தாமிரபரணி மகாத்மியம் நூல் கிடைச்சதும் தான் எழுதணும்னு நினைச்சேன் நவ திருப்பதி பத்தி. ஆனால் புத்தகம் எங்கேயுமே கிடைக்கலை. போயிட்டு வந்து இரண்டு வருஷம் ஆயிடுச்சு. அப்போ எழுதி வச்ச குறிப்புகளும் கிடையாது. கொஞ்சம் நினைவில் இருந்தும், மற்றவை தலங்களின் வரலாற்றில் இருந்துமே எழுதணும். தாமிரபரணி மகாத்மியம் பற்றி ஒரு தளமே இருக்குங்கற தகவலும் பலமாதங்கள் முன்னால் கிடைச்சது. ஆனால் அதிலே விபரங்கள் அதிகமாய் அப்போ இல்லை. இப்போச் சேர்த்திருக்காங்க. முக்கியமாய் வைகாசி விசாகம் அன்னிக்குத் தாமிரபரணி நதியின் பிறந்தநாள்னு சொல்றாங்க. அது பற்றிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கலை. தேடறேன். தாமிரபரணி மகாத்மியம் புத்தகம் வெளியீட்டு விழா நடந்ததாய் தினமலர் செய்தி மட்டும் கிடைச்சது. இந்த வருஷம் தாம் மார்ச் பத்தாம் தேதி நெல்லையப்பர் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் நிகழ்ச்சி நடந்து புத்தக வெளியீடும் நடந்திருக்கின்றது. கூடிய சீக்கிரம் புத்தகம் வாங்கிடலாம்னு நம்பிக்கை வந்திருக்கு. அதுக்கு முன்னாலே தாமிரபரணி நதி பற்றிச் சில முக்கியமான தகவல்களைப் பார்க்கலாமா?
இதிலே அகத்தியர் இருந்த மலையை ஏக பொதிகை எனச் சொல்கின்றனர். அகத்தியர் வாழ்ந்த குகையும் அங்கே இருப்பதாயும், இன்னமும் அகத்தியர் மிகச் சிலர் கண்களுக்குத் தென்படுவதாயும் சொல்கின்றனர். திருக்குற்றாலத்தில் தேனருவிக்கு மேலே பழங்காலத் தமிழ் வட்டெழுத்துக்கள் உள்ள கல்வெட்டு இருப்பதாயும் தெரிய வருகின்றது. பாணதீர்த்தம் என்பதே இங்கே குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தீர்த்தம் ஆகும். அது பாபநாசம் மேலணைக்கும் மேலே இருக்கிறதாய்ச் சொல்கின்றனர். சரியான வழிகாட்டுதல் இல்லாமையாலும், நேரக் குறைவாலும் மேலே செல்லவில்லை நாங்கள். கீழே உள்ள பாபநாசம் கோயிலுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அது பற்றிப் பின்னால். பாணர்களின் தாகம் தீர்த்ததால் பாணதீர்த்தம்னு சொல்வதாய்க் கேள்விப் படுகின்றோம். என்றாலும் உண்மையான பெயர்க்காரணம் இதுவாய் இருக்காதோ என்றும் தோன்றுகின்றது.
இந்தப் பாண தீர்த்தத்துக்கு அருகே உள்ள கல்யாணி தீர்த்தத்திலே மஹாவிஷ்ணு, ஆஞ்சநேயர், அகத்தியர் ஆகியோருக்கு உருவச் சிலைகள் இருக்கின்றனவாம். இந்தப் பாணதீர்த்தத்துக்கு மேலே உள்ள மொட்டை மேடு என்னும் இடம் துலுக்க மொட்டை என அழைக்கப் படுவதாயும், இதற்கும் மேலே உள்ள பூங்குளமே தாமிரபரணி என்னும் பொருநை பிறக்கும் இடம் எனவும் சொல்கின்றனர். இந்தப் பூங்குளத்தில் இருந்தே தாமிரபரணி பாணதீர்த்தத்துக்கு வருகின்றது. இரு பருவ மழைக்காலங்களிலும் நீர்ப்பிடிப்பு வசதி இருப்பதால் இங்கே கடுங்கோடைக் காலத்திலும் நதியில் நீர் ஓடிக் கொண்டிருக்கும். தாமிரபரணி நதி புறப்படும் இடத்தில் இருந்து கடலில் சென்று கலக்கும் இடம் வரைக்கும் கிட்டத் தட்ட எண்பது மைல்களுக்கு ஓடுகின்றது. நடராஜன் கல்பட்டு.
On May 23, 10:30 am, gayathri gayathri <astrogayat...@gmail.com>
wrote:
விண்ணில் இருந்து நேரே பூமிக்கு வரும் அம்பைப் போல் நீர் விழுவதால் வானதீர்த்தம் என்றும் பாணதீர்த்தம் எனவும் பெயர்க்காரணம் சொல்கின்றனர். இங்குதான் சாஸ்தா கோயில் இருப்பதாயும், சொரிமுத்தையனார் கோயில் எனப்படும் இதுதான் சாஸ்தா கோயில்களிலேயே முதன்மையானது எனவும் தாமிரபரணி நதியின் நடுவில் இது அமைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். கோயிலைச் சுற்றித் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் எனவும் தைமாத அமாவாசை மற்றும் ஆடி அமாவாசைகளில் இங்கே வழிபாடு சிறப்பு எனவும் சொல்லப் படுகின்றது.
உலகம்மைக்குத் திருவிளையாடல் புரியும் எண்ணம் வந்துவிட்டது. நமசிவாயக் கவிராயரின் புகழையும் உலகோர் அறியச் செய்யவேண்டும். ஆகவே வெற்றிலைக் காவி எச்சில் பட்ட அந்த ஆடையுடனேயே அம்பாள் சென்று மறைந்தாள். மறுநாள் காலை அர்ச்சகர் கோயிலுக்கு வந்து அம்பாளின் முதல்நாள் அலங்காரத்தைக் களைய முற்படுகையில் ஆடையில் படிந்திருந்த வெற்றிலைக் காவி எச்சில் திவலைகளைக் கண்டு யாரோ, நாத்திகனோ என்னமோ இவ்வாறு செய்திருக்கின்றானே என மனம் வருந்தினார். மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உடனே பிராயச் சித்தம் செய்ய அர்ச்சகருக்குக் கட்டளை இட்டுப் பின்னர் இந்தப் படுபாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிக்கவேண்டும் எனக் கூறி அவ்வாறே நாடெங்கும் தெரியப் படுத்தினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி நமசிவாயக் கவிராயரைப் பற்றிக் கூறி, இது அவரறியாமல் நடந்த ஒன்று என நடந்ததைக் கூற, மன்னன் மறுநாள் காலை கவிராயரை அவைக்கு வரவழைத்தான். என்னதான் அம்பிகையே கனவில் வந்து சொல்லி போயிருந்தாலும் மன்னன் கவிராயரின் பக்தியை அளவிட எண்ணினான்.
தாமிரபரணியின் புகழை விளக்கும் தாமிரபரணி மகாத்மியம் ஓலைச்சுவடியில், பகவானின் கடைசி முக்கிய அவதாரம் ஆன கல்கி அவதாரம் தாமிரபரணிக்கரையில் தான் ஏற்படப் போவதாய்ச் சொல்லுகின்றது எனக் கூறுகின்றனர். ஸ்ரீமத் பாகவதம் இதைக் கூறி உள்ளது. தமிழில் இந்த மகாத்மியத்தை மொழிபெயர்த்து வெளியிடப் பல்வேறு அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றது. எந்த அளவுக்கு வெற்றி கிட்டி உள்ளது எனத் தெரியவில்லை. 
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள ஒரே ரிஷியான அகத்தியர் மூலம் தமிழ் மொழி சிறப்புப் பெற்றதால் தமிழின் பெருமை வேதங்களுக்கு எல்லாம் மூத்தது எனக் கூறப் படுகின்றது. ஸ்ரீசங்க யோகி வீரசேன மன்னனுக்கு உபதேசிக்கப் பட்டது ஸ்ரீ தாமிரபரணி மகாத்மியம். அதை ஸ்ரீவேத வியாசர் தன் புத்திரனும், பிறவி ஞானியும் ஆன சுகருக்கு உபதேசித்தார். தேவி மகாத்மியமும் தாமிரபரணி மகாத்மியமும் ஒன்றே எனக் கூறுகின்றார்கள். (இது பற்றி நன்கு அறிந்தவர்கள் விளக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன்.)ராமரே, உங்க ஊரைப் பத்தி எழுதி இருக்கேன்,கட்டாயமாய்ப் பின்னூட்டம் தேவை ![]()
![]()
![]()
![]()
![]()
ஸ்ரீவைகுண்டத்திலே இருந்து ஆரம்பிக்கிறோம் நாம. ஆனால் நாங்க முதல்லே அங்கே போகலை. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிமீ தூரத்திலும் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்கென ரயில் நிலையமும் இருக்கின்றது. சாலை வழியாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து, திருச்செந்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடிக்குப் போக முடியும். தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்குப் பல முறை செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடைசியாய்ப் போனது 2007 பெப்ரவரியில். இங்கே உள்ள தீர்த்தம் பிருகு தீர்த்தம் என அழைக்கப் படுகின்றது. இது தவிர தாமிரபரணியில் நீராடுவதும் சிறப்பு.
காலதூஷகன் என்னும் திருடன் ஒருவன் கொள்ளை அடித்து வாழ்ந்து வந்தான். அவன் தன்னோட கொள்ளைப் பணத்தில் பாதியை ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாளுக்குக் கொடுப்பதை வழக்கமாய் வைத்திருந்தான். ஒருமுறை கொள்ளை அடிக்கும்போது அரசனின் காவலர்களால் பிடிக்கப் பட்டான். கடவுளை நிந்தித்தான். கடவுளே, என்னோட கொள்ளையில் உனக்கும் பங்கு சரிபாதியாய்க் கொடுத்துட்டுத் தானே வரேன். என்னை இப்படிப் பிடிச்சுக் கொடுத்துட்டியேனு மனம் நொந்தான். சரி, போகட்டும், இப்போ என் கிட்டே இருக்கிற எல்லாமும் உனக்கே தான் கொடுத்துடறேன். என்னை எப்படியாவது இந்த ராஜ தண்டனையிலே இருந்து காப்பாத்துனு அவனைச் சரணடைந்தான். பார்த்தார் பெருமாள். இந்தத் திருடனுக்கு ஞானம் உதயம் ஆகும் நேரம் வந்தாச்சு. அரசனுக்கும் இவனைப் பத்திப் புரியணும், அதே சமயம், இவனையும் காக்கவேண்டும். திருடனுக்கு ஞானமும் வரவேண்டும் என எண்ணிய ஈசன் கள்ளனைப் போல வேடம் தரித்து மன்னனிடம் சென்றார்.
இந்த ஸ்ரீவைகுண்டத்தின் மற்றொரு சிறப்பு, நம்மாழ்வார் இங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாள் ஆழ்வார் திருநகரியில் இருந்து வந்து கலந்து கொண்டு காலையில் மங்களாசாசனமும், திருமஞ்சனம், கோஷ்டி போன்றவற்றிலும் கலந்து கொண்டு, மாலையில் நம்மாழ்வாருக்குரிய அன்னவாகனத்திலும், பொலிந்து நின்ற எம்பிரான் கருட வாகனத்திலும் திருவீதி உலா வந்து மறுநாள் நம்மாழ்வார் மங்களாசாசனம் பெற்று விடைபெற்றுச் செல்லும் காட்சியும் கண்கொள்ளாக் காட்சி என்று சொல்லுகின்றனர். ஆனால் கூட்டத்தில் எப்படிப் பார்க்க முடியும்? புரியலை. சாதாரண நாட்களில் சென்றால் பெருமாளை திவ்ய தரிசனம் செய்யலாம்.
ஸ்ரீ
வைகுண்டத்திற்குக் கிழக்கே, தூத்துக்குடி செல்லும் வழியில், ஒரு மைல்
தொலைவுக்குள்ளாக தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள திருத்தலம் வரகுணமங்கை
என்னும் நத்தம் ஆகும். பெருமாளின் பெயர் விஜயாசனர். தாயார் வரகுணவல்லி.
விமானம் விஜயகோடி விமானம் என அழைக்கப் படுகின்றது. நம்மாழ்வாரால்
மங்களாசாசனம் செய்யப் பட்ட இந்த ஊரில் அக்னி பிரத்யக்ஷம் என்று சொல்லப்
படுகின்றது. இறைவன் கிழக்கே பார்த்துக்கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில்
இருக்கின்றார். அக்னி பகவானுக்குப் பிரத்யக்ஷமாய்க் காக்ஷி அளித்ததைத்
தவிர, உரோமச முனிவருக்கும், சத்யாவனுக்கும் காக்ஷி கொடுத்தார் எனச்
சொல்லப் படுகின்றது.
திருக்குளந்தை தரிசனம் செய்யணும். பெருமாளைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிட்டு அவர் மருமகன் ஆன முருகனைப் பார்ப்போமா?? இப்போத் தானே முருகன் கோயில் கும்பாபிஷேஹம் ஆச்சு?? அதாங்க திருச்செந்தூரிலே! எங்க நவ திருப்பதிப் பயணத்தில் முதல்நாள் பயணத்தில் திருச்செந்தூர் போனோம்னு சொன்னேன் இல்லை. இப்போ திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேஹம் சென்ற வாரம் நடைபெற்றதை அனைவரும் அறிவார்கள். கும்பாபிஷேஹத்தை ஒட்டியே பதிவு எழுத நினைச்சும் பல்வேறு காரணங்களால் எழுத முடியவில்லை. தாமதமாகி விட்டது. அறுபடைவீடு என்று சொல்லப்படும் முருகனுக்குரிய படைவீடுகளில் இரண்டாம்படைவீடு திருச்செந்தூர் ஆகும். உண்மையில் இது ஆற்றுப்படை வீடு. ஆற்றுப் படுத்துதலே ஆற்றுப்படை என வழங்கப் பட்டு, நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முருகனை நாயகனாய் வைத்து எழுதினார் என்பதையும் நாம் அறிவோம். இந்த இடத்தில் மனித மனத்தை ஆற்றுப்படுத்தி நல்வழியில் திருப்பி வீடு பேறு அடையச் செய்வதே ஆற்றுப்படையைக் குறிக்கும். யோக முறையில் நம் உடலில் உள்ள ஆறு ஆதாரங்களையும் முருகன் குடி கொண்டிருக்கும் ஆறு வீடுகளாய் எடுத்துக் கொண்டால், அவை நம்மை யோக முறையிலேயே ஆற்றுப்படுத்தி வீடுபேறு அடையச் செய்கின்றது. இவ்வகையில் அமைந்துள்ள இரண்டாம் ஆதாரமான சுவாதிஷ்டானத்துக்கு உரிய இரண்டாம் ஆற்றுப்படையான திருச்செந்தூரிலே சூரனை முருகன் சம்ஹாரம் செய்ததாகச் சொல்லப் படுகிறது. இந்தத் தலம் திருநெல்வேலியில் இருந்து 54 கிமீ தொலைவில் உள்ளது. கோபுரம் ஒன்பது தளங்களோடு 130 அடியில் அமைந்துள்ளது.
இந்தத் தலம் மற்ற முருகன் தலங்களைப் போலல்லாமல் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப் பட்டது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆகவே சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில் எனலாம். புறநானூற்றில் இந்தக் கோயிலை வெண்டலைப் புனரி அலைக்குடம், செந்தில் நெடுவேள் துறை என அழைக்கப் பட்டுள்ளது. முருகன் இங்கே ஆற்றுப் படுத்தப் பட்டு, சிவனையும் வழிபட்டதாகக் கந்தபுராணம் சொல்லுகின்றது. முருகன் வழிபட்ட சிவலிங்கம் மூலஸ்தானத்திற்குப் பின்னால் ஐந்து லிங்கங்களாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கே பார்க்கிறது?? கூட்டமோ கூட்டம்! சாதாரண நாட்களிலே வழிகிற கூட்டம். தரிசனம் கிடைச்சாலே அதிர்ஷ்டம்னு சொல்லணும். நாங்க போனது தைப்பூசம் சமயம் வேறே. முதல்முறை திருச்செந்தூர் போனது எண்பதுகளின் கடைசியில்.
அப்போ எல்லாம் நான் பெரிய எழுத்தாளி ஆகப் போறது தெரியாததாலே பல விஷயங்களைத் தோண்டித் துருவிப் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சுப் பார்த்தும் ,குறிச்செல்லாம் வச்சுக்கலை. இரண்டாம் முறையாகச் சென்றது தான் 2007-ம் வருஷம் இந்த நவ திருப்பதி, நவ கைலாயம் பயணத்தோடு சேர்ந்து. முதல்முறை முருகனை நன்கு பார்த்ததோடு இலை விபூதியும் தாராளமாய்க் கிடைச்சது. இப்போ இலை விபூதி கொடுப்பதை அரசு வாரம் ஒருநாளோ, இரண்டு நாளோ எனக் கட்டுப்பாடு செய்திருப்பதாகவும், அதுவும் அறநிலையத் துறை அலுவலகம் மூலமே வாங்க முடியும் எனவும் சொன்னார்கள். ரொம்ப ஏமாற்றம் மட்டுமில்லாமல் வருத்தமாகவும் இருந்தது. விபூதிக்குக் கூட அரசு அனுமதி கொடுக்கவேண்டி இருக்கேனு நினைச்சா வேதனை. எங்க வண்டி ஓட்டுநர் சிறப்புச் சீட்டு எடுத்தாலும் கூட்டத்திலே உள்ளே போகிறது கஷ்டம்னும், அங்கே உள்ள போத்திமார்கள் யாரையாவது பிடிச்சு, பணம் தரதாகச் சொல்லிப் பார்த்துட்டு வருமாறும் சொல்லவே, சரினு யாரையோ பிடிச்சோம். முகம் நினைவில் இல்லை. ஆனால் அவர் எங்களைத் திரும்பி வரும் கூட்டத்தில் எதிரிட்டு அழைத்துச் சென்றார். சரிதான், இன்னிக்கு அதோகதி தான் நம்ம பாடுனு நினைச்சேன். ஆனால் அந்தச் சுருக்கு வழியில் சீக்கிரம் மூலஸ்தானம் வந்துடுச்சு. போய் ஸ்வாமி தரிசனம் அவசரம் அவசரமா, மனசிலேயே நிக்காமல் பண்ணினோம்.
உண்மையாகவே பெரிய குளத்தைச் சுற்றிக் கொண்டுதான் போகணும்,
திருக்குளந்தைக்கு. வழி நெடுக வாழைத் தோப்புகள். விதவிதமாய் வாழை பயிரிடப்
பட்டுள்ளது. நல்ல பசுமை! குளிர்ச்சியாகவும் இருந்தது கண்ணுக்கும், மனதுக்கும். நாம்
போய் தரிசிக்கப் போவதும் அந்தப் பச்சை மாமலைபோல் மேனியானைத் தானே! இந்தக் கோயிலின்
மூர்த்திக்கு மாயக் கூத்தன் என்ற பெயர். இவரைப் பற்றி நம்மாழ்வார் பாடி
இருப்பதாவது:
திருப்புளிங்குடி என இருக்க வேண்டும்;
புளியங்குடி வேறு ஊர்; ஸ்ரீவில்லிபுத்தூர் - தென்காசிக்கு இடையில்.
தற்போது இயற்கை வேளாண்மைக்கு மையமாக விளங்குகிறது.
புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே
என்னையாள் வாயெனக்
கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்
சிவப்பநீ காணவா ராயே !
எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே,
இமையவர்
தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத்
தண்திருப்
புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள்
இருந்திடாய்
எங்கள்கண் முகப்பே !
தேவ்
திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே இந்தக் கோயில் இருப்பதால் திருச்செந்தூர் செல்லும் போதே இந்தக் கோயிலைத் தரிசித்துவிட்டே சென்றோம். திருச்செந்தூரில் நடை சார்த்த நேரம் ஆகும் என்பதாலும், இந்த மாதிரி கிராமங்களின் சிறு கோயில்கள் சீக்கிரம் மூடிவிடுவதாலும் , திருச்செந்தூரில் இருந்து திரும்ப வரும்போது பார்க்கமுடியுமோ என்ற எண்ணத்தாலும் போகும்போதே சென்றோம். இந்த நவதிருப்பதிகள் அனைத்துமே டிவிஎஸ் நிர்வாகத்தினரின் உதவியோடு நிர்வாகமும், பக்தர்களுக்கு தரிசன வசதிகளும் மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. கோயில்களும் சுத்தமாய்ப் பராமரிக்கப் படுகின்றன. பொதுவாகத் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்ட மக்களே கொஞ்சம் சுத்தம் பராமரிக்கப் படுவதில் ஆர்வம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். பெரும்பாலும் வடமாவட்டங்களில் காணப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், அங்கே குறைவாகவே காணமுடிகிறது. சாலைப் பராமரிப்பும் மிகவும் சுகமாய் இருக்கிறது. ஆகையால் பயணமும் செளகரியமாகவே அமைந்தது. ஓட்டுநரும் கோயில்கள் பற்றிய தகவல்களை நன்கு அறிந்தவராய் இருந்ததால் வசதியாகவும் இருந்தது.- நம்மாழ்வார்
நானக் கருங்குழல் தோழி மீர்காள்! அன்னை யர்காள்!அயல் சேரியீர்காள்,
நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன் என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,
தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ் தெந்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்த துவே.
செங்கனி வாயின் திறத்த தாயும் செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,
சங்கொடு சக்கரம் கண்டு கந்தும் தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,
திங்களும் நாளும் விழாவ றாத தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ! நாணும் நிரையு மிழந்த துவே.
இழந்தவெம் மாமை திறத்துப் போன என்னெஞ்சி னாருமங் கே ஒழிந்தார்,
உழந்தினி யாரைக்கொண் டெனு சாகோ? ஓதக் கடலொலி போல எங்கும்,
எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு தெந்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன் அன்னையர் காள் !என்னை யென்மு
னிந்தே.
முனிந்து சகடம் உதைத்து மாயப் பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,
கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,
முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள் ! முன்னி யவன்வந்து வீற்றி
ருந்த,
கனிந்த பொழில்திருப் பேரெ யிற்கே காலம் பெறவென்னைக் காட்டு மினே.
காலம் பெறவென்னைக் காட்டு மின்கள் காதல் கடலின் மிகப் பெரிதால்,
நீல முகில்வண் ணத்தெம் பெருமான் நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,
ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த நான்மறை யாளரும் வேள்வி யோவா,
கோலச் செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல்திருப் பேரெ யிற்கே.
பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,
பேரெயிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப் பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,
ஆரை யினிங் குடையம் தோழி! என்னெஞ்சம் கூவ வல்லாரு மில்லை,
ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது? என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே.
கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டென்தி
றத்துக்கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில்
தோழீ,
மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தென்திருப் பேரெயில் சேர்வன் சென்றே.
சேர்வன்சென் றென்னுடைத் தோழி மீர்காள்! அன்னையர் காள்! என்னைத் தேற்ற
வேண்டா,
நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு? நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,
கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,
ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத் தென்திருப் பேரெ யின்மா நகரே.
நகரமும் நாடும் பிறவும் தேர்வேன் நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,
சிகரம் அணிநெடு மாடம் நீடு தென்திருப் பேரெயில் வீற்றி ருந்த,
மகர நெடுங்குழைக் காதன் மாயன் நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,
நிகரில் முகில்வண்ணன் நேமி யானென் னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே?
ஊழிதோ றூழி யுருவம் பேரும் செய்கையும் வேறவன் வையங் காக்கும்,
ஆழிநீர் வண்ணனை யச்சு தனை அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,
கேழிலந் தாதியோ ராயி ரத்துள் இவைதிருப் பேரெயில் மேய பத்தும்,
ஆழியங் கையனை யேத்த வல்லார் அவரடி மைத்திறத் தாழி யாரே.
* * * *
அருளிச் செயலில் திருப்பேரை என்றில்லை; திருப்பேரெயில் என அழைக்கப்
படுகிறது.
சைவத் துறையில் ‘திருப்பேரெயில்’ ஒரு பாடல் பெற்ற தலம் - ஐந்தாம்
திருமுறை.
(தற்போது ஓகைப்பேரையூர் என்றும், வங்காரப் பேரையூர் என்றும்
வழங்கப்படுகிறது)
சீரும், எதுகையும் நன்கு விளங்குமாறு அமையவில்லை; வரி உடைகிறது.
தேவ்

திருக்குருகூர் தனிச் சிறப்புப் பெற்ற தலம். இதுவும் நெல்லை திருச்செந்தூர் சாலையில் தான் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்திற்குக்கிழக்கே கிட்டத் தட்ட ஐந்து கிமீ தூரத்தில் தாமிரபரணியின் தென்கரையில் உள்ளது. பெருமான் ஆதியில் இங்கே தான் ஆசை கொண்டு இருந்தபடியால் அவர் பெயரும் ஆதிநாதர். நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். கிழக்கே பார்த்துக் கொண்டு “பொலிந்து நின்ற பிரான்” என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு கோவிந்த விமானத்தின் கீழ் அருள் பாலிக்கிறார். தாயார் ஆதிநாயகி, குருகூர் நாயகி. பிரம்மாவிற்குப் பிரத்யட்சம் எனச் சொல்லப் படும் இந்த க்ஷேத்திரம் நம்மாழ்வாரின் திரு அவதாரத்தின் பின்னே ஆழ்வார்திருநகரி என்ற பெயரிலேயே வழங்கப் படுகிறது. ஹரி க்ஷேத்திரங்களுள் ஸ்ரீமந்நாராயணன் இங்கேயே முதன் முதல் அவதரித்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ நம்மாழ்வாரின் அவதார மகிமை பற்றிப் பார்ப்போமா??
குழந்தை பிறந்தாச்சு. குழந்தை அழணுமே? ஆனால் அழவே இல்லை, பால் குடிக்கணுமே? தாயிடம் பால் குடிக்கவும் இல்லை. எந்தவிதமான உணவும் எடுக்கவில்லை. இது என்ன அதிசயக் குழந்தை? இதை எவ்வாறு வளர்ப்பது? புரியாமலேயே கலங்கிப் போன காரியாரும், உடைய நங்கையும் குழந்தை பிறந்த பனிரண்டாம் நாள் குழந்தையை ஆதிநாதர் சந்நதிக்கு எடுத்துச் சென்றனர். அங்கே அக்குழந்தையை ஆதிசேஷனின் அவதாரமாய்த் தோன்றி இருக்கும் புளிய மரத்தடியில் விட்டுச் செல்லுமாறு தோன்ற அவ்வண்ணமே செய்தனர். குழந்தை ஏன் இவ்விதம் பிறந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை, புரியவில்லை. பின்னாட்களிலேயே தெரிய வந்தது.
மணவாள மாமுனிகள்
ஆயிரம் பாடல்களையும் அறிய முற்பட்ட நாதமுனிகளுக்கு அவை கிடைக்கவில்லை. பாடிக் காட்டியவர்களுக்கும் சரிவரத் தெரியவில்லை. இதன் மூலத்தை அறிய வேண்டி திருக்குருகூர் வந்தார் நாதமுனிகள். அங்கே மதுரகவி ஆழ்வாரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த சிலர் மதுர கவி ஆழ்வார் நம்மாழ்வாரைக் குறித்துப் பாடிய பதினொரு பாடல்களைத் தந்து, நாதமுனிகளை, அந்த உறங்காப்புளிய மரத்தினடியில் அமர்ந்து நம்மாழ்வாரைத் தியானித்து, இந்தப் பதினொரு பாசுரங்களையும் பனிரண்டாயிரம் முறைகள் நியமங்களை அனுசரித்துச் ஒன்னால் நம்மாழ்வாரே விரும்பியதை அருள்வார் எனச் சொல்ல, நாதமுனிகளும் அவ்வண்ணமே தாமிரபரணியில் நீராடி உறங்கப்புளிய மரத்தடிக்கு வந்து அமர்ந்தார். பனிரண்டாயிரம் முறைகள் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்களைப் பாடினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி, “உமக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்க, ஆயிரம் பாசுரங்களையும் கொடுத்தருள வேண்டி நாதமுனிகள் வேண்டினார். நம்மாழ்வார் நாதமுனிகளின் பக்திக்கு மெச்சி, அந்த ஆயிரம் பாசுரங்கள் மட்டுமில்லை, மற்றப் பாசுரங்களையும், இன்னும் மற்ற ஆழ்வார்கள் பாடியதையும் சேர்த்தே தருகின்றேன் என்று சொல்லிவிட்டு அவ்வண்ணமே அனைத்துப் பாசுரங்களும் கிடைக்கும்படி அருளிச் செய்தார். இவை அனைத்துமே நம்மாழ்வார் தவமிருந்த புளிய மரத்தினடியிலேயே நடந்தது என்பது அந்தப் புளிய மரத்தின் சிறப்பை மேலும் கூட்டுகின்றது.
படங்கள் உதவி கூகிளார்: நன்றி.
படங்கள் உதவி கூகிளார்: நன்றி.
--
--
தங்கள் பதிவுகள் தொடர்ந்து வருகின்றன. பின்னூட்டம் யாரும் தராததால் இந்த
சந்தேகம் வருகிறது.
On Oct 22, 6:54 am, Geetha Sambasivam <geethasmbs...@gmail.com> wrote:
> இல்லம் குழும நண்பர்களுக்கு,
>
> இந்தப் பதிவுகள் வருதா??? நேத்திக்குக் குழுமத்தின் உள்ளே சென்று பார்த்தபோது
> என்னுடைய புதிய பதிவுகள் எதுவும் அங்கே அப்டேட் ஆகலைனு கவனிச்சேன். என்ன
> பிரச்னைனு புரியலை. வரலைனா சொல்லவும். நன்றி.
> 2009/10/22 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
>
>
> > Wednesday, October 21, 2009 தாமிர பரணிக்கரையில் சில நாட்கள்- நவ கைலாயம் 2<http://aanmiga-payanam.blogspot.com/2009/10/2.html>
> ...
>
> read more »
--
--

அடுத்ததாக நாம் காணப் போவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முறப்பநாடு கைலாசநாதர் கோயிலாகும். நவ கைலாயங்களில் இது ஐந்தாவது கோயில். குருபகவானுக்கான க்ஷேத்திரம் எனச் சொல்லப் படுகிறது. மற்ற நவகைலாயக் கோயில்களுக்கு நடுவே இது அமைந்திருப்பதால் இதை நடுக்கைலாயம் என்றும் அழைக்கின்றனர். மேலும் தாமிரபரணி நதி இங்கே வடக்கே இருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனாலும் இது சிறப்பாகக் கூடப் படுகிறது. இந்த இடத்தில் தாமிரபரணி நதியை தக்ஷிண கங்கை என்ற பெயரில் அழைக்கின்றனர். நதிகளிலேயே மூத்த நதியான தாமிரபரணி நதியின் இந்தக் கரையில் தீர்த்த யாத்திரை செய்வது மிகவும் புனிதமாய்க் கருதப் படுகிறது. இந்த ஊரின் இந்தக் கோயிலைக் கட்டியது வல்லாள மஹாராஜா எனச் சொல்லப் படுகிறது. ஆனால் சோழ மன்னன் ஒருவனே கட்டியதாகவும் தலவரலாறு கூறுகிறது. எது எப்படி எனச் சரியாக யாருக்கும் தெரியவில்லை என்றாலும் பின்வரும் தலவரலாறே கூறப்படுகிறது. படம் நன்றி: தினமலர்
----
--~--~---------~--~----~------------~-------~--~----~
இறையடியார்களின் இணைய சத்சங்கம் " நம்பிக்கை"
http://groups.google.co.in/group/nambikkai
-~----------~----~----~----~------~----~------~--~---

பின்னூட்டம் வராட்டிப் பரவாயில்லை, பதிவுகள் வருதானு தெரிஞ்சுக்கணும், நன்றி.
--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---
> --

கேதுவுக்கான
இந்தத் தலம் இப்போது அழியும் நிலைமையில் உள்ளதாம். தூத்துக்குடிக்கு அருகே
ராஜபதி கைலாசநாதர் கோயில் என அழைக்கப் படும் இந்தத் தலத்தில் ஒழுங்கற்ற
வடிவில் ஒரு லிங்கம் இருப்பதாய்ச் சொல்கின்றனர். லிங்கத்தின் நாலு
பக்கங்களிலும் நான்கு சக்கரங்கள் உள்ளதாகவும், லிங்கத்திற்குக் கீழே
தோண்டினால் பழைய கோயில் கிடைக்கலாம் என்றும் சொல்கின்ற்னர். இந்தத் தலம்
பற்றி மிகவும் நன்கு தெரிந்த பக்தர்களே இங்கு செல்கின்றனர். பக்தர்கள்
இந்த லிங்கத்திற்குப் பலவர்ண வஸ்திரம் சார்த்தி, அங்கே இருக்கும் மண்ணையே
பிரசாதமாய் எடுத்து வருகின்றனர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தென்
திருப்பேரையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் ரோட்டோரத்திலேயே
கேட்பாரற்று இந்த லிங்கம் உள்ளது. பேருந்து வசதி இல்லை. தீரவிசாரித்துத்
தெரிந்துகொண்டு தென் திருப்பேரையில் இருந்து ஆட்டோ அல்லது கார்
ஏற்பாட்டில் சென்றால் காரிலோ இந்த இடத்தைக் கேட்டுக் கொண்டு அடையவேண்டும்.
அறநிலையத் துறைஎப்போது மனசு வைக்குமோ அப்போது இந்தக் கோயில் எழும்பும்
என்று எதிர்பார்ப்போம்.2009/12/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

பெண்கள்
வரிசை நல்லவேளையாக(?) தனியே இருந்தது. நான் அதில் போய் நின்றேன்.
திருநெல்வேலிக்குப் போறோம்னதும், அல்வாவுக்கான முன்பதிவுகளும்,
கல்லிடைக்குறிச்சி அப்பளத்துக்கான முன்பதிவுகளும் நிறையவே இருந்தன.
கிட்டத் தட்ட ஒரு மணி நேரம் நின்னதும் அல்வா கிடைத்தது. நாம வாங்கற ஒரு
கிலோ, அரை கிலோவெல்லாம் அவங்களுக்கு பிசாத்து போலிருக்கு. அலக்ஷியமாப்
பார்த்தாங்க. சரிதான்னு நினைச்சுட்டு வாங்க வேண்டியவங்களுக்கு எல்லாம்
வாங்கிக் கொண்டோம். வரும் வழியிலே கல்லிடைக்குறிச்சியிலே இறங்கி அம்பி
வீட்டுக்குப் போய் ஒரு கலக்கு கலக்கிட்டு அப்பளப் பாக்கெட்டுகளையும்
வாங்கிக் கொண்டிருந்தோம். அல்வாவை முடிச்சுட்டு அறைக்குத்திரும்பினோம்.
அடுத்த பதிவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், அதன் பின்னர் சங்கரன்
கோயிலும். காத்திருங்கள். ஆண்டாளையும், வடபத்ரசாயியையும் பார்க்க.
ஸ்ரீவில்லிபுத்தூர் பல விஷயங்களுக்குப் பேர் போனது. முக்கியமாய் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. எல்லா இடத்துப் பால்கோவாவுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாரிக்கப் படும் பால்கோவாவுக்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு. சுத்தமான பசும்பாலில் தயாரிக்கப் படும். இதை அடுத்துக் கண்ணன் பிறந்த மதுராவிலும், அவன் குடித்தனம் நடத்திய துவாரகையிலும் கிடைக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் சுத்தமான பசும்பால் தான். அதுவும் குஜராத் பூராவுமே அநேகமாய்ப் பசும்பால் தான். நாங்க இருந்த ஐந்து, ஆறு வருடங்களில் எருமையே பார்க்கலை. அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை. சக்கைனதும் ஏதோ சக்கையாய் இருக்கும்னு நினைக்காதீங்க. அருமையான வாசனைத் தைல மூலிகைகளின் வேர்கள், பூக்கள், மொட்டுகள், இலைகள் எல்லாம் சேர்ந்த ஒன்று. இடித்துச் சூரணம் மாதிரி இருக்கும். பொதுவாகவே மதுரைப்பக்கம் பெருமாள் கோயில்களில் தாயார் சந்நிதியில் மஞ்சளும், ஆண்டாள் சந்நிதியில் இந்தத் தைலச் சக்கையும் தான் பிரசாதம். அதுவும் மதுரை வடக்குக் கிருஷ்ணன் கோயிலில் வருஷா வருஷம், ராப்பத்து, பகல் பத்து உற்சவத்தின்போது ஸ்வாமி வீதி உலா வரும்போது கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுப்பாங்க. ஒருதரம், இரண்டு தரம்னு வாங்கிட்டு, அம்மா வாங்கினதையும் சேர்த்து வெந்நீரில் ஊறவைச்சு, அம்மியில் அரைச்சுக் காலம்பர குளிக்கும்போது தலையில் தடவிக் கொண்டு ஊற வைச்சுக் குளிச்சால் மணமோ மணம்! பல நாட்கள் மணம் வீசும். சண்பகப் பாண்டியனுக்குச் சந்தேகமே வந்திருக்காது. ஸ்ரீவில்லிபுத்தூர் தைலச் சக்கை மணம் தான் தேவியின் கூந்தலில்னு அடிச்சுச் சொல்லி இருப்பான் அவனே. தருமிக்கும் பொற்கிழி கிடைச்சிருக்காது.
திருநெல்வேலிக்காரங்க
இணையத்திலே நிறைய இருக்காங்க. எல்லாருமே வந்து அவங்களோட மலரும்
நினைவுகளைப் பகிர்ந்துக்கறதிலே சந்தோஷம். இங்கே ஆண்டாளை பூமாதேவினு
சொன்னதுக்கு நீளாதேவினு திரு தேவ் அவர்கள் சொல்றார். இருக்கலாம். ஆனால்
பொதுவாய்ச் சொல்றது பூமியில் கண்டெடுத்ததால் பூமாதேவியே தான் அவதாரம்னும்
, இன்னும் சிலர் சாட்சாத் சீதையே ஆண்டாளாகப் பிறவி எடுத்ததாகவும்
சொல்கின்றனர். ஆண்டாள் அவதரித்த காலம் முதற்கொண்டு மு.ராகவையங்கார்
என்னும் அறிஞர் கூறி உள்ளார். ஆண்டாளின் திருப்பாவையில் வெள்ளி எழுதல்
பற்றியும், வியாழன் உறங்குவதுபற்றியும் வருகிறது அல்லவா?
நாட்கள்
கழிந்தன. கடகராசியில் சூரியன் பிரவேசித்தான். சந்திரன் பூரணமாய்ப் பொலிந்த
ஆடி மாதம் பெளர்ணமியில் உத்திரட்டாதி நக்ஷத்திரம் கூடிய நன்னாளில்
நள்ளிரவு வேளையில் அம்மைக்குக் காட்சி கொடுத்தார் ஈசன். எப்படி??? வலப்
பக்கம் புலித்தோல் ஆடை, இடப்பக்கம் மஞ்சள் வண்ணப் பட்டுப் பீதாம்பரம்.
வலப்பக்கக் கழலில் பாம்பு ஆபரணம், வலப் பக்கம் பொன்வண்ணத் திருமேனி,
இடப்பக்கமோ கார்வண்ணத் திருமேனி. வலப்பக்கம் கங்கை தரித்த சடாமகுடம், நாக
குண்டலம், திருநீறணிந்த மேனி, இடப்பக்கம் ரத்தின கிரீடம், மகர குண்டலம்,
கஸ்தூரிப் பொட்டு, இட மேல்கையில் சக்கரமுமாக சங்கரநாராயணர் காட்சி
கொடுத்தார். அன்னை புரிந்து கொள்கின்றாள். அரியும் சிவனும் ஒண்ணு,
அறியாதோர் வாயிலே மண்ணு என்னும் அரும்பெரும் தத்துவத்தை. இதன் பின்னரும்
அன்னையின் தவம் தொடர்ந்தது. இம்முறை ஈசனின் சுய உருவைக் காணவேண்டித்
தவமிருந்தாள் அன்னை. அவள் தவத்தின் பலனாக ஈசன் அவளைத் திருமணம் செய்து
கொண்டார். இதைத் தவிரவும் பல்வேறு புராண, சரித்திர சம்பவங்களையும்
குறிப்பிடுகின்றனர்.
கோ என்றால் பசு என்று அர்த்தம். இங்கே பக்தர்களாகிய பசுக்கள் எனவும்
சொல்லலாம். மதிக்கு அர்த்தம் சொல்லவேண்டாம். ஒளி பொருந்திய எனப் பொருள்.
பக்தர்களாகிய பசுக்களைக் காத்து அருளும் ஒளிபொருந்திய திவ்ய முகம்
படைத்தவள் என்ற பொருளிலேயே “கோமதி” என்றும், தமிழில் “ஆ” என்றால் பசு என
அர்த்தம் வரும். ஆவுடைநாயகி எனத் தமிழிலும் அழைக்கப் படுகிறாள் இந்த
அன்னை. அது மட்டுமா? மதுரை மீனாக்ஷிக்கு சகோதரி எனவும் அன்பாக அழைக்கப்
படும் இந்த அன்னை கிரியா சக்தியாகச் சித்திரிக்கப் பட்டிருப்பதாயும்
கூறுவார்கள். யோகமுறைப்படி மதுரை மீனாக்ஷி இச்சா சக்தியாகவும், சங்கரன்
கோயில் கோமதி அம்மன் கிரியா சக்தியாகவும், நெல்லை காந்திமதி அம்மன்
ஞானசக்தியாகவும் சித்திரிக்கப் பட்டிருப்பதாய் ஆன்றோர் கருத்து. இந்த
கோமதி அம்மன் முன்னால் உள்ள ஸ்ரீசக்கரம் மிகவும் சக்தியும் மகிமையும்
வாய்ந்தது என்பார்கள். இதைப் பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதினத்தைச்
சேர்ந்த ஸ்வாமிகள் ஒருவர்கேட்கக் கதை போல் இருந்தாலும் இது ஒரு உண்மை நிகழ்ச்சி. பதிவு செய்யப் பட்டது. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியும் கூட. முதலில் இதைப் பதிவு செய்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்கள்.
முந்நூறு வருடங்களுக்கு முன்பாக சங்கரன்கோயிலின் உற்சவ மூர்த்தியைக் காணவில்லை. திடீரெனக் காணாமல் போயிற்று. அப்போது சங்கரன் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஆளுகையின் கீழே இருந்த காலகட்டம். திருநெல்வேலி மக்கள் அனைவருக்கும் சங்கரன் கோயில் நாயகரைக் காணோம் என்ற மனவருத்தம். அருகே இருந்த ராமநாதபுரத்துக்காரர்களுக்கோ, எங்கள் ஆளுகையில் இருந்தவரையில் இம்மாதிரியான ஒன்று நிகழ்ந்ததா?? என்ற எகத்தாளம். மக்கள் மனம் புழுங்கினர்.
அக்காலத்தில் திருநெல்வேலிச்சீமையை ஆண்டவர் நாயக்க மன்னர்களின் பிரதிநிதியான ஆறை அழகப்பமுதலியார் என்பார் ஆகும். ராமநாதபுரமோ சேதுபதி அரசரின் நேரடி ஆளுகைக்கு உட்பட்டது. அதனால் மூர்த்தம் சேதுபதியின் ஆளூகைக்கு உட்பட்ட பகுதிக்குப் போயிருக்கோ என்ற ஐயம். என்றாலும் இதை எவ்வாறு உறுதி செய்துகொள்வது?? ஆறை அழகப்ப முதலியாருக்கு நிம்மதியே இல்லை. தம் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் இம்மாதிரியான ஒரு நிகழ்வு ஏற்பட்டு தம் புகழுக்கும், பக்திக்கும், இறை வழிபாட்டின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டதே என மனம் வருந்தித் துடித்தார். சிறந்த சிவபக்தரான அவர் மனம் கசிந்து உருகினார்.” சங்கரன் நயினார் கோயிலின் நாயகரைக் கண்டுபிடித்து அங்கே மீண்டும் பிரதிஷ்டை செய்யும் வரையில் அன்னம் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால் என் உயிரே போனாலும் சரி. அப்படி என் உயிர் போயிற்றென்றால் இதுவும் ஈசன் அருள் என அதை ஏற்பதே நல்லது. இனி என் வேலை நயினாரைக் கண்டு பிடித்து சங்கரன் கோயிலிலே சேர்ப்பது ஒன்றே.” என்று கடுமையான சபதம் எடுத்துக்கொண்டு சங்கரன் கோயில் நாயகரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.
அவருடைய நண்பர்கள் இம்முயற்சியைச் செய்யவேனும் உடலில் பலம் வேண்டாமா? இத்தகையதொரு கடும் விரதத்தை மேற்கொண்டால் எங்கனம் அலைந்து திரிந்து மூர்த்தத்தைத் தேடுவது? அதோடு ராஜ்ய நிர்வாகம் வேறே இருக்கிறதே? விரதத்தைத் தளர்த்துங்கள் என வேண்டிக் கொண்டனர். திட்டமாய் மறுத்த அழகப்ப முதலியார் மேலும், மேலும் நண்பர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பால்கஞ்சி மட்டும் எடுத்துக் கொண்டார். இரவிலும், பகலிலும் தூங்காமல் நாயகரைத் தேடும் முயற்சி தொடங்கியது. கடும் முயற்சியின் பேரில் சங்கரன் கோயில் நாயகர் காணாமல் போன அன்றிலிருந்து கோயிலின் அர்ச்சகர்களுள் ஒருவரான சண்பகக்கண்நம்பி என்பவரும் காணாமல் போய்விட்டார் என்று தெரியவந்தது. நன்கு விசாரித்ததில் நம்பியே விக்ரஹத்தைக் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்பதும் உறுதியானது.
ஆம், உண்மையில் சண்பகக்கண்நம்பியே அந்தத் திருட்டைச் செய்தார். நாயகரைக் கொண்டு போய் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட திரு உத்தரகோசமங்கை என்னும் ஊரில் அடகு வைத்துவிட்டார். ஆறை அழகப்பமுதலியார் சேதுபதியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து எதுவும் செய்யமுடியாது என்பதை நன்கு தெரிந்து கொண்டே இவ்விதம் செய்திருந்தார். மன்னன் சேதுபதிக்கோ நாயகர் தங்கள் ஆளுகைக்குள் வந்தது தெரிய வரவே, உள்ளூர மனம் மகிழ்ந்தான். அந்த நாயகரை அடகுக்கடையில் இருந்து மீட்டு, உத்தரகோசமங்கை கோயிலிலே அவரை வைத்து வழிபாடுகள் செய்துவர உத்தரவிட்டான். இங்கே ஆறை அழகப்பருக்கு இந்தச் செய்திகள் யாவுமே கிட்டியது. ஒற்றர்கள் அறிந்து வந்து முழுத் தகவல்களையும் கொடுத்தனர். இரு ஆட்சிப் பகுதிக்கும் எப்போது பகையே. நம்மிடம் நட்பு முறையில் சேதுபதி அரசர் இல்லை. ஆகவே அவருக்கு எழுதி வேண்டிப் பெற்றுக் கொள்வது இயலாத காரியம். மேலும் சேதுபதி கேட்பார். மூர்த்தம் உம் ஆட்சியின் கீழே இருந்தபோது அதைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வக்கோ, திறமையோ அற்றுப் போய்க் களவாட விட்டவருக்கு மீண்டும் இந்த அரிய மூர்த்தத்தைக் கொடுக்க முடியுமா? உமக்கு எதற்கு அவர்? என்று பட்டெனக் கேட்டுவிடுவார். மானமே போய்விடும். சமஸ்தானத்து மந்திரிகளையோ, திவான்களையோ அனுப்பலாமா?
ம்ஹும், அவர்கள் எல்லாம் சேதுபதியின் அதிகாரத்துக்குப் பயப்படுகிறார்களே. மேலும் அவர்கள் போய் சேதுபதியை நேரில் பார்ப்பதும் இயலுமா?? முடியாதென்றோ தோன்றுகிறது. என்ன செய்யலாம்??? அப்போது அந்த சமஸ்தானத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சொக்கம்பட்டி சமஸ்தானத்தின் ஸ்தானாதிபதியான பொன்னம்பலம்பிள்ளையின் நினைவு வந்தது முதலியாருக்கு. பொன்னம்பலம் பிள்ளை திறமைசாலி. எப்படிப்பட்ட கல்நெஞ்சக்காரரையும் இளக வைக்கும் ஆற்றல் கொண்டவர். ஊற்றுமலை ஜமீந்தாரிணி பூசைத்தாயாரையே ஆனானப் பட்ட வடகரைத் தலைவரோடு சமாதானம் செய்து வைத்தவர் ஆயிற்றே? ஆனால் பொன்னம்பலம் பிள்ளை நம்மை வணங்குவதே இல்லையே? மற்ற ஸ்தானாதிபதிகள் கப்பம் செலுத்த வந்தால் கீழே விழுந்து ஆறை அழகப்ப முதலியாரை வணங்கிவிட்டே செல்வதுண்டு. இந்தப் பொன்னம்பலம் பிள்ளையோ நேரிலும் வருவதில்லை. எங்கேனும் பார்க்க நேர்ந்தாலும் கீழே விழுந்து வணங்குவதும் இல்லை. இவன் பேரில் நடவடிக்கையும் எடுக்க முடியாவண்ணம் கப்பத்தை ஒழுங்காய்ச் செலுத்திவிடுகிறான். இப்போது இவனையா போய் உதவி கேட்பது? அழகப்ப முதலியாரின் தன்மானமும், கெளரவமும் தடுத்தது.
தமக்கு
அடங்கிய மற்ற ஸ்தானாதிபதிகளைக் கூப்பிட்டு வைத்துக் கலந்து ஆலோசித்தார்
அழகப்ப முதலியார். அனைவரும் ஒரே வார்த்தையாக இது பொன்னம்பலம் பிள்ளை
அவர்களால் மட்டுமே ஆகக் கூடிய காரியம் என்று சொல்லிவிட்டார்கள். அவர்கள்
சொன்னதில் முழு உண்மை இருந்தாலும் அனைவருக்கும் அடித்தளத்தில் அழகப்ப
முதலியார் தங்கள் எல்லாரையும் கீழே விழுந்து வணங்கச் செய்தார். ஆனால்
பொன்னம்பலப் பிள்ளையிடம் அவர் பாச்சா பலிக்கவில்லை. இப்போது பிள்ளை
அவர்களின் தயவை முதலியார் நாடவேண்டுமே. வேண்டும் முதலியாருக்கு என்ற
எண்ணமும் உள்ளூர இருக்கத் தான் செய்தது. ஆனாலும் அனைவருக்கும் சங்கரன்
கோயில் நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலுக்கே வரவேண்டுமானால் அது
பொன்னம்பலம் பிள்ளையால் தான் முடியும் என்று புரிந்தும்
வைத்திருந்தார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் பொன்னம்பலம் பிள்ளையை
வரவழைத்தார் அழகப்ப முதலியார். பிள்ளை அவர்களோ தமக்கு சங்கரன் கோயில்
நயினார் காணாமல் போன விஷயம் தெரியும் என்றாலும் முதலியாரால் ஆகாததும்
ஒன்று உண்டா என்ற எண்ணத்திலேயே பேசாமல் இருந்ததாகச் சொன்னார். விரைவில்
நாயகர் வந்துவிடுவார், சங்கரன் கோயிலில் போய்த் தரிசிக்கலாம் என எண்ணி
இருந்ததாகவும் சொன்னார்.