ஆகிரா துவக்க பயனாளர்களூக்காக எழுதரார். இப்ப நான் எழுதப்போறது கணினி கொஞ்சம் பழகினவங்களுக்காக.
மொஸிலா பயர்பாக்ஸ் இப்ப பலரும் விரும்பி உபயோகிக்கிற உலாவி. இதைப் பத்தித்தான் இப்ப எழுதபோறேன்.
உலாவி? அதாங்க , ப்ரௌசர்.
பலரும் விண்டோஸ் பயன்படுத்தறாங்க. அதிலே முன்னிருப்பா வரது இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர். உலகத்திலே பலரும் பயன்படுத்துவது என்கிறதாலே இணைய தாக்குதல் ஏதாவது நடத்த இதைதான் முதல்ல பயன்படுத்தறாங்க. அதுவே ஒரு பலகீனம்.
மைக்ரோஸாப்ட்/ விண்டோஸ் ஐ பிடிக்காதவங்கன்னு ஒரு பெரிய கும்பலே இருக்கு. அவங்க ஐ ஈ போல ஓட்டையான ப்ரௌசர் இல்லைம்பாங்க. கிடக்கட்டும். நாம பயர்பாக்ஸ்ஸோட நல்ல விஷயங்களை பாத்துகிட்டு போகலாம்.
உலாவி இலவச திறந்த நிரல் பல் இயங்குதள இணைய உலாவியாகும்.அதாவது இதோட ஸோர்ஸ் கோட் எல்லாருக்கும் கிடைக்கும். அதே போல விண்டோஸ். லீனக்ஸ், மாக் போல எல்லா இயங்கு தளம் (OS)லேயும் வேலை செய்யும். இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும்.
இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது கெக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயன் படுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தர நிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பயர்பாக்ஸ் 3.5 ஐ 221,264,174 இதுவரை தரவிரக்கி இருக்காங்க. நீங்களும் வேணுமானால் http://www.mozilla.com/en-US/firefox/ போய் பாருங்க.
பயர்பாக்ஸோல பெரிய பலம் அது அடிப்படையான சிலதை மட்டும் கொடுத்துவிட்டு மத்ததை நாமே நிறுவிக்க வழி செய்கிறதுதான்.
புரியலையா?
ஐஈ நிறுவணும்ன்னா 30-40 எம்பி தரவிறக்கி நிறுவணும். பெரிய கோப்பா இருக்கிறதாலே இயக்கமும் மெதுவா இருக்கும். அப்புறம் வேணுமோ வேணாமோ பல விஷயங்கள் நிறுவப்படும்.
பயர்பாக்ஸ் அப்படி இல்லை.
அடிப்படை உலாவியை
நிறுவ 10 எம்பிக்கு
உள்ளேதான் கோப்பு அளவு.
உலாவலை பொருத்து
தேவையானதை மேற்கொண்டு
நிறுவிக்கலாம். இதுக்கு
ஆட் ஆன்ஸ் ன்னு பேர். இவற்றை
எல்லாம் மென்பொருள் விருத்தியாளர்கள்
உருவாக்கி இருக்காங்க.
திறந்த நியமத்தோட
பலத்தில இது ஒண்ணு. யார்
வேணுமானாலும் இப்படி உருவாக்கி
வெளியிடலாம். இந்த
விஷயத்திலே வேற எந்த உலாவியாலும்
பயர்பாக்ஸ் ஐ அடிச்சுக்க
முடியலே. இதுகளை
ஒவ்வொண்ணா மேலே பார்க்கலாம்.
திவாஜி
--
முதல்ல பயர்பாக்ஸ் ஐ பாதுகாப்போட தேவையான படி மாத்திக்கலாம். அப்புறமா உலாவலாம், சரிதானே?
ஆட் ஆன்ஸ் நிறுவ மெனுவிலே tools> add ons தேர்ந்தெடுங்க. அதிலே முதல் பட்டன் get add ons. சொடுக்குங்க.
இப்ப வர சாளரத்திலே ஆடான் பெயர் தெரிஞ்சா நேரடியா தேடி எடுத்துக்கலாம். அதுவே கூட சிலதை பரிந்துரைக்கும். இல்லை browse allஐ சொடுக்கி மோசில்லா பக்கத்துக்கு போய் அங்கே விலாவாரியா வகை வகையா அடுக்கி வைச்சு இருக்கிறதை பாத்து தேவையானதை இன்ஸ்டால் ன்னு சொடுக்கினா வேலையை அது முடிச்சுடும். அப்புறமா பயர்பாக்ஸ் ஐ ஒரு முறை மூடி திறந்தா அது வேலை செய்ய ஆரம்பிச்சுடும்.
இங்கே ஒரு எச்சரிக்கை. நாம ஆட் ஆன் அதிகமா சேக்க சேக்க மோசில்லாவோட வேகம் குறைஞ்சுடும். பரீட்சை பண்ணி பாத்துட்டு தேவையானதை வெச்சுகிட்டு மத்ததை எடுத்துடலாம்.
முதல்ல ad block.
நமக்கு பல வலைப்பக்கங்களிலே கடுப்பாக்கறது விளம்பரங்கள்தான். நமக்கு இலவசமா பல விஷயங்கள் கிடைக்கிறப்ப இதை எல்லாம் ஆட்சேபிக்கக்கூடாதுன்னு ஒரு வாதம் இருந்தாலும் சில சமயம் ரொம்பவே கடுப்பாகும் அளவு விளம்பரங்கள் ஆக்கிரமிச்சுக்கும்.
இதை எல்லாம் தரவிறக்காம இருந்தா என்னன்னு தோணினா இந்த நீட்சி - அதாங்க ஆட ஆன் - உங்களுக்குத்தான்.
அடுத்து DownThemAll
ஒரு அருமையான வலைப்பக்கத்தை பாக்கிறோம். ஒரு டுடோரியல்ன்னு வெச்சுக்கலாம்.
அதிலே பல பக்கங்களுக்கு தொடுப்பு இருக்கும். ரெண்டாவது அத்தியாயம் மூணாவது அத்தியாயம்ன்னு .. இத்தனையும் ஒவ்வொண்ணா சொடுக்கி சேமிச்சு....வாணாங்க. இந்த நீட்சியை இயக்கினா ( வலது சொடுக்கிலே தேர்வு கிடைக்கும்) அந்த பக்கத்திலே இருக்கிறதை எல்லாமே பட்டியல் போட்டுடும். தேவை இல்லாததை நீக்கிட்டு இறக்குன்னா எல்லாத்தையும் சப்ஜாடா இறக்கி சேமிச்சுடும்.
FlashBlock வலைப்பக்கத்திலே இருக்கிற ப்ளாஷ் எல்லாத்தையும் தடுக்கும். இல்லை பார்க்கணும்ன்னா ப்ளாஷ் மேலேயே சொடுக்கி காட்டுன்னு சொல்லலாம்.
ImgLikeOpera
வலையிலே உலாவும்போது அதிகமா தரவிறக்கப்பட்டு போக்கு வரத்து அளவை அதிகம் ஆக்குகிறது படங்கள்தான். இந்த நீட்சி படங்கள் தரவிறக்கப்படுவதை தடுக்கும். இதிலே தேர்வுகளும் கிடைக்கும். ஏற்கெனெவே கணினியிலே இருக்கிறதை காட்டு; எல்லாத்தையும் காட்டு; ஒண்ணுமே காட்டாதே ன்னு பலவிதமா செட் பண்ணலாம்.
இப்போதெல்லாம் நெருப்பு நரி தான் நான் அதிகமாய்ப் பயன்படுத்தறேன். இரண்டு ஐடியில் ஜிமெயில் திறக்கும்போது மட்டும் எக்ஸ்ப்ளோரரும் பயன் படுத்துவேன். நெருப்பு நரியில் வேகம் இருக்கு. தானே அப்டேட்டும் செய்துக்கிறது. என்றாலும் இதிலே இணையச் செலவு அதிகம் ஆகும்னு சிலர் சொல்றாங்க.
முக்கியமாய் டவுன்லோடுக்கும், அப்லோடுக்கும்.
எக்ஸ்ப்ளோரரில் அது இல்லைனும் சொல்றாங்க. ஆனால் எக்ஸ்ப்ளோரரில் ஜிமெயில் சரியாவே இயங்கறதில்லை. என்ன காரணம்??? மத்த தளங்கள் சரியா வரும். ஜிமெயிலில் மடல் அனுப்பவோ, காப்பி, பேஸ்ட் பண்ணறதோ எக்ஸ்ப்ளோரரில் கொஞ்சம் மெதுவாய்த் தான் நடக்கிறது.
On Sep 28, 8:24 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/9/27 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > இப்போதெல்லாம் நெருப்பு நரி தான் நான் அதிகமாய்ப் பயன்படுத்தறேன். இரண்டு
> > ஐடியில் ஜிமெயில் திறக்கும்போது மட்டும் எக்ஸ்ப்ளோரரும் பயன் படுத்துவேன்.
> > நெருப்பு நரியில் வேகம் இருக்கு. தானே அப்டேட்டும் செய்துக்கிறது. என்றாலும்
> > இதிலே இணையச் செலவு அதிகம் ஆகும்னு சிலர் சொல்றாங்க.
>
> நாம இணையத்திலே செலவழிக்கிற நேரம்தான் காரணம். சாதாரணமா நாம இந்த இந்த வேலைகள்
> மட்டும் முடிக்கணும்ன்னு உட்காரதில்லை. நேரக்கட்டுப்பாடுதான் இருக்கும். அப்படி
> இருக்கும்போது வேகமான உலாவினா இன்னும் அதிக தரவு போக்கு வரத்து இருக்கும்.
> அப்போ செலவுதான்.
>
> > முக்கியமாய் டவுன்லோடுக்கும், அப்லோடுக்கும்.
>
> ஒரே அளவு தரவுக்கு செலவு எப்படி அதிகமா ஆகும்? சொன்னவரை கேளுங்க!
>
> > எக்ஸ்ப்ளோரரில் அது இல்லைனும் சொல்றாங்க. ஆனால் எக்ஸ்ப்ளோரரில் ஜிமெயில்
> > சரியாவே இயங்கறதில்லை. என்ன காரணம்??? மத்த தளங்கள் சரியா வரும். ஜிமெயிலில்
> > மடல் அனுப்பவோ, காப்பி, பேஸ்ட் பண்ணறதோ எக்ஸ்ப்ளோரரில் கொஞ்சம் மெதுவாய்த் தான்
> > நடக்கிறது.
>
> நான் எக்ஸ்ப்லோரர் பயன்படுத்தி ஒரு மாமாங்கம் ஆகுது. அதனால தெரியலை.
> :-))))
> திவாஜி
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை நான் கணிசமான காலத்திற்கு உபயோகித்து வந்தேன்.
இப்போது உபயோகிப்பதில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. இது குறித்து
எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யுமாறு
வேண்டுகிறேன். அவற்றுள் இரண்டு:
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை நெருப்பு நரி என்று சொல்வதும் விண்டோஸ்
இயக்கியை ஜன்னல் என்று சொல்வது போலுள்ளதே. இவ்வாறு சொல்லலாமா?
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை ஆபரேடிங்க் சிஸ்டம் இருக்கும் டைரக்டரி (say C)
தவிர்த்து வேறு டைரக்டரியில் (say D) நிறுவ இயலுமா?
அன்பு திவா,
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை நான் கணிசமான காலத்திற்கு உபயோகித்து வந்தேன்.
இப்போது உபயோகிப்பதில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. இது குறித்து
எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யுமாறு
வேண்டுகிறேன். அவற்றுள் இரண்டு:
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை நெருப்பு நரி என்று சொல்வதும் விண்டோஸ்
இயக்கியை ஜன்னல் என்று சொல்வது போலுள்ளதே. இவ்வாறு சொல்லலாமா?
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவிலை ஆபரேடிங்க் சிஸ்டம் இருக்கும் டைரக்டரி (say C)
தவிர்த்து வேறு டைரக்டரியில் (say D) நிறுவ இயலுமா?
பயர்பாக்ஸ்லே ஆட் ஆன்ல அடுத்து பாக்கிறது முக்கியமானது. நோ ஸ்கிரிப்ட்ஸ். (NoScripts) நம்ம கணினில பல குழப்பங்களை ஏற்படுத்துவது நாம பாக்கிற சில தளங்களிலிருந்து நமக்குத்தெரியாம இயங்குகிற ஸ்கிரிப்ட்கள்தான்.
இந்த ஆட்ஆன் இதையெல்லாம் இயங்குறதை நிறுத்திடும். ஜாவா ஸ்கிரிப்ட்கள் மூலமா பல விஷயங்கள் ஊடாடல் முறையில கேட்டு வாங்கி நமக்கு தரப்படுகின்றன. உதாரணமா தேடல்கள். இப்படி இருக்கும் போது நாம பாட்டுக்கு இது இயங்கறதை தடுத்தா பிரயோஜனம் இல்லாம போகுமே. கவலை வேண்டாம். கீழ் பட்டியில ஆங்கில எஸ் மாதிரி ஒரு சின்னம் தெரியும் பாருங்க. அது சிவப்பா இருந்தா எதையோ தடுக்குதுன்னு அர்த்தம். அதை சொடுக்கினா மெனு விரியும். அதுல allow ன்னு ஆரம்பிச்சு ஒரு பட்டியலே இருக்கும். அத பாத்தாதான் எவ்வளவு விவரம் நம்ம கணினியிலிருந்து வெளியே போகுதுன்னு ஆச்சரியமா இருக்கும். குறிப்பா பல வசதிகளை சேத்து இருக்கிற வலைப்பூக்களில பாக்கலாம். allow all scripts temporarily ன்னு தேர்வை சொடுக்கினா எல்லா ஸ்கிரிப்ட்களும் தற்காலிகமா அனுமதிக்கப்படும். அடுத்த அமர்வுக்கு திருப்பி அனுமதி தரணும். நமக்கு நம்பகமான தளம் பிரச்சினை இராதுன்னு நல்லா தெரிஞ்சா allow.... தேர்ந்தெடுக்கலாம். அப்படி செய்தா அந்த தளம் எப்பவுமே அனுமதிக்கப்படும். தெரியாத தளங்களில இப்படி செய்யாதீங்க. வேற வழியில்லை தகவல் பெற அவசியம்ன்னா தற்காலிகமா அனுமதிக்கலாம்.
என்னப்பா நீ பாட்டுக்கு இதை தடு அதை தடுன்னு சொல்லிகிட்டு இருக்க! எனக்கு வரையரை இல்லாத அகலப்பட்டை இணைப்பு இருக்கு. வலையில பல விஷயங்களை ஜாலியா அனுபவிக்கப்பாக்கிறேன். இதுக்கு இல்லைன்னா இணையம் எதுக்கு என்கிறீங்களா?
சரிதாங்க. புரியுது. உங்களுக்கான ஆட்ஆன்களை இப்ப தரேன்.
முதல்ல பாக்ஸி ட்யூன்ஸ் (foxytunes). ரொம்ப பிரசித்தமானது. அடிக்கடி இணையத்தில பாட்டு கேட்கிறவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். இணைய பக்கத்தில பாட்டு சுட்டியை தட்டினா அது அந்த பாடலை தரவிறக்கி பாடிக்காட்டும்.
கூல் ஐரிஸ் (cooiris) பேருக்கு ஏத்தாப்போல கூல் தான். அளவு கொஞ்சம் அதிகம். பத்து எம்பி கிட்டத்தட்ட. இதை ஆதரிக்கிற தளங்களுக்கு போயிட்டா அப்புறம் அனுபவம் அற்பதம்தான். தளத்தில இருக்கிற படங்களை முப்பரிமாணத்தில மொத்தமா காட்டும். அதை சொடுக்கி நடுவில சக்கரம் இருந்தா அதை சுழட்டி சின்னது/ பெரிசு பண்ணலாம். தேவையான படத்தை சொடுக்கினா அதை பெரிசா காட்டும். தளம் ஒண்ணும் இல்லைன்னாலும் நம்ம கணினியில இருக்கிற படங்களைக்கூட இதே மாதிரி பாக்கலாம். வல்லி அக்கா மாதிரி படங்களை அதிகமா தன் ப்ளாக்ல போடறவங்க இதை செயல் படுத்திக்கலாம். மேலே சொல்லறதை விட ... அனுபவிச்சுப்பாருங்க.
விடியோ டவுன் லோடர். (videodownloader) தளத்தில நல்ல விடியோ ஒண்ணை பாக்கிறோம். அதை இறக்கி சேமிக்க ஆசை இருந்தாலும் இதுக்கு அனுமதி இராது. இப்படிப்பட்ட சமயத்தில உதவுகிறது இது. யூட்யூப், கூகுள் விடியோ, மெட்கேப் போன்ற தளங்களில நல்லா பயனாகும்.
இமேஜ் ஜூம் (imagezoom) தளங்களில நாம பாக்கிற படங்களை பெரிசா ஆக்கி பாக்க உதவும். மேலே ஒண்ணும் சொல்ல வேணாமே?
அடுத்த பதிவில இவற்றுக்கான சுட்டிகளை தரேன். பயர்பாக்ஸ் நிறுவினபின் இதை நேரடியா சொடுக்கி நிறுவிக்கலாம்.
இப்ப இணைய வேகம் ரொம்ப மோசமா இருக்கு.பக்கங்கள் திறக்கலை.
திவாஜி
பயர்பாக்ஸ்லே பயணர்களை பொறுத்த வரை முதல்ல முக்கியமா வந்த மாறுதல் டேப் ப்ரௌசிங். இது இப்ப மத்த உலாவிகளிலேயும் வர ஆரம்பிச்சாச்சு. ஒரு தளத்தை பாக்கிறப்பவே இன்னொரு தளத்தை திறக்கலாம். சில தளங்கள் திறக்க நேரமாகும். இந்த நேரத்தை வீணாக்காமல் வேற ஒண்ணை படிக்கலாம் பாக்கலாம்.
இப்படி படிக்க ஒவ்வொரு சாளரமா திறக்காம பக்கத்து பக்கத்துல கீற்றுகளை திறந்துக்கலாம். சுலபமா இருக்கும்.
அடுத்த கீற்றை திறக்க நாம் செய்ய வேண்டியது அதன் மேல சொடுக்கறதுதான். இந்த சொடுக்கியால சொடுக்காம பல வேலைகளை செய்ய பயன்படுவது மௌஸ் ஜெஸ்ட்ஸர்ஸ் என்கிற ஆட்ஆன். சொடுக்கியை நகர்த்தும் வழியாகவே பலதையும் செய்யலாம்.
நிறைய ஆட்ஆன்ஸ் இருக்கு. தமிழுக்குன்னு இருக்கிறதை இப்ப பாக்கலாம். Tamilkey என்கிறது நமக்கு முக்கியமானது. அழகியை பயன்படுத்தாத துர்பாக்கியசாலிகள் இதை பயன்படுத்தி தமிழ்ல எழுதலாம். ஆட்ஆனை நிறுவிய பிறகு அஞ்சல் எழுத சாளரம் திறந்துட்டு வலது சொடுக்கு செய்யுங்க. (அது கான்டெக்ஸ் மெனுவை காட்டும்ன்னு சொல்லி இருக்கேன் இல்லையா?) மெனுவில தமிழ்விசை ன்னு இருக்கும் அதை சொடுக்கினா உள்ளீட்டு தேர்வுகள் கிடைக்கும். சிலர் விடாப்பிடியா பிடிச்சு கொண்டிருக்கும் பழைய பாமினி முதல் பொனடிக் (அதாங்க ammaa= அம்மா) தமிழ்99 ரெமிங்டன் போல பலதும் இருக்கு. ஒரு முறை அதை பாத்து எது வேணும்ன்னு முடிவு பண்ணிட்டா அதுக்கான் விசைப்பலகை குறுக்கு விசை என்னன்னு நினைவு வெச்சுக்கலாம். அடுத்த முறை உள்ளிடும் போது வலது சொடுக்கு எல்லாம் தேவை இல்லை. பொனடிக்ல தட்டச்ச ஆல்ட் எஃப் 8 (alt + F8) அமுக்கினா போதும்.கூல்! நடுவில திருப்பி ஆங்கிலத்தில எழுதணுமா? F9. அங்கிருந்து திருப்பி தமிழுக்கு தாவ? F9. அதாவது வலது இடது வலது இடதுன்னு மாறுகிறாப்போல இது ஒரு டாகிள் விசை.
adiyan இன்னொரு அருமையான ஆட்ஆன். அப்புசாமியை திடீர்ன்னு ஞாபகம் வருது. கதை படிக்கலாம் ன்னு appusami.com போய் பாத்தா எல்லாம் குப்பையா தெரியுது. ஒண்ணும் புரியலை.
இது ஒண்ணுமில்லை. அந்த தளத்தில எல்லாம் பழைய திஸ்கி மறையாக்கத்தில (encoding) இருக்கு. இதை எப்படி படிக்கிறது? அதியனை நிறுவிட்டு இந்த மாதிரி பக்கங்களில வலது சொடுக்கு அதியன் மெனுவை பாருங்க. பழைய மறையாக்கப்பட்டியலும் மாத்த வேண்டிய மறையாக்கமும் பாக்கலாம். எந்த முறைக்கு மாத்தணும்ன்னு கேட்கறீங்களா? யூனிகோடுக்குத்தான். மாத்திய பின்னே பக்கம் திருப்பி லோட் ஆகி இப்ப சரியா படிக்கிற மாதிரி காட்டும். தமிழ் சொல் திருத்தி எல்லாம் இப்ப வளந்து கொண்டு இருக்கு.
முதல்ல ad block. https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865
அடுத்து DownThemAll https://addons.mozilla.org/en-US/firefox/addon/201
FlashBlock https://addons.mozilla.org/en-US/firefox/addon/433
ImgLikeOpera https://addons.mozilla.org/en-US/firefox/addon/1672
திவாஜி
நோ ஸ்கிரிப்ட்ஸ். (NoScript) https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
பாக்ஸி ட்யூன்ஸ் (foxytunes). https://addons.mozilla.org/en-US/firefox/addon/219
கூல்
ஐரிஸ் (cooiris) https://addons.mozilla.org/en-US/firefox/addon/219
விடியோ டவுன் லோடர். (videodownloader) https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390
இப்ப ப்ளாஷ் விடியோ ரிசோர்ஸ் டவுன் லோடர் இன்னும் பாப்புலரா இருக்கறதா தெரியுது.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/5229
இமேஜ்
ஜூம் (imagezoom) https://addons.mozilla.org/en-US/firefox/addon/139
எனது உபயோகத்துக்காக உள்ள கணினியில் இடம் பற்றாக்குறையினால் ஃபயர்ஃபாக்ஸ்
உலாவியை எடுத்துவிட்டேன். எனது குழந்தைகளின் உபயோகத்துக்காக உள்ள
கணிணியில் நிறுவித் தாங்கள் விளக்கியுள்ள ஆட்-ஆன் வசதிகளை நிறுவிப்
பார்க்கவுள்ளேன்.
தற்போது நான் 20க்கும் மேற்பட்ட இணையதளங்களை நடத்தி வருகிறேன்.
இவற்றுக்கான கோப்புகளை பதிவேற்றம் செய்ய இன்டர்னெட் எக்ப்ரஸ்
வலையுலாவியையே எஃப்.டி.பி. பயன்பாட்டுக்கு உபயோகித்து செய்து வருகிறேன்.
இத்தகைய உபயோகம் ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவியில் உள்ளதா?
ஃபயர்ஃபாக்ஸ் வலையுலாவியை
On Oct 8, 11:35 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> tamilkeyhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/2994
> adiyanhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/3864
புதிய மடிக்கணிணி ஒன்றை பி.டெக். ஐ.டி. பயிலும் என் மகனுக்காக
வாங்கியுள்ளேன். இதில் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை நிறுவிய பின் விவாதத்தில்
என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையை மழலைகள்.காம்
தளத்தில் அனைவரின் பார்வைக்காகப் பிரசுரம் செய்ய தங்கள் அனுமதியைக்
கோருகிறேன்.
ஆகிரா
அன்பு திவா,
புதிய மடிக்கணிணி ஒன்றை பி.டெக். ஐ.டி. பயிலும் என் மகனுக்காக
வாங்கியுள்ளேன். இதில் ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை நிறுவிய பின் விவாதத்தில்
என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இக்கட்டுரையை மழலைகள்.காம்
தளத்தில் அனைவரின் பார்வைக்காகப் பிரசுரம் செய்ய தங்கள் அனுமதியைக்
கோருகிறேன்.
ஆகிரா
On Oct 26, 12:24 pm, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> 2009/10/26 akr <akrconsulta...@gmail.com>
ஃபயர்ஃபாக்ஸ் உலாவியை எனது மகன் உபயோகிக்கும் கணிணியில் நிறுவியுள்ளேன்.
நன்றாக வேலை செய்வதாக என் மகன் கூறுகிறான். இன்னமும் எனது லாப்டாப்
கணிணிக்கு விண்டோஸ் 7 ஆபரேடிங்க் சிஸ்டம் வந்து சேரவில்லை. இட் இஸ் ஆன் த
வே..
வந்ததும் ஃபயர்ஃபாக்ஸை அதிலும் நிறுவிடுவேன்.
http://www.mazhalaigal.com/education/it/internet/0907tv_firefox.php
தங்கள் கட்டுரையின் முதல் அத்தியாயத்தை மேற்கண்ட பக்கத்தில்
பதிவேற்றியுள்ளேன். அடுத்தடுத்த அத்தியாயங்களைத் தொடர்ந்து வரும்
மழலைகள்.காம் இதழில் வெளியிடுகிறேன்.
தயைகூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள்.
ஆகிரா
On Oct 8, 11:32 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> நோ ஸ்கிரிப்ட்ஸ். (NoScript)https://addons.mozilla.org/en-US/firefox/addon/722
>
> பாக்ஸி ட்யூன்ஸ் (foxytunes).https://addons.mozilla.org/en-US/firefox/addon/219
>
> கூல் ஐரிஸ் (cooiris) https://addons.mozilla.org/en-US/firefox/addon/219
>
> விடியோ டவுன் லோடர். (videodownloader)https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390
>
> இப்ப ப்ளாஷ் விடியோ ரிசோர்ஸ் டவுன் லோடர் இன்னும் பாப்புலரா இருக்கறதா
> தெரியுது.
>
> https://addons.mozilla.org/en-US/firefox/addon/5229
>
> இமேஜ் ஜூம் (imagezoom)https://addons.mozilla.org/en-US/firefox/addon/139
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
:-)
இன்னமும் எனது லாப்டாப்
> கணிணிக்கு விண்டோஸ் 7 ஆபரேடிங்க் சிஸ்டம் வந்து சேரவில்லை. இட் இஸ் ஆன் த
> வே..
அட அதுக்கு காத்து இருக்கனுமா என்ன? டவுன் லோட் பண்ணா அடுத்த ஓஎஸ்லேயும்
நிறுவிடலாமே! இது பத்தி எழுதறேன்.
> வந்ததும் ஃபயர்ஃபாக்ஸை அதிலும் நிறுவிடுவேன்.
>
> http://www.mazhalaigal.com/education/it/internet/0907tv_firefox.php
>
> தங்கள் கட்டுரையின் முதல் அத்தியாயத்தை மேற்கண்ட பக்கத்தில்
> பதிவேற்றியுள்ளேன். அடுத்தடுத்த அத்தியாயங்களைத் தொடர்ந்து வரும்
> மழலைகள்.காம் இதழில் வெளியிடுகிறேன்.
>
> தயைகூர்ந்து தொடர்ந்து எழுதுங்கள்.
>
ஆகட்டும்...
திவாஜி