Reposting: க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது? An aid to avoid mistakes, while writing in thamizh

5,068 views
Skip to first unread message

விஸ்வநாதன்

unread,
Jul 4, 2008, 1:08:01 AM7/4/08
to இல்லம் (your HOME)
From: "azhagi.com" <ongr...@azhagi.com>
Date: Mon, 6 Nov 2006 12:48:25 +0530
Local: Mon, Nov 6 2006 12:18 pm
Subject: க் ச் த் ப் - எங்கு வரும், எங்கு வராது? An aid to avoid
mistakes, while writing in thamizh

அன்பர்களே,

தமிழில்("தான்") எழுத வேண்டும் என விழையும் பலரும், ஒற்றுப் பிழைகள்
வராமல் எழுத வேண்டும் என("வும்") விழைந்தால் நலம்தானே?!

இது குறித்த என் அறிவைச் சற்றே புதுப்பித்துக்கொண்டேன் - சில நாட்களாக.
முனைவர். திரு.இர.வா அவர்களுக்கு என் கோடி நன்றிகள், இதற்காக.

எடுத்தவுடனேயே வேற்றுமை உருபுகள், புணர்ச்சி, வினையெச்சம், ஈறு கெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம், வினையாலணையும் பெயர், இடைநிலை, சந்தி, சாரியை
எனத் தமிழ் இலக்கணத்தை அள்ளி வீசாமல் [இளவயதில் தமிழில் பாடம் கற்க இயலாத
சூழ்நிலை பலருக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? என்ன விசாலம் அம்மா,
சொல்வது சரிதானே? :) ], எளிதாய்ப் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும்
சிலவற்றை மட்டும் முதலில் சொல்கிறேன். இலக்கண விதிகள் பற்றி பிறகு
பார்ப்போம்.

அந்த, இந்த, எந்த, அங்கு, இங்கு, எங்கு, அப்படி, இப்படி, எப்படி, இனி,
தனி, என, முன்னர், பின்னர், மற்ற (மற்றை, மற்று), எல்லா, அவ்வகை, இவ்வகை,
எவ்வகை.

மேற்கூறிய சொற்களை அடுத்து வருமொழியின் (வந்து சேரும் இரண்டாம் சொல்
வருமொழி. முதல் சொல் நிலைமொழி) முதலில் க், ச், த், ப் முதலிய நான்கு
மெய்யெழுத்துகளில் உருவான உயிர்மெய்யெழுத்துகள் இருப்பின் (அதாவது, க,
கா... ச, சா... த தா... ப பா... முதலியன), நடுவிலே க், ச், த், ப் ஆகிய
(வல்லின)மெய்யெழுத்துகள் மிகும். உதாரணங்கள் கீழே.

---------------------------------------------------------------------------­-----

அந்தச் சிற்பம்
இந்தக் காட்சி
எந்தப் பாட்டு

அங்குத் தங்கினான்
இங்குப் படுத்தான்
எங்குக் கண்டான்

அப்படிப் போடு
இப்படித் தாண்டு
எப்படிச் சொல்வது

இனிப் பாடு
தனித் தமிழ்
எனச் சொன்னான்

முன்னர்க் கண்ட
பின்னர்க் கேட்ட
மற்றக் காட்சிகள்

எல்லாப் பெண்களும்

அவ்வகைச் சித்திரமே
இவ்வகைத் தென்றலே
எவ்வகைப் பகுக்க

"அந்திங்கெப்படி இனிதனி என முன்னரும்
பின்னரும் மற்றெல்லா வகையும்"

என மேற்சொன்னவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளச் சுலபமாய் ஓர்
ஈரடிச்சொற்றொடர் உருவாக்கினேன். இதற்கு அர்த்தம் எதுவும் கிடையாது.
தமிழில் ஒற்றுப்பிழை வராமல் எழுத வேண்டும் என விழைபவர்கள் நலன் கருதி
மட்டுமே உருவாக்கினேன்.

இதை எழுதும்பொழுதே ஒன்று ஞாபகம் வருகிறது. என் அப்பாவிடம் இருக்கும்
புத்தகங்கள் 10,000 இருக்கும் (கரையான் அரித்து அழிந்து போனவை மீத).
பலதரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியவை அவை. ஒரு 15 வருடம் முன்பு, அவர்
வைத்திருந்த சங்க காலப் பாடல்கள் நிறைந்த ஒரு புத்தகத்தில் (அப்புத்தகம்
இப்பொழுது இல்லை) ஒரு கவிதை படித்தேன். அது இதுவே: (சரியாக ஞாபகமில்லை.
முறையான பாடல் தெரிந்தவர்கள் பாடலைத் திருத்தி இடவும்)

காவிறைய கூவிறைய மண்ணுண்னி மாப்பிள்ளையே
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே

இந்தப் பாடலை முறையான படிப்பறிவில்லாதவர் ஒருவரே எழுதினார் (யாரோ ஒருவர்
'நீயும் கவிதை எழுதி மன்னரிடம் பரிசு பெறலாமே' என உசுப்பிவிட).

காகம் கரைதலைக் கண்டு 'காவிறைய' என்றும், குயில் கூவுவதைப் பார்த்து
'கூவிறைய' என்றும் அப்படியே............... சிறுவன் சொன்ன ஒரு வாக்கியம்,
நண்பன் சொன்ன ஒரு வாக்கியம் என அங்குமிங்கும் ஏதேதோ எழுதி,
கவிதையென்றெண்ணி, மன்னரின் அவையில் பாட, எல்லோரும் சிரிக்க, கம்பர்
மட்டும் - "இது மன்னரைப் போற்றிப் புகழும் அற்புதமான பாடல்" என்று
விளக்கம் தந்தாராம். கதை இப்படித்தான் என நினைக்கிறேன். முழுவதும்
அறிந்தவர்கள், கதையுடன், கவிதையின் பொருளையும் விளக்கிச் சொன்னால்,
தமிழின்/கம்பனின் பெருமை உணர்ந்து மெய்சிலிர்க்க வாய்ப்பு உண்டு.

அர்த்தமில்லாத என் ஈரடிச் சொற்றொடர் கண்டதும் எனக்கு மேற்சொன்ன கதை
ஞாபகம் வந்து விட்டது. செ.ப.ரா. அவர்கள் கூட சில நாள் முன்பு இட்ட ஒரு
மடலில் இதைப்பற்றி ஒரு வரி மேற்கோள் காட்டியிருந்தார் என நினைக்கிறேன்.

சரி. மடலின் இறுதிக்கு வந்தாகி விட்டது. 'அந்த, அங்கு, ...' போலவே
"இன்னும் நிறைய இருக்கின்றன". எனக்கு நேரம்
கிடைக்கும்பொழுதெல்லாம்(மட்டுமே) அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாய், பாங்காய்,
எளிதாய் [அழகியைப் போல :):) ] எடுத்துச் சொல்லலாம் என வைத்துள்ளேன், இனி
வரவிருக்கும் மடல்களில்.

முக்கியமான ஒன்று. அதை மடலின் ஆரம்பத்திலேயே கோடிட்டுச் சொல்லி விட்டேன்.
விளக்கமாய் இப்பொழுது. நான் தமிழ் ஆசான் அல்ல. இந்த மடலிலேயே, நானே கூட
சிற்சில இடங்களில் பிழையாக எழுதி இருக்கலாம். இருப்பின், சுட்டிக்
காட்டுக (உங்களுக்கு நேரம் இருப்பின்). திருத்திக் கொள்கிறேன். முனைவர்.
திரு.இர.வாசுதேவன் எனக்கு அனுப்பிய சில முக்கியக் குறிப்புகள், இலக்கண
விதிகளின் அடிப்படையில் நான் 'வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள்'
பற்றிக் கற்றதை உங்களுடன் 'பகிர்ந்து' கொள்ள வந்திருக்கிறேன் - எளிமையாக,
எல்லோருக்கும் மனதில் சென்று ஆழமாய்ப் பதியும் வகையில். எனக்கு எளிமை
என்று தோன்றுவது உங்களுக்கு இல்லாமலும் போகலாம். இருப்பின், ஏன் என்று
சொல்லுக. எப்படி இருந்திருக்கலாம் என்று சொல்லுங்கள். இந்த மடலின்
தலைப்பைக் கூட எளிமை கருதியே 'வல்லெழுத்து மிகும், மிகா இடங்கள்' என
வைக்கவில்லை.

நேரம் கிடைக்கையில், இம்மடல் குறித்த உங்கள் கருத்துகளைச் சொன்னால்
மிகவும் மகிழ்வேன்.

உங்கள் புரிதலையும் நட்பையும் அன்பையும் என்றும் நாடுகிறேன்.

மிக்க பணிவன்புடன்
விசுவநாதன்

Azhagi - Your "friendliest" Tamil Transliterator - Unique and
Innovative.
Direct Typing/Transliteration in ALL windows applications. Plus, much
more...
Free download from http://azhagi.com/free.html.

Geetha Sambasivam

unread,
Jul 4, 2008, 2:41:19 AM7/4/08
to il...@googlegroups.com
//[இளவயதில் தமிழில் பாடம் கற்க இயலாத

சூழ்நிலை பலருக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? என்ன விசாலம் அம்மா,
சொல்வது சரிதானே? :) ], //
 
இங்கு நானும் ஒரு கை.நா. தான், ஆகவே இலக்கணம் தொடரும்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
 
//அவர்

வைத்திருந்த சங்க காலப் பாடல்கள் நிறைந்த ஒரு புத்தகத்தில் (அப்புத்தகம்
இப்பொழுது இல்லை) ஒரு கவிதை//
 
//காவிறைய கூவிறைய மண்ணுண்னி மாப்பிள்ளையே

உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி
கன்னா பின்னா தென்னா மன்னா
சோழரங்கப் பெருமானே//
 
தனிப்பாடல் திரட்டு?????  சங்கப் பாடல் இல்லையோனு ஒரு எண்ணம். தப்பாயும் இருக்கலாம். ஆனால் சொற்றொடர்கள் பிந்தைய தமிழ் இலக்கியத்தில் வருவனவாய் உள்ளன. உ.ம். உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி!
 
2008/7/4 விஸ்வநாதன் <ong...@gmail.com>:

Tirumurti Vasudevan

unread,
Jul 4, 2008, 4:08:00 AM7/4/08
to il...@googlegroups.com
விஷி,

இது மீள் பதிவுதானே? (ஓ ஆமாம், தேதியை பார்த்தால் புரிகிறது.) நான்
எழுப்பிய கேள்வி:
சொற்களை சேர்த்து எழுதும்போது ஒறு பற்றி யோசிக்க வேண்டுமா, இல்லை
சேர்த்து எழுதாவிட்டாலும் ஒற்று வருமா?

ஒற்று வருமோ இல்லையோ, சந்தேகம் வரும்!
திவா

விஸ்வநாதன் பாலசுப்ரமணியன்

unread,
Jul 4, 2008, 4:36:03 AM7/4/08
to il...@googlegroups.com
Subject: Tamil Grammar (தமிழ் இலக்கணம்)
 
இணைக்கப்பட்டுள்ள Zip file-இல், தமிழ் இலக்கணம் குறித்த 4 கோப்புகள் உள்ளன.
 
1. ilakkaNach churukkam by Arumuga Naavalar.mht
2. IravaTamilGrammarTips.doc
3. sandhi_ilakkaNam.pdf
4. thamizgrammar.pdf
 
விருப்பம்/நேரம் இருப்பின், படிக்கலாம்.
 
திரு.இரவா அவர்களின் கோப்பிலிருந்து ஒற்றுப்பிழைகள் குறித்த பகுதியை மட்டும் கீழே இடுகிறேன்.
--------------------------------------------------------

 

ஒற்றுப் பிழைகள் - 1

வல்லெழுத்து மிகுமிடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

  1. வல்லெழுத்து மிகும் உதாரணங்கள்::-

 

§         தமிழை + கண்டேன்    = தமிழைக் கண்டேன்.

§         தமிழை + சந்தித்தேன் = தமிழைச் சந்தித்தேன்.

§         தமிழை + தந்தேன்      = தமிழைத் தந்தேன்.

§         தமிழை + பார்த்தேன்  = தமிழைப் பார்த்தேன்.

 

  1. அதிகமாகப் பிழை செய்யுமிடங்கள்::-

           கீழ்வரும் இடங்களில் பொதுவாக அனைவருமே ஒரு சில சமயங்களில் தவறுகிறோம்:- -

 

1.      இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = ஐ):-

(
உ-ம்)
இலக்கணத்தை + படித்தேன் = இலக்கணத்தைப் படித்தேன்,
இலக்கியத்தை + கண்டேன் = இலக்கியத்தைக் கண்டேன்,

2.      நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் மிகும் (உருபு = கு):-

(
உ-ம்)
தமிழுக்கு + பொன்னாள் = தமிழுக்குப் பொன்னாள்
தேர்வுக்கு + போனான் = தேர்வுக்குப் போனான்

3.      ஏழாம் வேற்றுமை உருபையடுத்து மிகும் (உருபு = இடை):-

(
உ-ம்)
நல்லாரிடை + புக்கு = நல்லாரிடைப் புக்கு

4.      ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் மட்டும் மிகும் ( உருபு = அது, உடைய):-

(
உ-ம்)
யானை + கால் = யானைக்கால் (யானையினது கால்)

5.      இரண்டு, மூன்று, ஐந்து, எழு ஆகிய உருபும் பயனும் உடன்தொக்கத் தொகைகளில் மிகும் :-

( உ-ம்)

இரண்டாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மோர் + குடம் = மோர்க் குடம் (மோரை உடைய குடம்)

மூன்றாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மர + கதவு = மரக் கதவு (மரத்தால் ஆன கதவு)

ஐந்தாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
மலை + கல் = மலைக் கல் (மலையினின்று வரும் கல்)

ஏழாம் வேற்றுமை உ.ப.உ. தொகை:-
நீர் + செடி = நீர்ச் செடி (நீரின் கண் உள்ள செடி)

 

  1. பொதுவாக வல்லெழுத்துக்கள் மிகும் சில இடங்கள்::-

           பின்வரும் சொற்களையடுத்து வரும் வல்லெழுத்துகள் மிகும்:- அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி, அங்கு, இங்கு, எங்கு, இனி, தனி, என, மற்ற, மற்று, மற்றை, முன்னர், பின்னர், எல்லா, அவ்வகை, இவ்வகை, எவ்வகை.

(உ-ம்)

§         அந்த + கரண்டி   =     அந்தக் கரண்டி.

§         இந்த + சிற்பம்    =      இந்தச் சிற்பம்.

§         எந்த + பட்டம்   =       எந்தப் பட்டம்.

§         அப்படி + போனான்  = அப்படிப் போனான்.

§         இப்படி + பார்த்தான்    = இப்படிப் பார்த்தேன்.

§         எப்படி + கண்டான் = எப்படிக் கண்டான்.

§         அங்கு + சென்றான்      = அங்குச் சென்றான்.

§         இங்கு + தங்கினான்  = இங்குத் தங்கினான்.

§         எங்கு + கண்டாய்  = எங்குக் கண்டாய்.

§         இனி + கேள்  =    இனிக் கேள்.

§         தனி + தமிழ்  =   தனித் தமிழ்.

§         என + சொன்னாள்  = எனச் சொன்னாள்.

§         மற்று + பாடலாம்  = மற்றுப் பாடலாம்.

§         மற்ற + குதிரைகள்  = மற்றக் குதிரைகள்.

§         மற்றை + கனவு  = மற்றைக் கனவு.

§         முன்னர் + கண்ட  = முன்னர்க் கண்ட.

§         பின்னர் + கேட்ட  = பின்னர்க் கேட்ட.

§         எல்லா + பெண்கள்  = எல்லாப் பெண்கள்.

§         அவ்வகை + சிற்பம்  = அவ்வகைச் சிற்பம்.

§         இவ்வகை + பண்பு  = இவ்வகைப் பண்பு.

§         எவ்வகை + தோற்றம்  = எவ்வகைத் தோற்றம்.

  1. வல்லெழுத்து மிகும் மற்றும் சில இடங்கள்:-

           பின்வரும் சொற்களையும், பொருள் தரும் தனி நெடியலையும் அடுத்து மிகும்:-

(உ-ம்)

§         பின்வரும் எழுத்துகளில் வருமொழி, பெயர்ச் சொல்லாக இருந்தால் மட்டுமே மிகும்:-
, , , ய், ர், ழ்
( உ-ம்)
அ + பக்கம் = அப்பக்கம்,
இ + குரல் = இக்குரல்,
நாய் + பாசம் = நாய்ப்பாசம்
தமிழர் + பண்பு = தமிழர்ப் பண்பு
தமிழ் + பயன் = தமிழ்ப் பயன்

§         ஓரெழுத்தொரு மொழி:-
தீ, பூ,
( உ-ம்)
தீ + கனல் = தீக்கனல்,
பூ + சரம் = பூச்சரம்,
ஈ + பண்டம் = ஈப்பண்டம்

§         உவமைத் தொகை:-

(
உ-ம்)
மதி + குடை= மதிக் குடை (மதியொத்தக் குடை)

§         பண்புத் தொகை:-

(
உ-ம்)
புது+ பெண்= புதுப்பெண்(புதுமையான பெண்)

§         " த்து" என்று முடியும் சொற்களையடுத்து :-

(
உ-ம்)
பார்த்து + போனான் = பார்த்துப் போனான்
காத்து + கிடந்தான் = காத்துக் கிடந்தான்

§         ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் அடுத்து:-

(
உ-ம்)
பாடா + கிளி= பாடாக் கிளி (பாடாத கிளி)
ஒடா + தேர் = ஒடாத் தேர் (ஓடாத தேர்)

§         இரு பெயரொட்டுப் பண்புத்தொகை அடுத்து:-

(
உ-ம்)
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
மருத்துவ + கல்வி = மருத்துவக் கல்வி

 

  1. வினையெச்சங்களில் ஒற்று:-

           பின்வரும் சொற்கள் வினையெச்சங்களாக வந்தால் மட்டுமே ஒற்று மிகும்.
(
உ-ம்) ஆக, ஆய், போய், அன்றி, இன்றி, போல்

(உ-ம்)

§         நன்றாக + பாடினாள்   = நன்றாகப் பாடினாள்.

§         ஓடுவதாய் + சொன்னான் = ஓடுவதாய்ச் சொன்னான்.

§         போய் + செய்      = போய்ச் செய்.

§         அன்றி + சொல்லான்  = அன்றிச் சொல்லான்.

§         இன்றி + போவான்   = இன்றிப் போவான்.

§         போல + செய்= போலச் செய்.

ஒற்றுப் பிழைகள் - 2

வல்லெழுத்து மிகா இடங்கள்:

           கீழ்வரும் உதாரணங்களின் படி இரு சொற்கள் சேரும்போது , இரண்டாவது சொல்லின் முதலில் வரும் எழுத்து "க் , ச் , த் , ப் ," முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் - க, கா, , சா, , தா, , பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேருமிடங்களையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே. சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பால பிழைகளை நீக்கிவிடலாம். :-

  1. வல்லெழுத்து மிகா உதாரணங்கள்::-
    அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அவை, அது, இவை, இது, எவை, எது, யாவை, ஏது.

 

§         அத்தனை + பெரியது = அத்தனை பெரியது.

§         இத்தனை + சிறியது = இத்தனை சிறியது.

§         எத்தனை + தூரம் = எத்தனை தூரம்?

§         அவ்வளவு + கருணை = அவ்வளவு கருணை.

§         இவ்வளவு + கோபம் = இவ்வளவு கோபம்.

§         எவ்வளவு + தூரம் = எவ்வளவு தூரம்?

§         அவை + பெரியவை = அவை பெரியவை.

§         அது + பெரியது = அது பெரியது.

§         இவை + சிறியவை = இவை சிறியவை.

§         இது + சிறியது = இது சிறியது.

§         எவை + தந்தன = எவை தந்தன?

§         எது + தந்தது = எது தந்தது?

§         யாவை + பெரியவை = யாவை பெரியவை?

§         ஏது + கடல் = ஏது கடல்?

 

  1. ஒற்றெழுத்து மிகாத சில முக்கியமான இலக்கணக் குறிப்புகள்::-

           எழுவாய்த் தொடர்களில் (முதல் வேற்றுமை), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து பிற பெயரெச்சங்களில், வினைத்தொகைகளில், உம்மைத்தொகைகளில், " த்த", " ந்து" என முடியும் சொற்களையடுத்து ஒற்று மிகாது. உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. :- -

 

1.      எழுவாய்த் தொடர் (முதல் வேற்றுமை):-

(
உ-ம்)
அவர் + படித்தார் = அவர் படித்தார்,
கனிமொழி + சிரித்தாள் = கனிமொழி சிரித்தாள்,

 

 

 

2.      ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர பிற பெயரெச்சங்கள்:-

(
உ-ம்)
நல்ல + பாம்பு = நல்ல பாம்பு
அடித்த + புயல் = அடித்த புயல்

3.      வினைத் தொகைகள்:-

(
உ-ம்)
ஊறு + காய் = ஊறுகாய்
வளர் + பிறை =வளர்பிறை

4.      உம்மைத் தொகைகள்:-
(
உ-ம்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்) சேர +சோழ + பாண்டியர் = சேர சோழ பாண்டியர் (சேரரும், சோழரும், பாண்டியரும்)

5.      " த்த, ந்து" என முடியும் சொற்கள்:-

( உ-ம்)

பார்த்த + பெண் = பார்த்த பெண்
வந்து + சென்றாள் = வந்து சென்றாள்

 

-----------------------------------------------------------------------------------------------

- வி

Azhagi - Your "FriendliEST" Tamil Word Processor - www.azhagi.com


2008/7/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

//[இளவயதில் தமிழில் பாடம் கற்க இயலாத

சூழ்நிலை பலருக்கும் இருந்திருக்கலாம் அல்லவா? என்ன விசாலம் அம்மா,
சொல்வது சரிதானே? :) ], //
 
இங்கு நானும் ஒரு கை.நா. தான், ஆகவே இலக்கணம் தொடரும்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
.... ... ... ...
.. ...
Tamil Grammar.zip

Natarajan kalpattu N

unread,
Jul 4, 2008, 9:33:10 AM7/4/08
to இல்லம் (your HOME)
இந்த மடலை மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறேன். முன்பு ஒரு முறை
கேட்டிருந்தேன் தமிழ் நன்கு கற்றவர்கள் வல்லின இடையின 'ர' / 'ற'
பிரயோகத்திற்கான இலக்கண விதிகள் பற்றி நான் எங்கு தெரிந்துகொள்ள முடியும்
என்று. இந்த விஷயத்தில் நான் என்னை நிரக்ஷர குக்ஷி என்றே சொல்லிக்கொள்ள
வேண்டும். காரணம் நான் தமிழில் எழுதும்போது இறந்த என் தங்கையையோ அல்லது
என் மனைவியையோ ' இங்கு சின்ன ராவா பெரிய றாவா?' என்று கேட்டுதான் எழுதி
வந்திருக்கிறேன்.
Reply all
Reply to author
Forward
0 new messages