ragam

119 views
Skip to first unread message

vishalam raman

unread,
Dec 12, 2007, 12:41:28 PM12/12/07
to முத்தமிழ், muththamiz@googlegroups.com., pira...@googlegroups.com, namb...@googlegroups.com
சங்கீதம் ஒரு மேன்மையான  கலை அதைக்கேட்க ஒரு தனி இன்பம் கிடைக்கிறது இதைக்
காந்தர்வ வேதம் என்றும் சொல்லுகின்றனர் நாலு வேதம் தவிர ஆயுர்வேதம்  தனுர் வேதம் அர்த்தஸாஸ்திரம் முதலியவைகள் கடவுள் வழிப்பாட்டிற்கு முக்கிய சாதனை
இசை  புத்தியினாலும் உழைப்பினாலும் வளர்ந்த ஒன்று உயர்ந்த சங்கீதத்திற்கு முதலில் நல்ல குரல் வேண்டும்  அது ஈசனின் அருள்தான் உயர்ந்த இசைக் கேட்க காதின்
நரம்புகளுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது ஆனால் அதுவே அளவுக்கு மீறிய சத்தம்
ஆனால் காது ஜவ்வை நாசமும் படுத்துகிறது மனரஞ்சனமான பாடல்  உண்மையாகவே
மனதை அமைதி படுத்துகிறது உள் ஆத்மாவரைத் தொடுகிறது என்று தோன்றுகிறது
என் அக்கா கலயாணி பெரிய பாடகி ,அவள் மூச்சே சங்கீதம் தான் அவள் மிகவும் உடல் குன்றி ஐசியூ வில் சேர்க்கப்பட்டாள் ,நான் பார்க்கப் போயிருந்தேன் அவள் நினைவு
அவளிடம் இல்லை ,கண்கள் மூடி இருந்தன ,நான் டாக்டரிடம் கேட்டு உள்ளே போனேன்
 
இசைமேல் அவளது ஆசையைச் சொல்லி  ஒரு நல்ல அவளுக்குப்பிடித்தப் பாட்டை அவள் காதில் சிடி ப்ளேயரின் மூலம் வைக்கச் சொன்னேன் ,,அவள்  கைகள் அந்தப் பாட்டிற்கு  சரியான தாளம் போட்டன , அவளுக்கு அதைக் கேட்க முடிந்தது ,
ஆகையால் சங்கீதம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிறது    திரு ரமணன் அவர்களின் மாரியம்மனின் இசைக்கேட்டு நான் என்னையே மற்ந்தேன் கண்களிலிருந்து
கண்ணீர் கொட்டியது உடம்பில் ஒரு நடுக்கம் ஏற்பட்டது ஆகையால் ந்ல்ல இசை மனதின்
ஆழம் வரைப் போய் நம்மை பரவசப்படுத்துகிறது இதனால்தான் சங்கீதமும் ஒரு ஹீலிங்
தெரபி என்று கண் டு பிடித்து    ஆய்வு  நடத்தி வருகின்றனர் 
நல்ல சங்கீதம் மனதில் ஒரு ஒழுங்கு,,, நற்குணங்களை வளர்க்கிறது 
 
ராகம் எனபது எந்தத் த்வனி,, ஸ்வரங்களினாலும் வர்ணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு 
செவிக்கு இனபத்தைத் தருகிறதோ அதுவே ராகம் சரியான ஸ்வரஸ்தானத்தில்
ஆலாபனை விழ கீழ்ஸ்தாயி நடுஸ்தாயி மேல்ஸ்தாயி என்று எல்லா 
ஸ்தானங்களிலும் பாடுவது   "கானக்கிரியை"  ,,, இது ஸ்தாயி ஆரோஹி அவரோஹி ஸ்ஞ்சாரி என் நான்கு வகைப்படும் ஆரோஹி ஸ்ரிகம் ,,என்றால் அவரோஹி மகரிஸ்
ஆகும்
 
நிஷாந்திய ராகம் ,,,,,இதில் நிஷாதத்திற்கு மேல் சஞ்சாரம் இல்லாத ராகம்
 அதாவது மேலே நி க்குமேல் போகாது ,
உதாரணம்  நாதநாமக்கிரியா          ஸ்ரிகமபதநி,,,,,,,,நிதபமகரிஸநி
 
                      புன்னாகவராளி              நிஸ்ரிகமபதநி        நிதபமகரிஸ்நி
 
ஆடுபாம்பே பாடிப்பார்த்தால் இது புரியும் ,,,,,,,,,,,,,,,
 
 அன்புடன் விசாலம்
 

Venkatram Shrinivas

unread,
Dec 12, 2007, 11:19:30 PM12/12/07
to il...@googlegroups.com

இல்லத்திற்கென்றுமே இன்றியமையாத மழலைகளையெல்லாம் தனது செல்வங்களாக்கி மாசற்ற குணமும்

, யாவரும் மெச்சிப் புகழுமாறு மெய்ஞானம் , விஞ்ஞானம்,கலைஞானம் அவையனைத்திலுமே விசாலமான தேர்வு கொண்ட எனதன்புத் தங்கை திருமதி விசாலம் வாழ்க வாழ்க வாழ்க! என்றென்றுமே கடவுள் அவருடனேயே இருப்பார்

பலநாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த

'கிறுக்குத் தாத்தா' சீனு அந்தச்சீமாட்டியை இவ்வாறு கேட்க விரும்புகிறான் :"சங்கீதத்தின் இன்றியமையாத்தன்மையைப் பற்றி சொல்லும்பொழுது தங்களருமைச் சகோதரியைப் பற்றி தாங்கள் எழுதியதை கண்களில் நீர் மல்கியவாறு படித்தேன். அவர் இப்பொழுது எப்படியிருக்கிறாரெனத்

தெரிந்துக் கொள்ள் ஒரு ஆவல் இருக்கிறது

".இதையடுத்து என்னைப் பற்றி சிரு தகவல்கள் அறிவிக்க விரும்புகிறேன் .

N Suresh, Chennai

unread,
Dec 12, 2007, 11:44:56 PM12/12/07
to il...@googlegroups.com
திரு சீனிவாசன் ஐயா,
 
கீழ்க்கண்ட உங்கள் மடலில் மேலூன்றி நிற்கும் மனிதநேயத்தை வணங்குகிறேன்.
 
விசாலம் அம்மாவின் சங்கீத விவரணங்களில் என்போல் மூழ்கின பலர்.  ஆனால் அவர்களின் தங்கையின் உடல்நலம் எப்படியிருக்கோ என்ற தவிப்பின் வெளிப்பாடு உங்களில் மட்டும் கண்டு வியந்து பார்க்கிறேன், பாராட்டுகிறேன்.
 
நெஞ்சார்ந்த நன்றியுடன்
என் சுரேஷ்

 

vishalam raman

unread,
Dec 13, 2007, 1:38:12 AM12/13/07
to il...@googlegroups.com
அன்பு சகோதரர் ஸ்ரீனிவாசன் உங்கள் ஆசிகளுடன் அன்பு கலந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி என் மூத்த சகோதரி
கல்யாணி   போன வருடம்  இயற்கை எய்தி விட்டாள் ,ஒரு கோடி ராம ஜயம் எழுதி முடித்து விட்டாள் ,,அவள் எனக்கு
ஒரு குரு தான்  அன்புடன் விசாலம்

 
On 13/12/2007, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:

Venkatram Shrinivas

unread,
Dec 13, 2007, 1:27:46 AM12/13/07
to il...@googlegroups.com
நான் என்னருமைத் தாயைப் பறிகொடுத்தது எனது எட்டாவது வயதில்
.அப்பொழுது வயது ஆறோ ஏழோ தெரியாது. இரவில் தூங்குவதற்கு எனக்குப் பாயை விரித்துத் தலையணியைப் போட்டார் எனதன்னை.
"ராஜில்லு ஸ்ரீ த்யாக ராஜனுட சரண நீ வல்ல குணதோஷமு" என்றுதப்பும் தவறுமாக முணு முணுத்துக் கொண்டே படுக்கையில் விழுந்தேன்.அதைக் கேட்ட் என் தாய் "ஏண்டா உனக்குப் பாட்டு கூட வருமா? உங்கப்பா மாதிரி, உனக்கு 'சுட்டுப் போட்டா' கூட பாட்டு வராதுன்னு நெனெச்சேன் " என்றார்.

இந்த வயதிலும் என் இருதையத்தைவிட்டு நீங்காது நிலைத்திருக்கும் வருத்தங்கள் இரண்டு

. முதலாவது: தனது இஷ்டப்படி தனக்கு வேண்டியவர்களையெல்லாம் போட்டோ எடுத்த எனது அண்ணன் (என்னைவிட 9/10 வயது மூத்தவன்) என்னுயிருக்குயிரான எனதன்னையின் ஒரு போட்டோ கூட எடுத்து வைக்காதது. இரண்டாவது: என் தந்தையின் ஸ்தானத்தில் எனதண்ணணை வைத்து வளர்ந்தேன். அவரது இஷ்டப்படியெல்லாம் வளர்ந்து வந்த என்னை முறைப் படி சங்கீதம் கற்க அனுமதிக்கவில்லை .

அம்மா போனபிற்கு அடுத்தவருடமோ எப்பொவோ எனக்குச் சரியாக நினைவிற்கு வரவில்லை

.

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னை உக்காரவைத்து என்னுடைய் அண்ணா ஒரு போட்டோ எடுத்தார்

. அப்பொழுது எனக்கு எவ்வளவு வருத்தமாகவும் சிறிது கோபமாகவக்வும் இருந்தது என்றுச் சொல்லத்தேவையில்லை.

ஓரு ஆச்சரியம் என்னவென்றால் வெகு நாட்களாக என்னிடமிருந்த அந்த போட்டோவை

அட்லாண்டாவிலிருக்கும் எனது பெண்ணுடைய ஆல்பத்தில் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறாள் .

அம்மாதிரு பல போட்டோக்கள் அவளது ஆல்பத்திலி இருந்தது எனக்கு மிக்க் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது

. நான் 18/19 வயதில் வரைந்திருந்த என்னுடைய படம் அதில் இருந்தது. (அக் காலங்களில் ' தாறு மாறாக' 'தனக்குத் தோன்றியப்டி செய்த பொழுது போக்கில் வரைவதும் (watercolor) உண்டு.

மேற்சொன்ன இரு படங்களையும் இத்துடன் அனுப்பலாம் எனத் தோன்றியது

. அனுப்பிகிறேன்.

தொந்தரவாக இருந்தால் மன்னிக்கவும்

. படங்களையும் பதிவிரக்கம் செய்து கொள்ள வேண்டாம்.

சீனு

பி

.கு. மேற்சொன்ன ஆல்பத்திலிருந்த வேறு சில படங்களை ஆகிரா அவர்களுக்கு அனுப்புவதற்கு பதிலாக எப்பொழுதும் போல் 'எடாகொட' மாக 'மழலைகள் குழுவிற்கு அனுப்பிவிட்டேன். உலகமெல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரே உண்மையான சங்கீதத்திற்கும் எனக்கும் வளர்ந்து கொண்டு வந்திருக்கும் ஒரு மாதிரியான தொடர்பைப் பிறகு இதே தொடரில் எழுதுகிறேன்.

--
V.Shrinivas (Seenu)
self_circa1940-41.jpg
sefl-portrait_circa1949-50.gif

Venkatram Shrinivas

unread,
Dec 13, 2007, 2:42:34 AM12/13/07
to il...@googlegroups.com
உங்கள் சகோத்ரியின் மறைவைப் படித்தவுடன், எதையோ 'wordpad)ல் எழுதிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் வருத்தம் மேலிட்டதால் ஸ்த்தம்பித்து எழுதுவதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால் தங்களிடமிருந்து 'நல்ல' பதில் தான் வருமென்று எதிர்பார்த்திருந்தவன் நான்.
 
'கடவுள் கண்டிப்பாக தங்களது மிக அருமையான அக்கா (கோமா Coma வில் கூட சங்கீதத்திற்குத் தக்கவாற அசைவு கொடுக்கத் துடங்கியவர்) அவர்களூக்கு சாந்தி கொடுத்து தன்னிடம் சேர்த்துக் கொண்டிருப்பார்.
 
தங்களுக்கும் தங்களது குடும்பத்திற்கும், அக்கா அவர்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் என் அடி மனதினிலிர்ந்து ஆறுதல்கள அனுப்புகிறேன்.


 
(Seenu)

vishalam raman

unread,
Dec 13, 2007, 4:56:49 AM12/13/07
to முத்தமிழ், muththamiz@googlegroups.com., pira...@googlegroups.com, namb...@googlegroups.com
 ராகத்தில் தைவதாந்திய ராகம் என்று ஒன்று ,இதில்
தைவத்திற்கு மேல் அதாவது "த"க்கு மேல் சஞ்சாரம்
கிடையாது ,இந்த ராகம் நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான் அதுதான் குரஞ்சி ,
இதன் ஸ்வரங்கள் ,,ஸ்நிஸ்ரிகமபத
                                         தபமகரிஸ்நிஸ்
 
கல்யாணம் போது "கௌரிக்கல்யாணம் வைபோகமே"பாட்டு
கேட்டு இருப்பீர்கள் அதுதான் இந்த ராகம் 
 
ஸ்ஸாஸ்  ரீ ,,,,   நீ     நிஸரிஸ்  ஸா,,,,,,,
கௌரி க  ல்யாண வைபோக் மே,,,,
 
அடுத்த வரிகளின் ஸ்வரம்
 
ஸாஸாஸ்ஸ   ஸரிஸாஸா ஸரிகமக்  ரீ,,,கரிஸாஸா
ஸ்ரிக  ம,,ப       மகரிஸஸா,,,,,,,நிஸ  ரீஸ,,,ஸாஸஸா ,,,,,
 
இந்த ராகம் கீழ் ஸ விலிருந்து  மேலே த  வரைதான்
போகிறது
 
 
பஞ்சமாந்திய ராகம் ,,,இதில் மதயஸ்தாயி பஞ்சமம் வரைதான் ஸ்வரப்பிரயோகம் 
நவரோஜ் என்ற ராகம் ,இந்தப் பிரிவில் வரும்
 
பதநிஸரிகமப ,,,,,,,,மகரிஸநிதப் ,,இதுதான் அதன்
ஆரோஹணம்  அவரோஹணம்
 
கனராகம்  ,,,,,,,,
எந்த ராகத்தின் ஸவ்ரூபம்  தானம் அல்லது மத்யம் காலம்
பாட எளிதாக விளங்குகிறதோ அதுவே கனராகம்
உதாரணம் ,,கேதாரம்   ரீதிகௌளை நாட்டை  ஸாரங்கா
பௌளி  ,,,
 
நயராகம்  ,,எந்த ராகம்  ஆலாபனை  தானம் இரண்டின் மூலம் தெளிவாகிறதோ அதை நயராகம்   என்பார்கள்
உம் தோடி  பைரவி  கல்யாணி  காம்போஜி  சங்கராபரணம் 
 
தேசிய ரரகம்  ,,எந்த ராகம் ஆலாபனையினாலேயே  உடனே
தெளிவாகிவிடுகிறதோ அதை தேசிய ராகம் என்பர்
 
உம் கானடா  ஹிந்துஸ்தான் காபி  பெஹாக்  ஹமீர்கல்யாணி ஜெஞ்சூடி  இந்த ராகமெல்லாம்  வடக்கிலும்
ஹிந்துஸ்தானி கிளாஸிகலில் இருக்கின்றன,
 
கர்னாடக  தேசிய ராகங்கள்,,,,இவை தென்னிந்தியாவில்
தோன்றி பின் வளர்ந்தவை 
உம்  ஆனந்தபைரவி  கேதார கௌளம் நீலாமபரி  ,பைரவி
 
சில தேசிய ராகங்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவை
சிந்துபைரவி  ஹொந்த்ஸ்தானி பெஹாக் கமாஸ்
ஜஞ்ஜூடி
 
சுத்த ஸங்கீர்ண ராகங்கள் , ,,இதில் கோமள தீவர பேதங்கள் வராமல் ஒரே லட்சணத்துடன் விளங்கும் ராகம்
உம் மாயாமாளவகௌளை  மோஹனம்  மத்யமாவதி
ஸ்ரீரஞ்சனி
 
 
ரஞ்சகத்தின் பொருட்டு வேறொரு ராகத்தின் சாயையுடன்
கூடி கலப்பு வரும் இதை  ஸாலக் ராகம் என்பார்கள்
சினிமா மெட்டுக்கள் பல இதில் வரும்
ஸாரங்கா   சௌராஷ்டிரம்  சிவரஞ்சனி
ஆஹிரி  த்வஜாவந்தி    இதை மிசர ராகம் என்று சொல்வார்கள்,,,,,,,,,

Pushpa.Raghavan

unread,
Dec 13, 2007, 11:36:15 AM12/13/07
to இல்லம் (your HOME)
இசையால் முடியாதது ஏதும் இல்லை.
எனக்கு நேற்று வந்த meyilல் ஒரு பகுதியை அனுப்பியுள்ளேன்.
music therapy -
Email 1 : musicth...@gmial.com
Email 2 : in...@nada.in
Website, if any : www.nada.in
நான் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை

அன்புடன்
பிச்சை ராகவன்
> ...
>
> read more »
Reply all
Reply to author
Forward
0 new messages