அன்பு நண்பர்களே,
நம் இல்லம் குழுமம் அழகி விஷி அவர்களால் துவக்கப்பட்டு மிகவும் உற்சாகமாக நடந்துகொண்டிருந்தது. சில காலத்திற்குப் பிறகு அவரது உடல்நிலை இடம் கொடுக்காததால் என்னிடம் விட்டுச் சென்றார். எனது வேறு பல பணிச் சுமைகளாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் வரும் மின்னஞ்சல்களை மட்டுறுத்தும் பணியை முழுமையாக சரியான நேரத்தில் செய்ய இயலாமற் போனதால் தகவல் பரிமாற்றம் குறைந்தது. அத்துடன் சென்ற ஆண்டு எனக்கு இருதய நோய் வந்து டிசம்பர் 2012 முதல் மே 2013 வரை கடும் அவதிக்குள்ளான நிலையில் என்னால் எந்தப் பணியும் செய்ய இயலாத நிலையில் வீட்டிற்கும் மருத்துவ மனைக்கும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தேன். தற்போது பூரண குணம் பெற்று என் பிற பணிகளை (பொருளீட்டும் பொறுப்பு) விட்டுவிட்டு முழுநேரமும் இணையப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன். இல்லம் குழுமத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து தமிழ் நண்பரக்ள் யாவரும் பயனடையும் படிச் செய்ய வேண்டிய கடமையை உணர்கிறேன். அதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள உறுப்பினர்கள் 542 பேர் அனைவரையும் மட்டுறுத்தலிலிருந்து விடுவித்துள்ளேன். உறுப்பினர்கள் இனித் தடையின்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
உறுப்பினர்களிடையே முரண்பாடு ஏற்படாவண்ணம் நட்பை வளர்க்கும் நோக்குடன் அனைவரும் எழுதுவோமாயின் நற்பயன் விளையும். எவரேனும் விஷமிகள் தவறான செய்திகளைப் பதிவு செய்தால் அத்தகைய செய்திகளை நீக்கிவிடுவேன். இப்பணியில் (மட்டுறுத்தலில்) எனக்கு உதவி செய்ய குழும நண்பர்களுள் சிலர் முன்வருவராயின் பெருமகிழ்ச்சியடைவேன்.
அன்புடன் ஆகிரா