oru vinnappam yamarajane

54 views
Skip to first unread message

vishalam raman

unread,
Feb 17, 2007, 4:24:15 AM2/17/07
to namb...@googlegroups.com, முத்தமிழ், il...@googlegroups.com
இந்தக் கவிதை ஒரு எதிர்மறை எண்ணங்களால்  வந்தது இல்லை ,என்க்கு இன்னும் நிறைய
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு  இன்னும் நிறைய சேவை செய்ய கடவுள்
சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்  ,பின் ஏன் இதை எழுதினேன் ?,,,,ஒரு நாள் ஒரு ஹாஸ்பிடல்
போயிருந்தேன் என் தோழியின் மாமியார் ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள் அந்தத் தோழி என்னிடம்  " வீட்டிற்கும் ஹாஸ்பிடலுக்குமே நேரம்  சரியாக இருக்கிறது என் கண்வருக்கு இபோதுதான் வேலை உயர்வு கிடைத்திருக்கிறது  ,அகையால்  லீவு எடுக்க
முடியவில்லை டென்சனில் ஓடாக தேய்ந்து போய்விட்டார் இந்தக் கிழவி   கால் இழுத்து
கிடக்கிறாள் பாதி மயக்க  நிலை  ,,,20 நாளாக இதே வேலை  அலுத்து போய்விட்டது ,,நீ ரெய்கி
கொடு ,,,,,என்று இழுத்தாள்  ,அவள் எதற்கு ரேய்கி கொடுக்கச் சொல்ல்கிறாள் என்று எனக்கு
புரிந்து விட்டது  ,,,,,யாருக்காக பரிதாபப்ப்டுவது ?இதே போல ப்ல அனுபவங்கள்,, எல்லாம் எழுதினால் உங்களுக்கு படிக்க நேரம் இராது ,,   சரி கவிதையைப் படியுங்கள்,
 
ஒரு விண்ணப்பம்  யமராஜனே ,
 
மரணமே  நான் உன்னை வரவேற்கிறேன்,
 
,யமராஜனே  என் கைகளை நீட்டி வரவேற்கிறேன்
கூடவே பிடி ஒரு விண்ணப்பம் ,
வேண்டும் ஒரு கையொப்பம் ,
 
பல நாடகள் என்னைப் படுக்கையில் தள்ளாதே ,
கோமா நிலையும் கொண்டு செல்லாதே ,
முதல் நாள் ஆஸ்பத்திரி  பரிவுடன்  விசாரிப்பு ,
பல நாடகள் ஆனால் அதுவே மன சலிப்பு ,
முதல் நாள் பழங்கள் ஹார்லிக்ஸ் வருகை ,
போகப் போக உறவினர்  வருவதும் நிற்கை ,
மகனுக்கு வேலை பளு,,முகத்தில் டென்சன் ,
தண்ணீர் போல் சிலவு  ,நடப்பது மௌனத்தில் ,
குழந்தைகள் வருத்தத்தில் ,கவனக் குறைவு படிப்பில் ,
உள்ளே வெளியே என்று அலையும்  மருமகள்
என்று கஷ்டம் விடியும் என்று ஏங்கும்  மகள்,
தேவைதானா  இவைகள் எனக்கு ?
இப்போது புரிந்ததா உனக்கு ?
மரண்மே  உன்னை வரவேற்கிறேன்
கூடவே ஒரு விண்ணப்பம் தருகிறேன் ,
 
 
பேசியபடியே என் உயிர் போகவேண்டும்.
கடவுள் நாமத்தில் நான் மரிக்க வேண்டும்
பிரார்த்தனையின் போது என்னை அழைத்து கொள்,
காலை நேரம் என்னை எடுத்துக் கொள்,
பள்ளி விடுமுறையாக இருக்கட்டும்
மழையும் கொட்டாமல் இருக்கட்டும் ,
செத்தப் பின்னும் என் தலை உருள
சனிகிழமை என்னை அழைக்காதே 
"சனிப் பிணம் தனிபோகாது"என்று
இறந்த பின்னும் பெயர் கெடுக்காதே! 
அஷ்டமி நவமியைத் த்விர்த்துவிடு ,
விபத்தின் மரணைத்தை நிறுத்தி விடு ,
போலீஸ் வரும் என்ற கவலை !
போஸ்ட்மார்ட்டம் என்ற தொல்லை
என் வாயில் ராம் ராம் சொல்ல விடு
புனித கங்கையை முழுங்க விடு
 
மரண்மே உன்னை வரவேற்கிறேன்,
கூடவே ஒரு விண்ணப்பம் கொடுக்கிறேன் ,,
 
 
அன்புடன் விசாலம்
 

AKR

unread,
Feb 17, 2007, 5:56:52 AM2/17/07
to il...@googlegroups.com
அன்பு சகோதரி,
 
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா,
மரனத்தின் தன்மைசொல்வேன்
 
உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
 
போன்ற வரிகளின் உண்மை யாமறிந்ததே. எதுவும் நம் கையிலில்லை. வருவது வந்தே தீரும். நம் மறைவு பிறருக்குத் தொல்லை கொடுக்காத வகையில் அமைய வேண்டுமென்ற உங்கள் சிந்தனை அனைவருக்கும் வழிகாட்டியாக அமையும்.
 
ஆகிரா

separa

unread,
Feb 19, 2007, 5:23:10 AM2/19/07
to இல்லம் (your HOME)
அன்புள்ள சகோதரி,
இதில் விந்தையேதும் இல்லை. இது போல பலர் பேசக் கேட்டிருக்கிறேன். எனது
தாய் மருத்துவ மனையில் இருந்த பொழுது கூட சில தூரத்து உறவினர்கள்
எனக்காகப் பேசுவது போல, "கிழவி இருக்காம கிடக்காம போனா நல்லது. நாளுக்கு
நாள் செலவு அதிகமாகிறது முன்னேற்றம் எதுவும் இல்லை" என்று
சொல்லியிருக்கிறார்கள். என்னிடமும் எனது மனைவியிடமும் "வாங்கிக் கட்டிக்
கொண்டிருக்கிறார்கள்". அவள் எங்களுக்குத் தாய் மற்றவர்களுக்கு அந்த அளவு
பாசம் இருக்க வேண்டுவது கட்டாயம் இல்லை. பணம் பற்றாக்குறை என்பது,
நாங்கள் உணர்ந்த, பேசிய ஒன்றுதான். என்ன வழி செய்வது என்று நாங்கள்
குழம்பியதும் உண்மைதான். எனினும், அவர்கள் எங்கள் சார்பில் பேசுவதாக
நினைத்து எங்களின் கோபத்திற்காளானது பரிதாபமே.

ஆனால் இன்றைய உலகில் எதுவுமே பணத்தைக் கொண்டுதான்
தீர்மானிக்கப்படுகிறது. எதற்கும் பணம் தேவைப்படுகிறது. மனம் இருந்தால்
கூட, பாசமிருந்தால் கூட, கையில் பணமில்லாவிடில் எங்கே மருத்துவம்
பார்ப்பது? மருத்துவ செலவுகளோ, அதிகமாகிவிட்டன. அவர்களுக்கு அது ஒரு
வியாபார வாய்ப்பு. அங்கேயும் "Finance Management " ஒரு சிறப்பதிகாரம்!!
அனுபவ அறிவு இல்லாத வகையில் எதுவொன்றுக்கும் இயந்திரங்களை நம்ப
வேண்டியயநிலை. அவையோ அதீத செலவு வகையறாக்கள். என்ன சொல்வது? யாரைக் குறை
சொல்வது?

பட்டினத்தார் கூடத் தவறாகப் பாடிவிட்டார் என நினைக்கிறேன். "காதற்ற
ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே" என்றாரே தவிர, வைத்தியம், வைதீகம்
இவற்றுக்கெல்லாம் பணம் இன்றி என்ன செய்வது? போனவருக்குக் சொர்கமோ நரகமோ
13 நாட்கள் காரியம் செய்து, சாங்கியங்கள் நடத்தி கடையேற்றும் வரை
எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறதே. இல்லாவிட்டால் இறந்த உயிர்கள்
பிசாசாக அல்லவோ அலைவதாக நமது சாத்திரங்கள் சொல்கிறது.

"இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான்; அதை
இருப்பவனும் எண்ணிப் பார்த்து வருந்திட்டான் " என்பதுதான் இன்றைய நிலை.
போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், அலுவலகப் பணியில் விடுப்பு எடுப்பது கூட
அவ்வளவு எளிதான ஒன்றல்லவே!

அதிலும் வயதானவர்கள் என்றால், இனி இருந்து என்ன பண்ணப்போகிறார்கள்; இனி
இருந்தால் பிரச்சினைதான் என்று சொல்வது ஒன்றும் புதிதல்லவே!
எல்லாவற்றிக்கும் காரணம் பொருள்தான்!

ஆதி சங்கரரைப் போல சாதாரண மனிதர்களின் தேவைகளை உணர்ந்தவர்கள் யாருமில்லை.
அவர் சன்நியாசிதான் எனினும் தனக்குப் பிச்சையிட முடியாது வருந்திய
கிழவிக்கும் பொன்மழை பொழிய வேண்டியவரன்றோ!!

"பொருளில்லார்க்கு புவிமிசை வாழ்வும்
போற்றும் நன்நிலையுமில்லை! அன்று
அருளது வேண்டிய ஆதி சங்கரரும் வாழ்வில்
பொருளதன் சிறப்புணர்ந்து போற்றியவரன்றோ!!"

"பணம் உன்கையில் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது!!
பணம் உன்னிடம் இல்லையென்றால், உன்னை ஒருவருக்கும் தெரியாது"

இந்நிலை எல்லோருக்கும் வரக்கூடியதுதான். எனவே அந்திமக் காலத்திற்காக,
சேமிப்பு மிக அவசியம். ஆண்டவனிடத்து "application" எல்லாம் தரலாம். ஆயுள்
காப்பீட்டுக் கழகத்திற்கும் mediclaim இவற்றுக்கும் apply பண்ணுவது சாலச்
சிறந்தது. மனமில்லாதவருக்கும், பணம் (அநாமத்தாக) வருமானால் செலவு செய்து,
"என்ன பண்றது; பணத்தைத் தண்ணியா செலவு செய்தும் பயனில்லே" எனக் கணக்கு
காட்ட உதவும்.

அது ஏனோ தெரியவில்ல; இந்த மாமியார் - மருமகள் உறவு இவ்வளவு மோசமாக
எடுத்துக்காட்டப்படுகிறது. அது சரி அது என்ன "ரெய்கி" நானறிந்தவரை அது
ஒரு உயிர் காக்கும் கலை என்பது. உங்கள் சொற்கள், ஒரு எதிர்மறைப் பொருளைத்
தருகிறதே! சகோதரியை விட்டுச் சற்று விலகியிருக்க வேண்டும் போலிருக்கிறதே!
அன்புடன்
செபரா


"உறவும் பிறவும் ஒரு கணப் பொழுதில்
மறக்கச் செய்வதும் மரணம்தானே!
இறப்பின் சிறப்பு இதுவென்றானபின்
ஏங்குவதேனோ இனியென் மனமே!!"

உற்றமும் சுற்றமும் ஒருநாள் அழுவர்;
பெற்றோராயின் பேசிடப் பத்துநாள்!
மற்றவர் வந்தவர் மறுகணம் மறந்திட;
கொற்றவன் இங்கே கூற்றுவனாகிட!

பெற்றதும் உற்றதும் பேசிட விழைவதும்
அற்றது பொருளெனின் அன்றே மறைந்திடும்;
கற்றவராயினும், காலத்தின் கட்டாயம்
இற்றது உறவென இதயம் இறுகுவர்!!


"மரணம் ஒரு மாமருந்தா?" - செபராவின்
கவிதைத்தொகுப்பிலிருந்து


AKR

unread,
Feb 19, 2007, 7:03:16 AM2/19/07
to il...@googlegroups.com
பணமிருந்தால் போதுமடா மடியிலே - ஐயா
பாசமென்ன நேசமென்ன உலகிலே
பணமே, அட பணமே..
.......................
ஆளை ஆளு புகழ்வதெல்லாம் காசுக்காகத்தான் - பணம்
அகன்றுவிட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மைதான்
ஏழ்மை நிலை வந்தால், நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை

பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே - பிழைக்கும்
மனிதனில்லே ...

vishalam raman

unread,
Feb 19, 2007, 11:54:27 AM2/19/07
to il...@googlegroups.com
அன்பு செபெரா  மிக நன்றி  ரேக்கி மிகவும் நல்லது தான் செய்யும்  ஆனால் பிழைக்க முடியாத நிலை வந்தவுடன்
அவ்ர்களுக்கு உடல் அதிகம் வருத்தாமல்  peaceful death
என்பார்களே அது போல் அனாயச மரணம் கொடுக்கவும் உதவும்  .உம்   ஒருவர் கேரளாவிலிருந்து  ரேக்கி ஹீலிங்
பெற்று கொள்ள வந்திருந்தார் .அவர் பெரிய டாகடர் 
ஆனால் வயதில் குறைந்தவர் 40 இருக்கலாம் ஆனால் அவருக்கு தொண்டையில்  கேன்சர்  அவர் மனைவி இதை தைரியமாக எடுத்து கொண்டு  எங்களிடம்  அழைத்து வந்தாள் ரொம்பவும் அதிகமாக பரவிய நிலை  அபோது அந்த டாக்டர்  சேகர் எங்களிடம் நிம்மதியாக
சாக ரேக்கி கொடுக்கும்படி  கெஞ்சி கேட்டுக் கொண்டார்
அவர் மனைவியும் இதே சொன்னார்  அவர் மனதைத் தேற்றி அன்ப்பி வைத்தோம்  பின் distance reiki  கொடுத்தோம்  .அவர் இப்போது  இல்லை வலி இல்லாமல் இரவில் கன்மூடியபடி இறந்தார் என்று அவர் மனனவி தகவல் தெரிவித்தார் இந்த நிலை எப்போதாவது  தவிர்க்கமுடியாமல்  இருந்தால் செய்ய இசைவோம்   ,இது லட்சத்தில் ஒன்றாகத்தான்  இருக்கும் 
நான் என்  உடல் வலிக்கு ரேக்கி தான் கொடுத்து
கொள்கிறேன் பாஸிடிவ்  எனர்ஜி யைத்தான் உடலில் 
செலுத்தி negative blocks ஐ எடுத்து விடுகிறோம் 
அன்புடன் விசாலம்   

 

vishalam raman

unread,
Feb 19, 2007, 11:58:39 AM2/19/07
to il...@googlegroups.com
மரணம் பற்றிய கவிதை  மிகவும் நன்றாக் இருந்தது
"உற்றமும் சுற்றமும் ஒரு நாள் அழுவர்,,,,,,,,அந்த இரு வரிகள் மிக உண்மை   அன்புடன் விசாலம்

 
On 19/02/07, separa <sepa...@gmail.com> wrote:

vishalam raman

unread,
Feb 4, 2008, 4:21:42 AM2/4/08
to pira...@googlegroups.com, il...@googlegroups.com
நம்பிக்கையில் முதலில் எழுதியது,,,,,,



இந்தக் கவிதை ஒரு எதிர்மறை எண்ணங்களால்  வந்தது இல்லை ,எனக்கு இன்னும் நிறைய
சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு  இன்னும் நிறைய சேவை செய்ய கடவுள்
சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்  ,பின் ஏன் இதை எழுதினேன் ?,,,,ஒரு நாள் ஒரு ஹாஸ்பிடல்
போயிருந்தேன் என் தோழியின் மாமியார் ரொம்ப மோசமான நிலையில் இருந்தாள் அந்தத் தோழி என்னிடம்  " வீட்டிற்கும் ஹாஸ்பிடலுக்குமே நேரம்  சரியாக இருக்கிறது என் கணவருக்கு இபோதுதான் வேலை உயர்வு கிடைத்திருக்கிறது  ,அகையால்  லீவு எடுக்க

Tirumurti Vasudevan

unread,
Feb 4, 2008, 6:43:22 AM2/4/08
to il...@googlegroups.com
அருமையான விண்ணப்பம் தாயே!
பிறந்த அனைவரும் ஒரு நாள் போய்த்தானே தீர வேண்டும்?

இறப்பை குறித்து சில சிந்தனைகள் உண்டு. இந்த சந்தர்பத்தில் முன்
வைக்கிறேனே என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

இறப்பை குறித்து யாரும் அஞ்சத்தேவை இல்லை.
ஆன்மீகவாதியோ அல்லது நாஸ்திகவாதியோ.
இதை உணர கொஞ்சம் நேரம் செலவிட்டு யோசனை செய்தால் போதும்.

நாத்திகவாதி:
இறந்த பின் நீ இருக்கப்போவதிலை. மனம் இறந்துவிடும். அதனால் துயரப்பட
முடியாது. வேதனைப்பட முடியாது. வலி கிடையாது. பின் ஏன் அஞ்ச வேண்டும்?

ஆன்மீகவாதி:
இறப்பது இந்த உடலே. ஆன்மா அழிவதில்லை. அது மீண்டும் மீண்டும்
பிறப்பெடுக்கும். அதனால் இறப்பை குறித்து பயப்படுவது பொருள் அற்றது.

பின் ஏன் நாம் பயப்படுகிறோம்?
முன் ஒரு முறை ஒரு குழுவில் இது குரித்து ஒரு கேள்வியை முன் வைத்தேன்.
ஒரு வேளை யமன் வந்து "உன் வாழ் நாள் முடிந்து போய் விட்டது. போகலாம் வா"
என்று கூப்பிட்டால் யார் போகத்தயாராக இருக்கிறீர்கள்?
பலர் பயந்து போய் என்ன இப்படியெல்லாம் கேட்கிறாய் என்றார்கள்.
(இந்த கருத்தை கொண்டு ஒரு அழகான கதைகூட வலைப்பூ ஒன்றில் படித்தேன்)

ஏன் என்றால் நாம் முக்கால்வாசி பேர் நாம்தாம் ஏதோ காரியங்கள் செய்வதாக
நினைக்கிறோம். நாம்தாம் குடும்பத்தை காப்பாத்துகிறோம். நாம்தான்
குழந்தைகளை வளர்க்கிறோம்; இப்படி பல கற்பனைகள்.

நாம் இல்லாவிட்டலும் இந்த வேலைகளை வேறு யாரோ செய்து விடுவார்கள்.
ஏனெனில் காரியங்கள் இறைவன் சங்கல்பத்தால்தான் நடை பெறுகிறன. நம்மால்
அல்ல. நாம் ஒரு கருவி மட்டுமே! யார் இதை உணர்கிறார்களோ அவர்கள் எப்போதுமே
கிளம்ப தயாராக இருப்பார்கள்!

உடம்பு அதிகம் படுத்துகிறது என்று ஒருவர் அவருடைய ஆன்மீக வழிகாட்டியிடன்
முறையிட்டாராம். அதற்கு அவர் இந்த சரீரம் ரிப்பேர் ஆகிவிட்டது. புதிதாக
தருகிறேன் என்றாராம்.. கூட இருந்தவர்கள் குணமாகிவிடும் என்று சொன்னதாக
நினைத்தனர். பக்தர் மகிழ்ச்சியுடன் போய் விட்டார். அன்றிரவு மேலுலகமும்
போய்விட்டார்!

கடைசியாக ப்ராக்டிகல் சிந்தனை ஒன்று.

லிவிங் வில் என்று ஒன்று உள்ளது.
அதன்படி நாம் இறக்கும் தருவாயில் மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று
கட்டுப்படுத்த முடியும்.
ஸ்ட்ரோக் வந்ததா? நான் நிம்மதியாக போக வேண்டும். மருத்துவர் வர வேண்டாம்.
மருத்துவ மனை வேண்டாம். சிபி ஆர் வேண்டாம் என்றெல்லாம் நாம் எழுதி வைக்க
முடியும். அது சட்ட ரீதியாக மற்றவர்களை கட்டுப்படுத்தும்.

பல நடுத்தர குடும்பங்கள் இன்று மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு
சக்திக்கு மீறி செலவு செய்து கஷ்டப்படுகிறார்கள். செலவு செய்வது
சக்திக்கு மீறியது என்று தெரிந்தாலும் மற்றவர்கள் ஏதேனும் சொல்வார்களோ
என்று பயந்து செய்கிறார்கள். யோசித்து பார்த்தால் அவர்கள் அப்படி செலவு
செய்வதை அந்த நோயாளியே விரும்ப மாட்டார். சிகித்சையால் அவரும் படாத பாடு
படுவார்.

இதற்கு ஒரே தீர்வு நாம் கடைசி காலத்தில் எப்படி போக வேண்டும் என
தீர்மானித்து அதை எழுதி வைத்து மற்றவர்களுக்கும் சொல்லி வைப்பதே.
நான் எனக்கு அப்படித்தான் செய்திருக்கிறேன். நோ சிபி ஆர்; செயற்கை
சுவாசம் வேண்டாம், என்று.

விசாலம் அம்மை குணமடைந்து மேலும் தொண்டாற்ற இறை அருள் வேண்டி,

திவா

2008/2/4 vishalam raman <rvis...@gmail.com>:


> நம்பிக்கையில் முதலில் எழுதியது,,,,,,
>


--
My blogs: http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

GEETHA SAMBASIVAM

unread,
Feb 4, 2008, 7:57:17 AM2/4/08
to il...@googlegroups.com
அருமை திவா, அருமையான சிந்தனை, இப்படி யோசிக்கக் கூட முடியலை என்னால், ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.

Tirumurti Vasudevan

unread,
Feb 4, 2008, 10:39:54 AM2/4/08
to il...@googlegroups.com
நன்றி அக்கா!
திவா

2008/2/4 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>:


> அருமை திவா, அருமையான சிந்தனை, இப்படி யோசிக்கக் கூட முடியலை என்னால், ரொம்ப
> ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.

Natarajan kalpattu N

unread,
Feb 5, 2008, 6:39:07 AM2/5/08
to இல்லம் (your HOME)
இறப்பைப் பற்றி அருமையான சிந்தனைகள்.

இறந்தபின்னும் எங்களது உடல் பிறருக்கு பயன்படக் கூடும் என்பதற்காக உடலை
எடுத்துச் செல்ல ஒரு மருத்துவ மனைக்கு அனுமதிக் கடிதம் அளித்துள்ளோம்.
அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். எங்களது மூன்று மகள்களும் ஒப்புதல்
கைஒப்பம் இட்டுள்ளனர். ஆனால் நாங்கள் இறந்தபின் இருப்பவர்கள் உடனே
மருத்துவ மனைக்கு செய்தி தருவார்களா? இது அந்த ஆண்டவனுக்குத் தான்
தெரியும்.

மரணம் என்பது தவிற்க முடியாத ஒன்று. அது வரும்போது 'அனாயாச' மரணமாக
இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறேன்.

சிந்து பைரவி என்ற சினிமவிலே வந்த 'சிந்து பாடறியேன் படிப்பறியேன்' என்று
பாடியதைப் போன்ற நிலையில் நான் இருக்கிறேன் கலை, இலக்கியம், ஆன்மிகம்
போன்ற விஷயங்களில்.

இருப்பினும் என் மனதில் உள்ளவைகளை கொட்டுவதில் உள்ள ஆர்வத்தில் இதை எழுதி
விட்டேன். தவறெனில் அன்பர்கள் மன்னிக்கவும்.

நடராஜன்

On Feb 4, 8:39 pm, "Tirumurti Vasudevan" <agnih...@gmail.com> wrote:
> நன்றி அக்கா!
> திவா
>
> 2008/2/4 GEETHA SAMBASIVAM <sivam...@gmail.com>:
>
> > அருமை திவா, அருமையான சிந்தனை, இப்படி யோசிக்கக் கூட முடியலை என்னால், ரொம்ப
> > ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துகள்.
>
> --
> My blogs:http://nallaseithi.blogspot.com/http://kathaikathaiyaam.blogspot.com/

Tirumurti Vasudevan

unread,
Feb 5, 2008, 11:32:38 AM2/5/08
to il...@googlegroups.com
எம் பூஜையின் கடைசியில் பிரார்த்தனை:

"அனாயாசேன மரணம் வினா தைன்யேன ஜீவனம்
தேஹி மே க்ருபயா சம்போ த்வயி பக்திமசஞ்சலாம்."

சட்டென்று போக வேண்டும்; வறுமை இல்லாமல் வாழ வேண்டும்; உன் மீது
சஞ்சலமில்லாத பக்தி இருக்க வேண்டும். இவற்றை இறைவனே, கருணை கூர்ந்து
எமக்கு தருவாயாக!

திவா

2008/2/5 Natarajan kalpattu N <knn...@gmail.com>:


> இறப்பைப் பற்றி அருமையான சிந்தனைகள்.

--
My blogs: http://nallaseithi.blogspot.com/

vishalam raman

unread,
Feb 5, 2008, 11:53:29 AM2/5/08
to il...@googlegroups.com
அஷ்டமி அன்று ஸ்ரீ கால பைரவரைப் பூஜித்து விளக்கு வைத்தால் அனாயாச
மரணம் கிடைக்கும்  ,,,,,,ஒரு புத்தகத்தில்  படித்தேன்   அன்புடன் விசாலம்

 
Reply all
Reply to author
Forward
0 new messages