Gayathri
unread,Dec 17, 2008, 4:04:16 AM12/17/08Sign in to reply to author
Sign in to forward
You do not have permission to delete messages in this group
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to இல்லம் (your HOME)
மழலைகளுக்கான கட்டுரை.
அறு சுவை தரும் ஆரோக்கியம்
மனிதன் வாழ்வில் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான பகுதியை
உணவுக்கு என்று செலவிடுகிறான். நாம் உண்ணும் உணவுகள் மூலம்
நம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. நாம் சாப்பிடும் உணவு
சுவையாக இருக்க வேண்டும் அல்லவா? பெரும்பாலான உணவகங்களில் அறு சுவை உணவு
என்று போடப்பட்டிருக்கும் . பெரும்பாலான பேர்கள் அறு சுவை உணவு என்றால்
மிகுந்த சுவையான உணவு
என்றுதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். இதன் உண்மையான பொருள்
துவர்ப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு,இனிப்பு, கார்ப்பு ஆகிய ஆறும் கலந்த
உணவு. நாம் ஒவ்வொரு வேளையிலும் சாப்பிடும் உணவிலேயே இந்த ஆறு சுவைகளும்
அடங்கியுள்ளன.மனித உடலில் இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு,
உமிழ் நிர், மூளை என்று ஏழு தாதுக்கள் உள்ளன. இவ்வேழு தாதுக்களால்
கட்டப்பட்டிருப்பதால்,யாக்கப்பட்டிருத்தலால் மனித உடலுக்கு யாக்கை என்று
பெயர். ஆறு தாதுக்கள் உடலில் சரியாக இருந்தால் ஏழாவதான மூளை சரியாகவே
இருக்கும். ஆறு சுவைகளில்,
இரத்தத்தை உண்டாக்க துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும், தசையை வளர்க்க
இனிப்பும், கொழுப்பைத் தர புளிப்பும், நரம்பைப் பலப்படுத்த கசப்பும்,
உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய காரமும் உதவியாக உள்ளன. நம்மில் சில பேருக்கு
காரம் அதிகம் பிடிக்கும், சில பேருக்கு புளிப்பு,பெரும் பாலான பேருக்கு
தித்திப்பு சுவைப் பிடிக்கும். எந்த வகை உணவானாலும் அளவாக உண்டால்
நல்லது. அதனால்தான் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே
பிறந்தது. சிறிது காரம் கூட உண்டால் என்ன வந்து விடப் போகிறது அல்லது
காரமே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும் என்று தெரிந்து கொள் வோம். அதிக
காரம் உண்டால் வயிற்று வலி, நீர்ச் சுருக்கு, சீத பேதி உண்டாகும். காரம்
குறைந்தால் நாவறட்சி, மலச் சிக்கல், அஜிரணம், மந்த பேதி முதலியன
உண்டாகும். இந்த உமிழ் நீர் சுரந்தால்தான் கடினத் தன்மையுள்ள உணவு
மிருதுவாக மாறும். உணவும் உமிழ் நீரோடு கலப்பதால், உணவும் தொண்டைக் குழி
வழியே எளிதில் வயிற்றை சென்றடைவதுடன் உணவும் நன்கு சீரணம் அடைகிறது.
கசப்புச் சுவை அதிகமானால் தூக்கமின்மை, அரிப்பு, சொறி சிரங்கு முதலியன
தலை காட்டும். கசப்புச் சுவை குறைந்தால், அஜீரணம், சோம்பல், பலக்குறைவு,
அபான வாயு அதிக அளவில் பிரிதல் ஆகியவை உண்டாகும். நரம்பின் பலத்தால்தான்
நம் உடல் இயங்குகிறது.போதிய நரம்பு பலம் உள்ளதால்தான் நம்மால்
சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. மீதம் உள்ள நாலு சுவைகள் என்ன செய்யும்
என்று அறிய நாளை வரை பொறுத்திருங்கள்! .