Re: அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்....!

18 views
Skip to first unread message

bala murali

unread,
Sep 25, 2011, 11:45:08 PM9/25/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

( குறள் எண் : 349 )

மு.வ : இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா : ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

என்றும் அன்புடன்... நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமம்: http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
வலைப்பூ: http://www.nagaisbalamurali.blogspot.com/

bala murali

unread,
Sep 26, 2011, 11:03:51 PM9/26/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

( குறள் எண் : 490 )

மு.வ : பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா : ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

bala murali

unread,
Sep 27, 2011, 11:45:05 PM9/27/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

( குறள் எண் : 292 )

மு.வ : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

சாலமன் பாப்பையா : குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

bala murali

unread,
Sep 29, 2011, 10:43:51 PM9/29/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

( குறள் எண் : 380 )

மு.வ : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

சாலமன் பாப்பையா : விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை?

bala murali

unread,
Sep 30, 2011, 10:44:02 PM9/30/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
  -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

( குறள் எண் : 312 )

மு.வ : ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா : நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

bala murali

unread,
Oct 1, 2011, 11:43:18 PM10/1/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
  -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

( குறள் எண் : 375 )

மு.வ : செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

சாலமன் பாப்பையா : நாம் பணத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சியில் காலம், இடம், தொழில் ஆகியவை சரியாக இருந்தாலும், தீய விதி குறுக்கிட்டால் நட்டம் உண்டாகும். அவை சரியாக இல்லை என்றாலும் நல்ல விதி வருமானால் லாபம் உண்டாகும்.

bala murali

unread,
Oct 2, 2011, 11:03:19 PM10/2/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

  -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

( குறள் எண் : 66 )

மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

bala murali

unread,
Oct 4, 2011, 1:35:05 AM10/4/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

  -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

( குறள் எண் : 857 )

மு.வ : இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார்.

சாலமன் பாப்பையா : மனவேறுபாட்டோடு கேடான அறிவையும் உடையவர், வெற்றி தரும் நீதிநூற் பொருளை அறியமாட்டார்.

bala murali

unread,
Oct 4, 2011, 11:34:55 PM10/4/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.

( குறள் எண் : 736 )

மு.வ : பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா : பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

bala murali

unread,
Oct 6, 2011, 1:59:47 AM10/6/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

( குறள் எண் : 864 )

மு.வ : ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

சாலமன் பாப்பையா : கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.

bala murali

unread,
Oct 6, 2011, 11:00:32 PM10/6/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

( குறள் எண் : 586 )

மு.வ : துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

சாலமன் பாப்பையா : செல்ல முடியாத இடங்களுக்கும் கூடத் துறவியர் வேடத்தில் சென்று, அறிய வேண்டுவற்றை அறிந்து, அங்கே பிடிபட்டால், பிடித்தவர் எத்தகைய துன்பம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாதவரே ஒற்றர்.

bala murali

unread,
Oct 7, 2011, 11:10:05 PM10/7/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.

( குறள் எண் : 821 )

மு.வ : அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

சாலமன் பாப்பையா : மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.

bala murali

unread,
Oct 9, 2011, 12:10:16 AM10/9/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

( குறள் எண் : 909 )

மு.வ : அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா : அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.

bala murali

unread,
Oct 9, 2011, 11:09:36 PM10/9/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

( குறள் எண் : 412 )

மு.வ : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.

சாலமன் பாப்பையா : செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

bala murali

unread,
Oct 10, 2011, 11:14:54 PM10/10/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.

( குறள் எண் : 1253 )

மு.வ : யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

சாலமன் பாப்பையா : என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

bala murali

unread,
Oct 13, 2011, 12:05:24 AM10/13/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

( குறள் எண் : 643 )

மு.வ : சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

சாலமன் பாப்பையா : நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்)

bala murali

unread,
Oct 15, 2011, 11:24:16 PM10/15/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு.

( குறள் எண் : 452 )

மு.வ : சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா : தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

bala murali

unread,
Oct 17, 2011, 11:49:49 PM10/17/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.

( குறள் எண் : 449 )

மு.வ : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா : முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

bala murali

unread,
Oct 18, 2011, 11:55:35 PM10/18/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் வூர்.

( குறள் எண் : 1129 )

மு.வ : கண் இமைத்தால் காதலர் மறைந்து போதலை அறிகின்றேன், அவ்வளவிற்கே இந்த ஊரார் அவரை அன்பில்லாதவர் என்று சொல்லுவர்.

சாலமன் பாப்பையா : என் கண்கள் இமைத்தால் உள்ளிருக்கும் என்னவர் மறைவதை அறிந்து நான் கண்களை இமைப்பதில்லை. இதை விளங்கிக் கொள்ளாத உறவினர் அவரை அன்பற்றவர் என்கின்றனர்.

bala murali

unread,
Oct 27, 2011, 12:34:11 AM10/27/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

( குறள் எண் : 1233 )

மு.வ : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

சாலமன் பாப்பையா : அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

bala murali

unread,
Oct 28, 2011, 12:34:26 AM10/28/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

( குறள் எண் : 815 )

மு.வ : காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

சாலமன் பாப்பையா : நாம் பல வகையில் உதவி செய்தாலும் நமக்குப் பாதுகாப்பாக இராத அற்பர்களின் நட்பு, இருப்பதிலும் இல்லாதிருப்பதே நல்லது.

bala murali

unread,
Oct 29, 2011, 12:17:42 AM10/29/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.

( குறள் எண் : 987 )

மு.வ : துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

சாலமன் பாப்பையா : தமக்குத் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்யா விட்டால் சான்றான்மையினால் பயன்தான் என்ன?

bala murali

unread,
Oct 29, 2011, 11:43:58 PM10/29/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.

( குறள் எண் : 795 )

மு.வ : நன்மை இல்லாதச் சொற்களைக் கண்டபோது வருந்தும்படியாக இடிந்துச் சொல்லி, உலகநடையை அறிய வல்லவரின் நட்பை ஆராய்ப்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா : நாம் தவறு செய்ய எண்ணினால் நம் மனம் நோகச் சொல்லியும் செய்து விட்டால் கண்டித்தும், உலக வழக்கினை அறிந்து செய்யும் ஆற்றலைப் பெற்றும் உள்ளவரை அறிந்து அவர் நட்பைக் கொள்க.

sk natarajan

unread,
Oct 31, 2011, 10:22:10 AM10/31/11
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam
குறளுடன்   கூடிய  வணக்கம்  இனிமை

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/10/30 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Nov 1, 2011, 12:29:42 AM11/1/11
to tamila...@googlegroups.com, tamizhs...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam
மிக்க நன்றி ஐயா!

2011/10/31 sk natarajan <sknatar...@gmail.com>

குறளுடன்   கூடிய  வணக்கம்  இனிமை

bala murali

unread,
Nov 1, 2011, 12:30:23 AM11/1/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

( குறள் எண் : 395 )

மு.வ : செல்வர் முன் வறியவர் நிற்பது போல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்விக் கற்றவரே உயர்ந்தவர், கல்லாதவர் இழிந்தவர்.

சாலமன் பாப்பையா : செல்வர் முன்னே ஏழைகள் நிற்பது போல் ஆசிரியர் முன்னே, விரும்பிப் பணிந்து கற்றவரே உயர்ந்தவர்; அப்படி நின்று கற்க வெட்கப்பட்டுக் கல்லாதவர், இழிந்தவரே.

bala murali

unread,
Nov 2, 2011, 12:42:00 AM11/2/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

( குறள் எண் : 54 )

மு.வ : இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

சாலமன் பாப்பையா : கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

bala murali

unread,
Nov 4, 2011, 1:57:52 AM11/4/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

( குறள் எண் : 264 )

மு.வ : தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா : பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.

bala murali

unread,
Nov 5, 2011, 12:28:56 AM11/5/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

( குறள் எண் : 392 )

மு.வ : எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா : வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

sk natarajan

unread,
Nov 5, 2011, 6:43:37 AM11/5/11
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam
இனிய  வணக்கங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/11/5 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Nov 7, 2011, 12:01:09 AM11/7/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

( குறள் எண் : 208 )

மு.வ : தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

சாலமன் பாப்பையா : பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.

bala murali

unread,
Nov 7, 2011, 10:19:21 PM11/7/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

( குறள் எண் : 800 )

மு.வ : குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.

சாலமன் பாப்பையா : குற்றம் அற்றவரோடு நட்புக் கொள்க; உலகோடு ஒத்து வராதவரின் நட்பை விலை கொடுத்தாவது விட்டு விடுக.

bala murali

unread,
Nov 12, 2011, 2:21:05 AM11/12/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

( குறள் எண் : 1244 )

மு.வ : நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

சாலமன் பாப்பையா : நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல். அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும் என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

bala murali

unread,
Nov 12, 2011, 10:48:41 PM11/12/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.

( குறள் எண் : 314 )

மு.வ : இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.

சாலமன் பாப்பையா : நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.

sk natarajan

unread,
Nov 12, 2011, 11:08:06 PM11/12/11
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/11/13 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Nov 17, 2011, 12:03:40 AM11/17/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.

( குறள் எண் : 189 )

மு.வ : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்‌சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?

சாலமன் பாப்பையா : பிறர் இல்லாதபோது அவரைப் பழிக்கும் இழிசொற்களைப் பேசுபவனின் உடல் பாரத்தை இவனையும் சுமப்பதே என் தருமம் என்றெண்ணி இப்பூமி சுமக்கிறது போலும்!

sk natarajan

unread,
Nov 17, 2011, 8:32:44 AM11/17/11
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam
அருமையான  குறள்
வணக்கம் ஐயா

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2011/11/17 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Nov 18, 2011, 12:19:36 AM11/18/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

( குறள் எண் : 366 )

மு.வ : ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா : ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

bala murali

unread,
Nov 26, 2011, 12:09:10 AM11/26/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

( குறள் எண் : 1059 )

மு.வ : பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

சாலமன் பாப்பையா : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர் இல்லாதபொழுது, கொடுக்கும் மனம் உள்ளவர்க்குப் புகழ் ஏது?

bala murali

unread,
Dec 9, 2011, 1:36:50 AM12/9/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

( குறள் எண் : 1289 )

மு.வ : காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

சாலமன் பாப்பையா : காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே

bala murali

unread,
Dec 15, 2011, 11:54:37 PM12/15/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

( குறள் எண் : 66 )

மு.வ : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா : பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

bala murali

unread,
Dec 29, 2011, 11:28:29 PM12/29/11
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

( குறள் எண் : 169 )

மு.வ : பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை

சாலமன் பாப்பையா : பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க

bala murali

unread,
Jan 2, 2012, 2:03:05 AM1/2/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?

( குறள் எண் : 1172 )

மு.வ : ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

சாலமன் பாப்பையா : வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

jaya

unread,
Jan 2, 2012, 2:14:10 AM1/2/12
to il...@googlegroups.com
காலை வணக்கம். இந்த நாள் இனிய நாள்...

2012/1/2 bala murali <nagaiba...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

--
jayashree shankar.

bala murali

unread,
Jan 2, 2012, 10:34:25 PM1/2/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

( குறள் எண் : 1296 )

மு.வ : காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா : காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

sk natarajan

unread,
Jan 3, 2012, 10:32:55 AM1/3/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
இனிய வணக்கங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/1/3 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Jan 3, 2012, 10:54:01 PM1/3/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

( குறள் எண் : 296 )

மு.வ : ஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயெ அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா : பொய் சொல்லாமல் இருப்பது போலப் புகழ் தருவது இல்லை. அது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லாப் புண்ணியங்களையும் தரும்.

bala murali

unread,
Jan 4, 2012, 10:20:09 PM1/4/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி.

( குறள் எண் : 371 )

மு.வ : கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

சாலமன் பாப்பையா : பணம் சேர்வதற்கு உரிய விதி நமக்கு இருந்தால், சேர்ப்பதற்கான முயற்சி உண்டாகும். இருப்பதையும் இழப்பதற்கான விதி இருந்தால் சோம்பல் உண்டாகும்.

bala murali

unread,
Jan 7, 2012, 12:51:27 AM1/7/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர்.

( குறள் எண் : 430 )

மு.வ : அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

சாலமன் பாப்பையா : ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.

sk natarajan

unread,
Jan 7, 2012, 9:18:10 PM1/7/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
இனிய  காலை வணக்கம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.com/  
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/1/7 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Jan 15, 2012, 11:14:39 PM1/15/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

--
துணிவு மட்டும் இருக்குமென்றால்...
எதுவும் கைக்கெட்டும் தூரமே..!

என்றும் அன்புடன்... நாகை.எஸ்.பாலமுரளி.
குழுமம்: http://groups.google.co.in/group/tamilamutham?hl=en
வலைப்பூ: http://www.nagaisbalamurali.blogspot.com/
                   http://vetrinadai.blogspot.com/

வினோத்-VINOTH

unread,
Jan 15, 2012, 11:16:51 PM1/15/12
to tamil2...@googlegroups.com, தமிழ் அமுதம், illam

2012/1/16 bala murali <nagaiba...@gmail.com>

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

வணக்கங்களை ஏற்றுக்கொள்ள இயலாது.
திருக்குறள் எங்கே?

--
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth

தத்துவமுங்கோ: நீங்கள் உண்மையின் பக்கம் இருந்தீர்களானால் உண்மை எப்போதுமே கசப்பதில்லை. அவ்வாறு இல்லை எனில் உண்மை கசப்பது மட்டுமல்ல சுடவும் செய்யும்.

bala murali

unread,
Jan 15, 2012, 11:23:52 PM1/15/12
to tamila...@googlegroups.com, tamil2...@googlegroups.com, illam
:))
ஒரு நல்ல குறளாகத் தேடினேன்.. அவசரத்துக்கு..கிடைக்கவில்லை..
..
இதோ கிடைச்சிடுச்சி...

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.

( குறள் எண் : 1000 )

மு.வ : பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா : நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

2012/1/16 வினோத்-VINOTH <vino...@gmail.com>

--
தாய்மொழி தமிழினை தழைத்திடச் செய்வோம்..
வாய்மொழி வழக்கில் பிறமொழி தவிர்ப்போம்..!
அரும்பல கலைகளை தமிழினில் படைப்போம்..
வரும்தலை முறைக்கு அதை வளமுறக் கொடுப்போம்..!

வினோத்-VINOTH

unread,
Jan 16, 2012, 4:11:01 AM1/16/12
to tamil2...@googlegroups.com, tamila...@googlegroups.com, illam

2012/1/16 bala murali <nagaiba...@gmail.com>

:))
ஒரு நல்ல குறளாகத் தேடினேன்.. அவசரத்துக்கு..கிடைக்கவில்லை..
..
இதோ கிடைச்சிடுச்சி...

;))

--

திவாஜி

unread,
Jan 16, 2012, 11:26:21 AM1/16/12
to il...@googlegroups.com
நல்ல குறள் கெட்ட குரள்ன்னு எல்லாம் இருக்கா? :-)))))

2012/1/16 வினோத்-VINOTH <vino...@gmail.com>
ஒரு நல்ல குறளாகத் தேடினேன்..

--
http://www.swaminathar.org/
http://aanmikamforyouth.blogspot.com/
http://techforelders.blogspot.com/

bala murali

unread,
Jan 17, 2012, 10:40:54 PM1/17/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

( குறள் எண் : 585 )

மு.வ : ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண் பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவன்.

சாலமன் பாப்பையா : பிறர் சந்தேகப்படாத வேடத்‌தோடு சென்று, சந்தேகப்பட்டுச் சினந்தால் அஞ்சாது நின்று, சாமதானபேத தண்டம் என எந்த உபாயம் செய்தாலும் ரகசியத்தைச் சொல்லாத வல்லமை பெற்றவரே ஒற்றர்.

bala murali

unread,
Mar 4, 2012, 12:11:06 AM3/4/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

( குறள் எண் : 1119 )

மு.வ : திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.

சாலமன் பாப்பையா : நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.

bala murali

unread,
Mar 5, 2012, 9:57:50 PM3/5/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

( குறள் எண் : 6 )

மு.வ : ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

சாலமன் பாப்பையா : மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்

sk natarajan

unread,
Mar 6, 2012, 7:01:40 PM3/6/12
to tamizhs...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends
இனிய காலை வணக்கம்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/

குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

bala murali

unread,
Mar 6, 2012, 11:51:46 PM3/6/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

( குறள் எண் : 1099 )

மு.வ : புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும்.

சாலமன் பாப்பையா : முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான்.

bala murali

unread,
Mar 7, 2012, 9:58:39 PM3/7/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

( குறள் எண் : 400 )

மு.வ : ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும், கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

சாலமன் பாப்பையா : கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

bala murali

unread,
Mar 8, 2012, 9:39:08 PM3/8/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

( குறள் எண் : 106 )

மு.வ : குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது .

சாலமன் பாப்பையா : உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே--

bala murali

unread,
Mar 13, 2012, 11:58:04 PM3/13/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்

 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.

( குறள் எண் : 838 )

மு.வ : பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா : அறிவற்றவன் தன்னிடம் ஒன்றைச் சொந்தமாகப் பெறுவது, முன்பே பிடித்துப் பிடித்தவன், கள்ளால் மயங்கியும் நிற்பது போல் ஆகும்.

bala murali

unread,
Mar 30, 2012, 3:09:41 AM3/30/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

( குறள் எண் : 630 )

மு.வ : ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

சாலமன் பாப்பையா : ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.

bala murali

unread,
Apr 1, 2012, 2:47:24 AM4/1/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

( குறள் எண் : 773 )

மு.வ : பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா : பகைவர் மீது இரக்கம் காட்டாமல் இருப்பதை மிகுந்த ஆண்மை என்பர்; ஆனால், அந்தப் பகைவர்க்கு ஒரு தாழ்வு வரும்போது அவர் மீது இரக்கம் கொண்டு, அவர் தாழ்ச்சியைப் போக்க உதவுவது ஆளுமையை மேலும் சிறப்பிக்கும்.

bala murali

unread,
May 20, 2012, 12:51:45 AM5/20/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்

( குறள் எண் : 19 )

மு.வ : மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா : மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

sk natarajan

unread,
May 20, 2012, 8:23:12 PM5/20/12
to il...@googlegroups.com, தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/20 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
May 27, 2012, 1:18:57 AM5/27/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
 -:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

( குறள் எண் : 8 )

மு.வ : அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா : அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

bala murali

unread,
May 28, 2012, 11:06:18 PM5/28/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.

( குறள் எண் : 655 )

மு.வ : பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா : என்ன இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தும் படியான செயல்களைச் செய்யாது விடுக; ஒருவேளை தவறாகச் செய்துவிட்டால், திரும்பவும் அதைச் செய்யாது இருப்பது நல்லது.

bala murali

unread,
May 30, 2012, 4:48:43 PM5/30/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

( குறள் எண் : 1065 )

மு.வ : தெளிந்த நீர் போல் சமைத்த கூழே ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா : நீரே மிகுதியாக இருக்கச் சமைக்கப்பட்ட கஞ்சியே என்றாலும், உழைத்த வரவில் உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.

sk natarajan

unread,
May 30, 2012, 9:53:26 PM5/30/12
to tamila...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
இனிய காலை  வணக்கங்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ் சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2012/5/31 bala murali <nagaiba...@gmail.com>

bala murali

unread,
Jun 1, 2012, 2:25:30 AM6/1/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

( குறள் எண் : 394 )

மு.வ : மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

சாலமன் பாப்பையா : மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.

bala murali

unread,
Jun 4, 2012, 2:23:44 AM6/4/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

( குறள் எண் : 1299 )

மு.வ : ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

சாலமன் பாப்பையா : ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

bala murali

unread,
Jun 20, 2012, 1:38:20 AM6/20/12
to தமிழ் அமுதம், Tamil2Friends digest சந்தாதாரர்கள், illam, பிரியமுடன்..iTamizhFriends, தமிழ் சிறகுகள்
-:அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!:-

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.

( குறள் எண் : 997 )

மு.வ : மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

சாலமன் பாப்பையா : மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

Reply all
Reply to author
Forward
0 new messages