கிராமத்து பெட்டைக் கோழிதான்
விடியற்காலையில் கூவும்
இப்போது எல்லாமே பட்டணத்துக் கோழிகள்
பகலில் இரண்டு மணிக்குத்தான் கூவுகிறது
பதறி அடித்துக் கொண்டு பால் வாங்க ஓடுகிறது சேவல்
இல்லையென்றால் மீண்டும் ஒரு முறை
கூவும் பெட்டைக் கோழி ,பட்டணத்து பெட்டைகோழி
யார் வாங்கிக் கட்டிக் கொள்வது
ஒரு சேவலின் புலம்பல்.........
( இது என் வீட்டுக் கதையல்ல ) பொதுக்கதை.......
அன்புடன்
தமிழ்த்தேனீ
On Dec 13, 9:57 am, "N Suresh, Chennai" <
nsureshchen...@gmail.com>
wrote:
> பெட்டைக் கோழியை
> செல்லமாய் எழுப்பி
> இதோ டீ என்று
> காலைமுத்தமும் காலைவணக்கமும்
> சொன்ன
> இந்தியத்தலைவர் சேவல்க்கோழி
> திரு.லால பகதூர் சாஸ்தரிபோல்
> நடந்து கொள்ள ஆசைப்பட்டு
> ஏக்கத்தில் தளர்ந்து போய் உறங்கி
> குற்ற உணர்வில்
> ஒவ்வொரு நாளையும்
> கவலையில் துவக்கும்
> பல்வேறு சேவல்களில்
> யானும் ஒருவன் என்ற
> உண்மை சொல்வதில்
> பெருமைப்படுகிறது உண்மை- ஆனால்
> இனிமேலாவது திருந்தடா
> என்கிறது அறிவு!
>
> அன்புடன்
> என் சுரேஷ்
>
> On 12/12/2007,
raghavan.pus...@gmail.com <
pushpara...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > சேவல் கூவுமுன், அலாரம் கூவி
> > வைகறையில் துயில் நீங்கி , நீராடி
> > அவசர கதியில் பணி துவங்கி
> > சமயல் முடியும் நேரமது
>
> > இடையிலே சலவை இயந்திரம் ஓசை இட்டதில்
> > தொலைக்காட்சி செய்திகள் காதில் விழவில்லை என
> > நிறுத்த்க் கோரி கணவரின் அலறல் வேறு!!!!
>
> > பார்த்து பார்த்து சமைத்து சுட சுட தட்டிலே இட்டால்
> > நாக்கை சப்பு கொட்டி சாப்பிட்டுவிட்டு நித்தம் கூறும் குற்றச்சாட்டுடன்
> > ஏப்பம் விடுவதில் குறைவு இல்லை!!!!
>
> > யார் சொன்னது பெட்டை கோழி கூவி
> > பொழுது விடியாது என்று.
>
> > அன்புடன்
> > புஷ்பா ராகவன்- Hide quoted text -
>
> - Show quoted text -