நாட்டுப் பாடல்கள்

407 views
Skip to first unread message

Venkatram Shrinivas

unread,
Feb 25, 2007, 4:36:48 PM2/25/07
to இல்லம் (your HOME)

நாட்டுப் பாடல்கள்

எல்லா

அன்பர்களுக்கும் பணிவுடன் ஒரு விண்ணப்பம்.

'

பாட்டிக்குப் பாட்டி' வழியாய் கேள்வி முறையாகாவே வந்த 'மாங்கல்ய பிக்ஷை' என்ற நாட்டுப்பாடலை எங்களது திருமணத்திற்குப் பிறகு முதலிலிருந்தே எனது மனைவி, விடாது வாய்விட்டும் , மனதிற்குள்ளூம் பாடிக் கொண்டு வந்திருப்பது எனக்கு ஆறேழு வருடங்களூக்கு முன் தான் தெரிய வந்தது. அதுவும் எப்படியென்றால், அதற்கும் ஒறு கதை இருக்கிறது. அதையெல்லாம் நான் எழுதுவேனோ எழுதமாட்டேனோ என்பது, இந்த மடலுக்குக் கிடைக்கும் தங்களின் பெரும்பாலோரின் பதிலைப் பொறுத்து இருக்கிறது .

எல்லோரும் புகழும் பேராசியர் நா

. வானமாமலைஅவ்ர்களது ' தமிழ் நாட்டுப் பாடல்கள்' என்ற மிக அருமையான நூல் 1964 ல் முதலில் பரிசுரமாகி 12 வருட காலத்திற்குப் பிறகு (1977) பலத் திறுத்தங்களுடன் பரிசுரமாகிய வெளிவந்த ஓராண்டிற்குள் செலவாகி விட்டது. பதிப்புகளெல்லாம் திர்ந்தவுடன், உலகத்தில் தமிழ் உலாவும் எல்லா இடத்திலிருந்தும் , அந்த நூலுக்கான் தேவை மிகவாக அதிகரிகத்தது.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் நாட்டுப்பாடல் வெளியீடுகள்

, ஆய்வுகள் , கருத்தரங்குகள் அனைத்தையும் தொடங்கி வைத்தது இந்த நூல்தான் என்று பெருமையாகக் குறிப்பிடலாம். பல முயற்சிகளுக்கு வழி திறந்து விட்டது இந்த நூல் . பல்கலைக் கழகங்களில் ஆய்வு ஆர்வத்தை ஏற்படுத்தி, சில மாணவர்களை இத்துறை ஆய்வுக்குக் கவர்ந்தது 'தமிழர் நாட்டுப் பாடல்களே',

இந்நூல் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும்

, கேரளப் பல்கலைக் கழகத்திலும், தமிழ்த் துறையில் மூல நூலாக (Source Book) ஆகப் பயன்படுகிறது . ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், நாட்டுப் பாடல் துறையில் சிறந்த நூல் இதுவென மதிக்கிறார்கள்.

இந்நூல் வெளிவந்த ஓராண்டிற்குள் செலவாகி விட்டது

. இந்த நூலின் தாக்கத்தால், நாட்டுப் பாடல் ஆய்வை ஈழத்தில் மேற்கொண்ட பாலசுந்தரம், இதற்கோர் மறுபதிப்பு தேவையென்று எழுதினார் . பல்கலைக் கழகங்களில் பழைய பிரதி பழுதாகிப் புதிய பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை வெளியிட நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் சம்மதித்துள்ளது

இப்பெரிய புத்தகத்திலிருந்து

, வெளியிட்டோரின் பொது சொம்மதத்துடன், சில பாடல்களை எடுத்து இல்லத்தில் (பிறகு , கண்டிப்பாக ஆகிரா விருப்பப் பட்டால் 'மழ்லைகள் காமி 'லிம் பரிசுரிக்க்லாம் என்ற ஒரு எண்ணம் எழுந்தது. அதன்படி, "தாலாட்டு', 'தெய்வங்கள் ', 'விளையாட்டு', என்ற அத்தியாயத்திலிருந்து சில பாடல்களை எடுத்து சிறிது சிரமத்துடன் (தமிழில் தச்சடிப்பதற்கே சில நாட்களூக்கு முன்பு தானே ஆரம்பித்தேன்!) யூனிகோடில் மாற்றி வைத்திருக்கிறேன்.

அன்பர்கள சரியென்று தலையாட்டினால் முதலில் என் மனைவி மனப்பாடம் செய்து வைத்திருக்கும்

'மாங்கல்ய பிக்ஷை ' யுடன் ஆரம்பித்து ஒவ்வ்ரு நாளுக்கு அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு பாடலாக பரிசுரிக்கிறேன். அப்படியே தங்களடைய இன்னுமொரு சம்மதமும் வேண்டும் அந்த அருமையான நூலின் 'அறிமுகத்தில் ' (Introduction) அப்பேறிஞர் மிக அருமையான தகவல்களும் விளக்கங்களும் கொடுத்திருக்கிறார். நன்பர்கள் விருப்ப்ப் பட்டால் இருபது "MSWord" பக்கங்கள் கொண்ட அந்த பருப்பொருளை நான்கு அல்ல்து ஐந்து மடல்களாக அனுப்பித்தருவேன்.

ஆண்டவா அன்பர்கள் கருத்துகளும் விருப்பங்களும் எப்படியோ

?

சீனு

(ஸ்ரீனிவாசன்)

Siva Sankar

unread,
Feb 25, 2007, 5:03:34 PM2/25/07
to il...@googlegroups.com
ஐயா
ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம், தயவு செய்து எழுந்துங்கள், ஞானவெட்டியான் ஐயா என்று ஒருவர் சித்தம் என்ற குழுமத்தில் செய்யமுயன்ற சேவை அது, அழிந்துவரும் அரிய பாடல்களை மின்னூலாகத்தொகுத்து வைப்பது, தங்களின் இச்சேவை, தமிழுக்குத்தேவை,   தாருங்கள்...வணக்கம் மற்றும்   ஆவலுடன்,
சிவா..அசாமிலிருந்து...

 
On 2/26/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

நாட்டுப் பாடல்கள்

எல்லா

அன்பர்களுக்கும் பணிவுடன் ஒரு விண்ணப்பம்.

'



--
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com

AKR

unread,
Feb 25, 2007, 6:48:04 PM2/25/07
to il...@googlegroups.com
"பைரவன் சேவை நாட்டுக்குத்தேவை" என்பது போல் சீனு மாமாவின் சேவை தமிழுக்கும் இல்லத்துக்கும் தேவை எனலாமா?
 
ஆகிரா
----- Original Message -----

வேந்தன் அரசு

unread,
Feb 25, 2007, 10:37:43 PM2/25/07
to il...@googlegroups.com
காத்திருக்கேன்.
 
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

balasubramanian

unread,
Feb 25, 2007, 10:02:19 PM2/25/07
to il...@googlegroups.com
தேன் கொடுத்தால் வேண்டாம் என்போமா என்ன. இதற்கு அனுமதி கேட்கவேண்டுமா?
 
ந்.பார்வமணி
----- Original Message -----
From: AKR
Sent: Monday, February 26, 2007 5:18 AM
Subject: [ILLAM, your HOME] Re: நாட்டுப் பாடல்கள்

"பைரவன் சேவை நாட்டுக்குத்தேவை" என்பது போல் சீனு மாமாவின் சேவை தமிழுக்கும் இல்லத்துக்கும் தேவை எனலாமா?
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Monday, February 26, 2007 3:33 AM
Subject: [ILLAM, your HOME] Re: நாட்டுப் பாடல்கள்

ஐயா
ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம், தயவு செய்து எழுந்துங்கள், ஞானவெட்டியான் ஐயா என்று ஒருவர் சித்தம் என்ற குழுமத்தில் செய்யமுயன்ற சேவை அது, அழிந்துவரும் அரிய பாடல்களை மின்னூலாகத்தொகுத்து வைப்பது, தங்களின் இச்சேவை, தமிழுக்குத்தேவை,   தாருங்கள்...வணக்கம் மற்றும்   ஆவலுடன்,
சிவா..அசாமிலிருந்து...

 
On 2/26/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

நாட்டுப் பாடல்கள்

எல்லா

அன்பர்களுக்கும் பணிவுடன் ஒரு விண்ணப்பம்.

'



--
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com


No virus found in this incoming message.
Checked by AVG Free Edition.
Version: 7.5.446 / Virus Database: 268.18.3/700 - Release Date: 2/24/2007 8:14 PM

Venkatram Shrinivas

unread,
Feb 26, 2007, 12:52:28 AM2/26/07
to il...@googlegroups.com

நான் சற்றும் எதிர்பாராத

'மின்வேகத்தில்' வந்த 'ஆதரவுக் கடிதங்கள்' என்னை நன்றி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டன . வேறுவிதமான மடல்கள் வருமுன் உடனே என்னுடைய கட்டுரையைத் துடங்கிவிட்டென்!

நாட்டுப் பாடல்கள் - முன்னுரை மடல் 2

(

இது முன்னுரையின் தொடக்கம் தான் இதற்குப் பிறகு வரும் மடல்கள் எல்லாம் படிப்பவர்கள் மனதைக் கவர்வதாக இருக்கும் ]

'

பாட்டிக்குப் பாட்டி' வழியாய் கேள்வி முறையாகாவே வந்த 'மாங்கல்ய பிக்ஷை' என்ற நாட்டுப்பாடலை எங்களது திருமணத்திற்குப் பிறகு முதலிலிருந்தே எனது மனைவி, விடாது வாய்விட்டும் , மனதிற்குள்ளூம் பாடிக் கொண்டு வந்திருப்பது எனக்கு ஆறேழு வருடங்களூக்கு முன் தான் தெரிய வந்தது. அதுவும் எப்படியென்றால், நாங்கள் காஞ்சி சங்கராசாரியார்கள் அவர்களைப் பார்க்கப் போவதுற்கு முன்பு தான் சொன்னாள் "இந்தப் பாட்டை எனக்குத் தெரிந்தவரை சி ன்னவய்சுலெ அடிக்கடி சொல்லிக்கொடுத்தை அப்படியே தப்பில்லாமல் மனப்பாடம் பண்ணிண்டு பாடிண்டு வந்திண்ட்ருக்கேன். இந்த பாட்டு எந்த புத்தகத்திலும் இல்லை . ஆசாரியாள் அருள் கொடுத்தால் அதை அச்சடிச்சு சின்ன புத்தகமாக பண்ணி, குறைந்த விலையில் வித்தால், அதில் லாபம் வந்தால் அனைத்தையும் மடத்திற்கே கொடுத்து விடலாம் . நஷ்டம் ஆனால் அதை நாமே ஏற்றுக்கொள்வோம் என்று விண்ணப்பிக்கலாம் என்ற ஒரு ஆசை ", நான் ஆச்சரியத்துடன் அவள் எழுதியிருந்ததை வாங்கிப் படித்தேன். கொச்சைத்தமிழில் இருந்தது. ஓரிரண்டு வரிகளில் தவறுகள் இருப்பதாக எனக்குப் பட்டது, சில வரிகளின் பொருள்கூட விளங்கவில்லை . "அதைப் பத்தியெல்லாம் நீங்க குழப்பிக்காதேங்கோ. முத முத்ல்லே எப்படிக் கத்துண்டேனோ அப்படித்தான் பாடிண்டு வரேன். தப்பிருக்கோ தப்பில்லையோ அதைக் கேட்டுண்டு , எல்லாத்தையும் மன்னிச்சுட்டுத் தானே இத்தனெ நாளா அம்பாள் நம்பளே காப்பாத்திண்டு வரா. எதுக்கும் பெரியவாளோட அநுக்கிரகம் மொதல்லெ கிடைக்கட்டும் நீங்க சும்மா வாங்கோ.

காஞ்சீபுரத்தில் இரண்டு நாள் தாங்கியும் பரமாசாரியோரின் தரிசனம் கிடைக்க வில்லை

. சாதுர்மாஸ்ய மௌனவிரததில் இருந்த அவரது உடல்நிலை காரணமாக நாங்கள் சென்ற இரண்டு நாட்க்ள் முன்பிருந்து அவரது தரிசனம் யாருக்கும் கிட்டவில்லை. ' இன்று கிடைக்கலாம், நாளை கிடைக்கலாம்' என்று நம்பிக்கை கொடுத்து வந்த மடத்தின் சேவையாளர்கள் கிடைசியில் 'இன்னமும் சில நாட்கள் பொருக்கவேண்டும் . இது அவரது வைத்தியர்களின் கண்டிப்பான உத்தரவு. என்ன செய்யமுடியும் ? சின்ன பெரியவாளெப் பாத்துட்டு ப்போங்களேன்' எனச்சொல்லலாயினர் .

கடைசியி

ல் ஜயேந்திர ஸ்வாமிகளைத் தரிசித்தோம்.

ஸ்வாமிளுக்குக்கு எனது

'அண்ணன்' ' கரிச்சான் குஞ்சு' அவர்களைத் தெரியும். எங்களுக்குப் பின்னால் சிறிய கூட்டம் காத்துக் கொண்டிருந்ததனால், எங்களூடன் அவர்கள். அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை . " நாட்டுப் பாடல் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் கணவர் சொல்வது போல் ஒன்றிரண்டு பிழைகள் தென்பட்டால் முடிந்தால் அவரையே திருதித்தரச் சொல்லி தாராளமாக அச்சேற்றுங்கள் ஒன்றும் தப்பில்லை "

நான் திருத்தவும் முன்வரத் தயாராயில்லை

. பிறகு சமயம் கிடைத்தால், நானே சென்று, காஞ்சி மாமுனிவரை நேரில் தரிசனம் செய்து அவரது பரிபூரண ஆசிகளைப் பெற்ற் பின் மற்ற வேலைகளைத் தொடரலாம் , என்றிருந்து விட்டேன். ஆந்த அருள் கிடைக்காமல் போய்விட்டது .

சட்டென முன்னுரையை முடித்துக் கொண்டு அந்தப் பாடலை அன்பர்களுக்கு அளிக்கிறேன்

. எதிர்பாராத வசமாக இணைய நன்பர்களில் சிலருக்கு இப்பாடலைப் பற்றி முன்னமே தெரிந்திருந்தாலும் , தவள்றுதல்கள் ஏதும் இருந்தாலும் தெரியப்படுத்தவும்

சுமங்கலி பிரார்த்தனை

சதுர்முகுந்தன் தேவியாரே ஸரஸ்வதி தாயே

சந்ததமும் எந்தனுடன் நாவில் வாழம்மா

பரிபூரணி பஞ்சாக்ஷரி பார்வதித்தாயே

என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

கொத்துடன் தான் செவ்விளநீர் கொங்கையுள்ளாரே

குலவாழும் கைலாச நாதன் நாயகி

மெத்தடங்கும் மொழியாளே வாவென்றழைத்து

மடிகோரி மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே

முக்கண்ணன் தேவியாரே பார்வதித்தாயே

சிக்கண்ணன் சிவனருளாலே வாழவேண்டும்

ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷ்க்ஷையிடம்மா

ஆருஜடைமேலிருக்கும் அலங்காரியே

ஐந்துதலை நாகம் பூண்டாடும் தேவியே

பொன்னுடனே பொற்பாதம் கொடுக்கும் தாயாரே

என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

மாதாவே தாயாரே பார்வதித்தாயே

மண்ணில் வாழும் மஹாதேவநாதன் நாயகி

தாரம் நீ ஒழிய வேரொருவரில்லையே

மாதாவே மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

ஆதியந்தம் அற்றவளே அன்னமே தாயே

அரனென்கும் கைலாச நாதன் நாயகி

தேன்ரஸம் உள்ள தாயே எந்தனிடத்தில்

ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

பொன்னான நாயகியே பார்வதித்தாயே

எண்ணா மலைகள் தோறும் வளர்ந்தாயே

கண்ணாரக்காட்சியுள்ளோர் ஆசை தீர்த்தாயே

ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷ்

¨க்ஷயிடம்மா

காவல் கொள்ளும் மணவாளனாய்க் கைபிரியாது

அக்னி முன்பாகவே வலக்கைப் பிடித்த

அன்பான கணவருக்குப் பின் பிரியாமலே

ஸ்திரமாக மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து

மனஸ்தாபம் தீர்ப்பாயம்மா நீயிரங்கியே

ஏழைக்கிரங்கம்மா எந்தன் மாதாவே

என் மேல் கிருபை பாரு பார்வதித்தாயே

தந்தையோடு தாயாரும் தானுமாகவே

ஸந்தான சம்பத்தையும் தந்தருளம்மா

ஒத்த உடன்பிரப்பையும் தந்தருளம்மா

என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

வந்தவினை போக்கிவைத்து வாழ்வையும் தந்து

மற்ற வேறு சத்துருக்கள் வந்தண்டாமலே

புத்திரர்களையும் பாக்யத்தையும் தந்தருளம்மா

என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷ்க்ஷயிடம்மா

வாழ்வுமுண்டாம் சோர்வுமுண்டாம் சிதருமுண்டாம்

மாதாவுந்தனிடத்தில் பக்தியுமுண்டாம்

எந்தனுடைய பெண்குறையைத் தீர்த்தருளம்மா

என்றும் பிரியாத மாங்கல்ய பிக்ஷ்க்ஷயடம்மா

சுபம்

Siva Sankar

unread,
Feb 26, 2007, 12:54:07 AM2/26/07
to il...@googlegroups.com
அருமை ஐயா
தொடருங்கள், அற்புதமாக இருக்கின்றது....இன்னும் இன்னும்....

Venkatram Shrinivas

unread,
Feb 26, 2007, 1:07:37 AM2/26/07
to il...@googlegroups.com

"

முத்தணிந்த மார்பினாளே மூவர் தாயாரே" இதன் பொருள் என்னைக் குழப்புகிறது . என் மனைவியோ பிடிவாதமாக தான் சொன்ன வார்த்தைகள் அப்படித்தான் இருக்கின்றன் என்கிறாள். எனக்கு ஒரு எண்ணம் உதயமாயிற்று .

கேழ்ப்பாரில்லாமல் அழுது கொண்டிருந்த குழந்தை திருஞானசம்பத்தை உலகநாயகி அம்பாள், அன்பும் அருளுடன் எடுத்துக்கொண்டு பாலூட்டினார் என்று சொல்லப் படுகிறதே அதை சிலேடையாகக் குறிக்கின்றதோ

?

Venkatram Shrinivas

unread,
Feb 26, 2007, 8:31:42 AM2/26/07
to il...@googlegroups.com

AUTHOR N.VANAMALAI'S INTRODUCTION TO 'TAMIL FOLKSONGS'.

( 'தமிழ் நாட்டுப்பாடல்கள்'க்கு ஆசிரியரின் முகப்புறை)

ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன.   இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன.   சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும் போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன.   சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிகழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன.  காவியத்தில் காணப்படும் தெய்வ வணக்கமும், குரவைப் பாடல்களும், வரிப்பாடல்களும், அம்மானைப் பாடல்களும், துன்பமாலை என்ற பகுதியும் வெகுகாலத்திற்கு முன்பு வழங்கிவந்த நாட்டுப்பாடல்களின் கருத்தையும், அமைப்பையும் தழுவியன என்று உறுதியாகச் சொல்லலாம்.

       நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தன.   அல்லது வேலை செய்யும் காலத்தில் களைப்பைப் போக்க அவர்கள் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கப் பாடப்படும் பாடல்களும் உள்ளன.  எப்படியும் ஒரு குழுவினரின் மனத்தில் ஏக காலத்தில் சமமான உணர்ச்சியை உண்டுபண்ணுவது பெரும்பான்மையான நாட்டுப் பாடல்களின் நோக்கமாகும்.

       நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை.   இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே

நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன.   ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.

நமது கிராம வாழ்க்கை பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவினைகளால், முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது.   உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்படவில்லை.   இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயம் என்று நினைத்துவிடக் கூடாது.  கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன.   ஊர்க் கோவில்களுக்கு ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது.  அக்கோவிலை நிர்வாகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள் மேல் வர்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை.  சிலருக்கு கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன.  இவர்களில் ஊர் வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.   அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன.  உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.

மாற்றமுடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான்.   இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன.  தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும், சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.

(தொடரும்)

Venkatram Shrinivas

unread,
Feb 26, 2007, 9:33:12 AM2/26/07
to il...@googlegroups.com

அவைகள் நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன.   ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.

நமது கிராம வாழ்க்கை பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவினைகளால், முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது.   உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்படவில்லை.   இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயம் என்று நினைத்துவிடக் கூடாது.  கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன.   ஊர்க் கோவில்களுக்கு ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது.  அக்கோவிலை நிர்வாகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள் மேல் வர்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை.   சிலருக்கு கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன.  இவர்களில் ஊர் வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.   அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன.  உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.

வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும் பல போர்கள் நடப்பதற்கும் அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக்கிராம அமைப்புதான் கொடுக்க வேண்டும்.   கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது.  எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைவிக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும்.   இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.

நெசவு முதலிய தொழில்களும் குடிசைத்தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன.   அயலு£ர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியில்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள்.   இதனால் கைத்தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.

ஏழ்மைநிலை பொறுமையின் எல்லையைத் தாண்டிய போது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர்.   இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம்.  இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவோம்.   நாடார்களது சாதி வரலாற்றை 'வலங்கையர் கதை' என்ற நூல் கூறுகிறது.  அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்தரவிடப்பட்டார்கள்.   அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு 'வெட்டி' என்ற பெயர் வழங்கப்பெற்று வந்தது.  'வெட்டி' முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள்.   அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்துவிட்டான்.  ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான்.   அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடுகடத்தி விட்டான்.  அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான்.  இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும், ஒருபோராட்ட நினைவு.

பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல இடங்களில் தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள இயலாமல், கோவிற் சுவர்களை இடித்தும் பத்திரங்களைத் தீக்கிரையாக்கியும் சுரண்டல் முறைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் காட்டியுள்ளார்கள்.

ஏனெனில் கோயில் மதில் சுவர்களில்தான் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த நிலமான்யமுறையின் பிரமாணப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன.   கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது.  "மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டிவந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர்ச் சாசனம் கூறுகிறது."

இவ்வாறு கிராம நல அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல் நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது.   போர்த்துகீசியர், டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளிநாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.   கடற்படை வலிமையால் கீழ்க்கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர்.  இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது.   மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது.  ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று.   கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர்.  ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்பட வில்லை.

அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப் பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது.   அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது.  தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது.  ஆற்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது.   இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர்.  பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர்.   ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புது முறைப் போர்க் கருவிகள் உடையவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது.   நிலச்சுவான்தார் முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச்சொந்தக்காரர் ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர்.   ஜாதிப் பிரிவினைகள் தூண்டிவிடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர். ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் தொடங்கின.  நிலபிரபுத்துவ முறை வலுப்பெற்றது.   பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின.  இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று.  தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசீயத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று.

பெரு நிலச்சுவான்களைத் தவிர, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக, எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது.   இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது.  ஆயினும் நமது அடிப்படையான சமுதாய அமைப்பு இன்னும் சுரண்டல் அடிப்படையிலே இருக்கிறது.   கிராமப்புற மக்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் அவர்கள் தாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு நிலச்சுவான்களுடைய நிலத்தில் உழைக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.  பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கிருந்தாலும், அவ்வுரிமையை, சுதந்திரமாக நிறைவேற்ற வழி இல்லாமல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறுக்கே நிற்கின்றன.

ஆங்கிலேய ஆட்சியில் கொடுஞ் சுரண்டல் காரணமாக நிலத்தை இழந்த விவசாயிகள் புதுத்துறைகளில் நுழைந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.   அவர்கள் நகரங்களில் தொழிலாளராகவும் மலைத் தோட்டங்களில், தோட்டத் தொழிலாளராகவும் பணியாற்றுகிறார்கள்.  அங்கும் அவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

        நாடு விடுதலை பெற்ற பதினைந்து ஆண்டுகளில் அடிப்படைத் தொழில்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன.   நமது சுதந்திரம் பலமடைந்துள்ளது.  உற்பத்தி பெருகி உள்ளது.  ஆயினும், இவற்றின் பயன்களனைத்தும், உழைக்கும் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை.   நாட்டில் தொழில் வளர்ச்சியுற, தமது வாழ்வும் வளம் பெற வேண்டும் என்று உழைப்பாளி மக்கள் விரும்புகிறார்கள்.

    இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்ளையும் நாம் நோக்க வேண்டும்.

     நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம், 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள்.

     இதிகாசங்களான இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில் பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப் பாடல்கள் இருக்கின்றன.   இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள்.

அதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனனும், வீமனும் மக்களுக்கு தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும், மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை.   தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான்.  எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.

பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள் அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன.   பாரதக் கதையின் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக் கதைகள் கூறுகின்றன.  பாண்டியனின் மகள் அல்லி, பெண்ணாதிக்க சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள்.   அர்ச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான்.  அல்லி மீது காதல் கொள்ளுகிறான்.  அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள்.   அவனைச் சிறைப்படுத்துகிறாள்.  கண்ணனது உதவியால் அல்லியை அர்ச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான்.  இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது.   இக் கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.

இக் கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை.   அல்லியோடு சிறிதுநாள் தங்கியிருந்துவிட்டு அர்ச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான்.  போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது.   அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான்.  குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான்.  அர்ச்சுனன் பவளம் தேடி பவளக் கொடி காட்டிற்குச் செல்லுகிறான்.   பவளக்காட்டின் ராணி பவளக்கொடியை பார்க்கிறான்.  காதல் கொள்ளுகிறான்.  பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான்.   பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான்.  ருசிகரமாகக்கதை செல்லுகின்றது.  இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான்.   தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள்.  பவளக்காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள்.   கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.

மூன்றாவதுகதை பொன்னுருவி மசக்கை.   கருணனது மனைவிக்கும் கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது.  நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன.   கடைசியில் கருவங் கொண்ட மனைவியை கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான். நான்காவது கதை ஏணியேற்றம்.  இது அஞ்ஞாதவாச காலத்து நிகழ்ச்சி ஒன்றை பொருளாகக் கொண்டது.   அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள அவனது சகமனைவி அல்லியிடம் சரண் புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான்.   அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள்.  காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான்.   அல்லி தமிழ் நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள்.  அந்த ஏணி ஏறுமாறு துரியோதனனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப்போல பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது.   துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன.  பிரம்புகள் அவனை அடித்தன.  இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன.   அல்லி ஏணியைப் பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான்.  பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள்.   ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான்.  அங்கிருந்து பல உலகங்கள் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது.   கண்ணன் அவனைப் போற்றுவதுபோல் தூற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான்.  ஐவர் அவனைக் கண்ட பொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள்.   தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.

"இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்

     நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல

கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது

      கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்

      பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த

      புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்

      கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்தஇது

      போது மிவனை இன்னும் என்ன செய்யப் போகின்றீர்"

என்று தருமர் கேட்கிறார்.

இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும்.   அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதி வைத்திருக்க வேண்டும்.  இக் கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்றாலும், கதையின் கருத்துக்கள் பழம் தமிழ் நாட்டில் நிலவியவைதாம்.

     இவற்றைப் போன்ற பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக் கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள், எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தௌ ¤வாகக் காட்டுகின்றன.  புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ்நாட்டுக் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.   இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள்.  புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றனர்.   ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப் பட்டுள்ளன.

சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ் மக்களிடையே வழங்கி வருகின்றன.   அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப் பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியவை.   இவை யாவும், தமிழ் நாட்டு¢ உழைப்பாளி மக்களையும், தமிழ் நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டது.   இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இம் முகவுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.

சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான்.   உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன்.  அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீ ¢த்தார்கள்.  இக்கதையின் சரித்திரப் பின்னணி பற்றியும், கதா பாத்திர அமைப்பு பற்றியும், தென்பாண்டி நாட்டில் அவன்புகழ் வளர்ந்ததைப் பற்றியும் பல தொடர் கட்டுரைகள் எழுதி சரஸ்வதி என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளேன்.   அதனைப் படித்த செக் தமிழறிஞர் டாக்டர் கமில் சுவலபில், "உலகிலேயே மிகச் சிறந்த கதைப் பாடல்களுள் இது ஒன்று" என்று அபிப்பிராயம் தெரிவித்து அதனையும் எனது கட்டுரைகளையும், செக் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.   தமிழ் நாட்டுக் கதைப் பாடல்களில் பிறமொழியில் வெளியான கதைப் பாடல் இது ஒன்றே.

சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான்.   அவன் புகழ் பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனை பலி கொடுத்து விட்டார்கள்.

 இக்கதை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது.   கொடுமையைக் கண்டித்தும் கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.

 நல்லதங்காள் கதை, நாடகங்களின் மூலம் தமிழ் நாடு முழுவதும் சிறிது காலத்திற்கு முன்னர்வரை பரவியிருந்தது.   பெண்களுக்குப் பிறந்தகத்தின் சொத்துரிமை இல்லாததால் வரும் அவதிகளை அது வருணிக்கிறது.

சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில், வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.

சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே.   இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இவையாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன.  அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின்   வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன.  ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.   இவற்றும் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன.  இவற்றுள் மிகப் பழமையானது 'பஞ்சபாண்டவர்' கதை அல்லது 'ஐவர் ராஜாக்கள் கதை' பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டை தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது.   விசுவநாத நாயக்கன் ராணுவ காரிய கர்த்தனாகவும், அரியநாதமுதலி தளவாயாகவும் மதுரையில் அரசப் பிரதிநிதிகளாக நியமனம் பெற்றார்கள்.  தென் பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர்.   அரியநாத முதலி படை கொண்டு தெற்கே வந்தான்.  கயத்தாறில் பெரும் போர் நிகழ்ந்தது.  தோற்றுப் பின் வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டேயிருந்தனர்.   வள்ளியூரில் நடந்த போரில், நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள்.  எல்லோரிலும் இளையவனான குணசேகர பாண்டியன் சிறைப்பட்டான்.   விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்துவிட்டால் பாண்டியன் எதிர்ப்பு அடங்கும் என்று அரியநாத முதலி எண்ணினான்.  ஆனால் அந்தத் திருமணம் நடக்கவி ¢ல்லை.  குலசேகரன் வைரம் தின்று இறந்து விட்டான்.  அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டை ஏறினாள்.   இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது.  இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 450 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை.   கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை.  குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை.  ஆனால் இது மக்களைக் கவர்ந்துவிட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக்¢ கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்தரிக்கிறது.

தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது.   இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.

 அதற்குப் பிற்காலத்தில் தோன்றிய கதைகள், ராமப் பையன் அம்மானை, இரவிக்குட்டிப் பிள்ளை போர் முதலியன.   இவற்றுள் முன்னையது ராமநாதபுரம் சேதுபதிக்கும் ராமப் பையனுக்கும் நடந்த போரை வருணிக்கிறது.  இரவிக் குட்டிப் பிள்ளை போர் ராமப் பையனுக்கும், திருவனந்தபுரம் தளவாய் இரவிக்குட்டிப் பிள்ளைக்கும் நடந்த போரை வருணிக்கிறது.   இவை இரண்டும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்.  நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய கதைகள் பல இருக்கலாம்.   மேற்கூறிய கதைகள் மூன்றும் முறையே திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழங்கி வந்தவை.  மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாயக்கர் ஆட்சி கால நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்ட கதைப் பாடல்கள் கிடைக்கலாம்.

மதுரை வீரன் கதை, வரலாற்றுப் பின்னணியில் எழுந்த கற்பனைக் கதையாகும்.   அவை போலல்லாமல் சரித்திர நிகழ்ச்சிகளைப் பிரதான ஆதாரமாகக் கொண்ட கதைகள் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தல் அவசியம். (தொடரும்-மேலும் ஒம்பதுக்கு சற்று குறைவான பக்கங்கள் உளன. அனைத்தையும் ஒரே மட்லாக அனுப்பலாமா? பின்னர், நாட்டுப் பாடல்கள் தொடரும். இது வரை அனுப்பியுள்ளது எட்டு பக்கங்கள்.
நன்றி, வணக்கம்
சீனு(ஸ்ரீனிவாசன்)

 

Venkatram Shrinivas

unread,
Feb 26, 2007, 10:30:40 AM2/26/07
to il...@googlegroups.com

 நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியின் சிற்றரசன் தேசிங்கு போராடினான்.   அவன் பத்து மாதங்கள்தான் ஆட்சி புரிந்தான்.  நீண்ட நாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் தன் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின.   ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ் நாட்டில் இல்லை.  ஏன்?  லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை, முன்னூறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத் தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்றுவிட்டான்; தானும் உயிர் நீத்தான்.   பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லிம்,  அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான்.   முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.

 

இதற்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய கட்ட பொம்முவைப் பற்றிய பல கும்மிகளும், சிந்துகளும் இருப்பதாகத் தெரிகிறது.   அவற்றில் ஒன்றை, சென்ற ஆண்டு நான் வெளியிட்டுள்ளேன்.  மருது சகோதரர்களைப் பற்றி 'சிவ கங்கை அம்மானை', 'சிவகங்கைக் கும்மி' என்ற இரண்டு நாட்டுப் பாடல்களை ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரிக்காகத் தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ளது.   கான் சாகிப் பற்றியும் பூலித்தேவனைப் பற்றியும் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாக இருக்கின்றன என்று தெரிகிறது.  அவை கிடைத்து வெளியிடப்படுமானால் தொடர்ச்சியாக முன்னூறு, நானூறு வருஷங்களுக்கு இடையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றித் தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களின் கருத்துகளை அறிவதற்கு வழி கிடைக்கும்.   தமிழ் நாட்டு வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இக்கதைப் பாடல்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்குமானால் எனக்கு அனுப்பி வைக்க வேண்டிக் கொள்கிறேன்.  அவை அனைத்தையும் சேகரித்து வெளியிடுவது தமிழ் நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இனிக் கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும்.   வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன.  அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே.   இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம்.

 தேவியரைப் பற்றிய கதைகள் பழமையானவை.   மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை.

 திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் 'அலையோசை' என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்.   அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கி விட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன.  இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.

 தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே.   பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரைப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை.  இவை பெண்ணாதிக்க சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன.   இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்வி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை.

இவை மணம் புரிந்து கொள்ளாத தேவியர்.   இவற்றை பயத்தோடுதான் மக்கள் வழிபட்டனர்,  இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக்கூடியவை என்று நம்பினார்கள்.   'யக்ஷ¤ ' என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது.   காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கருநாடகத்திலிருந்தும் பண்பாட்டுத் தொடர்பின் காரணமாக இங்கு குடியேறியவை.  சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.

 தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப்பெற்று விட்டன.   காளி தனியாகவே வணங்கப்பட்டது.  அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாவிட்டது.  பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன.   ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும்.  இக்கோயிலுக்கு சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள்.   நவராத்திரியின்போது திருவிழாவும் நடைபெறும்.  சிறு கோயில்களில் ஒருநாள் மட்டுமே கொடை நடைபெறும்.

பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள்.   ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை.  செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத் ¢தைக் குறிக்கும்.  மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே.   சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன.  அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும்.   சுடலைமாடனுக்கு ஊர் தோறும் பல கோயில்கள் உண்டு.  அவற்றில் உருவச் சிலைகள் இல்லை.  சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன.   கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் உள்ளன.  இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.

 மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும்.   ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம், அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.

இவை யாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே.   வேதக்கடவுளரின் சிவன், நாராயணன் முதலியோரை பாமர மக்கள் வணங்குவது உண்டு.  எனினும், அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல.  லக்ஷ ¢மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம்.   முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ் நாட்டில் நிலவி வந்தது.  இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள்.  அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.

 பௌத்த, சமணச் சிறு தேவதைகளும் அம் மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியவையாயின.   ஆனால் அவை உருமாறி இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன.  இவற்றுள் ஒன்று விநாயகர்.  இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று.   வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது.  எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றி விட்டுப் பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர்.   அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக் கூற்றை மெய்ப்பிக்கும் சான்று.  'சாஸ்தா' சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.   இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர்.  சாத்தன் என்ற பெயரும புத்தர் பெயர்களுள் ஒன்று.  பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்கு பல ஊர்களில் கோயில்கள் தோன்றின.   அவர் சாந்த தெய்வம்.

 பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை.   மனிதனைவிடச் சிறிது அதிகமான சக்தியுடையவை.  அவ்வளவுதான்.  அவை புராணங்களில் சொல்லுவதுபோல் சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல.   இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சத்திகளைப் போன்றவையே.  அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள்.   இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.

இத்தொகுப்பில் சில தெய்வ வணக்கப் பாடல்கள் சேர்க்கப் பட்டுள்ளன.   அவற்றின் முன்னுரையில் மேல் விவரங்கள் கொடுக் கப்பட்டுள்ளன.

பாமரர் படைப்பிலேயே உணர்ச்சிமிக்க பாடல்கள் தாலாட்டும், ஒப்பாரியும்.   ஒன்று வாழ்க்கையின் தொடக்கம் பற்றியது, மற்றொன்று முடிவு பற்றியது;  ஒன்று தாயின் இன்பத்தை வெளியிடுவது.  மற்றொன்று உறவினர் துன்பத்தை வெளியிடுவது.  அப்பகுதிகளின் நீண்ட முன்னுரைகளில் இவ்வின்பமும், துன்பமும் சமூக வாழ்க்கையோடு தொடர்புடையவை என்பதைக் காட்ட முயன்றுள்ளேன்.

எனது முதல் தொகுப்பில் இருப்பவற்றைக் காட்டிலும் பலவகைப்பட்ட பாடல்கள் 'தொழில்' என்ற துறையில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.   உப்பளம், மீன் பிடித்தல், ஆலை, தேயிலைத் தோட்டம், வண்டியோட்டுதல் முதலிய தொழில்களைப் பற்றிய பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.  எல்லாப் பாடல்களிலும் தொழிலும், காதலும் இணைந்தே காணப்படுகின்றன.

காதல் பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அழகான பாடல்கள் காணப்படுகின்றன.   நெல்லை மாவட்டப் பாடல்கள் மட்டுமே சென்ற தொகுப்பில் இருந்தன.  பிறவகைப் பாடல்களை விடக் காதல் பாடல்களே பெரிதும் கிடைக்கின்றன.   தமிழ்நாடு காதலை மறந்து விடவில்லை என்று தோன்றுகிறது.

உழைக்கும் இளைஞரும் இளநங்கையரும் வயலிலும், பருத்திக் காட்டிலும், தேயிலைத் தோட்டங்களிலும், ரோடு வேலை செய்யும் போதும், மலைச்சாரலில் விறகு வெட்டும் போதும் கூடிப் பழகுகிறார்கள்.   எனவே வீட்டிலடைப்பட்டுக் கிடக்கும் உயர்ந்த வர்க்கப் பெண்களை விட, இளைஞர்களை அறிந்து காதல் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு.  ஆனால் சாதிப் பிரிவினைகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக உள்ளன.

ஒரு ஜாதியினருக்குள்ளேயே மணமுறை வழக்கங்கள் காதல், கற்பு மணமாக முடிவதற்குத் தடையாக நிற்கின்றன.   ஆயினும் இத் தடைகளை மீறி மனித உணர்வு சிற்சில சமயங்களில் வெற்றி பெறுகிறது.  சங்க காலத்து குறிஞ்சி நிலக் களவொழுக்க மரபுகளை இன்னும் பாமரர் நாட்டுப் பாடல்களில் காண்கிறோம். பாமர மக்களின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கைக்குட்பட்டது.   ஆணும் பெண்ணும் உழைத்தும் அவசியத் தேவைகளுக்குப் பணம் இல்லாத ஏழ்மை நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள்,

 

சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் அவர்களுக்கு இல்லை.   ஆயினும் மனித உணர்வின் மென்மையான அம்சங்கள் குடிசைகளிலும் ஒளி விடுகின்றன.  அன்பும் தியாகமும் அவர்களது வாழ்க்கையின் அடித்தளம்,  இவ்வடித்தளத்தின் மீது குடும்ப இன்பம் என்னும் உறுதியான கட்டிடம் எழுப்பப்படுகிறது.

ஆயினும் சமூக வாழ்க்கையினால் தோன்றும் பண ஆசையும், அந்தஸ்துப் பற்றும் குடிசைவாழ் மக்களையும் பீடிக்கிறது.   அதனால் இளைஞரது காதல் பாதைக்குத் தடைகள் உண்டாகின்றன.  பொருந்தா மணங்கள் நிகழ்கின்றன.  கிழவனுக்குப் பணம் இருந்தால் 30 வயது இளம் பெண்ணை மனைவியாகப் பெற முடிகிறது.   அவள் தாலிச் சிறையினுள் அடங்கி தனது உணர்ச்சிகளைக் கொன்றுவிட முயன்று நடைப் பிணமாக வாழ வேண்டி வருகிறது.  உணர்ச்சியை அடக்க முடியாதவர்கள், திருமணக் கட்டிற்கு வெளியே காதல் இன்பம் நாடுகிறார்கள்.   அதுபோலவே சொத்துரிமை காரணமாகக் குமரி, குழந்தைக்கு வாழ்க்கைப் படுவதும் உண்டு.  அவர்கள் முறை மாப்பிள்ளைகளோடு களவு ஒழுக்கம் கொள்ள சமூக பழக்கம் அனுமதிக்கிறது.   குடும்ப இன்பத்தை பொருளாதார ஏற்றத் தாழ்வும், நிலப்பிரபுத்துவக் கொள்கையும் சீரழிக்கின்றன.  இந்நிலைமை முழுவதும் பல நாட்டுப் பாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன.   குடும்பவாழ்க்கையில் ஆண் ஆதிக்கம் கூடாது ; இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து, குற்றங் குறைகளைப் பொறுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தைப் பல பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.   'ஆக்கத் தெரியாத அணங்கு' என்ற பாடல் இதற்கோர் நல்ல உதாரணம்.

         சொந்தத் தொழிலில் உழைப்போடும், பிறர் நிலங்களில் உழைப்போடும் கிராமத்தில் வாழ்கின்றனர்.   உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்த்தல் நியாயம்.  ஆனால் சோம்பேறித்தனமும், ஏமாற்றுதலும் கூடாது என்று நாட்டுப் பாடல்கள் போதிக்கின்றன.   உழைப்பின் உயர்வைப் பல பாடல்கள் போற்றுகின்றன.  சோம்பேறிக் கணவனைத் திருத்தி உழைப்பாளியாக்க முயலும் மனைவியரை நாட்டுப் பாடல்களில் அடிக்கடிச் சந்திக்கிறோம்.   நியாயமாகக் கூலி கொடுக்கும் முதலாளியைப் புகழ்வதும், கொடுமைக்கார முதலாளியை இகழ்வதும், தொழிலாளியின் இயற்கை.  இவ்வுணர்ச்சியையும் நாட்டுப் படல்களில் காண்கிறோம்.

உழைப்பின் கூட்டுறவில் காதல் துளிர்த்து வளர்கிறது.   உப்பளத்திலும், தேயிலைத் தோட்டத்திலும், நடுகைநடும் வயலிலும்,களத்து மேட்டிலும், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போதும், களையெடுக்கும் போதும், தொழிலில் கூட்டுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும், வாழ்விலும், குடும்பத்திலும் கூட்டுறவு கொள்ள ஆசைப் படுகிறார்கள்.   தொழில்களைப்பற்றியும் உழைக்கும் மக்களது கண்ணோட்டத்தை நாடோடிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

சமூக வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் கிராம மக்களின் உணர்வில் எதிரொலி கிளப்புகின்றன.   சில நிகழ்ச்சிகளில் அவர்களுக்குப் பங்கு இருக்கும்.

நேரடியாகக் கிராமத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளில் எல்லோரும் பங்கு கொள்வர்.   உதாரணமாகக் கிராமத்திற்குக் கொள்ளைக்காரர்கள் வந்தால், ஜாதி வித்தியாசமின்றி அவர்களை ஒன்றுபட்டு விரட்டுவார்கள்.  ஆனால் ஜாதிக் கலகங்கள் வந்தாலோ நியாய அநியாயத்தை ஓர்ந்து நோக்காமல் ஜாதிப் பற்றில் மூழ்கி வேற்று ஜாதியர்களை வெட்டித் தள்ளுவார்கள்.   வெறியடங்கியதும் தங்கள் செய்கையை நினைத்து வருந்துவார்கள்.  சிவகாசிக் கலகம், கழுகுமலைக் கலகம் இவை இதற்கு உதாரணமானவை.

இத்தொகுப்பில், சிவகாசிக் கலகத்தின் சமூகப் பின்னணியை விளக்கியுள்ளேன்.   இக்கலகத்தில் பங்கு கொண்டவர்களின் கருத்துக்களும், இரு கட்சியிலும் சேராது, இருவரையும் சமாதனப்படுத்த முயன்ற நல்லவர்களின் கருத்துக்களையும், நாம் இப்பாடல்களில் காண்கிறோம்.   கிராம ஒற்றுமையைச் சிதைத்து அதில் லாபம் காண முயலும் பெரிய மனிதர்களின் சூழ்ச்சிகளையும், ஒழுக்கமின்மையும், நாடோடிப் பாடல்களில் வெளியாகின்றன. ஆட்சியாளர்களில் நன்மை செய்பவர்களைப் புகழ்ந்தும் தீமை செய்பவர்களை இகழ்ந்தும் ¢ பாடல்கள் தோன்றியுள்ளன.  நாட்டுப் பாடல்களில் அரசியல் உணர்வு அதிகமாகக் காணப்படுவதில்லை.   ஏனெனில் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் தேசிய உணர்வு நமது கிராம மக்களிடம் அதிகமாகப் பரவவி¢ ல்லை.

     நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பணக்காரர் எதிர்ப்பு, சாதி அகம்பாவ எதிர்ப்பு முதலிய உணர்ச்சிகள் நாடோடிப் பாடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.   இவற்றை இணைக்கும் சமூகக் கண்ணோட்டப் பாடல்கள் தோன்றிய காலத்தில் உருவாகாததால், பணக்காரர்களுக்கு எதிர்ப்பு எவ்வுருவத்தில் வந்தாலும், அவை அவ்வப்பொழுது வரவேற்கப் படுகின்றன.   இவ்வாறுதான் பணக்காரர்களைக் கொள்ளையடித்த ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், மணிக்குறவன் முதலியவர்கள் நாட்டுப் பாடலில் இடம் பெற்றுள்ளார்கள். அதனால் கொள்ளைகளை, நாட்டுப் பாடகர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதல்ல.   பணக்கார எதிர்ப்பு உணர்ச்சியே ஜம்புலிங்கத்தையும் சந்தனத் தேவனையும் வீரர்களாகக் கருதச் செய்கின்றன.  கதைப் பாடல்களில் தன்னலம் கருதாமல், கிராம மக்களின் நலனுக்காக உயிர் துறந்த வீரர்களே, போற்றுதலுக்கு உரியவர்களானதைக் கண்டோம்.   கொள்ளைக்காரர்கள் அவ்விதப் போற்றுதலுக்கு உரியவராக மாட்டார்கள்.  கிராம மக்கள் பணக்காரர்களுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது துணிவாக அவர்கள் வீட்டை உடைத்துக் களவு செய்யும் திருடர்கள்கூட மக்களுக்கு வீரர்களாகத் தோன்றினார்கள்.   களவும், கொலையும் சுய நலத்தோடு செய்யப்படுவன.  சுயநலமின்றி கிராமச் சுரண்டல் முறையை எதிர்த்து நின்ற வீரர்களைக் கிராம மக்கள் தெய்வப் பிறவிகளெனப் போற்றுவர்.   அவ்வீரர்களுக்குக் கொடுத்த மதிப்பு கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும் என்றுமே கிடைத்ததில்லை,

 ஆங்கில நாட்டுப் பாடல்களில் ராபின்ஹ §டைப் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.   அவன் ஒரு கொள்ளைக்காரன்.  ஆனால் அவன் காலத்தில் அரசாண்ட அரசன் மக்களைக் கொள்ளையடித்து ஆடம்பரச் செலவு செய்தான்.  ராபின்ஹ §ட் காடுகளில் மறைந்திருந்து, அசரனுடைய உடமைகளைக் கொள்ளையிட்டான்.  கொள்ளையிட்டதைத் தான் வைத்துக் கொள்ளவில்லை.   மக்களுக்கு பகிர்ந்தளித்தான்.  அநியாயத்தை எதிர்த்து அவன் கொள்ளை செய்தான்.  மக்கள் உள்ளத்தில் அவன் இடம் பெற்றான். மக்கள் அவனை மறந்து விடாமல் நாட்டுப்பாடல்களில் அவன் நினைவை நிலைநிறுத்தினர்.

 அமெரிக்காவில் ' Cow boys' என்ற சட்ட விரோதமான வேட்டைக்காரர்கள் இருந்தார்கள்.  அவர்கள் சர்க்கார் காடுகளில் நுழைந்து காட்டு எருமைகளையும், மாடுகளையும் வேட்டையாடி, தோலுரித்து தோலைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.   போலீசார் எதிர்த்தால், அவர்களும் எதிர்த்துச் சுடுவார்கள்.  இவர்கள் சட்டத்தின் பிடிக்குள் அகப்படாமல் காட்டு ஓரங்களில் இருந்த சிற்றூர்களில் தலை மறைவாக இருந்துவிட்டுப் போய் விடுவார்கள்.   இவர்கள் துணிவு மிக்க இளைஞர்கள்.  ஊர்களில் வாழும்போது மனித உறவை பெரிதும் நாடுவார்கள்.  கன்னிப் பெண்கள் அவர்களை மிகவும் விரும்புவார்கள்.   அவர்கள் உறவு காட்டு வெள்ளம் போல் வேகம் மிக்கதாய் இருக்கும். இவ்வுறவுகள் நெடுநாள் நிலைக்காதென்று இருவருக்கும் தெரியும்.  பிரிவச்சமும் அதில் கலந்திருக்கும்.   அமெரிக்க நாட்டுப் பாடல்களில் பெண்கள் பாடும் வேட்டைக்காரன் பாடல்கள (Cow boys song) விறு விறுப்பான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அதற்கு அணைபோலக் காணப்படும். பிரிவச்சத்தையும் சித்தரிக்கின்றன.  இப் பெண்கள், வேட்டைக்காரர்களின் துணிவையும் உணர்ச்சி வெள்ளத்தையும் விரும்பினார்களேயன்றி, சுயநலத்தையும் கொள்ளை குணத்தையும் அல்ல.

 எனவே நமது நாட்டுப் பாடகர்களும், கொள்ளைக்காரர்களின் துணிச்சலைக் கண்டு வியப்புறுகிறார்களேயன்றி அவர்களைத் தாம் பின்பற்றக்கூடிய வீரர்களாக கற்பனை செய்து காட்டவில்லை.

 இதுவரை கிராமக் குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் காட்டுகின்றன என்று பார்த்தோம்.   இனி சாவினால் இறந்தவரது குடும்பத்தாருக்கு ஏற்படும் விளைவுகளை நாடோடிப்பாடல்கள் எப்படிக் காட்டுகின்றனவென்று பார்ப்போம்.  இறந்தவர் மீது நெருங்கிய உறவினர் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும்.   தாலாட்டைப் போலவே ஒப்பாரியும் தமிழ் நாட்டுப் பெண்களின் படைப்பாகும்.  தாலாட்டு தாயன்பின் வடிவம்.  தாய்க்குலத்தின் படைப்பு தாலாட்டு. ஆண்மகன் ஒருவன் இறந்தால் குடும்பத்தைத் தாங்கி நின்ற நடுத் தூண் சாய்ந்தது போல, அவன் மனைவி பாதுகாப்பு இழக்கிறாள். சமூக நன்மைகளை இழக்கிறாள்.   அவளது வருங்காலமே வறண்டு போகிறது.  ஒருவர் இறந்தால் மனைவிக்கு விளைவது இழப்புத் துன்பம் மட்டுமல்ல, வருங்காலம் முழுவதிலும் அவள் கவலைப்பட வேண்டியதாகிறது.   அவனுடைய சாவோடு கணவன், மனைவி உறவு அறுந்து போனாலும், குடும்ப உறவுகளில் அவளுடைய பொறுப்பு அதிகமாகிறது.  கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவளுடைய குழந்தைகள் வளரும் வரையிலும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவள் போராட வேண்டியிருக்கிறது.   மலடியாக இருந்தாலோ, அவள் வீட்டு வேலைக்காரியின் அந்தஸ்திலும் தாழ்ந்து விடுவாள்.  கணவன் வீட்டிலிருக்கும் சிறு உரிமை கூட தாய் வீட்டில் கிடையாது.   அங்கு அண்ணிகளின் ஆதிக்கம் நடைபெறும்.  எனவே கணவனை இழந்த மனைவியின் பிரச்னை, சொந்தப் பிரச்னையாக மட்டுமில்லாமல் பெண்களின் சொத்துரிமைப் பிரச்னையோடும் தொடர்புடையதாய் இருக்கிறது.

அதனால் கொள்ளைகளை, நாட்டுப் பாடகர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதல்ல.   பணக்கார எதிர்ப்பு உணர்ச்சியே ஜம்புலிங்கத்தையும் சந்தனத் தேவனையும் வீரர்களாகக் கருதச் செய்கின்றன.  கதைப் பாடல்களில் தன்னலம் கருதாமல், கிராம மக்களின் நலனுக்காக உயிர் துறந்த வீரர்களே, போற்றுதலுக்கு உரியவர்களானதைக் கண்டோம்.   கொள்ளைக்காரர்கள் அவ்விதப் போற்றுதலுக்கு உரியவராக மாட்டார்கள்.  கிராம மக்கள் பணக்காரர்களுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது துணிவாக அவர்கள் வீட்டை உடைத்துக் களவு செய்யும் திருடர்கள்கூட மக்களுக்கு வீரர்களாகத் தோன்றினார்கள்.   களவும், கொலையும் சுய நலத்தோடு செய்யப்படுவன.  சுயநலமின்றி கிராமச் சுரண்டல் முறையை எதிர்த்து நின்ற வீரர்களைக் கிராம மக்கள் தெய்வப் பிறவிகளெனப் போற்றுவர்.   அவ்வீரர்களுக்குக் கொடுத்த மதிப்பு கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும் என்றுமே கிடைத்ததில்லை,

 ஆங்கில நாட்டுப் பாடல்களில் ராபின்ஹுடைப் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.   அவன் ஒரு கொள்ளைக்காரன்.  ஆனால் அவன் காலத்தில் அரசாண்ட அரசன் மக்களைக் கொள்ளையடித்து ஆடம்பரச் செலவு செய்தான்.  ராபின்ஹுட் காடுகளில் மறைந்திருந்து, அசரனுடைய உடமைகளைக் கொள்ளையிட்டான்.  கொள்ளையிட்டதைத் தான் வைத்துக் கொள்ளவில்லை.  மக்களுக்கு பகிர்ந்தளித்தான்.   அநியாயத்தை எதிர்த்து அவன் கொள்ளை செய்தான். மக்கள் உள்ளத்தில் அவன் இடம் பெற்றான்.  மக்கள் அவனை மறந்து விடாமல் நாட்டுப்பாடல்களில் அவன் நினைவை நிலைநிறுத்தினர்.

 அமெரிக்காவில் ' Cow boys' என்ற சட்ட விரோதமான வேட்டைக்காரர்கள் இருந்தார்கள்.  அவர்கள் சர்க்கார் காடுகளில் நுழைந்து காட்டு எருமைகளையும், மாடுகளையும் வேட்டையாடி, தோலுரித்து தோலைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.   போலீசார் எதிர்த்தால், அவர்களும் எதிர்த்துச் சுடுவார்கள்.  இவர்கள் சட்டத்தின் பிடிக்குள் அகப்படாமல் காட்டு ஓரங்களில் இருந்த சிற்றூர்களில் தலை மறைவாக இருந்துவிட்டுப் போய் விடுவார்கள்.   இவர்கள் துணிவு மிக்க இளைஞர்கள்.  ஊர்களில் வாழும்போது மனித உறவை பெரிதும் நாடுவார்கள்.  கன்னிப் பெண்கள் அவர்களை மிகவும் விரும்புவார்கள்.   அவர்கள் உறவு காட்டு வெள்ளம் போல் வேகம் மிக்கதாய் இருக்கும்.

இவ்வுறவுகள் நெடுநாள் நிலைக்காதென்று இருவருக்கும் தெரியும்.   பிரிவச்சமும் அதில் கலந்திருக்கும்.  அமெரிக்க நாட்டுப் பாடல்களில் பெண்கள் பாடும் வேட்டைக்காரன் பாடல்கள (Cow boys song) விறு விறுப்பான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அதற்கு அணைபோலக் காணப்படும். பிரிவச்சத்தையும் சித்தரிக்கின்றன.   இப் பெண்கள், வேட்டைக்காரர்களின் துணிவையும் உணர்ச்சி வெள்ளத்தையும் விரும்பினார்களேயன்றி, சுயநலத்தையும் கொள்ளை குணத்தையும் அல்ல.

 எனவே நமது நாட்டுப் பாடகர்களும், கொள்ளைக்காரர்களின் துணிச்சலைக் கண்டு வியப்புறுகிறார்களேயன்றி அவர்களைத் தாம் பின்பற்றக்கூடிய வீரர்களாக கற்பனை செய்து காட்டவில்லை. இதுவரை கிராமக் குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் காட்டுகின்றன என்று பார்த்தோம்.   இனி சாவினால் இறந்தவரது குடும்பத்தாருக்கு ஏற்படும் விளைவுகளை நாடோடிப்பாடல்கள் எப்படிக் காட்டுகின்றனவென்று பார்ப்போம்.  இறந்தவர் மீது நெருங்கிய உறவினர் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும்.   தாலாட்டைப் போலவே ஒப்பாரியும் தமிழ் நாட்டுப் பெண்களின் படைப்பாகும்.  தாலாட்டு தாயன்பின் வடிவம்.  தாய்க்குலத்தின் படைப்பு தாலாட்டு. ஆண்மகன் ஒருவன் இறந்தால் குடும்பத்தைத் தாங்கி நின்ற நடுத் தூண் சாய்ந்தது போல, அவன் மனைவி பாதுகாப்பு இழக்கிறாள்.   சமூக நன்மைகளை இழக்கிறாள்.  அவளது வருங்காலமே வறண்டு போகிறது.  ஒருவர் இறந்தால் மனைவிக்கு விளைவது இழப்புத் துன்பம் மட்டுமல்ல, வருங்காலம் முழுவதிலும் அவள் கவலைப்பட வேண்டியதாகிறது.   அவனுடைய சாவோடு கணவன், மனைவி உறவு அறுந்து போனாலும், குடும்ப உறவுகளில் அவளுடைய பொறுப்பு அதிகமாகிறது.  கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவளுடைய குழந்தைகள் வளரும் வரையிலும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவள் போராட வேண்டியிருக்கிறது.   மலடியாக இருந்தாலோ, அவள் வீட்டு வேலைக்காரியின் அந்தஸ்திலும் தாழ்ந்து விடுவாள்.  கணவன் வீட்டிலிருக்கும் சிறு உரிமை கூட தாய் வீட்டில் கிடையாது.   அங்கு அண்ணிகளின் ஆதிக்கம் நடைபெறும்.  எனவே கணவனை இழந்த மனைவியின் பிரச்னை, சொந்தப் பிரச்னையாக மட்டுமில்லாமல் பெண்களின் சொத்துரிமைப் பிரச்னையோடும் தொடர்புடையதாய் இருக்கிறது.

இச்சிக்கலான உணர்ச்சிகளனைத்தையும் மனைவி ஒப்பாரிகளில் காணலாம்.   நெல்லை ஜில்லாவில் பாடப்படும் ஒப்பாரிகள் வாழ்க்கையின் பல அம்சங்களையும் சுட்டிக்காட்டி மனைவியின் தீர்க்க முடியாத பிரச்னைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

 தாய், தந்தை இறக்கும்போது மகள் பாடும் ஒப்பாரிகள் முக்கியமாக சொத்துரிமைப் பிரச்சினையும், தாய் தந்தையர் காலத்திற்குப் பின் பிறந்த வீட்டில் உரிமையின்றிப் போவதையும் சொல்லுகின்றன.   மதினி, நாத்தனார் உறவுகளையும் இந்த அடிப்படையிலே அவை காட்டுகின்றன.

 இவ்வொப்பாரிகளில் காணப்படும் உணர்ச்சிகளை நல்லதங்காள் கதையிலும் காணலாம்.   அண்ணனைப் பற்றி பாடும் ஒப்பாரிகள் மிகக் குறைவு.  பொதுவாகத் தந்தை இறந்தபோது பாடும் பாடல்களையே அவை ஒத்திருக்கும்.

குழந்தை இறந்து தாய் புலம்புவது மிகவும் சோகமானது.   அவற்றிலும் பிரிவுத் துன்பத்தோடு சொத்துரிமை பெற இருந்த மகன் போய்விட்டானே என்ற உணர்வும் சேர்ந்து வரும் துக்கவுணர்வை ஆங்கிலத்தில் Elegiac Spirit என்று சொல்லுவார்கள்,  ஆங்கில நாட்டுப் பாடல்களில் இவ்வுணர்ச்சி மிகுதியாக உண்டு.  வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த மக்களுடைய உணர்ச்சி துக்கமாகத் தோன்றும்.   ஒப்பாரியிலும் பெண்ணினத்தின் சமூக நிலைமை முழுவதும் ஆணின் வாழ்க்கையைப் பொறுத்திருப்பதால், அவனுடைய சாவுக்குப் பின் ஏக்கம் தோன்றுகிறது.  மனைவி இறந்தால் கணவன் துக்கப்படுகிறான்.   ஆனால், ஏக்கம் கொள்வதில்லை.  ஆண் சார்பு கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்களின் சமூக நிலைமைதான் இந்த ஏக்கத்திற்குக் காரணம், இத் தொகுப்பில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும், அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் கிடைத்த மட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.   இப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலும் வழங்கி வருபவை.  மற்ற மாவட்டங்களிலுள்ள நாட்டுப் பாடல்கள் கிடைத்தால் நமது கிராம மக்களின் கலையையும் பண்பாட்டையும் கண்ணோட்டத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும்.   மற்ற மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்கள் நாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களானால், தமிழ் நாட்டின் பல படைப்புக்களைத் தமிழகம் அறிய வழி செய்யலாம்.

     நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள நாட்டுக் கலைத் தொண்டர்களின் கூட்டு முயற்சியில் இந்நூல் உருவாகியுள்ளது.   அவர்களுடைய முயற்சிக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது.  இந்நூலில் இடம் பெறும் நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அனுப்பிய நண்பர்களைப் பற்றித் தனியாகச் சில வார்த்தைகள் அடுத்த பகுதியில் கூறுவேன்.

  முன்னர் வெளியிடப்பட்ட நாட்டுப்பாடல் நூல்களுக்குக் கிடைத்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்குமென நம்புகிறேன்.

பாளையங்கோட்டை                         நா. வானமாமலை

INTRODUCTION & ACKNOWLEDGEMENTS TO CONTRIBUTORS

1, S.S. போத்தையா: இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் பெரும்பாலானவை இவர் சேகரித்து அனுப்பியவை.  இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் அம்பாப்பாட்டு, கோணங்கி பாட்டு போன்ற அபூர்வப் பாடல்களை இவர் சேகரித்து அனுப்பியுள்ளார்.   இவர் என் பழைய மாணவர்.  தங்கம்மாள்புரத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாடல்களைச் சேகரிக்க இவருக்கு உதவியவர்கள்:

    மேல் மந்தை - பெத்தையா

    மீனாட்சிபுரம் - வித்துவான் ராமசாமி

    உச்சிநத்தம்   - கே. ராமசாமி

    உச்சிநத்தம்   - நாகம்மாள் முதலியோர்

2. S.M .கார்க்கி:  இவர் சிவகிரியைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் கலைஞர், கணீரென்ற குரலில் நாட்டுப் பாடல்களைப் பாடும் திறமை படைத்தவர்.   சிவகிரி வட்டாரத்தில் கிராம மக்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் பலவற்றை சேகரித்து அனுப்பியுள்ளார்.  ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல அவர் சேகரித்து அனுப்பியவையே.   சிவகாசிக் கலகத்தைப் பற்றியும், செந்தட்டிக் காளை வரலாறு பற்றியும் இத்தொகுப்பில் வெளியாகும் அபூர்வமான பலபாடல்கள் அவர் அனுப்பி வைத்தவை.

3. M.P.M . ராஜவேலு: இவர் தூத்துக்குடிக்கருகிலுள்ள மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர்.  தூத்துக்குடி கடற்கரையில் வாழும் மக்கள் வாழ்க்கையும், பனை மரக் காடுகளின் நடுவிலுள்ள சிற்றூர்களில் வாழும் மக்களது வாழ்க்கையையும் சித்தரிக்கும் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அனுப்பியுள்ளார்.

4. குமாரி P. சொர்ணம்:  பி.ஏ, முதல் வருட வகுப்பில் படிக்கும் மாணவி.  ஒப்பாரிப் பாடல்கள் சிலவும், தாலாட்டுப் பாடல்கள் சிலவும், மாரியம்மன் பாடலொன்றும் தனது தாயாரிடம் கேட்டு எழுதி அனுப்பி வைத்தார்.  இவர் எனது பழைய மாணவி.

மேற்குறித்த நால்வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

5. கவிஞர் S.S.சடையப்பன்: தருமபுரி, அரூர் தாலுக்காவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர்.  நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர்.   நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற்கருவியை இவர் உபவாத்தியமாகப் பயன்

படுத்துகிறார்.  ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை.   

தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன.

6. கு. சின்னப்ப பாரதி: இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.   பல கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார்.  இவர் சேகரித்தனுப்பிய கொங்கு நாட்டுப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.   அவற்றை உதவியவர்களின் பெயர்கள் பாடலுக்கு அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

7. வாழப்பாடி சந்திரன்: இவர் ஓர் ஓவியர்; எழுத்தாளரும் கூட.   சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர்.  மலை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்.  அவர்கள் பாடும் பாடல்களைச் சேகரிக்க முயன்று வருகிறார்.

8. மங்கை: முதல் தொகுப்பின் குறிப்புரைகள், ஆய்வுரைகளை எழுதத் துணை செய்தவர்.   நாட்டுப் பாடல்களை தொகுப்பதற்கும், அவற்றை வகைப் படுத்துவதற்கும் உழைத்தவர்.  சேகரித்தவர்களோடு கடிதப் போக்குவரத்து நடத்தி வட்டார வழக்குகளைப் பற்றியும் சமூகவியல் பழக்கங்கள் பற்றியும் அறிந்து நூலில் எழுதியவர்.   ஆராய்ச்சியிலும், தமிழாராய்ச்சி நிறுவனம் மார்ச்சு 26, 27ந் தேதிகளில் நடத்திய நாட்டுப்புற இலக்கிய கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியவர்.

9. நா. வானமாமலை: 15 ஆண்டுகளாக நாட்டுப்புற இயல் தொகுப்பாளராகவும்,

ஆய்வாளாராகவும் பணிபுரிகிறார்.  நியூ செஞ்சுரி வெளியீட்டாளர்கள் இத் துறையில் இவரது நூல்கள் மூன்றை வெளியிட்டுள்ளார்கள

மதுரைப் பல்கலைக்கழகம் இவர் தொகுத்து, ஆராய்ச்சி குறிப்புகள், முகவுரை எழுதிய ஆறு நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள்.   திராவிட மொழியியல் கழகம் (கேரளா) இவரை நாட்டுப்புறவியல் முதுநிலை ஆய்வாளராக ஓராண்டிற்கு(1965-66) நியமித்தது.  இவர் பதவிக்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்தி ( Fellowship thesis)

ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.   பல நாட்டுப்புறவியல் கருத்தரங்குகளில், கட்டுரைகளை படித்தும், தலைமை வகித்தும் பணிபுரிந்துள்ளார்.  தமிழாராய்ச்சி நிறுவனம் (அடையாறு) நடத்திய நாட்டுப்புற இலக்கிய கருத்தரங்கில் Keynote paper படித்தும், ஒரு அமர்வுக்கு தலைமை வகித்தும் பங்குப் பெற்றார்.   ஆராய்ச்சி, தாமரை, Social Scientist, Folk Lore, Nova Orientalani (செக் மொழி) முதலிய பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

           இவர்கள் அனைவரையும் சந்தித்து இப் பணியில் இறங்குமாறு தூண்டுவதற்குத் தமிழ் இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்புக் கூட்டம் வாய்ப்பளித்தது.   இவர்களில் பெரும்பாலோரை உறுப்பினராகவும் என்னைச் செயலாளராகவும் கொண்ட

நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.   அக் குழுவின் முயற்சியாலும், பெரு மன்றத்தின் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் உதவியாலும்,

பாடல்கள் சேகரிக்கும் வேலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது.   தோழர் ப. ஜீவானந்தம் இம்முயற்சிக்கு அளித்த உதவி மிகப் பெரிது.  பல்வேறு வகையான

பாடல்களைக் கேட்டு நான் இந்த நண்பர்களைத் தொந்தரவு செய்தபோதும் ¢அவர்கள் முகம் கோணாமல் மகிழ்ச்சியோடும் இது ஓர் கலைப்பணி என்ற உற்சாகத்தோடும் பாடல்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள்.   'தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்' எனும் நூல் அநேகமாக போத்தையா ஒருவரின் தனி முயற்சியினால்தான் உருவாயிற்று.  ஆனால் இது அவ்வாறில்லாமல் ஒரு குழுவினருடைய முயற்சியினாலும், அவர்களுக்கு உதவி புரிந்த மற்ற கலை அன்பர்களது உதவியாலும் முழு வடிவம் பெறுகின்றது.

இது மிகப் பெரிய வெற்றியாயினும், நாம் திருப்தியடைவதற்கில்லை.   தமிழ் நாட்டின்

எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டுப் பாடல் திரட்டை அம்மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்களது உதவியோடு வெளியிட்டால்தான் நாம்

திருப்தியடைய முடியும்.  இக் குழு அம் முயற்சியை மேற்கொள்ளும்.  அம் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும், கலை மன்றங்களையும் கலைத் தொண்டர்களையும் நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.

நா. வானமாமலை
 
மிகவும் மன்னிக்கவும். பொருமையின்மையினால் மீதி ஒன்பது பக்கங்களையும் ஒரே மடலில் அனுப்பிவிட்டேன். (எனக்கு பொருமையில்லாமல் மற்றெல்லோருடைய பொருமையையும் மிகவும் சோதித்துவிட்டேன்)
Reply all
Reply to author
Forward
0 new messages