தாலாட்டுப் பாடல்களை

806 views
Skip to first unread message

Venkatram Shrinivas

unread,
Nov 29, 2008, 2:00:55 AM11/29/08
to இல்லம் (your HOME)

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் முழு அனுமதியுடன் 'தாலாட்டுப் பாடல்கள்' என்ற தலைப்பில்  என்னால் சேகரிக்க முடிந்த 13 மடல்களை  ஒன்ற்ன் பின் ஒன்றாக 13 சமர்ப்பிக்க விரும்புகிறேன்

தாலாட்டு 1
 

தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.  பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள்.  ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.  தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே.
சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே

--
V.Shrinivas (Seenu)

Natarajan kalpattu N

unread,
Nov 29, 2008, 5:24:33 AM11/29/08
to இல்லம் (your HOME)
கடந்த சில நாட்களாக 'ஒவ்வாமை'யினால் தூக்கமின்றித் தவிக்கும் எனக்கு
உங்களது தொகுப்பு தூக்க மாத்திரையாக அமையும் என நம்புகிறேன்.

Venkatram Shrinivas

unread,
Nov 29, 2008, 7:04:45 AM11/29/08
to il...@googlegroups.com
எனதண்பு நன்பர் திரு நடராஜன் அவர்களே! என்னைப் போல் தான் தாங்களுமா?
நான் என்றுமே குழந்தை. தாஙகள் அப்படியிருக்க மாட்டீர்கள் என நினைத்தேன்.(என்னுடைய குழந்தை மனப்பானமையைக் 
காட்டுவதற்காக இத்துடன்   (நான் சிறுவனாகயிருந்த பொழுது கேட்டு மனதில் என் மனதை விட்டு அகலாத ஃப்ராங்க் ஸினாட்ரா (Franka Sinatra) வின் பாடலிலிருந்து இரண்டு வரிகள்) ஒரு பாடலை இணைத்திருக்கிறேன
அது இருக்கட்டும் இப்பொழுது படிக்கலாம் எனது தொகுப்பில் உள்ள தாலாட்டுப் பாடல் 2ம் 3ம் (பாடத் தோன்றினால் பாடவும் பாடலாம்)

தாலாட்டுப் பாடல்2

இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன

. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன

உசந்த தலைப்பாவோ

'

உல்லாச வல்லவாட்டு'

நிறைந்த தலை வாசலிலே

வந்து நிற்பான் உன் மாமன்

தொட்டிலிட்ட நல்லம்மாள்

பட்டினியாப் போராண்டா

பட்டினியாய் போற மாமன்

-உனக்கு

பரியம் கொண்டு வருவானோ

?

தாலாட்டுப்

பாடல் 3

பால் குடிக்கக் கிண்ணி

,

பழந்திங்கச் சேணாடு

நெய் குடிக்கக் கிண்ணி

,

முகம் பார்க்கக் கண்ணாடி

கொண்டைக்குக் குப்பி

கொண்டு வந்தான் தாய்மாமன்

ஆனை விற்கும் வர்த்தகராம்

-உன் மாமன்

சேனைக் கெல்லாம் அதிகாரியாம்

சின்னண்ணன் வந்தானோ கண்ணே

-உனக்கு

சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு

பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்

பல வர்ணச் சட்டைகளும்

பட்டுப் புடவைகளும் கண்ணே

-உனக்கு

கட்டிக் கிடக் கொடுத்தானோ

!

பொன்னால் எழுத்தாணியும்

-கண்ணே உனக்கு

மின்னோலைப் புஸ்தகமும்

கன்னாரே

! பின்னா ரேன்னு-கண்ணே

கவிகளையும் கொடுத்தானோ

!

குறிப்புகள்

:

வட்டார வழக்கு

: கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).

இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்

.

எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும்

. வங்காளத்தில் "பாரோ மாசி" என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் "தூசன்ஸ்பக்விட்டல்" என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் 'பாரோ மாசி' தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது. அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் 'பாரோ மாசி'யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்


 
2008/11/29 Natarajan kalpattu N <knn...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)
Yah.mp3.mp3

Venkatram Shrinivas

unread,
Nov 29, 2008, 10:03:42 AM11/29/08
to il...@googlegroups.com

முன்குறிப்பு

முதன் முதலில் வெளியான பாடல்களை அனுப்பியவர்/அனுப்பியவர்கள் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. பிறகு வெளியிடப் பட்ட பெரும்பாலான பாடல்களைச் சேகரிதது அனுப்பியவர்களின் விவரங்கள அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அவ்விவரங்களை அப்படியே பரிசுரிப்பேன்

தாலாட்டுப் பாடல் 4

மார்கழி மாசத்திலேதான்

-கண்ணே நீ                        

மாராசாவைப் பார்க்கையிலே

தைப் பொங்கல் காலத்திலே

-கண்ணே நீ

தயிரும்

, சோறும் திங்கையிலே

மாசி மாசக் கடைசியிலே

-கண்ணே நீ

மாமன் வீடு போகையிலே

பங்குனி மாசத்திலே

-கண்ணே நீ

பங்குச் சொத்தை வாங்கையிலே

சித்திரை மாசத் துவக்கத்திலே

-கண்ணே நீ

சீர் வரிசை வாங்கையிலே

,

வைகாசி மாசத்திலே

-கண்ணே நீ

வயலைச் சுற்றிப் பார்க்கையிலே

ஆனி மாசக் கடைசியிலே

-கண்ணே நீ

அடியெடுத்து வைக்கையிலே

அகஸ்மாத்தா ஆவணியில்

-கண்ணே நீ

அரண்மனைக்குப் போகையிலே

ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே

-நீ

அப்பன் வீடு தங்கையிலே

கார்த்திகை மாசத்திலும்

-கண்ணே

கடவுளுக்குக் கையெடடி

.

குறிப்பு:1

தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது

. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்



2008/11/29 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Geetha Sambasivam

unread,
Nov 30, 2008, 5:08:45 AM11/30/08
to il...@googlegroups.com
மிக மிக அற்புதமான , அருமையான தொகுப்பு. சேமித்து வைக்கவேண்டிய ஒன்று. நன்றி பகிர்தலுக்கு.

2008/11/29 Venkatram Shrinivas <see...@gmail.com>

AKR

unread,
Nov 30, 2008, 3:30:08 PM11/30/08
to il...@googlegroups.com
அன்பு நண்பர்களே,
 
பறவைகளில் அவள் மணிப்புறா,
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
 
எனக் கவிஞர் கண்ணதாசன் எழுதியதுபோல் பாடல்களுள் தாலாட்டுப் போல் இனிமையானது ஏதும் இல்லை.
 
சீனு மாமா தாலாட்டைத் தொட்டதும் தமிழ்த் திரைப்படங்களில் நான் மிகவும் கேட்டு ரசித்த தாலாட்டுப் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 
படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடியவர்: எஸ். வரலக்ஷ்மி
 
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
மங்காத பொன்னே
மங்காத பொன்னே உன் வாய் முத்தம் ஒன்றாலே
மாறாத இன்பங்கள் சேர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
 
வாடாத ரோஜா உன் மேனி
வாடாத ரோஜா உன் மேனி துள்ளி
ஆடாதே சின்ன ராணி உன்
பூவான பாதம் நோவாத போதும்
புண்ணாகி என் நெஞ்சம் வாடும்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே! - இந்தப்
பாராளும் மாமன்னர் மார் மீதிலே நீ
சீராட வாராய் செந்தேனே! (சிங்கார)
 
செவ்வல்லிக் கைவண்ணம் காட்டி - ஆ..
செவ்வல்லிக் கைவண்ணம் காட்டி என்தன்
சிந்தை எல்லாம் இன்பமூட்டி - நீ
ஆடாதே கண்ணே யாரேனும் உன்னை
கண்டாலும் ஆகாது மானே
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண்பாட வாராய் செந்தேனீ - என்தன்
அன்பென்னும் ஆனந்தப் பூங்காவிலே நீ
பண்பாட வாராய் செந்தேனீ
 
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத இன்பங்கள் தீர்த்தாயடி!
 

Venkatram Shrinivas

unread,
Dec 1, 2008, 6:43:44 AM12/1/08
to il...@googlegroups.com

நான்

'இல்லத்தில்' பரிசுரிக்கத் துடங்கியிருக்கும் 'தாலாட்டுப் பாடல்கள்' தொகுப்பிற்குத் துடக்கத்திலேயே எனது ஊக்கத்தை பெருமளவு தூண்டுமாரு வெகுவாக புகழ்ந்து எழுதியிருக்கும் என் அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் பாத்திரமானவரும், எனது இளைய சகோதரிகளுள் ஒருவராக நான் பாவிக்கும் திருமதி கீதா சாம்பசிவத்தி:ற்கு மிகப்பணிவன்புடன் கலந்த நன்றி.

இப்பொழுது ஒரு உண்மையைக் கூற விரும்புகிறேன்

. தாங்கள் 'சிதம்பர ரகசியம்' தொடரை ஒரே 'Wordpad'ல் சேர்த்து வைத்துள்ளேன். கிடைசியில் தாங்கள் ஆச்சரிய்ப் படும்படி,அத் தொகுப்பை ஒரு புத்தக வடிவில் என்னுடைய ப்ரிண்டரில் அச்சடித்து அதைத் தங்களுக்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன் (of course, after getting your permission). தங்களது படைப்புகளையும் எனது மற்றொரு சகோதரி திருமதி விசாலம் அவர்களது படைப்புகளையும் (ஆன்மீகத்தைப் பற்றியவனை மட்டும்) விடாமல் படிப்பேன். ஆனால் அவ்வப்பொழுது எனது பாராட்டுகளைத் தெரிவிக்காதற்குக் காரணம் எனது 'சோம்பேறித்தனம்' தான்!.

இப்பொழுது துடருகிறேன் நான்காவது தாலாட்டுப் பாடலுடன்

:

 

தாலாட்டுப் பாடல் 5

ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே

அம்புட்டுதாம் அப்பனுக்கு

வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி

விதம்விதமா அம்புட்டிச்சாம்,

அரண்மனைக்கு ஆயிரமாம்

ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி

அப்பன் விற்று வீடுவர

அண்டை வீடும், அடுத்த வீடும்-கண்ணாட்டி

ஆச்சரியப் பட்டார்களாம்,

பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்

பிரியமாக ஆறெடுத்தேன்

அயலூரு சந்தையிலே-கண்ணே நான்

ஆறு மீனை விற்றுப் போட்டேன்.

அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை

அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.

அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்

அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு

அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே உன்

அழகைப் பார்த்து அரண்டார்களே.

அத்திமரம் குத்தகையாம்

ஐந்துலட்சம் சம்பளமாம்

சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்

சர்க்கார் உத்தியோகமாம்

இவ்வாறு தாய் குடும்பத் தொழிலின் பெருமையைப் பாடுவாள். சர்க்கார் உத்தியோகம் மிக மேன்மையானது என்ற நம்பிக்கை இங்கே வெளியிப்படுகிறது.

தந்தையின் பயணத்தைச் சொல்லுகிற தாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், தாய் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எந்த விஷயமும் தாலாட்டில் பொருளாகச் சேர்க்கப்படக் கூடும்.

தாலாட்டு குழந்தைப் பாசத்தை முதன்மைப்படுத்துவதாயினும், சமூகச் சித்திரம் என்னும் பின்னணியில்தான் பல்வேறு வகைப்பட்ட பின்னல்களாக எழுகின்றன.

இப்பாடல்கள் தாய்மாரின் செல்வநிலை, ஜாதி இவை பொறுத்து வேறுபடும



2008/11/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Geetha Sambasivam

unread,
Dec 1, 2008, 8:37:13 AM12/1/08
to il...@googlegroups.com
தங்கள் உள்ளார்ந்த அன்பை நினைத்து ரொம்பவே சந்தோஷமாய் இருக்கிறது. இன்னும் கவனமாயும் எழுதணும். மறைமுகமாய் நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு கடமைப் பட்டிருக்கிறேன். இதே போல் திருமணங்களில்பாடப் படும் நலுங்கு, ஊஞ்சல் பாட்டுகளையும் தொகுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இறைவன் சித்தப்படி!
நன்றியுடனும் வணக்கத்துடனும்
கீதா சாம்பசிவம்

2008/12/1 Venkatram Shrinivas <see...@gmail.com>

விஸ்வநாதன்

unread,
Dec 2, 2008, 10:58:16 PM12/2/08
to இல்லம் (your HOME)
From: Venkatram Shrinivas
To: il...@googlegroups.com
Sent: 03 December, 2008 2:39 AM
Subject: Re: [ILLAM, your HOME] Re: தாலாட்டுப் பாடல்களை

தாலாட்டு -7

தாயின் கனவுகள்

பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல்
குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான
நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை
வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும்
பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள்
உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில்
கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன்
குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான
ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில்
விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும்,
குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை
பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு
காண்கிறாள்.

ஆராரோ, ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர,
மாதுளையும் பூச்சொரிய,
புரட்டாசி மாதம்
பிறந்த புனக் கிளியோ
அஞ்சு தலம் ரோடாம்!
அரிய தலம் குத்தாலம்!
சித்திரத் தேர் ஓடுதில்ல!
சிவ சங்கரனார் கோயிலுல!
காடெல்லாம் பிச்சி!
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல!
நல்ல மகன் போற பாதை.


On Nov 29, 8:03 pm, "Venkatram Shrinivas" <see...@gmail.com> wrote:
*முன்குறிப்பு *

*முதன் முதலில் வெளியான பாடல்களை அனுப்பியவர்/அனுப்பியவர்கள் பெயர்கள்


குறிப்பிடப்
படவில்லை. பிறகு வெளியிடப் பட்ட பெரும்பாலான பாடல்களைச் சேகரிதது
அனுப்பியவர்களின் விவரங்கள அறிவிக்கப் பட்டிருக்கின்றன. அவ்விவரங்களை
அப்படியே

பரிசுரிப்பேன்*

தாலாட்டுப் பாடல் 4

.. ... ...
... ..

Geetha Sambasivam

unread,
Dec 3, 2008, 2:38:04 AM12/3/08
to il...@googlegroups.com
மண் வாசனை மணக்கிறது தாலாட்டுக்கள் ஒவ்வொன்றிலும். அரிய முயற்சி. தலை தாழ்த்தி வணங்குகின்றேன்.

2008/12/3 விஸ்வநாதன் <ong...@gmail.com>

Venkatram Shrinivas

unread,
Dec 3, 2008, 6:51:23 AM12/3/08
to il...@googlegroups.com

இல்லம் குழுவினரின் பெருந்தனமையையும்

, பொருமையையும், 'சகிப்புத்தன்மை'யையும்.பெரிதும் பயன் படுத்திக் கொண்டு 'தாலாட்டுப் பாடல்கள்' என்ற தலைப்பில் துடங்கப் பட்ட இத்தொடரில், என்னுடைய இரண்டு 'உதிரிப் பாடல்களை' அனுப்புகிறேன்.

எனது பெரிய

'ஒன்று விட்ட' அக்காளின் குழந்தைகள், எனது அண்ணனின் குழந்தைகள், என்னுடைய குழந்தைகள், எனது இரு மகள்களின் குழந்தைகள் இவ்வனைவரையும் 'தூளியில்' இட்டுத் தாலாட்டுப் பாடி தூங்கவைக்கும் கிடைக்கொணா பாக்கியம் கிடைத்ததற்கு கடவுளை எப்பொழுதும் நன்றி கலந்த மகிழ்ச்சியுடும் வாழ்த்தி வருகிறேன்.

இதில் நான் வெட்கத்தால் கூனிக் குறுக வேண்டியது எதற்கென்றால்

எனக்குத் தெரிந்ததெல்லாம் அறைகுறைப் பாடல்கள். அப்படியிருந்தும் நானே பாடி நானே தூளியை ஆட்டவேண்டும். இல்லாவிட்டால் குழந்தை (எல்லாக் குழந்தைகளையும் ஒருமைப் படுத்திக் கூறுகிறேன்) தூங்காமல் அடம் பிடிக்கும். வேறொரு அதிசயம் என்னவென்றால், என் மகனை விட்டு விட்டு பாக்கி எலலொருக்கும் தூளிதான்! எனது மகனைத் தொட்டிலிட்டு ஆட்டி வந்தாள் அவனது தாய் (எனது அகமுடையாள் தான்) நான் கூறியதெல்லாம் சரியாயில்லையா என எனது மனைவியைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது அட்லாண்டவிலிருக்கும் எனது இரண்டாவது மகளுக்கு இரட்டைக் குழந்தைகள்
. மூத்ததாகப் பிறந்ததும் பெண்குழந்தை அடுத்ததாக இரட்டையராகப் பிறந்ததும் பெண்குழந்தைகள். இரட்டைக் குழந்தைகளை இரட்டைத் தூளிகளிலிட்டுப் பாடித் தூங்க வைத்த பெருமை சிலருக்கே இருக்குமென நினைக்கிறேன்.

மிகவும் தயை கூர்ந்து பாடல்களைக் கேட்டுவ்ட்டுப் பாரபக்ஷமில்லாத அபிப்பிராயங்களைக் கூறுமாறு விண்ணப்பத்துக் கொள்கிறேன்

.

2008/12/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>
Pachaimaamalai pol meni .mp3
Kaalamithu Kaalamithu.mp3

Venkatram Shrinivas

unread,
Dec 3, 2008, 3:45:22 PM12/3/08
to il...@googlegroups.com

தாலாட்டுப் பாடல்

8

தெய்வமே காப்பு

வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை
திருச்செந்தூர் வேலவரே
பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே
!
புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை பொன்னிற மாய் வந்தாளே.
யாரடித்தார்?
 
ஆரடிச்சா நீ யழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ கைனால?
மாமன் கைச் சிலம்போ
மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ
பேரனார் கொண்டைக்கு
வாடா மருக் கொழுந்தோ?


2008/12/3 Venkatram Shrinivas <see...@gmail.com>
2008/12/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>




--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Dec 6, 2008, 9:58:56 AM12/6/08
to il...@googlegroups.com

தாலாட்டுப் பாடல்10

மகன் பெருமை

பட்ட மரம் பாலூறும்

,

பாவல்காய் தேனூறும்

,

உளித்தமரம் தான் தழையும்

,

உத்தமியாள் வாசலிலே

,

வடக்கே ஒரு மூங்கில்

வளருதில்ல கல்மூங்கில்

வில்லுக்கு வில்லாகும்

விஜயனுக்கு அம்பாகும்

சொற் கேளா அர்ச்சுனர்க்கு

சுண்டு வில்லு அம்பாகும்

வடக்கே மழை பேஞ்சு

வாசலெல்லாம் தண்ணி

தண்ணி வந்த சயலிலே

-நீ

தங்கி வந்த தாமரையோ

?

வடக்கே மழை பேஞ்சு

வார்ந்த மணல் ஓடிவர

நடந்து போ பாலகனே

-உன்

நல்ல தடம் நான் பார்க்க

வடக்கே ஒரு தாள்

வர்ணலட்சம் பூப்பூக்கும்

வாடை யடியாதோ

வரிசை மகன் கண்ணயர

தெற்கு ஒரு தாழை

தென் லட்சம் பூப்பூக்கம்

தென்றல் அடியாதோ

செல்ல மகன் கண்ணயர

?

வைகை பெருகிவர

வாளை மீன் துள்ளிவர

துள்ளி வந்த மீனுக் குல்ல

-வேலவா

தூண்டி வலை போட்டாரே

பத்து வருஷமோ

பாலனில்லா வாசலிலே

கைவிளக்கு கொண்டு

கலி தீர்க்க வந்தவனோ

?

விளக்கிலிட்ட எண்ணெய் போல

வெந்துருகி நிக்கயில

கலத்திலிட்ட பால்போல

கைக்குழந்தை தந்தாரே

மலடி மலடி என்று

மானிடர்கள் ஏசுகிறார்

மலட்டுக் குலமதையே

-நீ

மறப்பிக்க வந்தவனோ

!

மலடி புழுங்கலை

- ரெண்டு

மான் வந்து திங்குதின்னு

மாதாளங்கம்பு வெட்டி

-நீ

மான் விரட்ட வந்தவனோ

கொல்லையிலே தென்னை வச்சு

குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு

சீனி போட்டுத் திங்க

செல்வமே பிறந்தவனோ

!

வில்வப் பொடி மணக்கும்

விரிச்ச தலைப் பூமணக்கும்

கதம்பப் பொடி மணக்கும்

கட்டழகன் கடந்தலிலே

.

வட்டார வழக்கு

: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா?; அழிச்சாரே - அழித்தாரே; வந்தடைஞ்ச - வந்தடைந்த; துவைவேட்டி- துவைத்த வேட்டி; வச்சளக்க - வைத்தளக்க; பூ வெறங்கும் - பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து

குறிப்பு

: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப் பொதுவாக இச்சொல் குறித்தது. "பட்டமரம்" "பாலூறும்" முதலியன.

மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது

. 'மலடி' என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமமாம்.

மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது

.

சேகரித்தவர்

:

கார்க்கி

இடம்:

சிவகிரி வட்டாரம்

.

2008/12/4 Venkatram Shrinivas <see...@gmail.com>
2008/12/3 Venkatram Shrinivas <see...@gmail.com>

2008/12/3 Geetha Sambasivam <geetha...@gmail.com>
--
V.Shrinivas (Seenu)

yesu das

unread,
Dec 10, 2008, 7:50:34 AM12/10/08
to il...@googlegroups.com

Venkatram Shrinivas

unread,
Dec 11, 2008, 1:50:28 PM12/11/08
to il...@googlegroups.com

தாலாட்டுப் பாடல்

11

வேட்டை

சிறுவன் சிவகிரியில் பிறந்தவன்

. மலைச்சாரலில் மான், பன்றி, முயல் போன்ற விலங்குகள் உண்டு. மலைச்சாரல் பயிரைக் காப்பதற்கும், இறைச்சி பெறுவதற்காகவும் சிவகிரி இளைஞர்கள், கடிநாய் பிடித்து வேட்டைக்குச் செல்லுவார்கள். இவர்களுள், சிறுவனது மாமன்மாரும் இருக்கிறார்கள். சிறுவனது தாய் அவர்களைப் பற்றித் தனது தாலாட்டில் கூறி, அவனது வீர உணர்வுக்கு உரமிடுகிறாள். அவர்கள் வேட்டையாடித் திரும்பும்போது அவர்களை வரவேற்க தலைப்பாகை அணிந்து, வல்லவாட்டுப் போட்டு மருமகனை வாசலில் நிற்கச் சொல்லுகிறாள்.

மானல்ல ஓடுது

,

மறிடா நல்ல தம்பி

மான் ஓடும் நேரமெல்லாம்

தானோடி வந்தவனோ

காட்டக் கலைத்து உன்மாமன்

கடி நாயை ஏவிவிட்டு

வேட்டைக்குப் போராக

,

வீரபுலி உங்கமாமன்

,

பன்றி படுமோ

,

பதினெட்டு மான் படுமோ

,

சிங்கம் புலி படுமோ

, உங்க

சின்ன மாமன் வேட்டையில

வண்டாடிப் பூமலர

,

வையகத்தார் கொண்டாட

-என் கண்ணே

உன்னைக் கொண்டாடிப் பூமுடியும்

உன் கோலத்திருமுடிக்கு

ஏலக்காய் காய்க்கும

;¢

இலை நாலு பிஞ்சுவிடும்

சாதிக்காய் காய்த்து இறங்கும்

-உன்

தாய் மாமன் வாசலிலே

பச்சை நிறம் வள்ளி

,

பவள நிறம் தெய்வானை

சோதிநிறம் சுப்பையா

சொன்ன வரம் தந்தாரோ

!

உசந்த தலைப்பாவோ

,

உல்லாச வல்லவட்டு

நிறைந்த தலைவாசலிலே

நீ நிற்பாய் மருமகனே

!

வட்டார வழக்கு

: மானல்ல-மானல்லவா; போராக-போகிறார்கள்; தலைப்பா-தலைப்பாகை.

சேகரித்தவர்

:

குமாரி பி

. சொர்ணம் இடம்:

சிவகிரி

,
நெல்லை மாவட்டம
 
 


2008/12/10 yesu das <div...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages