இசைக்கருவி யாழ்
சங்ககாலத்தில் பாணர் என்ற வகுப்பின்ர் யாழ் என்னும்
இசைக்கருவியை குறுநில மன்னர்களுக்கு வாசித்து பரிசில் பெறுவர்.இந்த
பாணர்கள் எடுத்து செல்லும் யாழ்கள் இருவகைப்படும்.ஒன்று
பேரியாழ்;மற்றொன்று செங்கோட்டியாழ்.இந்த யாழ்களின் வருணனையை
பத்துப்பாட்டில் காணலாம்.இந்த வாத்தியங்கள் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து
வந்தன.சிறுது காலத்திற்குப் பின்பு மகர யாழ், சகோட யாழ் என்ற இரு புதிய
யாழ்கள் தோன்றின. முதலிரண்டு யாழ்களும் சங்க காலத்தவை. செங்கோட்டியாழான
சிறிய யாழுக்கு 7 தந்திகள்; பேரியாழுக்கு 21 தந்திகள்;சகோடயாழுக்கு 14
தந்திகள்; மகர யாழுக்கு 17 தந்திகள். மகரயாழும், சகோடயாழும் சிலப்பதிகார
காலத்திற்கு பிற்பட்டவையாகும்.பாணனுடனே அவனது மனைவியான் பாடினி உடன்
செல்வாள். பாணன் யாழ் வாசிகும்போது பாடினி ஆடுவாள்.
கல்லாடம் மத்திய கால நூலாகும். அப்போது ஆரியக்கலை தமிழ் நாட்டில்
கலந்துவிட்டது.அக்காலத்திலே 1000 தந்திகளையுடைய நாரத பேரியாழ், 100
தந்திகளையுடைய கீசகயாழ், 9 தந்திகளயுடைய தும்புருயாழ்,ஒரே தந்தியுடைய
மருத்துவ யாழ் ஆகிய இவைகள் ஏற்பட்டன. இந்த யாழ்களின் இலக்கணங்களை
கல்லாடம் என்னும் நூலில் காணலாம்.
தும்புருயாழும், மருத்துவயாழும் வீணை போன்றவையாகும்.நூல்களிற்
காணும் வருணனையிலிருந்து அந்த இசைக்கருவிகள் அழகிய வேலைப்படமைந்தன
வென்றும், விலையுயர்ந்த இரத்தினங்களை அக்கருவிகளுள் போட்டிருந்தனர்
என்றும், அழகிய மாதர்கள் உபயோகிக்கும் யாழ்களை பட்டால் செய்த அழகிய
பெட்டிகளில் வைப்பர் என்றும் தெரிகிறது.
யாழின் வருணனைகள்
யாழின் வருணனைகள் சிறு பாணற்றுப்படைகளிலும், பொருநராற்றுப்
படையிலும், மகலைபடு கடாமிலும், சிலப்பதிகாரம், கல்லாடம் இவைகளிலும்
விரிவாக காணலாம். பேரியாழ் கையில் தூக்கிச் செல்லக்கூடியதாகும்;
பிற்காலத்து நாரத பேரி யாழ்,தும்புரு யாழ் போன்றதல்ல.
பேரி யாழ் மூன்று ஸ்தாயிகளிலும், ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும். 21
தந்திகளையுடையதாகும்.ஏழு ஸ்வரங்களுக்கும் தமிழ் பெயர்கள் வருமாறு :
குரல், துத்தம், கைக்கிளை,உழை, இளி,விளரி, தாரம்.
தாரம் என்பது வட சொல்லன்று. ச்மஸ்கிருதத்தில் உள்ள தாரத்திற்கு
வேறு பொருள் உண்டு.ஸ்வரம் தாரம் என்பதாகும்.ஏனைய ஸ்வரங்கள் எவ்விதம்
தோன்றின என்பது கீழ் காணும் பாட்டால் அறியலாகும்.
"தாரத்துள் தோன்றும் உழையுழைட் டோன்றும்
ஓருங் குரல்குரலி நுட்டோன்றிச்--சேருமிளி
யுட்டோன் றுந் துத்தத்துட் டோன்றும்
விளரியுட்
கைக்கிளை தொன்றும் பிறப்பு."
தாரத்திலிருந்து உழையும்,உழையிலிருந்து குரலும்,குரலிலிருந்து
இளியும்,இளியிலிருந்து துத்தமும், துத்ததிலிருந்து
விளரியும்,விளரியிலிருந்து கைகிளயும், தோன்றியது. தமிழ் பாணன் ஒவ்வொரு
ஸ்வரத்தையும், ஏனைய ஸ்வரங்களோடு கூட்டிக் கூட்டி வாசிக்க
ஆரம்பித்தான்.ஒரு ஸ்வரத்தையும் அதன் பஞ்சமத்தையும் கூட்டி வாசித்தபோது
இனிமையான நாதம் ஏற்பட்டதை கண்டான்.
ஒரு தந்தியால் ஒரு ஸ்வரம் ஏற்பட்டால் அதன் மூன்றில் இரண்டுபாகம்
அந்த ஸ்வரத்தின் பஞ்சமத்தையும் அரைப்பாகம் உச்ச ஸ்தாயியில் எட்டாவது
ஸ்வரத்தையும் தோற்றுவிக்கு மென்பதை பாணன் ஆரம்பித்திலேயே கண்டுகொண்டன் என
தெரிகிறது.இந்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு, இசைப் புலவனும்,
இசைக்கருவி செய்வோனும் சங்கீத சாஸ்திரமொன்றைகச் ச்ருஷ்டித்தனர்
பார்வமணி