இடத்திலும் இல்லை
. எங்குப்போய் செத்துதோ தெரியவில்லை . இரவு வந்தது . நான் திருப்பதி
சானல் பார்த்துக்கொண்டிருந்தேன் மின்னல் வேகத்தில் அந்த எலி
சுவரோரமாக ஓடியது எனக்கு மிக ஆச்சரியம் . மூன்று விஷ சக்கலேட்டையும்
தின்னுபுட்டு இந்த ஓட்டம் ஓடுகிறதே இது எப்படி சாத்தியம் ?
சரி அந்த கடைக்காரரை இதைப்பற்றி கேட்க்கலாம் இப்படி ஏமாத்திவிட்டாரே !
என்று நினைத்தபடி அவரிடம் கேட்க அவரோ இது அதிசயத்திலும் அதிசயம்
.இந்த மாதிரி நடக்க சாத்தியமேயில்லை என்று அடித்துச்சொன்னார் .
இதைக்கேட்டுக்கொண்டு வீடு திரும்பினோம் , அக்கம்பக்கத்தில் இருந்த
ஒருவர் ஒரு எலிப்பொறி கொடுத்து அதில் மாட்டிக்கொள்ளும் என்று
ஆறுதல் கூறினார் . அதையும் எடுத்து வந்து இதற்கென்று ஒரு வெங்காய பகோடா
வாங்கி அதற்குள் பொருத்திவிட்டாச்சு . ஒரே சஸ்பன்ஸ் ..மறுநாள் அது அதில்
விழுமோ விழாதோ என்றுதான் .. மறுநாள் அந்த எலி வெங்காய பகோடா அருகில்
கூட செல்லவில்லை
அதற்கும் புரட்டாசி மாதம் போலிருக்கு ! என்ன செய்ய ! அந்த நேரம்
பார்த்து எங்கள் நண்பர் ஒருவர் வந்தார் .அவரிடம் எலி ராமாயணம்சொல்ல
அவரும் அந்தப்பொறியில் நெய் தடவிய தேங்காய் பல்லை சொருகி எங்களுக்கு
உதவிசெய்த பெருமையுடன் விடைப்பெற்றார்
இரவு 11 மணி இருக்கும் .டபார் என்ற சத்தம் கேட்க எலி அதில்
மாட்டிக்கொண்டது . காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தபடி
தூங்கிவிட்டேன் ,மறுநாள் காலை எலி அந்தப்பொறியில் இருக்கிறதா என்று
ஒற்றுகவனிக்க அது எலி போலவே இல்லை .
பின் அது என்ன என்று விசாரிக்க தோட்டக்காரன் , அது மூஞ்சூறு அம்மா அது
வீட்டில் வந்தாலே ரொம்ப நல்லது . அதன் நெற்றியில் இருகோடுகள் இருக்கும் .
.ஒருவர் வீட்டிற்கும் இலேசில் வந்து விடாது என்று மிகவும்
பவ்யமாகச்சொன்னான் . "அந்த கணேசனின் அருள்
உங்களுக்கு இருக்கம்மா 'என்று சொல்லி என் உச்சியைக்குளிரச் செய்தான்
"இப்போ இதை என்ன செய்யலாம் "என்று நான் கேட்க அவன் " அம்மா இதை நான்
தூர இருக்கும் அரசமரத்தடியில் விட்டுவிட்டு வருகிறேன் "
என்று என்று மிக மரியாதையுடன் அதை எடுத்துச்சென்றான் .
இப்பவும் எனக்கு முன்று விஷ சாக்கலேட்டுக்களைத் தின்ற பிறகும் அந்த
மூஞ்சூர் உயிருடன் இருந்தது ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது .
உண்மையாகவே பிள்ளையார் வந்திருந்தாரோ ! இன்றே கிளம்ப வேண்டும்
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய !
. .
.
சங்கரா டிவியில் கணேச சஹஸ்ரநாமம் வந்துக்கொண்டிருந்தது .அதை நானும் மிக
இப்பவும் எனக்கு முன்று விஷ சாக்கலேட்டுக்களைத் தின்ற பிறகும் அந்த
மூஞ்சூர் உயிருடன் இருந்தது ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது .
உண்மையாகவே பிள்ளையார் வந்திருந்தாரோ ! இன்றே கிளம்ப வேண்டும்
பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய !
. .
.
--
You received this message because you are subscribed to the Google Groups "Mazalais" group.
To post to this group, send an email to maza...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to mazalais+u...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/mazalais?hl=en-GB.