க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது? An aid to avoid mistakes, while writing in thamizh

2,169 views
Skip to first unread message

azhagi.com

unread,
Nov 6, 2006, 2:18:25 AM11/6/06
to illam Google Groups
அன்பர்களே,
 
தமிழில்(தான்) எழுத வேண்டும் என விழையும் பலரும், ஒற்றுப் பிழைகள் வராமல் எழுத வேண்டும் என(வும்) விழைந்தால் நலம்தானே?!
 
இது குறித்த என் அறிவைச் சற்றே புதுப்பித்துக்கொண்டேன் - சில நாட்களாக. முனைவர். திரு.இர.வா அவர்களுக்கு என் கோடி நன்றிகள், இதற்காக.
 
எடுத்தவுடனேயே வேற்றுமை உருபுகள், புணர்ச்சி, வினையெச்சம், ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,  வினையாலணையும் பெயர், இடைநிலை, சந்தி, சாரியை எனத் தமிழ் இலக்கணத்தை அள்ளி வீசாமல் [இளவயதில் தமிழில் பாடம் கற்க இயலாத சூழ்நிலை பலருக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? என்ன விசாலம் அம்மா, சொல்வது சரிதானே? :) ], எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும் சிலவற்றை மட்டும் முதலில் சொல்கிறேன். இலக்கண விதிகள் பற்றி பிறகு பார்ப்போம்.
 
அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, இனி, தனி, என, முன்னர், பின்னர், மற்ற (மற்றை, மற்று), எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.
 
மேற்கூறிய சொற்களை அடுத்து வருமொழியின் (வந்து சேரும் இரண்டாம் சொல் வருமொழி. முதல் சொல் நிலைமொழி) முதலில் க், ச், த், ப் முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர்மெய்யெழுத்துகள் இருப்பின் (அதாவது, க, கா... ச, சா... த தா... ப பா... முதலியன), நடுவிலே க், ச், த், ப் ஆகிய (வல்லின)மெய்யெழுத்துகள் மிகும். உதாரணங்கள் கீழே.
 

அந்தச் சிற்பம்
இந்தக் காட்சி
எந்தப் பாட்டு
 
அங்குத் தங்கினான்
இங்குப் படுத்தான்
எங்குக் கண்டான்
 
அப்படிப் போடு
இப்படித் தாண்டு
எப்படிச் சொல்வது
 
இனிப் பாடு
தனித் தமிழ்
எனச் சொன்னான்
 
முன்னர்க் கண்ட
பின்னர்க் கேட்ட
மற்றக் காட்சிகள்
 
எல்லாப் பெண்களும்
 
அவ்வகைச் சித்திரமே
இவ்வகைத் தென்றலே
எவ்வகைப் பகுக்க
 
"அந்திங்கெப்படி இனிதனி என  முன்னரும்
பின்னரும் மற்றெல்லா வகையும்"
 
என மேற்சொன்னவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சுலபமாய் ஓர் ஈரடிச்சொற்றொடர் உருவாக்கினேன். இதற்கு அர்த்தம் எதுவும் கிடையாது. தமிழில் ஒற்றுப்பிழை வராமல் எழுத வேண்டும் என விழைபவர்கள் நலன் கருதி மட்டுமே உருவாக்கினேன்.
 
இதை எழுதும்பொழுதே ஒன்று ஞாபகம் வருகிறது. என் அப்பாவிடம் இருக்கும்  புத்தகங்கள் 10,000 இருக்கும் (கரையான் அரித்து அழிந்து போனவை மீத). பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியவை அவை.  ஒரு 15 வருடம் முன்பு, அவர் வைத்திருந்த சங்க காலப் பாடல்கள் நிறைந்த ஒரு புத்தகத்தில் (அப்புத்தகம் இப்பொழுது இல்லை) ஒரு கவிதை படித்தேன். அது இதுவே: (சரியாக ஞாபகமில்லை. முறையான பாடல் தெரிந்தவர்கள் பாடலைத் திருத்தி இடவும்)
 
காவிறைய கூவிறைய மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே
 
இந்தப் பாடலை முறையான படிப்பறிவில்லாதவர் ஒருவரே எழுதினார் (யாரோ ஒருவர் 'நீயும் கவிதை எழுதி மன்னரிடம் பரிசு பெறலாமே' என உசுப்பிவிட). 
 
காகம் கரைதலைக் கண்டு 'காவிறைய' என்றும், குயில் கூவுவதைப் பார்த்து 'கூவிறைய' என்றும் அப்படியே............... சிறுவன் சொன்ன ஒரு வாக்கியம், நண்பன் சொன்ன ஒரு வாக்கியம் என அங்குமிங்கும் ஏதேதோ எழுதி, கவிதையென்றெண்ணி, மன்னரின் அவையில் பாட, எல்லோரும் சிரிக்க, கம்பர் மட்டும் - "இது மன்னரைப் போற்றிப் புகழும் அற்புதமான பாடல்" என்று விளக்கம் தந்தாராம். கதை இப்படித்தான் என நினைக்கிறேன். முழுவதும் அறிந்தவர்கள்,  கதையுடன், கவிதையின் பொருளையும் விளக்கிச் சொன்னால், தமிழின்/கம்பனின் பெருமை உணர்ந்து மெய்சிலிர்க்க வாய்ப்பு உண்டு.
 
அர்த்தமில்லாத என் ஈரடிச் சொற்றொடர் கண்டதும் எனக்கு மேற்சொன்ன கதை ஞாபகம் வந்து விட்டது. செ.ப.ரா. அவர்கள் கூட சில நாள் முன்பு இட்ட ஒரு மடலில் இதைப்பற்றி ஒரு வரி மேற்கோள் காட்டியிருந்தார் என நினைக்கிறேன்.
 
சரி. மடலின் இறுதிக்கு வந்தாகி விட்டது. 'அந்த, அங்கு, ...' போலவே "இன்னும் நிறைய இருக்கின்றன". எனக்கு நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம்(மட்டுமே) அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய், பாங்காய், எளிதாய் [அழகியைப் போல :):) ]  எடுத்துச் சொல்லலாம் என வைத்துள்ளேன், இனி வரவிருக்கும் மடல்களில். 
 
முக்கியமான ஒன்று. அதை மடலின் ஆரம்பத்திலேயே கோடிட்டுச் சொல்லி விட்டேன். விளக்கமாய் இப்பொழுது. நான் தமிழ் ஆசான் அல்ல. இந்த மடலிலேயே, நானே கூட சிற்சில இடங்களில் பிழையாக எழுதி இருக்கலாம். இருப்பின், சுட்டிக் காட்டுக (உங்களுக்கு நேரம் இருப்பின்). திருத்திக் கொள்கிறேன். முனைவர். திரு.இர.வாசுதேவன் எனக்கு அனுப்பிய சில முக்கியக் குறிப்புகள், இலக்கண விதிகளின் அடிப்படையில் நான் 'வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள்' பற்றிக் கற்றதை உங்களுடன் 'பகிர்ந்து' கொள்ள வந்திருக்கிறேன் - எளிமையாக, எல்லோருக்கும் மனதில் சென்று ஆழமாய்ப் பதியும் வகையில். எனக்கு எளிமை என்று தோன்றுவது உங்களுக்கு இல்லாமலும் போகலாம். இருப்பின், ஏன் என்று சொல்லுக. எப்படி இருந்திருக்கலாம் என்று சொல்லுங்கள். இந்த மடலின் தலைப்பைக் கூட எளிமை கருதியே 'வல்லெழுத்து மிகும், மிகா இடங்கள்' என வைக்கவில்லை.
 
நேரம் கிடைக்கையில், இம்மடல் குறித்த உங்கள் கருத்துகளைச் சொன்னால் மிகவும் மகிழ்வேன்.
 
உங்கள் புரிதலையும் நட்பையும் அன்பையும் என்றும் நாடுகிறேன்.
 
மிக்க பணிவன்புடன்
விசுவநாதன்
 
Azhagi - Your "friendliest" Tamil Transliterator - Unique and Innovative.
Direct Typing/Transliteration in ALL windows applications. Plus, much more...
Free download from http://azhagi.com/free.html.

Azhagi online forum: groups.yahoo.com/group/azhagi
 

வேந்தன் அரசு

unread,
Nov 6, 2006, 7:27:33 AM11/6/06
to il...@googlegroups.com
அன்பின் விஷி,

இந்த காலத்து தமிழுக்கு ஒற்று தேவை இல்லை என்பது என் கருத்து. ஒற்றை ஒழித்து தமிழ் பிள்ளைகளை வாழ விடுங்கள் என்று முத்துமிழிலும் அன்புடனிலும் வாயாடி உள்ளேன்.

தமிழ் நாட்டு பிள்ளைகள் மட்டும் அல்லாது அயல்நாடுகளிலும் வாழும் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழை எளிமைபடுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.

இது தமிழை வாழ வைக்கத்தான்.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

vishalam raman

unread,
Nov 6, 2006, 11:33:34 AM11/6/06
to il...@googlegroups.com
அன்பு விஷி ஆஹா என்ன எளிமையாக விளக்க்ப்
பட்டிருக்கிறது    நீங்கள் தான் என் தமிழ் வாத்தியார்
இப்போது ..... மிகவும் மகிழ்சியாக் இருக்கிறது   மிகவும்
நன்றி    அன்புடன்   விசாலம்

 
On 06/11/06, azhagi.com <ong...@azhagi.com> wrote:


அஞ்ஞானி

unread,
Nov 6, 2006, 9:12:25 PM11/6/06
to இல்லம் (your HOME)
நன்றி அம்மா.

அன்புடன்
விஷி

separa

unread,
Nov 7, 2006, 12:13:11 AM11/7/06
to இல்லம் (your HOME)
அன்புள்ள வேந்தன் அரசு
(வேந்தனும் அரசும்
ஒன்றுதானே! விளக்கம்
ஏதேனும் உண்டோ)
தமிழை வளர்ப்பதற்கு
இத்தகைய குறுக்கு வழிகள்
சரியானதல்ல. இது பாரதி
சொன்ன "மெல்லத் தமிழினி
சாகும் "என்ற வார்த்தையினை
மெய்ப்பித்துவிடும். இந்த
ஒரு வகையிலாவது பாரதியின்
தொலை நோக்கு
பொய்யாகட்டும்.

நாம் தமிழினை நன்கு
அறிந்திருந்தோமானால்
(இதனையே நம்மில் சிலர்
படிக்கக் கடினமான ஒன்று
எனக் கருதி, "அறிந்து
இருந்தோம் ஆனால்" - என
எழுதும்படி வற்புறுத்த
நேருமோ என்னவோ) நமது
குழந்தைகள் நல்ல தமிழ்
பேசுவது கடினமல்ல.

சித்திரமும் கைப்பழக்கம்;
செந்தமிழும் நாப்பழக்கம்"
நாம் அறிந்த ஒன்றுதானே.
ஏற்கனவே (கையினால் எழுதும்
பொழுது "ன" என்ற எழுத்தின்
வளைவுகள் சரிவர எழுதாத
வராத நிலையில்,) கலை என்பதனை
ஏன் "க ன ல" எனப்
படிக்கக்கூடாது என ஒரு
சிறுவன் கேட்கிறான். தமிழ்
ஏற்கனவே மணிப்பிரவாள
நடையில் எல்லா
மொழிகளுடனும் (குறிப்பாக
ஆங்கிலத்துடன் கலந்து)
எழுதும் நிலையில்தான்
உள்ளது. மொழி நாம் சொல்வதனை
அடுத்தவ்ர் புரிந்து
கொண்டால் போதும் என்ற
நிலையில், ஒரு கருத்துப்
பறிமாற்றங்களுக்கான ஊடகம்
என்றால், இது சரி

தமிழை எளிமையாகப் புரிந்து
கொள்ள எடுத்த விஷியின்
இந்த முயற்சி,
பாராட்டுதலுக்குரியது.
சமுதாயப் பிரச்சினை என்ற
தலைப்பில் இது கூட ஒரு நல்ல
தலைப்பு

அன்புடன்
செபரா

"காலை ஒடித்திரு
கையையும்தான் மடித்து,
தோலை உரித்துத் தலைமாறித்
தொங்கவும் விட்டபின்
ஏலுமோ உயுருள்ளதாய்
இதனையும் உரைத்திடவே!
நூலோர் உரைத்த (வழி) தமிழ்
செய்யச் செய் நோன்பு!"


காலை ஒடித்து, இரு
கைகளையும் மடித்து,
தோலையும் உரித்து
தொங்கவிட்டால் அது
மாமிசம்; உயிரற்றது. தமிழை
வளர்க்க இது சரியான
வழியல்ல; நன்கு
கற்றுணர்ந்த பெரியோர்
சொன்னபடி தமிழ் வளர்க்கும்
வழியெது என அறிந்து
கடைப்பிடித்தல் நலம்.
எளிமை (Flexibility) என்ற பெயரில்
(உடலுக்கு எலும்பு போன்று.
மொழிக்குத் துணையாய்
இருக்கும்) இலக்கணத்தை
அழிக்கக்கூடாது. இது எனது
கருத்து.


அன்புடன்
செபரா

வேந்தன் அரசு

unread,
Nov 7, 2006, 7:04:20 AM11/7/06
to il...@googlegroups.com
On 11/7/06, separa <sepa...@gmail.com> wrote:
அன்புள்ள வேந்தன் அரசு
(வேந்தனும் அரசும்
ஒன்றுதானே! விளக்கம்
ஏதேனும் உண்டோ)

அன்பின்  செபரா,

என் இயற்பெயர் ராஜேந்திரன். அதை தமிழ் படுத்தி உள்ளேன்.

1. அதை தமிழ் படுத்தி உள்ளேன்.
2. அதைத்தமிழ்ப்படுத்தியுள்ளேன்.

இரண்டுக்கும் என்ன பொருள் வேறுபாடு.

தொடர் 1 எளிமையாக உள்ளதே. அதை ஏன் வட மொழி போல் புல்லாரவிந்தயாயபத்ரநேத்ர என்று  கூட்டி எழுத வேண்டும்

சொல்லுங்கோ!

 

AKR

unread,
Nov 7, 2006, 12:12:03 PM11/7/06
to il...@googlegroups.com
தமிழ் படும் பாடு ஏழை படும் பாட்டை விஞ்சுகிறதே?
 
காஃபிக் கடையில் கொட்டைவடி நீர் கேட்பாரோ?
 
ஆகிரா

வேந்தன் அரசு

unread,
Nov 7, 2006, 7:36:21 PM11/7/06
to il...@googlegroups.com
அன்பின் ஆகிரா,

தொல்காப்பியர் சொல்லிடை வரும் வல்லினம் மெலிந்து ஒலிக்கும் என்றார்,  அதனால்  சொல் முதல் வரும் மெய் மெலியாது என்பது உள்ளுறை..

காஃபிக் கடையில் என்ற போது கடை என்ற சொல்லில் வரும் "க" சொல் முதல் வருவதால் அது "க்க" என்றே ஒலிக்க வேண்டும்.

ஆனால் 
காஃபிகடையில் என்று  சேர்த்து எழுதினால் கடை என்ற சொல் gaடை  ஒலிபெறும். ஒப்பு நோக்க "பகடை".
ஆனால் பிரித்து எழுதினால் ஒற்று தேவை இல்லை.

ஓலையில் எழுதிய காலத்தில் இடம் பற்றாக்குறையால் எல்லாம் நெருக்கி எழுதி இருக்கலாம். எனவே ஒற்று தேவை இல்லை என்பது என் கருத்து.

"மயிலி்றஹே மயிலிறஹே வருடுஹிறாய் என் அழஹை"  என்று பாடுவது கேட்டதில்லையோ?

On 11/7/06, AKR <akrcons...@gmail.com> wrote:
தமிழ் படும் பாடு ஏழை படும் பாட்டை விஞ்சுகிறதே?
 
காஃபிக் கடையில் கொட்டைவடி நீர் கேட்பாரோ?
 
ஆகிரா

வேந்தன் அரசு

mazalais

unread,
Nov 7, 2006, 10:49:39 PM11/7/06
to il...@googlegroups.com
வேந்தே,
 
ஹே, காஃபி இவற்றில் வரும் வடமொழி எழுத்துக்கள் வல்லினமா? மெல்லினமா?
 
அகத்தியர் எழுதிய இலக்கணத்திற்கு மேலல்லவா தொல்காப்பியம் இடம்பெற்றது.
 
இன்று வடமொழி எழுத்துக்கள் தமிழுடன் இணைந்து கலந்து
குழம்பிய நிலையில் தமிழுக்குப் புது இலக்கணம் வகுக்க வேண்டும்.
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Wednesday, November 08, 2006 6:06 AM
Subject: Re: க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது? An aid to avoid mistakes, while writing in thamizh

வேந்தன் அரசு

unread,
Nov 8, 2006, 7:54:00 AM11/8/06
to il...@googlegroups.com
அன்பின் ஆகிரா

>>ஹே, காஃபி இவற்றில் வரும் வடமொழி எழுத்துக்கள் வல்லினமா? மெல்லினமா?

ஹே என்பது வட ஒலிகளை தமிழ்ல் குறிக்க பிற்காலத்தில்  தோன்றியது. காஃபி என்பது ஆங்கிலம். இதுல் வடமொழி இல்லையே.

பெரும்பாலான  இடங்களில் வட எழுத்துக்கள் இல்லாமலும் தமிழை எழுதலாம். ஆனல் சில  வழக்கங்களை மேற்கொண்டால்.

பிட்சா =pizzaa
ராச்யு = ராஜு
அஃஅஃஆ = அஹஹ்ஹா

காஃபி ஏனும் இடத்தில் ஃகரம் முன்னரே F க்காக பயன்படுத்தப்பட்டு விட்டது. இல்லை என்றால் சொல் முன் மெலிந்து ஒலிக்கும் ஓசைகளை உணர்த்த ஃகரத்தை பயன் படுத்தி இருக்கலாம்.

ஃகங்கா  kangaa
ஃபாலன்  = baalan
ஃதினம்  =  dinam
ஃசதி= sati
ஃடாடி = daddu

தற்போது
இதற்கு மாற்றாக ஒரு புதிய குறியீடு  வேண்டும்.
அழகி பெற்றெடுப்பாளா? தலைகீழ் ஃகரம் என் பரிந்துரை. (அதற்கு ஒருங்குறி வேண்டுமே என்ற  வினவலுக்கு என்னிடம் மறுமொழி இல்லை)

தமிழின் வரி வடிவங்கள் யாவும் 1, 0 என்ற வடிவங்களை பல்வேறாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ளன. இனி புதிய வரிவடிவம் காண இயலாதோ என்று தோன்றுகிறது. முயன்று பாருங்கள்.


--

AKR

unread,
Nov 8, 2006, 9:19:00 AM11/8/06
to il...@googlegroups.com
வேந்தே,
 
ஃபிர் கபி மிலேங்கே போன்ற வாசகங்கள் வடமொழியான ஹிந்தியில் உண்டு.
 
பண்டைத் தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் வட நாட்டாருடன் பேசிப் பழக வேண்டிய கட்டாயத்தில் இல்லை
 
வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடி உயரும் குடி உயரக் கோனுயர்வான்
 
என்று இருந்து விட்டார்கள்.
 
ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குச் செல்லப் பெரும்பாலும் கால் நடையாகவோ, மாட்டு வண்டிகளிலோ, குதிரைகளிலோ சென்றார்கள்.
 
என்.எஸ். கிருஷ்ணன் நல்ல தம்பி திரைப் படத்தில் செய்யும் 'கிந்தன்'
சரித்திரக் கதா காலஷேபத்தில் சொல்லுவார்,
 
"அந்தக் காலத்தில காசிக்குப் போறதுன்னா, கட்டுச் சோறு கட்டிக்கொண்டு மாட்டு வண்டி பூட்டிக் கொண்டு பத்துப் பேராப் போவாங்க. திரும்பி வருவது ரெண்டு, அதுவும் அனேகமா மாடு" என்று.
 
விஞானம் வளர வளர மனிதனும் வசதியும் வளர்ந்தது. இதனால் மனிதனின் தேவைகளும் பெருகவே அவன் வட நாட்டாருடனும் அயல் நாட்டாருடனும் கலந்து பழக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பிற மொழிகளில் உள்ள பல சப்த்தங்கள் தமிழில் இல்லாததால் 'க்ரந்தம்' உருவானது. 'க்ரந்தம்' கலந்த தமிழுக்கு இலக்கணம் எழுதியவர் யாரும் இதுவரையில் இல்லையென்றே தோன்றுகிறது. இனிமேல் யாரேனும் முன்வரலாம்.
 
மேலும் சமீப காலம் வரை கணிணி பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் "யானை" என்பதில் "னை" யானையின் துதிக்கை போலவே இருந்தது. "லை"யும் இதே போல் இருந்ததது. அது தட்டச்சிடக் கடினமாக இருந்ததால் மாற்றப் பட்டது.
 
இது போல் நாம் கணிணியில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் பண்டைய இலக்கண விதிமுறைகளைச் சற்றே தளர்த்திக் கொண்டு நடைமுறையில் மக்கள் பேசும் முறைகளுக்கேற்ப அவை "அண்ணாத்தே, என்னாத்தே, வாடி எம் மச்சி, வாழக்கா பஜ்ஜி"  என்பது போல் கொச்சையாக இல்லாமல் தூய தமிழில் இருக்கும் விதத்தில் மட்டும் அமையுமாறு கொள்வது நலம் என்பது என் கருத்து.
Message has been deleted

வேந்தன் அரசு

unread,
Nov 11, 2006, 9:06:09 AM11/11/06
to il...@googlegroups.com
?கஃபா

விலங்குகளின் குளம்்புக்கு காஃபா* என்று ஏதோ ஒரு மொழியில் பொருளாம். குளம்பு போல் உள்ள காப்பி கொட்டைக்கு அதே பெயர். அந்த விலங்கு ஒட்டகமா? புரவியா?

தமிழ் அன்பர்கள் குளம்பி என்பது எனவேதான்.

நான் இலைநீர் விரும்பி. விதை நீர் அல்ல.

On 11/11/06, சம்பந்தன் <kaazh...@gmail.com> wrote:
காஃபி = அரபிக்; கஃபா என்ற
வார்த்தையிலிருந்து
வந்தது.

AKR

unread,
Nov 11, 2006, 9:24:45 AM11/11/06
to il...@googlegroups.com
Any of various tropical African shrubs or trees of the genus Coffea, especially C. arabica, widely cultivated in the tropics for their seeds that are dried, roasted, and ground to prepare a stimulating aromatic drink.
----- Original Message -----
Sent: Saturday, November 11, 2006 7:36 PM
Subject: Re: க் ச் த் ப் -

kaazhi yuran

unread,
Nov 11, 2006, 12:30:36 PM11/11/06
to il...@googlegroups.com

காஃபிக்கு ஒரு ஆன்மீக தொடர்பு உண்டு. பாபா புடான் என்னும் மிகப் பெரிய சூஃபி துறவி அதன் விதைகளை தன்னுடன் கொண்டு வந்து குடகு பகுதிகளில் விதைத்து பரப்பியதாக கூறுவர். ஆர்.கே. நாரயணும் அதை ஆணித்தரமாக வழி மொழிவார்.

Vinoth

unread,
Nov 11, 2006, 2:41:24 PM11/11/06
to il...@googlegroups.com
On 11/11/06, kaazhi yuran <kaazh...@gmail.com> wrote:

காஃபிக்கு ஒரு ஆன்மீக தொடர்பு உண்டு. பாபா புடான் என்னும் மிகப் பெரிய சூஃபி துறவி அதன் விதைகளை தன்னுடன் கொண்டு வந்து குடகு பகுதிகளில் விதைத்து பரப்பியதாக கூறுவர்.

அதனால் உலகிற்கு என்ன லாபம்?



--
வினோத்

kaazhi yuran

unread,
Nov 12, 2006, 2:44:13 AM11/12/06
to il...@googlegroups.com
இது லாபம் இது நஷ்டம் என்று மிக தெளிவாக வினோத்திற்கு தெரிந்து விட்டது போலும். எனக்கு தெரியவில்லையே. இறைவனை சதா சர்வ காலம் போற்றும் அடியார்களின் செயல் எல்லாம் இறை செயலாக நம்புவது என் நம்பிக்கை. அதனால் சொன்னேன்.

kaazhi yuran

unread,
Nov 12, 2006, 2:58:42 AM11/12/06
to il...@googlegroups.com

அன்பு வினோத்!

வார்த்தைகளை சரியாக பாருங்கள். "காஃபிக்கு ஒரு ஆன்மீக தொடர்பு" என்று தான் எழுதியிருக்கிறேன்.  காஃபியை நினைக்கும் போது அந்த துறவியின் நினைப்பும், ஆன்மீக நினைப்பும் சேர்ந்து வரும், இறை நம்பிக்கையாளருக்கு. அதுதான் எங்களுக்கு பெரிய லாபம். :)


On 11/12/06, Vinoth <vino...@gmail.com> wrote:

AKR

unread,
Sep 22, 2007, 10:17:08 AM9/22/07
to il...@googlegroups.com
வா வாத்யாரே ஊட்டாண்டே நீ
வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான்
சைதாப்பேட்ட கொக்கு
 
நைனா உன் நினப்பாலே நான்
நாஸ்தா துன்னு நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்து
ஜால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான் ஆ........
 
ஆயா கடை இடியாப்போன்னா
பாயாக்கறியும் நீயாச்சு
வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து
வாராவதிக்கே போவலாம்
 
----- Original Message -----
Sent: Monday, November 06, 2006 10:03 PM
Subject: Re: க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது? An aid to avoid mistakes, while writing in thamizh

GEETHA SAMBASIVAM

unread,
Sep 22, 2007, 1:54:54 PM9/22/07
to il...@googlegroups.com
Thank You.

AKR

unread,
Sep 22, 2007, 3:18:20 PM9/22/07
to il...@googlegroups.com
முன்னர் எழுத மறந்த வரிகள்:
 
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கப் பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சி நின்னு

விஸ்வநாதன் பாலசுப்ரமணியன்

unread,
Jul 4, 2008, 4:41:38 AM7/4/08
to il...@googlegroups.com
subject: Tamil grammar - தமிழ் இலக்கணம்
 
இணைக்கப்பட்டுள்ள Zip file-இல், தமிழ் இலக்கணம் குறித்த 4 கோப்புகள் உள்ளன.
 
1. ilakkaNach churukkam by Arumuga Naavalar.mht
2. IravaTamilGrammarTips.doc
3. sandhi_ilakkaNam.pdf
4. thamizgrammar.pdf
 
விருப்பம்/நேரம் இருப்பின், படிக்கலாம்.
 
திரு.இரவா அவர்களின் கோப்பிலிருந்து ஒற்றுப்பிழைகள் குறித்த பகுதியை மட்டும் கீழே இடுகிறேன்.
--------------------------------------------------------

 

ஒற்றுப் பிழைகள் - 1

வல்லெழுத்து மிகுமிடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

  1. வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-

 

§         தமிழை + கண்டேன்    = தமிழைக் கண்டேன்.

§         தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.

§         தமிழை + தந்தேன்      = தமிழைத் தந்தேன்.

§         தமிழை + பார்த்தேன்  = தமிழைப் பார்த்தேன்.

 

  1. அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::-

           கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -

 

1.      இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ஐ):-

(
உ-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,

2.      நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-

(
உ-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்

3.      ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-

(
உ-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு

4.      ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் ( உருபு = அது, உடைய):-

(
உ-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)

5.      இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-

( உ-ம்)

இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)

மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)

ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)

ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

 

  1. பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-

           பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.

(உ-ம்)

§         அந்த + கரண்டி   =     அந்தக் கரண்டி.

§         இந்த + சிற்பம்    =      இந்தச் சிற்பம்.

§         எந்த + பட்டம்   =       எந்தப் பட்டம்.

§         அப்படி + போனான்  = அப்படிப் போனான்.

§         இப்படி + பார்த்தான்    = இப்படிப் பார்த்தேன்.

§         எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.

§         அங்கு + சென்றான்      = அங்குச் சென்றான்.

§         இங்கு + தங்கினான்  = இங்குத் தங்கினான்.

§         எங்கு + கண்டாய்  = எங்குக் கண்டாய்.

§         இனி + கேள்  =    இனிக் கேள்.

§         தனி + தமிழ்  =   தனித் தமிழ்.

§         என + சொன்னாள்  = எனச் சொன்னாள்.

§         மற்று + பாடலாம்  = மற்றுப் பாடலாம்.

§         மற்ற + குதிரைகள்  = மற்றக் குதிரைகள்.

§         மற்றை + கனவு  = மற்றைக் கனவு.

§         முன்னர் + கண்ட  = முன்னர்க் கண்ட.

§         பின்னர் + கேட்ட  = பின்னர்க் கேட்ட.

§         எல்லா + பெண்கள்  = எல்லாப் பெண்கள்.

§         அவ்வகை + சிற்பம்  = அவ்வகைச் சிற்பம்.

§         இவ்வகை + பண்பு  = இவ்வகைப் பண்பு.

§         எவ்வகை + தோற்றம்  = எவ்வகைத் தோற்றம்.

  1. வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:-

           பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-

(உ-ம்)

§         பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
, , , ய், ர், ழ்
( உ-ம்)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்

§         ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ,
( உ-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்

§         உவமைத் தொகை:-

(
உ-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)

§         பண்புத் தொகை:-

(
உ-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)

§         " த்து" என்று முடியும் சொற்களையடுத்து :-

(
உ-ம்)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்

§         ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-

(
உ-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)

§         இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-

(
உ-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

 

  1. வினையெச்சங்களில் ஒற்று:-

           பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
(
உ-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்

(உ-ம்)

§         நன்றாக + பாடினாள்   = நன்றாகப் பாடினாள்.

§         ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.

§         போய் + செய்      = போய்ச் செய்.

§         அன்றி + சொல்லான்  = அன்றிச் சொல்லான்.

§         இன்றி + போவான்   = இன்றிப் போவான்.

§         போல + செய்= போலச் செய்.

ஒற்றுப் பிழைகள் - 2

வல்லெழுத்து மிகா இடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது , இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க் , ச் , த் , ப் ," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

  1. வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::-
    அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.

 

§         அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.

§         இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.

§         எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?

§         அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.

§         இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.

§         எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?

§         அவை + பெரியவை = அவை பெரியவை.

§         அது + பெரியது = அது பெரியது.

§         இவை + சிறியவை = இவை சிறியவை.

§         இது + சிறியது = இது சிறியது.

§         எவை + தந்தன = எவை தந்தன?

§         எது + தந்தது = எது தந்தது?

§         யாவை + பெரியவை = யாவை பெரியவை?

§         ஏது + கடல் = ஏது கடல்?

 

  1. ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::-

           எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், " த்த", " ந்து" என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -

 

1.      எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-

(
உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,

 

 

 

2.      ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-

(
உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்

3.      வினைத் தொகைகள்:-

(
உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை

4.      உம்மைத் தொகைகள்:-
(
உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)

5.      " த்த, ந்து" என முடியும் சொற்கள்:-

( உ-ம்)

பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்

 

-----------------------------------------------------------------------------------------------

- வி

Azhagi - Your "FriendliEST" Tamil Word Processor - www.azhagi.com



அன்பர்களே,
 
தமிழில்(தான்) எழுத வேண்டும் என விழையும் பலரும், ஒற்றுப் பிழைகள் வராமல் எழுத வேண்டும் என(வும்) விழைந்தால் நலம்தானே?!
...
... ... ... ..
... ..
Tamil Grammar.zip

vishalam raman

unread,
Jul 4, 2008, 5:20:49 AM7/4/08
to il...@googlegroups.com
அன்பு விஷி எனக்கு   மிகவும்  பயனளித்த ஒன்று    மிக்க நன்றி  அன்புடன் விசாலம்

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது , இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க் , ச் , த் , ப் ," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில <span lang="TA" style="COLOR: maroon;



Reply all
Reply to author
Forward
0 new messages