om

202 views
Skip to first unread message

raja raj

unread,
Feb 3, 2007, 7:26:27 AM2/3/07
to il...@googlegroups.com, dayal...@gmail.com
ஓம் என்னும் பிரணவம்

  எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை
வெளியிடும்போது
'ஓ' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது
'ம்' என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும்,
விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத்
தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே 'ஓம்'.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரவணன்
"அ" என்பது எட்டும்
"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.
அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்
உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்
சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,
சான்றோர்களும் சொல்கிறார்கள்.
இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,
இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்
அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,
மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்
விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதை
சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும்
என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து
அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி
நிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்,

" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்
தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்
தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே
இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்
செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்
அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,
உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,
அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.
இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்
ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.
இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்
ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்
தன்மை நீங்களும் காணலாம்.

You see, there is no gain without pain.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.
ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில்
செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியரு சாதனையைப் பழக்கப்
படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது
மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல
படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை
உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது
என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்
கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது
பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க
வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக
காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்
குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற மந்திரத்தை மனதால்
நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்
குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்
மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலி
அல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல்
ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி
சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.

[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]
என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி
சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]

யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால்
பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.
அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர் :

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்
பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்
புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி
இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனை
எதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம்
பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்
பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.
உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்
சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம
பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்
உருவமாக சரிபாதி உடல்.



--
சர்வம் சிவமயம்
சிவாய நமக‌

AKR

unread,
Feb 3, 2007, 7:41:28 AM2/3/07
to il...@googlegroups.com
ஓமெனப் பெரியோர்கள் - என்றும்
ஓதுவதாய் வினை மோதுவதாய்
தீமைகள் மாய்ப்பதுவாய் துயர்
தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்
நாமமும் உருவுமற்றே மனம்
நாடரிதாய்ப் புந்தி தேடரிதாய்
ஆமெனும் பொருளனைத்தாய் வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

Venkatram Shrinivas

unread,
Feb 5, 2007, 2:51:24 PM2/5/07
to il...@googlegroups.com

ஓம் என்றச் சொல்லைப் பற்றிய பல அருமையான விவரங்கள் அடங்கிய இக்கட்டுரையை, இக்காலத்தவர்களின் கவனத்திற்கு முக்கியமாகத் தேவைப்படும் "ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு" என்ற சொற்களுடன் (bottomline) முடித்திருக்கிறீர்கள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.

தாங்கள் எழுதியதவற்றைத் தொடர்ந்து, எனக்கு தெரிந்த (மிகப் பலருக்கும் முன்னமேயே தெரிந்திருக்கக் கூடும்) தகவல்களையும் கருத்துக்களையும் கூற விரும்புகிறேன்.

கீதையில் 10ம் அத்தியாயத்தின் 33ஆவது பதத்தின் முதல் வரியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார் "அக்ஷரங்களின் முதல் அக்ஷரமான 'அ' வாக நான் இருக்கிறேன்" மேலும் அதே அத்தியாயத்தின் 35வது பதத்தின் முதல் வரியில் "கீதங்களில் நான் சாமம், சந்தங்களில் நான் காயத்ரி" எனக்கூறுகிறார்.

பைபிளில் (Revelation 1:8)ல் "நான் தான் முதலெழுத்தும் கிடைசி எழுத்தும் (I am the Alpha and the Omega)" என்று கடவுளே கூறுவதாகச் சொல்லப் படுகிறது.  மற்றும் அதே பைபிளில் (Revelation 22:13)ல்
அதே வார்த்தைகளை இயேசுநாதர் கூறுவதாகச் சொல்லப் படுகிறது. 'Alpha'வும் 'Omega'வும் ஹிப்ரூ, கிரேக்க மொழிகளின் முதலெழுத்தும் கிடைசி எழுத்தும் ஆனவை.

மேற்சொன்ன பைபிள் வார்த்தைகளை படிக்கும் பொழுதெல்லாம்
எனக்கு "அவும்"(AUM)  என்று தோன்றி பிறகு "ஓம்" எனும் பிரணவ மந்திரம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

முதல் முதலாக இப்பூமியைத் தொடும்பொழுதே மனித ஜன்மம்
'ஆ, ஆ, ஆ, என்று அலறிக் கொண்டே பிறக்கிறது. அக்குழந்தை, மறு மூச்செடுப்பதற்கு, சிறிதாக  'உ' என்ற ஒலியை உண்டாக்கிக் கொண்டு  தன் சின்னஞ்சிறுவாயை (உதடுகள் இரணடும் உள்புறமாக மட்ங்கியிருக்க) 'ம்' என்ற ஒலியுடன் மூடிக்கொண்டு திரும்பவும் மூக்கின் வழியாகவும் வாயின் வழியாகவும்  'ஆ' 'ஆ' 'ஆ' வெனக் கதறலாகிறது.

பிறக்கும் பொழுது, உலகத்தில் எந்த இடத்திலும், மனித உயிர் மேற்கூறிய ஒலிசேர்க்கை ஒன்றைத்தான் செய்கிறது. நாம் அதை 'அம்மா' என்று அழகான சொல்லால் கூறத்தொடங்கினோம். சம்ஸ்க்ருதத்தில் 'மாதா', மலையாளத்தில் 'அம்மை', ஹிந்தியில் 'மா', ஆங்கிலத்தில் 'Mother' , பிறகு வழக்கத்தில் 'Mom' அல்லது 'mummy' 'mum', இவ்வாறே, நான் அறிந்த அளவில் இப்பாரில் எவ்விடத்திலும் பிறவியெடுக்கும் மனித உயிர், முதன் முதலாக எழுப்பும் இவ்வொலிக் கூற்று சிறு சிறு மாறுதல்களுடன் அழைக்கப் படுகிறது.  எங்கே அந்த உயிர் உருவாகியது? அதன் அருமை அன்னையின் வயிற்றில் தானே? அதனால் 'அம்மா!' என்றால் அதற்கு 'அன்னை' என்ற பொருள் உண்டாயிற்று.

பையப்பைய்ய, அந்தக்குழந்தைக்கு, தன் வாயை மூடும் பொழுது தன் னுதடுகளை சேர்த்துக் கொண்டு மேற்சொன்ன படி ஒலிச்சேற்க்கையை  மூக்கைச் சேற்காது வாய் வழியாகவே செய்வதற்கு முடிகிறது. அப்படி எழுந்ததுதான் 'அப்பா' என்ற வார்த்தை!

இப்பொழுது 'ஓம்' என்ற சொல்லைப் பற்றி தங்கள் கட்டுரையிலேயே மிகத் தெளிவாக விவரித்துள்ளீர். எனக்குத் தெரிந்ததை, தோன்றியதைச் சொல்ல விரும்புகிறேன்.

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும்." என்று வெகு லகுவாக தாங்கள் சொல்லிவிட்டீர்.

நாளொரு (மின்)இயந்திரமும் பொழுது 'தந்திரமுமாக முன்னேரிக் கொண்டும் அதே ரீதியில் ஜன நெருக்கத்தையும் பெருக்கிக் கொண்டுமிருக்கும் இவ்வுலகிலே தாங்கள் சொற்படி நடக்க இயலாது என்று எனது சிற்றறிவிற்குத் தோன்றுகிறது.

கடவுளடி சேர்ந்துவிட்ட திரு கண்ணதாசன் அவர்களைக் கும்பிட்டு மனதால் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு கீழ்வரும் வரிகளை எழுதுகிறேன்.

"அ, உ, என்னடா, ம்" என்னடா
 இந்த அவசரமான உலகத்திலே?"

மேற்சொன்னதை விட வெட்கப்பட வேண்டிய உண்மை, நமது நாட்டின் பழம்பெரும் தத்துவங்களையும் நம்பிக்கைகள் நடைமுறைகள் யாவற்றையும் மறந்து  'மாடெர்ன்" (modern) ஆக நாம் வெறியுடன் சென்று கொண்டிருக்கும் இத்தருணத்தில், மேல் நாட்டவர்கள் 'யோகம்' 'ப்ராணாயமம்' என்பவைப்பற்றி ஆராய்ச்சிக்கூடம் ஆராய்ச்சிமன்றம் எல்லாம் நடத்திக் கொண்டு வருகிறர்கள். அவர்களது வழியிலே அவைகளைத் தழுவிய பாடங்களும் உண்டாக்கி வருகிறார்கள்.

'சித்தி' அடைந்தவர்கள் சித்தர்கள். அவர்களது கடுந்தவங்களின் பலனாகவும் தெய்வகிருபையாலும் சித்தர்களானவர்கள் அவர்கள்தம் சித்திகளை வெரும் 'மந்திர' 'தந்திரவாதிகள்' போல் உபயோகிக்க மாட்டவே மாட்டார்கள். சித்தர்கள் 'முக்தியின்' வாசற்படியை ஏறிவிட்ட மெய்ஞானிகள். 'எல்லோரும் இன்புற்றிருப்பதுவேயல்லாது வேரொன்றறியேன் பராபரமே' என்றவாரு த்யானித்துக் கொண்டே, 'அழைப்பு' வந்தவுடன் இந்த பூத உடலைப் பிரிந்து பரம்பொருளுடன் ஐக்கியமாகி விடுகிறார்கள். அத்தருணம் வரை பூதவுடலில் அந்த மகான்கள் சஞ்சரிக்கும் பொழுது அவரை நாடி வரும் ,  கடந்த பிறப்பின், அல்லது இப்பிறப்பின் செய்வினையால் பல துன்பங்கள் அனுபவித்துக் கொண்டு தங்களது பாபச்செயல்களுக்கு வருந்துவோர்களின் கஷ்டங்களைப் போக்கி அவர்களை நல்வழியில் திருத்தி அனுப்புவார்கள்.

ஆமாம் சார், நான் மிகவும் போரடித்துவிட்டேன். இப்பொழுது திரும்புகிறேன் "ஓம்" க்கு.

ஓம் என்பதைப் பற்றியும் ப்ராணாயாமம் காயத்ரி இவ்விரண்டைப் பற்றியும் நான் சிருவனாக இருக்கும் பொழுதே என் மனதில் தெளிவாகப் பதியவைத்த 'வாத்தியார்', நான் எப்பொழுதும் என் மனத்தில் நிலைத்து வைத்திருக்கும் எனது தாய்வழி அண்ணன், தமிழ் பண்டிதர் R. Narayanaswamy, 'கு.ப.ரா' வின் சிஷ்யர், எனது இன்னொரு உறவுக்காரர் தி. ஜானகிராமனின் பால்யத்திலிருந்து மிக நெருங்கிய சினேகிதருமாவார். கு.ப.ரா 'கரிச்சான்' என்ற புனைப் பெயரில் எழுதி வந்ததால், தன் படைப்புகளை 'கரிச்சான் குஞ்சு' என்ற புனைப்பெயரில் வெளிப்படுத்தி வந்தார். தமிழிலும் சரி சம்ஸ்க்ருதத்திலும் மிக வல்லுனர் சுருங்கச் சொன்னால் அவர் ஒரு மேதாவி.

எல்லோருக்கும் தெரியும் சிரு வயதில் கற்றது எப்பொழுதும் நல்ல ஞாபகத்திலிருக்குமென்று. அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்ததை அப்படியே என்னால் முடிந்த வரை  சுருக்கி எழுதுகிறேன் தயவு செய்து பொருமையை இழக்காமல் படியுங்கள்.
'ஐ ஆம் ஸாரி' (I am sorry!). எனது கை விரல்கள (முக்கிய்மாக வலதுக் கைவிரல்கள்) வலிக்கத் தொடங்கிவிட்டன. மேலும் சற்று சோர்வாகவும் தூக்கம் வரும் போலும் இருக்கிறது. மேற்கொண்டு நாளை எழுதுகிறேன். இதுவறை தச்செழுத்தடித்ததில் காணப்படும் தவறுகளுக்கு தயவு செய்து மன்னித்துவிட்டு தாங்களே திருத்திவிட்டுப் பிறகு எனக்குத் தெரியப்படுத்தவும்

வணக்கம்.
சீனு (ஸ்ரீனிவாசன்)
பி.கு. முடிந்தால் நாளை காலை எழுந்தவுடனேயே, காலைக் கடன்களை முடித்துக் கொண்டதும் எழுதத் தொடங்கி விடுவேன்.

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2007, 7:43:00 PM2/5/07
to il...@googlegroups.com
சீனிவாசன்,
 
எந்த ஊரில் இருந்து எழுதுகிறீர்கள். காலை 5 மணிக்கு தூங்கப்போவீர்களா?(உங்கள் மடல் எனக்கு அமெரிக்க நேரம் பிற்பகல் 3 மணிக்கு வந்தது)

 
On 2/5/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Venkatram Shrinivas

unread,
Feb 5, 2007, 9:11:32 PM2/5/07
to il...@googlegroups.com
நான் இருப்பது பங்களூரில்
நான் எழுதிக்கொண்டிருந்த்தை முடிக்கும் பொழுத் கண்ணீயில் "1:20PM' மோ )(என்னவொ கிட்டத்தட்ட அந்த நேரத்தைக்) காட்டிக் கொண்டிருந்தது
 
தயவு செய்து என்னுடைய 'ஹோம் பேஜ்' (home page)<<http://www.geocities.com/seenufour/>சென்று பார்த்தால் என்னைப் பற்றிய் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
முன்பொரு முறை நான் வெளியிட்டிருந்த <http://indias60thindependenceyear.blogspot.com/> ப்ளாகை பார்க்கும்படி விண்ணப்பம்
விடுத்திருந்தேன் அது ஒரு "குழு" என நினைத்து அதைத் தாங்கள் பார்க்கவில்லை.
உடல் நலம் சரியாக இருந்திராத்தனால் உடனே விளக்கம் கொடுக்கத் தவறி விட்டேன்.
 இப்பொழுது என் கணிணியில் காணப்படும் நேரம் 7:41AM (Indian Standard Time- GMT+5:30)
சீனு(ஸ்ரீனிவாசன்)

 

வேந்தன் அரசு

unread,
Feb 5, 2007, 9:26:03 PM2/5/07
to il...@googlegroups.com
மிக்க மகிழ்ச்சி சீனிவாசன். இன்றுதான் இரு இடங்களுக்கும் சென்று வாசித்தேன்.
 
இந்தியா பிறக்கும் போது நீங்கள் விடலை பருவத்தில் இருந்திருப்பிர்கள். உங்கள் நினைவுகளை பதிவு செய்யலாம் அல்லவா?
 
>In other words, our short-sighted politicians with all their conceit and intransigence had unforgiveably fallen into the trap laid by Britain.
 
மேலும் விளக்க விருப்ப்ம் உண்டா?
 
உங்கள்  மருமகன் எந்த அமெரிக்காவின் ஊரில் உள்ளார்.

Venkatram Shrinivas

unread,
Feb 6, 2007, 2:54:04 PM2/6/07
to il...@googlegroups.com
என் வேண்டுகோளின் படி தாங்கள் நான் கொடுத்திருந்த "இரு இடங்களுக்கும் சென்று வாசித்தேன்' எனப்படிப்பத்ற்கு எனக்கு மிக விந்தை கலந்த மகிழ்ச்சி பெருகியது. மிக்க நன்றி ஐயா! 
ந்டுவயதில் நான் ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அப்ப்பொழுது கட்டுரைகள் எழுதவுதுண்டு. இப்பொழுதெல்லாம் உடல் சோர்வும் மனச்சோர்வும் என்னை வெற்று மனிதனாக்கி வைத்திருக்கின்றன. நான் மறந்து விட்ட  தமிழை சரியாக எழுதுவற்கும், மேலும் கருத்துக்களைத் தமிழிலேயே எழுவதற்கு இன்றியமையாத தூண்டுகோலாக இருப்பவர் திரு விஷு ( azhagi.com) அவர்கள் தான். அந்த நல்ல மனிதர் திறந்து வைத்த இல்லத்தினால் தங்களைப் போன்றவர்களின் அரும்பெரும் நட்புகள் கிடைத்து வருகின்றன.
 
கேளுங்கள், நம்புங்கள் திரு வேந்தன் அவர்களே இன்று முழுவதும் உடல் வலியால் மருந்து அருந்தி விட்டுப் படுத்தவன் சில மணி நேரத்திற்குப் பிறகு
தான் செயல் படத் தொடங்கினேன்.
இப்பொழுது இங்கு பின்னிரவு (12:55AM)! தாங்கள் இருக்கும் சின்சின்னாட்டிக்கும் பங்களூருக்கும் 10 மணி 30 நிமிடங்கள். எப்படியும் தங்களுக்கு பதில் அனுப்பித்தான் ஆகவேண்டும் என்ற் உறுதியுடன் எழுத ஆரம்பித்தேன்.
என்னுடைய பல குறைபாடுகளில் ஒன்று எதையும் சொல்ல இயலாதது.
 
நிற்க, என்னுடைய 'வெப்சைட்'டில் (www.geocities.com/seenufour) முதலாவது, இரண்டாவது இணைப்புகளைப் (links) படித்துவிட்டீர்களா? முதலாவது என்னைப் பற்றியது, இரண்டாவது அட்லாண்டாவில் இருக்கும் எனது இரண்டாவது மகளைப் பற்றியது.
எனது மகள் ஜயஸ்ரீ ஸ்டீஃபென்சன், அட்லாண்டாவில் (Children's Healthcare Hospital)ல் RN நர்ஸாகப் பணியாற்றுகிராள். எனது மருமகன் நிர்மல் ஸ்டீஃபென்சன் ஒரு சிறந்த  கம்ப்யூடர் எஞ்சினீயர்.
 
பிறகு 'சந்திப்போம்' வணக்கம்
சீனு(ஸ்ரீனிவாசன்)
பி.கு. தாங்கள் படித்த என்னுடைய் ப்ளாக் சென்ற வருட இந்திய சுதந்திரத்தினன்று
இங்குள்ள ஆங்கிலப் பத்திரிக்கையில் பரிசுரமான எனது கட்டுரை தான்

 
On 2/6/07, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:

வேந்தன் அரசு

unread,
Feb 6, 2007, 8:15:50 PM2/6/07
to il...@googlegroups.com
. இப்பொழுதெல்லாம் உடல் சோர்வும் மனச்சோர்வும் என்னை வெற்று மனிதனாக்கி வைத்திருக்கின்றன. 
 
அன்பின் சீனிவாசன்,
 
தமிழக முதல்வர் கலைஞரை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தள்ளாத வயதில் கிட்டாது என்ற ஆட்சிகனியை உழைப்பால் பெற்றார்.
 
நமக்கு ஆட்சி வேண்டாம். ஆயின் ஏதேனும் ஒரு குறிக்கோள் இருந்தால் அதை நிறைவேற்ற இது தருணம் என்று முனையுங்கள்.
 
மேலும் சில் பதிவுகளை வாசித்தேன். மகள், நூரியா, நாய்குட்டி.
 
நானும் ஒரு 8 ஆம் வகுப்பு படிக்கையில் பொய் சொல்லாதவன் என்று வகுப்பு மாணர்வர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை.  உண்மை என்னும் கழுதை கட்டெறும்பு ஆய்விட்டது.
 
--

Venkatram Shrinivas

unread,
Feb 18, 2007, 2:19:52 PM2/18/07
to il...@googlegroups.com

அன்று

விடிகாலை, கவிரியில் முழுகி குளித்த பிறகு ஈர வேட்டியை பிழிந்து அதையே கட்டிக் கொள்ளச் சொன்னார், எனது அருமைத் தமையனார்.

அன்று

அவர், எனது ' வாத்தியார்' ஆகி (அப்பொழுது சொல்லிக்கொடுத்த பாடங்களுக்கேற்ப 'சாஸ்திரியார்' என்றும் கூட வைத்துக் கொள்ளலாம் ) பின்வருமாறு விளக்கஙகளை திரும்பத் திரும்பக் கூறி, சுமார் ஒரு மாத காலம் என்னைத் தன்னருகில் உட்காரவைத்து ' காயத்ரி ஜபம் 'ப்ராணாயமம்' செய்ய வைத்தார் . அவர் கொடுத்த விளக்கங்கள் பின்வருமாறு.

'

ப்ரணவம்', 'மந்த்ரம் ' 'காயத்ரி' 'ப்ராணாயமம் ' எனும் சம்ஸ்க்ருத சொற்களுக்கு தமிழில் பலவாறு மொழிப்பெயர்த்துக் கூறுகிறார்கள். எல்லா விளக்கங்களையும் கொடுத்து , சிறியவன் ( எனக்கு அப்பொழுது வயது 13/14 இருக்கும்) உன்னைக் குழப்ப நான் விரும்பவில்லை. அவைகளின் நேர்ப் பொருட்கள் தனை மட்டும் உனக்கு விளக்குகிறேன்.

'

உயிர்மூச்சு (பிராணன் ) ஒலியால் வெளிப்படும் "ஓம்" (' ' '' ' ம்') என்ற உச்சரிப்புக்கான வேத வாக்கு 'ப்ரணவம் '.

'

மந்த்ரம்' என்ற சொல்லிற்கு பதம் பிரித்தால் 'மனஹ த்ராயதே' (முழு அர்த்தம் 'மனத்தின் மூலம் காப்பாற்றும் சொல் ', அல்லது மனதைக்காற்கும் சொல்).

மேற்சொன்ன விளக்கத்தின் அடிப்படையில்

'ஓம்' என்ற சொல்தான் பிரணவ மந்திரம் எனக் கூறப்படுகிறது .

"

காயந்தம் ('பாடுபவர்களை ' அல்லது 'ஓதுபவர்களை') " த்ராயதி" (காப்பாற்றுகிறது)

என்ற பொருளுடன்

'காயத்ரி' என்ற சொல் அழைக்கப் படுகிறது என்று இப்பொழுது சொன்னால் போதும். உனது 'பயிற்சிகளை ' (பிரணாயாமம்) சரியாகக் கற்றுக் கொண்டு பிறகு தானாகவே செய்யத் துடங்கும் பொழுது விவரமாக எடுத்துறைக்கிறேன் . ஒன்று மட்டும் இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். காயத்ரியே

நாம் நம்மெதிரிலேயே காணக் கூடியக் கடவுளாக விளங்கும்

(பிரத்யக்ஷ தெய்வம்)

சூரியனக்கு நாம் செய்யும் வேண்டுதலையாகும்

சீனு நான் இப்பொழுது சொல்லப் போவதைக் மிக

கவனமாகக் கேட்டுக்கொண்டு, மனதில் பதிய வைத்துக் கொண்டு பிறகு நான் கற்றுக் கொடுத்த படி செய்யத் துவங்க வேண்டும்.

[

சம்ஸ்க்ருதச் சொற்களை சரியாக உச்சரிப்பதுற்கு உதவும் பொருட்டு எந்த தமிழ்ச் சொல் சாய்ந்திருக்கிறதோ அல்லது அச்சொல்லிற்குக் கீழே கோடிட்டிருக்கிறதோ, ,அதை எப்படி உச்சரிக்க வேண்டுமென தெளிவு படுத்த முயன்றிருக்கிறேன் ]

க்

,
= மங்ளம் என்ற சொல்லில் வருவது போல்

= ர்மம், கால் என்ற் சொற்களில் வருவ்து போல்

தீ

= dh - நுனிநாக்கை மேல் பற்வசையின் கீழ் வைத்து, அடிவயிலிருந்து மிருதுவாக உச்சரிக்கவும்

ப பூ

= bh - உள்ளுதடகள் இரண்டையும் சேர்த்து அடிவயிற்றிலிருந்து மிருதுவாக உச்சரிக்கவும்.

சாத்திரங்களின் படி

காயத்ரி மந்திரததை 'சொல்லுவதற்கு ' 'ஓதுவதற்கு' 'ஜபிப்பதற்கு' (முறைக்குத் தகுந்தவாறு வைத்துக் கொள்ளலாம் ) தொடங்குவதற்கு முன் ஒரு முற்கூற்றும் , ('பூர்வாங்க வாசகம்' அல்லது, 'சங்கல்பம் '), பிறகு (சுருக்கமான, அல்லது விரிவான) காயத்ரி மந்திரமும் அதை முடிக்கும்பொழுது ஒரு பின்னுரையும் உண்டு.

முற்கூற்று

(சங்கலபம்) பின்வருமாறு :

ஓம் ப்ரணவஸ்ய பரப்ரம்ம ரிஷிஹி

, தேவி காயத்ரி சந். ஸவிதா பரமாத்மா தேவதா, ப்ராணாயமே வினியோ

ஓம் பிரணவத்தின் பரம்பொருளான முனிவர்

, 'காயத்ரி சந்தத்தின்' தேவதை , சூரிய ஒளியுடைய இப்பிரம்மாண்டத்தின் மெய்யுணர்வான தேவதை (எப்படி விவரித்தாலும் ஒன்றேயான) பிராணாயாமத்தைச் சமர்ப்பிக்கிறேன்.

காயத்ரி மந்திரம்

:

'

சம்க்ஷிப்த காயத்ரி' (சுருக்கப்பட்ட காயத்ரி ) என்றும் 'சம்பூர்ண காயத்ரி ' (விரிவான காயத்ரி) என்றும் உண்டு

சுருக்கப்பட்ட காயத்ரியில் மூன்று

'உலகங்கள்' மட்டும் குறிப்பிடப் படுகின்றன அவை 1. பூஹு, 2. புவஹ, 3. ஸ்வஹ.

சுருக்கப்பட்ட காயத்ரி பின்வருமாறு

:

'

ஓம் பூர்புவஸ்வஹஸ்தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி" தியோ யோனஹ்ப்ரசோயாத்"

அல்லது சற்று விளக்கமாக

:

'

ஓம் பூஹு, ஓம் புவஹ, ஓம் ஸ்வஹஹ, ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி" தியோ யோனஹ்ப்ரசோயாத்"

விரிவான காயத்ரியில் ஏழு

'உலகங்கள்' குறிப்படப் படுகின்றன அவை (விளக்கங்களுடன்) பின்வருமாறு:

பூஹு

- அனைத்த பண்புகளை அங்கமாகக் கொண்ட

திரளுருவான

இவ்வுலகம்

புவஹ

- நுன்பொருளாய் இயைந்த ( ஆன்மிக) வையகம்

ஸ்வஹஹ

-எண்ணும் திறத்துடனுள்ள மனதைச் சார்ந்த வையகம்

மஹஹ

- ஆக்கம், அமைதி, உணர்ச்சிகள் மூன்றும் கூடிய உலகம்

ஜனஹ - உயிர்களைப் படைப்பிக்கும் சக்தியுள்ள உலகம்

தபஹ - அகத்திற உணர்வு கொண்ட உலகம்

ஸத்யம் - முழுமையான, தனி முதலான உண்மையாகிய உலகம்

'

சம்பூர்ண காயத்ரி' (விரிவான காயத்ரி ) பின்வருமாறு:

"

ஓம் பூஹு ஓம் புவஹ ஓம் ஸ்வஹஹ ஓம்மஹஹ ஓம் ஜனஹ ஓம்தபஹ ஓம் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி " தியோ யோனஹ்ப்ரசோயாத் "

ஓதும்பொழுது ஒவ்வொரு

'உலகத்திற்கு'ம்முன் "ஓம்" என்று வருவதைக் காணலாம்.

வெகுச்சிலரே சம்பூர்ண காயத்ரியை அப்படி உச்சரிக்காமல் கீழ்க் கண்டபடி

ஜபம் செய்வார்கள்

:

"

ஓம் பூர்புவஸ்வஹ்மஹஹ்ஜனஹ்தபஹ்ஸத்யம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோனஹ்ப்ரசயாத்"

காயத்ரிமந்திரத்தின் முக்கியமான பகுதி

(வேத முறைப்படி இது தான் காயத்ரி என்பார்கள்) அது கீழ்க் கண்டவாறு:

"

ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி " தியோ யோனஹ்ப்ரசோயாத் "

கா

யத்ரியின் சொல்லிற்குச் சொல் பொருள் கீழ்க் கண்டவாறு:

ஓம்

- இம்மகாமந்திரதின் பொருளை முன்பே கூறிவிட்டேன்.

தத்

- 'அது' ('சாவித்திரி ' அல்லது பரமாத்மா)

ஸவிதுஹு

- ஒளி மயமான சூரியன்

வரேண்யம்

- எல்லாவற்றிலும் மிகச்சிறந்ததான

பர்கோ

- பாபங்களையெல்லாம் அழிப்பது

தே

வஸ்ய
- தெய்விக

தீமஹி

- உள்ளங்களில் அழியாத படி படியவைக்கட்டும்

யோ

- எது

நஹ

- எங்களை

ப்ரசோதயாத்

- மிக உணர்ச்சியூட்டி தூண்டிவிடட்டும்

சிவானந்த ஸ்வாமிகள் காயத்ரியின் பொருளை ஆங்கிலத்தில்

இவ்வாறு விளக்கியிருக்கிறார்:

We meditate on the glory of the Creator;

Who has created the Universe;

Who is worthy of Worship;

Who is the embodiment of Knowledge and Light;

Who is the remover of all Sin and Ignorance;

May He enlighten our Intellect.

என்னுடைய

தமிழாக்கம் பின்வருமாறு:

இப் பிரபஞ்சத்தைப் படைத்து

, பாவங்கள், அறியாமை இவைகளெல்லாவற்றையும் அறவே அகற்றி , ஒளியும் ஞானமும் ஒருங்கே அமைந்த திரளுருவாய், எக்கணமும் அடி பணிந்து வழங்கப் படும் பரம்பொருளைத் தியானம் செய்கிறோம் . அப்பரம்பொருள் எங்களக்கு அறிவொளி அருளட்டும் .

மூன்றாம் பாகம் உடனே தொடரவிருக்கிறது

சீனு

(ஸ்ரீனிவாசன்)

Venkatram Shrinivas

unread,
Feb 18, 2007, 2:22:33 PM2/18/07
to il...@googlegroups.com

காயத்ரி மந்திரத்தைச்சிலர் சுருக்கமாகவும் சிலர் விரிவாகவும் பின்னுரையைச் சொல்லி முடித்துக் கொள்கின்றனர்

.

சுருக்கமான பின்னுரை

:

பூர்புவஸ்வஹ ஓம்

(

இந்த முன்னுரையே 'எல்லாம் அட்ங்கிய் ' தியானமாக ஆகிறது)

விரிவான பின்னுரை

:

ஓம் ஆபஹ

, ஜ்யோதிரஸஹ, அம்ருதம், ப்ரஹ்மா பூர் புவஸ்வஹ ஓம்

பொருள்

:

ஓம்

, நீர், எங்கும் பரவியுள்ள ஓளிமயம் , அழியா அமிருதமாய் திரளுருவான இவ்வுலகம் , நுன்பொருளாய் இயைந்த (ஆன்மிக ) வையகம், எண்ணும் திறத்துடனுள்ள மனதைச் சார்ந்த வையகம் எல்லாம் ப்ரம்ம மயம், ஓம்

சீனு

, சூரியனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொள்.

இப்பொழுது காய்த்ரி ப்ராணாயாமத்தைச் செய்ய ஆரம்பிக்கலாம்

(அப்பொழுது விடிகாலைக் கதிரவ்ன் பிரகாசித்துக் கொண்டிருந்தான் .

அந்த காலத்து முனிவர்கள் சூரியனை நேரே பார்த்துக் கொண்டு காயத்ரி ஜபம் செய்வார்களாம்

. இப்பொழுது நம்மால முடியாது , முதலில், இரண்டு கைகளையும் விரித்து ஒன்றை மேலாகவும் மற்றொன்றை கீழாகவும் வைத்து இரண்டையும் நடுவில் ஒரு சிறு துவாரம் தெரியுமாறு பிணைத்துக் கொண்டு அந்த துவாரத்தின் வழியாய் சூரியனை சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ப்ராணாயாமத்தைத் தொடரவேண்டும் . கண்களை மூடிக் கொண்டும் செய்யலாம். ஆனால் உன் அகக் கண்ணின் முன் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கும்படி மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் ,

பதஞ்சலி

அவர்கள் நியமித்த எட்டு யோகங்களில் ப்ராணாயாமம் நாலாவதாகும். ப்ராணாயாமம் செய்யும் முறைகள் பலவிதம் . எல்லாவற்றிற்கும் மேலானதாக எனக்குப் படும் "பூரக , கும்பக ரேசக" முறையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.

'

பூரகம்' என்றால் பிராணவாயு மிகுந்த சுத்தக் காற்றை சுவாசித்து நம் உடலுக்குள்ளே பரவச்செய்வது.

'

கும்பகம்' என்றால் சுவாசிக்கப் பட்ட காற்றை (மூச்சை நிறுத்திக்கொண்டு) நம் உடலிலுள்ளே நிறுத்திக் கொள்ளுதல் . அந்தச் சிறு நேரத்தில், உடலின் இரத்த ஓட்டத்தில் புதியதாய் புகுந்த பிராணவாயு இரத்ததைச் சுத்தமாக்கி விடும் . முன்னிருந்த அசுத்தங்களெல்லாம் கரியமில வாயு வாகி அப்புரப் படுத்தப் பட்டு உட்லிலிருந்து வெளியே செலுத்தப் படுவதற்கு தயாராகி விடும்.

'

ரேசகம்' என்றால் மேற்சொன்ன (அசுத்தங்களால் நிரம்பிய) கரியமல வாயு மிகுந்த காற்றை வெளியேற்றுவது .

முதலில் நான் சொன்னேனே

காயத்ரி மந்திரத்தின் முற்கூற்று, அதை இப்பொழுது என்னுடன் சேர்ந்து சொல் :

ஓம் ப்ரணவஸ்ய பரப்ரம்ம ரிஷிஹி

, தேவி காயத்ரி சந். ஸவிதா பரமாத்மா தேவதா, ப்ராணாயமே வினியோ

முதலிலேயே

ஞாபகம் வைத்துக்கொள் . வாயை முழுவதும் மூடிக்கொண்டு தான் காயத்ரி ஜபம் செய்து முடிக்க்வேண்டும்.

பூரகம்

நீ இப்பொழுது உன் வலது விரல்களில் ஒன்றைக் கொண்டு உன் மூக்கின் இடது துவாரத்தை மூடிக்கொண்டு வலது துவாரத்தால் நிதானமாக சுவாசிக்க வேண்டும்

சுவாசிக்கும் பொழுது அடி வயிற்றை தளர விட்டு விட வேண்டும்

. முழு மூச்சும் இழுத்துக் கொள்வதற்கு எவ்வளவு நேரம் ஆகிறதோ அந்த இடைவெளியில் மனதிற்குள் சூரியனையே நினைத்துக் கொண்டு சம்பூர்ணகாயத்ரி மந்திரத்தை மனதில் சொல்லிக்கொள் :

"

ஓம் பூஹு ஓம் பு வஹ ஓம் ஸ்வஹஹ ஓம்மஹஹ ஓம் ஜனஹ ஓம்தபஹ ஓம் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் ர்கோ தேவஸ்ய தீமஹி" தியோ யோனஹ்ப்ரசோயாத்" ஓம் .

 

தொடக்கத்தில் விடாமல் முய்ற்சி செய்து

, உனக்கு உள்மூச்சு வாங்குவதற்கு (ஞாபகம் வைத்துக்கொள் , நிதானமாகவும் சிரமம் இல்லாமலும்) எவ்வளவு நேரம் ஆகிறதோ அந்த நேரத்திற்கு மிகச்சரியாக நீடிக்கும்படி காயத்ரி மந்திரத்தை சொல்லிக்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும் . இதன் காரணம், இப்பொழுது இரணடாவது கட்டத்தை விளக்கும் பொழுது உனக்குப் புரியவரும்.

கும்பகம்

மந்திரம் சொல்லிக் கொண்டே

முழு மூச்சை உள்ளே இழுத்துக் கொண்ட பிறகு

வலது கையின் இன்னுமொரு விரலினால் மூக்கின் வலது துவாரத்தை அடைத்துக் கொள்ளவேண்டும்

.

முழு மூச்சை உள்ளே மெதுவாக உள்ளே இழுத்துக் கொள்வதற்கு எவ்வளவு நேரம் ஆயிற்றோ அதற்கு இரண்டு மடங்கு நேரம்

, மூச்சை உள்ளே நிருத்தி வைத்துக் கொள்ள வேண்டும் . இப்பொழுது நேரம் இரண்டு மடங்காகி விட்டதால்

மந்த்ரமும் இரண்டு முறை தியானிக்க வேண்டும்

.

கும்பகத்தின் பொழுது பிராணவாயு உட்புகுந்த பிராணவாயு இரத்தோட்டத்துடன் ந்ன்கு கலந்து அசுத்தங்களை கரியமலவாயு மூலமாக உடலிலிருந்து கீழே சொல்லப் போகும் ரேசகத்தின் பொழுது வெளியேற்றுகிறது என்று முன்பே உனக்குச் சொல்லிவிட்டேன்

.

ரேசகம்

கும்பகம் செய்வதற்கு எவ்வளவு நேரமாயிற்றோ அதே நேரம் ரேசகம் செய்வதற்கும் எடுத்துக் கொள்ள வேண்டும்

. அப்பொழுது தான் உடலின் இரத்தோட்டத்திலிருந்து எல்லா துர்கந்தங்களும் அசுத்தங்களும் துப்புரவாக வெளியேரிவிடும். சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொள் . இப்பொழுது ரேசகம் செய்யும் பொழுது மூக்கின் வலது துவாரத்தை மூடிக் கொண்டு இடது துவாரத்தால் மூச்சை வெளியே செலுத்த வேண்டும் .

கும்பகத்தின் பொழுது செய்த மாதிரி காயத்ரி மந்திரமும் இரண்டு தடவை சொல்லவேண்டும்

.

ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்

. பூரகம் செய்வதிற்கு 10 விநாடி ஆனால்

கும்பகத்தை

20 விநாடியிலும் அதே மாதிரி ரேசகத்தை 20 வ்நாடியிலும் முடிக்கவேண்டும்

கேட்டுக்கொள் சீனு

, இதுவரை பாதி சுற்று முடிந்தது. அடுத்த பாதி சுற்றை

மூக்கின் வலது துவாரத்தை மூடிக்கொண்டு இடது துவாரத்தால்

பூரகத்தை ஆரம்பித்து பிறகு கும்பகம் முடிந்தவுடன் வலது துவாரத்தால் மூச்சை வெளியே செலுத்த வேண்டும் .

அண்ணன் அவர்கள் சொல்லிய் படி செய்ய்த் துடங்கி ஒரு

15 'சுற்று' முடித்துவிட்டு மேலும் துடங்க ஆரம்பிக்கும் பொழுது அவரே என்னை நிறுத்தச் சொன்னார் .

இப்பொழுது இது போதும்

. மறுபடியும் நடுப் பகலில் வீட்டில் இருந்த படியே இதே மாதிரி பிராணாயமத்தை செய்ய வேண்டும். மாலையில் சூரியாஸ்தமனத்திற்கு முன்னால் காவேரிக்கு என்னுடன் வ்ந்து செய்யலாம் என்று சொல்லிவிட்டு காயத்ரியின் விரிவான பின்னுரையைச் சொல்ல வைத்தார் .

விரிவான

பின்னுரை
(நான் முன்பே எழுதியிருக்கிறேன்):

ஓம் ஆபஹ

, ஜ்யோதிரஸஹ, அம்ருதம், ப்ரஹ்மா பூர் புவஸ்வஹ ஓம்

இப்படியே என்னுடன் கூட சுமார் ஒரு மாதம்

இருந்து இப்பொழுது கூட ஞாபகத்தில் இருக்குமாறு பழக்கி வைத்தார் . மேலும் நான் சரியாக உச்சரிக்கின்றேனா என்று உறுதிப் படுத்திக் கொள்ள், அடிக்கடி முழு மந்திரத்தையும் என்னை வாய் திறந்து உரக்கச் சொல்லவைத்தார் . அந்த மேதாவி மஹானுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டவனாவேன். அவரது ஞாபகத்திற்காவது இந்தக் கட்டுரையை எப்படியாவது முடித்து இல்லத்தில, (மேலும் ஆகிரா அவர்கள் தகுதியுள்ளது என்று கருதினால் 'மழலைஸ்' ஸிலையும்) பரிசுரிக்கவேண்டும் என்ற உறுதியுடன், சொல்லமுடியாத பல இடைஞ்ச்லகிடையே பல நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பாகத்தையும் இந்த மூன்றாவது பாகத்தையும் அனுப்பியுள்ளேன் .

எல்லா நண்பர்களுக்கும் ஒரு மனமார்ந்த வேண்டுகோள்

.

சம்க்ஷிப்த காயத்ரி

(சத்ய சாயி பாபா அவர்க்ள் வ்ழங்கியது), சம்பூர்ண காயத்ரி (ஸ்ரீமதி ஸ்ரீதேவி ப்ரிங்கி அவர்கள் வழங்கியது) இவ்விரண்டையும் நான் உருவாக்கிய கீழ்க்கண்ட மின்னிணைப்புக்ளில் (my webpage links) கேட்க்லாம். வேண்டுமென்றால் பதிவிரக்கமும் செய்து கொள்ளலாம்.

http://www.geocities.com/seenufour/Gayatri_pranayamam.mp3

http://www.geocities.com/seenufour/Gayatri_pranayamam_baba.mp3

வணக்கம்

சீனு

(ஸ்ரீனிவாசன்
காயத்ரி மந்திரததை 'சொல்லுவதற்கு ' 'ஓதுவதற்கு' 'ஜபிப்பதற்கு' ( முறைக்குத் தகுந்தவாறு வைத்துக் கொள்ளலாம் ) தொடங்குவதற்கு முன் ஒரு முற்கூற்றும் , ('பூர்வாங்க வாசகம்' அல்லது, ' சங்கல்பம் '), பிறகு (சுருக்கமான , அல்லது விரிவான) காயத்ரி மந்திரமும் அதை முடிக்கும்பொழுது ஒரு பின்னுரையும் உண்டு.

Venkatram Shrinivas

unread,
Feb 18, 2007, 2:30:33 PM2/18/07
to il...@googlegroups.com

காயத்ரி மகிமை

ஹங்கேரிய எழுத்தாளரான ர்தர் கோஸ்லர் இந்தியாவுக்கு காசி, பம்பாய் முதலான இடங்களுக்கு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் விஜயம் செய்தார். அப்போது அவரைச் சந்தித்த பிளிட்ஸ் பத்திரிக்கை சிரியரான ர்.கே.கராஞ்சியா உலகின் அணு யுத அபாயத்தைச் சுட்டிக் காட்டி, 'ஒரு அணு யுதப் போர் மூண்டால் இந்தியரான நாங்கள் என்ன தான் செய்ய முடியும்? ' என்று கேட்டார்.

"இந்தியரான நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். உங்களிடம் தான் காயத்ரி மந்திரம் இருக்கிறதே! கோடானு கோடி இந்தியர் அனைவரும் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல ரம்பித்தால் அது வானத்தில் உறை போல உங்களைக் காக்கும் கவசமாக கி விடுமே" என்றார் அவர்.

காயத்ரி ஒரு சிறந்த

Antidote அணு யுத எதிர்ப்பு சக்தி என்பதை அவர் நன்கு அறிந்திருந்ததோடு இந்தியரான நமக்கும் உணர்த்தினார்!

சீனு

(ஸ்ரீனிவாசன்)

Siva Sankar

unread,
Feb 18, 2007, 2:32:56 PM2/18/07
to il...@googlegroups.com
அருமையான விளக்கங்கள் ஐயா
நன்றி, தொடர்க....
சிவா

 

, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com
blog for tamil articles: http://srishiv.blogspot.com

சீனுத்தாத்தா

unread,
Feb 18, 2007, 3:37:04 PM2/18/07
to இல்லம் (your HOME)
பூரகம்


"நீ இப்பொழுது உன் வலது விரல்களில் ஒன்றைக் கொண்டு உன் மூக்கின் இடது
துவாரத்தை"
மூடிக்கொண்டு வலது துவாரத்தால் நிதானமாக சுவாசிக்க வேண்டும்

மிக மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். "வலது துவாரம்" என்றிருக்க
வேண்டும். தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.
சுற்றின் இரண்டாவது பாதியில் தான் பூரகம் செய்யும் பொழுதுதான் மூக்கின்
இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரத்தின் மூலம் மூச்சை
சுவாசிக்க வேண்டும்.
"நீங்கள் அடிக்கடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், முதியவர்
அப்படி செய்வது சரியல்ல என்று உங்களில் பலர் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் அடிக்கடி தவறுகள் செய்யாதீர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. அதனால்
தானோ என்னவோ துளி கூட சரி பார்க்காமல் நிறைய தவறுதலும் குழப்ப்ங்களும்
செய்யத்துடங்கிவிட்டேன்.
வருத்தத்துடன்


சீனு (ஸ்ரீனிவாசன்)

On Feb 19, 12:22 am, "Venkatram Shrinivas" <see...@gmail.com> wrote:
> *


>
> காயத்ரி மந்திரத்தைச்சிலர் சுருக்கமாகவும் சிலர் விரிவாகவும் பின்னுரையைச்
> சொல்லி முடித்துக் கொள்கின்றனர்.
>
> சுருக்கமான பின்னுரை:
>
> பூர்புவஸ்வஹ ஓம்
>

> (இந்த முன்னுரையே 'எல்லாம் அட்ங்கிய்' தியானமாக ஆகிறது)


>
> விரிவான பின்னுரை:
>

> ஓம் ஆபஹ, ஜ்யோதிரஸஹ, அம்ருதம், ப்ரஹ்மா பூர் புவஸ்வஹ ஓம்


>
> பொருள்:
>
> ஓம், நீர், எங்கும் பரவியுள்ள ஓளிமயம், அழியா அமிருதமாய் திரளுருவான இவ்வுலகம்,

> நுன்பொருளாய் இயைந்த (ஆன்மிக) வையகம், எண்ணும் திறத்துடனுள்ள மனதைச் சார்ந்த


> வையகம் எல்லாம் ப்ரம்ம மயம், ஓம்
>
> சீனு, சூரியனைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துக் கொள்.
>
> இப்பொழுது காய்த்ரி ப்ராணாயாமத்தைச் செய்ய ஆரம்பிக்கலாம் (அப்பொழுது விடிகாலைக்
> கதிரவ்ன் பிரகாசித்துக் கொண்டிருந்தான்.
>
> அந்த காலத்து முனிவர்கள் சூரியனை நேரே பார்த்துக் கொண்டு காயத்ரி ஜபம்
> செய்வார்களாம். இப்பொழுது நம்மால முடியாது, முதலில், இரண்டு கைகளையும் விரித்து
> ஒன்றை மேலாகவும் மற்றொன்றை கீழாகவும் வைத்து இரண்டையும் நடுவில் ஒரு சிறு
> துவாரம் தெரியுமாறு பிணைத்துக் கொண்டு அந்த துவாரத்தின் வழியாய் சூரியனை சற்று
> நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ப்ராணாயாமத்தைத் தொடரவேண்டும். கண்களை
> மூடிக் கொண்டும் செய்யலாம். ஆனால் உன் அகக் கண்ணின் முன் சூரியன் பிரகாசித்துக்
> கொண்டிருக்கும்படி மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்,
>
> பதஞ்சலி அவர்கள் நியமித்த எட்டு யோகங்களில் ப்ராணாயாமம் நாலாவதாகும். ப்ராணாயாமம்
> செய்யும் முறைகள் பலவிதம் . எல்லாவற்றிற்கும் மேலானதாக எனக்குப் படும்

> "பூரக, கும்பக


> ரேசக" முறையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
>
> 'பூரகம்' என்றால் பிராணவாயு மிகுந்த சுத்தக் காற்றை சுவாசித்து நம்
> உடலுக்குள்ளே பரவச்செய்வது.
>
> 'கும்பகம்' என்றால் சுவாசிக்கப் பட்ட காற்றை (மூச்சை நிறுத்திக்கொண்டு) நம்
> உடலிலுள்ளே நிறுத்திக் கொள்ளுதல். அந்தச் சிறு நேரத்தில், உடலின் இரத்த
> ஓட்டத்தில் புதியதாய் புகுந்த பிராணவாயு இரத்ததைச் சுத்தமாக்கி

> விடும்.முன்னிருந்த அசுத்தங்களெல்லாம் கரியமில வாயு வாகி அப்புரப்

> கும்பகம் செய்வதற்கு எவ்வளவு நேரமாயிற்றோ அதே நேரம் ரேசகம் ...
>
> read more »

Siva Sankar

unread,
Feb 18, 2007, 3:58:09 PM2/18/07
to il...@googlegroups.com
ஐயா
வருந்தவேண்டாம், இதெல்லாம் சகஜம், தாங்கள் வேண்டுமென்று செய்யவில்லையே? எல்லாம் பொக்கிஷங்கள் ஐயா, இன்னும் கொடுங்கள், தயவு செய்து வருத்தம் தெரிவிக்கவேண்டாம்....
சிவா...அசாமிலிருந்து....:)

 
On 2/19/07, சீனுத்தாத்தா <see...@gmail.com> wrote:
பூரகம்


"நீ இப்பொழுது உன் வலது விரல்களில் ஒன்றைக் கொண்டு உன் மூக்கின் இடது
துவாரத்தை"
மூடிக்கொண்டு வலது துவாரத்தால் நிதானமாக சுவாசிக்க வேண்டும்
மிக மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன். "வலது துவாரம்" என்றிருக்க
வேண்டும். தயவு செய்து திருத்திக்கொள்ளுங்கள்.
சுற்றின் இரண்டாவது பாதியில் தான் பூரகம் செய்யும் பொழுதுதான் மூக்கின்
இடது துவாரத்தை அடைத்துக் கொண்டு வலது துவாரத்தின் மூலம் மூச்சை
சுவாசிக்க வேண்டும்.
"நீங்கள் அடிக்கடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், முதியவர்
அப்படி செய்வது சரியல்ல என்று உங்களில் பலர் கூறியிருக்கிறீர்கள்.
ஆனால் அடிக்கடி தவறுகள் செய்யாதீர்கள் என்று மட்டும் சொல்லவில்லை. அதனால்
தானோ என்னவோ துளி கூட சரி பார்க்காமல் நிறைய தவறுதலும் குழப்ப்ங்களும்
செய்யத்துடங்கிவிட்டேன்.
வருத்தத்துடன்
சீனு (ஸ்ரீனிவாசன்)


--
M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2007, 5:04:31 PM2/18/07
to il...@googlegroups.com

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா என்ற பாடல் வரி தவறோ
 
காயத்ரி மந்திரத்தை மனதுக்குள் சொல்லிக்கொள்ளும் பக்தனம்மா தான் சரியா?
 
மூச்சு பயிற்சி பயன் தரும் என்பதை என் பட்டறிவால் உணர்ந்துள்ளேன். மந்திரத்தின் பயன்  பற்றி தெரியாது.
 
தகவலுக்கு நன்றி சீனு.

AKR

unread,
Feb 18, 2007, 5:59:16 PM2/18/07
to il...@googlegroups.com
தூங்காத கண்ணென்று ஆறு. நடக்கட்டும் நடக்கட்டும்.  பஞ்ச பாண்டவர்களுள் அர்ஜூனன் தூக்கத்தை வென்றவன். இரவு பகல் என்று சதாசர்வ காலமும் குரு உபதேசித்தத தனுர்வேதத்தைப் பயிற்சி செய்துகொண்டிருப்பானாம்.
 
நாமும் ...
 
ஆகிரா

Venkatram Shrinivas

unread,
Feb 18, 2007, 9:11:32 PM2/18/07
to il...@googlegroups.com

அன்பிற்குறிய சிவா அவர்களே

என்னுடைய

'கட்டுரை'யைப் புகழ்ந்தது மட்டுமல்லாமல் எனது தவறுகளை பெரிது செய்யாமல் இவ்வளவு பரிவும் அன்பும் காட்டிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

தாங்கள் வாழ்க வளமுடனும் மகிழ்வுடனும் தெம்புடனும்

. பிறகு விரிவாக எழுதுகிறேன்.

வணக்கம்

சீனு

Venkatram Shrinivas

unread,
Feb 18, 2007, 9:15:54 PM2/18/07
to il...@googlegroups.com

என் அன்பிலும் மதிப்பிலும் உயர்ந்த

திரு வேந்தன் அவர்களே

எப்பொழுது

'இல்லத்துக்கு' ஒரு மடல் அனுப்பினாலும் அதைப் படித்தற்கு அடையாளமாய் உடனே எனக்கு பதில் கிடைப்பது தங்களமிடமிருந்து தான் எனக்குத்தெரிந்து கொண்டேஅதை அனுப்புவேன் . சின்சினாட்டியில் தங்களுக்கு பகல் நேரம் பங்களூரில் இரவு நேரம். பகலில் அறை குறைவாக் உறங்கி விட்டு இரவில் தூக்கமே வராமல் இருக்கும் (insomniac) ஆன எனக்கு இரவில் தான் எழுத முடிகிறது.

உங்களை மாதிரியே என் அட்லாண்டா மகளூம் இரவில் தான்

(ஞாயிரன்று தான்) தொலை பேசியில் என்னுடன் பேச்சு பரிமாறிப்பாள் .

இந்த தடவை மட்டும் எனக்கு திரு சிவா அவர்களிடமிருந்து உடனே பதில் கிடைத்தது

. ஆகிரா அவர்க்ளிடமிருந்தும் மடல் கிடைத்தது. எனக்கு ஒரே ம்கிழ்ச்சி

AKR

unread,
Feb 18, 2007, 9:40:05 PM2/18/07
to il...@googlegroups.com
அன்புள்ள சீனு மாமா,
 
நான் அனைவரது அனைத்து மடல்களையும் வாசிக்கிறேன் ஆனால் பதில் எழுதுவது என் பணிச் சுமையைப் பொருத்தது. பதில் தரவில்லை என்றால் படிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது. அனேகமாக் இல்ல உறுப்பினர் அனவரும் எல்லா மடல்களையும் வாசிக்கக்கூடியவர்களே. அதே சமயம் அனைவருக்கும் பொறுப்புகள் இருப்பதால் பதி்ல் வருவது சமயசந்தர்ப்பத்தைப் பொறுத்து அமையும்.
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Monday, February 19, 2007 7:45 AM
Subject: [ILLAM, your HOME] Re: om

RAMA

unread,
Feb 18, 2007, 11:19:25 PM2/18/07
to il...@googlegroups.com
 
ஐயா சீனு அவ்அர்களின் கட்டுஅரை பிரிண்ட் எடுத்து படிக்க வைத்துள்ளேன்.

RAMA

unread,
Feb 18, 2007, 11:25:00 PM2/18/07
to il...@googlegroups.com
சீனு ஐயா அவர்களின் விளக்க கட்டுரையை பிரிண்ட் எடுத்து படிக்க வைத்துள்ளேன்.


On 2/19/07, RAMA <positi...@gmail.com> wrote:
 
ஐயா சீனு அவ்அர்களின் கட்டுஅரை பிரிண்ட் எடுத்து படிக்க வைத்துள்ளேன்.



--
Regards,
RAMA
"Positive thoughts are the Wings of Success!"
visit: http://jmapsrama.blogspot.com/

parv...@gmail.com

unread,
Feb 18, 2007, 10:06:24 PM2/18/07
to இல்லம் (your HOME)
சீனு அவர்களுக்கு நமஸ்காரம்,

காயத்ரி பற்றி பலவிளக்கங்கள் படித்துள்ளேன். ஆனால் உங்கள்
விளக்கம் சிறு குழந்தைகளும் மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில்
அமைந்துள்ளது.மிக மிக அருமையாக, அமைந்துள்ளது.
ஹங்கேரிய எழுத்தாளர் கோஸ்லர் கூறியதை எடுத்துக்காட்டாக சொல்லியிருப்பது
காயத்திரியின் மஹிமையை யாவரும் புரிந்து கொள்ள ஏதுவாகும்.

போபால் விஷவாயு கழிவு போதும் அக்னிஹோத்ரம் செய்தவர்
பிழைத்துக்கொண்டதாகவும், ஷவர் பாத்தில் குளித்துக்கொண்டிருந்தவரும்
தப்பியதாகவும் படித்திருக்கிறேன். இப்படி உதாரணத்துடன் எடுத்து
சொல்லாததால்தான் நம் சாஸ்திரங்கள் பலரால் கடைப்பிடிக்கப்படவில்லை போலும்.

இது மாதிரி இன்னும் பல விஷயங்களை விளக்கவேண்டும்.

ஆகிரா அவர்களை நானும் கேட்டுக்கொள்கிறேன், மழலையில் இந்த விளக்கத்தை
பிரசுரிக்கும்படி. இள வயதில் பதியவைத்தால் அது என்றும் நிலைத்து
இருக்கும்

ந்.பார்வமணி

On Feb 19, 12:30 am, "Venkatram Shrinivas" <see...@gmail.com> wrote:
> காயத்ரி மகிமை
>
> ஹங்கேரிய எழுத்தாளரான ர்தர் கோஸ்லர் இந்தியாவுக்கு காசி, பம்பாய் முதலான
> இடங்களுக்கு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் விஜயம் செய்தார். அப்போது அவரைச்
> சந்தித்த பிளிட்ஸ் பத்திரிக்கை சிரியரான ர்.கே.கராஞ்சியா உலகின் அணு யுத
> அபாயத்தைச் சுட்டிக் காட்டி, 'ஒரு அணு யுதப் போர் மூண்டால் இந்தியரான நாங்கள்
> என்ன தான் செய்ய முடியும்? ' என்று கேட்டார்.
>
> "இந்தியரான நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். உங்களிடம் தான் காயத்ரி மந்திரம்
> இருக்கிறதே! கோடானு கோடி இந்தியர் அனைவரும் காயத்ரி மந்திரத்தைச் சொல்ல
> ரம்பித்தால் அது வானத்தில் உறை போல உங்களைக் காக்கும் கவசமாக கி விடுமே"
> என்றார் அவர்.
>
> காயத்ரி ஒரு சிறந்த Antidote அணு யுத எதிர்ப்பு சக்தி என்பதை அவர் நன்கு
> அறிந்திருந்ததோடு இந்தியரான நமக்கும் உணர்த்தினார்!
>
> சீனு (ஸ்ரீனிவாசன்)
>
> On 2/19/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
>
>
>
>
>

> > *

> > செய்யும் முறைகள் பலவிதம் . எல்லாவற்றிற்கும் மேலானதாக எனக்குப் படும் "பூரக, கும்பக


> > ரேசக" முறையைத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
>
> > '
> > பூரகம்' என்றால் பிராணவாயு மிகுந்த சுத்தக் காற்றை சுவாசித்து நம்
> > உடலுக்குள்ளே பரவச்செய்வது.
>
> > '
> > கும்பகம்' என்றால் சுவாசிக்கப் பட்ட காற்றை (மூச்சை நிறுத்திக்கொண்டு) நம்
> > உடலிலுள்ளே நிறுத்திக் கொள்ளுதல் . அந்தச் சிறு நேரத்தில், உடலின் இரத்த

> > ஓட்டத்தில் புதியதாய் புகுந்த பிராணவாயு இரத்ததைச் சுத்தமாக்கி விடும் .முன்னிருந்த அசுத்தங்களெல்லாம் கரியமில வாயு வாகி அப்புரப் படுத்தப் பட்டு


> > உட்லிலிருந்து வெளியே செலுத்தப் படுவதற்கு தயாராகி விடும்.
>
> > '
> > ரேசகம்' என்றால் மேற்சொன்ன (அசுத்தங்களால் நிரம்பிய) கரியமல வாயு மிகுந்த
> > காற்றை வெளியேற்றுவது .
>
> > முதலில் நான் சொன்னேனே
> > காயத்ரி மந்திரத்தின் முற்கூற்று, அதை இப்பொழுது என்னுடன் சேர்ந்து சொல் :
>
> > ஓம் ப்ரணவஸ்ய பரப்ரம்ம ரிஷிஹி
> > , தேவி காயத்ரி சந்தஹ. ஸவிதா பரமாத்மா தேவதா, ப்ராணாயமே வினியோகஹ
>
> > முதலிலேயே
> > ஞாபகம் வைத்துக்கொள் . வாயை முழுவதும் மூடிக்கொண்டு தான் காயத்ரி ஜபம் செய்து
> > முடிக்க்வேண்டும்.
>
> > பூரகம்
>
> > நீ இப்பொழுது உன் வலது விரல்களில் ஒன்றைக் கொண்டு உன் மூக்கின் இடது
> > துவாரத்தை மூடிக்கொண்டு வலது துவாரத்தால் நிதானமாக சுவாசிக்க வேண்டும்
>
> > சுவாசிக்கும் பொழுது அடி வயிற்றை தளர விட்டு விட வேண்டும்
> > . முழு மூச்சும் இழுத்துக் கொள்வதற்கு எவ்வளவு நேரம் ஆகிறதோ அந்த இடைவெளியில்
> > மனதிற்குள் சூரியனையே நினைத்துக் கொண்டு சம்பூர்ணகாயத்ரி மந்திரத்தை மனதில்
> > சொல்லிக்கொள் :
>
> > "
> > ஓம் பூஹு ஓம் பு வஹ ஓம் ஸ்வஹஹ ஓம்மஹஹ ஓம் ஜனஹ ஓம்தபஹ ஓம் ஸத்யம் ஓம் தத்ஸவிதுர்வரேண்யம்
> > பர்கோ தேவஸ்ய தீமஹி" தியோ யோனஹ்ப்ரசோதயாத்" ஓம் .
>
> > தொடக்கத்தில் விடாமல் முய்ற்சி செய்து
> > , உனக்கு உள்மூச்சு வாங்குவதற்கு (ஞாபகம் வைத்துக்கொள் , நிதானமாகவும் சிரமம்
> > இல்லாமலும்) எவ்வளவு நேரம் ஆகிறதோ அந்த நேரத்திற்கு மிகச்சரியாக
> > நீடிக்கும்படி காயத்ரி மந்திரத்தை
>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Siva Sankar

unread,
Feb 19, 2007, 5:24:55 AM2/19/07
to il...@googlegroups.com
மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா :)
என் வார்த்தைகள் உங்களுக்கு மகிழ்வும் தெம்பும் அளித்ததாயின் இனி தினமும் அவை கிடைக்கும் ஐயா :), வேந்தன் ஐயா ஒரு கிரியாஊக்கி போல், :), அனைவரையும் உற்சாகமூட்டுவார், உங்கள் அனுபவங்களையும் இதுபோன்ற பொக்கிஷங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டுகின்றேன் ஐயா, அடுத்த மாதம் பெங்களூர் வருகின்றேன், தங்களை நேரிலும்ம் காண ஆவல், கடவுள் ஆசீர்வதிக்கட்டும், :) பிரியங்களுடன்,
சிவா...:)

On 2/19/07, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

AKR

unread,
Feb 19, 2007, 6:59:32 AM2/19/07
to il...@googlegroups.com
அன்பு அண்ணா,

இது மட்டுமல்ல. சீனு மாமாவின் அத்துணை கடிதங்களும் மழலைகள் தளத்தில் பதிவேற்றம்
பெறும்.

ஆகிரா
----- Original Message -----
From: "parv...@airtelbroadband.in" <parv...@gmail.com>
To: "இல்லம் (your HOME)" <il...@googlegroups.com>
Sent: Monday, February 19, 2007 8:36 AM
Subject: [ILLAM, your HOME] Re: om

raja raj

unread,
Feb 19, 2007, 10:36:01 AM2/19/07
to il...@googlegroups.com

ஐயா அயிரம் கொடி நன்றி
இப்படி பட்ட அறிய செல்வத்தை கொடுத்ததுக்கு

Venkatram Shrinivas

unread,
Feb 22, 2007, 9:19:55 AM2/22/07
to il...@googlegroups.com

"நீ (பிரணாயாமம்) சரியாகக் கற்றுக் கொண்டு பிறகு தானாகவே செய்யத் துடங்கும் பொழுது காயத்ரியைப் பற்றி விவரமாக எடுத்துறைக்கிறேன்" என்று எனது 'குரு' வாகிய அண்ணன் அவர்கள் சொன்னதை, அவர் தன்னுடைய ஊருக்குச் சென்றுவிட்ட பிறகு தான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால் அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த படியே விடாமல் காய்த்ரி ப்ராணாயமம் செய்யத் துடங்கினேன். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு,
நானே அதிசயிக்கும் படி, விரல்களை உபயோக்காமலேயே தேவைப் பட்ட படி, வலது நாசித்துவாரத்தை அடைத்துக் கொண்டு இடது துவாரத்தின் வழியாக காற்றை உள்ளிழுக்கவும், கும்பகம் (மூச்சை நிறுத்தி வைத்துக் கொள்ளுதல்) செய்த பின்னர் இடது துவாரதை மூடிக்கொண்டு வலது துவாரத்தின் வழியாக உடலின் உள்ளிருந்து காற்றை வெளியே செலுத்தவும், சுற்றின் மறு பாதியில் முதலில் செய்ததை அப்படியே மாற்றி செய்யவும் என்னால் முடிந்தது. கடவுளையும் எனது அண்ணணையும் வாழ்த்திக் கொண்டு அவ்வாறே விரல்கிளின் உதவியில்லாமலேயே பிராணாயாமம் செய்யத் துடங்கினேன்.

பல வருடங்களுக்குப் பிறகு எனது அண்ணனைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்து.
என்னைவிட வயதில் மிக மூத்தவரான அவர் உடனே தனது சாய்வு நாற்காலி (easy chair) யிலிருந்து தள்ளாடிக் கொண்டே எழுந்து மிக்க அன்புடன் தழுவிக் கொண்டார். ஒருவருக் கொருவர் குடும்ப சுகத்தைப் பற்றி (அப்பொழுது திருமணமாகி, எனக்கு மூன்று குழைந்தகள்) விவரங்களைப்  பரிமாறிக்கொண்டோம்.

அதன் பிறகு காயத்ரியைப் பற்றி நான் அவருக்கு ஞாபகப் படுத்திய பொழுது,
"அடேடே அதைப் பற்றி இன்னமும் ஞாபக்ம் வைத்துக் கொண்டிருக்கிறாயே". ஆங்கிலத்திலேயே படித்து விட்டு, வெளி நாட்டு அதிகாரிகளிடம் பணிபுரிந்து கொண்டிருக்கும் உனக்கு இன்னமும் காயத்ரி மந்திரதில் அக்கரை இருக்கிறதைப் பற்றி கேட்க எனக்கு ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறது, சீனு.
நல்லதாய் போய்விட்டது. அந்தச் சின்ன வயதில் நீ புரிந்து கொண்டிருப்பாயோ இல்லையோ, இப்பொழுது விவரமாகச் சொல்கிறேன், கேட்டுக் கொள்.

ப்ராணாயாமம் செய்யும் பொழுது தான் காய்த்ரி மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொள்ள வேண்டி வரும். மற்ற சமயங்களில் அழகாக சந்தம் பிசகாமல் எல்லோரும் கேட்கும்படி ஓதலாம். அதைக் கேட்பவர்களும் நல்லது என்று மறைகளும்  புராணங்களும் கூறுகின்றன.

வேத மந்திரங்கள் உபநிஷத்துகள் ஏன் புராணங்கள் கூட, இவைகளுக்கெல்லாம் பலவித வியாக்கியானங்கள் (விரிவான பொருள்விளக்கங்கள்) அன்றிலிருந்து இன்று வரை நீடித்து வருகிறன.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், உனக்கு பிராணாயமம் கற்றுக் கொடுக்கும் பொழுது நானும் வயதில் இப்பொழுதை விட சிறியவனாய் இருந்ததால், நானும் பல ச்ம்ஸ்க்ருத பண்டிதர்களிடம் சர்ச்சைகள் செய்து கொண்டிருப்பேன்.

வயது ஆக ஆக எனக்கே ஞானம் பிறந்தது. வேதங்களின் சாராம்சமே (essence) எல்லாம் ஒன்றேயான பரம்பொருளைப் பற்றி தான். அதை மறந்துவிட்டு சில்லரைச் சர்ச்சைகளில் ஈடுபடுவது வெரும் காலவிரயம் செய்வதாகும்.

ஆராய்ச்சியாளர்கள் வித விதமாகவும் நாளுக்கு நாள் மாற்றி மாற்றி கருத்துகள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். சாதாரணமான எனக்குத் தோன்றுவது, பரம்பொருளால் இந்த பாரதப் புண்ய பூமியில் பிறந்த வேதங்களின் வயதை யாராலும் சொல்லமுடியாது.

சீனு விளையாட்டுக்கு சொல்கிறேன். உனக்குத்தான் தெரியுமே. இந்த ஆங்கிலப் பழமொழி "looking at a gift horse in the mouth". பரம்பொருளின் ஈடுயிணயற்ற விலை மதிக்க முடியாத அரும் பெரும் பரிசை தக்க படி உபயோகிக்காமல் "இது எப்பொழுது கிடைத்தது" என்றெல்லாம் பயனற்ற சர்ச்சைகளெல்லாம் வேண்டாமென்று எனக்குத் தோன்றுகிறது.


தியாகப் ப்ரம்மம் எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் "த்வைதமு சுகமா அத்வைதமு சுகமா" என்று கேட்டு?" (எனது மேதாவி அண்ணன் அவர்களுக்கு பாடுவதற்க ஏற்ப சாரீரம் இல்லாவிடினும் அவரது சங்கீத ஞானத்திற்கு நான் எப்பொழுதும் தலை குனிய வேண்டும்). இப்படிப் பேச ஆரம்பித்தவர் "ஏனப்பா சீனு உனக்குத்தான் குரலிறுக்கிறதே. நல்ல குருவிடம் பயிர்ச்சிப் பெற்றிருக்கலாமே" என்று கேட்டவர் அவரே கூறலானார் "என்ன செய்யமுடியும்? உன் அதிர்ஷ்டம் அப்படி. சித்தியிருந்திருந்தால் (எனது அன்னை) உன்னைப் பெரிய பாடகனாக ஆக்கியிருப்பாள்". என மீதுள்ள அன்பின் காரணத்தால் வெளிப்படாத என் உள்திறனைப் பற்றி அதிகப்படுத்தி அப்படிச் சொன்னார் என நான் புரிந்து கொண்டேன்.

அடேடே,  விஷயத்திற்கு வரமால் சங்கீதத்தைப் பற்றி பேசப் போய்விட்டானே என்று முழிக்கிறாயா?  எனக்கே தெரியாமல் பேச்சை திருப்ப நேர்ந்திருந்தாலும்,  அதற்கும் வேதங்களுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எதிர்பாராமல் எனக்கு இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. சரி விஷயத்திற்கு வருகிறேன்.

காயத்ரி முதல் முதலாக ரிக் வேததில் கூறப்படுகிறது. வானூல் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி ரிக் வேதம் உண்டான காலம் கி.மு 4000த்திலிருந்து கி.மு 2500க்குள். (அதாவது குறைந்தது 4500 வருடங்களுக்கு முன்னால்) அதே ஆராய்ச்சியாளர்களில் சிலரது கருத்துப்படி இந்த காயத்ரி, ரிக வேதம் அமையத் துடங்குமுன்னரே பல வருடங்களாக  'பாடப்பட்டு' வந்திருக்கிறது என்று. இக் கருத்து எனக்கே ஆச்சரியதைக் கொடுக்கிறது சீனு.

நம் குல வழக்கப்படி நான்  'சுக்ல ய்ஜுர் சாஸ்த்திரி' யானாலும், சம்ஸ்க்ருதத்தில் எனக்குள்ள ஆர்வத்தினால், 'சம்ஸ்க்ருத சிரோமனி' க்கு படித்து முடித்த பிறகு, யக்ஞநாராயண தீக்ஷிதர் (மூன்று வேதங்களையும் படித்தவர். அப்பொழுது அவருக்கு வயது 70க்கு மேல்) அவரை வணங்கிக் கேட்டுக் கொண்டு அம்மஹானுக்கு எப்பொழுது முடிந்ததோ அப்பொழுது அவரிடம் சென்று, என் மனதில் பதிர்ந்து வைத்துக் கொள்ள் முடிந்த சில ரிக்குகளையும் சில சாம கீதங்களையும், ஆனந்தத்துடன், அவரது வாயால் அடிக்கடி சொல்லக் கேட்கும் அருளைப் பெற்றேன். அவர் சொல்லித்தான் காயத்ரியைப் பற்றிய அரும் தகவல்கள் எனக்குத் தெரிய வந்தது.

காயத்ரி மந்திரமே பிரமனின் பத்தினியாகவும், ஒரு தேவதையாகவும், வேதங்களின் தாயாகவும் கூறப்படுகிறது. காயத்ரி, அமிருதம் இவையிரண்டும் வேதமந்திரங்களின் சாரம் என்றும் கூறப்படுகிறது.

சொல்லிற்குச் சொல் பொருள் என்றில்லாமல், ஒரு பொது உது உதாரணத்திற்கு சொல்லலாம் என்றால், கர்நாடக சங்கீதத்தில் ராகம் தாளம் பதம் என்பது போல ரிக்வேத காலத்தில் 'காய்த்ரி' என்ற பாடலின் குணங்கள் கீழ்க்கண்டவாறு

ஒட்டு மொத்தம் 24 சொற்குறியிடுகள் (24syllables), ஒவ்வொரு அடிக்கும் எட்டு என்ற கணக்கில் பிறிக்கப் பட்டு மூன்று அடிகளாக கொண்ட ஒரு பதம் காயத்ரி என அழைக்கப் பட்டது. ரிக்வேதத்தில் அது 'சாவித்ரி' என்ற பெயரிலும் அழைக்கப் பட்டது

ரிக்வேதத்தில் மூன்றாவது அதிகாரத்தில் காயத்ரி கீழ் கண்டபடியே வருகிறது

"தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி" தியோ யோனஹ்ப்ரசோதயாத்"

காயத்ரி என்றால் பொதுவாக மேற்கண்ட மந்திரத்தைத் தான் குறிப்பதாகும்.
இருப்பினும். 24 சொற்குறியிடுகள் (syllables) , வேறு விதமாக பிரிக்கப் பட்டு காயத்ரி என்ற பெய்ரில் வேறு பல மந்திரங்களும் இருக்கின்றன.

உனக்குத் தெரியப் படுத்துவதற்காக உனக்குச் சொல்லவிரும்புகிறேன். தாந்திரக சாத்திரப்படி ஒவ்வொரு தேவதை பெயரிலும் ஒரு காயத்ரி இருக்கிறது. ஆனால் "காயத்ரி" என்றால் நீ கற்றுக் கொண்டிருக்கிறாயே அதைத் தான் குறிக்கும்.
 
ப்ரஹதாரணயக உபநிஷத்தில், யாக்ஞவல்க்ய மஹரிஷி இரண்டு சுலோகங்களில் காயத்ரியின் மஹிமையைப் பற்றிக் கூறியிருக்கிறார்

1.காயத்ரி மந்திரம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. உண்மைக்கு அடிப்படை பலம். மூச்சு தான் பலம். ஆகையால், காயத்ரி, யார் பக்தியுடனும், சிரத்தையுடன் அந்த மந்திரதை ஜபிக்கிறார்களோ அவர்களையும், அது மட்டுமல்ல, வேறு எவருக்காகவும் அவர்கள் ஜபம் செய்தாலும் , யாருக்காக ஜபிக்கிறார்களோ அவர்களையும் காப்பாற்றுகிறது, (Brahadaranyaka Upanisad 5.14.4)
 
2. காயத்ரி முதலடி (ஓம் பூர்புவஹ்ஸ்வஹ) மூவுலகத்தின் செல்வத்தைக் குறிக்கிறது.
இரண்டாம் அடி (தத்சவிதுர்வரேண்யம்) மூன்று வேதங்களின் செல்வத்திற்கு ஈடானது.
மூன்றாம் அடி (பர்கோ தேவஸ்ய தீமஹி) உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் ஈடானது.
நான்காம் அடி (தியோயோநஹ்ப்ரசோதயாத்) சூரியனுடைய அளவற்ற மஹிமையைக் குறிக்கிறது. அதனால் அந்த நாலாவது அடிக்கு ஈடாக எந்த செல்வமும் கிடையாது. (Brahadaranyaka Upanisad 5.14.5)

இன்னமும் வளர்த்த வேண்டாம். நீ எப்பொழுதும் போல் காயத்ரி பிராணாயமத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிரு. மற்ற வேளைகளில் தோன்றும் போதெல்லாம் காயத்ரியை உரக்கவே சொல்லலாம்.

இப்பொழுது சங்கீதத்தைப் பற்றிச் சொல்கிறேன். நமது இந்திய சாஸ்த்ரிய சங்கீதத்தின் அஸ்திவாரமே, மேலும் சொல்லப் போனால் 'மூலாதாரமே' தெய்வானுக்ருஹத்தால் நமக்கு கிடைத்த வேதங்கள் தான். இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

வேதத்திற்கு மறு பெயர் 'ஸ்ருதி'. நீ கேள்விப் பட்டிருப்பாய் 'ஸ்ருதி, ஸாஸ்த்ர, புராண' என்று.

வேததின் மூலாதாரமே 'அ' 'உ' 'ம்' என்ற மூன்று உச்சரிப்புகள் அடங்கிய 'ஓம்' என்ற ப்ரணவம். தான்.

இந்த அகிலாணடமான பிரபஞ்சம் முதிலில் 'ஒலி' மயமாகத்தான் தோன்றியது என்று வேதங்கள் கூறுகின்றன. 'சப்தமயம் ப்ரஹ்மா', 'நாதப்ரஹ்மம்' என்றவாரெல்லாம் சொல்லப் படுகிறது.

காலங்களுக்கு அப்பார்பட்ட முவ்வேதங்களின் (அதர்வ வேதம் பிறகு தோன்றியதாகும்) முதல்வதான ரிக்வேதத்தில் 'அநுதத்தா', 'உதத்தா' 'ஸ்வதத்தா' எனப்படும் மூன்று ஸ்வரங்கள் மட்டும் உபயோகப் படுகின்றன. சங்கீத நிபுணர்கள் சொல்லுகிறார்கள் அந்த ஸ்வரங்களை நமது கரஹரப்ரியா ராகத்திலுள்ள நி, ஸ, ர என்ற ஸ்வரங்களுக்கு ஒப்பிடலாமென்று.

மூன்றாவதாகிய சாம வேததில் ரிக்வேதத்திலிருந்து அப்படியே சுமார் 1700 சுலோகங்களை எடுத்துக் கொண்டு அவைகளெல்லாம், ஏழு ஸ்வரங்களில் இசையமைத்து பாடுவதேற்க அமைக்கப்பட்டன. அந்த ஏழு ஸ்வரங்கள் 'ப்ரதம','த்விதீய', 'த்ரிதீய', 'சதுர்த்த', 'பஞ்சம', 'ஷஷ்ட', 'ஸப்தம' என கீழ்நோக்கிய 'அவரோஹன வரிசையில்(descending order) அமைக்கப் பட்டிருக்கின்றன். அதற்கு 'ஸாம கானம்' அல்லது வைதிக வரிசை என்று எனப்பெயர். பின்னர் வந்த 'நாரதீய சிக்ஷா' வில் அதே ஸ்வர வரிசை 'ம', 'க', 'ரி', 'ஸ', 'த', 'நி' எனக் கூறப்பட்டு  'லௌகிக' அல்லது 'காந்தார' வரிசையில் அமைக்கப் பட்டது.

உனக்குச் சொல்லத் தேவையில்லை சாக்ஷாத் பரமேஸ்வரனே 'ஸாமகான லோலன்' என அழைக்கப் படுகிறான்.

எல்லோராலும் வேதங்களைப் படித்து அவைகளிலுள்ள சுலோகங்களின் அர்த்தங்களை நன்கு புரிந்துகொள்ளவும் முடியாது உச்சரிக்கவும் முடியாது என்று பகவானுக்கே தெரியும். அதனல் ஸ்ரீ கிருஷ்ணாவதரத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகி வேதங்களின் சாராம்சத்தை அப்படியே கீதை மூலமாக விவரித்தார்.

கிடைசியில் பார்த்தால் யாவருக்கும் தெரிய வரும் எல்லாவற்றிற்கும் மூலகர்த்தா ஓம் என்ற பிரணவம் தான் என்று.

நான் சொன்னதற்கு எடுத்துக் காட்டாக இப்பொழுது எனக்குச் சட்டென்று தோன்றிய கீதையில் கிருஷ்ண பரமாத்மா அக்ஷர ப்ரஹ்ம யோகத்தில் கூறுவதைக் கேள் (கீதையின் 8ம் அத்தியாயம் 13வது ஸ்லோகமென்று பிறகு நான்{சீனு} தெரிந்து கொண்டேன்)

ஓம் என்ற ஒரே சொல்லான ப்ரஹ்மத்தை த்யானித்துக் கொண்டு தன்னுடலை விட்டு பிரிபவர் மோக்ஷத்தை அடைவார்.
 
நீ கவனித்தாயா 'சொல்லிக் கொண்டு' என்று கூட கிருஷ்ண பரமாத்மா கட்டளையிடாமல்,  "த்யானித்தாலே' போதும் என்று திட்டவட்டமாக அறிவுருத்துகிறார்.

என்னைப் போன்ற முதியவனுக்கு பகவான் எப்படி அனுக்கிரகம் கொடுத்திருக்கிறார் பார்த்தாயா?

நான் இப்பொழுதெல்லாம் என்ன செய்கின்றேன் தெரியுமோ

எனக்கோ பாடமுடியாது. அதனால் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.
உறங்கப் போகும் வறை, புரந்தரதாசர், மும்மூர்த்திகள், சிவன், ஊத்துக்காடு போன்ற மஹான்களது பாட்டுகளை (முக்கியமாக தியாகப்ரம்மம் அவர்களுடையது) ரிகார்ட் மூலம் கேட்டுக் கொண்டு பகவானைத் தியானித்துக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டு வருகிறேன்.

(என் அருமை அண்ணணவர்களது கூற்றைக் கேட்கும்பொழுது எனது கண்களில் நீர் மல்கத் துடங்கியது)

எனது அண்ணன் மேலும் கூறலானார்.

தியாகப் ப்ரஹமம் பாட்டின் மூலம் 'ராமஸ்மரனம்' செய்து கொண்டே கபால மோக்ஷம் அடைந்தார்.

மஹாத்மா காந்தி சுடப்பட்டு உயிரை விடும் பொழுது 'ஹே ராம்" என்று சொல்லிக் கொண்டே விண்ணுலகம் எய்தார்.

சீனு எனக்கே மிகக் களைப்பாய்விட்டது. எப்படித்தான் நான் சொல்வதையெல்லாம் பொருமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாயோ என்று அவர் சொல்லிவிட்டு, எனது அண்ணன் தொடர்ந்தார்.
"இப்பொழுது தான் ஒரு முக்கியமான விஷயத்தை, அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கூறிவிட்டு என்னுடைய 'காலக்ஷேபத்தை' முடித்து விடுகிறேன்.

"ராம்" என்பது ஓம் என்ற பிரணவத்தைக் குறிக்கிறது
அதே போல் "முருகா" என்றால் அதுவும் பிரணவத்தைக் குறிக்கிறது.
மூதரிஞர்கள் "முருகா" என்றால் "ஸ்த்ரீ ப்ரணவம்" என்கின்றார்கள்.

பெரிய இரகசியம் ஒன்றுமில்லை. நீ முழுவதாக வாயைத்திறந்து உள்ளே நாசித்துவாரங்களாலும் வாய் வழியாக காற்றை (அது தானே பிராணவாயு) உள்ளே இழுத்துக் கொள்ளும் பொழுது 'ஆ' என்ற ஒலி உண்டாகிறதைக் கவனிப்பாய். பின்னர் வாய்தனை மூடும்பொழுது உதடுகளிருண்டும் சேரும் பொழுது 'உ', 'ம்' என்ற ஒலி ஏற்படுகிறதைக் கவனித்தாயா அது தான் 'ஓம்' காரம் என்று முன்றே உனக்குத் தெரியும்.

சும்மா 'ஓம்' 'ஓம்' என்று சொல்லிக்கொண்டிரு என்றால் பாமர மக்களுக்கு அதில் மனம் செல்லாது. அதனால் தான் தியாகைய்யர், ராமதாசர் போன்ற மஹனீயர்கள் ராமரசத்தில் ஓம்காரத்தை கரைத்து மக்களுக்கு அருளிச் சென்றிருக்கிறார்கள்.

இப்பொழுது கவனி முன்பு சொன்ன மாதிரி மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு உதடுகளை மூடிக் கொண்டாய் அல்லவா.
மறுபடியும் சுவாசிப்பதற்கு என்ன செய்வாய்? 'ம்' என்று மூடிக் கொண்டிருக்கும் இரண்டு உதடுகளையும் மெதுவாக விரிக்கும் பொழுது நன்றாகக் கவனி 'ம்' 'உ' 'ஆ' என்ற ஒலி உனக்குள் ஒலிக்கிறது அல்லவா அது தான் 'முருகா".

பெரியசாமி தூரன் அவர்கள் (எனது அண்ணணாரின் நண்பர்கிளில் ஒருவர்) இயற்றிய 'முருகா முருகா' என்ற பாடலை 'அழிவேயில்லாத' திருமதி எம். எஸ். அவர்கள் சஹானா ராகத்தில் பாடியிருப்பதைக் கேள்" என்று சொல்லிக்கொண்டே தன் மூன்றாவது மகளை அழைத்து அந்த கேசட்டைக் கொண்டு வரச்சொல்லி 'ரிகார்ட் ப்ளேயரில்" போடவைத்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளத்துடங்கினார் அந்த மேதை.

பரம்பொருளுடன் ஒன்றாய் கலந்து விட்ட எனது அண்ணன் 'கரிச்சான் குஞ்சு' (Sanskrit & Tamil Pandit Sri R.Narayanaswamy) அவர்கள் என்றென்றும் என் உள்ளத்தில் இருப்பார்.

முருகா சரணம்

சீனு
'ராமநாமத்திற்கு நான் பாடிய ஒரு பாட்டும், முருகனுக்கு, நான் என்றும் வணங்கும் எம். எஸ். அவர்களது முருகன் பாட்டும் கீழ்க் கண்ட மின்னிணைப்புகளில் (web page not website)இருக்கின்றன. முதலாவது நானே உண்டாக்கியது. அதில் பாட்டைக் கேட்கவும் கேட்கலாம். வேண்டுமென்றால் உங்களுடைய கணிணியில் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்(எனக்கு சரியாகத் தமிழாக்கம் செய்யத் தெரியவில்லை ஆங்கிலத்தில் download in your system)
இரண்டாவது பாட்டை உங்கள் கணிணியில் இறக்கிக் கொண்டு பிறகு கேட்கலாம்.

1.  http://www.geocities.com/seenufour/ramamanthram.pps
2.  http://music.cooltoad.com/music/song.php?id=254379

raja raj

unread,
Feb 22, 2007, 11:16:29 AM2/22/07
to il...@googlegroups.com

என்னவென்று சொல்வது கிடைப்பதற்கு அறிய செல்வம்
மிக்க பாக்கியம் செய்தவர் நிங்கள்

vishalam raman

unread,
Feb 22, 2007, 11:27:35 AM2/22/07
to il...@googlegroups.com
அன்பு ஸ்ரீனிவாஸ்  உண்மையாகவே நான் இதை படிக்க
பாக்கியம் செய்திருக்கிறேன் கரிச்சான்குஞ்சு அவர்கள் உங்கள் குருஜி என்பது அதை விட பாக்கியம் தான் இதை படித்து நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன்
எப்படி நன்றி தெரிவிப்பது என்றே தெரியவில்லை மிக அர்மை அத்துடன் பட்டைப் பற்றியும் மிக அருமையாக
சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அன்புடன் விசாலம்

 

Venkatram Shrinivas

unread,
Feb 23, 2007, 2:13:31 PM2/23/07
to il...@googlegroups.com

ஸ்ரீமதி விசாலம் அவர்களுக்கு எனது மனமார்ந்த வந்தனத்தைத் தெரிவித்துக் கொண்டு எனது 'முடிவுரை'யைச் சமர்ப்பிக்கின்றேன்.
அன்பர்கள் எல்லோருடைய மன்னிப்பையும் பொருமையையும் கோரிக்கொண்டு இந்த பின்னுரையுடன் எனது கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். இதை எழுதும் பொழுது எனது அண்ணன் அவர்கள் ஒரு சமயம், எல்லோரும் தாங்கமுடியாத உடல்வலியினாலோ மனவருத்தினாலோ அதனைத் தாங்க முடியாமல் 'ஐயோ, ஐயோ' என்று சொல்லும் வழக்கத்திப் பற்றி விளையாட்டாகக் கூறியதை எழுதிவிடுகிறேன். "சீனு, நான் நினைக்கிறேன், முதன் முதலில் நம்முன்னோர்க்கும் முன்னோர்கள் மனத் தூய்மையும் பக்தியும் உள்ளவர்க்ளாக இருந்ததினால் 'ஹரி ஓம், ஹரி ஓம்' என்று சொல்லிவந்திருக்கவேண்டும் பிறகு தான் அது "ஐயோ, ஐயோ' என்று வழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். நல்ல இலக்கணத் தமிழில் எழுதும் பொழுது 'அய்யகோ' அல்லது 'ஐயகோ" என்றுதான் எழுதுவார்கள்". அப்பொழுது எனக்குத் தோன்றியதையும் அவரிடம் கூறினேன். "அண்ணா நீங்கள் 'விளையாட்டுக்கு' என்ற சொன்னதிலும் ஒரு உண்மை இருக்கின்றது என்று தோன்றுகிறது கொச்சைஆங்கிலத்தில் "ஓ காக்ஷ்" (Oh Gosh or Oh Mi Gosh) என்று சொல்லுவார்கள். அது 'அட கடவுளே' (Oh God, or Oh My God) என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

நான் சென்ற மடலின் குறிப்பிட்டிருந்த என்னுடைய பாடல் பவர்பாயின்ட்ஷோவில் சரியாக வரவில்லையென எனக்குத் தோன்றிற்று. அதனால். எல்லா அன்பர்களையும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால் கீழே கொடுப்பட்டிருக்கும் இணைப்புக்குச் சென்று நான் எப்படிப் பாடியிருக்கின்றேனோ அப்ப்டியே கொடுக்கப்பட்டிருக்கும் mp3 பாடலை இறக்கம் (download) செய்து கொள்ளுங்கள
 

பாடலின் வரிகளின் தமிழாக்கமும் அவ்வரிகளின் பொருளை
ஆங்கிலத்திலும் தமிழிலும் கீழே கொடுத்திருக்கிறேன்.

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய நாதாய ஸீதாயாஹ் பதயே நமஹ
I[ prostrate to Rama, the Lord of Sita, The chief of the Raghu kings,
 an incarnation of Vishnu, who is known as Ramabhadra and also Ramachandra]
ராமபத்ரா என்றும் ராமசந்த்ரா என்றும் அழைக்கப் படும்
ரகுகுலாதிபதியான, சீதையின் நாயகனான ஸ்ரீ ராமனது
பாதங்க்ளில் விழுந்து விணங்குகிறேன்.

ஜயது ஜயது மந்த்ரம் ஜன்மஸாபல்யமந்த்ரம்
ஜனன மரண பேதக்லேஷ விச்சேத மந்த்ரம்
ஸகல நிகம மந்த்ரம் ஸர்வசாஸ்த்ரைக மந்த்ரம்
ரகுபதி நிஜமந்த்ரம் ராமராமேதி மந்த்ரம்
[Victory, Victory to Sree Rama Mantra Which confers the goal of life, the
 Mantra Destroys afflictions of birth and death, the Mantra derived out of
all the Vedas and Shastras, the real Mantra of Raghupathi.]
பிறவியின் நற்பயன்களையெல்லாம் அருளும் மந்திரம்,, பிறப்பு-இறப்பு இவ்விறண்டினால் வரும் துன்பங்களை அறவே நீக்கும் மந்திரம். எல்லா வேதங்களினும், எல்லா சாஸ்த்திரங்களின் சாரமான மந்திரம் ரகுபதியென்ற நிஜ மந்திரம் ராம ராம என்ற மந்திரத்திற்கு (எப்பொழுதும்) வெற்றி வெற்றி.
சுபம்

raja raj

unread,
Feb 24, 2007, 1:33:46 AM2/24/07
to il...@googlegroups.com
ஐயா மிக்க நன்றி
இத்தகைய மந்திரங்களை உச்சரிப்பது பெரும் பாக்கியம்
இது பொன்ற மந்திரங்களை இன்னும் தந்தால் மிக்க நன்மையாகும்

T.V Ramanan

unread,
Feb 24, 2007, 12:20:20 AM2/24/07
to il...@googlegroups.com
Jai Sri Ram
Amma Charanam
regards
ramanan
 

RAMA

unread,
Feb 24, 2007, 7:26:21 AM2/24/07
to il...@googlegroups.com

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய நாதாய ஸீதாயாஹ் பதயே நமஹ
I[ prostrate to Rama, the Lord of Sita, The chief of the Raghu kings,
 an incarnation of Vishnu, who is known as Ramabhadra and also Ramachandra]
ராமபத்ரா என்றும் ராமசந்த்ரா என்றும் அழைக்கப் படும்
ரகுகுலாதிபதியான, சீதையின் நாயகனான ஸ்ரீ ராமனது
பாதங்க்ளில் விழுந்து விணங்குகிறேன்.

 
 
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!

 

AKR Consultants

unread,
Nov 13, 2011, 2:16:57 PM11/13/11
to il...@googlegroups.com
http://www.mazhalaigal.com/2011/november/20111124rr_pranava-mantra.php

2007/2/3 raja raj <kund...@gmail.com>
ஓம் என்னும் பிரணவம்

  எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த
ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை
வெளியிடும்போது
'ஓ' என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது
'ம்' என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு
முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும்,
விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத்
தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்

இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே 'ஓம்'.
மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.
மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரவணன்
"அ" என்பது எட்டும்
"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.

மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு.
" ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.
அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்
உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த
சிவசக்தியினையும் குறிக்கும்.

இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்
சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,
ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,
சான்றோர்களும் சொல்கிறார்கள்.
இதனை திருமூலர், திருமந்திரத்தில் :

" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "

முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,
இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்
அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,
மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்
விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதை
சதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும்
என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.

முதல் எழுத்து:

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.

சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :
" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "
- என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்
முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்
குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்
முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு "
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,

அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ,
" அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,
- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி "

"அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.

உருவமும்- உடலும்.

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்.

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம்

"உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "
- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.

இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்

"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து
அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி
நிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்,

" ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்
தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்
தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே
இணைத்து அடக்கி நிற்கும்.

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்
செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்
அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,
உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,
அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.
இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்
ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.
இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்
ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்
தன்மை நீங்களும் காணலாம்.

You see, there is no gain without pain.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.
ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில்
செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியரு சாதனையைப் பழக்கப்
படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது
மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல
படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை
உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது
என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்
கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது
பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க
வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக
காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட

வேண்டும்.

இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்
குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற மந்திரத்தை மனதால்
நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்
குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்
மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலி
அல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல்
ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி
சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.

[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]
என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி
சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]

யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால்
பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.
அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.

இதனை திருமூலர் :

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்
பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்
புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி
இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனை
எதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம்
பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்
பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.
உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்
சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம
பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்
உருவமாக சரிபாதி உடல்.



--
சர்வம் சிவமயம்
சிவாய நமக‌


--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME". This group is affiliated to www.azhagi.com, hosting Azhagi [அழகி], the one'stop Tamil software for "all" your Tamil computing needs.
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---




--
AKR
http://www.mazhalaigal.com

AKR Consultants

unread,
Feb 7, 2016, 10:01:40 AM2/7/16
to il...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages