தினம் ஒரு பாடல்

110 views
Skip to first unread message

AKR

unread,
Jul 17, 2009, 11:47:08 AM7/17/09
to il...@googlegroups.com
ப்ற்று நோயிலிருந்து மீளப் போராடும் 2 வயதுக் குழந்தைக்கு உதவுங்கள்:
 
 
"இப்போது நாட்டை ஆள்பவர்கள் ஏமாற்றுக் காரர்கள், நல்லவர்களைப் போல் நடித்து நாட்டைக் கொள்ளையடிக்கிறார்கள்.
இவர்களை விரட்டிவிட்டு எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள். நாட்டிலுள்ள தெருக்கள் அனைத்திலும் பள்ளிக்கூடங்கள் கட்டி
கல்வியறிவில்லாதவர் யாருமில்லை எனும் நிலையை உருவாக்குவோம். பொதுமக்கள் அனைவருக்கு ஆளுக்கொரு வீடு
கட்டித்தருவோம், நாட்டில் தொழில்கள் பல்கிப் பெருக வகை செய்வோம். நாட்டில் உண்ண உணவில்லாது வாடுபவர்
யாருமில்லாத நிலையை உருவாக்குவோம்." என்றெல்லாம் அடுக்குமொழியுடன் அலங்கார வார்த்தைகள் நிறைந்த மேடைப்
பேச்சுக்கள் வாயிலாகவும், இசைநயமிக்க பாடல்கள் மூலமும் மக்களிடம் கூறி வாக்குப் பெற்று ஆள வந்தவர்கள் செய்தது
என்ன?
 
முன்னர் ஆண்டவர்களுக்குத் தெரியாத பல புதிய ஏமாற்று வேலைகளைச் செய்து முன்னவர் லட்சங்களைக் கொள்ளையடித்த
சாதனையை முறியடித்துக் கோடிகளில் புரண்டனர், புரள்கின்றனர். தெருவெங்கும் பள்ளிகள் கட்டினரா? ஆம் உள்ளேயும்
வெளியேயும் சென்று வரத் தேவையான வழித்தடங்கள் இல்லாத சிறு வீடுகளிலும் தனியார் பலர் பள்ளிகளைக் கட்டி அவற்றில்
சேர்பவர்களிடம் வழக்குத்துக்கு மிகவும் அதிகமான, அநியாயமான தொகையைக் கல்விக் கட்டணமாக வசூலித்ததுடன்
அவ்வப்பொழுது அஜாக்கிரதையான நிர்வாகத்தினால் விளைந்த தீ விபத்துக்களுக்குப் பால்மணம் மாறாத பச்சிளம்
குழந்தைகளைப் பலியாக்கினர்.
 
ஆளுக்கொரு வீடு கட்டினரா? ஆம் அவர்களது உற்றார், உறவினர், அவர்களுக்கு நிதியளிக்கும் நபர்கள் ஆகியோருக்கு.
நாட்டில் தொழில்கள் பெருகினவா? ஆம், அன்னிய நாட்டவர்களின் முதலீட்டில் தொழிற்சாலைகள் உருவாகி, உறப்பத்தியால்
வரும் லாபத்தில் பெரும்பகுதி அவர்கள் கையில் போய்ச் சேர, நம் மக்களில் சிலருக்கு அங்கு கூலிக்கு வேலை கிடைக்கின்றது.
நம் அரசியல்வாதிகளுக்குப் பெட்டிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.
 
உண்ண உணவில்லாத நிலை நாட்டில் உருவாகியதா? பல இடங்களில் விவசாயிகள் எலிக்கறியை உண்டு வாழ வழி
கிடைத்தது. கடன் தொல்லை தாங்காமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது போன்றவை தவிர, கையில்
காசுள்ளவர்கள் யாவருக்கும் உணவு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
 
இன்று மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்க்கவும், தங்களுக்கும் குழந்தைகளுக்கும் நோய்கள்
வரும் காலத்தில் அவற்றுக்கான சிகிச்சை பெறுவதற்கும் ஊரெல்லாம் கையேந்திப் பிச்சை கேட்க வேண்டிய நிலை
உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் நம் வருங்கால சந்ததிகள் உலகில் வாழ முடியுமா?
 
நாமெல்லாம் என்ன செய்கிறோம்?
 
தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல..
 
வீழ்ந்து கிடக்கிறோம். நமது வயிறு நிரம்பினாற் போதும் என்று நாட்டில் நடக்கும் அநீதிகளை நீக்க எம்முயற்சியும் எடுக்காமல்
வாளாவிருக்கிறோம். நாமனைவரும் சிந்தித்து இம்முறைகேடுகளை நீக்கிட எதிர்காலத்தில் மக்கள் அனைவரும் நல்வாழ்வு வாழ
வழி தேடுவது மிகவும் அவசியம், அவசரம். நாம் பட்ட துன்பங்கள் நமது சந்ததியினர் படாதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பது
நம் அனைவரது கடமை. இளைஞர்களே சிந்தியுங்கள், நாட்டைக் காக்க நல்லதொரு வழி காணுங்கள்.
 
 
மலைக் கள்ளன்
டி.எம். சௌந்தரராஜன்
 
ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
 
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டிப்
பாமர மக்களை வலையினில் மாட்டி
 
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
 
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்  - கல்வி
தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம்
கருத்தாகப் பல தொழில் பயிலுவோம் - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
 - ஊரில்
கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
 
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
 
ஆளுக்கொரு வீடு கட்டுவோம்
ஆளுக்கொரு வீடு கட்டுவோம் - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்  - அதில்
ஆன கலைகளை சீராகப் பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினைப் போக்கிட
கேள்வியும் ஞானமும் ஒன்றாகத் திரட்டுவோம்
 
இன்னும் எத்தனை காலந்தான் இன்னும்
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே இந்த நாட்டிலே இந்த நாட்டிலே

Geetha Sambasivam

unread,
Jul 17, 2009, 8:51:28 PM7/17/09
to il...@googlegroups.com
//இளைஞர்களே சிந்தியுங்கள், நாட்டைக் காக்க நல்லதொரு வழி காணுங்கள்.//

உண்மை, வளமான வருங்காலம் வேண்டுமானால் எங்காவது ஒரு பொறி கிளம்பவேண்டும்.

2009/7/17 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Jul 18, 2009, 2:51:21 AM7/18/09
to il...@googlegroups.com
இயற்கையையும் மனித வாழ்வையும் இணைத்து நோக்கும் ஞானம் இயல்பாகவே அமையப் பெற்ற கவிஞர்கள் தமிழில் அனேகர் உளரென்றாலும் அவர்களுள் தலைசிறந்தவர் கவிஞர் கண்ணதாசன். தமிழை முறையாக இலக்கணத்துடன் பயிலாத பாமர மக்களும் பொருளுணர்ந்து கேட்டு மகிழும் வகையில் எண்ணிறந்த தமிழ்ப் பாடல்களைத் தந்தவர் அவர்.
 
காதலர் இருவர் வெண்ணிவைத் துணைக்கழைத்து இருவரும் ஒருவரோடொருவர் கொண்ட காதலை நூதனமான முறையில் வெளிப்படுத்தும் பாடலொன்று அவற்றுள் உண்டு. மனித வாழ்வில் பெரும்பங்கு வகிக்கும் பலவகையான காய்கறிகளுடன் மனித குணங்களையும் வாழ்வின் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு, சிந்தனையைத் தூண்டி, சிந்தையள்ளும் தமிழ் செழுந்தேனை உண்டு விந்தையுடன் பாட விழையும் மனவண்டுகளின் பசியைத் தீர்க்கவல்ல இனிய அந்தப் பாடல் இதோ:
 
 
பலே பாண்டியா
விஸ்வநாதன் ராமமூர்த்தி
கவிஞர் கண்ணதாசன்
டி.எம். சௌந்தரராஜன், பி.சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜமுனா ராணி
இயக்கியவர்: பி.ஆர். பந்துலு
ஆண்டு 1962
 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
 
ஓஓஓ..ஓஓஓ..
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
 
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
 
ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
 
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
 
ஆஹா..ஆஹா. ஆஹா.. ஆஹா..
 
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
 
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
 
ஆஹாஹா ஆஹா ஓஹோஹோ ஹோஹோ ம்ஹ்ம்ம் ம்ம்

Geetha Sambasivam

unread,
Jul 18, 2009, 3:53:57 AM7/18/09
to il...@googlegroups.com
அருமையான் இருபொருள் கொண்ட பாடல். நன்றி.

2009/7/18 AKR <akrcons...@gmail.com>

AKR

unread,
Jul 19, 2009, 2:31:56 AM7/19/09
to il...@googlegroups.com
எந்த ஒரு லக்ஷியத்தையும் அடைய முதற்கண் நம்பிக்கை அவசியம். "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு" என்று  இவ்வுண்மையை எடுத்துரைத்த மஹாகவி பாரதி பாரத நாடு வெள்ளையர்களிடம் அடிமைப் பட்டிருந்த காலத்திலேயே
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோம்" என்று பாடியது பாரதத்தாயை அடிமைத் தளையினின்றும் விடுவித்து சுதந்திரம் பெறுவோம் எனும் அவரது ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
 
"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?" என்று அவர் பாடியது, வெள்ளையரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் கோரப் பிடியிலிருந்து கோடானு கோடி தேசபக்தர்கள் மெய் வருத்தம் பாராது, பசி நோக்காது கண் துஞ்சாது ஆங்கிலேயர்களிடம் அடி வாங்கி, அவர்களின் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்றுத்தந்த சுதந்திரத்தை இழக்கும் வகையில், அரசுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குமளவுக்கு சுரண்டல் பெருகிய பின்னர் இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ள இன்றைய காலத்தின் அவலத்தை எண்ணித்தானோ?
 
எது எவ்வாறாயினும் நாமெல்லோரும் ஒருங்கிணைந்து பாடுபட்டு உழைப்பதுடன் நாடு சீர்கேடான பாதையிலிருந்து விலகி முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய அவசியத்தைப் பிறருக்கும் உணர்த்தி "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே" எனும் தத்துவத்தை மனதில் கொண்டு செயல்புரிந்தால் நாடு சுபிட்சமடைவதுடன் நீதியும் நேர்மையும் நெறியோடு செல்வமும் நிலவி, நம் மனத்துயர் மாறுவது உறுதி.
 
நாடு சுபிட்சமடைந்து எல்லோரும் நல்வாழ்வு வாழும் அந்தப் பொன்னாளை மனக்கண்ணால் கண்டு நாமெல்லோரும் பாடி மகிழவென்றே நமக்கென்று கருத்துச் செறிவுள்ள இந்தப் பாடலைத் தந்துள்ளளாரோ கவியரசர்?
 
 
படம்: பாசமலர்
இயக்கம்: ஏ. பீம்சிங்
பாடலாசிரியர்: க்விஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், பி. ராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1961
 
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனேனா ஓ....ஓ..ஓ..ஓ..
தந்தான தானதந்தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானேனே தானே தானேதந்தானே தந்தா
 
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா
 
தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ ஆ..ஆ..ஆ
 
வளரும் வளரும் என்றே காத்திருந்தோம்
மலரும் மலரும் என்றே பார்த்திருந்தோம்
மலர் முடிந்து பிஞ்சு வரும் வளர்ந்தவுடன் காய் கிடைக்கும்
காய்களெல்லாம் கனிந்தவுடன் பழம் பறிப்போமே
 
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
 
தந்தத் தானே தந்தன்னா தந்தத் தானே தந்தன்னா ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ
 
உழவும் தொழிலும் இங்கே நாம் படைத்தோம்
உறவும் சுவையும் என்றும் நாம் வளர்த்தோம்
பணம் படைத்த மனிதரைப் போல் பஞ்சு மெத்தை நாம் பெறுவோம்
மாடி மனை வீடு கட்டி வாழ்ந்திருப்போமே
 
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
 
நெஞ்சில் ஒரு களங்கமில்லை சொல்லில் ஒரு பொய்யுமில்லை ஆ...ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை ஆ.ஆ.ஆ.அ
தோல்வியுமில்லை ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
 
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே

AKR

unread,
Jul 20, 2009, 1:27:21 AM7/20/09
to il...@googlegroups.com
சிந்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானியரும் புத்தரோடும் ஏசுவும் புனிதராம் காந்தியும் எழுதி வைத்த எத்தனையோ உண்மைகளில் முக்கியமானது மனக்கட்டுப்பாடு. ஒருவன் கவலைகள் நீங்கி அமைதி பெற வேண்டுமெனில் முதலில் தன் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் அது வாழ்வின் சுவைகளை அனுபவித்து அறிந்து தெளிந்தவர்க்கே.
 
ஆசை என்னும் பாசக் கயிறால் கடையப்படும் மத்தாகும் மனம் அலைபாயும் தன்மை கொண்டது. அதிலும் குறிப்பாக காதல் கொண்ட பெண்ணின் மனம் மிகவும் பொல்லாதது. என்ன அறிவுரை சொன்னாலும் கேளாது காதலில் மூழ்கி அல்லல்படும், தன் காதலனைத் தேடி அலையும். காதலனைக் காணாவிடில் வாடித் துயருரும். காதலனைக் கண்டவிடத்தே துள்ளி ஆடும். காதல் உண்ர்வைப் போல் ஒரு பருவமடைந்த பெண்ணின் மனதை மயக்கி வாழ்வில் இன்பம் தர வல்லது வேறில்லை. தன் மனதைக் கொள்ளை கொண்ட காதலன் கள்ளம் கபடற்ற நல்ல உள்ளம் கொண்டவனாக அமையப் பெற்ற பெண் பெரும் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது. சுவைத்தாலன்றிப் புரியாதது.
 
அவ்வாறு காதல் வயப்பட்ட ஒரு பெண் கொஞ்சு மொழியில் பாடும் மனதை மயங்க வைக்கும் பாடல்:
 
 
படம்: தெய்வப் பிறவி
பாடியவர்: கே. ஜமுனாராணி
 
அஹஹாஹாஹா ஒஹொஹோஹோஹோ
ஆஹாஆஹாஆஹாஹா ஹஹஹா
 
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு எங்கள்
காதல் ஒரு தினுசு
 
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு காவல்
மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
 
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
 
மாலைப் பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது என்ன
சொன்னாலுங் கேளாதது

AKR

unread,
Jul 21, 2009, 12:46:56 AM7/21/09
to il...@googlegroups.com
பகற்பொழுதின் வெப்பத்தால் வாடி மாலை முடிந்து இரவு வருமுன்னரே வெப்பம் தணிக்கும் வழி வேண்டி மொட்டை மாடியில் படுத்துறங்கி, வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே சுட்டெரிக்கும் வெயில் பட்டு விழித்தெழுந்து. மீண்டும் அன்றாடப் பணிகளில் புழுங்கித்தவித்து. மாலை மீண்டும் வருவதெப்போதென்று வானைப் பார்த்த வண்ணமே நாளைக் கழிக்கும் கோடை காலத்தில் நமக்குச் சற்றே இதமளிப்பது வானத்தில் வரும் வெண்ணிலவு.
 
காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்பான அதன் தண்ணொளியில் உடலின் வெப்பம் தணிவதுடன் மனச்சோர்வும் மறைந்து புது உற்சாகம் பெருகுவது அனைவரும் அனுபவித்தறிந்த உண்மை.
 
என்னதான் நிலா வந்து வெயில் பட்டு வாடிய மேனியைச் சற்றே குளிர்வித்தாலும் கோடை என்று மறையும் என்று எதிர்பார்த்து ஏங்கும் மனிதர் குலத்துக்குக் கோடை மறைந்தாலே இன்பம் வரும்.
 
அவ்வாறு வரும் இன்பத்தை மெய்யன்பு கொண்டோரே முழுமையாக அனுபவிக்க இயலும்.
 
உண்மைக் காதல் கொண்ட ஆணும் பெண்ணும் ஒருவரோடொருவர் அளவளாவி ஆனந்தமடையும் காலம் கோடை மறைந்த பின் வரும் வசந்த காலமல்லவோ?
 
 
கோடை மறைந்தால் இன்பம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும் - கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
 
ஓடும் தென்றல் முன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும் - இசை
பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
 
வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே
 
கோடை மறைந்தால் இன்பம் வரும்
 
பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பாரிங்கே கண்ணே பாராய் சந்திரோதயம்
பகலில் தோன்றவும் ஆமோ அதிசயம்
பளிங்கு நீர் தனில் விளங்கும் இம்மதியம்
பாவை உனதொரு முகமே உதயம்
 
ஓடும் தென்றல் முன்னால் வரும்
 
ஆனந்தம் அது எங்கே பிறந்தது?
அமைந்த ஆண் பெண் அன்பால் வளர்ந்தது
ஊனும் உயிரும் ஒன்றாய்க் கலந்தது
உண்மைக் காதல் உறவே பெரிது
 
கோடை மறைந்தால் இன்பம் வரும் கூடி
பிரிந்தவர் சேர்ந்தாலே சொந்தம் வரும்
கோடை மறைந்தால் இன்பம் வரும்
 
_________________________
ஆகிரா

AKR

unread,
Jul 22, 2009, 2:59:22 AM7/22/09
to il...@googlegroups.com
வெண்ணிலவு கோடையில் தந்த சிறிதளவு குளிர்ச்சி போதாது, மேலும் தொடர வேண்டும். கோடையின் வெப்பத்தால் மிகவும்
தாக்குண்டு களைத்துப் போன உடலும் மனமும் மேலும் புத்துணர்ச்சி பெற நிலவின் துணை அவசியம். தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறவேண்டிப் பாற்கடலைக் கடைகையில் அதற்கு மத்தாக மந்தரகிரியையும் நாணாக வாசுகி எனும் பாம்பையும் கொண்டார்கள். மத்தாகிய மலையைத் தாங்கிப் பிடிக்க திருமால் ஆமையாக அவதாரம் செய்தார் (கூர்மாவதாரம்). அவ்வாறு பாற்கடலைக் கடைகையில் திருமாலுடைய மேனி வெப்பமடையவே சிவபெருமானின் சடாமுடியில் இருக்கும் நிலவின் ஒளிக் கதிர்கள் அவர் மேல் வீசி அவரது மேனி வெப்பத்தைத் தணித்தனவாம்.
 
இணங்கேன் ஒருவரை; நின் இரு தாள் அன்றி எப்பொழுதும்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன்; வஞ்ச நெஞ்சர் உடன்
பிணங்கேன் - அமுதம் பெருகும் செம் பாதிப் பிறை முடித்த
அணங்கே! சரணம் கண்டாய், மதுராபுரி அம்பிகையே!
 
என்று குலசேகர பாண்டியன் அருளிய மதுராபுரி அம்பிகை மாலை
 
 
பாடல்களுள் நிலவிலிருந்து அமுதம் பெருகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய அமுதைப் பொழியும் நிலவை அருகில்
அழைக்கிறாள் பருவமடைந்த நிலையில் ஆசைகள் அரும்பும் மனத்தினளான ஒரு அழகிய கன்னிப்பெண்.
 
 
திரைப்படம்: தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: க்விஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
ஆண்டு: 1957
 
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ...
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
 
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ..
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புதுமலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
 
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
 
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ..ஆ..ஆ..ஆ..
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா
இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ
 
அமுதைப் பொழியும் நிலவே நீ
அருகில் வராததேனோ அருகில் வராததேனோ

ஆகிரா
_________________________
http://www.mazhalaigal.com/

AKR

unread,
Jul 23, 2009, 1:57:14 AM7/23/09
to il...@googlegroups.com
இறைவன் மனிதனைப் படைத்தானோ இயற்கை படைத்ததோ, எவ்வாறாயினும் இயற்கையில் மனிதர்களுக்கிடையில் வேறுபாடுகள் அடையாளத்துக்காகவே ஏற்படுகின்றனவேயல்லாது அடிப்படியில் அனைவரும் ஒன்றுபோலவே உள்ளோம்.
 
இவ்வுலகினில் இயற்கை வளங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவாகவே படைக்கப்படுகின்றன. குறுகிய மனம் கொண்ட மனிதன் பொருளின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அவற்றை எனது உனது என சொந்தம் கொண்டாடிப் பிரிவினையை ஏற்படுத்துகிறான்.
 
சாதிகளையும் மதங்களையும் ஏற்படுத்தியவன் மனிதனே, அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்க்கும் போக்கினை ஏற்படுத்தியவனும் மனிதனே. இதனால் ஏற்றத் தாழ்வுகள் உண்டாகிப் பிரிவினைக்கு வித்தாகித் துன்பம் விளைகிறது.
 
சிறிது காலமே உலகில் வாழும் பேறு பெற்ற மனிதன் அக்குறுகிய காலத்திலும் கவலைகளுடன் பிறருடன் முரண்பாட்டை வளர்த்து இன்ப வாழ்வைத் தொலைத்து, துன்பமுற்று மடிகிறான். என்னே அறியாமை!
 
சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதரவுற்றிங்கு வாழ்வோம் தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்
 
என்று பாடிய பாரதி தான் எழுதிய பகவத் கீதைக்கான உரையில், "மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல்" எனக் குறிப்பிட்டு, கீதை மோக்ஷ சாஸ்திரம் என்றும், இவ்வுலகிலேயே மரணமில்லாப் பெறுவாழ்வு வாழ்தல் சாத்தியம் என்னும் ரகசியத்தைக் கூறுகிறார். இதே கருத்தை ஸ்வாமி விவேகானந்தரும் தனது "ராஜயோகம்" எனும் உரையில் குறிப்பிட்டுள்ளார். மரணமில்லாப் பெருவாழ்வு வேண்டின் வேற்றுமைகளைக் களைந்து அனைவரையும் சம நோக்குடன் கருதி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்நாள் முழுதும் பொன்னுக்கும் பொருளுக்குமே ஆசைப்பட்டுப் பிறருடன் பிணங்கி இருப்பவர்கள் மரணத்தை நோக்கியே தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர்.
 
படம்: பாவ மன்னிப்பு
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1961
 
ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
 
நிலைமாறினால் குணம் மாறுவான் பொய்
நீதியும் நேர்மையும் பேசுவான் தினம்
ஜாதியும் பேதமும் கூறுவான் அது
வேதன் விதியென்றோதுவான்
 
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
 
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
 
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
 
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
 
மனிதன் மாறிவிட்டான் ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ
 
ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்தா நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
 
மனிதன் மாறிவிட்டான்
ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ ஓ..ஓ..ஓஒஒ ஓஓஓஏ

akr

unread,
Jul 23, 2009, 2:27:00 AM7/23/09
to இல்லம் (your HOME)

AKR

unread,
Jul 24, 2009, 7:21:47 AM7/24/09
to il...@googlegroups.com
மீனா ஒரு அழகிய இளம்பெண். ஏழையாக இருந்தபோதிலும் தன்மானத்துடன் வாழ வேண்டும் எனும் கொள்கைப் பிடிப்புடையவள் அவள்.
 
மோகன் செல்வந்தரின் மகனாகப் பிறந்து வளர்ந்தவன். அவன் ஒரு நாடகப் பிரியன். தந்தை நிர்வகிக்கும் பொருளீட்டும் தொழிலில் அக்கரையின்றி நாடகங்கள் நடத்துவதிலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தான். அவன் இவ்வாறு பொறுப்பின்றி இருப்பதை மாற்ற விரும்பிய அவனது தந்தை வேற்றூரில் இருக்கும் தனது நண்பரிடம் அவனை அனுப்புகிறார்.
 
அந்த நண்பரிடம் செல்ல மனமில்லாத மோகன் தனது நண்பனை அவரிடம் தன் பெயரில் சென்று இருக்குமாறு அனுப்புகிறான். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மோகனை ஏழ்மையில் தள்ளுவதால் அவன் தனக்குக் கிடைத்த பணிகளைச் செய்ய முயல்கையில் அவனுக்குப் புதிதாய் அமைந்த சினேகிதனோ ஒரு திருடன். அதனால் சகவாசதோஷத்தால் திருட்டும் புரட்டும் செய்தாவது வாழ முனைகிறான்.
 
இந்நிலையில் மீனாவின் மேல் மோகன் காதல் கொள்கிறான். அக்காதல் உண்மைக் காதலாக மலர்ந்து அவனை நேர்வழியில் செல்லத் தூண்டுதலாக அமையவே யாரையும் ஏமாற்றாமல் உழைத்து வாழ விழைகிறான். அவனது நல்ல உள்ளத்தையும் நேர்மையையும் அறியும் மீனா அவன் மேல் காதல் கொள்கிறாள்.
 
இருமனம் ஒருமனமான அவர்கள் திருமணம் செய்துகொண்டு இல்வாழ்வு வாழக் கனவு காண்கின்றனர். அப்போது மேகங்கள் திரண்டு வானிலிருந்து மழை பொழிகிறது. அம்மழைச்சாரலை அவர்களது திருமண ஊர்வலத்துக்கு வானோர் பொழியும் பூமழை  போலவும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி உண்டாகும் இடியோசையை மேளம் போலவும் உணர்கின்றனர்.
 
 

படம்: சபாஷ் மீனா
இயற்றியவர்: கு.ம. பாலசுப்பிரமணியம்

இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோதி, பி.சுசீலா
 
காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
 
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே
 
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
 
கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் ப்ரேமையினாலே
 
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ 
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

AKR

unread,
Jul 25, 2009, 8:30:25 AM7/25/09
to il...@googlegroups.com
கின்னஸ் சாதனை புரிந்து சிகரம் தொட்டபின்னர் வெகுகாலம் தொடர்ந்து சிகரமாகவே வாழ்ந்து வரும் இசைகோர் மாமேதை  எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் முதன்முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் புரட்சி நடிகர் மற்றும் மக்கள் திலகம் என்று அறியப்பட்டுப் பின்னர் புரட்சித்தலைவராக உயர்ந்தவருமான எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களும், முன்னாள் முதல்வர் செல்வி ஜே. ஜெயலலிதா அவர்களும் இணைந்து நடித்து 1969ஆம் ஆண்டு வெளிவந்த அடிமைப் பெண் படத்தின் மூலமே தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
தொலைக்காட்சிக்கு திரு எஸ்.பி. பாலசசுப்பிரமணியம் அளித்த பேட்டியில் இவ்வனுபவத்தைக் குறிப்பிடுகையில், பாடல் ஒலிப்பதிவு செய்யக் குறித்த நாளில் தனக்கு ஜூரம் வந்து பாட இயலாத நிலையில் இருந்ததாகவும், இதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். தனக்காகப் பாடல் ஒலிப்பதிவு நாளைத் தள்ளி வைத்ததைக் கூறினார். தனக்காக ஒலிப் பதிவையே தள்ளி வைக்க வேண்டுமா எனத் தான் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்டதற்கு எம்.ஜி.ஆர். கூறினாராம், "நீ எனக்காகப் பாடுவதாக உனது நண்பர்கள் அனைவரிடமும் கூறியிருப்பாய். இந்நிலையில் உனக்கென அளிக்கப் பட்ட வாய்ப்பைப் பறித்தால் நீ மிகவும் ஏமாற்றம் அடைவாய், அதனை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என்று பெருந்தன்மையோடு கூறியதை நினைவுகூர்ந்தார்.
 
 
படம்: அடிமைப் பெண்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா
 
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
 
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
இல்லை உறக்கம் ஓரே மனம் என்னாசை பாராயோ?
என்னுயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ?
 
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
 
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை என்தன் கை தழுவ
கார்குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
 
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
 
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்க வேர்த்து நின்றாள்
பொய்கை எனும் நீர்மகளும் பவாடை போர்த்திருந்தாள்
தென்றலெனும் காதலனின் கைவிலக்கவேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ?
அந்த நிலையில் அந்த சுகத்தை நானுணரக் காட்டாயோ?
 
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவைதேட புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

AKR

unread,
Jul 26, 2009, 12:57:48 PM7/26/09
to il...@googlegroups.com
வேதாந்தமும் சித்தாந்தமும் நாம் வாழ்வில் படும் துன்பங்களால் ஏற்படும் துயரங்களை மறந்து, இயற்கையின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து, தொடர்ந்து மன அமைதியுடன் வாழத் துணைபுரிகின்றன. உண்மையாய் உழைத்து, தன் கடமைகளைச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து, தன்னை நம்பியவர்களைக் காப்பதில் உறுதியாக நிற்பவனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்படும் இடர்களை நீக்க தெய்வம் உற்ற துணையாக நிற்கும். அவனது நண்பர்களும், உற்றார், உறவினர் முதலான யாவரும் அவனுக்கு முன்வந்துதவுவர். அவன் சமுதாயத்தில் அனைவராலும் தொடர்ந்து மதிக்கப்படுவான்.
 
தன் கடமைகளை மறந்து, வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குமே பிறரது தயவை எதிர்நோக்கி சோம்பேரியாக வாழும் சிலர் நாவில் இவ்வேதாந்தமும் சித்தாந்தமும் சிக்கித் தவிப்பதுண்டு. முற்றும் துறந்த ஞானியர் போல் தத்துவங்களை அள்ளி வீசுவதில் இத்தகையவர்கள் உண்மை ஞானிகளை விடவும் வல்லவர்களாக விளங்குவதுண்டு. இத்தகைய வீணர்களுக்கு தெய்வமும் உதவாது, பிறரும் அவனை மதிக்க மாட்டார்கள். தன் தவறுகளை உணர்ந்து நல்வழியில் உழைத்து வாழ அவன் முயலாதவரை அவனது வாழ்வு பெரும்பாலும் துயரமானதாகவே அமையும்.
 
அத்தகையதொரு கதாபத்திரத்தை இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் 1975ஆம் ஆண்டு வெளிவந்த தனது "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் அமைத்தார். அக்கதாபாத்திரத்தில் ஜெய்கணேஷ் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். இவர் பாடுவதாக அமைந்த ஒரு பாடலை ஜெசுதாஸ் அவர்கள் பாடியுள்ளா. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் 1964ஆம் வருடம் வெளிவந்த "பொம்மை" எனும் திரைப்படத்தில் வரும் "நீயும் பொம்மை, நானும் பொம்மை" என்று பிச்சைக்காரன் ஒருவன் பாடுவதாக அமைந்த பாடலைப் பாடி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜேசுதாஸ் அதன் பின்னர் தமிழ்ப் படங்களில் நீண்ட காலத்துக்குப் பின்னர் தன் இசைப்பயணத்தைத் தொடர ஒரு படிக்கல்லாக அமைந்தது "தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு" எனும் அவள் ஒரு தொடர்கதை திரைப்படப் பாடல்.
 
 
அவள் ஒரு தொடர்கதை

கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
கே.ஜே. ஜேசுதாஸ்
 
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
 
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? ஆ..
நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா? - இல்லை
என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா?
தெய்வம் செய்த பாபம் இது போடி தங்கச்சீ
கொன்றால் பாபம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
 
ஆதி வீடு அந்தம் காடு இதில்
நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
 
வெறும் கோவில் இதிலென்ன அபிஷேவம் உன்
மனமெங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
 
கொண்டதென்ன கொடுப்பதென்ன - இதில்
தாயென்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதையென்ன?
 
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
தெரியாமல் போனாலே வேதாந்தம்
மண்ணைத் தோண்டித் தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
 
உண்மை என்ன பொய்மை என்ன இதில்
தேனென்ன கடிக்கும் தேளென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருளென்ன நீ வந்த கதை என்ன?
 
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு
Reply all
Reply to author
Forward
0 new messages