ஆழ்வார்குறிச்சி
: கடையத்தில் நடந்த மேல்நிலைப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து
போட்டியில் வி.கே.புரம் புனித மரியன்னை பள்ளி முதலிடம் பெற்று
சுழற்கோப்பையை வென்றது.
கடையம்
கால்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி விழா,
பரிசளிப்பு விழா மற்றும் முழுமதி விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்
விழா நடந்தது. கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி புல்வெளி
மைதானத்தில் நடந்த 6ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சுழற்கோப்பைக்கான
கால்பந்து போட்டியில் 16 பள்ளி அணிகள் கலந்து கொண்டனர்.
மூன்று
நாட்கள் நடந்த இப்போட்டிகளில் வி.கே.புரம் புனித மரியன்னை
மேல்நிலைப்பள்ளியும், பாப்பாகுடி நியூ லைப் அணியும் மோதியதில் வி.கே.புரம்
புனித மரியன்னை பள்ளி சுழற்கோப்பையை வென்றது. இரண்டாமிடத்தை பாப்பாகுடி
நியூ லைப் அணியும், மூன்றாமிடத்தை கடையம் சத்திரம் பாரதி பள்ளியும்
பெற்றது. போட்டிக்கு நடுவராக வராகபுரம் சுந்தர், சாத்தூர் சரவணன்,
முதலியார்பட்டி முருகன், தென்காசி ஜான், கடையம் ரிமா, மணி ஆகியோர்
செயல்பட்டனர்.
பின்னர்
நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர்
ஜோதிசற்குணம் தலைமை வகித்தார். தலைமையாசிரியர்கள் குமரன், டேனியல், மூத்த
கால்பந்து வீரர்கள் ஆர்.பி.நடராஜன், டி.எஸ்.எம்.ரவீந்திரன் முன்னிலை
வகித்தனர். கோவிந்தபேரி ஞானம் மறவா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஸ்டீபன்
வரவேற்றார்.
இலஞ்சி
ஆர்.பி.பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் கல்யாணி சிவகாமிநாதன் வாழ்த்தி
பேசினார். கடையம் பஞ்., தலைவர் சண்முகம், டாக்டர் நிம்ராட், தயாள்
இசக்கிநாராயணன் ஆகியோர் மாவட்ட விளையாட்டு அதிகாரி சேவியர்
ஜோதிசற்குணத்திற்கு விளையாட்டு சிற்பி, பாரதி லயன்ஸ் சங்க தலைவர்
சண்முகவேலுவிற்கு சமுதாய சிற்பி விருது வழங்கினர்.
கால்பந்து
போட்டியில் இரண்டாமிடம் பெற்ற பாப்பாகுடி நியூலைப் பள்ளிக்கு கல்யாணி
சிவகாமிநாதனும், மூன்றாமிடம் பெற்ற கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்
பள்ளிக்கு முன்னாள் ராணுவவீரர் குணவரதனும் பரிசுகள் வழங்கினார்.
அரசு
பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற கடையம் சத்திரம் பாரதி
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எபினேசர்பால், மாரிசெல்வம், ஜெகன், மகேஸ்வரன்,
ரமேஷ்கனி, சாம், மணிகண்டன், வீரபுத்திரன், வெய்க்காலிபட்டி புனித ஜோசப்
உயர்நிலைப்பள்ளி மாணவிகள் லூசிசெல்வா, திவ்யா, மாலதி, ஆஸ்வின் பென்னோலா,
பக்யா, மகேஸ்வரி ஆகியோருக்கு முழுமதி விருதினை மாவட்ட விளையாட்டு அதிகாரி
சேவியர் ஜோதிசற்குணம் வழங்கினார்.
கடையம்
சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற
ஜெகன், 10ம் வகுப்பில் முதல் இரு இடங்கள் பெற்ற முத்துராஜ்,
ராமசுப்பிரமணியன், எட்வேர்பாசில், சத்திரம் பாரதி மகளிர் உயர்நிலைப்பள்ளி
மாணவிகள் ஜூலியானா ஜெனிபர், கனிமொழி, சிவகாமி ஆகியோருக்கு சிறப்பு
பரிசுகள் வழங்கப்பட்டது. கடையம் கால்பந்து கழகம் தங்கராஜ், முப்புடாதி,
சுந்தர், சரவணன், மணிகண்டன், கெங்கமுத்து, இசக்கிமுத்து, தங்கராஜ், ஹரி
ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரிமா
நன்றி கூறினார். முப்பெரும் விழா ஏற்பாடுகளை மூத்த கால்பந்து வீரர்கள்
ஆர்.பி.நடராஜன், டி.எஸ்.எம்.ரவீந்திரன், எஸ்.பி.குணவரதன் மேற்பார்வையில்
கால்பந்து கழக தலைவர் மெரிபால், செயலாளர் கிறிஸ்துதாஸ், பொருளாளர்
ஜெயராஜ், துணைத் தலைவர்கள் ஸ்டீபன், பிரபாகரன், தாமஸ், துணைச் செயலாளர்
ரிமா, கண்ணன் உறுப்பினர்கள் தளவாய், அருள், வினோத், பிரகாஷ், சதிஷ்
ஆகியோர் செய்திருந்தனர்.
ஊட்டி : "இலவச தொழிற்கருவி வழங்கும் திட்டத்துக்கு, பயனாளிகள் விண்ணப்பிக்க வேண்டும்' என அழைப்பு விடப்பட்டுள்ளது.
மாவட்ட
கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ
ஆதிதிராவிடர்கள், தொழிற்கல்வி பயின்று தொழில் செய்ய ஆர்வம் உள்ளோருக்கு,
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச தொழிற்கருவி வழங்குவதற்கான திட்டம்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வறுமைக்
கோட்டுக்கு கீழ் வசிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்
மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரிப் பெட்டி,
தச்சுக்கருவிகள், ஊட்டி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட
உள்ளதால், தகுதியானவர்கள், சாதி, வருமானம் இருப்பிடம் மற்றும் தொழிற்கருவி
பெற்றதற்கான சான்றுகளுடன், "மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர், ஊட்டி' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, மாவட்ட
கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் சத்திரிய மகளிர் பள்ளிகளின் நூற் றாண்டு நிறைவு விழா இன்று
முதல் துவங்கி நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இன்று சத்திரிய மகளிர் மேல்
நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள கலையரங்கில் காலை 10 முதல் 12 மணி வரை ஓய்வு
பெற்ற தலைமை ஆசிரியைகள் மற்றும் ஆசிரியைகளை பாராட்டி கவுரவித்தல்.
எஸ்.என்.பி.
ஜெயசிங் தலைமை
வகிக்கிறார். பேராசிரியை பெரியதாய் வாழ்த்திப் பேசுகிறார். ஜூலை 23ல்
காலை 10 முதல் 12 மணிவரை சாதனை படைத்த பழைய மாணவிகளை பாராட்டி
கவுரவித்தல். தொழிலதிபர் பிரபாகர் தலைமை வகிக்கிறார்.ஜூலை 24 ல் காலை 10
முதல் 12 மணி வரை சேவை புரிந்த முன்னாள் நிர்வாகிகளைப் பாராட்டி
கவுரவித்தல்.முன்னாள் எம்.எல்.சி., ஆனந்தம் தலைமை வகிக்கிறார்.சுகி. சிவம்
சிறப்புரையாற்றுகிறார். ஏற்பாடுகளை சத்திரிய மகளிர் பள்ளிகளின் நிர்வாக
குழுவினர் செய்துள்ளனர்.