You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to இல்லம் (your HOME)
Monday, March 29, 2010
வைவஸ்வதபுரியில் கண்ணன்!
மீண்டும் ஒருமுறை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும் இது திரு முன்ஷிஜி அவர்கள் எழுதியவை என. மொழிபெயர்ப்பில் வேண்டுமானால் சில குறைபாடுகள் இருக்கலாம். மூலத்தில் இருந்து மாற்றம் இல்லை. கடைசியாய் எழுதியது இங்கே
************************************************************************************
கண்ணன் தனக்கெதிரே தோன்றிய கரிய நிழலைக் கண்டதுமே எச்சரிக்கை அடைந்தான். சட்டென ஒரு குதி குதித்து எழுந்துவிட்டான். மின்னல் வேகத்தில் தனக்கெதிரே வீசப் பட்ட வாளைப் பிடித்திருந்த கையைத் தன் கரங்களால் பிடித்துவிட்டான். அது வேறு யாரும் இல்லை. பாஞ்சஜனாவே தான். கண்ணன் அடுத்து எதுவும் செய்யும் முன்னர் பாஞ்சஜனாவின் பின்னிருந்து மற்றொரு உருவம் எழுந்து வந்து பாஞ்சஜனாவை அப்படியே தன்னிரு கரங்களாலும் தூக்கிக் கடலுக்குள் வீசியது. கண்ணன் ஏதும் செய்வதறியாது திகைத்து நிற்கக் கப்பல், எதுவுமே நடவாதது போல் மேலே சென்று கொண்டிருந்தது. சமுத்திரத்தின் அலைகளும் அந்த நிகழ்வுக்குப் பயந்தோ என்னமோ, ஆக்ரோஷத்தைக் குறைத்துக் கொண்டிருந்தன. விண்மீன்களோ, சற்றே கவலையுடனும், கொஞ்சம் சந்தோஷத்துடனும் நடந்ததையும், இனி நடக்கப் போவதற்கும் தாங்களே சாட்சி எனக் கண் சிமிட்டித் தெரிவித்துக்கொண்டிருந்தன.
ஆயிற்று. எங்கும் மகிழ்ச்சி! சுதந்திரம். வயிறு நிறைய உணவு. ஆடலாம், பாடலாம், கொண்டாடலாம். பாஞ்சஜனாவால் சேமித்து வைக்கப் பட்டிருந்த உணவுப் பண்டங்கள் தாராளமாய் விநியோகம் செய்யப் பட்டு உணவு சமைக்கப் பட்டுக் கப்பலின் அனைத்து ஊழியர்களுக்கும் வயிறு நிறைய உணவு கொடுக்கப் பட்டது. புத்தாடைகள் அளிக்கப் பட்டன. பாஞ்சஜனாவால் கப்பல் ஊழியர்கள் துணையோடு கொள்ளையடிக்கப் பட்ட பெரும் செல்வம் பகிர்ந்தளிக்கப் பட்டது. மறைத்து வைக்கப் பட்டிருந்த பெரும் ஆயுதங்கள் வெளிக் கொணரப் பட்டுக் கப்பல் ஊழியர்களுக்கு அவரவர் திறமைக்கேற்ற பயிற்சியும் அளிக்கப் பட்டது. உத்தவன் இதற்குப் பொறுப்பெடுத்துக்கொண்டான். கிருஷ்ணனும் பாஞ்சஜனாவின் மறுமகன்கள் இருவருக்கும், கப்பல் மாலுமியின் பேரன் குக்குராவிற்கும், தச்சன் ராதுவிற்கும் தன் சொந்தப் பொறுப்பில் ஆயுதப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தான். கண்ணன் பாஞ்சஜனாவின் மறுமகன்களுக்குக் கப்பல் அவர்கள் பொறுப்பிலேயே இருக்கும் என்றும் பிக்ருவே மாலுமியாக நீடிப்பான் எனவும் உத்தரவாதம் அளித்தான். ஹூக்குவையும், ஹூல்லுவையும் காவலுக்கு நியமித்தாலும், எவரையும் காரணமில்லாமல் துன்புறுத்தவோ, சாட்டை அடிகளோ கொடுக்கப் படக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்தான்.
கண்ணனும், உத்தவனும் அங்கே இருந்த உடைகளிலிருந்து தங்களுக்கும் சிறந்த உடைகளையும், ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டதோடு நீண்ட வாள்களையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். வைவஸ்வதபுரி நெருங்கிக் கொண்டிருந்தது. பிக்ரு அந்த நகரைப் பற்றியும், நாட்டைப் பற்றியும் தனக்குத் தெரிந்தவரை கண்ணனுக்குக் கூறினான்:
“சூரியனின் நாடு, நகரம் என அழைக்கப் பட்ட வைவஸ்வதபுரி, நாகலோகத்தில் அமைந்துள்ளது. படாலா என்னும் நாட்டிற்கு அருகே உள்ள இந்த நாடு முற்றிலும் நாககன்னிகைகளால் ஆளப் படுகிறது. இவர்களைச் சாமானியப் பெண்கள் என நினைக்கவேண்டாம். ஆண்களை விடத் தீரமாய்ப் போர் புரியும் வல்லமை கொண்டவர்கள். இதன் அரசியானவள் தேவி பராசக்தி, ஜகதம்பாவுக்கு இணையாகச் சொல்லப் படுகிறாள். அவளை “அம்மா” என்றே அழைக்கின்றனர். சர்வ சக்தியும் வாய்ந்த அந்தப் பராசக்தியே இவள்தான் என நம்பவும் செய்கின்றனர். அவள் கணவன் இந்த நாட்டின் அரசன் எனப் பெயரளவுக்கு அழைக்கப் பட்டாலும், அவனும் இந்த மஹாராணியின் முதல் சேவகன் என்றே கருதப் படுகிறான். ராணியை மீறி இந்த அரசனால் எதுவும் செய்ய முடியாது. இந்த நாட்டின் இளவரசிக்கு மணம் புரிவிக்க என்றே புநர்தத்தன் பெரும் விலை கொடுத்து இந்த ராணியால் பாஞ்சஜனாவிடமிருந்து வாங்கப் பட்டான்.”
இவையே பிக்ருவுக்குத் தெரிந்தவை. கண்ணன் அனைத்தையும் கேட்டுக் கொண்டான். சில நாட்களில் அவர்கள் கடலும், நதியும் சேரும் கடற்கழியில் அமைந்துள்ள வைவஸ்வதபுரிக்கு அருகே வந்து சேர்ந்தார்கள். தூரத்திலிருந்து நகரம் சுற்றிலும் கோட்டைச் சுவர்களால் சூழப் பட்டுத் தெரிந்தது. மாலைச் சூரியனின் அந்திச் சிவப்பால் அந்தச் சுவர்கள் பொன்னாலானது போன்ற தோற்றம் அளித்துக்கொண்டிருந்தது. துறைமுகத்தில் கணக்கற்ற படகுகள் காணப்பட்டன. சரக்குகளை இறக்குமிடமும், அங்கிருந்து கோட்டைக்குள் நுழையும் படிகளும் காணப்பட்டன. கப்பல் துறைமுகத்தை நெருங்க, நெருங்கக் கரையில் ஒரு பெருங்கூட்டம் தூரத்தில் இருந்தே இந்தக் கப்பலைப் பார்த்துவிட்டு வரவேற்கக் காத்திருந்தது தெரிந்தது. ராணியின் அநுமதி வாங்க வேண்டும் அல்லவா உள்ளே நுழைய? கண்ணன் அதற்கென பாஞ்சஜனாவின் மறுமகன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். உள்ளூர் மொழியை அறிந்தவன் அவன். அவனோடு உத்தவனையும், ராதுவையும் அனுப்பி வைத்து ராணியின் அநுமதியை வாங்கி வரச் சொன்னான். கூடவே அங்கிருந்த அதிகாரிகளுக்கெனச் சிறு சிறு பரிசுகளையும் கொடுத்திருந்தான். ஒரு படகில் மூவரும் கிளம்பிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த நாள் காலையில் துறைமுகத்திலிருந்து நகருக்குச் செல்லும் வழியில் ஒரு பெரும் ஜனக்கூட்டம் கண்ணனையும், கப்பலில் வந்த மற்றவர்களையும் வரவேற்க நின்றது. உத்தவனும் கண்ணனை வரச் சொல்லி ராணி கொடுத்த அநுமதியோடும், அந்த அநுமதியைக் கொடுத்த ஒரு பெண் அதிகாரியோடும் கப்பலுக்குத் திரும்பி வந்தான். உத்தவனோடு வந்திருந்த அந்தப் பெண்மணிக்கு நடு வயதிருக்கும். தங்கத்தாலான சில ஆபரணங்களே அவள் உடலை அலங்கரித்தது. அவையும் நாகப் பாம்புகளைப் போல் செய்யப் பட்டிருந்தன. அவள் உடலையே நாகங்கள் அலங்கரித்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. அவள் தலையைக் கட்டி இருக்கும் விதமும், அதில் அலங்கரிக்கப் பட்டிருந்த தங்க ஆபரணமும், படம் எடுத்தாடும் நல்ல பாம்பின் படத்தை ஒத்திருந்தது. பாம்பின் சீறும் நாக்கைப் போலவே அந்த ஆபரணத்திலிருந்தும் சிவந்த ஒளி வீசும் கற்கள் தென்பட்டன. அவள் ஓர் உயர் அதிகாரி என்னும் தோற்றத்தையும் அளித்தாள். பிக்ருவும் அதை உறுதி செய்தான். ஆனால் கண்ணன் ஓரளவுக்கு இவற்றை எல்லாம் எதிர்பார்த்திருந்தான். பிக்ருவின் முன் கதைச் சுருக்கமும் அதைப் புரிந்து கொள்ள கண்ணனுக்கு உதவியிருந்தது. ஆகவே அவன் இந்தப் பெண்மணியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடையவில்லை.
இந்த நாடு பெண்களால் ஆளப்படுவதும், ஆட்சிமுறை பெண்வழியில் இருப்பதும் கண்ணன் அறிந்து கொண்டிருந்தான். இந்த அன்னை ராணிக்குப் பின்னர் அவள் மகள் அடுத்த அன்னை ராணியாவாள். இப்படியே மகள் வழி இந்த ஆட்சி முறை தொடரும். இந்தப் பெண்கள் ஆட்சியில் அரசனாகப் பதவி வகிக்கும் ஆண் பெயரளவுக்குத் தான் அரசன் என்பதும், ராணிக்குப் பிடிக்கவில்லையானால் அவன் உயிருக்கும் ஆபத்தே வரும் என்பதையும் கண்ணன் புரிந்து கொண்டான். உத்தவனைப் பார்த்தான்.
"கண்ணா, நீ இங்கே இந்த நாட்டுக்கு வருவாய் என இந்த நாட்டு அன்னை ராணி ஏற்கெனவே ஆரூடம் கூறிவிட்டாள். அதிலும் பல மாதங்கள் முன்னாலேயே!" என்றான் உத்தவன்.
இப்போது கண்ணனுக்கு உண்மையாகவே அதிர்ச்சி! "என்ன????" என்றான்.
Geetha Sambasivam
unread,
Mar 30, 2010, 3:48:45 AM3/30/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“கண்ணா!
இது ஒரு பயங்கரமான நாடு. நம் நாட்டின் ரிஷிகளையும், முனிவர்களையும்,
சந்யாசிகளையும் போல இந்த ராணிக்கும் வருங்காலத்தைப் பற்றித் தெரிந்து
கொள்ள முடியும் என்கிறார்கள். ம்ம்ம்ம் சரி, வா, போகலாம், அடுத்த
பட்டத்துக்கு உரிய பட்டத்து இளவரசியே உன்னை வரவேற்க வந்திருக்கிறாள். ஆ,
மறந்துட்டேனே, அவளைத் தான் நீ தெய்வீகமான இளவரசி என அழைக்கவேண்டும். அவள்
கணவனாக இருக்கப் போகும் இளவரசனுக்கு இங்கே எந்தவித மதிப்போ, மரியாதையோ
இல்லை. அதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்.” என்றான் உத்தவன்.
“நல்ல
தெய்வீக அன்னை ராணி! தெய்வீக இளவரசி!” கண்ணன் சிரித்துக்கொண்டான்.
இருவரும், அந்த நாட்டின் மற்ற பெருந்தரத்து அதிகாரிகள் புடைசூழ அரசியால்
அனுப்பப் பட்டிருந்த விசேஷமான படகில் ஏறினார்கள். அது அரசர்கள்,
அரசிகளுக்கென உள்ள ராஜாங்கப் படகு என்பதால் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்
பட்டிருந்தது. கண்ணன் ராணிக்கும், இளவரசிக்கும், மற்ற அரண்மனை வாழ்
மக்களுக்கும் எடுத்துச் சென்ற பரிசுப் பொருட்கள் வேறு இரண்டு படகுகளில்
ஏற்றப் பட்டு அவையும் பின் தொடர்ந்தன. முன்னும், பின்னும் இரு படகுகள்
காவல் காத்துக்கொண்டு செல்ல கண்ணனின் படகு கரையை நோக்கி நகர்ந்தது.
கரையில் அந்த தெய்வீக இளவரசி கண்ணனை வரவேற்கக் காத்திருந்தாள். ஆஹா!
அழகுத் தெய்வம் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்ததோ? இது நடையா? அல்லது
மயிலின் நடனமா? இத்தனை மெல்லிய உடலா? அது வளைவதைப் பார்த்தால் ஒடிந்து
விடுமோ எனத் தோன்றுகிறதே! ஆனாலும் அதையும் மீறிய அவள் அழகு
கண்ணைப்பறிக்கிறதே! தன்னைச் சூழ்ந்திருக்கும் மற்றப் பெண்களின் நடுவே அவள்
நக்ஷத்திரங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் பிரகாசமாய் ஒளி விடும் பூரண
சந்திரனைப் போன்ற தண்மையான குளிர்ச்சி வாய்ந்த அழகோடு காட்சி அளித்தாள்.
கண்ணனை
எதிர்கொண்டு அழைக்க வந்த பெண் அதிகாரியைப் போலவே இவர்களும் ஆபரணங்களையே
ஆடையாக அணிந்திருந்தனர். இளவரசியின் ஆபரணங்களில் ஜொலித்த கற்கள் பாம்பின்
கண்களைப் போலவே பிரகாசித்தன. அவள் தலையில் சூடிக்கொண்டிருந்த நல்ல
பாம்பைப் போன்ற ஆபரணத்தின் சிவப்புக் கற்கள் பாம்பு ஒன்று படமெடுத்துச்
சீறிக்கொண்டே ஆடுவதைப் போலவே அவள் தலையைத் திருப்பும்போதெல்லாம்
தோற்றமளித்தது. இந்தப் பட்டத்து இளவரசியைச் சூழ்ந்திருந்த பெண்கள்
ஆபரணங்கள் மட்டுமின்றி ஆயுதபாணியாகவும் இருந்தனர். சற்றுத் தூரத்தில் அவள்
கணவன் எனப்படும் இளவரசன் நின்றுகொண்டிருந்தான். அவனும் இளவரசியைப் போலவே
அலங்கரித்துக்கொண்டிருந்தாலும் இடையில் ஒரு சிறு வாளும் தொங்கியது.
அவனுக்குச் சற்றுத் தூரத்தில் சில ஆண்கள் பூரண ஆயுதபாணியாக எதற்கும் தயார்
நிலையில் நின்று கொண்டிருந்தனர். சற்றே யோசனையுடன் அந்த இளவரசனைப்
பார்த்துக்கொண்டிருந்த கண்ணன் இளவரசியை வணங்கினான். தன்னுடைய
வணக்கங்களையும் அவளுக்குத் தன் மொழியில் தெரிவித்தான். இளவரசி தன்
மொழியில் ஏதோ சொல்லிவிட்டுப் பின்னர் கண் ஜாடை காட்டினாள். உடனேயே சற்றுத்
தூரத்தில் நின்று கொண்டிருந்த இளவரசன் முன்னே வந்து முதலில் இளவரசியை
வணங்கினான். கண்ணனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. பின்னர் மிகவும்
சுத்தமான அதே சமயம் சரளமான கண்ணனின் சொந்த மொழியில் , இளவரசி பேசியவற்றை
மொழி பெயர்த்துக் கண்ணனுக்குக் கூறினான். கண்ணன் அசந்து போனான். இவனுக்கு
நம் மொழி தெரிந்திருக்கிறது. அன்றி மிகவும் சரளமாகவும், சகஜமாகவும்
பேசுகிறானே? ம்ம்ம்ம்??
“தெய்வீக இளவரசி, நான், வசுதேவன் என்னும்
யாதவகுலத் தலைவனின் மகன், என் பெயர் கண்ணன் என்னும் வசுதேவ கிருஷ்ணன்.
என்னுடைய குரு சாந்தீபனி என்பவர். அவர்கள் அனைவரின் சார்பிலும் இங்கே
வந்துள்ளேன். உன்னை வணங்குகிறேன்.” கண்ணன் தன் வணக்கங்களைத்
தெரிவித்துக்கொண்டான். அதே சமயம் அவன் கண்கள் கூர்மையாக அந்த இளவரசனின்
முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தது. கண்ணன், குரு சாந்தீபனியின் பெயரை
உச்சரித்ததுமே அந்த இளவரசனின் முகம் வெளுத்துப் போனதையும், கண்களில்
தெரிந்த பயத்தையும் கண்ணன் கவனித்துக்கொண்டான். கண்ணன் பேசியதை அவனால்
உடனடியாக மொழி பெயர்க்க முடியாமல் தொண்டை அடைத்துக்கொண்டது என்பதையும்
கண்ணன் கவனித்தான். என்றாலும் அவன் சமாளித்துக்கொண்டு கண்ணன் கூறியவற்றை
மொழி பெயர்த்து இளவரசிக்குச் சொன்னான். கண்ணனுக்கு இப்போது சர்வ
நிச்சயமாய்ப் புரிந்துவிட்டது. இது குரு சாந்தீபனியின் மகன் புநர்தத்தன் !
வேறு யாரும் இல்லை. பிக்ரு பாஞ்சஜனா விற்றதாய்ச் சொன்னதும் இவனையே எனப்
புரிந்துகொண்டான்.
கண்ணனை தெய்வீக அன்னை ராணியின் சார்பாக
வரவேற்பதாய்க் கூறினாள் பட்டத்து இளவரசி. அவள் அருகே அவளுக்குச் சிறிய
அவள் தங்கையான இளவரசியும் நின்றிருந்தாள். கண்ணன் வந்ததில் இருந்து அவன்
முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவள் கண்ணனின் புன்னகையையும், அவன்
வசீகரமான முகத்தையும் பார்த்துக்கொண்டே தன்னை மறந்த நிலையில் இருந்தாள்.
பின்னர் பட்டத்து இளவரசி ஏதோ ஜாடை காட்ட, அவளும் அவள் கணவன் என்று
அழைக்கப்பட்ட இளவரசப் பதவியில் இருக்கும் புநர்தத்தனும் நகர்ந்து
சென்றனர். அவள் கட்டளையின் பேரில் இளைய இளவரசி கண்ணனையும் அவனோடு
வந்தவர்களையும் அங்கே காத்துக்கொண்டிருந்த பல்லக்குகளுக்கு அழைத்துச்
சென்றாள். இளையவளும் கண்ணனின் பல்லக்கிலேயே ஏறிக்கொண்டாள். அவள் தன்னுடைய
மொழியில் கண்ணனிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். கண்ணனுக்கு அவள் பேசுவது
சுத்தமாய்ப் புரியவில்லை எனினும், அவள் குரலின் தொனியில் இருந்து அவள்
கண்ணனோடு நட்பை விரும்புகிறாள் எனப் புரிந்துகொண்டான். கண்ணைக் கவரும்
அவள் அழகு, கருத்தையும் கவருகிறது என்பதைப் புரிந்து கொண்ட கண்ணன், இந்த
நாட்டின் பழக்க, வழக்கங்கள் எதுவும் புரியாமல் நாம் எதிலும்
மாட்டிக்கொள்ளக் கூடாது. நாம் வந்த காரியம் கெட்டுப் போய்விடும். ஆகவே
கவனமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் எனத்
தீர்மானித்தான். பல்லக்கு ராணியின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.
Geetha Sambasivam
unread,
Apr 5, 2010, 11:17:26 AM4/5/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
அரண்மனை
மிகப் பெரியதாகக் கோட்டைக்கு நடுவில் அமைந்திருந்தது. அரண்மனனயின் ஒரு
பாகம் கிருஷ்ணனுக்கும், கூட வந்தவர்களுக்கும் எனச் சித்தம் செய்து தயாராக
வைக்கப் பட்டிருந்தது. கண்ணனையும், உத்தவனையும் அங்கே அழைத்துச் சென்றனர்.
கப்பலில் கூட வந்த மற்ற தொழிலாளிகளில் சிலர் இங்கே கண்ணனின்
பணிவிடைக்கெனத் தயாராகக் காத்திருந்தனர். அழகிய இளைய இளவரசி கண்ணனை
விட்டுப் பிரிய மனமின்றி விடைபெற்றுச் சென்றாள். அவள் செல்லும்போது
மீண்டும் கண்ணனை வந்து பார்ப்பதாகச் சொல்லிச் சென்றதை, அவள் மொழி தெரிந்த
ஒருவனால் மொழிபெயர்த்துக் கண்ணனுக்குச் சொல்லப் பட்டது. அனைவரும் சென்று
தனிமை கிடைத்ததும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, கடைசியில்
ஒருவழியாகப் புநர்தத்தனைக் கண்டு பிடித்துவிட்டோம். ஆனால் இந்த
நாககன்னிகைகளின் பிடியிலிருந்து அவனை விடுவித்து எவ்வாறு அழைத்துச்
செல்வது என யோசிக்கவேண்டும்.” என்றான்.
“நாம் அபாயத்தில்
இருக்கிறோம். இப்படி ஒரு விசித்திரமான உலகுக்கு வருவோம் என்பதை நான்
நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஆனால்……ம்ம்ம்ம் எனக்கு ஒரு யோசனை,
பார்க்கலாம், ஒருவேளை நாம் தப்பிச் செல்லக் கூட முடியும்.” என்றான்
உத்தவன்.
சிறிது நேரம் கழித்து, கண்ணனைக் கப்பலில் சந்திக்க வந்த
பெண் அதிகாரி, பட்டத்து இளவரசியின் மணாளனும், அடுத்த அரசனாகப் போகிறவனுமான
இளவரசன் புநர்தத்தனை அழைத்துக் கொண்டு கண்ணனின் இருப்பிடம் வந்து
சேர்ந்தாள். கண்ணனை அவன் வணங்கினான். ஒரு மாதிரியான தர்மசங்கடமான நிலை
நிலவியது. யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. என்ன பேசுவது? யார்
ஆரம்பிப்பது என நினைத்தவர்கள் போல் மெளனமாகச் சிறிது நேரம் அனைவரும்
இருந்தனர். பின்னர் கண்ணனே பேச ஆரம்பித்தான், “புநர்தத்தா, உன்னை
ஒருவழியாகக் கண்டு பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. “ புநர்தத்தன்
என்ற பெயரால் அழைக்கப் பட்டதுமே அவன் முகம் வெளிறிப் பயம் சூழ்ந்துகொண்டது
அவனை. சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான். கண்ணன் கண்களுக்கு அது
தப்பவில்லை. எனினும் கவனிக்காதவன் போல் மீண்டும் தொடர்ந்தான். “குருதேவர்
தன் ஆசிகளை உனக்குத் தெரிவிக்கச் சொன்னார். உன்னை அவரால் ஒரு க்ஷணம் கூட
மறக்கமுடியவில்லை. அவர் மறக்கவும் இல்லை.” என்றான் கண்ணன்.
“நீ
இங்கே வந்தது ஒரு துர்பாக்கியமே! வந்திருக்கவேண்டாம் நீ!” என்ற
புநர்தத்தன் தன் அருகே நின்றிருந்த பெண் அதிகாரியைக் குறிப்பாய்ப்
பார்த்துவிட்டு, “கண்ணா, இவளுக்கு நம் மொழி தெரியாது என்றும் எதுவும்
புரிந்துகொள்ள மாட்டாள் என்றும் நினைக்காதே! நம் செய்கைகளில் இருந்து
அனைத்தையும் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் படைத்தவள் இவள்.” என்று
வேகமாய்ச் சொன்னான்.
“எனில் நீ இங்கே ஒரு சிறைக்கைதியா?
ம்ம்ம்ம்ம்?? பட்டத்து இளவரசி அடுத்த அன்னை ராணியாகும்போது நீ அடுத்த
ராஜாவாகப் போகிறாய் என்றல்லவோ எண்ணினேன்?”
“ஆம், அது உண்மைதான்.
பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவனே நான். ஆனால் உன்னிடம்
உண்மையை உள்ளபடி சொல்கிறேன் கேட்டுக்கொள், கண்ணா. நீ இப்போது இங்கே வந்தது
எனக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. உன் வரவால் அனைவருக்கும் ஏதோ ஆபத்து
ஏற்படப் போகிறது என்று தோன்றுகிறது.”
“ஏன்?? உன்னை மீண்டும்
குருதேவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைக்கவே நான் விரும்பி வந்துள்ளேன். நீ
இல்லாமல் அவருக்கு மன மகிழ்ச்சியே இல்லை.” என்றான் கிருஷ்ணன்.
“ஹா,
ஹா, ஹா, என் தந்தை! அவர் என்னை இறந்தவனாக ஏன் நினைத்துக்கொள்ளக் கூடாது?
அவர் அப்படி நினைப்பதே எனக்கும் சந்தோஷமாக இருந்திருக்குமே. என்னால்
அவரிடம் திரும்பிச் செல்லமுடியாது.” என்று திட்டவட்டமாக மறுத்தான்
புநர்தத்தன். பின்னர் மெதுவாய்த் தனக்குத் தானே பேசிக்கொள்வது போல், “
நான் போகவேண்டுமென நினைத்தாலும், அதுநடவாத ஒன்று.” என்று சொன்னான். “என்ன
ஆயிற்று புநர்தத்தா? நம்முடைய புனிதமான நாட்டையும், அதன் சநாதன
தர்மத்தையும் முற்றிலும் மறந்து போனாயா?” என்றான் கண்ணன். புநர்தத்தன் ஒரு
பெருமூச்சு விட்டான்.
“வாசுதேவக் கிருஷ்ணா, கேள், கடந்த ஒருவருஷ
நாகலோக வாழ்க்கையில் அமிழ்ந்து போன எனக்குத் திரும்பவும் என் தந்தை
நடத்தும் அந்தக் கஷ்டமும், ஊருக்கு ஊர் செல்லும் நாடோடி வாழ்வும்
பிடிக்குமெனத் தோன்றவில்லை. ஆம், உண்மைதான், இங்கே வந்த சில நாட்கள்,
அல்லது ஒரு மாதம்?? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லைதான். திரும்பி நம்
நாட்டிற்குச் செல்லவும் நினைத்தேன் தான். ஆனால் நாளாக, நாளாக இந்த
சுகங்கள் என்னைத் தங்கள் அடிமையாக்கிவிட்டன. இங்கே உள்ள ஆடம்பர வசதிகளில்
வாழ்ந்து பழக்கப் பட்டுவிட்டேன். ஓரளவு எனக்கெனத் தனியான அதிகாரங்களும்
அளிக்கப் பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மேல், லாரிகா, பட்டத்துக்குரிய
இளவரசி, என்னை மகிழ்விப்பதிலேயே தன் கருத்தைச் செலுத்தி,எல்லா
விதங்களிலும் என்னை மகிழ்வித்து வருகிறாள். அவளிடமிருந்து பிரிந்து
செல்வதென்றால், ம்ஹும், அது என்னால் ஆகாத ஒன்று. ம்ம்ம் உனக்குப் புரியாது
கண்ணா, புரியவே புரியாது. நீ நம் நாட்டுப் பெண்களின் மத்தியில்
வாழ்ந்தவன். அவர்களுக்கு எனச் சிலக் கட்டுப்பாடுகளும், நாகரீகங்களும், சில
விதிகளும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்துக் கட்டுப்பாடான வாழ்க்கை வாழும்
பெண்கள் நம் நாட்டுப் பெண்கள். இந்த நாக கன்னிகைகளோடு ஒரு நாள்
வாழ்ந்தவனால், அந்தப் பெண்களோடு வாழ்வதை நினைத்தும் பார்க்கமுடியாது.”
இதைச் சொல்லும்போது புநர்தத்தனின் குரல் மிக மிக மெதுவாகத் தயக்கத்துடனே
ஒலித்தது.
கண்ணனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். நம்
குருதேவரின் மகனா இப்படிப் பேசுவது? “என்ன ஆயிற்று புநர்தத்தா உனக்கு? நீ
ஒரு அருமையான தவ வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாய். உனக்கு அது
நினைவிலாவது உள்ளதா? ஆஹா, நம் நாட்டின் ரிஷி, முனிவர்கள், ரிஷி
பத்தினிகள்! அவர்களின் தவ வாழ்க்கையும் ஒழுக்க சீலமும், உன் நினைவிலாவது
உள்ளனவா? அல்லது இந்த நாகலோகத்து உணவு, உடைகள், ஆடம்பர வாழ்க்கை, நாக
கன்னிகையின் அழகு ஆகியவற்றில் மூழ்கிப் போய் உன்னுடைய கடமைகளை
மறந்துவிட்டாயா? ஒரு ஆர்யனான உனக்கு உன் கடமைகளையும், கடைப்பிடிக்கவேண்டிய
தர்மத்தையும் பற்றி நான் சொல்லவேண்டாம். அவைகளை விடுத்து நீ இந்த
சிற்றின்ப வெள்ளத்திலேயே மூழ்கி இருக்கப் போகிறாயா?? எந்த ஆரியனும் இது
வரை இதைத் தன் வாழ்க்கையின் லக்ஷியமாய்க் கொண்டதில்லை என்பதையும்
அறிவாயல்லவா?”
கண்ணன் சற்றே நிறுத்திவிட்டுப் புநர்தத்தனைக்
கனிவுடனும், இரக்கத்துடனும் பார்த்தான். பின்னர் மிகவும் மென்மையாக, அதே
சமயம் உறுதியும், கருணையும் நிரம்பிய குரலில், “புநர்தத்தா, உண்மையில்
எனக்கு மிகவும் சந்தோஷம், எதற்குத் தெரியுமா? அனைத்துக் கடவுளரும் சரியான
சமயத்தில் என்னை இங்கே அநுப்பி வைத்து உன்னை இந்த நரகத்திலிருந்து
மீட்கும் வாய்ப்பைக் கொடுத்ததுக்கு. நான் நினைப்பது சரி என்றால், நீ இங்கே
இருக்கும் ஒவ்வொரு நிமிஷத்தையும், உன்னுடைய அதிகாரமோ, அல்லது இந்த ஆடம்பர
வாழ்க்கையையோ மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் கடந்து கொண்டிருக்கிறாய்.
எப்போது வேண்டுமானாலும் உன்னுடைய அதிகாரம் பறிபோகலாம், உன் உயிருக்கே
ஆபத்து நேரிடலாம். இந்த ஆடம்பரமும், அதிகாரமும் நிலைத்து நிற்கப்
போவதில்லை என்பதை அறிந்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன். இந்தச்
சூழ்நிலையிலும் நீ உன்னுடைய தந்தையும் என்னுடைய குருவுமானவரிடம் திரும்ப
மறுக்கிறாயா? நீ ஒரேயடியாக அதல பாதாளத்தில் விழுந்துவிடவில்லையே
புநர்தத்தா??” புநர்தத்தன் முகத்தை இனம் தெரியாத ஓர் உணர்வு கவ்வியது.
“கண்ணா,
உண்மையில் என்னுடைய உயிருக்குப் பயந்தே நான் வர விரும்பவில்லை.
வைவஸ்வதபுரியை விட்டுத் தப்பிக்க நான் நினைத்த அடுத்த நிமிஷம் என் உயிர்
என்னுடையதில்லை. அதோடு உண்மையாகவே இந்த ஆடம்பரங்களும் என்னைக்
கவர்ந்துவிட்டன. இவற்றை விட்டு விலகிக் கஷ்டமானதொரு வாழ்க்கையை
வாழவேண்டும் என நினைக்கக்கூட என்னால் முடியவில்லை. சாந்தீபனியின் மகனாக
இங்கே வந்த நான் முதலில் இந்த வாழ்க்கையை வெறுத்தேன் தான். ஆனால் இப்போதே
இது தான் வாழ்க்கை என்ற உணர்வு என்னிடம். வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்
என்றே நினைக்கிறேன். நீ சொல்லும் அந்த ஆதர்ச வாழ்க்கையை வாழவேண்டும் என்ற
எண்ணம் என்னிடம் இப்போது இல்லை.”
ஆஹா, புநர்தத்தா, சேற்றில்
புரளும் பன்றியைப் போல இப்படி ஒரு வாழ்க்கையை நீ உண்மையாகவே
விரும்புகிறாயா? ஒரு வளர்ப்பு நாயைப் போல உன்னைத் தங்கள் இஷ்டத்திற்கு
வளைத்து ஆதாயம் தேடிக்கொள்ளும் பெண்களின் கூட்டுறவில் உண்மையாகவே சுகம்
காண்கின்றாயா? ஒவ்வொரு நிமிஷமும் உன் உயிருக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.
இந்திரிய சுகத்துக்கு நீ அடிமையாகிவிட்டாயா? இப்படிப் பட்ட ஒரு போலியான
வாழ்க்கையும் ஒரு வாழ்க்கை என்றா சொல்லுகிறாய்?”
“ஹா, என்ன
வேண்டுமானாலும் சொல்லிக் கொள் கண்ணா. ஆம், நான் சேற்றில் புரளும் ஒரு
பன்றிதான். வளர்ப்பு நாய்தான். இதை என்னால் எப்படி விடமுடியும்? நான்
இதற்குப் பழகிவிட்டேன். இப்போது இந்த வாழ்க்கையை வாழ்வது என்னுடைய
அத்தியாவசியத் தேவை என்றே வைத்துக்கொள்.” என்றான் புநர்தத்தன்.
“அது
சரி! ஒரு நாக கன்னிகை உனக்குக் கொடுக்கும் சில நிமிட இன்பங்களே
பெரியதல்லவா? அதை விட உன் தந்தையாரோ, உன் முன்னோர்களோ, எப்படிப் பட்ட
முன்னோர்கள்? அறிவாயன்றோ? உன் தந்தை ஒவ்வொரு நிமிஷமும் அநுபவிக்கும்
துயரமும், ஒன்றுமே இல்லைதான். அதெல்லாம் இந்த நாக கன்னிகை உனக்குக்
கொடுக்கும் இன்பங்களை விடப் பெரியது அல்லவே அல்ல. இல்லையா?” கண்ணன்
குரலில் சற்றே இகழ்ச்சி தெரிந்தது. “உன்னுடைய முன்னோர்களுக்கு நீ செலுத்த
வேண்டிய மரியாதை எதுவுமே இல்லை. ஒரு மனிதன் எப்போது தன் தந்தையை அவமதிக்க
ஆரம்பிக்கிறானோ, அவன் மனிதனே அல்ல.” மென்மையாகப் பேசினாலும் கடுமை தெரியப்
பேசினான் கண்ணன்.
Geetha Sambasivam
unread,
Apr 7, 2010, 5:48:43 AM4/7/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
புநர்தத்தனின்
கண்கள் பொங்கின. தன் கண்களில் வழியும் கண்ணீரை மறைத்துக்கொண்டு அவன்,
“இல்லை, என்னால் முடியாது, வாசுதேவகிருஷ்ணா, நான் இங்கிருந்து தப்ப
நினைத்தாலும் அது என்னால் இயலாத ஒன்று.” என்றான். இயலாமையில் விளைந்த
கோபத்திலும், மனதின் ஓர் ஓரத்தில் தந்தையிடம் உள்ள பாசம் கிளர்ந்து
எழுந்ததால் விளைந்த சோகத்தாலும் அவன் குரல் தழுதழுத்தது.
“ஏன்
முடியாது?? உன்னைச் சிறைக்கைதியைப் போல் வைத்திருக்கிறார்கள் எனில் உன்னை
இங்கிருந்து மீட்பது என் கடமை!” என்றான் கண்ணன். “முடியாது கண்ணா,
முடியாது! இந்த நாட்டில் பட்டத்து இளவரசிக்கெனத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்
ஒன்று சாகவேண்டும், அல்லது அரசனாகவேண்டும். அவன் எவ்வளவு உண்மையாகவும்,
விசுவாசத்தோடும் இருக்கிறானோ, அரசனாக முடியும், இல்லை எனில் அவனுக்குச்
சாவு தான் ஒரே தண்டனையாக விதிக்கப் பட்டுள்ளது. இந்த நாட்டு இளவரசியை
ஏமாற்றி அவளுக்குத் துரோகம் புரிந்தவன் உயிரோடு இதுவரை திரும்பிச்
சென்றதில்லை. இவை இந்த நாட்டின் கடுமையான சட்டங்கள். தெய்வீக அன்னையால்
விதிக்கப் பட்டது.” என்றான் புநர்தத்தன்.
“ம்ம்ம்ம்?? எவ்வாறு நீ தேர்ந்தெடுக்கப் பட்டாய் புநர்தத்தா?? “
“இது
ஒரு விசித்திரமான நாடு கண்ணா! இந்த நாட்டின் அரசிக்கு எனச் சில அபூர்வத்
திறமைகளும், அதிசய சக்திகளும் இருக்கின்றன. அந்தச் சக்திகளைக் கொண்டு அவள்
பல அதிசயங்களைப் புரிகின்றாள். அவள் உடலில் அம்பாள் வந்துவிடுவதாயும்,
அந்த நேரங்களில் அவளே அம்பாளாக மாறிவிடுவதாயும் சொல்கின்றனர். அப்போது
அவள் சொல்பவை அனைத்தும் இங்கே வேதவாக்காகக் கடைப்பிடிக்கப் படுகின்றன.
அவளுடைய மகள்களுக்கு என எங்கே மணமகன் பிறந்திருக்கிறான் என்பதும் அவன்
எவ்விதம் இந்த நாட்டுக்கு வந்து சேருவான் என்பதும் மற்றும் அவனைக்குறித்த
அனைத்துத் தகவல்களும் அவளுக்கு முன்கூட்டியே தெரிந்துவிடுகின்றன. ஒருவேளை
அவளுடைய இந்த மானசீக சக்தியினாலேயே அவள் தன் பெண்களுக்குரிய மணமகனைத்
தன்பால் இழுக்கிறாளோ? தெரியவில்லை! அவள் சக்தியே ஒரு புதிர் கண்ணா!
ம்ம்ம்ம்?? எனக்கென்னமோ அவளுடைய இந்த அதிசய சக்தியாலேயே நீயும் இங்கே
வந்து சேர்ந்திருக்கிறாயோ என எண்ணுகிறேன் கண்ணா!” என்றான் புநர்தத்தன்.
கண்ணன் சிரித்தான். “புநர்தத்தா! நான் என் சொந்த விருப்பத்தின்பேரிலேயே இங்கே வந்திருக்கிறேன்.” என்றான்.
“குழப்பம்
தான் மிஞ்சுகிறது. கண்ணா, எனக்குப் புரியவில்லை. ஆனால் என்ன நடந்தது என்று
கேள். புண்யாஜனாவின் ராக்ஷசர்கள் என்னை இங்கே கொண்டு வந்தபோது இந்த
தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி என்னை வரவேற்றாள். நான் வந்த
சிலநாட்களிலேயே இங்கே ஒரு திருவிழா நடந்தது. அந்தத் திருவிழாவில் புதிதாய்
வந்திருக்கும் இளைஞன் எவனோ, அவன் ஏற்கெனவே பட்டத்து இளவரசிக்கு மணமகனாய்
அல்லது கணவனாய் இருக்கும் ஆணோடு யுத்தம் செய்யவேண்டும். இந்த யுத்தத்தில்
கணவனாய் ஏற்கெனவே இருப்பவன் ஜெயித்தால் வந்தவன் கொல்லப் படுவான். வந்தவன்
ஜெயித்தால் அவன் அடுத்த அரச மணமகனாய் அறிவிக்கப் பட்டு ஏற்கெனவே இருந்தவன்
கொல்லப் படுவான். அப்படி நான் ஏற்கெனவே இந்தப் பட்டத்து இளவரசிக்கு
மணமகனாகவும், கணவனாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டவனோடு போர் புரிய நேர்ந்தது.
எனக்கு வேறு வழியில்லை. மறுத்தாலும் என் உயிர் என்னுடையதில்லை. நான்
அவனைக் கொன்றுவிட்டு, இந்தப் பட்டத்து அரசிக்கு மணமகனாக அறிவிக்கப்
பட்டுத் திருமணம் செய்து வைக்கப் பட்டேன். இல்லை எனில் நான் இறந்தால் அவனே
நீடித்திருப்பான்.” என்றான் புநர்தத்தன்.
கண்ணன் முகம் யோசனையில்
ஆழ்ந்தது. “அப்படியா? என்றால் நானும் இப்படி ஒரு விழாவில்
கலந்துகொள்ளும்படி இருக்குமோ? அந்த இளவரசியை நான் மணந்துகொள்ளும்படி
நேருமோ?” என்று கேட்டான்.
“அப்படித்தான் நினைக்கிறேன் கண்ணா! அன்னை
ராணியின் மேல் இன்னும் தெய்வீகம் ஆவிர்ப்பவிக்கவில்லை. அப்படி ஒரு நிலை
அன்னை ராணிக்கு வந்து அவள் பேசவும் ஆரம்பித்துவிட்டாளானால் அவள்
கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைத் தவிர உனக்கு வேறு வழியே கிடையாது. அப்படி
நீ மறுத்தாயானால் ராணியின் கணவனாக இருக்கும் அரசனால் கொல்லப் படுவாய்.”
என்றான் புநர்தத்தன். “ஓஹோ, நான் அவளை மணந்துகொண்டால்??” கண்ணன் கேட்டான்.
இளவரசியின் நடத்தைகளுக்கான காரணம் கண்ணனுக்கு இப்போது புரிய ஆரம்பித்தது.
தன் அன்னையின் தீர்க்கதரிசனத்திற்கு ஏதுவாக அவள் தன்னை அவள் வழிக்குக்
கொண்டுவர முயன்று கொண்டிருக்கிறாள்.
“நீ அவளை மணந்துகொண்டால்
வாழ்நாள் பூராவும் அவளோடு இங்கேயே இருக்கவேண்டும், அல்லது வேறு ஒருவன,
உன்னைவிட பலசாலியும் புத்திசாலியுமாக இருந்து இங்கே வந்து உன்னைக்
கொல்லும்வரை அவளோடு வாழலாம். ராணியின் பெண்களான இவர்களுக்கு இந்த நாட்டை
விட்டோ, நகரத்தை விட்டோ வெளியே செல்ல முடியாது. நீ இந்த இளவரசியை மணந்து
கொண்டால், நல்ல சாப்பாடு, விலை உயர்ந்த துணிகள், ஆபரணங்கள், பேருக்குக்
கொஞ்சம் அதிகாரம் அத்தனையும் கிடைக்கும். ஆனால் நீ உன் மனைவியான அந்த
இளவரசியின் அடிமைதானே தவிர, நீயாகச் சுதந்திரமாய் அவளை எதுவும் செய்ய
முடியாது. அவளுக்குப் பணிவிடைகள் புரிவதே உன் முக்கிய வேலை. ஒரு
ஒட்டுண்ணிபோல் அவளை ஒட்டிக் கொண்டே உன் வாழ்நாட்களைக் கழிக்கவேண்டும். நீ
அந்தண்டை, இந்தண்டை நகரமுடியாமல் எப்போது பெண்காவலர்கள் உன்னைக் காவல்
காத்துக்கொண்டிருப்பார்கள். உன் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்குத்
தெரிந்துவிடும். அதோடு எப்போது இந்த தெய்வீக சக்தி படைத்த அன்னை ராணி
உன்னுடைய மரணத்தை அறிவிப்பாளோ என்ற கவலையும் இருக்கும்.”
“இப்படி
ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்வதை விட நான் இறப்பதையே மேலாக நினைக்கிறேன்.”
என்றான் கண்ணன். “ நீ ஏன் மறுத்துப் பேசவில்லை புநர்தத்தா?” என்றும்
கேட்டான். “என்னால் முடியாது. தெய்வீக சக்தியால் அடுத்த மணமகன் வருகிறானா
என்பதை ராணி அறிவிக்கும் வரையில் நான் காத்திருக்கவேண்டும். அறிவிப்பு
வந்து, திருவிழாவும் அறிவிக்கப் பட்டால் நான் ஒன்று சண்டையில் ஜெயித்து
என் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, கொல்லப் படவேண்டும். இந்த
இருவரில் யார் உயிர் பிழைக்கின்றனரோ அவரே அடுத்த அரசனும் ஆவான். ஒவ்வொரு
நாளும், ஒவ்வொரு நிமிஷமும் இந்த ஒரு நாளுக்காகக் காத்திருப்பதே என் வேலை.”
என்றான் புநர்தத்தன்.
“சரி, இதில் அரசன் எங்கே வருகிறான்? அவனுக்கு என்ன வேலை?” என்றான் கண்ணன்.
Geetha Sambasivam
unread,
Apr 11, 2010, 10:14:10 PM4/11/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“இப்போது
ராணியாகவும் தெய்வீகம் பொருந்திய அன்னை மாதாவாயும் இருக்கும் அரசிக்குப்
பின்னர் இப்போதைய பட்டத்து இளவரசி ராணியாவாள். மேற்சொன்ன முறைகளில்
கடைசியாக இளவரசி ராணியாக ஆகும்போது எவன் அவள் கணவனாய் இருக்கிறானோ அவனே
அரசனாவான். இந்த இளவரசியை எவ்வாறு தெய்வீக அன்னை என்கின்றனரோ அப்படியே
அவனையும் தெய்வத் தந்தை என்கிறார்கள். அவனுக்குச் சில அதிகாரங்களும்
கொடுக்கப் படும். முக்கியமாய் அவனை மரணக்கடவுளாகச் சித்திரிக்கிறார்கள்.
இங்கே அந்த அரசனே யமன் போல் செயல்படுகிறான். அவ்வளவு ஏன் யமன் என்றே
அழைக்கின்றனர் அவனை. அனைவர் உயிரையும் எடுக்கும் அதிகாரம் அவனுக்கு உண்டு.
ஆனாலும் அவன் ராணியின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவனே ஆவான். அவளை மீறி
அவனாலும் ஒன்றும் செய்யமுடியாது.” புநர்தத்தன் நீண்ட விளக்கம் கொடுத்தான்.
கண்ணன்
அன்பு ததும்பப் புநர்தத்தனைப் பார்த்தான். “புநர்தத்தா, இங்கிருந்து
தப்பிச் செல்ல நான் வழி கண்டுபிடித்துவிட்டால், நீ என்னோடு வருவாயல்லவா?”
என்று அவன் தோளின் மேல் கையை வைத்து அவனை ஆதரவுடன் தட்டிய வண்ணம் கேட்டான்.
“கண்ணா,
நீ ஒரு முட்டாள். இங்கிருந்து தப்புவது என்பது கனவிலும் நடவாத ஒன்று.
மேலும் நான் இங்கிருந்து வர விரும்பவில்லை. உன் இஷ்டத்துக்கு எதுவும்
செய்யமுடியும் என நினையாதே! எச்சரிக்கை!” என்றான் புநர்தத்தன்.
“சரி,
தப்ப வழி கண்டு பிடிக்கிறேன், சீக்கிரமாகவே. உன்னையும் அழைத்தே செல்வது என
முடிவு செய்துவிட்டேன்.” என்றான் கண்ணன் தனது வழக்கமான மென்சிரிப்போடு.
புநர்தத்தன்
அங்கிருந்து சென்றதும், உத்தவனைப் பார்த்துக் கண்ணன், “உத்தவா, மாபெரும்
சதிச் சூழலில் சிக்கிக்கொண்டுள்ளோம். யமனின் கைகளில் விழுந்துவிட்டோம்.
எப்படியாவது தப்பவேண்டும்.” என்று சொன்னான். அன்று மதியம் ஒரு பெண்
காவலாளி வந்து தெய்வீக அன்னையும், ராணியுமாக இருப்பவள், சர்வசக்தி படைத்த
அவர்கள் தலைவி, கண்ணனையும், உத்தவனையும் பார்க்க விரும்புவதாய்ச்
சொன்னாள். கண்ணனும், உத்தவனும் அவளுக்கெனக் கொண்டு வந்திருந்த விலை
உயர்ந்த பரிசுகளைப் புண்யாஜனா கப்பலின் ஊழியர்களை எடுத்துவரச்
சொல்லிவிட்டு அந்தப் பெண்மணியோடு சென்றனர். வழியெங்கும் ஆயுதங்கள் தரித்த
பெண் காவலாளிகள் கடுமையான காவல். உலகுக்கே அன்னை என அவர்களால்
அழைக்கப்படும் அந்த ராணியைப் பார்ப்பதே புனிதமான ஒன்றென அவர்களால் சொல்லப்
பட்டது. அவளைப் பார்க்கச் செல்லும் இடமும் மிகவும் புனிதமானது என
வர்ணிக்கப் பட்டது. அரை இருட்டான ஒரு பெரிய கூடத்தில் இரு புறமும்
ஆயுதபாணியான பெண்கள் அணி வகுத்து நின்றனர். அறையின் ஒரு கோடியில் ஒரு யாக
குண்டம் போன்ற அமைப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அதன்
செந்நாக்குகள் அவ்வப்பொழுது மேலெழும்பியது, கண்ணன் வந்துவிட்டனா எனப்
பார்ப்பது போல் இருந்தது. அந்தத் தீயை, புனிதத் தீ என அழைக்கின்றனர். அந்த
அரைகுறை இருட்டில் அந்தத் தீயிலிருந்து கிளம்பிய மெல்லொளியில் அந்த
அறையின் அனைத்துப் பொருட்களுமே ஏதோ சொப்பன உலகில் இருப்பதைப் போல் காட்சி
அளித்தது.
எதிரே ஒரு பெரிய மேடை. மேலே ஏறப் படிக்கட்டுகள். அதன்
ஒருபக்கத்தில் பட்டத்து இளவரசியும், அவளின் இளைய சகோதரியும் நிற்கப்
பின்னால் பட்டத்து இளவரசியின் அப்போதைய கணவன் ஆன புநர்தத்தன்
நின்றுகொண்டிருந்தான். இன்னொரு பக்கம் தெய்வத் தந்தை என அழைக்கப்படும்
அரசன் பூரண ஆயுதபாணியாக நின்று கொண்டிருந்தான். இந்த தெய்வீக அரசிக்கு
முன்னர் ஆயுதங்களைப் பூரணமாய்த் தரிக்க அரசன் ஒருவனுக்கு மட்டுமே அநுமதி
உண்டு. அரசனின் ஐம்பது வயதுக்கு அவன் பார்க்க மிகவும் இளமையாகவே
இருந்தான். வசீகரமான முகத்தோடு திறந்த மனம் படைத்தவன் போல் காணப்பட்டான்.
திடீரெனச் சங்குகள், எக்காளங்கள் போன்ற வாத்தியங்கள்முழங்க, எதிரே இருந்த
யாககுண்டத்தின் தீ ஆள் உயரத்துக்குக் கொழுந்து விட்டெரிந்தது. அதன் ஒளி
மங்கும் முன்னர் திரைக்குப் பின்னே தெரியும் ஓவியம் போல் அன்னை ராணி அங்கே
நிற்பது லேசாகத் தெரிந்தது. எங்கே இருந்து எப்படி வந்தாள்??
ராணியின்
அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது. அவள் நடு வயதுக்கு மிக மிக அழகாக
இருந்தாள். அழகோடு இணைந்த கம்பீரம் மெருகூட்டியது. கழுத்தில் ஒரு
கெட்டியான ஆபரணமும், தலையில் பாம்பு படம் எடுக்கும் தோற்றத்துடன் கூடிய
ஒரு கிரீடமும், அணிந்திருந்தாள். அந்தக் கிரீடத்தின் ரத்தினங்களின் ஒளி
கண்ணைப் பறித்தது. அதன் சிவந்த ஒளி, கீழே எரிந்துகொண்டிருந்த தீயோடு
போட்டி போட்டுக்கொண்டு ஜொலித்தது. எல்லாவற்றுக்கும் மேலே, ஆஹா, இது என்ன?
உயிருள்ள நிஜப் பாம்பே அவள் கழுத்தை அலங்கரிக்கிறதே!
இது என்ன??
அனைவரும் அவளை வணங்குகின்றனர். சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து
நமஸ்கரிப்பவர்கள் அவள் சொல்லும்வரை எழுந்திருப்பது இல்லை. ஆச்சரியமாய்
இருக்கிறதே? நம் நாட்டு ரிஷி, முனிவர்கள் கூட இவ்வித வணக்கங்களை
ஏற்றதில்லை. கம்பீரமும், அதிகாரமும் நிறைந்த குரலில் அவள் ஆணையிட்டதுமே
அனைவரும் எழுந்தனர். பின்னர் அவள் கண்ணால் காட்டிய சைகையைப் புரிந்துகொண்ட
அரசன், இளவரசனை அழைக்க, இளவரசனாகிய புநர்தத்தன் கண்ணனை அழைத்து, அரசிக்கு
அவன் கொண்டு வந்திருக்கும் செய்தியைக் கூறச் சொன்னான். கண்ணன் இரண்டடி
முன்னால் வைத்து தெய்வீக அரசியைப் பார்த்துக் கீழ்க்கண்ட செய்திகளைக்
கூறினான்.
"தெய்வீக அன்னையே, நான், வாசுதேவ கிருஷ்ணன், ஷூரர்களின்
ஒப்பற்ற தலைவனான வசுதேவனின் மகன், இந்த பூமியின் ஒரு பகுதியை ஆண்டு வரும்
யாதவகுலத் தலைவன் ஆன உக்ரசேனனிடம் இருந்து நட்புக் கரம் நீட்டிக்கொண்டு
வரும் செய்தியைச் சுமந்து வந்துள்ளேன். தங்களுக்கேற்ற விலை மதிக்க முடியாத
பரிசுகளையும் அவர் சார்பாய்க் கொண்டு வந்துள்ளேன். இந்தப் பரிசுகளை ஏற்று,
அவரின் உந்நத நட்பையும் ஏற்று எங்களைக் கெளரவிக்க வேணுமாய்க்
கேட்டுக்கொள்கிறேன்." கண்ணனின் மென்மையான குரலில் கூறப்பட்ட இந்தச் செய்தி
அனைவருக்கும் புரியாவிடினும் மனதில் ஓர் மூலையில் இளக்கம் மிகுந்தது.
அங்கே ஓர் ஆழ்ந்த அதே சமயம் சற்று நேரம் நீடித்த மெளனம் நிலவியது.
Geetha Sambasivam
unread,
Apr 14, 2010, 3:39:15 AM4/14/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
தன்னுடைய
உறுதியான குரலில் அன்னை ராணி பேசத் துவங்கினாள். “வாசுதேவ கிருஷ்ணனுக்கு
நல்வரவு. நீ இங்கே என்னை நாடி வரப் போகிறாய் என்பது சில நாட்கள்
முன்னாலேயே எனக்குத் தெரியும். எனக்கு இந்த உலகின் அன்னையான தேவி மாதா
அறிவித்தாள். அவள் கட்டளை மூலம் எனக்கு இந்தச் செய்தி கிடைத்தது. உன்னை
வரவேற்று உபசரிக்கவும் அவள் கட்டளை. நீ கொண்டு வந்திருக்கும்
பரிசுப்பொருட்களையும் தேவி மாதா அங்கீகாரம் செய்யச் சொல்கின்றாள். உனக்கு
இங்கே நல்முறையில் உபசாரங்கள் செய்யவும் கட்டளை இட்டிருக்கிறாள்.” என
அறிவித்தாள். அவள் நிறுத்தவும் புநர்தத்தன் அன்னை ராணி கூறியவற்றைக்
கண்ணனுக்குப் புரியுமாறு அவர்கள் மொழியில் மொழிமாற்றம் செய்து கூறினான்.
புநர்தத்தன் பேசி முடித்ததும், மீண்டும் அன்னை ராணி தன் கையை உயர்த்தவே,
அங்கே மீண்டும் மெளனம் நிலவியது. “வாசுதேவ கிருஷ்ணா, மாட்சிமை பொருந்திய
தெய்வீகத் தந்தையின் நேரடிக் கவனிப்பிலே உன்னை இருத்துமாறு தேவி மாதாவின்
கட்டளை. அப்படியே நானும் ஆணையிடுகிறேன். தேவி மாதா, இவ்வுலகின் அன்னை, நீ
எப்போதுமே இங்கே இருந்து எங்களுக்குச் சேவை செய்வாய் எனவும் கட்டளை
இட்டிருக்கின்றாள். இன்று முதல் நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய்!” என்று
கூறினாள்.
கண்ணனுக்கு அவை மொழிபெயர்க்கப் பட்டதுமே அவன் பதில் கூற
யத்தனிக்கும்போது தன் கைகளால் அவனைத் தடுத்த வண்ணம் அன்னை ராணி மேலும்
கூறினாள்:” நீ எங்களில் ஒருவனாகிவிட்டாய். இதில் மாற்றம் இல்லை. தேவி
மாதா, இவ்வுலகின் அன்னை, உத்தரவிட்டு விட்டாள் எனில் அதை எவராலும் மீற
முடியாது, மீறவும் கூடாது.” திட்டவட்டமாக அறிவித்தாள் அன்னை ராணி. கண்ணன்
மீண்டும் வாயைத் திறக்கும் முன்னர் ஓர் ஆள் உயரத்துக்கு அங்கே இருந்த
குண்டத்தில் இருந்து தீ எழும்பி மேலே வர, அன்னை ராணி எப்படிப் போனாள்
என்றே தெரியாமல் மறைந்தாள். அந்த மேடையில் நின்று கொண்டு மெளன சாட்சியாக
அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் படும்
அரசன், கீழே இறங்கி வந்து கண்ணன் தோளில் தன் கையை ஆதுரமாக வைத்தான். ஒரு
தந்தையின் பாசம் அந்தக் கைகளில் புலப்பட்டது எனக் கண்ணனால் உணர முடிந்தது.
அந்தப் பெரிய கூடாத்தின் ஒரு பக்கம் இருந்த தாழ்வாரம் வழியாகக் கண்ணனை
அவன் நடத்திச் சென்றான்.
அந்த யாக குண்டத்தின் பின்னால் இருந்த ஒரு
தனி அறைக்கு அது சென்றது. அங்கே கல்லால் ஆன ஒரு மேடையின் மேல் அன்னை ராணி
அமர்ந்திருக்க இரு பணிப்பெண்கள் அவளுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.
அன்னை ராணியிடம் ஆவிர்ப்பவித்திருந்த தேவி மாதா விலகிவிட்டதால் அவள்
இப்போது தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டிருந்தாள். அரசனுக்கும்
கண்ணனின் மொழி நன்கு தெரிந்ததால் அன்னை ராணி அவன் மூலம் கண்ணனைப் பல
கேள்விகள் கேட்டுக் கண்ணனை பற்றித் தெரிந்து கொண்டாள். கண்ணனுக்கு
ஆச்சரியம் என்னவென்றால் அந்த அரசனாகப் பதவி வகித்த தெய்வீகத் தந்தை, குரு
பரசுராமரைப் பற்றி விசாரித்தது தான். அவரைப் பற்றி விசாரித்ததோடு
அல்லாமல், அவருடைய பல சீடர்களைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்து
கொண்டான் அந்த அரசன். பின்னர் கண்ணனை அங்கே அழைத்து வந்த பெண்மணியின்
துணையோடு கண்ணன் தன் இருப்பிடத்துக்குச் சென்றான். அங்கே இருந்த புண்யாஜனா
கப்பலின் ஆட்கள் ஒருவர் மூலம் மேலும் பரிசுப் பொருட்களைக் கப்பலில்
இருந்து எடுத்துவருமாறு கண்ணன் அனுப்பி வைத்தான்.
அன்றிரவு கண்ணன்
தூங்குகையில், திடீரெனத் தன் அருகே யாரோ அமர்ந்த மாதிரி தோன்றக்
கண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டு விழிப்பு வந்தது. கண் விழித்துப்
பார்த்தால் ஒரு நிழலுருவம் கண்ணன் அருகே அமர்ந்து கொண்டு மென்மையாகப் பேச
ஆரம்பித்தது. முதலில் யாரோ என நினைத்த கண்ணன், பின்னர் இளைய இளவரசி எனத்
தெரிந்து கொண்டான். அவளுடைய நீண்ட கூந்தல் கண்ணன் முகத்தை மறைக்க அவள்
கண்ணனைத் தன் வசம் இழுக்க முயன்று கொண்டிருந்தாள். கண்ணன் இதிலிருந்து
எப்படித் தப்புவது என்ற யோசனையில் இருந்தாலும், அவனை யோசிக்க விடாமல் அவள்
அழகு மயக்கியது. என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த கண்ணனைத்
தப்புவிப்பது போல் அங்கே ஒரு பெண் அப்போது வந்து அந்த இளவரசியின் காதில்
ஏதோ மந்திரச் சொற்களைச் சொல்ல, புலிக்குப் பயந்து ஓடும் மானைப் போல் அவள்
கண்ணனை விட்டுவிட்டு ஓடினாள். அருகே படுத்திருந்த உத்தவன், “கண்ணா, என்ன
இதெல்லாம்?” என்றான் எழுந்து கொண்டே.
“ஒன்றுமில்லை, உத்தவா, நாக
கன்னி ஒரு நாகம் போலவே என்னைச் சுற்றிக்கொள்ளப் பார்த்தாள், நல்லவேளை
தப்பினேன்.” என்று சொல்லிவிட்டு நகைத்தான். அறைக்கு வெளியே யாரோ நடக்கும்
சப்தம் கேட்டது. ஆஹா, நம் சக்கராயுதத்தைக் கப்பலிலேயே விட்டுவிட்டோமே!
கண்ணன் வருந்தினான். காலடிகள் அறை வாயிலை நெருங்கியது. ஒரு கனத்த ஆண்
குரல், "வாசுதேவ கிருஷ்ணனுக்கு தெய்வீகத் தந்தையிடமிருந்து அழைப்பு
வந்துள்ளது. உடனே வரச் சொல்கிறார்." என்றது. "கண்ணா, நானும் வருகிறேன்,
தனியாய்ச் செல்லாதே!" என்று உத்தவன் சொல்ல, கண்ணனோ, "வேண்டாம் உத்தவா,
உனக்கு அழைப்பு இல்லை, மேலும் இப்போதைக்கு உடனடியாக எனக்கு அபாயம் எதுவும்
நேராது. கவலைப்படாதே!" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியே வந்து
அங்கே நின்று கொண்டிருந்த நாக உலகத்து மனிதனுடன் சென்றான். பல அறைகளையும்,
தாழ்வாரங்களையும் தாண்டிச் சென்று கடைசியில் உயரமாய் திடகாத்திரமாய் அங்கே
நின்று கொண்டிருந்த தெய்வீகத் தந்தையைக் கண்டான்.
Geetha Sambasivam
unread,
Apr 19, 2010, 2:16:35 AM4/19/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
கிருஷ்ணன்
வந்ததுமே, அவன் தோளில் ஆதுரத்துடனும், ஒரு தந்தையின் பாசத்துடனும் கை
வைத்து அவனிடம் மென்மையான குரலில், 'மகனே, பயப்படாதே, நான் உன்னைத்
துன்புறுத்த மாட்டேன்." என உறுதி அளித்தான். தெய்வீகத் தந்தை என
அழைக்கப்படும் அந்த மன்னனுக்குத் தன் வணக்கங்களைத் தெரிவித்த கிருஷ்ணன்,
தன்னை அந்த நடு இரவில் அங்கே அழைத்ததன் காரணத்தையும் வினவினான்.
"கண்ணா,"
மன்னன் குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. "நீ தெய்வீகத் தன்மை பொருந்தியவன்
என்பதில் சந்தேகமே இல்லை எனக்கு. தேவி மாதா சரியாகவே கூறி உள்ளாள். நான்
உன்னையும், உன் வீரத்தையும் பெரிதும் மதிக்கிறேன். இன்னும் சொல்லப் போனால்
என் சொந்த மகனைப் போல் உன்னை நேசிக்கவும் செய்கிறேன். அதனாலேயே உன்னை
எச்சரிக்கை செய்ய இந்த நடு இரவில் இங்கே அழைத்தேன். குமாரா, நீ
இங்கிருந்து உடனே கிளம்பு. இந்த நாடு உனக்கு ஏற்றதல்ல. அபாயத்தில்
விளிம்பில் நீ நின்று கொண்டிருக்கிறாய், குழந்தாய். இந்த நாகலோகம் உனக்கு
ஏற்றதல்ல. உன் கப்பலுக்கு உடனே செல்வாயாக. உன்னை நான் தப்புவிக்கிறேன்."
என்றான்.
"தந்தையே, உங்கள் பேச்சில் இருந்தும், நீங்கள் சரளமாய்ப்
பேசுவதில் இருந்தும் நீங்கள் ஓர் ஆரியர் எனப் புரியவருகிறதே. இங்கே
நீங்கள் அரசர். அப்படி இருக்கையில் உங்கள் பாதுகாப்பில் இருந்து நான் ஏன்
தப்பவேண்டும்? ஓர் ஆரியனான என்னை நீங்கள் காப்பாற்ற மாட்டீர்களா?"
"மகனே,
நீ இங்கேயே இருந்தாயானால் என் இளைய மகள் ஆன ஆஷிகாவை நீ மணக்க நேரிடும்.
பின்னர் இங்கேயே இந்த அன்னை ராணிக்கும், அவள் மக்களுக்கும் தொண்டு
புரிந்து கொண்டு அடிமையாக இருக்கும் அவலத்துக்கு ஆளாவாய். உனக்கு
விடுதலையே கிடைக்காது. சுதந்திரமாய்ச் சிந்திக்கக் கூட முடியாது உன்னால்.
உன் விருப்பம் என்பது துளிக்கூட இல்லாமல் இந்த அன்னை ராணியின்
விருப்பத்திற்கேற்ப நீ வாழவேண்டும். அப்படியும் அவளை உன்னால் திருப்தி
செய்ய இயலாது. வேறு உன்னை விடத் திறமைசாலி ஒருவன் வந்தானெனில் உன்
இடத்திற்கு அவன் வருவான். உன் உயிர் உன்னுடையதல்ல. நீ கொல்லப் படுவாய்."
என்றான் அந்த தெய்வீகத் தந்தை என அழைக்கப் பட்டவன்.
"ஆனால்
நீங்கள், உங்களைப் பார்த்தால் பல வருடங்களாக இங்கே இருப்பது போல்
தெரிகிறது. உங்களுக்கு எதுவும் நேரவில்லையல்லவா?" என்றான் கண்ணன்.
"மகனே,
எனக்கு நேர்ந்த கஷ்டங்களை எப்படி நான் விவரிப்பேன்?? அதோடு உன்னை இங்கே
சூழ்ந்திருக்கும் கஷ்டங்களையும் உனக்கு இங்கே நேரவிருக்கும்
அசம்பாவிதங்களையும் என்னால் எவ்வாறு சொல்ல இயலும் எனப் புரியவில்லை.
உனக்கு எப்படி புரிய வைப்பேன்?? என் மகனே, பல வருடங்கள் முன்னால், எப்போது
என எனக்கே நினைவில் இல்லை, பல ஆண்டுகள் முன்னால் நான் வைவஸ்வதபுரிக்குத்
தற்செயலாய் நான் பிரயாணம் செய்து கொண்டிருந்த கப்பல் தரை தட்டி இதன்
கரையில் நின்றதால் வந்து சேர்ந்தேன்." அரசன் சற்று நிறுத்திக்கொண்டான்.
"அப்போது
நான் இளைஞன். எனக்கு மனமார, உளமார வரவேற்பு அப்போதிருந்த தெய்வீக அன்னை
ராணியால்கொடுக்கப் பட்டது. இப்போது என் மனைவியாய் இருக்கிறாளே அவள்
அப்போது வாலிபப் பருவத்தில் இருந்தாள். நான் வந்ததுமே இந்த விழா நடந்தது.
அப்போது இளவரசியாகவும் தெய்வீக அன்னையாய்முடிசூடப் போகிறவளாயும் இருந்த
இந்த அன்னை ராணியின் அப்போதைய கணவனை நான் தோற்கடிக்கவேண்டும். அல்லது நான்
அவனால் கொல்லப்படவேண்டும். என் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை
நினைத்துப் பார். ஆனால் அதிர்ஷ்டவசமாய் நான் பார்கவ குலத்து மஹானும்,
ஜமதக்னியின் புதல்வரும் ஆன பரசுராமரின் சீடராய் இருந்தேன். அவருடைய கோடரி
ஆயுதத்தின் வலிமையை நீ அறிவாய் அல்லவா? அவரிடம் பயிற்சி பெற்ற நான்வெகு
எளிதாய் அப்போதைய பட்டத்து இளவரசனைக் கொன்றேன். பின்னர் நான் அந்த
இளவரசியைத் திருமணம் செய்து கொள்ள நேர்ந்தது. திருமணமும் முடிந்தது.
நானும் இங்கேயே அடிமையானேன்."
"ஆனால் அடுத்த கப்பல் வரும்போது நீங்கள் தப்பி இருந்திருக்கலாமே? ஏன் தப்பவில்லை ஐயா?" கண்ணன் கேட்டான்.
மகனே,
உனக்கு இவ்விடத்து விஷயங்கள் புரியவில்லை. ஒரு நாக கன்னிகை கணவனை
வலுக்கட்டாயமாய்த் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அது அவளுக்கு மிக
முக்கியம். ஆனால் அவள் தானாய்த் தன்னைக் கணவனிடம் ஒப்படைத்துக்கொள்ள
முடியாது. இங்கே நான் தான் அவளுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன், அவளுடைய
உடைமை. அவள் அல்ல. அவள் எப்போதுமே தன் தாய் ஒருவளுக்கு மட்டுமே
கடமைப்பட்டவள். கட்டுப் பட்டவளும். அவளை மணந்ததும், நான் இளவரசன் ஆனேன்,
அதே சமயம் நான் ஒரு சிறைக்கைதியும் கூட. அவள் சொன்னதையும், அவள் தாய்
கட்டளையிடுவதையும் கேட்டு அவற்றுக்கு நான் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும்.
ஆஹா! என்ன கொடுமை அது! அநுபவித்தால் தான் புரியும்!"
"குழந்தாய்!
நான் எவ்வளவு வருந்தி இருக்கிறேன் தெரியுமா இங்கே வந்து இப்படி
மாட்டிக்கொண்டோமே என?? தப்பிக்க வழி இல்லாமல் தவித்திருக்கிறேன், புரிந்து
கொள்வாயா? ஆனால் இவர்கள் நாககன்னிகைகள். உன்னை ஒரு முறை சுற்றிக்கொண்டால்
பின்னர் உன் ஆயுள் பூராவும் விடவே மாட்டார்கள். உன்னைச் சுற்றிப் பின்னிப்
பிணைந்து உன்னை அவர்கள் அடிமையாக ஆக்கி வைத்துக்கொள்வார்கள்."
"ம்ம்ம்ம்ம்
அது சரி, தந்தையே, இத்தனை வருஷங்கள் நீங்களும் ஒரு அரசனாக
வாழ்ந்திருக்கிறீர்கள். அந்த அதிகாரத்தையும், செல்வாக்கையும், வசதியையும்
அநுபவிக்கவே இல்லை என்கிறீர்களா?"
"ஆஹா, மகனே, என்ன கேள்வி இது?
இத்தனை வருஷங்களாய் நான் பட்ட பாடு நீ அறிய மாட்டாய் அப்பா, அறிய
மாட்டாய். எந்த நிமிஷம் யார் வந்து என் உயிரை எடுப்பார்களோ என ஒவ்வொரு
கணமும் தவித்துக்கொண்டிருந்திருக்கிறேன். நான் வந்த பிறகு நான்கு முறைகள்
இங்கே வெளி நாடுகளிலிருந்து பிரயாணிகள் வந்திருக்கின்றனர். "
"நான்கு முறைகளா? என்ன ஆயிற்று அவர்களுக்கு?"
"ஆம்,
வந்தார்கள், ஒவ்வொரு முறையும் தெய்வீகத் தாய் அதை முன் கூட்டியே சொல்வாள்.
அதற்கேற்றாற்போல் எவனாவது ஒருவன் வருவான். அவன் வந்ததும் இந்தத் திருவிழா
நடக்கும். திருவிழா என்ற பெயரில் அவன் என்னைக் கொல்லப் போகிறானா? நான்
அவனைக் கொல்லப் போகிறேனா என்ற பதைபதைப்பு. அதெல்லாம் உனக்குப் புரியாது
மகனே!"
"பின்னர் என்ன நடந்தது அவர்களுக்கு?"
"ஹா, ஹா, நான்
யார்?? பரசுராமரின் நேரடி சீடனாயிற்றே? என்னைத் தோற்கடிக்க முடியுமா? ஆஹா,
ஒவ்வொரு முறையும் அந்த இளைஞர்கள் என்னால் மிகக் கொடூரமாய்க் கொல்லப்
பட்டதை நினைக்கையில் என் மேலேயே எனக்கு வெறுப்பு மிகுந்து வருகிறது.
ஆனாலும் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதைத் தான் நான் செய்ய வேண்டி
இருந்தது. பின்னர் அந்த அன்னை ராணி இறந்து போனாள். என் மனைவியும்,
இப்போதைய அரசியும் ஆன இவள் ராணியானாள். நானும் மன்னன் ஆனேன். ஆஹா, நான்
வெறும் மன்னன் மட்டும் அல்ல பிள்ளாய்! யமன்! அனைவரின் உயிரையும் எடுக்கும்
மரணத்தின் கடவுளான யமன். ஆனால் இந்த யமன் அந்த அன்னை ராணி என அழைக்கப்
படும் தேவிமாதாவின் கண்ணசைவினால் உயிர்களைக் கொல்லுவேன். அது தான் இங்கே
எனது பிழைப்பு!" அவன் குரலில் இருந்த வறட்சியைக் கண்ட கண்ணனுக்கு அவன்
மீது இரக்கமே மிகுந்தது.
"ஆனால் நீங்கள் இப்போது மிகவும் சக்தி
படைத்து அதிகாரம் கொண்டு விளங்குகிறீர்கள்.இந்த ராணியும் இப்போது
உங்களிடம் அன்பு கொண்டிருக்கிறாள் அல்லவா? இப்போது நீங்கள் முயன்றால் அவள்
மனதை மாற்றலாமே? நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை அவள் மூலம்
நிறைவேற்றிக்கொள்ளலாம்."'
"கண்ணா, இன்னுமா நீ புரிந்து
கொள்ளவில்லை!" அரசன் சிரித்தான் என்றாலும் அவன் சிரிப்பில் உயிரில்லை."
ஆஹா, என்னால் மட்டும் அது முடிந்தால்?? ம்ஹும் நடக்காது மகனே நடக்காது.
எனக்கு உடல்நிலை கெடக் கூடாது. ஓய்வு என்பதும் இல்லை. தேவிமாதா அன்னை
ராணியின் உடலில் புகுந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அவள் வார்த்தைகளைக்
கேட்பதைத் தவிர மற்ற ஒன்றை நான் நினைக்கவும் முடியாது. அற்பக்
காரணங்களுக்காகக் கூட என்னைக்கொல்லலாம்."
"நீங்களும் ஏன் நான் புநர்தத்தனை அழைத்துச் செல்லும்போது என்னுடன் வரக்கூடாது?"
பெருங்குரலெடுத்துச்
சிரிக்க நினைத்தான் அந்த மன்னன். ஆனால் அது இயலாத ஒன்று. கண்ணனைப்
பரிதாபமாய்ப் பார்த்தான். "புநர்தத்தனை அழைத்துச் செல்வதா? கனவு காணாதே
தம்பி!" என்றான்.
கண்ணா,
இந்த நாக கன்னிகைகளைப் பற்றி நீ பூரணமாய் அறிந்திருக்கவில்லை. இவர்கள்
உன்னைச் சுற்றிக்கொள்ளுவார்கள் ஒரு ஒட்டுண்ணியைப் போல. உன்னை இவர்கள்
சுற்றச் சுற்ற இவர்கள் தரும் இன்பத்திலும், சந்தோஷத்திலும் நீ உன்னை
மறந்துவிடுவாய். உன்னால் இவர்களைப் பிரியவே முடியாது. இவர்களை விட்டுச்
செல்லவும் நினைக்கமாட்டாய்!”
“எனில் ஐயா, நீங்கள் அந்த தேவி
மாதாவாக இருக்கும் அன்னை ராணியை உங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு
வந்திருப்பதற்கு வெறுக்கவே இல்லையா?” கண்ணன் குரலில் ஆச்சரியம்
கலந்திருந்தது. அன்று காலையில் தான் புநர்தத்தன் மூலம் இந்த நாககன்னிகைகள்
அளிக்கும் இன்பம் பற்றி அறிந்திருந்தான். இப்போது இரண்டாம் முறையாக இந்த
மன்னனிடமிருந்து! அதிலும் அனைத்திலும் நேர்மையுடனும், ஒரு புனிதத்
தன்மையைக் காப்பாற்றிக்கொள்வதிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் ஒரு
மனிதனை அப்படியே தலைகீழாய் மாற்றி அவர்கள் சொல்வதை மட்டுமே கேட்கும்
வண்ணம் மாற்றும் மாயவலை!
“என்ன??” இப்போது தெய்வீகத் தந்தையின்
குரலில் ஆச்சரியம்! “அன்னை ராணியின் கொடுமைகளால் அவளை வெறுப்பதா? என்னால்
அதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை, வாசுதேவ கிருஷ்ணா! அவள் உடலில்
தேவி மாதா புகும் வரையிலும் அவள் எனக்கு ஒரு இன்பத்தை அள்ளிக்கொடுக்கும்
மனைவியாகவே செயல்படுகிறாள். எந்த விதத்திலும் எனக்குக் குறை வைப்பதில்லை.
அந்த நேரங்களில் அவளுக்காக நான் என் உயிரைக் கூட அர்ப்பணிக்கத் தயாராய்
இருக்கிறேன். இல்லை, கிருஷ்ண வாசுதேவா, அவளை என்னால் பிரிய முடியாது. நான்
அவளை மிகவும் நேசிக்கிறேன். என் உயிரினும் மேலாக என்று வைத்துக்கொள்ளலாம்.
அவள் இறந்தாளானால் அவளோடு நானும் இறந்துவிடுவேன். அவள் இல்லாத உலகை
என்னால் நினைத்துக் கூடப்பார்க்கமுடியவில்லை. தேவிமாதாவின் கட்டளையும்
அதுவே. இவற்றிற்கு மேல் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அவள்
இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?”
“அரசே, நீங்கள் மிகுந்த
அநுபவமும், புத்திசாலியும், திறமைசாலியும் ஆவீர்கள். மேலும் நீங்கள்
பரசுராமரின் சீடர் எனவும் சொல்கிறீர்கள். நான் ஒரு சின்னஞ்சிறு சிறுவன்.
நான் என்ன கூறமுடியும் உங்களுக்கு? போகட்டும், ஒரு நாககன்னிகையை உங்கள்
மனைவியாக அடைந்ததின் மூலம், உங்கள் குலத்துக்கும், குலத்து
முன்னோர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகளை உங்களால் நிறைவேற்ற முடியுமா?
நிறைவேற்றிவிட்டீர்களா?”
“அவர்களைப் பற்றிய எண்ணங்களையே ஒடுக்கவேண்டியதே. இந்த நாககன்னிகைகள் கொடுக்கும் இன்பத்துக்கு முன்னால் அவை எல்லாம் தூசு மாத்திரம்!”
“ஐயா,
நம்முடைய சநாதன தர்மத்தில் நம் சந்ததியில் வசிஷ்டர், அருந்ததி, போன்ற
ரிஷி, ரிஷி பத்தினிகளும், அகஸ்தியர், லோபாமுத்திரை போன்ற ரிஷி, ரிஷி
பத்தினிகளும் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மனைவியோடு வாழ்க்கையை மட்டும்
அநுபவிக்கவில்லை. தபஸ் செய்வதிலும், மனைவிக்குப்பங்கு கொடுத்தனர்.
வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயங்களிலும் மனைவியோடே பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் செய்த தீரச் செயல்களிலும் மனைவியின் பங்கு உண்டு. எல்லாவற்றிலும்
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே
அநுபவித்தனர்! அவர்களைப் பற்றி நீங்கள் நினைக்கவில்லையா?”
“ம்ம்ம்
ஒரு நாககன்னிகை இவை அனைத்தையும் அவளுக்குச் சொந்தமாக்கிக்கொண்டு விடுவாள்.
அவள் உனக்கு அளிக்கும் சுகங்களின் மூலம் உன்னையே விலைக்கு
வாங்கிவிடுகிறாள். உன்னையும், உன் உடலையும் மட்டுமல்லா, கிருஷ்ணா, உன்
எதிர்காலம், நம்பிக்கைகள், உன் பெற்றோர், உன் குலத்து முன்னோர்கள், உன்
குலத்துப் பழக்கவழக்கங்கள் என அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து தன் பக்கம்
மாற்றிவிடுகிறாள்.”
“மாட்சிமை பொருந்திய மன்னரே! தங்கள் அன்பான
புத்திமதிகளுக்கு நான் மிகக் கடமைப் பட்டிருக்கிறேன். ஆனால் நான் இங்கே
ஒரு முக்கியமான காரியத்தை ஒப்புக்கொண்டு அதற்காகவே வந்துள்ளேன். என்
குருவான சாந்தீபனிக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துள்ளேன். புநர்தத்தன்
என்னும் சாந்தீபனியின் குமாரன், தற்சமயம் உங்கள் இளவரசனாய் இருப்பவன்.
அவனை அவன் தந்தையிடம் திரும்பச் சேர்ப்பதாய்ச் சத்தியம் செய்து
கொடுத்துவிட்டு அதற்கெனவே வந்துள்ளேன். அவன் இல்லாமல் நான் திரும்புவது
என்பது ஒருநாளும் நடவாத காரியம்.”
“என்றால் விதி உன்னையும் விடப் போவதில்லை.”
“ஐயா,
உங்கள் பெருந்தன்மைக்குத் தலை வணங்குகிறேன். உங்கள் இளகிய மனம் என்னைப்
பரவசம் அடையச் செய்கிறது. நீங்கள் ஏன் எனக்கு உதவி செய்யக் கூடாது?”
“என்னால் முடியாது அப்பனே!”
“நான்
ஒப்புக்கொண்டு வந்தபடி புநர்தத்தனை அழைத்துப் போகமுடியவில்லை எனில் நான்
இறப்பதையே விரும்புகிறேன். என் கடமையைச் செய்யாமல் இருப்பதை விட இறப்பதே
மேல். ஆனால் தந்தையே, நீங்கள் கட்டாயம் எனக்கு உதவப் போகிறீர்கள்.”
என்றான் கண்ணன்.
ஒரு நிமிடம் தெய்வீகத் தந்தையான மன்னனுக்குத் தன்
குருவான பரசுராமர் கட்டளை இடுவது போல் தோன்றியது. அவரும் மஹாவிஷ்ணுவின்
அவதாரம் என்பார்களே! தீர்மானமாகவும், முடிவாகவும் இவ்வாறே அவர் பேசுவார்.
அவரால் இவ்விதமே பேசமுடியும். அப்படித் தான் இந்த இளைஞனும், தன் தெய்வீகத்
தன்மையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறான். ஆம், இவனிடம் ஏதோ தெய்வீகம்
உண்மையாகவே உள்ளது. சநாதன தர்மம்! நம் நாடு! ஆஹா, பூர்வ ஜன்மம் என்று
சொல்லக் கூடிய அந்த நாட்கள்! நம் நாட்டிலே தான் இம்மாதிரியான
வாக்குறுதிகளையும் கொடுத்து தர்மத்தை நிலைநாட்டும் மக்கள்
பிறந்திருக்கின்றனர். இவனும் அதற்கெனவே பிறந்திருக்கிறானோ? எவ்வளவோ
வருஷங்களாக மறந்திருந்த பிறந்த தாயகம் அந்த மன்னன் கண்களுக்கெதிரே
தோன்றியது. நீண்ட பெருமூச்சு விட்டான்.
கண்ணன் தன்
இருப்பிடத்திற்குத் திரும்பி விட்டான். மறுநாள் காலையில் வைவஸ்வதபுரியைச்
சுற்றிப் பார்ப்பதில் கண்ணனும், உத்தவனும் பொழுதைக் கழித்தனர்.
கப்பலுக்குப் பரிசுப் பொருட்களை எடுக்கச் சென்றிருந்த ராதுவும்
திரும்பிவிட, கண்ணன் அவன் கொண்டு வந்த பரிசுப்பொருட்களை பட்டத்து இளவரசி,
இளவரசன் புநர்தத்தன், தெய்வீகத் தந்தையான அரசன் ஆகியோருக்கும், இளைய
இளவரசியான ஆஷிகாவுக்கும் பிரித்துக் கொடுத்தான். ஆஷிகா ஏற்கெனவே அன்னை
ராணியின் கட்டளையின் பேரில் கண்ணனைச் சுற்றிக்கொண்டிருந்தாள். கண்ணன்
தனக்கே என நம்பிக்கொண்டிருந்தாள். பரிசுப் பொருட்களைக் கண்டதும் உவகையில்
கூச்சலிட்டுத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டாள்.
அன்று
மதியம் உணவிற்குப் பின்னர் கிருஷ்ணனும், உத்தவனும் தப்புவதற்கான
வழிமுறைகளைப் பற்றி மெல்லிய குரலில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
"க்ரீஈஈஈஈஈச்" என்றொரு கூச்சல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினர்
இளைஞர்கள் இருவரும். அங்கே இளைய இளவரசியான ஆஷிகா ஓடி வந்து
கொண்டிருந்தாள். அவள் நீண்ட கூந்தல் சிறு சிறு பாம்புகளைப் போல் பின்னப்
பட்டிருந்தது. அவை காற்றில் பறக்க அவள் ஓடி வந்தது அவள் தலையைச்
சுற்றிலும் பாம்புகள் சூழ வந்தாற்போன்ற தோற்றத்தில் காட்சி அளித்தது. ஓடி
வந்து கொண்டே என்னவோ சொல்லிப் புலம்பவும் செய்தாள் அவள். கண்ணனின்
இருப்பிடம் வந்ததும் ஒரே பாய்ச்சலில் கண்ணனிடம் சென்று அவனைக்
கட்டிக்கொண்டு ஓவென்று அழுதாள். புலம்பினாள். என்ன காரணம்?? கண்ணன்
திகைத்தான். அவள் என்ன சொல்லி அழுகிறாள்? புரியவில்லை. புண்யாஜனா கப்பலின்
ஊழியர்கள் கப்பலில் இருந்து தன்னுடன் அரண்மனைக்கு வந்தவர்களில் நாக
தேசத்து மொழி தெரிந்தவர்களைக் கண்ணன் வரவழைத்தான். அவர்கள் கூறியது,
கண்ணனைத் திகைப்பில் ஆழ்த்தவில்லை.
Geetha Sambasivam
unread,
Apr 21, 2010, 9:08:10 AM4/21/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to il...@googlegroups.com
குழும மடல்களிலேயே இருக்கும், இல்லைனா நேரே குழுமத்துக்குள்ளே போங்க. பழசு எல்லாம் இருக்கும்.
புண்யாஜனாக் கப்பலின் ஊழியர்கள் இளவரசியின் புலம்பலை மொழி பெயர்த்தனர். “வாசுதேவ கிருஷ்ணா, தேவி மாதா அன்னை ராணியின் மூலம் ஆக்ஞை இட்டுவிட்டாளாம். நீ தற்போதைய இளவரசனும், பட்டத்து இளவரசியின் தற்போதைய கணவனும் ஆனவனோடு சண்டை இடவேண்டுமாம். நீ ஜெயித்தால் அடுத்த பட்டத்து இளவரசியைக் கைப்பிடிக்கும் பேறு பெறுவாய். உன்னால் புநர்தத்தன் கொல்லப் படுவான் என அன்னை ராணி கூறுகிறாளாம். இதை நீ மீற முடியாது. உன்னிடம் அன்பு வைத்திருக்கும் இந்தப் பெண்ணால் அதைத் தாங்க முடியவில்லை. ஒருவேளை நீ கொல்லப் படுவாயோ என அஞ்சுகிறாள்.”
கிருஷ்ணனுக்கு ஓரளவு செய்தி எதிர்பார்த்தது எனினும் இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை. அது கொஞ்சம் அதிர்ச்சியாய் இருந்தது. மேலும் இவ்வளவு விரைவில் தேவி மாதா அன்னை ராணியின் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பாள் எனவும் அவன் எதிர்பார்க்கவில்லை. பாவம் இந்தப் பெண்! தன்னை அவளுக்கென நினைத்திருந்தாள். இப்போது இந்தச் செய்தியால் ஏமாற்றம் அடைந்து விட்டாள். அவர்கள் போட்டுக்கொண்டிருந்த திட்டம் இன்னும் முழுமை அடையவில்லை. அதற்கு முன்னால் இந்தச் செய்தி வந்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது மற்ற அனைவருக்கும்.எப்படியாவது புநர்தத்தனை இங்கிருந்து கடத்திச் சென்றுவிடவேண்டும் எனத் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த போதே கிருஷ்ணனுக்கு இம்மாதிரியான அழைப்பு வரும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் கண்ணனை உடனடியாக அன்னை ராணி இருக்குமிடம் கொண்டு செல்லவும் உத்தரவாகி இருந்தது. பாதிப் பேச்சினிலேயே கண்ணன் அங்கே சென்றான். அங்கே அன்னை ராணி உடலில் தேவிமாதா புகுந்து அப்போது தான் வெளிச்சென்றதாயும், அன்னை ராணி தேவிமாதாவை நமஸ்கரித்த வண்ணம் காட்சி கொடுப்பதாயும் தெரியவந்தது. அவள் அருகில் தெய்வீகத் தந்தையான அரசன், “யமன்” அன்னை ராணியை மாறாக் காதலுடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
கண்ணனிடம் அன்னை ராணி எதுவும் பேசவில்லை. மாறாக மன்னனே பேசினான். “வாசுதேவா! தேவி மாதாவால் அடுத்த போட்டிக்கு உரியவனாக நீ தான் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாய். இப்போதைய இளவரசனோடு நீ போர் புரியவேண்டும். போரில் நீ கொல்லப் பட்டால் அவனே இளவரசனாக நீடிப்பான். அவனை நீ கொன்றாயானால் பட்டத்து இளவரசி லாரிகாவின் கரம் உனக்கே. நாங்கள் தேவி மாதாவின் திருத் தலத்துக்கு அலங்கரிக்கச் சென்றதும், லாரிகா பட்டத்து ராணியாவாள். நீ தான் அரசன். இது உனக்கு வாய்த்திருக்கும் மாபெரும் வாய்ப்பு. நன்றாகப் பயன்படுத்திக்கொள்வாயாக!” என்றான்.
கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் அன்னை ராணியும் அதை ஆமோதித்தாள். கண்ணன், “ஆனால் நான் போர் புரியவும் விரும்பவில்லை. இளவரசனைக் கொல்லவும் விரும்பவில்லை.” என்றான்.
“எனில் உன்னைக் கொல்லவேண்டியவன் நானே மகனே! அது என்னுடைய கடமை. மேலும் தேவிமாதா கொடுத்திருக்கும் மீறமுடியாத கட்டளைகளில் அதுவும் ஒன்று. அவள் கட்டளையை மீற முடியாது.” என்று திட்டவட்டமாய்த் தெரிவித்தான்.
“இது என்ன விசித்திரமான கட்டளைகளும், விதிமுறைகளும்? அதுவும் உலகுக்கே தாய் என்பவளிடமிருந்து?” கண்ணன் கேட்ட இந்தத் தொனியால் அன்னை ராணிக்கு ஆச்சரியம் மேலிட்டது. இன்றுவரையிலும் இம்மாதிரி எவரும் சிந்தித்தது கூட இல்லை. அதிர்ச்சியும், குழப்பமும் கலந்து கண்ணனைப் பார்க்கும்போது அவனோ, “எனக்கு எந்தத் தீங்கும் செய்யாத ஒருவனை நான் ஏன் கொல்லவேண்டும்?” என்றும் கேட்டான்.
“உத்தரவு ஏற்கெனவே பிறப்பிக்கப் பட்டுவிட்டது. நாளை நடக்கப் போகும் விழாவில் நீ புநர்தத்தனைக் கொல்லவேண்டும், அல்லது அவன் உன்னைக் கொல்லவேண்டும். “ தெய்வீகத் தந்தை மேலே பேச எதுவும் இல்லை என்ற தொனியில் அப்போதைய சந்திப்பை முடிக்கத் தயார் ஆனான். கிருஷ்ணன் யோசனையுடன் அங்கிருந்து கிளம்பினான். புநர்தத்தன் இருக்குமிடம் சென்றான். அங்கே புநர்தத்தன் இதை எதிர்பார்த்தவனாகவே இருந்தான். அவனிடம்கிருஷ்ணன் நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி எனக் கேட்க அவனோ என்னால் இதை எப்படித் தடுக்க முடியும் வாசுதேவா? நாகலோகத்தின் விதிமுறைகளும், சட்டதிட்டங்களும் மீறமுடியாதவை என்றான்.
“எனில் நீ செய்யப் போவது என்ன புநர்தத்தா?” கண்ணன் கேட்டான்.
“உத்தவன் நீ கம்ஸனையும், சாணுரனையும் கொன்றது பற்றி என்னிடம் கூறினான். மேலும் நீ என் தந்தை குரு சாந்தீபனியின் சீடன். ஆகவே நீ கட்டாயம் என்னைக் கொன்றுவிடுவாய்!” புநர்தத்தன் அப்போதே கண்ணன் தன்னைக் கொல்லவேண்டும் என எதிர்பார்த்தவன் போலத் தோன்றினான். மேலும் மரணத்தைப் பல ஆண்டுகளாய் எதிர்பார்த்துக் களைத்தவன் போலும் காணப்பட்டான். அவனையே யோசனையுடன் பார்த்தான் கண்ணன்.
"புநர்தத்தா! நாம் ஒரு வகையில் புனிதமான முறையில் சகோதரர்கள் ஆகிறோம். நீ என் குருவின் மகன். குரு எனக்குத் தந்தை என்னும் முறையில் நீ என் சகோதரன் ஆகிறாய். நானும் உன் உடன்பிறவா சகோதரன் ஆகிறேன். இப்போது நான் உன்னைக் கொல்லவேண்டும், அல்லது நீ என்னைக் கொல்லவேண்டும். எப்படிப் பார்த்தாலும் இந்த அதர்மக்கொலை சற்றும் ஏற்கமுடியாத ஒன்று." என்றான் கண்ணன். மென்மையான ஆறுதல் அளிக்கும் குரலில் இதைச் சொல்லிக்கொண்டே தன் கைகளால் அவனை மெல்ல அணைத்தான் கண்ணன். சொற்களின் ஆறுதலும், மென்மையும் கைகளின் வழியாகப் புநர்தத்தன் உடலுக்குள் புகுந்து அவன் கண்களின் வழியாக வெளியே வந்தது.
தழுதழுக்கும் குரலில் புநர்தத்தன் பேசினான்."வாசுதேவா, உன்னோடு சண்டை போட என்னால் இயலாது. எனக்கு அதில் விருப்பமும் இல்லை. என் தந்தையைச் சந்தோஷப் படுத்தவென்றே நீ இத்தகையதொரு அபாயகரமான காரியத்தில் இறங்கிக் கடைசியில் இங்கே வந்து சேர்ந்திருக்கிறாய். உன்னை மரணம் துரத்துவதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை நீ. இத்தனையையும் பொருட்படுத்தாமல் இங்கே இருந்து என்னைக் காத்து அழைத்துச் செல்வது ஒன்றையே லக்ஷியமாய்க் கொண்டிருக்கும் உன்னிடம் நான் யுத்தம் புரிந்து உன்னைக் கொல்வேனா? இல்லை கிருஷ்ணா, இல்லை, என்னால் இயலாத ஒன்று!" புநர்தத்தன் அழத் தொடங்கினான்.
"ஆஹா, நான் மட்டும் உன்னைக் கொன்றுவிடுவேனா? புநர்தத்தா! என் சகோதரா! பொறுத்திரு, நம்பிக்கையை இழக்காதே! நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ஏதேனும் ஒரு வழி கிடைக்கும். அனைத்துக்கும் மேலான அந்தப் பரம்பொருள் தர்மத்தின் வழியில் செல்பவனை, எந்தக் கஷ்டத்திலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பவனைக் கைவிடமாட்டார். நிச்சயம் இது! கவலையே வேண்டாம்!"
Geetha Sambasivam
unread,
Apr 26, 2010, 4:40:05 AM4/26/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“கண்ணா,
என் அருமைச் சகோதரா, திக்குமுக்காடித் திணற அடிக்கும் இந்த
நாககன்னிகைகளின் சக்தியைப் பற்றி நீ இன்னும் முழுதும் அறியவில்லை. அதனால்
நீ நம்பிக்கையுடன் பேசுகிறாய்.” என்றான் புநர்தத்தன். கண்ணன் ஆழ்ந்த
யோசனையுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தன்னிருப்பிடம் சென்று உத்தவனுடன்
நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளின் தன்மையைப் பற்றி விவாதித்தான்.
அப்போது மீண்டும் தெய்வீகத் தந்தையான மன்னனால் அழைக்கப் பட்டான். மன்னன்
அதே பாசத்தோடு கண்ணனைப் பார்த்தான். இப்போது பாசத்தோடு அநுதாபமும்
சேர்ந்திருந்தது. “கண்ணா, தேவி மாதாவின் கட்டளைகளா உன்னுடைய திட்டம்
பாழாகிவிட்டனவே! என்ன செய்யலாம் மகனே! என் இளைய மகள் ஆஷிகாவிற்கு உன்னை
ரொம்பப் பிடித்துவிட்டது. ஆனால் தேவிமாதாவின் கட்டளை வேறுமாதிரியன்றோ
அமைந்துவிட்டது. இந்தத் திருவிழாவில் நீ புநர்தத்தனைக் கொன்றுவிட்டுத்
தப்பிப் பிழைத்தாயானால் பட்டத்து இளவரசியான லாரிகா உன் மனைவியாவாள். ஆஷிகா
வேறொரு இளைஞன் வரும்வரை காத்திருக்கவேண்டும். ஆனால் அவளோ உன்னை மிகவும்
விரும்புகிறாள். அவள் இதயம் இந்த மாற்றத்தால் உடைந்தே விட்டது. அவள்
புலம்பி அழுவதைக் காணச் சகிக்கவில்லை. என்னிடம் அவள் உன்மேலுள்ள தன்
காதலைப் பற்றி ஒளிவு, மறைவின்றி எடுத்துச் சொன்னாளென்றால் பாரேன்!”
என்றான் மன்னன்.
“ம்ம்ம்ம் , புரிகிறது அரசே, ஆனால் இந்த நிலை எப்படி மாறும்? எவ்வகையில் நான் உதவ முடியும்?? அல்லது உங்கள் உதவி கிடைக்குமா?”
“மாற்றமா? கண்ணா, தேவிமாதா ஆணையிட்டுவிட்டாளெனில் அதை எவராலும் மாற்றமுடியாது. என்னால் எப்படி உதவ முடியும்??”
“ம்ம்ம்ம், நானோ, புநர்தத்தனோ அல்லது இருவருமோ ஒருவரோடு ஒருவர் சண்டையிட இஷ்டமில்லை எனச் சொல்லிவிட்டால்???”
“ஓஹோ,
அப்படி மட்டும் செய்துவிடாதீர்கள். பின்னர் உங்கள் இருவரையுமே நான் கொல்ல
நேரிடும். இங்கே நான் யமன்! மரணக்கடவுள்! தெரிந்ததா?” மன்னம் குரலில்
கசப்புணர்ச்சி மேலோங்கி இருந்ததும் புரிய வந்தது.
“ஓஹோ, எனில் உங்கள் குமாரத்திகள் இருவருமே வேறு இருவர் வரும்வரை காத்திருக்க நேரிடும்.” கண்ணன் புன்னகை விரிந்தது.
அரசனோ,
மெதுவான குரலில், “என் குருநாதர் பரசுராமராக இருந்தால் இந்தச்
சந்தர்ப்பத்தில் என்ன செய்திருப்பார் என்பதை நான் அறிவேன்.” தனக்குள்ளாகப்
பேசிக்கொள்பவனைப் போல் கூறிக்கொண்டான். அதைக் கூர்ந்து கவனித்த கண்ணன்,
“ஆம், ஆம், அவர் புநர்தத்தனைத் திரும்ப அழைத்துச் சென்று நம் தர்மத்தை
நிலை நாட்டி இருப்பார். சந்தேகமே இல்லை.” என்றான். சற்று நேரம் மெளனமாக
இருந்த அரசன் பின்னர் ஏதோ நினைப்பு வந்தாற்போல், “ராணிமாதாவின் கட்டளையை
நான் மீறமுடியாது. அதே சமயம் ஆஷிகா, அவள் நாகலோகத்து மற்றப் பெண்களைப்
போல் அல்லாமல் வித்தியாசமானவள். நம் நாட்டுப் பெண்களைப் போன்றவள். அவள்
மனம் கஷ்டப் படுவதைக் காணவும் எனக்குச் சகிக்கவில்லை. நீ அவளிடம் சென்று
சமாதானமாய் இதில் நாம் செய்வது ஒன்றுமில்லை என்று சொல்லித் தேற்று.
அவளுக்குத் தகுந்த மணமகன் வேறொருவன் விரைவில் வருவான் என்றும் சொல்.”
என்றான்.
“ஓஓஓ, ஐயா, நான் எப்படி அவ்வாறு உறுதி கூற முடியும்?? அது தவறன்றோ?” என்றான் கண்ணன்.
“வாசுதேவ
கிருஷ்ணா, உன்னை எவ்வகையிலேனும் தப்ப வைக்கவேண்டும் என நான்
நினைக்கிறேன்.” மன்னன் கிசுகிசுப்பான குரலில் மீண்டும் தானே பேசிக்கொள்வது
போன்ற தொனியில் கூறினான். ஆஹா, இந்தச் சிறுவன் தான் தான் மேற்கொள்ளும்
மேற்கொண்டிருக்கும், மேற்கொள்ளப் போகும் தர்மத்திற்காகத் தன் உயிரைக்கூடப்
பெரிதாக மதிக்கவில்லையே! இவனை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். மன்னன்
மனதில் எண்ண ஓட்டங்கள்! கிருஷ்ணனையே பார்த்துக்கொண்டிருந்தான். கிருஷ்ணன்,
அவனைப் பார்த்துக்கொண்டே, “ஆம், ஐயா, உங்கள் குருநாதர் ஆன பரசுராமர் இங்கே
இருந்தால் என்ன செய்வார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவ்வாறே
செய்துவிடுங்கள்.” மீண்டும் மீண்டும் பரசுராமரின் பெயரைச் சொல்லிக்கொண்டே
இருந்தான் கண்ணன்.
“இதோ பார் கண்ணா! அந்தச் சிறுமி ஆஷிகா தற்கொலை
ஏதாவது செய்து கொண்டுவிடுவாளோ எனப் பயப்படுகிறேன். என்னுடைய நம்பிக்கைக்கு
உகந்த ஆட்களை உன்னோடு அனுப்புகிறேன். நீ அவளிடம் சென்று எவ்வகையிலேனும்
அவளைச் சமாதானம் செய். நீ பேசுவதை இந்த என்னுடைய ஆட்கள் அவளுக்கு
மொழிபெயர்த்துச் சொல்லுவார்கள்.”
கண்ணன் அரசனின் ஆட்களுடன் ஆஷிகா
இருக்குமிடம் நோக்கிச் சென்றான். கண்ணனைக் கண்டதுமே ஓடி வந்து அவனைக்
கட்டிக்கொண்டு ஆஷிகா புலம்ப ஆரம்பித்தாள். அவள் சொன்னவற்றைக் கூட
வந்தவர்களில் ஒருவன் மொழிபெயர்த்தான். “கண்ணா, என்னை விட்டுவிட்டுப்
போய்விடாதே! நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. செத்துப் போய்விடுவேன்.
இங்கே அனைவருமே, ஏன் என் தாயான அன்னை ராணி உட்பட அனைவருமே எனக்கு
விரோதிகள். அன்னை ராணிக்கு லாரிகா தான் ஆசைக் குமாரி, செல்லப் பெண். நான்
ஒன்றுமே இல்லை அவளுக்கு. என்னைத் தனியாக விட்டுவிட்டுச் செல்லாதே
கிருஷ்ணா!”
நாக கன்னிகை தன்னைக் கட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால்
கண்ணனுக்குத் தர்ம சங்கடமாக இருந்ததோடு உள்ளூர வெறுப்பும் மிகுந்தது.
எனினும் அதை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் ஆஷிகாவின் நிலைமையோ பரிதாபமாக
இருந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணன் தத்தளித்தான். பின்னர் ஒரு
முடிவுக்கு வந்தவனாக அவளிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் பேச ஆரம்பித்தான்.
“மாட்சிமை
பொருந்திய இளவரசியே, அழாதீர்கள், என்னைவிட மிக அறிவாளியும், வீரனுமான
வேறொருவன் உங்களை மணக்க வருவான். இது தேவி மாதாவின் கட்டளை என்கின்றனர்
அல்லவோ? ஆகவே நீங்கள் இதற்காக வருந்தாதீர்கள்.”
“இல்லை, இல்லை,
எனக்கு நீ தான் வேண்டும், நீ மட்டுமே, உன்னைத்தவிர வேறு யாரானாலும்
எனக்குத் தேவையில்லை. உன்னைப் போல் இன்னொருவன் இவ்வுலகில் இருப்பான்
என்றும் தோன்றவில்லை.”
“ஆனால் நான் நாளை கொல்லப் படப்போகிறேனே? நாளை என் வாழ்நாள் முடியப் போகிறது.”
“இல்லை,
இல்லை, நான் உன்னைக் கொல்ல அநுமதிக்க மாட்டேன். உன்னை இளவரசனோ அல்லது என்
தந்தையோ கொல்ல நேர்ந்தால் என்னையும் நான் என் கைகளால் கொன்று கொள்வேன்.”
“முட்டாள்தனமாகப்
பேசாதீர்கள் இளவரசி. எந்த நாககன்னிகையும் அவள் கணவன் இறந்தால்
இறப்பதில்லை. அவள் உடனே இன்னொருவனைத் தேடிக்கொள்வாள். இது தேவிமாதாவின்
கட்டளைகளில் ஒன்று.” கண்ணன் கொஞ்சம் ஏளனமாய்ச் சொன்னான்.
ஆஷிகாவோ, “இல்லை, நீ கொல்லப்பட்டாயெனத் தெரிந்த அடுத்த நிமிடமே நானும் இறப்பேன்.” தீர்மானமாய்ச் சொன்னாள்.
Geetha Sambasivam
unread,
Apr 30, 2010, 3:38:46 AM4/30/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
கிருஷ்ணன்
சிரித்தான். “நீ நான் இல்லை என்ற உடன் இறந்து போவாய், ஆனால் என்னுடன் நான்
இருக்குமிடைத்துக்கு என்னுடைய நாட்டுக்கு மட்டும் வரமாட்டாய், அல்லவா?”
என்றான்.
“இல்லை, கண்ணா, இல்லை, எந்த நாககன்னிகையும் அவளின்
இருப்பிடமான இந்த நாகலோகத்தை விட்டு வெளியே செல்லமாட்டார்கள். அவை
தேவிமாதாவின் கட்டளைகள். எவரும் இன்று வரை மீறியதில்லை. நான் மட்டும்
எப்படி மீறுவேன்?” என்றாள் ஆஷிகா. அடக்கமாட்டாமல் கண்ணன் சிரித்தான்.
“ஆகக்கூடி நான் இருந்தால் நீ இருப்பாய், நான் இறந்தால் நீயும் இறப்பாய்,
ஆனால் நான் எங்கே போனாலும் என்னோடு வந்து வாழ மட்டும் தயாராக இல்லை,
அல்லவா?” பேச்சு வராமல் திகைப்புடன் கண்ணனையே பார்த்தாள் ஆஷிகா.
இப்படியும் ஒரு வழி உண்டா?? “ என்னை உன்னுடன் அழைத்துச் செல்வாயா?”
கண்ணனைக் கெஞ்சினாள் அவள். கண்ணன் அவள் கண்களூடே பார்த்தான். அவள்
உண்மையாகவே வர விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான். தெய்வீகத்
தந்தை கூறியது உண்மையே. ஆஷிகா மற்ற நாகப் பெண்களிடமிருந்து
வித்தியாசமானவளே.
“அழைத்துச் செல்வேன் கட்டாயமாய், ஆனால் அதற்கு
நான் உயிர் பிழைத்திருக்கவேண்டுமே!” என்றான் கண்ணன். மறுபடி அழ
ஆரம்பித்தாள் ஆஷிகா. “நீ இல்லாமல் நான் இருக்கமாட்டேன், கண்ணா!” என்றாள்
ஆஷிகா. “ஆஹா, நான் உயிரோடு இருக்கவேண்டுமென்றால் இளவரசனோடு சண்டை போட்டு
அவனைக் கொல்லவேண்டும், அல்லது என்னையும் இளவரசனையும் தெய்வீகத் தந்தை
கொன்றுவிடுவார். அப்போது நீயும் இறந்துவிடுவாய்!” பரிகாசத் தொனியில்
கண்ணன் பேசினான்:’ என்ன செய்யலாம் இப்போது? நீ தான் இந்த இடத்தை விட்டும்
வரமாட்டாய்!”
“இல்லை, இல்லை, நான் உன்னுடனே வருகிறேன். எனக்கு இந்த
இடமோ, இந்த மக்களோ எவரையும் பிடிக்கவில்லை. என் அன்னைக்கோ என் அக்காவான
லாரிகாவிடமே பற்றும், பாசமும் அதிகம். நான் அவளுக்கு ஒரு பொருட்டல்ல.
உன்னுடனேயே வருவேன்.” கண்ணன் கண்ணீரினூடே சிரிக்கும் அவள் முகத்தைப்
பார்த்தான். அடுத்த நாள் நாகலோகத்து மனிதர்கள் அனைவருமே நன்றாக
அலங்கரித்துக்கொண்டு நடக்கப் போகும் போட்டியைக் காணத் தயாரானார்கள்.
துறைமுகத்துக்கு அருகில் கப்பலுக்குச் செல்லும் வழியை அடைத்து போடப்
பட்டிருந்தது மேடை. ஒரு பக்கம் நதியானது கடலில் சேரும் இடமாகவும்,
மறுபக்கம் கடலில் இருக்கும் கப்பலுக்குச் செல்லும் இடமும் இருந்த
இடத்தினருகே வெட்ட வெளியில் அமைக்கப் பட்டிருந்த மேடைக்குப் பின்புறம்
தெரிந்த நீண்ட படிகளின் மூலம் கடலுக்குச் செல்லும் வழியெல்லாம் ஆயுதம்
தாங்கிய பெண்காவலர்கள் நிறுத்தப் பட்டிருந்தனர். புண்யாஜனா கப்பலில்
இருந்து வந்த பிக்ருவும், அவனுடைய ஆட்களும் அந்தப் படிகள் கடலில் முடியும்
இடத்திற்கருகே நின்று கொண்டு இங்கே பார்த்துக்கொண்டிருந்தனர். படிகள்
ஆரம்பிக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி உத்தவன் ஹூக்குவுடனும்,
ஹூல்லுவுடனும் நின்று கொண்டிருந்தான்.
சரியான நேரம் வந்ததும்
தேவிமாதா ஆவிர்ப்பவித்திருந்த உடலோடு கூடிய அன்னை ராணி, மரகதக் கற்கள்
பதிக்கப் பட்ட வாயிலைத் திறந்து கொண்டு வெளிப்பட்டாள். அவளுடன் தெய்வீகத்
தந்தையும், பட்டத்து இளவரசியும், மற்ற உயர் அதிகாரிப் பெண்களும்
காணப்பட்டனர். பெருந்திரளாகக் கூடி இருந்த மக்கள் கூட்டம் உற்சாகக்
கூச்சலுடன் ராணி மாதாவை வரவேற்றனர். நாகலோகத்தின் மிக உயர்ந்த, உந்நதமான
திருவிழா என அவர்களால் கொண்டாடப் பட்ட இது, அவர்களை மிகவும் உற்சாகப்
படுத்தியது. என்னதான் இந்தப்போட்டியின் முடிவில் எவராவது ஒருவரின் உயிர்
எடுக்கப் பட்டாலும் இதன் மூலம் அடுத்த பட்டத்து இளவரசன் யார் எனத் தெரிய
வருவதோடு அடுத்த அன்னை ராணியின் எதிர்காலமும் முடிவு செய்யப் படுகிறது.
வாத்தியங்கள்
முழங்கத் தொடங்கின. சங்குகள், எக்காளங்கள் ஊதப்பட்டன. பின்னர் நீண்ட
நிசப்தம். அதன் பின்னர் அன்னை ராணி கையசைக்க, புநர்தத்தன் ஒரு பக்கமும்,
கண்ணன் இன்னொரு பக்கமிருந்தும் வந்து அன்னை ராணியை முதலில் வணங்கினர்.
பின்னர் தெய்வீகத் தந்தையையும் வணங்கினார்கள். கூட்டம் ஆரவாரிக்க இருவரும்
போட்டி நடக்கப் போகும் மேடையை நோக்கிச் சென்றனர். செல்லும்போதே மெல்லிய
கிசுகிசுப்பான குரலில் புநர்தத்தன் கண்ணனிடம், “வாசுதேவா, ஒருவேளை…
ஒருவேளை, நான் உன்னைக் கொன்றுவிட்டேனானால்??? என்னை மன்னிப்பாயா?” இரங்கிய
குரலில் கேட்டான் புநர்தத்தன்.
“இதோ பார் சகோதரா, நீயும் என்னைக்
கொல்லப் போவதில்லை. நானும் உன்னைக் கொல்லப் போவதில்லை. உன் திறமை முழுதும்
காட்டிச் சண்டை போடு. நான் உன்னுடைய குரு மூலமான சகோதரன் என்பதை
மறந்துவிடு.” என்றான் கண்ணன்.
“ம்ம்ம் அவந்தியில் தந்தை இந்நேரம்
என்ன செய்து கொண்டிருப்பாரோ? என்னை நினைந்து ஏங்கிக்கொண்டிருப்பார்.”
என்று துக்கம் தொண்டையை அடைக்கச் சொன்னான் புநர்தத்தன். “அதை எல்லாம்
நினைத்துக் கலங்காதே. உன் தந்தையும் என் குருவும் ஆன சாந்தீபனிக்கு
எப்படியேனும் உன்னைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவதாய்
வாக்களித்திருக்கிறேன். அதை நான் எவ்வாறேனும் நிறைவேற்றியாகவேண்டும். அது
என் தர்மம், என் அறம், என் கடமை!” என்றான் கண்ணன். போட்டி நடைபெறும்
மேடையை இருவரும் நெருங்கினார்கள். புநர்தத்தனுக்கோ கண்ணன் மேல் கைவைக்கவே
மனம் வரவில்லை. ஆனாலும் அன்னை ராணியின் கட்டளையை மீற முடியாமல் அவள்
கையசைக்கவும் அங்கிருந்த வாள்களில் ஒன்றை எடுத்துக்கொண்டு வீச
ஆரம்பித்தான். கண்ணனும் வாள் ஒன்றை எடுத்து வீச ஆரம்பித்தான். அவன்
தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியிலே மட்டுமே ஈடுபட்டதைக் கவனித்த
புநர்தத்தன் தன் போர்முறையை மாற்றிக்கொண்டான்.
அதைக் கவனித்த
கண்ணன் அவனிடம், “முட்டாள் தனமாய் நடக்காதே! போரிடு!” என்று
சொல்லிவிட்டுத் தன் உக்கிரமான வாள் வீச்சைக் காட்ட ஆரம்பித்தான்.
புநர்தத்தன் கண்ணன் வாள் வீச்சில் அபாரத் தேர்ச்சி பெற்றிருப்பதைக்
கவனித்தான். அவனுடைய ஒவ்வொரு வீச்சுக்கும் தக்க பதில் கண்ணனிடமிருந்து
கிடைத்ததையும் பார்த்துக்கொண்டான். முதலில் சற்று ஆர்வமின்றிச்
சண்டைபோட்டுக்கொண்டிருந்த புநர்தத்தன் பின்னர் கண்ணனின் வாள் வீச்சில்
கவரப்பட்டு, முழுமையாக ஆகர்ஷிக்கப் பட்டுத் தானும் வாளை வீசிப் போரிட
ஆரம்பித்தான். வாள் போர் உக்கிரமானது. சுற்றி இருந்த கூட்டம்
ஆர்ப்பரித்தது. இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை எனப் புரிந்து
கொண்ட கூட்டம் யார் ஜெயிப்பார்களோ என்ற ஆவலுடன் காத்திருந்தது. எத்தனை
உக்கிரமாய்ச் சண்டை போட்டாலும் இருவரும் மற்றவரை வீழ்த்துவதில் ஆர்வம்
காட்டவில்லை. இது சுற்றிக்குழுமி இருந்த மக்களுக்கு மட்டுமின்றி, அன்னை
ராணிக்கும், அவள் பட்டத்து இளவரசிக்கும் கொஞ்சம் ஆச்சரியமும், விநோதமுமாய்
இருந்தது. ஆஷிகாவோ அடுத்து என்ன நடக்குமோ என்று ஆவல் மீதூரக்
கவனித்துக்கொண்டிருந்தாள்.
இருவரில் எவர் ஜெயிப்பாரோ என்பதில்
மக்களுக்கு அலுப்பும், சலிப்பும் ஏற்படத் தொடங்கிய வேளையில் கண்ணன் தன்
கைவாளால் புநர்தத்தன் வாளைத் தட்டிவிட்டுவிட்டுத் தன் வாளையும் தூக்கி
எறிந்தான். மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்படி
ஒரு வாள் சண்டையைக் கண்டதில்லை. இருவருமே ஒருவருக்கொருவர் சமானமானவர்களாக
இருந்ததோடு ஒரு சொட்டு ரத்தம் கூடச் சிந்தவும் இல்லையே? அடுத்து என்ன?
கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரை ஒருவர் தங்கள் கைப்பிடிகளால் இணைத்து
மல்யுத்தம் புரிய ஆரம்பித்தனர். புநர்தத்தன் அவ்வளவு தேர்ந்தவன் அல்ல
எனினும், கிருஷ்ணனின் எண்ணம் தன்னைக் கொல்லுவது அல்ல என்றோ, ஜெயிப்பதும்
அல்ல என்றோ புரிந்து கொண்டுவிட்டான். எனினும் அடுத்து என்ன என்பதை அவனால்
நிச்சயிக்க முடியவில்லை. அதுவரையிலும் தானும் கண்ணனோடு மல்யுத்தம்
செய்வதைப்போன்று நடிக்கவேண்டும் என்றவரையில் புரிந்து கொண்டான். கண்ணனின்
விருப்பமும் அதுவே எனத் தெரிந்து கொண்டுவிட்டான். இருவரும் மல்யுத்தம்
செய்தனர். கைகளால் வளைத்து ஒருவரை ஒருவர் அமுக்க முயன்றனர். கீழே விழுந்து
புரண்டனர். ஒருவரை மற்றொருவர் தூக்கி வீசி எறிந்தனர். ஆனால் உடனேயே
எழுப்பியும் விட்டுக்கொண்டனர். இது முடிவதாய்த் தெரியவில்லை. உண்மையில்
சண்டை போடுகிறார்களா? அல்லது விளையாடுகின்றனரா?
அன்னை மாதாவின்
முகம் கோபத்தில் சிவந்தது. மேற்கே அஸ்தமனச் சூரியன் மறையப் போகிறான். இந்த
விளையாட்டு ஒரு முடிவுக்கு வந்தபாடில்லை. மக்கள் கூட்டமும் ஏதோ சதிவேலை
நடந்து கொண்டிருக்கிறது என்பதைப்புரிந்து கொண்டாற்போல் இருவரில் ஒருவரின்
உயிரைக் கேட்டுக் கத்தினார்கள். அன்னை ராணி கண்ணசைக்க, தெய்வீகத் தந்தை
வேறுவழியில்லாமல் தன் கடமையை நிறைவேற்ற எழுந்து நின்றான்.
“இருவரில்
ஒருவரும் இறக்கவில்லை என்பதால் தேவிமாதாவின் கட்டளையை நான்
நிறைவேற்றியாகவேண்டும். “ என்றான். அவன் முகமும் கடுமையாக இருந்தது.
அடுத்த நிமிடம் அவன் வாளை வீசி இருவரையும் கொல்லப் போவதை
எதிர்பார்த்துக்கொண்டு மக்கள் காத்திருந்தனர். அன்னை ராணியின் முகம் சவம்
போல் வெளுத்துக்காணப்பட்டது. எந்தவிதமான உணர்வுகளையும் அது காட்டவில்லை.
கடைசியில் ஒருவருக்குப் பதிலாக இருவர் ரத்தமும் சிந்தப் போகிறது. கூட்டம்
அதை நினைத்து ஆரவாரத்தோடு கோஷம் போட்டுக்கொண்டு அதைக் காணப் பரபரத்தனர்.
தன் இருப்பிடத்திலிருந்து இறங்கிய மன்னன் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த
மேடைக்கு வந்தான்.
Geetha Sambasivam
unread,
May 3, 2010, 7:42:54 AM5/3/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
அரசன்
போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள் இருவரையும் நோக்கி நடந்தான். அவன் கையில்
நீண்ட வாள் இருந்தது. கண்ணனும், புநர்தத்தனும் ஒருவரையொருவர் கீழே வீழ்த்த
முயன்று கொண்டிருந்தனர். வெளிப்படையாகப் பார்க்கும்போது அவ்வாறே
தெரிந்தது. ஆனால் உண்மையில் இருவருமே ஒருவரை மற்றொருவர் வீழ்த்தாதவண்ணமே
பார்த்துக்கொண்டிருந்தனர். தெய்வீகத் தந்தை ஓங்கிய வாளோடு அவர்கள்
இருவரிடையே செல்லவும், “ஓஓஓஓஓஓ” என்றொரு ஓலக்குரல் கேட்டது. அங்கிருந்த
அனைவர் மனமும், உடலும் நடுங்கியது அந்தக் குரலைக் கேட்டு. அப்படி அனைவர்
மனத்தையும் நடுங்கும்வண்ணம் ஓலக்குரல் கொடுத்துக்கொண்டு, நீண்ட கூந்தல்
காற்றில் அலைபாய ஓடி வந்து கொண்டிருந்தது ஒரு மெல்லிய உருவம். இத்தனை
மெல்லிய உருவத்துக்குள்ளே இவ்வளவு ஓங்கிய சப்தமா என்னும் வண்ணம் குரல்
எதிரொலிக்க ஓடி வந்த ஆஷிகா தன் தகப்பனுக்கும், அந்த வீரர்கள்
இருவருக்குமிடையே போய் நின்று மறைத்துக்கொண்டாள். கூட்டம் ஸ்தம்பித்துப்
போனது. ஆஷிகா படிகளில் இறங்குவதை மட்டுமே கண்ட அவர்கள், அவள்
அலறித்துடித்தவண்ணம் இப்படி வந்து நிற்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை.
அங்கே
இருவரில் ஒருவர் கொலையுண்டு விழுவதை எதிர்பார்த்துக் காத்திருந்த ரத்தவெறி
பிடித்த கூட்டம் ஏற்கெனவே அப்படி நடவாததால் பொறுமையை இழந்திருக்க, இப்போதோ
இருவரையும் கொல்ல விடாமல் இளவரசி மறைத்துக்கொண்டும், தடுத்துக்கொண்டும்
நிற்கிறாளா? அங்கிருந்த மக்களின் தொண்டையில் இருந்து எழும்பிய சப்தம்
உருத்தெரியாமல் நூறு நூறு சிங்கங்கள் ஒரே சமயத்தில் கர்ஜித்தாற்போன்ற
தொனியில் கேட்டது. ஆனால் தெய்வீகத் தந்தை கண்ணனையோ, புநர்தத்தனையோ போய்
அடையுமுன்னரே தன்னிலைக்கு வந்து விட்டிருந்த கிருஷ்ணன், தன்னைக்
காக்கவேண்டித் தன்னைக் கட்டிக்கொண்டு நின்ற ஆஷிகாவை ஒரு கையால் உத்தவனிடம்
தள்ளிக்கொண்டே இன்னொரு கையால் உத்தவனின் வாளையும் வாங்கிக்கொண்டான். தன்
வாளை நன்கு நீட்டிக்கொண்டே தெய்வீகத்தந்தையின் பக்கம் திரும்பினான்.
அப்படித் திரும்பும்போதே புநர்தத்தனையும் கீழே வேகமாய்த் தள்ளி அவனையும்
அரசனின் வாள் வீச்சிலிருந்து காத்தான். இத்தனையும் சில நொடிகளில் நடந்து
முடிந்துவிட்டது.
அரசன் பக்கம் திரும்பிய கிருஷ்ணன், “உத்தவா,
ஆஷிகாவையும், புநர்தத்தனையும் கூட்டிச் செல்.” என்று உத்தரவு கொடுத்தான்.
அரசனை நோக்கிக்கொண்டே கிருஷ்ணன் ஒவ்வொரு அடியாகப் பின்னால் எடுத்து
வைத்துக்கொண்டிருந்தான். அவனின் ஒவ்வொரு அடியும் துறைமுகத்தை ஒட்டிச்
சரக்குகள் இறக்குமிடத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த மாலுமிகளை நோக்கிச்
சென்றன. அரசனும் தன்னையறியாமல் முன்னேறினான். அவனையும் தன் பக்கம் மெல்ல
மெல்ல இழுத்துக்கொண்டிருந்தான் கண்ணன். கூட்டம் செய்வதறியாது பயம் கலந்த
பக்தியோடு கண்ணனையும், தெய்வீகத் தந்தையையும், அன்னை மாதாவையும் மாறி
மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. அதே சமயம் விழிப்புள்ள சிலர், நம் மன்னன்
மீதே வாளை மாற்றன் ஒருவன் ஓங்கி விட்டானே? உடனடியாக அவனைக்கொல்லு, குத்து,
தள்ளு என அலறிக்கொண்டிருந்தனர். ஆயுதம் தாங்கிய காவலாளிகள்
மன்னனைக்காக்கவென்று சுற்றி வளைக்க மன்னன் அவர்களை விலகுமாறு அலறலுடன்
எச்சரித்தான். தன்னைத் தானே காத்துக்கொள்ள முடியும் என்றும் உறுதி
அளித்தான்.
கண்ணன் மேல் வைத்த வாளை எடுக்காமல் அரசன் முன்னேற,
மன்னன் மேல் வைத்த வாளை எடுக்காமல் கண்ணன் பின்னே செல்ல, இருவரும்
கப்பலில் இருந்து சாமான்களை இறக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த
மரப்பலகையில் இருவரின் காலடி ஓசையும் மட்டும் கேட்டது. சற்றுத் தூரத்தில்
மாலுமிகள் நின்றுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தனர். ஆஹா, என்ன இது? திடீரென
அந்தப் பலகை தூக்கப் படுகிறதா? அல்லது பாரம் தாங்காமல் தானே
தூக்கிக்கொள்கிறதா? திடீரென அங்கே தோன்றிய புண்யாஜனாக் கப்பலின் வீரர்கள்
ஹூக்குவின் துணையோடும், ஹூல்லுவின் துணையோடும் புநர்தத்தனையும்,
ஆஷிகாவையும் கப்பலில் ஏற்ற வசதியாக அங்கே பிணைத்திருந்த படகுகளில்
ஏற்றினார்கள். கண்ணன் அவர்கள் படகுகளில் ஏற்ற்ப்பட்டதை உறுதி செய்துகொண்டு
தன் வாளைத் தூக்கி வீசி எறிந்தான். மன்னனைப் பார்த்து, “மஹரிஷி
பரசுராமரின் சீடரே, என் மரியாதைக்கு உகந்தவரே! என்னைக் கொல்வதுதான் உங்கள்
அறம், தர்மம் என நீங்கள் நினைத்தீர்களானால், இதோ நான் நிற்கிறேன் உங்கள்
முன்னால், தாராளமாய் என்னைக் கொல்லுங்கள்.” என்று கூறினான். கூடவே,”ஆனால்
உங்களால் என்னைக் கொல்ல முடியாது.” என்றும் சொல்லிச் சிரித்தான்.
ஏதோ
மயக்கத்திலோ அல்லது தூக்கத்திலோ இவை எல்லாம் நடக்கின்றனவோ என மன்னன்
மயங்கினான். அவனால் எதுவும் செய்ய இயலவில்லை. அவன் கைவாள் அவனையும்
அறியாமல் கீழே விழ மன்னன் நிற்கக் கூட முடியாமல் தள்ளாடினான். கண்ணனின்
பார்வை அவனை விட்டு அலகவே இல்லை. ஏதோ வசியம் செய்கிறாப்போல் தொடர்ந்து தன்
பார்வையை அவன் மீதே கண்ணன் செலுத்த மன்னனால் எதுவுமே செய்ய முடியவில்லை.
தள்ளாடிய மன்னனைப் பார்த்த வண்ணம் கண்ணன் கிளம்பத் தயாராகத் துடுப்பைக்
கையில் பிடித்த வண்ணம் பிக்ரு காத்திருந்த படகில் குதித்தான். படகு
வேகத்துடன் கிளம்பியது. அவ்வளவு நேரம் திகைத்துப்போயிருந்த கூட்டம்
அப்போது தான் உயிர் வந்தது போல் ஓலமிட்டுக் கண்ணனைப் பிடித்துக் கொல்ல
வேண்டுமென்று கூக்குரல் இட்டது. மன்னன் மயக்கத்தில் ஆழ்ந்தவன் போலப்
பார்த்துக்கொண்டிருக்கக் கண்ணன் சாவதானமாகக் கை அசைத்து விடைபெறப் படகு
போய்க்கொண்டிருந்தது.
கண்ணனும், மன்னனும் நின்று கொண்டிருந்த
கப்பலின் தொடர்புப் பலகையில் ஆயுதபாணியான காவலாளிகள் குதித்துப் படகைத்
தொடர முற்பட பலகைக்கும் கப்பலுக்கும் தொடர்பு திடீரென அறுந்து போய்ப் பலகை
மிதக்க ஆரம்பித்தது. திடீரென ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் ஒரு சில
காவலாளிகள் கடலில் விழ, மற்றவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து தடுமாற
ஒரே குழப்பம் நீடித்தது. படகுகள் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தன.
சமாளித்துக்கொண்ட ஒரு சிலர் படகைத் தொடர முற்பட, கண்ணனின் வாளால் கொல்லப்
பட்டனர். முரசுகள் அதிர்ந்தன கரையில். எக்காளங்கள் ஓலமிட்டன. அவசர நிலைமை
அறிவிக்கப் பட்டது. அப்போது திடீரென யாக குண்டத்து நெருப்பு அங்கே தோன்ற
அன்னை ராணியின் உடலில் தேவிமாதா உலகுக்கெல்லாம் அன்னையானவள்
ஆவிர்ப்பவித்தாள். கூட்டம் இதைப் புரிந்துகொண்டு அன்னையையே கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தது.
மெல்ல மெல்லக் கீழே இறங்கி மன்னன்
நின்றிருந்த இடத்துக்கு வந்த அன்னை ராணி தன் காவலாளிகளுக்குக் கட்டளை இட,
அவர்கள் மன்னனைத் திரும்ப அழைத்துச் சென்றனர். படகு தெரியும் இடத்திற்காக
வந்த ராணி, அங்கே இருந்த ஒரு உயரமான மேடையின் மேல் ஏறிக்கொண்டாள். படகையே
விடாமல் பார்த்தாள். படகிலிருந்த ஆஷிகா பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
அன்னை ராணியின் விழிகள் இரண்டும் பெரிதாகி அவளை விழுங்க வருகிறாப்போல்
தோற்றியது அவளுக்கு. நடுங்கினாள் ஆஷிகா. கண்ணன் சமாதானம் செய்ய
முற்பட்டான். அப்போது அனைவரும் கப்பலுக்கு அருகே வந்துவிட்டனர். கண்ணன்
ஆஷிகாவைத் தொட்டுச் சமாதானம் செய்ய முற்பட, கரையில் இருந்து, அன்னை
ராணியின் குரல், “திரும்பி வா ஆஷிகா, திரும்பி வா!” என்றது. கப்பலில்
தானும் ஏறிக்கொண்டு ஆஷிகாவையும் ஏற்ற முயன்ற கண்ணன் அவளைத் தடுக்க முயல
ஆஷிகாவோ வைத்த கண் வாங்காமல் அன்னை ராணியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவ்வளவு
தூரத்தில் இருந்தும் அந்தக் குரல் தெளிவாக அவளை அழைக்க, ஆஷிகாவோ தன்னிலை
இழந்தவளாய் அந்தக் குரலில் வசத்துக்கு ஆட்பட்டுத் திரும்ப முயன்றாள்.
கண்ணன் தடுத்தும் முடியவில்லை. கப்பலில் பாதி தூரம் ஏறிய ஆஷிகா ஒரே
பாய்ச்சல்! கடலில் பாய்ந்தாள். வெகுவேகமாய் ஒரு மீன்குஞ்சைப் போல்
நீந்தினாள். கப்பலில் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே ஆஷிகா கரையை
அடைந்து தன் அன்னையிடம் சென்று விட்டாள். கண்ணன் மாறாத புன்னகையுடன்,
“நினைத்தேன், ஒரு நாக கன்னிகை தன் அன்னையைப் பிரிந்து இருப்பாளா என,
சரியாகிவிட்டது. நல்லது, பிக்ரு, நாம் செல்வோமா?” என்றான். திகைத்துப்
போய் நின்று கொண்டிருந்தான் புநர்தத்தன்.
நாளை ஜராசந்தனின் கோபம்,
தன் மறுமகன் ஆன கம்சனைக் கொன்ற கிருஷ்ணனையும், அவனுக்குத் துணையாக நின்ற
யாதவர்களையும் எப்படிப் பழிவாங்குவது என யோசிக்கிறான் ஜராசந்தன். அதோடு
மட்டுமா? மற்ற அரசர்களையும் தன் பக்கம் இழுத்துக்கொண்டு கிருஷ்ணனையும்,
யாதவர்களையும் தனிமைப்படுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறான்.
Geetha Sambasivam
unread,
May 5, 2010, 3:13:30 AM5/5/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
தோல்வியே
காணாத ஜராசந்தன் தன் வாழ்நாளில் இப்படிப் பட்டதொரு பெரிய அடியை
வாங்கியதில்லை. அவன் சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்க ஆரம்பித்ததில் இருந்து
கம்சன் அவனுக்குத் துணையாக நின்று ஜராசந்தனின் அனைத்துக் கொடூரமான
நடவடிக்கைகளுக்கும் துணை போயிருக்கின்றான். தன் பங்குக்கு யாதவ குலத்தையே
இரண்டாய்ப் பிரித்து உடைத்தும் இருக்கிறான். அவனுடைய ஈடு இணையற்ற
வீரத்தைக் கண்டே தன்னிரு மகள்களையும் கம்சனுக்குக் கொடுத்தான் ஜராசந்தன்.
இப்போது அந்தப் பெண்கள் இருவரும் இளம்பருவத்திலேயே விதவையாகிவிட்டனர்.
அதோடு ஜராசந்தனின் வம்சத்தைச் சேர்ந்த வ்ருதிர்கனனும் அந்தக்
கிருஷ்ணனாலும், அவன் அண்ணனாலும் துண்டு துண்டாய்க் கொல்லப்
பட்டிருக்கிறான். ஆஹா, இப்படி ஒரு அவமானமா எனக்கு? உண்மையாகவே மீசை
கோபத்தில் துடித்தது ஜராசந்தனுக்கு. கோபம் தலைக்கு மேல் ஏறியது. பதினாறு
வயது தாண்டாத இரு இளம் சிறுவர்கள், அதுவும் மாடு மேய்க்கும் சிறுவர்கள்,
அவர்கள் கம்சனின் மறுமகன்களாம், அவர்களால் கொல்லப் பட்டிருக்கிறானே என்
அருமை மறுமகன். அதோடு மட்டுமா? ஜராசந்தன் மதுராவின் காவலுக்கென அனுப்பி
இருந்த பெரும்படையும், அதன் தலைவர்களும் அங்கிருந்த யாதவர்களால் அவமானம்
அடைந்து திரும்பி இருக்கின்றனர். அவர்கள் திரும்பியதும் மதுராவின்
நடந்ததைப் பற்றிக் கதை கதையாக வர்ணிக்கின்றனர். போறாததுக்கு, இந்த ருக்மி,
விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன் நேரே மகதத் தலைநகரான கிரிவ்ரஜ
நகருக்கே புறப்பட்டு வந்துவிட்டான். அவனும் கதை கதையாகத் தான் சொல்கிறான்.
இப்போது
இன்னும் மனம் வருந்தும்படியாக ஒரு நிகழ்வு. அவனிரு பெண்களும் ஒருவருஷம்
துக்க நாட்களை அநுசரித்தபின்னர், மதுராவில் இருந்து மகதம் திரும்பி
விட்டார்கள். இருவரும் துக்கத்திலும், துயரம் தாங்காமலும் துடிதுடித்து
அழுவதைக் காணச் சகிக்கவில்லை. மேலும் தங்கள் கணவனைத் தந்தை சரியானபடி
பாதுகாக்கவில்லை என்று குற்றமும் சாட்டுகின்றனர். மகத சாம்ராஜ்யத்தின்
வளர்ச்சிக்காக உழைத்த தங்கள் கணவனைச் சரியான படி கவனித்துப் பாதுகாக்காத
நீயும் ஒரு தகப்பனா என்று தந்தையை வசை பாடினார்கள் இருவரும். கோபத்துடன்
ஜராசந்தன், “வசுதேவனின் இரு குமாரர்களையும் யமனிடம் அனுப்பும் வரையில்
ஓயமாட்டேன். இது சத்தியம். ஆகாசவாணி, பூமாதேவி சாட்சியாக,
அஷ்டதிக்பாலர்கள் சாக்ஷியாக, சூரியன், சந்திரன் சாக்ஷியாக இது சத்தியம்!”
என்று கடும் சபதம் எடுத்துக்கொண்டான். விதி சிரித்தது. மதுராவின் மேல் படை
எடுக்கவேண்டும் எனத் தீர்மானம் செய்தான். அவன் உடனே உதவிக்கு அழைத்தது.
சேதி நாட்டு அரசனும், குந்தியின் சகோதரியின் கணவனும் ஆன தாமகோஷனை. பின்னர்
விதர்ப்ப நாட்டு அரசனை விட அவன் இளவரசன் யாதவர்களை, முக்கியமாய்க் கண்ணனை
அழிப்பதில் முனைப்பாக இருப்பது தெரிந்து அவனையும், அவந்தி இரட்டையர்களான
விந்தன், அநுவிந்தனையும், சால்வ தேசத்து அரசனையும், திரிகர்ட தேசத்துத்
தலைவனையும் தன் பக்கம் சேர்த்துக்கொண்டான்.
நாடு முழுமைக்கும்
தனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் தூது அனுப்பி வைத்தான். தன்னுடைய
ஏற்பாடுகள் முழுமையடைந்தவுடன், மழைக்காலம் முடியும் வரை காத்திருந்து தன்
படைகளை மதுராவை நோக்கிச் செலுத்தினான் ஜராசந்தன். மதுராவை அப்போது
நிர்வாகம் செய்து கொண்டிருந்த யாதவத் தலைவர்களுக்கு ஒற்றர்கள் மூலம்
செய்திகிடைத்தது. ஜராசந்தன் படை எடுத்து வருவதாயும், கிருஷ்ணனையும் ,
பலராமனையும் கொடுத்துவிட்டால் படை எடுப்பு நீடிக்காது எனவும்,
இல்லாவிட்டால் மதுராவை அழிக்கப் போவதாயும் ஒற்றர்கள் கூறினார்கள். பலராமன்
கண்ணனோடு வைவஸ்வதபுரி செல்லவில்லையாதலால், குரு சாந்தீபனியின்
ஆசிரமத்திலிருந்து திரும்பியிருந்தான். சில நாட்களில் கண்ணனும்,
புநர்தத்தனை குருவிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பி விட்டான். அப்போது
மதுரா நகரமே சந்தோஷ ஆரவாரத்தில் இருந்தது. ஏற்கெனவே பராபரியாகச் செய்திகள்
வந்த வண்ணமிருந்தன. கண்ணன் வைவஸ்வதபுரி சென்றதும், நாகலோகத்திலிருந்த
புநர்தத்தனை மீட்டுக்கொண்டுவந்ததும், ஆங்காங்கே மக்களால் பேசப்பட்டு
வந்தது. இப்போது கண்ணனும் திரும்பிவிடவே, உத்தவன் மூலம் அனைத்து
விஷயங்களையும் அறிந்த மக்கள் கண்ணனைத் தெய்வமாகவே கொண்டாட ஆரம்பித்தனர்.
கண்ணன்
திரும்பி வந்த நாளை ஒரு பெரும் விழா போல் எடுத்தனர். உக்ரசேனனே நேரில்
சென்று கண்ணனை வரவேற்றிருந்தார்.பதினெட்டு வயது நிரம்பாத கண்ணனனத் தங்கள்
தலைவனாக ஆகும்படி வற்புறுத்தினார்கள். உக்ரசேனனுக்கோ வயதாகிவிட்டது.
மகனையும் இழந்தபடியால் மனமும் பலவீனமடைந்திருந்த நிலையில் அவருக்கும்
இதுவே சம்மதமாய் இருந்தது. ஆனால் கண்ணன் தனக்கு மூத்தவனிருக்கத் தான்
எப்படித் தலைமை ஏற்பது என மறுக்க பலராமனோ, தன்னைவிடக் கண்ணனே அனைவரிடமும்
ஒத்த தோழமையுடன் பழகுகிறான் என்று தனக்கு வந்த பதவியை
மறுத்துக்கொண்டிருந்தான். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் தான் மகத
நாட்டுப் படை மதுராவை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருக்கும் செய்தி
கிடைத்தது. உடனடியாக அவசரக் கூட்டத்தைக் கூட்டினார் உக்ரசேன அரசர்.
ஒற்றர்கள் சொன்ன செய்தியோ பயங்கரமாய் இருந்தது. கடந்த இரு வருடங்களில்
இந்தப் படை எடுப்புக்குத் தயாராக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டு
பூரண உதவிப் பொருட்கள், அனைத்து வித மருத்துவ ஏற்பாடுகள், அஸ்திர,
சஸ்திரப் பிரயோகங்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு, தேவையான
உணவுப்பொருட்கள், சமைக்கும் ஆட்கள் எனப் பரிபூரணமான ஒரு முற்றுகைக்குத்
தயாராய் வருவதாய்த் தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த உக்ரசேனர் தன் படைத்
தலைவர் ஆன, விகத்ருவைப் பார்த்து, முற்றுகையை எத்தனை நாட்கள், மாதங்கள்,
அல்லது வருடங்கள் மதுரா தாக்குப் பிடிக்கும்? குறைந்தது ஆறுமாதமாவது
தாங்குமா?
மன்னரின் நம்பிக்கை பொய்த்துப்போகும்படி விகத்ரு
சொன்னான்:”மரியாதைக்குகந்த அரசே, மதுராவின் கோட்டை பலவீனமாய் உள்ளது.
தங்கள் குமாரரும், மதுராவின் முன்னாள் அரசரும் ஆன கம்சர், பல வருடங்கள்
வெளி நாட்டுப் படை எடுப்பிலேயே இருந்துவிட்டமையால் மதுராவை கவனிக்கவில்லை.
மதுரா நகர் இன்றைக்கு யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து கொள்ளும்
வசதியோடு எந்தவிதமான பாதுகாப்புமின்றி உள்ளது. அதோடு இப்படி ஒரு
முற்றுகையை எதிர்பார்க்காததால் போதிய வீரர்களோ, ஆயுதங்களோ, அவர்களுக்கு
அளிக்கவேண்டிய உணவுப் பொருட்களோ இல்லை. அவ்வளவு ஏன்? இங்கே இருக்கும்
மக்களுக்கே போதிய உணவுப்பொருட்களை நம்மால் அளிக்க முடியாது.” என்றான்.
மேலும் கம்சன் இறந்ததும், அவனால் வெளியேற்றப் பட்ட மக்கள் திரும்பி
வந்ததால் மக்கள் தொகையும் அதிகமாகிவிட்டதையும் தெரிவித்தான். உக்ரசேனர்
செய்வதறியாது திகைத்தார்.
“ஆஹா, அக்ரூரரே, நீங்கள் வெளி தேசங்களின்
உதவிக்குச் சென்றிருந்தீர்களே? அவர்களிடம் கேட்டீர்களா? உங்கள் தூதுவர்கள்
என்ன சொல்கின்றனர்??’ உக்ரசேனன் கேட்டார்.
அக்ரூரர்
சொல்லுவார்:”அரசே, நம்முடைய நண்பர்கள் யாவரும் இப்போது நமக்கு உதவி
செய்யும் நிலையில் இல்லை. சேதி நாட்டு அரசன் ஆன தாமகோஷன் நமக்கு உதவி
செய்ய நினைத்தாலும் ஜராசந்தன் விடமாட்டான். ஆகையால் அவன் வெளிப்படையாக
ஜராசந்தனுடனே சேருவான். ரகசியமாக நமக்கு ஆயுத உதவி வேண்டுமானால்
கொடுப்பான். விதர்ப்ப நாட்டிலிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க
முடியாது. நானே ஹஸ்தினாபுரம் சென்றிருந்தேன். பீஷ்ம பிதாமகரையும்
சந்தித்து உதவி கேட்டேன். அவர் தான் இந்த சூழலை நினைத்து மிக
வருந்துவதாயும், ஆனால் தற்சமயம் உதவும் நிலையில் இல்லை என்றும் சொன்னார்.
அதற்கு அவர் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? குருட்டு அரசன்
திருதராஷ்டிரனும், அவன் மூத்த மகன் துரியோதனனும் நாம் பாண்டுவின்
புத்திரர்களுக்குப் பக்ஷமாக நடக்கிறோம் எனச் சந்தேகப் படுகின்றார்களாம்.
இதை அந்த அரசன் திருதராஷ்டிரன் என்னிடம் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்
இது தான் அவன் உள் நோக்கம். நமக்கு ஹஸ்தினாபுரம் உதவினால் பாண்டுவின்
புத்திரர்களின் கை ஓங்கிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால்
ஹஸ்தினாபுரத்திலிருந்து நமக்கு உதவி கிட்டாது என்று சொல்கின்றனர்.”
என்றார் அக்ரூரர்.
“எனில் நம்மால் முற்றுகையைத் தாக்குப் பிடிக்க
முடியாது?” உக்ரசேனர் கேட்க, விகத்ரு அதை ஆமோதித்தார். “சில நாட்கள் கூட
முற்றுகையை நம்மால் தாங்க முடியாது.”
Geetha Sambasivam
unread,
May 10, 2010, 4:02:12 AM5/10/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“ம்ம்ம்ம்ம்??
போதுமான உணவுப் பொருட்களும் இல்லை, படைகளும் தயாராக இல்லை. எனில்
முற்றுகையை எவ்விதம் எதிர்கொள்வது? கிருஷ்ணன் என்னமோ மதுராவின்
இளைஞர்களுக்குப் போர்ப்பயிற்சி அளிப்பதாய்க் கேள்விப் பட்டேனே?” உக்ரசேனர்
கேட்க, வசுதேவரோ அந்தப் படை எல்லாம் இத்தனை பெரிய தாக்குதலை எதிர்கொள்ளும்
அளவு பலமில்லாதது எனத் தெரிவித்தார். கண்ணன் எழுந்து நின்று உக்ரசேனரை
வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிய வண்ணம், “அரசே, போர் என்பது வெறும்
உடல்பலத்தால் மட்டுமின்றி, புத்தியாலும் இதயத்தாலும் போரிடவேண்டிய ஒன்று.
அப்படிச் சில இளைஞர்கள் மதுராவைக் காக்கவேண்டித் தங்கள் உயிரையும் தியாகம்
செய்யத் தயாராய் இருக்கின்றனர்.” என்றான்.
“யாரெல்லாம் நமக்கு உதவ
முடியுமோ அவர்களுக்கு எல்லாம் இப்போது நம் உதவிக்கு வரமுடியாததொரு
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாசுதேவ கிருஷ்ணா, உன்னைத் தான் நம்பி உள்ளோம்.
ஏதேனும் வழி இருக்கிறதா?”
“அரசே, இப்போது நாம் செய்யவேண்டியது
ஒன்றே தான். நாம் மிகப் பலவீனமான நிலையில் இருக்கிறோம். மதுராவையும் அதன்
மக்களையும் காக்க ஒரே வழிதான் இருக்கிறது. ஜராசந்தன் கேட்டிருப்பது
என்னையும், பலராமனையும் மட்டுமே. நாங்கள் இல்லை எனில் அவன் மதுராவுக்குள்
நுழைய மாட்டான். நாங்கள் இங்கே இருந்தால் மதுராவுக்குப் பல வகைகளிலும்
நாசம் ஏற்படும். ஆகவே நாங்கள் இருவரும் நகரை விட்டுத் தொலை தூரம் சென்று
விடுகிறோம். நாங்கள் இங்கே நகருக்குள் இல்லை என்பது தெரிந்தால் ஜராசந்தன்
முற்றுகையைக் கைவிட்டு எங்களைப் பின் தொடருவான்.” என்றான் கண்ணன்.
“ஆஹா,
இது என்ன?? எங்கே செல்வீர்கள் நீங்கள் இருவரும்? அவன் மஹா சக்கரவர்த்தி
தெரியுமா? அவனின் செல்வாக்கும், பராக்கிரமமும், சஹ்யாத்ரி மலைகளையும்
தாண்டி பரந்து விரிந்துள்ளது. அவனுக்கு நீங்கள் எதிரி என்பது
தெரிந்தால்????” உக்ரசேனருக்கு நினைக்கவே நடுங்கியது. அக்ரூரரோ, “ஆனால்
அவன் நெருங்கிவிட்டானே? நாளைக்குள் மதுராவுக்குள் நுழைந்துவிடுவான்
போலிருக்கிறதே?” என்றார். கண்ணன்,”இதோ உடனே நாங்கள் கிளம்பிவிடுகிறோம்.
விகத்ரு, நீங்கள் சொல்லுங்கள், இந்தப் பரந்த பூமியின் எல்லாப்
பாகங்களுக்கும் சென்றவர் நீர். உமக்குத் தெரியும் எங்கே சென்றால்
எங்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என. சொல்லுங்கள்.” என்றான் கண்ணன்.
“இதை
விட நல்ல முடிவு எதுவும் இல்லை.” அனைவரும் ஒரு மனதாக ஆமோதிக்க,
கிருஷ்ணனின் தந்தை வசுதேவனுக்கோ கண்ணன் எங்கே செல்லமுடியும் என்று கவலை.
சேதிநாட்டு அரசனான தாமகோஷன் வசுதேவனின் தங்கை கணவனாக இருந்தும்
ஜராசந்தனின் நண்பனாகிவிட்டபடியால் கண்ணனுக்கு உதவ முடியாது. ஆகவே கண்ணன்
சேதிநாட்டுப் பக்கம் செல்ல முடியாது. விதர்ப்பநாட்டு இளவரசன் ருக்மியோ
கண்ணனைக் கண்டாலே கொல்லும் வெறியோடு உள்ளான். ஆகவே அங்கும் செல்லமுடியாது.
மற்ற நாடுகளோ ஏதோ ஒரு வகையில் ஜராசந்தனுக்குக் கட்டுப்பட்டுள்ளது.
வசுதேவன் கவலையில் ஆழ்ந்தான். கண்ணனோ அவனைத் தேற்றினான். ஜராசந்தன்
நியாயமாகவும், தர்மத்தின் வழியிலும் செல்லவில்லை என்பதைச் சுட்டிக்
காட்டிய கண்ணன், அவனுடைய அழிவு தனக்குத் தெரிவதாயும் கூறினான். ஆனால் அவனை
அழிக்கவேண்டிய தக்க தருணம் இன்னும் நெருங்கவில்லை என்பதால் தாமதிக்க
வேண்டி இருக்கிறது என்ற கண்ணன், மீண்டும் தாங்கள் எங்கே சென்றால்
பத்திரமாய் இருக்க முடியும் எனக் கேட்டான்.
அதற்கு விகத்ரு,
விண்ணைத் தொடும் சஹ்யாத்ரி மலைத் தொடரின் மறுபக்கம் கரவீரபுரம் என்னும்
நகரம் இருப்பதாகவும், யாதவ குலத்து முன்னோர்களில் ஒருவனான மாதவன்
என்பவனால் அங்கே ஒரு நாடு ஸ்தாபிக்கப் பட்டதாகவும், இந்த நகரம் அதன்
வழித்தோன்றல்களின் ஒருவனான பத்மவர்மாவால் ஏற்படுத்தப் பட்டதாகவும்,
தற்சமயம் அங்கே ஸ்ரீகாலவன் என்னும் அரசன் ஆண்டு வருவதாகவும் கூறினான்.
ஸ்ரீகாலவன் எவ்வகையில் நமக்கு உறவினன் ஆகின்றான் என பலராமன் கேட்க,
யாதவர்களின் முன்னோர்களைப் பற்றிக் கண்ணனும் தெரிந்து கொள்ள ஆசைப்பட
வசுதேவன் கூற ஆரம்பிக்கிறான்.
யாதவர்கள் எவ்வளவு தூரம் பரந்து
விரிந்திருக்கிறார்கள் என ஆச்சரியமடைந்தான் கண்ணன். வசுதேவன் கூறினார்:
யயாதியின் பிள்ளைகளில் ஒருவனான யதுவின் வம்சாவழியான நம் குலத்து
முன்னோர்களில் ஹர்யஷ்வா என்னும் அரசன் மதுவனத்தை ஆக்கிரமித்திருந்த மது
என்னும் துர்த் தேவதையின் மகளான மதுமதியை மணக்க நேரிட்டது. அதற்குப்
பரிசாக அவனுக்கு அநர்த்தம், சுராஷ்டிரம் என்ற நாடுகள் பரிசாய்க்
கிடைத்தது. அவனே கிரிநகரை நிர்மாணம் செய்தான். யாதவ குல இளவரசிகள் ஐவரை
மணந்த நாக குல அரசன் ஆன தூம்ரவர்ணனுக்கு அவர்கள் மூலம் ஐந்து இளவரசர்கள்
பிறந்தனர். அவர்கள் முசுகுந்தன், இவன் மூலம் விந்திய மலையில் மாஹிஷ்மதி
அரசும் பூரிகாவும் நிர்மாணிக்கப் பட்டது. பத்மவர்மன் மூலம் கரவீரபுரம்
நிர்மாணிக்கப் பட்டது. சரஸன் மூலம் க்ரெளஞ்சபுரியும், ஹரிதா மூலம்
முத்துக்களும், பவளங்களும் கிடைக்கும் தீவுகளும், மாதவன், நமது
முன்னோர்களில் ஒருவன் மூலம் இந்த அரசும் கிடைக்கப் பெற்றோம். மாதவனின்
காலத்தில் தான் ஸ்ரீராமனின் சகோதரன் ஆன ஷத்ருகனன் மதுவனத்தை ஆண்டு வந்த
கொடிய அரக்கத் தன்மை வாய்ந்த மதுவின் பிள்ளைகளை அழித்துவிட்டு மதுராவை
நிர்மாணம் செய்தான். பின்னால் நமது மாதவரின் வழித்தோன்றலான பீமன்
என்பவனால் மதுராபுரி ஷத்ருகனின் வாரிசுகளிடமிருந்து பெறப்பட்டு நம் கைக்கு
வந்தது. இதுவே மதுரா நமக்குக் கிடைத்த முறை” என்றான் வசுதேவன்.
Geetha Sambasivam
unread,
May 17, 2010, 4:45:03 AM5/17/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
மேலும்
தொடர்ந்த விகத்ரு, வசுதேவரின் ஒரு சகோதரியான குந்தி தேவி பரத குலத்து
அரசனான பாண்டுவின் விதவை மனைவி எனவும் அவளுடைய ஐந்து குமாரர்களும்
கண்ணனுக்கும், பலராமனுக்கும் அத்தை வழி சகோதரர்கள் ஆகின்றார்கள்
என்பதையும் கூறிவிட்டு மேலும் சேதி நாட்டு அரசியான ஷ்ருதஷ்ரவா வசுதேவனின்
மற்றொரு சகோதரி என்றும், அவர்கள் குமாரன் சிசுபாலன் கண்ணனுக்கும்,
பலராமனுக்கும் அத்தைவழி சகோதரன் எனவும் தெரிவித்தான். யாதவ குலம் பாரதம்
என அழைக்கப் பட்ட இந்தப் பரந்து விரிந்த பிரதேசம் முழுதும் பரவி
இருப்பதாயும் விந்திய மலைப்பகுதிகளும், சஹ்யாத்ரி மலைப்பகுதிகளும்
யாதவர்களின் ஆதிக்கத்திலேயே இருப்பதாயும் கூறினான். இவ்வளவு பெரியதொரு
குலத்தின் கண்ணின் கருமணியாகக் கண்ணன் தோன்றி இருப்பதாகவும் விகத்ரு
தெரிவித்தான். ஜராசந்தன் அவர்கள் இருவரையும் செல்லுமிடமெல்லாம்
துரத்தினாலோ, அல்லது ஸ்ரீகாலவன் இவர்களை ஏமாற்றினாலோ என்ன செய்ய முடியும்
என வசுதேவன் கவலை அடைந்தான். கண்ணனோ தான் தர்மத்தின் பாதையை விட்டு
அகலாமல் இருப்பதாகவும், ஆகவே தன்னைக் குறித்துக் கவலை கொள்ளவேண்டாம்
எனவும் தான் மேற்கொண்டிருக்கும் தர்மம் தன்னைக் காக்கும் எனவும் திடமாய்க்
கூறினான்.
“ஓஓ. அங்கே தர்மம் நிலைத்து வாழ்கின்றது கண்ணா,”
கர்காசாரியார் உற்சாகமான குரலில் தொடர்ந்தார். “ஜமதக்னியின் குமாரன்,
பார்கவன் அங்கேதான் வாழ்கின்றான் எனக் கேள்விப் பட்டேன். அவர்
ஷுர்பராகாவில் (இந்த ஷுர்பராகா தற்சமயம் மும்பைக்கு அருகே உள்ள சொபாரா
என்னும் இடம் எனவும் சரித்திர காலத்துக்கு முன்னால் இங்கே ஒரு துறைமுகம்
இருந்ததாகவும் முன்ஷிஜி சொல்கின்றார்.)வாழ்கின்றார் எனச் சொன்னாலும்,
அடிக்கடி சஹ்யாத்ரி மலைத்தொடர்களின் அரசர்கள் அரசாட்சி செய்யும்
பகுதிகளுக்கு வந்து செல்கின்றார். உன்னுடைய பாதுகாப்புக்காக நான் அவரைத்
தனியே சந்தித்து வேண்டிக்கொள்கிறேன்.” என்றார் கர்காசாரியார்.
“குருதேவா!
அவரால் என்ன விதத்தில் எனக்கு உதவ முடியும்?? அவர்தான் தற்போது
ஆயுதங்களைப் பிரயோகம் செய்யப் போவதில்லை எனச் சபதம் எடுத்துள்ளாரே?”
என்றான் கண்ணன். “இருக்கலாம் கண்ணா, ஆனால் அவருடைய புத்தியும், விவேகமும்,
ஞானமும் அவர் க்ஷத்திரியர்களைக் கொல்லவேண்டி முன்பு உபயோகித்து வந்த பரசு
என்னும் கோடரியை விட பலம் பொருந்தியதாகும்,” என்றார். “ம்ம்ம்?? சரி,
பேசிக்கொண்டு நேரத்தை வீணாக்காமல் காலை பொழுது விடியும் முன்னரே நாங்கள்
கிளம்பிவிடுகிறோம். மரியாதைக்குகந்த அரசரே, நாங்கள் சென்றதும்
ஜராசந்தனுக்குத் தெரிவியுங்கள், கண்ணனையும், பலராமனையும் மதுராவில் காண
முடியாது, அவர்களைத் தேடி வேறெங்கேனும் தான் அலையவேண்டும் என. அவன்
எங்களைத் தேடி ஓடி வந்தானெனில் மதுரா நகருக்கு எந்தவிதமான ஆபத்தும்
நேரிடாமல் காப்பாற்றலாம்.” என்றான் கண்ணன்.
கண்ணனுக்குத் தன்னைப்
பெற்ற தாய் தேவகியிடம் விடை பெறுவது ஒரு கஷ்டமான காரியமாக இருந்தது.
தேவகியின் அந்தப் புரம் சென்று அவளை வணங்கி விடைபெற்ற கண்ணனைக்
கட்டிக்கொண்டு அழுத தேவகி, “என் குழந்தாய், உன்னை எனக்கே எனக்கென்று நான்
அடையும் நாள் எந்நாளோ? அந்நாள் வருமா என்றே சந்தேகமாய் உள்ளது. உன்னைப்
பற்றிய நினைப்பும், அதன் காரணமான பரிதவிப்பும் இல்லாமல் நான் இருக்கப்
போகும் நாளும் எந்நாளோ?” எனச் சொல்லி விட்டுக் கண்ணீரை உகுத்தாள்.
“தாயே,
நான் என்ன செய்வது? என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு
காரணங்களாலேயே ஏற்படுகின்றது. ஜராசந்தன் இப்படித் துரத்தவில்லை எனில்
நாங்கள் இங்கிருந்து கிளம்ப மாட்டோமே? மேலும் படைத் தலைவர் விகத்ரு
சொன்னதில் இருந்து செல்லும் இடத்திலும் எனக்கு ஒரு வேலை
காத்திருக்கிறதாய்த் தெரிகிறது.” கண்ணனின் இளநகை மேலும் விரிந்தது.
“கோவிந்தா,
உனக்கு யாரும், எவரும் எந்தத் தொந்திரவும் ஒருபோதும் செய்யமுடியாது.”
என்றாள் தேவகி. “யார் அம்மா என்னைத் தொந்தரவு செய்யப் போகின்றார்கள்? நான்
தான் அவற்றைத் தேடிப் போய் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றேனே? அவை என்னைத்
தேடிப் பாதி வழி வருவதற்குள் நான் அவற்றைப் போய் அடைந்து விடுகிறேன்.
ஆகையால் நீ என்னைக் குறித்துக் கவலை கொள்ளவும் வேண்டாம். மேலும்
செல்லுமிடத்தில் எங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கப் போவது யார்
தெரியுமா? ஜமதக்னியின் புதல்வர் பார்கவர். யாருடைய ஆணையைக் கேட்டுக்
கடலரசன் ஒதுங்கிச் சென்று நிலத்தை வெளியிட்டானோ, அவருடைய பாதுகாப்பு
எங்களுக்குக் கிடைக்கப் போகிறது.”
“வேறு எவரேனும் உன்னுடன் வருகின்றனரா கண்ணா?”
“இல்லை
தாயே! கூட்டமாய்ச் சென்றால் அனைவரின் கண்காணிப்பிலும் விழுவோம். நாங்கள்
இருவர் மட்டுமே சென்றால் அதிகம் எவரும் கவனிக்கமாட்டார்கள். உத்தவன்
மட்டுமே வருவான். எங்களுடன் குண்டினாபுரம் வரையிலும் சேர்ந்து
போய்விட்டுப் பின்னர் கரவீரபுரத்திற்கு முன்னால் சென்று எங்கள் வரவை அவன்
அறிவிப்பான். “
“குழந்தாய், மனதைத் தளரவிடாதே! எல்லாவற்றிலும் கவனமாய் இருந்து கொள்வாய்!”
“தாயே,
நான் உனக்கு உறுதி அளிக்கிறேன். என்ன நேர்ந்தாலும் நான் தேவகியின் குமாரன்
என்பதற்கு ஊறு விளைவிக்காவண்ணம் நடந்து கொள்வேன். நீ என்னை ஒரு கடவுள் என
நினைத்திருக்கின்றாய் என்பதை நான் நன்கறிவேன். அப்படி ஒரு அவதாரமாகக்
கடவுளாக நான் இருந்தால் அதற்குக் காரணம் உன்னைப் போன்ற ஒரு தெய்வீகமான
அன்னையின் வயிற்றில் பிறந்ததே. நான் அதை ஒரு போதும் மறக்கமாட்டேன். எனக்கு
அது தான் மேலும் பலம் சேர்க்கிறது.” கண்ணன் மனமாரச் சிரித்தான். அவன்
உள்ளத்து மகிழ்ச்சி பேச்சிலும், சிரிப்பிலும் நன்கு புலப்பட்டது.
அங்கிருந்து கண்ணன் விடைபெற்றுச் செல்லும்போது திரிவக்கரை வந்தாள். அவள்
இப்போது தேவகியின் அந்தரங்கத் தோழியாகி இருந்தாள். கண்ணனைக் கண்டதும்
தனியே அழைத்து அவனை வணங்கிய திரிவக்கரை தன்னை ஒருபோதும் மறக்கக் கூடாது என
வேண்டிக் கொண்டாள். பூக்களையும், அவை அளிக்கும் சுகந்தத்தையும் எங்கே
கண்டாலும் திரிவக்கரை தான் நினைவில் வருவாள் எனவும், அவளை மறப்பது இயலாத
ஒன்றென்றும் கண்ணன் உறுதி அளித்துவிட்டுச் சென்றான். மறுநாள் விடிவதற்கு
முன்னாலேயே கண்ணன், உத்தவனுடனும், பலராமனுடனும் ரதத்தில் ஏறிக்கொண்டு
மதுரா நகரை விட்டு மக்கள் எவரும் அறியா வண்ணம் வெளியேறினான்.
விதர்ப்ப
நாட்டில் இருந்த ருக்மிணி இந்தச் செய்தியைக் கேட்டதும் உள்ளம்
துடிதுடித்துத் தவித்தாள். அவள் தமையனை எண்ணி எண்ணி மனம் கலங்கினாள்.
ஜராசந்தன் கண்ணனையும் பலராமனையும் அழிப்பதற்கு ருக்மியின் உதவியைக் கேட்க
ருக்மியும் அதற்குத் தன் சம்மதத்தை அளித்திருந்தான். என்ன செய்யலாம்??
கலங்கிய ருக்மிணிக்குத் தன் தந்தையின் தகப்பன் ஆன கைஷிகனைக் கலந்து
ஆலோசிக்கும் எண்ணம் ஏற்பட்டது. அவளிடம் மிக்க அன்பும், பாசமும்
கொண்டிருக்கும் அவள் பாட்டனார் கட்டாயம் அவள் மனத்தைப் புரிந்து கொள்வார்.
என்ன தான் அவள் தந்தையான பீஷ்மகன் அரசனாக இருந்தாலும் அது பெயரளவுக்கே.
உண்மையில் ருக்மியின் கொடுங்கோலாட்சி தான் அங்கே நடந்து கொண்டிருந்தது.
இதைச் சகிக்க முடியாமல் தன்னால் இயன்ற அளவுக்கு ராஜரீக விஷயங்களில்
தலையிட்டாள் ருக்மிணி.
பரசுராமரின் நேரடி சீடனான ருக்மியோ கண்ணனால்
மதுரா நகரில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறக்கவே இல்லை. எவ்வகையிலேனும்
கண்ணனைப் பழிவாங்கத் துடித்த அவனுக்கு ஜராசந்தனின் இந்த அழைப்புத் தேனாய்
இனித்தது. உடனே தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டான். ஜராசந்தனின் உதவி
கிடைப்பதோடு அல்லாமல்,கண்ணனையும் பழி வாங்கிவிடலாம். ஒரு பெரிய
சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதென்றால் சாமானியமா? அதன் மூலம்
தனக்குக் கிடைக்கப் போகும் பலாபலன்களை எண்ணிக் கனவு காண ஆரம்பித்தான்
ருக்மி. ருக்மிணியும் அந்த இடைச் சிறுவனை மறக்கவே இல்லைதான். ஆனால் அவள்
எண்ணங்களோ ருக்மியின் எண்ணங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. தன் அண்ணனை ஒரு
பிடிவாதக் காரக் குழந்தையைப் போல் அன்றோ அந்தக் கண்ணன் நடத்தினான்!
எவ்வளவு சாதுர்யமாகக் கம்சனைக் கொன்றான்? தனக்குக் கொடுக்கப் பட்ட
அரசபதவியைக் கூடவன்றோ நிராகரித்துவிட்டான்! எவ்வளவு பாசம்
கொண்டிருக்கின்றான் அவன் அன்னையான தேவகியிடம்! அந்தக் கூனிப் பெண்
திரிவக்கரை...... ஆஹா, ஆம், அதுதான் சரி. ருக்மிணி ஒரு முடிவுக்கு
வந்தாள்.
Geetha Sambasivam
unread,
May 24, 2010, 3:28:30 AM5/24/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
ருக்மிணி
கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் அண்ணன் ருக்மி ஜராசந்தனிடம்
ஒரேயடியாகச் சரணடைந்துவிட்டானே. கம்சன் இறந்தது அவனை மிகவும்
பாதித்துவிட்டது. தன்னுடைய எதிர்காலமே இருளடைந்துவிட்டதோ என
எண்ணிவிட்டான். ஹூம், உடனேயே அந்த மூர்க்கன் ஜராசந்தனிடம் சென்றுவிட்டான்.
அவனும் இவனுக்குக் கண்ணனை எங்கே, எந்த நிலையில் கண்டாலும் அழிக்கவேண்டும்
என ஆணை இட்டு விட்டானாம். ஹா!! நடக்குமா அது?? கண்ணன், கண்ணா, கண்ணா, அவனை
மறக்க முடியுமா? தன் தாயிடம், பல வருடங்கள் கழித்துப் பார்த்தப் பெற்ற
தாயிடம் எவ்வளவு அன்பும், பாசமும் கொண்டிருந்தான். தனக்கெனக் கொடுக்கப்
பட்ட மதுராவின் கிரீடத்தைக் கூட வேண்டாம் என மறுத்துவிட்டானே?
ம்ம்ம்ம்ம்?? மதுராவில் இருந்து செய்தி வரவேண்டுமானால் திரிவக்கரை மூலம்
தான் வரவேண்டும். ஆம், ருக்மிணியையும், திரிவக்கரையையும் கண்ணன் நன்கு
பிணைத்துவிட்டான். மதுராவில் இருந்து தூர தேசங்களுக்குச் செல்லும்
பிராமணர்கள் மூலம் திரிவக்கரை ருக்மிணிக்குச் செய்திகள் அனுப்பி
வருகிறாள். அதோடு அவள் தகப்பனுக்கும் மதுராவின் செய்திகள் வருகின்றன.
புண்யாஜனா
கப்பலையும், அதன் தலைவன் பாஞ்சஜனாவையும் கண்ணன் அழித்ததையும், நாகலோகம்
சென்று புநர்தத்தனை மீட்டு வந்ததையும் குறித்த கதைகள் இங்கே விதர்ப்ப
நாட்டுக்கும் வந்துவிட்டன. ருக்மிணிக்குப் பெருமை தலைக்கு ஏறியது. என்னவோ
கண்ணன் அவள் சொல்லித் தான் எல்லாம் செய்தாற்போல மனம் மகிழ்ந்தாள். கண்ணனை
நினைக்கும்போதெல்லாம் அவன் அழகிய மலர்ந்த புன்னகையுடன் கூடிய முகம்
நினைவில் வருகிறது ருக்மிணிக்கு. ஆனால் அவனைப் பற்றியே இங்கே
பேசமுடியவில்லை. என்னதான் இடைக்குலத்தோரால் வளர்க்கப் பட்டாலும், அவனும்
ஒரு யாதவகுலப் பையன் தானே? அது ஏன் இந்தப் பெரியவர்களுக்குப் புரியவே
இல்லை?? அவள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசியாம். அவளைக் கரம்
பிடிக்கும் தகுதி மற்றொரு மன்னனுக்கோ அல்லது பட்டத்து இளவரசனுக்கோதான்
இருக்கிறதாம். யாருக்கு வேண்டும், அரியணை எல்லாம். ஆனால் அவள் அண்ணன்
ருக்மி இருக்கிறானே? அவள் திருமணத்தின் மூலம்தான் அவனுடைய சாம்ராஜ்யக்
கனவுகள் பூர்த்தி அடையவேண்டுமாம். அதற்கு அவன் சொல்லும் அரசகுமாரனைத் தான்
அவள் திருமணம் செய்தாகவேண்டுமாம். சொல்கிறான். இதை எவரும்
எதிர்க்கிறார்களா என்றால் இல்லை, அனைவரும் தயங்குகிறார்கள். ருக்மியின்
கோபம் அவ்வளவு பிரபலம். என்ன செய்யலாம்?? ருக்மிணிக்கு மீண்டும் கோபம்
தலைக்கு ஏறியது. அப்போது அவளின் அந்தரங்கச் சேடி வந்து ஒரு தகவல்
சொன்னாள். ஜராசந்தன் கண்ணனையும், பலராமனையும் எவ்விதத்திலேனும் கொல்லப்
போகின்றானாம். அவர்களை ஒப்படைக்கவில்லை எனில் மதுராவையே அழிக்கப்
போகிறானாம். அதற்கு அவள் அண்ணனும் உதவி செய்யப் போகிறானாம். அவள்
தகப்பனும், அவள் அண்ணனும் இதைப் பற்றி விவாதிக்கின்றனராம். ருக்மிணிக்குத்
தலையோடு கால் வரையிலும் நடுங்கியது. உடனே ஒரு புயல் போலக் கிளம்பித் தன்
அண்ணனையும் தகப்பனையும் பார்க்கக் கிளம்பினாள்.
வேகமாய் உள்ளே
வரும் ருக்மிணியைப் பார்த்ததுமே ருக்மிக்குப் புரிந்து விட்டது. ருக்மிணி
கோபத்துடன் அண்ணனைப் பார்த்து, “அண்ணா, என்ன இது நான் கேள்விப் படுவது?
கிருஷ்ணனையும், பலராமனையும் ஜராசந்தன் கொல்ல நீ உதவி செய்யப் போகிறாயாமே?
வேண்டாம், விட்டு விடு, நீ போகாதே!” என்றாள். அவளுக்கு மேல் மூச்சு,
கீழ் மூச்சு வாங்கியது. ருக்மி அவளை அலட்சியமாய்ப் பார்த்து, “நீ அந்தப்
புரத்தில் இருக்கவேண்டியவள். இங்கே ஏன் வந்தாய்?? ராஜாங்க விஷயங்களில் நீ
தலையிடாதே!” என்று கோபம் மீதூறக் கத்தினான். ருக்மிணியின் கோபம் கண்களில்
மின்வெட்டுப் போல் தெறித்தது.
“ஏன் கூடாது? இது எப்படி உனக்குத்
தகப்பனின் நாடோ, அப்படியே எனக்கும் என் தகப்பனின் நாடு ஆகும். உனக்குள்ள
அதே உரிமைகள் எனக்கும் உண்டு. தந்தையே, என்ன இது? நீங்கள் சும்மா எதுவும்
பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே? அவன் என்ன செய்யப் போகிறான்
என்பதை உணர்ந்துதான் பேசாமல் இருக்கிறீர்களா? உங்களையும், இந்த விதர்ப்ப
நாட்டையும் ஜராசந்தனுக்கு அடிமையாக்க நினைக்கிறான்.”
“உனக்கு
அரசியல் பற்றியோ அரசியல் தந்திரங்கள் பற்றியோ என்ன தெரியும்??
குண்டினாபுரம் இன்று ஒரு வலுவான நாட்டின் தலைநகராய் இருக்கிறாதென்றால்
அதற்குக் காரணம் ஜராசந்தனுடனான நமது நட்பே ஆகும். நானும் உன்னை ஒரு மஹா
சாம்ராஜ்யத்தின் மஹாராணியாக்க விரும்புகிறேன். அதே போல் ஒரு பெரிய
சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின் சகோதரி என உன்னை அனைவரும் கூறவும்
நினைக்கிறேன். இது என் வாழ்நாள் கனவு.”
“நீ செய்யும் எந்த உதவியும்
எனக்குத் தேவையில்லை. நான் இப்போது இருக்கிறமாதிரி இருப்பதிலேயே
சந்தோஷமாய் இருக்கிறேன். தந்தையே, இந்த முரட்டு அண்ணனின் வாயை அடக்காமல்
வேடிக்கை பார்க்கிறீர்களே? இது உங்களுக்கே நியாயமாய் இருக்கிறதா?
“குழந்தாய்,
ருக்மிணி, ஜராசந்தன் ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி. அவனை எதிர்ப்பது
என்பது சாமானியமான ஒன்றல்ல மகளே. அதற்குரிய படை பலமோ, அரசர்களின் உதவியோ
நம்மிடம் இல்லை. அவனோடு நாம் நட்பாக இல்லை எனில் அவன் நம்மையும், நம்
நாட்டையும் என் தந்தை கெளஷிகரின் ஆட்சிக்காலத்தில் அழித்தாற்போல்
அழித்துவிடுவான். அவனோடு சமாதானமாய்ப் போவதே நமக்கும், நம் நாட்டுக்கும்
நன்மை பயக்கும்.”
“கோழைகள், கோழைகள், வீரமே இல்லாதவர்கள்!”
ருக்மிணி கத்தினாள். “ஆஹா, நான் ஒரு ஆண்மகனாய் இருந்திருக்கக்கூடாதா?”
ருக்மிணி கோபத்துடன் கால்களை உதைத்தாள். வேகமாய் அங்கிருந்து வெளியேறி
வயது முதிர்ந்த தன் பாட்டன் ஆன கெளஷிகனைத் தேடிக் கொண்டு சென்றாள். ருக்மி
அவள் கோபத்தைக் கண்டு பலமாகச் சிரித்தான். பாட்டனிடம் சென்ற ருக்மிணி தன்
கோபத்தைக் கொட்டினாள் அங்கேயும். கிழவரும் சிரித்துக் கொண்டார். "என்
அருமைக் குழந்தாய்! ஆண்கள் செய்வது செய்வதாய் இருக்கட்டும். இது ராஜாங்க
விஷயம், நீ இதில் தலையிடாதே! இப்போ நீ செய்ய வேண்டிய முக்கியமான வேலை
உன்னைக் கைப்பிடிக்கப் போகும் இளைஞன் எவன் எனக் கற்பனை செய்து
கொண்டிருப்பது ஒன்றே." என்றார்.
"பாட்டனாரே, என்னால் அது இயலாது.
ருக்மி எந்த நாட்டு இளவரசனுக்கோ, அல்லது அரசனுக்கோ என்னை விற்க
நினைக்கிறான். அதனால் அவனுக்குக் கிடைக்கப் போகும் அரசியல் ரீதியான
லாபங்களையே அவன் நினைக்கிறான். அவன் எனக்காகப் பார்க்கப் போகும் அரசனோ,
இளவரசனோ அவன் ருக்மியை விட முழு முட்டாளாகத் தான் இருப்பான் நிச்சயமாக.
நான் அப்படி எல்லாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை." ருக்மிணியின்
பதில் திட்டவட்டமாக இருந்தது. கிழவர், "குழந்தாய், நீ அழகாயும்,
இளமையோடும், திறமையோடும், புத்திசாலியாகவும் இருக்கிறாய். உனக்காகச்
சுயம்வரம் நடத்துவதே சரி. அப்போது நீ உனக்கேற்ற மணமகனை நீயே
தேர்ந்தெடுக்கலாம்." என்றார். "தாத்தா, புத்திசாலியான எந்த மணமகனையும் என்
அண்ணன் அழைக்கவே மாட்டான். சுயம்வரம் அவன் ஏற்பாடுகளில் அவன்
அழைக்கிறவர்களை மட்டும் வைத்துத் தானே நடத்துவான்?? என்னை ஒரு அசையும்
சொத்தாக நினைக்கிறான் என் அண்ணன். நான் நிச்சயம் அப்படி இருக்கமாட்டேன்."
Tirumurti Vasudevan
unread,
May 24, 2010, 7:13:31 AM5/24/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
விதர்ப்ப
நாட்டை ஜராசந்தன் ஆக்கிரமிக்க முயன்றபோது கெளஷிகன் அரசியல் விவகாரங்களில்
இருந்து முற்றிலும் ஒதுங்கினார். தன் மகன் ஆன பீஷ்மகனிடம் பொறுப்பை
ஒப்படைத்த அவர் தான் தனி மாளிகையில் வசித்து வந்தார். இப்போது அவரிடம்
தான் ருக்மிணி சென்றாள். தன் தகப்பனைப் பற்றியும், தன் அண்ணனைப் பற்றியும்
குறை கூற ஆரம்பித்த ருக்மிணி கோபமாய்ப் பேச ஆரம்பித்துக் கடைசியில்
கண்ணீரில் முடித்தாள். அவள் கண்ணீருக்கு அணை கட்ட முடியவில்லை. பாட்டனோ,
இவை எல்லாம் ராஜரீகமான விஷயங்கள் எனவும், ஆண்களே புரிந்து கொள்ள முடியும்
என்றும், அவர்களால் தான் இவற்றைச் சமாளிக்க முடியும் எனவும் அவளுக்குக்
கூறினான். எவ்வளவு கூறினாலும் ருக்மிணியின் கோபம் அடங்கவில்லை. தேவகியின்
மைந்தன் கண்ணனுக்கு என்ன நேரிடுமோ எனக் கலங்கினாள்.
ஒரு நாள்
அரண்மனையின் கோயில் பூசாரி ருக்மிணிக்குச் செய்தி அனுப்பினார். செய்தியை
ருக்மிணியின் செவிலித் தாய் மூலம் அனுப்பி இருந்தார். செவிலித்தாய்
ருக்மிணியைப் பிறந்தது முதல் தன் குழந்தை போல் வளர்த்து வந்திருந்தாள்.
அவள் ருக்மிணியிடம் வந்து திரிவக்கரை செய்தி அனுப்பி இருப்பதாய்ச்
சொன்னாள்.
“அம்மா, அம்மா, எவ்வளவு நற்செய்தி கூறுகிறீர்கள்.
திரிவக்கரை என்ன சொன்னாளாம்?” மனதுக்குள் படபடப்பு. கிருஷ்ணனுக்கு ஏதேனும்
நடந்து விட்டதோ??
“ஒரு இளைஞன் திரிவக்கரையின் செய்தியைக் கொண்டு வந்துள்ளான். அவன் பெயர் உத்தவனாம், அவனை உனக்குத் தெரியும் எனச் சொல்கிறானே?”
“ஆஹா,
உத்தவன்?? அம்மா, நிச்சயம் தானே? அது உத்தவனா? என்ன செய்தி கொண்டு
வந்துள்ளான்?” கண்ணனை விட்டு இணை பிரியாமல் அன்றோ இருப்பான் உத்தவன்? அவனே
செய்தி கொண்டு வந்துள்ளான் என்றால் அதில் ஏதோ இருக்கும் நிச்சயமாய்.
“அவன் குருதேவரிடம் சொல்லமாட்டேன் என்று சொல்லி விட்டானே. உன்னை நேரில் சந்தித்துத் தனிமையில் தான் சொல்வானாம்.”
“ஓஹோ,
அதுவும் அப்படியா? அம்மா, அவரைத் தாத்தாவின் மாளிகைக்கு வரச் சொல்லுங்கள்.
குருதேவரிடம் சொல்லி அழைத்து வரச் செய்யுங்கள். நான் அவரை அங்கே
சந்திக்கிறேன். இதோ நான் இப்பொழுதே பாட்டனாரின் மாளிகைக்குச் செல்கிறேன்.”
கெளஷிகனின்
மாளிகைக்குச் சென்ற ருக்மிணி அவரிடம் உத்தவன் வந்திருக்கும் செய்தியையும்,
தேவகியிடம் இருந்து செய்தியைக் கொண்டு வந்திருப்பான் என்றும் சொல்ல,
ருக்மிணியின் மனத்தைப் புரிந்து கொண்ட அவள் பாட்டனார் உத்தவனை அங்கே
தனிமையில் எவரும் அறியா வண்ணம் சந்திக்கச் சம்மதித்தார். இளம் வயதிலேயே
தாயை இழந்த ருக்மிணிக்குப் பாட்டனாரின் இத்தகைய அன்பே அவள் வாழ்க்கையின்
கொஞ்சமாவது ஆறுதலைக் கொடுத்து வந்தது. இதைப் பாட்டனும் அறிந்திருந்தார்.
அன்று மதியம் உத்தவன் வந்தான். பெரியவரை நமஸ்கரித்துத் தன் அறிமுகத்தைச்
சுருக்கமாய் முடித்துக்கொண்ட உத்தவன், “நான் தேவகியிடமிருந்து செய்தி
கொண்டு வந்துள்ளேன். ஜராசந்தனின் படைகளும், ஜராசந்தனும் மதுராவை
நெருங்கிவிட்டார்கள். எந்நேரம் வேண்டுமானாலும் தாக்குதல் நடக்கலாம்.
கிருஷ்ணனின் உயிரையும், பலராமனின் உயிரையும் கேட்டு நடத்தப் போகும் இந்தத்
தாக்குதலில் இருந்து மதுராவையும், அதன் மக்களையும் பிழைக்க வைக்க வேண்டி,
கிருஷ்ணனும், பலராமனும் இரவோடிரவாக மதுராவை விட்டுச் சென்றுவிட்டார்கள். “
ருக்மிணியின்கலக்கம் கொஞ்சம் குறைந்தது. ஆறுதலாய்ப் பெருமூச்சு விட்டாள்.
மேலும் கேள்விக்குறியுடன் உத்தவனைப் பார்க்க அவன் தொடர்ந்தான்.
“அவர்கள்
இருவரும் மஹேந்திர மலைப்பக்கம் பார்கவ பரசுராமரைச் சந்திக்கப் போகின்றனர்.
இன்னும் சில நாட்களில் கால்நடையாக விதர்ப்பாவை அவர்கள் தாண்டிச்
செல்வார்கள். நான் விரைந்து செல்லும் குதிரையில் முன்னால் வந்து இளவரசி
ருக்மிணிக்கு தேவகி அன்னையின் செய்தியைச் சொல்ல வந்துள்ளேன்.”
ருக்மிணியின்
முகம் செக்கச் சிவந்த அந்திவானச் சூரியனைப் போல பிரகாசித்தது. நாணம் அவள்
முகத்தைக் கவ்வியது. இது தேவகியின் செய்தி எனச் சொல்லப் பட்டாலும்
கிருஷ்ணனின் சம்மதத்தின் பேரிலேயே வந்துள்ளது என அவளால் உணர முடிந்தது.
கெளஷிகன் தன் பேத்தியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதில்
தென்பட்ட ஆச்சரியமான உணர்ச்சிப் பிரவாகத்தைக் கண்டு அதிசயித்தான். இந்தப்
பெண் அதிசயமானவள், கிருஷ்ணனின் இதயத்தை இவள் வென்றாளா? இவளைக் கிருஷ்ணன்
வென்றானா? சொல்வது கஷ்டம் தான். உத்தவனைப் பார்த்து, மேலே சொல் என்னும்
பாவனையில் கை அசைத்தான்.
உத்தவன் சற்றே தயக்கத்துடன், “தேவகி
அன்னை, விதர்ப்பாவின் வழியாகச் செல்லும் தன்னிரு குமாரர்களுக்கும்
பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தித் தரும்படி இளவரசி ருக்மிணியிடம்
வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பட்டத்து இளவரசர் ருக்மி ஜராசந்தனின்
படைகளோடு தன்னை இணைத்துக்கொண்டது இந்தத் தேசமெங்கும் பேச்சாய் இருக்கிறது.
இந்நிலையில் விதர்ப்பாவைத் தாண்டிச் செல்லும் தேவகியின் குமாரர்களின்
பாதுகாப்பைப் பற்றி தேவகி அன்னை கவலை கொள்வது நியாயம் அல்லவா?”
ருக்மிணிக்கு
என்ன செய்வது எனப் புரியவில்லை. அவளுடைய சொந்தக் கட்டுப்பாட்டில் ஒரு சிறு
படை அவள் பாதுகாப்புக்கென இருக்கிறது. பாட்டனாரின் முகத்தைக்
கேள்விக்குறியோடு பார்த்தாள். “குழந்தாய், உன் சகோதரனோ, உன் தகப்பனோ
அநுமதிக்கவேண்டும்.” என்று கவலையுடன் கெளஷிகர் சொன்னார். “தாத்தா, நீங்கள்
தான் இதற்கான ஏற்பாடுகள் செய்யவேண்டும். உத்தவரே, என் தாத்தா இதற்கான
ஏற்பாடுகள் செய்வார். என் தமையனின் சகோதரியான நான் உதவி செய்வேன்.” என்று
ருக்மிணி சொல்லக் கடுமையாக மறுத்தார் கிழவர். ருக்மிணிக்குக் கண்ணீர்
பொங்கியது. வழக்கம்போல் கண்ணீர்ப் பிரவாகத்தினூடே அவள், புலம்பினாள்.
“இந்தப்
பரந்த உலகில் எனக்கு உதவி செய்வார் யாருமே இல்லையா? என் தந்தை, என்
தமையன், என் அண்ணி, அவ்வளவு ஏன்? என்மேல் உயிரையே வைத்திருப்பதாய்ச்
சொல்லும் என் தாத்தா! அனைவருமே என்னைக் கைவிட்டுவிட்டனரே? அம்மா, என்
அம்மா, என்னைப் பெற்றுவிட்டு நீ போய்விட்டாயே? என்னையும் கூடவே அழைத்துச்
சென்றிருக்க மாட்டாயா?” தன்னிரு கரங்களாலும் முகத்தை மூடிக்கொண்டு விம்மி
விம்மி அழுதாள் ருக்மிணி. மெல்லிய அவள் தேகமே நடுங்கியது. புயலில்
அசைந்தாடும் கொடி போலக் காட்சி அளித்தாள் அவள். துக்கமாகிய புயல் அவளை
ஆட்டியது. கிழவனாரால் அவள் துயரத்தைக் காணச் சகிக்கவில்லை,. அவளைத் தன்
மடியில் போட்டுக்கொண்டு அவளைத் தேற்றினார். “குழந்தாய், உன் கண்களில் நீர்
வர நான் பார்த்துக்கொண்டிருப்பேனா? என் உயிர் உள்ளளவும் அது நடக்காது. நீ
என்ன கேட்கிறாயோ அப்படியே நடக்கும். இப்போது சந்தோஷம் தானே?” என்று
சொல்லிவிட்டு உத்தவனைப் பார்த்து, “உத்தவா, உன் துணிகளை மாற்றிக்கொண்டு
ஒரு பிராமணனைப் போல் உடை தரித்துக்கொண்டு வா. என்னுடன் தங்கி இரு.
தேவகியின் குமாரர்கள் வந்துவிட்ட செய்தி உனக்குக் கிடைத்ததும், அவர்களை
அழைத்துக்கொண்டு என்னிடம் வா. நான் உதவி செய்கிறேன்.” என்றான்.
Geetha Sambasivam
unread,
May 31, 2010, 4:40:37 AM5/31/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
சில
நாட்களில் காவி உடைகள் தரித்த இரு இளைஞர்கள், தங்கள் நீண்ட குடுமியைத்
தூக்கிக் கட்டிய வண்ணம் இரண்டு துறவிகளைப் போல் குண்டினாபுரம் வந்து
சேர்ந்தனர். ஒரு வைதீக பிராமணன் போல மாறி இருந்த உத்தவன் அவர்களை
வரவேற்று, கெளஷிகனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவர்களை மிகவும்
மரியாதையுடனும், உற்சாகத்துடனும் கெளஷிகன் வரவேற்றான். அவர்களுக்கு
உணவளித்து உபசரிக்கவென இளவரசி ருக்மிணியே அங்கே வந்துவிட்டாள். அவர்கள்
வந்திருக்கும் செய்தி கிடைத்ததுமே ருக்மிணியின் இதயம் எழும்பிக்
குதித்தது. கண்ணனுக்கும், பலராமனுக்கும் உணவளிக்கும்போது கண்ணனின்
முகத்தையே பார்த்தாள் ருக்மிணி. அந்த முகத்தில் தெரிந்த மந்தகாசம், அவளை
அன்புடனும், கருணையுடனும், நம்பிக்கை அளிக்கும் வண்ணமாகவும் பார்த்த
அந்தப் பார்வை அவள் மனதை விட்டு நீங்க மறுத்தது. கண்ணனின் இளமை பொங்கும்
முகம் அவ்வண்ணமே அனைவரையும் பார்த்து அனைவருக்கும் வாக்குறுதியைக்
கொடுத்தது என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். தன்னைப் பார்த்துத் தன்னோடு
பழகும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களோடு மட்டுமே பழகுவதாய் ஒரு பிரமையை
அந்தப் பார்வையும் சிரிப்பும் ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் கண்ணன்
தங்களுக்கு மட்டுமே சொந்தமானவன் என நினைக்கும் வண்ணம் இருந்தது. ஆனாலும்
இப்போது ருக்மிணி பலவிதமான கட்டுக்காவல்களையும், தன் உடன்பிறந்த அண்ணனின்
எதிர்ப்பையும் மீறித் தனக்குச் செய்திருக்கும் உதவிகளை அறிந்த கண்ணன்
அவளுக்கு மிகவும் நன்றி செலுத்தினான் என்றால் மிகையில்லை.
கெளஷிகன்
கண்ணனிடமும், பலராமனிடமும் மதுராவின் நிலைமை பற்றியும், வைவஸ்வதபுரியில்
இருந்து அவர்கள் சாந்தீபனியின் மகனை அழைத்து வந்த விபரங்கள் பற்றியும்
கேட்டறிந்தான். வாய் திறவாமல் அனைத்தையும் கேட்ட ருக்மிணி அந்த
நாககன்னியின் மேல் கோபமும், வெறுப்பும், பொறாமையும் கொண்டாள். எனினும்
அவள் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ளாதது அவளுக்கு ஓர் ஆறுதலையும்
கொடுத்தது. என்றாலும் கெளஷிகன் விடவில்லை. ஏன் அந்த நாககன்னியைத் தடுத்து
நிறுத்தி உன்னோடு அழைத்துவரவில்லை எனக் கண்ணனைக் கேட்க, ஒரு நாககன்னியைத்
திருப்திப் படுத்துவது இயலாத ஒன்று எனக் கண்ணன் பதில் சொன்னான். மேலும்
அவள் எப்போதும் தன் அன்னையின் நினைவாகவே இருப்பாள் என்றும் சொன்னான்.
கெளஷிகனுக்கு இப்போது தன் பேத்தியைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் வந்தது.
“ஒருவேளை அவளுக்குத் தாயே இல்லை எனில்?” என்று கிருஷ்ணனிடம்
கேட்டுவிட்டுக் கோபத்தில் சிவந்த தன் பேத்தியின் முகத்தை ஜாடையாகப்
பார்த்துக்கொண்டான். கண்ணனும் கிழவனின் சீண்டலை ரசித்தவண்ணமே, “ அப்போ
அவள் தன்னைப் பற்றி மட்டுமே நினைத்திருப்பாள். இல்லையா? எல்லா அழகான
பெண்களுமே அப்படித்தானே?” என்ற வண்ணம் கிழவனையும், ருக்மிணியையும் பார்க்க
கெளஷிகன் அடக்க மாட்டாமல் சிரித்தான். பின்னர் தன் பேத்தியைப் பார்த்து,
“அது உனக்காகவே சொல்லப் பட்டது” என்றவன் தொடர்ந்து, “ உன்னை ஒரு முட்டாள்
எனக் கண்ணன் ஒரு போதும் நினைக்கமாட்டான். அவ்வாறு அவனை நினனக்க வைக்க
உன்னால் இயலாது.” என்றான். அதற்கு பலராமன், “கண்ணனுக்குத் தேவை அவன்
விருப்பங்களை, அவன் எண்ணங்களைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு மனைவியே!”
என்றான். ”எனில் அது ஒருகாலும் நடவாத ஒன்று” என கெளஷிகன் கூற, கண்ணனோ,
“பார்க்கலாம், ஒருவேளை கிடைத்தால்?” என்று கூறினான். அவ்வளவில் பேச்சு
நிற்க கெளஷிகன் தான் ஏற்கெனவே செய்த ஏற்பாடுகளின்படி குண்டினாபுரத்தின்
சில பிராமணர்களோடு கண்ணனும், பலராமனும் நகரை விட்டுப் பாதுகாப்பாகச் செல்ல
வேண்டினான். ஒரு பெரிய வண்டியில் கரவீரபுரத்தை நோக்கிச் சென்ற சில
பிராமணர்களோடு, கண்ணனும், பலராமனும் சேர்ந்துகொண்டனர்.
கண்ணனும்,
பலராமனும் சஹ்யாத்ரி மலைத் தொடர் தெரிய ஆரம்பித்ததுமே கூட்டத்தில் இருந்து
பிரிந்தனர். அவர்கள் இருவரும் தங்கள் பயணத்தை மஹேந்திர மலை நோக்கித்
தொடங்கினர். அழகு கொஞ்சும் பாதை. இயற்கை அன்னை தன் பூரண எழிலை அங்கே
காட்டிக்கொண்டு காட்சி அளித்தாள். செல்லும் வழியில் தென்பட்ட கிராமவாசிகள்
இரு இளைஞர்களின் மலர்ந்த முகங்களைக் கண்டதுமே அன்போடும், பரிவோடும்
உபசரித்தனர். விண்ணைத்தொட்ட மலை முகடுகளின் மேல் உலவிய மேகங்களும்,
மேகங்கள் விலகும்போது தென்பட்ட சூரிய ஒளிக்கதிர்களும் கண்ணையும்,
கருத்தையும் கவர்ந்தன. பச்சைக் கரை போல் தென்பட்ட மர வரிசைகள், கூட்டம்
கூட்டமாகக் காட்சி அளித்தன. நடுவே போடப் பட்ட வெள்ளி ஜரிகைபோல தென்பட்ட
அருவிகள். நீல நிற மலைத்தொடர்கள். கண்ணனின் நிறத்தோடு போட்டியிட்டாற்போல்
காட்சி அளித்தது. கண்ணன் அனைத்தையும் நன்கு அனுபவித்தான் என்பது அவன்
முகத்திலிருந்து தெரிந்தது.
பலராமன் சற்று நேரம் கண்ணனையே
நோக்கியவண்ணம் நடந்தான். புன்னகையோடு கண்ணன் அவன் கேட்கப் போகும்
கேள்விக்குக் காத்திருந்தான். “கண்ணா, உனக்கும், எனக்கும் மட்டும் ஏன்
இப்படி எல்லாம் நடக்கிறது? நம் உறவினர்கள் அனைவரும் அவரவர் குடும்பத்தோடு
சந்தோஷமாய்ப் பொழுதைக்கழிக்க, நாம் பார். முதலில் இடைக்குலத்தில்
வளர்ந்தோம். தாய், தகப்பனோடு சேர வந்தும் சேர்ந்திருக்க முடியவில்லை. நாம்
பிறந்த ஊரை விட்டு, தாய், தகப்பனை விட்டு, வளர்த்தோரைப் பிரிந்து,
உறவினரையும் அன்புக்குரியவரையும் பிரிந்து, நாடோடியாகத் திரிகிறோம்.
உன்னைப் பார்த்தால் இதற்கு வருந்துபவன் போல் தெரியவில்லையே?” என்றான்.
கண்ணன்
சிரித்தான். “அண்ணா, நாம் வாழ்க்கையை அதன் போக்கில் அநுபவித்து வாழவெனப்
பிறந்திருக்கிறோம். அதன் முழுமையை நாம் உணர்ந்து வாழ்கிறோம். நம்
உறவினரைப் போல் இருந்தால் இந்த மாதிரியான இடங்களைக் காணவோ, இம்மாதிரியான
மனிதர்களோடு பழகவோ முடியுமா? எத்தனை இடங்கள்? எத்தனை மனிதர்கள்?” கண்ணன்
வியந்தான். மீண்டும் கண்ணனையே உற்றுக் கவனித்த பலராமன், “கண்ணா, ராதையை,
உன் உயிரான, அன்பான, உன் கண்ணின் கருமணியான ராதையை விட்டுப் பிரிந்து
வந்திருப்பதில் உனக்குக் கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா? “
கண்ணன்
சிரித்தான். “ராதையை நான் பிரிந்தேனா? எங்கே பிரிந்தேன்? அவள் என்னோடு என்
கூடவே இருக்கிறாளே? என்னோடு வருகிறாளே? என்னுடனேயே என் உயிரில் கலந்து
அவள் இருப்பதாலேயே நான் எப்போதும் சந்தோஷமாகவே இருக்கிறேன்.” என்றான்
கண்ணன்.
“கண்ணா, உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்.
அல்லது நீ சொல்வது எனக்குப் புரியவில்லை. போகட்டும். நாம் மதுராவை
விட்டுக் கோழைகள் போல் ஓடி வந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது எனக்கு.
அங்கேயே இருந்து எதிர்த்துப் போராடி இருக்கலாம் அல்லவா?”
Raghavan
unread,
May 31, 2010, 10:00:40 AM5/31/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“அண்ணா,
நாம் நம்முடைய வீரத்தையும், சூரத்தனத்தையும் காட்டுவதற்கு இது சரியான
நேரம் அல்ல. நாம் கடைப்பிடிக்கவேண்டிய தர்மம் என ஒன்று உள்ளது. அதைத்தான்
முதலில் நாம் காக்கவேண்டும். தர்மத்தை நிலை நிறுத்தப் பாடுபடவேண்டும். ஒரு
அநாவசியமான எதிரியோடு, அநாவசியமான யுத்தம் செய்து ஜெயிப்பதில் நம் வீரம்
இல்லை. அதில் நாம் திருப்தி அடையவும் கூடாது. இப்போது நாம் யுத்தகளத்தை
விட்டுத் தப்பிய கோழைகள் போல ஒரு சாதாரண மனிதனுக்குக் கூடத்தோன்றலாம்.
தோன்றும். ஆனால் யுத்தம் செய்யாமல் விலகி நிற்பதற்கும் மிகுந்த மனோ
தைரியம் தேவை. இதை நான் விகத்ரு, அக்ரூரர், நம் தந்தை, பாட்டனார்
உக்ரசேனர் ஆகியோருடன் பேசி விவாதிக்கும் முன்னரே முடிவு செய்துவிட்டேன்.
என்னுடைய முடிவு அவர்களுக்கும் உகந்ததாக அமைந்தது.” என்றான் கண்ணன்.
மலையின்
சரிவுகளில் கண்ணனும், பலராமனும் அழகும், அமைதியும் நிறைந்த ஒரு
ஆசிரமத்தைக் கண்டார்கள். அங்கே ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த ஓர் இடையனைக்
கேட்டபோது, சாக்ஷாத் அந்த ஈசனைப் போலவே தோற்றமளித்த ரிஷி பரசுராமர், ஒரு
காலத்தில் தன் கோடரியால் க்ஷத்திரிய வம்சத்தையே பூண்டோடு அழித்தவர் சில
நாட்கள் தங்கி இருப்பதற்காக வந்திருக்கிறார் என்னும் செய்தி கிடைத்தது.
கிருஷ்ணனும், பலராமனும் அங்கே வரப்போவது பற்றியும் பரசுராமருக்கு
கர்காசாரியார் அறிவிப்புச் செய்திருந்தார். கிருஷ்ணனுக்கு பரசுராமரை
நேரில் சந்திக்கப் போகும் ஆவல் மேலிட்டது. அவருடைய சக்தியும், அவர்
சீடர்களிடம் தன் அத்தனை வித்தைகளையும் கற்பித்து வந்தது பற்றியும் பலரும்
பல்வேறுவிதமாகச் சொல்லிக் கேட்டிருந்தான் கிருஷ்ணன். அதோடு பழமையின்
பரம்பரையான கலாசாரங்களை எடுத்துக் காட்டும் ஒரு மொத்த வடிவாகவும் அவர்
திகழ்ந்தார். அனைத்து ரிஷிகளும், மன்னர்களும், சக்கரவர்த்திகளும் அவர்
பெயரையே மிகுந்த மரியாதையுடன் உச்சரித்தனர். அவர் வாழும் இந்தக்
காலகட்டத்தில் தாங்களும் வாழ்வதை ஒரு பெருமையாகக் கொண்டனர். அவரை பார்கவன்
என அழைப்பதன்மூலம் அவரே அந்த ஆதியும் அந்தமுமில்லா பகவான் என நினைத்தனர்.
பரசுராமரின்
முன்னாள் கதையைப் பற்றி நினைத்தான் கிருஷ்ணன். ஆஹா, அவர் வாழ்ந்த காலம்
எத்தகையதொரு காலம்? வசிஷ்டர், விஸ்வாமித்திரர் போன்ற பல ரிஷிகள் அப்போது
இருந்தனரே? புனிதமான சரஸ்வதி நதிக் கரையில் அன்றோ அவர் தகப்பனான ஜமதக்னி
முனிவரின் ஆசிரமத்தில் வேதங்களையும், அஸ்திர, சஸ்திர வித்தைகளையும்
கற்றிருப்பார்? அயோத்தியின் ஸ்ரீராமனுக்கும் முந்தைய காலம் அது. ஆயிரம்
கைகள் உண்டு என்று அனைவராலும் பேசப்படும் காத்தவீர்யார்ஜுனனையே அழித்தவர்
அன்றோ? அனைத்து க்ஷத்திரியர்களையும் கொன்று குவித்துக்கொண்டிருந்தார்
அல்லவா? இந்த உலகே அவர் காலடியில் வந்துவிட்டது. வடக்கே பனி பொழியும்
இமயத்திலிருந்து தெற்கே பிரவாஹித்து ஓடும் நர்மதையையும் தாண்டிய பிரதேசம்
அவர் பேரைக் கேட்டாலே நடுங்கி விதிர் விதிர்த்தது. ம்ம்ம்ம்ம்ம்
வெற்றியின் உச்ச கட்டத்தில் காச்யப முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி தான்
ஜெயித்த அனைத்து நாடுகளையும் அவரிடம் திரும்பக் கொடுத்து, தர்மமும்,
நீதியும் பிறழாமல் ஆட்சி புரியச் சொன்னார்.
பின்னர் அவர் இந்த
மேற்குக் கடற்கரைக்கு வந்து, கடலரசனிடம் தனக்கென ஒரு பூமியைக் கேட்டு
வாங்கினார். அவர் கேட்டதும் கடலரசனும் உள்வாங்கிச் சென்றுவிட்டானாமே? அந்த
பூமியைத் தான் அவர் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் இப்போது. அங்கே தான் நாம்
வந்திருக்கிறோம். இத்தனையும் எழுதும் ஒரு மணித்துளிக்கும் குறைவான்
நேரத்தில் கண்ணனின் நினைவலைகளில் வந்துவிட்டன. இங்கேதான் அந்தப் பிரபலமான
துறைமுகம் ஷூர்பரகா உள்ளது. அங்கே தினமும் நூற்றுக்கணக்கான கப்பல்கள்
வந்து செல்கின்றனவாம். இன்னமும் அவர் ஒரு வாழும் வழிகாட்டியாக
அனைவருக்கும் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் தீபமாக ஒளிர்கின்றார். அவர் காலம்
இன்னும் முடியவில்லை. இப்படிப்பட்ட ரிஷி, முனிவர்கள் வேண்டும்போது
காலத்தைத் தானே முடித்துக்கொள்வார்கள். அவரிடம் வந்து தரிசித்துச்
செல்கின்றவர்களும் சரி, சீடர்களும் சரி அவர் ஒரு வாழும் கடவுள் எனச்
சொல்கின்றனர். மனம் நிறையப் பணிவும் விநயமும் கொண்டு கிருஷ்ணனும்,
பலராமனும் பரசுராமரின் ஆசிரமத்தை அடைந்தனர். சீடன் ஒருவன் வழிகாட்ட,
யாககுண்டத்தின் எதிரே அமர்ந்திருக்கும் பரசுராமரைச் சென்றடைந்தனர்.
மிக
மிக உயரமாகவும், நல்ல பலம் பொருந்தியவராகவும் காட்சி அளித்தார் பரசுராமர்.
அவர் தவத்தினால் மட்டுமின்றி அஸ்திர, சாஸ்திரப் பிரயோகங்களின் பலமும் அவர்
பலத்தைக் கூட்டிக் காட்டியது. அரையில் அணிந்திருந்த புலித்தோல் அவரை
ஈசனைப் போலவே காட்டியது. நீண்ட வெண் தாடி பாதி மார்பை மறைத்திருக்க, அருகே
அனைத்து க்ஷத்திரியர்களையும் பயமுறுத்திய கோடரி, மிகவும் சாதுவைப் போல்
கீழே கிடந்தது. ஒரு கமண்டலமும், பிக்ஷா பாத்திரமும் இருந்தன. சற்றுத்
தொலைவில் சில சீடர்கள் வேத கோஷம் செய்து கொண்டிருந்தனர். சில சீடர்கள்
பசுக்களுக்கு ஆகாரம் அளிக்க, சில சீடர்கள் சற்றுத் தொலைவில் காணப்பட்ட
ஆசிரமக்குடிசைகளின் வாயிலில் அக்னி வளர்த்து ஹோமம் செய்து கொண்டிருந்தனர்.
பலராமனும், கண்ணனும், பரசுராமரைக் கண்டதும் பணிவோடு நமஸ்கரித்தனர்.
பரசுராமரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
“வாசுதேவக்
கிருஷ்ணா, பலராமா, நீங்கள் இருவரும் இங்கே வரப் போகும் செய்தி எனக்குக்
கிடைத்தே உங்களை வரவேற்க நான் இங்கே காத்திருக்கிறேன்” என்ற பரசுராமர்
சிரிப்பு ஒரு குழந்தையினுடையதைப் போல் இருந்தது. ஒரு காலத்தில்
மன்னர்களையும், சக்கரவர்த்திகளையும், அவர்களின் இளவரசர்களையும் கண்டாலே
ஈசனின் மூன்றாவது கண்ணோ என்று சொல்லத் தக்க அளவு நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்த கண்களில் இப்போது சாந்தமும், அமைதியும், அன்பும், பாசமும் காண
முடிந்தது. இருவரையும் பார்த்து, “உங்கள் இருவரின் சாகசங்களைப் பற்றி
நிறையக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது பயணக்களைப்பில் இருக்கும்
நீங்கள் இருவரும் குளித்து, உண்டு, உறங்கிவிட்டு வாருங்கள். நிறையப்
பேசவேண்டும்.” என்றார் பரசுராமர். ஒரு மூத்த சீடர் வந்து இருவரையும்
அழைத்துச் சென்றார். இருவரும் குளித்து தங்கள் அநுஷ்டானங்களை முடித்து,
உணவு அருந்தியதும், உறங்காமல் பரசுராமரைக் காண வந்தனர். தாங்கள் ஏன்,
எப்படி மதுராவை விட்டு வர நேர்ந்தது என்பதை விவரித்தனர்.
Geetha Sambasivam
unread,
Jun 4, 2010, 12:11:06 AM6/4/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
பரசுராமர்
இருவரும் மதுராவை விட்டுக் கிளம்பியதை முழு மனதோடு வரவேற்றார். “மரணம்
என்பது தர்மம் பிறழும்போது மட்டுமே வரவேண்டிய ஒன்று. தர்மத்தின் பாதையில்
செல்லும்போது பிடிவாதமாய் மரணத்தைத் தழுவுவேன் என்பது தர்மத்திலிருந்து
பறந்து வருவதை ஒத்தது. அது வீரமும் அன்று. தற்பெருமை என்றே சொல்லலாம்.
கோழைத்தனம் என்று சொல்கிறவர்கள் சொல்லட்டும். தர்மத்தை நிலைநாட்டும்
யுத்தத்தில் எப்போது யுத்த களத்தில் தோன்றவேண்டும், எப்போது மறையவேண்டும்
என்பதும் முக்கியமான ஒன்றே.” என்று சொல்லி இருவரையும் ஆசீர்வதித்தார்.
“ஆசாரியரே, இந்த உலகம் எங்களை யுத்த பூமியை விட்டுத் தப்பி ஓடிய கோழைகள்
என்றே சொல்லும், சொல்கிறது.” என்றான் கண்ணன்.
“கண்ணா, உலகம் என்ன
வேண்டுமானாலும் நினைக்கட்டும். அது முக்கியமல்ல. யுத்தபூமியில் நின்று
போராட எவ்வளவு மன உறுதியும், தைரியமும், வீரமும் வேண்டுமோ அத்தனையும் அதை
விட்டு வெளியே வரவும் இருக்கவேண்டும். நீ செய்திருப்பது வரவேற்க வேண்டிய
ஒன்றே வாசுதேவ கிருஷ்ணா!” என்றார் பரசுராமர். அவ்வளவில் கண்ணன் தாங்கள்
இருவரும் கரவீரபுரம் சென்று ஸ்ரீகாலவ வாசுதேவனிடம் அடைக்கலம் கேட்கப்
போவதாய்ச் சொன்னான். மேலும் அவர்கள் யாதவகுலத்தின் ஒரு கிளை அவன்
என்பதாலும் உதவுவான் என நம்புவதாயும் கூறினான். பரசுராமரோ, “ஸ்ரீகாலவனால்
உங்களுக்கு உதவி எதுவும் கிட்டாது. அவன் சுயநலமே உருவெடுத்தவன். திமிர்
அதிகம். இந்த உலகிலேயே அவனை விட்டால் வேறு யாரும் உயர்வு என
ஒப்புக்கொள்ளாதவன். தன்னைத் தானே அந்தப் பரமாத்மா என்றும் அவனே கடவுள்
எனவும் நினைத்துக்கொண்டிருக்கிறான். தன்னையே அந்தப் பர வாசுதேவன் என
அறிவித்துக்கொள்கின்றான். அவன் நாட்டில் உள்ள அத்தனை படித்த
மனிதர்களையும், வேத சாஸ்திரங்கள் அறிந்த பிராமணர்களையும் ஒதுக்கித் தள்ளி
விட்டான். அவனைக் கடவுள் என்றும் பர வாசுதேவன் என்றும் சாக்ஷாத் அந்த
மஹாதேவனே அவன் தான் எனவும் ஒப்புக்கொண்டால் ஒரு வேளை உனக்கு அடைக்கலம்
கொடுக்கலாம். ஆனால் அதற்கும் அவன் ஒரு விலையோ அல்லது காரணமோ
வைத்திருப்பான். அந்த விலை ஜராசந்தனிடம் உன்னை ஒப்படைப்பதாய்க் கூட
இருக்கலாம். “ என்றார் பரசுராமர். “மேலும் வாசுதேவ கிருஷ்ணா, அவன் ஒரு
சிறந்த வில்லாளி என்பதை மறவாதே!”
“ஆசாரியரே, கரவீரபுரத்தில்
எங்களுக்கு அடைக்கலம் கிடைக்காதெனில் நாங்கள் எங்கே செல்வது?” கண்ணன்
பரசுராமரை ஆலோசனை கேட்டான். பரசுராமர் சற்றே நிதானித்தார். பின்னர்,
“கண்ணா, ஜராசந்தன் நீங்கள் இருவரும் தப்பிவிட்டதைப் பற்றி எப்படி
எதிர்கொள்வான் என நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
“நிச்சயமாய்
அவனுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். ஆனால் இதற்காக மதுராவின் மற்ற
யாதவர்களைக் கொடுமை செய்வான் எனத் தோன்றவில்லை. எங்களை உயிருடன் ஒப்படைக்க
வேண்டித் தானே அவன் கோரிக்கை? ஆகவே அவன் எங்களை விட்டுவிடுவான் என
எனக்குத் தோன்றவில்லை. நாங்கள் எங்கே செல்கிறோம், எங்கே அடைக்கலம்
கேட்கிறோம் என்பதை எல்லாம் ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டு எங்களைப்
பழிவாங்கவே நினைப்பான். ஓட ஓட எங்களை விரட்டுவான் என்றே நினைக்கிறேன்.”
என்றான் கண்ணன்.
“கண்ணா, இவ்வளவு தூரம் நாட்டின் மேற்குக் கோடியில்
உங்களை அவன் தேடிக்கொண்டு வருவது அவ்வளவு சுலபம் அல்ல. அதை அவனும்
அறிந்திருப்பான் அல்லவா?” என்றார் பரசுராமர்.
“இருக்கலாம்
ஆசாரியரே! ஆனால் என் மாமாவான கம்சனை நான் கொன்றதனால் ஜராசந்தனின் கெளரவமே
பாழ்பட்டு விட்டதாய் அவன் நினைக்கிறான். கம்சன் அவனுடைய படைகளுக்குத்
தளபதி மட்டுமல்ல, அவன் நம்பிக்கைக்கு உகந்தவன், மேலும் அவன் இரு பெண்களின்
கணவன். ஜராசந்தனின் மதிப்புக்கும், மரியாதைக்கும், பாசத்துக்கும் உகந்த
மாப்பிள்ளை. கம்சன் மூலமே மற்ற அரசர்களிடம் தன் பிடியை இறுக்கிக்
கொண்டிருந்தான் ஜராசந்தன். இப்போதோ? கம்சன் இறந்ததும், மற்ற அரசர்களிடம்
தன் பிடி தளர்ந்துவிட்டதாயும் அவனுக்கு ஓர் எண்ணம். கம்சனின் மரணம் அவனை
உலுக்கிவிட்டது. மேலும் எங்கள் தலைமையின் கீழ் மதுரா நகரம் இருந்தால்
அவனுடைய மகத சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர ஆபத்து என்ற எண்ணமும் அவனுக்கு
இருக்கலாம்.”
“நீ சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன் வாசுதேவ
கிருஷ்ணா. ஆனால் நான் உன்னிடத்தில் இருந்தால் இப்போதைய இந்த நிலைமையில்
எந்த அரசனிடமோ, இளவரசனிடமோ அடைக்கலம் தேடிப் போகமாட்டேன். நீ சென்றாயானால்
அவர்களின் சுயலாபத்திற்கு உன்னைப் பயன்படுத்திக்கொள்வார்கள். எவ்வளவு
நல்லவர்களாக இருந்தாலும் தற்போதைய நிலைமையில் எவரையும் நம்ப முடியாது. நீ
உன்னை நீயே பலப்படுத்திக்கொள்ளவேண்டும். உன் சொந்த முயற்சியால் நீ
பலப்படுத்திக்கொண்டு அனைவரையும் வெல்வாயாக. “ என்றார்.
“அதுவே என்
விருப்பமும்” என்றான் கண்ணன். பரசுராமர் கண்ணனையும் , பலராமனையும்
கடற்கரையில் இருந்த கோமந்தக மலைக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறார்.
அந்த இடமும், அந்த மலையின் சமவெளிகளும் கண்ணனுக்குப் பாதுகாப்பை
அளிக்கவல்லது என்றும் கூறினார். அது முற்றுகையைத் தாங்கும் வல்லமை கொண்டதா
எனக் கண்ணன் கேட்கப் பரசுராமர் கூறுகிறார்: கிருஷ்ணா, அவ்வளவு எளிதில் அதை
அடைய முடியாது. குதிரைகளோ, யானைகளோ, அல்லது ரதங்கள் மூலமோ அதன் மீது
ஏறுவது என்பது இயலாத ஒன்று. மேடுகளும், பள்ளங்களும் நிறைந்த அதன் மீது
ஏறுவதும் கஷ்டம். செங்குத்தாகவும் குறுகலுமான மலைப்பாதை." தொடர்ந்தார்
பரசுராமர். "ஆனால் மிக அழகான இயற்கையின் எழில் கொஞ்சும் இடம். அங்கே
வாழும் மக்களும் மிகவும் அன்பும், பண்பும் நிறைந்தவர்கள். எவருக்கும்
தீங்கு நினையாதவர்கள். அவர்களைக் "கருடர்கள்" என அழைப்பார்கள். ஏனெனில்
அவர்கள் யுத்தம் செய்ய நேரிட்டால் அப்போது கழுகுகளைப் போலவும், கருடனைப்
போலவும் முகமூடி அணிந்து கொண்டு செல்வார்கள். ஒரு முறை அவர்களுக்கு நான்
ஒரு நன்மை செய்தேன், ஆகையால் என்னிடம் மிகவும் பக்தி கொண்டவர்கள். என்
சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர்களின் தலைவன் மிகவும் நல்லவன், அவன் உன்னை
ஒரு பொழுதும் காட்டிக்கொடுக்க மாட்டான். உனக்கு உதவியே செய்வான்."
என்றார்.
Geetha Sambasivam
unread,
Jun 8, 2010, 4:23:13 AM6/8/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
பரசுராமரின்
ஆலோசனைப்படியே கண்ணனும், பலராமனும் அவருடனேயே கோமந்தக மலைப்பகுதிக்குச்
சென்றனர். அவர்கள் ஓர் அடர்ந்த காட்டைக் கடந்ததும் எதிரே தோன்றியது ஒர்
உயர்ந்த அழகான எளிதில் ஏறமுடியாத ஒரு மலைத் தொடர். மலையின் பெரிய பெரிய
மரங்களும் அதில் வசிக்கும் பட்சிகளின் வர்ணஜாலமானக் கூச்சல்களும் மனதை
நிறைத்தன. நேராகவும், செங்குத்தாகவும் நின்ற அந்த மலையில் ஏறுவது கடினமான
ஒன்று. எனினும் பரசுராமர் முன்னே செல்ல கண்ணனும், பலராமனும் பின்
தொடர்ந்தனர். பலராமனுக்கு ஆவலை அடக்க முடியாமல், பரசுராமரிடம், “எங்கள்
தெய்வமே, அத்தனை மன்னர்களையும் வென்று இந்த பூமியையே உங்கள் காலடிக்குக்
கீழ் கொண்டு வந்தும் ஏன் நீங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள்?”
என்று கேட்டான். மேலும் தொடர்ந்து, “ஆஹா, உங்கள் போர் ஆசையை நீங்கள்
தணித்துக்கொள்ளாமல் தொடர்ந்திருந்தீர்களானால்?? இந்த பூமியில் இவ்வளவு
தைரியமாக எந்த அரசனும் நடமாட முடியுமா?? அனைவரும் சாம்ராஜ்யப் பேராசை
பிடித்து அலைவார்களா? ஆஹா, இந்த ஜராசந்தன்!! அவனுக்குத் தான் இத்தனை
துணிவு வந்திருக்குமா?”
“உண்மைதான் பலராமா! அனைவருக்கும் இது ஏதோ
புதிராகவே இருந்து வருகிறது. உண்மைதான், நான் க்ஷத்திரியர்களை எதிர்த்துப்
போரிட்டு அவர்களை வென்றேன் தான். ஆனால் எதற்காக?? கார்த்தவீர்யார்ஜுனனை
நான் கொன்றதுக்கு ஒரு காரணம் உண்டல்லவா? என் தந்தையைக் கொன்றதோடு அல்ல.
அவன் அழிக்க முடியாத சூரிய, சந்திரர்களின் வான் பயணத்துக்கு ஒரு சவாலாக
இருந்தான். அனைத்து தேவர்களையும் தூசு போல் கருதினான். அவனுடைய ஆயிரம்
கைகளினாலும் மிகவும் பலம் பொருந்தியவனாக இருந்ததோடு அல்லாமல், நம் சநாதன
தர்மத்தின் கோட்பாடுகளைப் பரிகசித்தான். அவற்றைச் சற்றும் மதிக்கவில்லை.
இவை எதுவும் புனிதமானதாக அவன் கருதவில்லை. அவனைத் தவிர மற்ற யாரையும்
உயர்வாக அவன் எண்ணவில்லை. அனைத்தும் அவனுக்கு அடங்கியவையாக எண்ணினான். “
“மதிப்புக்கும்,
மரியாதைக்கும் உரிய வசிஷ்டரின் ஆசிரமத்தை அழித்தான். அதை முற்றிலும்
எரித்தான். என் தந்தையும், தவங்கள் செய்து சிறந்த நிலையை அடைந்தவருமான
ஜமதக்னி முனிவரைக் கொன்றான். எங்கள் ஆசிரமத்தையும் அழித்தான். நம்மை
உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி அஞ்சி ஓடச் செய்தான். அவன் அழிக்கப்
படவேண்டியவன். அதுவே முறை. அதனாலேயே அழிக்கப் பட்டான்.” தீர்மானமாய்ச்
சொன்னார் பரசுராமர். “ஆஹா, அப்படியா? இது எங்கனம் நடந்தது? அப்போது நம்
அரசர்களும், அவர்களின் வீரர்களும் என்னதான் செய்துகொண்டிருந்தனர்??”
கண்ணன் ஆவலுடன் கேட்டான்.
“நம் அரசர்கள் ஒருவருக்கொருவர் தங்களில்
எவர் பெரியவர் எனச் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். அதற்கே அவர்களுக்கு
நேரம் போதவில்லையே? இந்தக் கார்த்த வீர்யார்ஜுனன் வீரன் மட்டுமல்ல. அவன்
நேர்மையற்ற முறையில் அரசாளவும் செய்தான். சூதிலும், வஞ்சனையிலும் சிறந்து
விளங்கினான். வன்முறையிலும், தான் தான் பெரியவன் என்று எண்ணுவதிலும்
சிறந்து விளங்கினான். தவங்கள் புரிவதிலும், யாகங்கள் செய்தும், வாழ்க்கையை
மேம்படுத்த வேண்டியவர்களை இகழத்தக்க ஒரு புழுவாக மாற்ற எண்ணினான்.
அனைவரும் அவன் புகழைப் பாடுவதற்கே பிறந்திருக்கிறார்கள் என எண்ணும்படி
நடந்து கொண்டான்.””
“ம்ம்ம்? அனைத்தையும் ஒரு வாறு சமாளித்துக் கடந்து வந்திருக்கிறீர்கள் அன்றோ?”
“ஆம்,
இந்த உலகம் அமைதியாக இருக்கவே விரும்புகிறது. இதன் ரீதியில் செல்லவே
நினைக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் ஜப, தபங்களைச் செய்து கொண்டு,
சத்தியத்தை நோக்கி இயற்கையின் வழியில் செல்லவே விரும்புகிறார்கள். ஆகவே
இத்தகைய அசுரர்கள் அழிக்கப் படவேண்டியவர்களே. இப்படித் தான் ஹைஹையர்கள்
தொந்திரவு கொடுக்கவே நான் அவர்களையும் அழிக்க வேண்டியதாயிற்று. இந்தப்
பரந்த பூவுலகில் அமைதியாகவு, நிம்மதியாகவும் வாழ விரும்புகிறவர்களுக்காக
அத்தகையதொரு அமைதியையும், நிம்மதியையுமே நான் கொடுக்க விரும்பினேன்.
எனக்கு அரச பதவியோ, சக்கரவர்த்தி என்ற பெயரோ தேவையில்லை. அரசபோகத்தில்
ஆழ்ந்திருக்கவும் நான் விரும்பவில்லை. அரசாட்சி புரியவும் எண்ணவில்லை. என்
கடமை இந்த பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே. அதற்காகவே நான் பிறந்ததாக
உணர்ந்தேன். ஆகவே அதைச் செய்து தர்மத்தை நிலை நாட்டினேன்.”
“ஆஹா,
குருவே, எத்தகையதொரு உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறீர்கள்? அனைத்து
ராஜ்யங்களும் உங்கள் கையில். இருந்தும் அவற்றைத் திருப்பிக்
கொடுப்பதென்றால் எவ்வளவு நெஞ்சுறுதி வேண்டும்? ஆனால் நீங்கள் வெகு சுலபமாக
அதைச் செய்து காட்டிவிட்டீர்கள். அற்புதமான விஷயம் இது.” என்றான் கண்ணன்.
“ஒரு
அதிசயமும் இல்லை. நான் ஆயுதங்களைத் தரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தரித்தேன். யுத்தம் செய்தேன். க்ஷத்திரிய தேஜஸ் மங்கிப் போய் இருந்தது.
அது மங்கலாம் எப்போதேனும் ஒரு சில முறைகள். அது சில சமயங்களில் தேவையும்
கூட. எனினும் மற்றொரு நல் அரசனால் அது திரும்ப ஜொலிக்க ஆரம்பிக்கும்.
ஆனால் பிரம்ம தேஜஸ் மட்டும் எப்போதுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
சற்றேனும் மங்கக் கூடாது. இந்த ஞான தீபம் எப்போதுமே ஒளிரவேண்டும். அப்போது
தான் இந்த பூமி சரியான பாதையில் செல்லும். இவ்வுலகில் தர்மமும்
நிலைநாட்டப் படும். “ என்றார் பரசுராமர். அதற்குள்ளாக அவர்கள் மலையின் ஒரு
பாகத்தின் உச்சிக்கு வந்து சேர்ந்திருந்தனர். அங்கே ஒரு சமவெளி
காணப்பட்டது. சற்றுத் தூரத்தில் மக்கள் குடியிருப்புகளும் தெரிந்தன.
பரசுராமரின் உருவத்தைத் தூரத்திலேயே கண்ட சில குடி மக்கள் கோஷங்கள் எழுப்ப
உடனேயே அந்தக் கிராமத்து மக்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
Geetha Sambasivam
unread,
Jun 11, 2010, 5:29:28 AM6/11/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
மேலே நாம் தொடரும் முன்னர் இந்த கோமந்தக மலையில் கண்ணன் அடைக்கலம் தேடியதைப் பற்றியும், கோமந்தகத்தைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு:
ஸ்ரீமத்
பாகவதமோ அல்லது விஷ்ணு புராணமோ கண்ணன் மதுராவில் இருந்து தப்பி வந்ததை
மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர, கண்ணன் முதல் அடைக்கலத்திற்கு கோமந்தக
மலைப்பகுதியை நாடிச் சென்றது பற்றிச் சொல்லவில்லை. ஆனால் ஹரிவம்சத்தையே
திரு முன்ஷி பெரும்பாலும் ஆதாரமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆகவே
ஹரிவம்சத்தில் குறிப்பிட்டிருப்பதாய்க் கூறுகின்றார். ஹரிவம்சத்தில்
குறிப்பிடப் படும் கோமந்தகப் பகுதி தற்போதைய கோவா மாநிலமாக இருக்கலாம்
என்றும் சொல்கிறார். அல்லது மேற்குக் கடற்கரை ஓரம் உள்ள மேற்குத்
தொடர்ச்சி மலைத்தொடரான சஹ்யாத்திரி மலையின் ஒரு சிகரமான
மகேந்திரமலைப்பகுதியின் ஏதானும் ஓர் இடமாகவும் இருந்திருக்கலாம். மேற்கே
வந்திருக்கிறான் கண்ணன் அடைக்கலம் தேடி. மேலும் இந்த கோமந்தகப் பகுதியில்
கண்ணன் வசித்தபோதே கருடனின் நட்பும் அவனுக்குக் கிடைக்கிறது.
புராணங்களின்படியும், பாகவதத்தின் படியும் கருடனை ஒரு பறக்கும் பறவையாகச்
சித்தரித்திருந்தாலும், ஹரி வம்சத்தின் அத்தியாயங்களில் கருடனை ஒரு
கழுகைப் போன்ற பறக்கும் சக்தி கொண்ட மனிதனாகவே காட்டப் பட்டுள்ளது.
மேலும்
இருவரும் தங்களுக்கான சிறப்பு ஆயுதங்களையும் இங்கேயே பெறுகின்றனர். மேலும்
பலராமனுடைய மது குடிக்கும் வழக்கத்தைப் பல புராணங்கள்
சித்திரித்திருந்தாலும் ஹரி வம்சத்தின் கோமந்தக மலைப்பகுதி வாசத்தைப்
பற்றிய அத்தியாயங்களிலேயே அவன் எவ்வாறு மதுவின் அடிமையாக மாறினான்
என்பதைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கோமந்தக மலைப்பகுதியிலிருந்த மனதை
மயக்கும் கடம்ப மரங்களின் பூக்களின் நறுமணத்தால் கவரப்பட்ட பலராமன்
அவற்றிலிருந்து எடுக்கப் பட்ட மதுவின் இனிமையாலும் கவரப்பட்டான் என்கிறது
ஹரிவம்சம். மதுவை “காதம்பரி” என்றும் கூறுகிறது ஹரிவம்சம். இனி இங்கே
அடைக்கலம் புகுந்த இளைஞர்கள் இருவரையும் கோமந்தக மலையும், அதன்
குடிமக்களும் காப்பாற்றினார்களா இல்லையா என்பதைப் பார்க்கலாமா? ************************************************************************************
பரசுராமர்
வந்திருக்கும் செய்தியைக் கேட்ட கருட இனத்து மக்கள் அனைவரும் அவர் வரவைக்
குறித்து தங்கள் மரியாதையைத் தெரிவிக்கும் நிமித்தம் அனைவரும் கருடனைப்
போன்ற நீண்ட மூக்குக் கொண்ட முகமூடிகளை அணிந்து வந்து பரசுராமரை
வணங்கினார்கள். அவர்களின் தலைவனும் தன்னுடைய மகன்களுடன் வந்தான்.
பழங்களும், தேங்காய்ப்பாலும் உணவாக அளிக்கப் பட்டது. பரசுராமர் அதன்
பின்னர் கண்ணனையும், பலராமனையும் பற்றி கருடர்கள் தலைவனுக்கு எடுத்துக்
கூறிவிட்டு விடைபெற்றார். அப்போது கண்ணனிடம் அவர் கூறினார்:
“வாசுதேவ
கிருஷ்ணா, நீ யார் என்பதையும், உன் கடமைகள் என்னவென்பதையும் நான் நன்கு
அறிந்திருக்கிறேன். இதை மட்டும் மறக்காதே! நீ இவ்வுலகிற்கு ஆற்றவேண்டிய
முக்கியக் கடமை ஒன்றிருக்கிறது. அதற்காகவே நீ பிறந்திருக்கிறாய். தர்மம்,
நியாயம். அதை நீ நிலைநாட்டவேண்டும். மறந்தும் அதர்மத்தின் பின்னால்
சென்றுவிடாதே. உன் யாதவ குல மக்கள் உன்னைக் கடவுள் எனக் கொண்டாடுவதில்
தவறே காணமுடியாது. அவர்கள் உன்னிடம் மிகுந்த நம்பிக்கை
வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் சொல்வது சரியே. ஆனால் நீ உன்னிடமே
நம்பிக்கை வைக்க மறக்காதே. உன்னிடம் நீ நம்பிக்கை வைத்து, நீயே உண்மையின்
சொரூபமாக மாறினால் ஒழிய நீ கடவுளாக ஆக முடியாது என்பதையும் நினைவில் வை.
இனி நான் உன்னைப் பார்ப்பேனா என்பது சந்தேகமே. ஆனால் என் ஆசிகள் எப்போதும்
உனக்கு உண்டு. ஒருவேளை உனக்கு என் உதவி தேவைப்பட்டால் இந்த கருடர்களில்
ஒருவனை அனுப்பு. நான் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு
உண்டு. “
இரு கைகளையும் தூக்கி இருவரையும் ஆசீர்வதித்த பரசுராமர்
தன்னுடைய இணை பிரியா ஆயுதமான கோடரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து
கிளம்பினார். அவர் உருவம் மறையும் வரையில் கண்ணனும், பலராமனும்
பார்த்துக்கொண்டு நின்றனர். **************************************************************************************
அதற்குள்
மதுராவில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போமா?? சக்கரவர்த்தி ஜராசந்தனின்
படைகள் யமுனைக்கரையில் தண்டு இறங்கினர். தேர்ப்படையிலேயே குறைந்தது ஐநூறு
தேர்களும் அவற்றை ஓட்டிப் போர் புரிய அதிரதிகளும், மஹாரதிகளுமாக
இரண்டாயிரம் பேர்களும் இருந்ததாய்ப் பேசிக்கொண்டனர். இதைத் தவிர
யானைப்படைகளும், குதிரைப்படைகளும் காலாட்படைகளுமாக நிறைந்து காணப்பட்டு
யமுனைக்கரையே அல்லோலகல்லோலப் பட்டது. யானைகளுக்குத் தண்ணீர் காட்டுவோரும்,
குதிரைகளைக் குளிப்பாட்டுவோரும், தாங்களும் அமிழ்ந்து குளிப்பவர்களுமாக
ஒரே களேபரமாய் இருந்தது. இன்னொரு பக்கம் ஆயுதங்கள் குவிந்து கிடந்தன.
வாள்களும், வேல்களும், கோடரிகளும், சூலங்களும், குத்தீட்டிகளும் அந்த
மத்தியான வெயில் பட்டு பளீர் பளீர் என மின்னலைப் போல் ஒளி வீசியதானது,
கோடைக்காலங்களில் திடீர், திடீர் என ஏற்படும் மேல்வானத்து மின்னல்களை
நினைவூட்டியது.
அங்கே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் தன்
கூடாரத்தை நியமிக்கச் சொல்லி இருந்த ஜராசந்தன் கூடாரத்துக்கு வெளியே
ஆலமரத்தடியிலேயே தன் மதிய உணவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன்
உயரம் பிரமிக்க வைத்தது எனினும், அவன் உடலும் அதற்கேற்றவாறு
அமைந்திருந்ததால் உயரத்தைக் குறைத்தே காட்டியது. ஒரு காலத்தில் தேர்ந்த
மல்யுத்த வீரனாய் இருந்தவன் என்பதைக் காட்டும் வண்ணம் இறுகிய தசைநார்கள்
காணப்பட்டாலும், வயதின் காரணமாய் ஏற்பட்டிருந்த சிறு தொந்தியானது
அதெல்லாம் பழங்கால நிகழ்வு எனச் சொல்லாமல் சொல்லியது. அவன் முகமோ
இறுகிக்கிடந்தது. அவனுக்குத் தேவைப்படும்போது உணர்ச்சிகளை
வெளிக்காட்டியும், தேவையில்லாச் சமயம் உணர்வுகளைத் துளிக்கூடக்
காட்டாமலும் அவனோடு பூரண ஒத்துழைப்புச் செய்தது. தற்சமயம் அவன்
குரோதத்தின் உச்சத்தில் இருந்தான். அவன் முகமும், தீ போல் ஜொலித்த
இருகண்களும் அதை நன்றாகவே சுட்டிக் காட்டின.
ஹா! ஹா! பாஞ்சால
நாட்டு அரசன் துருபதன் தன் நாட்டின் வழியே ஜராசந்தனும், அவன் படைகளும்
செல்ல அநுமதி தர மறுத்துவிட்டான். ஒரு பெரிய சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியின்
மகிமைக்கு நேர்ந்த இழுக்கு! அவமதிப்பு. இதுவே வேறொரு சமயமாக இருந்தால்
பாஞ்சாலத்தினுள் புகுந்து அந்த துருபதனின் தலைநகரான காம்பில்யத்தையே
எரித்துச் சுட்டுப் பொசுக்கி இருக்கலாம். ஆனால், ஆனால்! ஹா! ஹா! என்ன ஒரு
தர்மசங்கடமான நிலை! இருக்கட்டும், ஆனாலும் சமாளிக்கலாம். நான் யார்?
ஜராசந்தன்!
Geetha Sambasivam
unread,
Jun 16, 2010, 1:51:59 AM6/16/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
“ம்ம்ம்ம்ம்ம்,
துருபதன் தன்னுடைய அகம்பாவத்துக்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும். அவனைத்
தனியாக கவனிக்கலாம். இப்போது அந்த வசுதேவனின் இரு மகன்களையும்
அழிக்கவேண்டிய காரியத்தை மட்டுமே இப்போது கவனிக்க வேண்டும். அதை
நினைத்ததுமே அவன் முகத்தில் ஒரு கொடூரமான சிரிப்பு வந்தது. அந்த இரு
மாட்டிடையச் சிறுவர்களும், சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியான ஜராசந்தனின் ஈடு
இணையற்ற மறுமகன் கம்சனை அன்றோ கொன்றுவிட்டனர். இதற்குப் பழி வாங்கியே
தீரவேண்டும். அதுவும்கம்சனுக்கு எந்த இடத்தில் சாவு நேரிட்டதோ அங்கேயே இரு
இடைச்சிறுவர்களும் கை, கால்கள் வெட்டப்பட்டுத் துண்டு துண்டாய்க்
கொல்லப்படவேண்டும். அதில் சந்தேகமே இல்லை.’ சற்றுத்தூரத்தில் மதிய உணவு
தயாரிக்கப் பட்டுப் பரிமாறப்பட்டிருந்த்து. பெரிய பெரிய வாழை இலைகளும்,
தாமரை இலைகளும் உணவு பரிமாறுவதற்காக்க் கொண்டுவரப்பட்டிருந்தன. பெரிய வாழை
இலையில் ஜராசந்தனுக்கான உணவு தயாராக இருந்தது. அவனுடன் உணவு உட்கொள்ளும்
அதிகாரிகளும், படைத்தளபதிகளும், அமைச்சர் பெருமக்களும் அவன் வரவுக்காய்க்
காத்திருந்தனர். அதோடு அவனுடன் நட்புப் பூண்டு அவன் உதவிக்கு வந்திருந்த
மற்ற அரசர்களும் உணவு உட்கொள்ள அவனுக்காக்க் காத்திருந்தனர். ஆனால் இது
என்ன?? சேதி நாட்டு அரசன் தாமகோஷனைக் காணவில்லையே? சாதாரணமாக அவன்
ஜராசந்தன் வருவதற்கு அரை நாழிகை முன்னாலேயே வந்துவிடுவானே?ம்ம்ம்ம்??? ஏதோ
எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாய்த் தோன்றியது ஜராசந்தனுக்கு.
யோசனையுடன்
எழுந்த ஜராசந்தன், தன்னிரு மெய்க்காப்பாளர்கள் பின் தொடர உணவு உண்ணும்
இடத்துக்குச் சென்றான். அங்கே சுற்றிலும் வட்டமாய்ப் போடப் பட்டிருந்த
இருக்கைகளில் மத்தியில் உள்ள இருக்கே சற்றே உயரமாய் ஜராசந்தன்
அமருவதற்கெனக் காத்திருந்த்து. ஜராசந்தன் தன்னிருக்கையில் சென்று
அமர்ந்தான். அனைவரும் அவனுக்கு முகமன் கூறி வரவேற்று, அவனை வணங்கினார்கள்.
ஒரு தலையசைப்பில் அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜராசந்தன் சால்வனைப் பார்த்து,
“தாமகோஷன் இன்னும் வரவில்லையா?” என்று வினவினான். “அல்லது இந்த விருந்தைச்
சாப்பிட்டதில் உடல்நிலை சரியில்லையா?”” தன் ஹாஸ்யத்தை ரசித்துத் தானே
சிரித்துக்கொண்டான் ஜராசந்தன். சால்வன் அது எதையும் கவனிக்காதவனைப் போல,
“சக்கரவர்த்தி, தாமகோஷர் சற்று நேரம் கழித்து வருவதாய்ச் செய்தி அனுப்பி
உள்ளார்.” என்று சொன்னான். சால்வன் ஜராசந்தனின் நம்பிக்கைக்கு உகந்ததொரு
வீரன், என்பதோடு அல்லாமல் ஜராசந்தன் நினைப்பதைச் செய்து முடிப்பவனும் கூட.
அதற்குள், மகதத் தளபதிகளில் ஒருவர், தன்னிருக்கையில் இருந்து எழுந்து இரு
கைகளையும் கூப்பிய வண்ணம், “மதுராவில் இருந்து சமாதானத்திற்கான தூதுவர்கள்
வந்திருக்கின்றனர்.” என்று தெரிவித்தான்.
“என்ன? சமாதானமா?
மதுராவில் இருந்தா? “ஜராசந்தன் ஆச்சரியமும், கோபமும் அடைந்தான். “என்ன
பைத்தியக்காரத் தனம் இது? எனக்கு அவ்விரு இளைஞர்களின் துண்டாக்கப்பட்ட
தலைகளே வேண்டும். சமாதானமாம், சமாதானம்! எவர் கேட்டனர்?” யாரும் வாயையே
திறக்கவில்லை. மெளனமாய் இருந்தனர். தன்னுடைய கோபமும், அவநம்பிக்கையும்
அகலாமலேயே ஜராசந்தன் உணவு உண்ண ஆரம்பித்தான். தாமகோஷனின் தாமதமான வருகையை
அவன் ரசிக்கவில்லை. என்னதான் வெளிப்படையாக தாமகோஷன் தன் பக்கம்
இருந்தாலும், அவனுடைய முழு ஆதரவும் உள்ளூர யாதவர்களுக்கு மட்டுமே,
குறிப்பாக கிருஷ்ண வாசுதேவனுக்கே என்று ஒரு சந்தேகம் ஜராசந்தன் மனதில்
உண்டு. அதோடு இல்லாமல் தாமகோஷனின் மனைவி வசுதேவனின் தங்கையும் ஆவாள்.
அவளுடைய அதிகாரமும், செல்வாக்கும் ஜராசந்தன் அறிவான். உள்ளூர இந்த தாமகோஷன்
வேறே என்ன ரகசியத்திட்டங்கள் தீட்டுகிறானோ?
அதற்குள் தன்
தாமதத்துக்கான காரணத்தைக் கூறிக்கொண்டே தாமகோஷன் அங்கே வருகை
புரிந்துவிட்டான். ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தான் ஜராசந்தன். மெதுவாகவும்,
அதே சமயம் நிதானமும், உறுதியும் கலந்த குரலில் பேசினான் தாமகோஷன்.
சமாதானத்துக்கான தூதுவர்கள் தாமகோஷனிடன் வந்தனரா என ஜராசந்தன் வினவ,
அவர்கள் ஜராசந்தனுக்கே செய்தி கொண்டு வந்திருப்பதாய் தாமகோஷன்
தெரிவித்தான். “ஆஹா, அதுவும் அப்படியா? அப்போ அந்த இரு இடைச்சிறுவர்களின்
தலைகளையும் வெட்டிக் கொண்டு வந்துவிட்டனரா?” ஜராசந்தனின் குரலில் எல்லையற்ற
குதூஹலம் தாண்டவமாடியது.
“இல்லை அரசே, இரு இளைஞர்களும், இரவோடிரவாக
மதுராவை விட்டே ஓடிவிட்டனராம்.” தாமகோஷன் சொன்னான். அவன் குரலில் இருந்து
அவன் உணர்வு என்ன என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் ஜராசந்தன்
வியப்பின் எல்லைக்கே சென்றுவிட்டான்.
“ஓடிவிட்டனரா? என்ன நிஜமாகவா?”
என்று உரத்த குரலில் கேட்டான் ஜராசந்தன்.
“அக்ரூரர்,
பிருஹத்பாலனோடும், கடனோடும் வந்துள்ளார் அரசே, பிருஹத்பாலன் அரசனின் பேரன்
ஆவார். மேலும் அக்ரூரரைப் போன்ற ஒரு தபஸ்வி பொய் பேசமாட்டார் என நீங்கள்
நம்பலாம்.” முதலில் ஜராசந்தன் வியப்பினால் மெளனத்தில் ஆழ்ந்தான் எனினும்,
அவன் ஏமாந்துவிட்டான் என நினைப்பார்களோ என்ற எண்ணம் ஏற்படவே, தாமகோஷனைப்
பார்த்து, “உணவு முடியட்டும். நான் நேரிலே பார்த்துப் பேசித் தெரிந்து
கொள்கிறேன்.” என்று முடித்துக்கொண்டான். சாப்பிடும்போதே சால்வனிடம்
படைகளின் முன்னேற்றத்திற்கான ஏற்பாடுகள் பற்றிக் கேட்டுத் தெரிந்து
கொண்டான். பின்னர் தன் கூடாரத்திற்குத் திரும்பிய ஜராசந்தன் சால்வனையும்,
தாமகோஷனையும் மட்டும் தன்னுடனே வரச் சொல்லி உத்தரவிட்டான். கூடாரத்தில் ஒரு
அழகிய ஆசனத்தில் சாய்ந்த வண்ணம் படுத்த ஜராசந்தன் மதுராவின் தூதுவர்களை
அழைத்து வரச் செய்தான்.
ம்ம்ம், நாம் என்ன நினைத்தோம்? நம்
மறுமகனின் மரணத்திற்குப் பழிவாங்க வேண்டி அவ்விரு இளஞர்களின் தலைகளைக்
கேட்டால், இருவரும் நாட்டை விட்டே ஓடிவிட்டனராமே? தன் எண்ண ஓட்டம்
தடைபடுவது போல் அப்போது அங்கே வந்து நின்ற அக்ரூரரையும், அவரோடு வந்த
பிருஹத்பாலனையும் பார்த்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வசுதேவரின் சகோதரன்
ஆன தேவபாகனின் மகன். அவர்களோடு வந்திருந்த கடனும், ஜராசந்தனை
நமஸ்கரித்தான். சற்று நேரம் அவர்களையே பார்த்திருந்த ஜராசந்தன் சடாரென
எழுந்து அமர்ந்தான். “ என்ன இது, முட்டாள்தனமான செய்தி ஒன்றைக் கொண்டு
வந்துள்ளீர்கள்? இதை எவ்வாறு நம்புவது?” அலக்ஷியமான தொனியில் அவநம்பிக்கை
தொனிக்க்க் கேட்டான் ஜராசந்தன்.
அதற்கு அக்ரூரர் தன்னுடைய
உறுதியும், நம்பிக்கையும் தொனிக்கும் குரலில், கிருஷ்ணனும், பலராமனும்
மதுராவை விட்டுச் சென்று மூன்று தினங்கள் ஆகிறதென்று கூறினார். எனினும்
ஜராசந்தனுக்கு நம்பிக்கை வரவில்லை. எங்கேயோ அவர்களை ஒளித்திருக்கிறார்கள்
என்றே எண்ணினான். தன் எண்ணத்தை வாய்விட்டு வெளியிலும் கூறினான். அக்ரூரரைப்
பயப்படுத்தும் தொனியில் கடுமையும், கோபமும் தொனிக்க, "எங்கே
ஒளித்துள்ளீர்கள்? அதைச் சொல்லவில்லை எனில் உங்கள் உயிர் உங்களுடையதல்ல!"
என்று கத்தினான். ஆனால் அக்ரூரர் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை.
வழக்கம்போல் தன்னிரு கைகளையும் கூப்பியவண்ணம், "இல்லை, அரசே, அவர்கள்
மதுராவில் இல்லை!" என்றே கூறிக்கொண்டிருந்தார். ஆனால் ஜராசந்தனுக்கு
அக்ரூரரின் இந்த நிதானமான போக்கு உள்ளூர ஆச்சரியத்தைக் கொடுததது. அதே சமயம்
அருகே நின்றிருந்த பிருஹத்பாலனுக்குப் பயம் ஏற்பட்டது என்பதையும்
புரிந்துகொண்டான். அருகே இருந்த தாமகோஷனையும், சால்வனையும் சற்று அப்பால்
போய் இருக்கும்படி கூறினான் ஜராசந்தன். விருஷ்ணி குலத்தின் மாபெரும்
அறிஞரும், தபஸ்வியும், ஞாநியும் ஆன அக்ரூரரிடம் தான் தனியாகப் பேச
விரும்புவதாகவும் கூறினான்.
Geetha Sambasivam
unread,
Jun 18, 2010, 5:12:58 AM6/18/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
அக்ரூரர் கொண்டு
வந்திருக்கும் விஷயம் எதுவானாலும் அது தன் படைவீரர்களுக்குப் பரவி அதைப்
பற்றிய அவர்களின் விமரிசனத்தை ஜராசந்தன் சற்றும் விரும்பவில்லை. ஆகவே
தனிமையிலேயே அது பற்றிப் பேச விரும்பினான். அதோடு தன் வீரர்களுக்குத் தன்
குழம்பிய மனநிலைமையும் தெரிந்துவிடாமல் இருக்கவேண்டும், என்றும் தன்
உறுதியான முடிவுகள் மட்டுமேஅவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் ஜராசந்தன்
விரும்பினான். சேதிநாட்டரசன் தாமகோஷன் செல்லும்போது அவனுடன்
பிருஹத்பாலனையும் அழைத்துச் செல்லும்படி ஜராசந்தன் கூறினான். அனைவரும்
சென்றபிறகு, அக்ரூரரைப் பார்த்து, ‘விருஷ்ணி வம்சத்தவர்களின் வணக்கத்துக்கு
உரியவரே, நீர் ஓர் துறவி என்பதை நான் நன்கறிவேன். ஆனால் என்னிடம் பொய்
மட்டும் கூறினீர்கள் என்பது தெரியவந்தால்,மதுரா நகரைத்
தீக்கிரையாக்கிவிடுவேன். நினைவிருக்கட்டும்!” என்று கடுமையான குரலில்
கூறினான்.
“பேரரசே, நினைத்ததை நினைத்த வண்ணம் செய்யும் ஆற்றல்
படைத்தவர் நீர் என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் என் வாயிலிருந்து ஒரு
போதும் பொய்யான வார்த்தைகள் வராது.” என்றார் அக்ரூரர். “எனில், அக்ரூரரே,
அந்தக் கோழை இளைஞர்கள் உண்மையில் ஊரை விட்டு ஓடிவிட்டனரா? ஏன் ஓடினார்கள்?”
ஜராசந்தன் குரலிலேயே ஏளனம் தொனித்த்து. “ஐயா, அவர்கள் கோழைத்தனமாகவெல்லாம்
ஓடவில்லை. தங்கள் இருவரின் பொருட்டு மதுராநகரில் யுத்தம் ஏற்படுவதையும்,
அதன் அப்பாவியும், ஏதுமறியா மக்களும் கொல்லப் படுவதையும் அதன் அழகும்,
எழிலும் அழிவதையும் அவர்கள் விரும்பவில்லை. மேலும் யாதவகுலமே அவர்கள்
இருவரின் பாதுகாப்புக்குஎனப் போரிட வருமென்பதால் குலத்துக்கும் மிகவும்
ஆபத்து ஏற்படும். அதையும் அவர்கள் விரும்பவில்லை. உண்மையில் அவர்கள்
வீரர்களே ஆவார்கள். கோழைத்தனத்தை எதிர்த்துப் போராடும் வீரர்கள்.” என்றார்
அக்ரூரர்.
“ஹாஹாஹாஹா, எனில் யாதவர்கள் எவரும் அவர்கள் இருவரின்
பாதுகாப்புக்கு என முன்வரவில்லை?? அவர்கள் பக்கம் எவரும் நிற்கவில்லை?”
ஜராசந்தனின் குரலில் அவனையுமறியாக் குதூகலம். ஆனால் அக்ரூரரோ, “இல்லை அரசே,
அவர்கள் இருவருக்காகவும் உயிரைக் கொடுக்கக் கூட பலர் தயாராக இருக்கிறோம்.
ஆனால் அவர்கள் இருவரும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்துவிட்டனர்.”
என்றார் அக்ரூரர். “என்னால் இதை நம்ப முடியவில்லை. அவர்கள் இருவரையும்
நாட்டை விட்டு அனுப்பியதற்காக உங்கள் அனைவரையும் தண்டிக்கப் போகிறேன்.”
“பேரரசே,
இதுவும் நாங்கள் எதிர்பார்த்தது தான். ஒரு மகத்தான அரசன் வேறு என்ன
செய்யமுடியும்? அதுவும் அவன் எதிரிகள் இருவர் தப்பிவிட்டனர் என்றால்
எவ்வகையில் தன் கோபத்தை வெளிக்காட்ட முடியும்?” அக்ரூரரின் குரல்
சாந்தமாகவே தொனித்தது. எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. “என்ன?
கோபமா? எனக்கா? ம்ம்ம்ம்?? அக்ரூரனே! நீ உன்னை ஒரு பெரிய மஹான் எனச்
சொல்லிக்கொள்கிறாயே? நான் எவ்விதம் என் மறுமகனை ஒரு சிறுவன் கொன்றதைப்
பற்றிக் கவலை இல்லாமல் இருக்கமுடியும் என்பதைப் புரிந்து கொண்டாயா?
அவர்களுக்கு நான் பாவமன்னிப்பா கொடுக்க வேண்டும்? அதுவும் கம்சன் உங்கள்
பட்டத்து இளவரசனும் கூட.”” ஜராசந்தன் சீறினான். அக்ரூரரோ மேலும் அதே
சாந்தம் தொனிக்கும் குரலில், “என்னை மன்னியுங்கள் பேரரசே, நான் என்னை ஒரு
போதும் ஒரு துறவி என்றோ மஹான் என்றோ சொல்லிக்கொள்ளவும் இல்லை, அப்படி
அழைத்துக்கொண்ட்தும் இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் தர்ம நியாயங்களை நான்
கடைப்பிடிக்கிறேன். அது என் கடமை என்றும் உணர்ந்திருக்கிறேன். மேலும் அரசே,
வசுதேவனின் குமாரர்கள் செய்த தவறுக்காக மதுரா நகரை அழிப்பதோ, மதுராவின்
மக்களைத் துன்புறுத்துவதோ தர்மம் அல்ல என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.”
அக்ரூரரின் குரலில் ஜராசந்தனின் தவறான செயலைச் சுட்டிக்காட்டுவது போல்
அமைந்த தொனி அவனை இன்னும் எரிச்சலூட்டியது.
அக்ரூர்ரை
வெட்டிவிடுவான் போல் பார்த்தான். ஆனால் அவரோ மலையே நிலை பெயர்ந்து
விழுந்தாலும் கலங்காதவர் போல் அதே நிதானத்தோடும், தீர்க்கமான பார்வையில்
கருணை தென்படவும், புன்னகை மாறாத முகத்தோடும் காட்சி அளித்தார். “அரசே,
நான் இங்கே வசுதேவன் மகன் வாசுதேவகிருஷ்ணனின் செயல்களை நியாயப் படுத்த
விரும்பவில்லை. அதற்காகவும் நான் வரவில்லை. ஆனால் கம்சன் எத்தனை எத்தனை
யாதவர்களைக் கொன்றிருக்கிறான்? எத்தனை எத்தனை பச்சிளம் குழந்தைகள்? எத்தனை
பெண்கள் அவனால் பலவந்தப் படுத்தப் பட்டிருக்கின்றனர்? அதன் மூலம்
வாழ்க்கையையே இழந்து தவித்திருக்கின்றனர்? எவ்வளவு மனிதர்களைத் தன் அடாத
செயல்களால் பைத்தியக்காரர்கள் போல் திரிய விட்டிருக்கின்றான்? “ சற்றே
நிறுத்திய அக்ரூரர், “ ஏன்? வசுதேவனின் குழந்தைகளே அவனால் கொல்லப் பட்டனவே?
எத்தனை சின்னஞ்சிறு குழந்தைகள் பிறந்த உடனே கொல்லப் பட்டன? “ அக்ரூரர்
மேலும் தொடர்ந்தார். “ஐயா, இவ்வளவையும் கம்சன் செய்யும் போது தாங்கள்
அவனுக்குப் பாவமன்னிப்புக் கொடுத்து அவனை மன்னித்தன்றோ
பார்த்துக்கொண்டிருந்தீர்கள்?”
மிகுந்த பிரயத்தனத்தோடு ஜராசந்தன்
தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான். அக்ரூரரைப் போன்ற பலராலும் போற்றப்
படும், தவ வாழ்க்கை வாழும் ஒருவரைத் தண்டிப்பது மிகப் பெரிய பேராபத்தில்
போய் முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்தான். ஆகவே அவனால் அப்போது எதுவும்
செய்ய இயலாமல் போயிற்று. ஆகவே அக்ரூரரைப் பார்த்து, “ மிகக்
கெட்டிக்காரத்தனமாய்ப் பேசிவிட்டாய் என எண்ணாதே. மதுராவை அழிக்கவேண்டும்
என்ற என் எண்ணத்தை நான் இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை. மாற்றிக்கொள்ள
விரும்பவும் இல்லை.”
“ஏற்கெனவே நாங்கள் எதிர்பார்த்த்தே தான்
அரசே.மாட்சிமை பொருந்திய மன்னா! ஏற்கெனவே பல யாதவர்கள் மதுராவை விட்டுச்
சென்றுவிட்டார்கள். இப்போது நாங்கள் வெறும் கையோடு மதுராவுக்குச் சென்றதும்
மீதம் உள்ளவர்களும் ஊரை விட்டுச் சென்றுவிடுவார்கள். மதுரா நகர்
உங்களுடையது. அதை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நாங்கள் சென்று
விடுகிறோம்.” அக்ரூரர் தீர்மானமாய்ச் சொன்னார்.
“ம்ம்ம்ம்ம்?? எங்கே
போய்விடமுடியும் உங்களால்? நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களை விடாமல்
துரத்துவேன். ஹாஹாஹாஹாஹாஹா!’ கெக்கலி கொட்டிச் சிரித்தான் ஜராசந்தன்.
“உண்மை
அரசே, அது உங்களால் முடியும். ஆனால் மதிப்புக்குரிய ஹஸ்தினாபுரத்து பீஷ்ம
பிதாமஹரும், பாஞ்சால நாட்டு துருபதனும் எங்களுக்கு அடைக்கலம் தர
ஒப்புக்கொண்டிருக்கின்றனர். தேவை எனில் அவர்கள் படையும் எங்கள் உதவிக்கு
வரத் தயாராகக் காத்திருக்கிறது.”
தூக்கிவாரிப் போட்டாற்போல்
ஜராசந்தன் யோசிக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே துருபதன் தன் நாட்டின் வழியாகச்
செல்ல ஜராசந்தனுக்குத் தடை விதித்து விட்டான். இப்போதென்னவென்றால் இது
வேறேயா? அக்ரூரர் ஜராசந்தனின் தயக்கத்தைப் புரிந்து கொண்டார். அதே சாந்தமான
குரலில், “ மேன்மை பொருந்திய சக்கரவர்த்தி, நான் சொல்ல வந்ததும் அதுவே
தான். நீங்கள் தேடும் இளைஞர்களோ ஓடிவிட்டனர். நாட்டின் மற்றத் தலைவர்களும்
நாட்டை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நாட்டின் மக்களும் அவர்களைத்
தொடர்ந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்போது நீங்கள் போய் மதுராவைத்
தாக்கினாலும், அங்கே எதிர்க்க யாரும் இருக்கமாட்டார்கள். எப்படியும்
மதுராநகர் காலியாகத் தான் இருக்கப் போகிறது. காலியான நகரத்தில் எவருடன்
யுத்தம் புரிவீர்கள் அரசே? இது உங்களைப் போன்றதொரு வீராதி வீரருக்கு
இழுக்கன்றோ? மகத்த்தின் புகழ் பெற்ற சக்கரவர்த்தி ஜராசந்தன் காலியான மதுரா
நகரைத் தீக்கிரையாக்கினான் என்றல்லவோ அனைவரும் பேசுவார்கள்? உலகத்தார்
இதைக் கேட்டு உங்களைக் கண்டு எள்ளி நகையாடமாட்டார்களா? யோசியுங்கள் அரசே!”
அக்ரூரர் சற்றும் மாறாத குரலில் பேசினார்.
Geetha Sambasivam
unread,
Jun 23, 2010, 5:37:33 AM6/23/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
அக்ரூரரின்
இந்தத் துணிச்சலான பேச்சால் ஜராசந்தனுக்குக் கோபம் அதிகமானது. தன்னெதிரே
தன்னை ஒருவன் இப்படி கேட்பதா என்ற எண்ணத்தில், அக்ரூரரைப் பார்த்து,
“அக்ரூரா, என்ன துணிச்சல் உனக்கு, என்னைப் போன்றதொரு மஹா சக்கரவர்த்தியிடம்
இவ்வாறு பேச உனக்கு எவ்விதம் தைரியம் வந்தது? இதைச் சொல்லத் தான் இங்கே
வந்தாயா? உன் நாக்கை நான் அறுத்துவிடுவேன் என்பது நினைவிருக்கட்டும்!”
என்றான் ஜராசந்தன். ஜராசந்தன் எவ்வளவுக்கெவ்வளவு நிதானத்தை இழந்தானோ,
அவ்வளவுக்கு அக்ரூரர் நிதானத்தை இழக்கவில்லை. “ஐயா, நான் ஏற்கெனவே
சொன்னேனே, உங்களால் எந்த எல்லைக்கும் சென்று எவரையும் தண்டிக்கமுடியும்
என்று. இப்போதும் நான் அதையே சொல்கிறேன். நீங்கள் மாபெரும் சக்தி படைத்தவர்
என்பதாலேயே என்னை உங்களிடம் நேரில் சென்று தனியே பேச அனுப்பினார்கள்.
நானும் வந்துள்ளேன். உங்களைப் போன்ற சக்தி பெற்ற அரசர்களால் தான்
மன்னிக்கவும் முடியும், தண்டிக்கவும் முடியும். பலவீனமானவர்களை மன்னிப்பது
என்பது உங்களைப் போன்ற வல்லமை படைத்தவர்களுக்குச் சற்றுச் சிரமமான
ஒன்றுதான். ஆனால் அதை நிறைவேற்றுவதிலேயே உங்கள் பெருமையும் உள்ளது. இதனால்
உங்கள் புகழ் மங்காது அரசே, மாறாக இன்னும் சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.”
என்று நிதானமாகவே கூறினார் அக்ரூரர்.
“இனிமை, இனிமை, இனிமை!
அக்ரூரா, உன் குரலில் இனிமையைத் தோய்த்து, எனக்குச் சற்றும் விருப்பம்
இல்லாத விஷயங்களைக் கூறுகிறாய். உன் குரலினிமையில் நான் மயங்கி இவற்றில்
ஆழ்ந்த கவனம் செலுத்தமாட்டேன் என எண்ணுகிறாயா? சரி, சரி, அந்த இரு
இடைப்பயல்களும் எங்கே சென்று இருக்கிறார்கள் என்பதைச் சரியாகச் சொல்லிவிடு.
உன்னை நான் விட்டு விடுகிறேன். மூடி மறைக்காதே! அதன் பின்னர் நீ கூறியபடி
செய்யலாமா வேண்டாமா என்று நான் யோசித்துக்கொள்கிறேன்.” என்றான் ஜராசந்தன்.
“ஐயா,
அவர்கள் இருவரும் உங்கள் கண்களில் படாமல் தப்பி அல்லவோ ஓடி இருக்கின்றனர்?
அப்படி இருக்கையில் எனக்கு எவ்வாறு தெரியும் அவர்கள் ஒளிந்திருக்கும்
இடம்? உங்களால் சென்று அடைய முடியததோர் இடத்திற்குச் சென்றிருப்பார்கள் என
நம்பலாம்.” என்றார் அக்ரூரர்.
அக்ரூரரையே வைத்தகண் வாங்காமல்
பார்த்த ஜராசந்தன், “ நீ மிகவும் சாமர்த்தியசாலி அக்ரூரா, சரி, நீ இப்போது
இங்கிருந்து செல். நாளைக்காலை என்ன சொல்வது என்பதைப் பற்றி ஒரு
முடிவெடுக்கிறேன். நீ சென்று பிருஹத்பாலன், அவன் தானே வசுதேவனின் தம்பி
தேவபாகனின் மகன்? கண்ணனின் சித்தப்பா குமாரன்?? அவனை வரச் சொல் இங்கே. நான்
அவனிடம் பேசவேண்டும்.”
“உத்தரவு, சக்கரவர்த்தி!” அக்ரூரர்
அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார். அக்ரூரர் எதிரில் கோபத்தைக் காட்டிய
ஜராசந்தனுக்கு மனதிற்குள் அக்ரூரர் சொன்னது எல்லாம் சரியே என்ற எண்ணமே
தோன்றியது. அவன் அப்போது மதுராவைத் தாக்குவது என்பது சரியல்ல தான்.
காலியான மதுராவைத் தாக்குவது குழந்தைதனமாக இருக்கும். அவனுடைய அரசகுலத்து
நண்பர்கள் மத்தியிலும், மற்ற ஆரிய வர்த்தத்து அரசர்கள் மத்தியிலும்
கேலிக்குரியவனாக மாறிவிடுவான். கம்சனின் மரணத்துக்குப் பழிவாங்குவது என்பது
எவராலும் மறக்கமுடியாத ஒன்றாக, என்றென்றும் நினைவு கூரும் ஒன்றாக
இருக்கவேண்டுமே ஒழிய கேலிக்குரியதாக இருத்தல் கூடாது. மேலும் இந்த
யாதவர்கள் குரு வம்சத்தினரின் உதவியையும், பாஞ்சால மன்னன் துருபதனின்
உதவியையும் நாடுவார்கள் போல் தெரிகிறது. ஆகவே அவசரம் கூடாது. சட்டென ஒரு
யோசனை அவன் மனதில் உதிக்க, பிருஹத்பாலன் வருவதற்குள் தன்னுடைய அந்தரங்க
ஆலோசகனும், கம்சன் உயிருடன் இருந்த வரையில் மதுராவில் இருந்து
கம்சனுக்கும், அவனிரு மனைவியருக்கும் ஆலோசனைகளும், உதவிகளும்
தேவைப்படும்போது வழங்கிக்கொண்டிருந்தவனும் ஆன தன் அந்தரங்க மெய்க்காப்பாளனை
அங்கே வரவழைத்து பிருஹத்பாலன் பற்றிக் கேட்டறிந்தான். மேலும் மதுராவில்
நடந்த அனைத்து விஷயங்களையும் அவன் வாய் மூலமும் கேட்டு அறிந்தான்.
தேவபாகன்
வசுதேவரின் இளைய சகோதரன் மட்டுமின்றி உக்ரசேனனின் மகளும், கம்சனின் சொந்த
சகோதரியுமான கம்சாவை மணந்து கொண்டிருக்கிறான். இந்தக் கம்சா என்பவள்
உக்ரசேனனின் பிரியத்துக்கு உகந்த மகள். பிருஹத்பாலன் மூத்த மகன். இவன்
தம்பியான உத்தவன் என்பவனே, கோகுலத்தில் கண்ணனுக்கும், பலராமனுக்கும்
துணையாக அங்கே வளர்ந்தவன். இப்போதும் கண்ணனின் பிரியத்துக்கும்,
பாசத்துக்கும், அன்புக்கும், நம்பிக்கைக்கும் உகந்ததொரு நண்பன், சகோதரன்.
தன் மெய்க்காப்பாளனை அனுப்பிவிட்டு பிருஹத்பாலன் காத்திருப்பது தெரிந்து
அவனை அழைத்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் வந்தவன் சற்றுத்தூரத்திலேயே
நின்றுவிட்டான். அவனுடைய உள்ளார்ந்த பயம் அவன் கண்களிலேயே தெரிந்தது.
உண்மையிலேயே நடுக்கத்துடன் இருந்த பிருஹத்பாலன், ஜராசந்தனின் பெயரைக்
கேட்கும்போதெல்லாம் நடுங்குபவனே. தன் சொந்த மாமன் ஆன கம்சன் கிருஷ்ணனால்
கொல்லப் பட்டபோது மதுராவுக்குக் கேடு விளைந்துவிட்டது என்றும், மதுரா நகரம்
அழியப் போகிறது என்றும் முழுமனதோடு நம்பினான். நகரை விட்டு ஓடவும்
தயாராகத் தான் இருந்தான். ஆனால் சிறையில் வாடிக்கொண்டிருந்த கம்சனின்
தகப்பனும், பிருஹத்பாலனின் தாய்வழிப்பாட்டனும் ஆன உக்ரசேனனின்
அன்புக்குகந்த மகள் அவன் தாய் கம்சா. ஆகவே ஓடிச் செல்வது என்ற தன் எண்ணத்தை
அவனால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியவர்கள் அப்போது தான் சிறையிலிருந்து
மீண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருகை உற்சாகமாய்க் கொண்டாடப்படும்
சமயம் அவன் மதுராவை விட்டு ஓடினால், அவனைக் குலப்பகைவன் என எண்ணிவிட்டால்?
இந்த எண்ணமே அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது.
இப்போது இங்கு
வரும்போதும் நடுங்கிய வண்ணமே வந்தான் பிருஹத்பாலன். கண்ணனும், பலராமனும்
ஓடிவிட்டார்கள் என்ற செய்தி ஜராசந்தனின் கோபத்தைத் தூண்டிவிடும், என்ன
செய்வானோ, என்ன சொல்வானோ? என்ன தண்டனை கிடைக்குமோ? தூக்குமேடைக்குச்
செல்லும் கைதியைப் போன்றதொரு நிலைமையில் அங்கே வந்தான் பிருஹத்பாலன்.
ஆனால்??? இது என்ன ஆச்சரியம்? சக்கரவர்த்தி ஜராசந்தன் அவனைப் பார்த்துப்
புன்முறுவல் செய்கிறானே? இது கனவா? அல்லது நனவா? மேலும் பிருஹத்பாலன்
ஆச்சரியப்படும் வகையில், தன் புன்னகை மாறாமலேயே ஜராசந்தன் அவனை அருகே
வரும்படி அழைத்தான். பிருஹத்பாலனும் அருகே சென்று சக்கரவர்த்திக்குத் தன்
அறிமுகத்தையும் வணக்கத்தையும் தெரிவித்தான். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக
ஜராசந்தன் அவனை எழுப்பி அணைத்தவண்ணம் தன் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவன்
முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினான். ஆஹா, இத்தனை நல்ல மனிதனா
ஜராசந்தன்? உண்மையில் இவன் நல்லவனே! இந்த மதுராபுரி மக்களுக்கும் சரி, மற்ற
யாதவத் தலைவர்களுக்கும் சரி இவனுடைய நல்ல மனம் புரியவே இல்லை. சீச்ச்சீ,
முட்டாள் ஜனங்கள், அதை விட முட்டாள் யாதவத் தலைவர்கள் அனைவரும்.
பிருஹத்பாலனின் எண்ணம் குதிரையை விட வேகமாய் ஓடியது.
“பிருஹத், என்
ஆசிகள் உனக்கு. “ இனிமையைப் பொழிந்த அன்பான குரலில் கூறிய ஜராசந்தன்,
“எப்படி அப்பா இருக்கிறாய்? உன் பாட்டனாரும் என் மறுமகனின் தந்தையுமான
அரசர் உக்ரசேனர் எப்படி இருக்கிறார்? உன் தாய், அந்தப் புண்ணியவதி எப்படி
இருக்கிறாள்? ஆஹா, எப்பேர்ப்பட்ட உத்தமி அவள்? இத்தனை வருடங்களாகச்
சிறையில் இருந்த தன் தந்தைக்குப் பணிவிடை செய்து வந்தாள் உன் தாய் எனக்
கேள்விப் பட்டேன். நீயும் அப்போது சிறையிலேயே இருந்தாயா? எங்கே இருந்தாய்
நீ? உன் தாயுடனா, அல்லது உன் தகப்பனுடனா?” அன்பும், பாசமும், நேசமும்
வழிந்தன ஜராசந்தன் குரலில். பிருஹத்பாலன் மயக்கம் அடைந்து விழாத குறைதான்.
ஆஹா, இவ்வளவு நல்லவரா இந்த மகதச் சக்கரவர்த்தி? அனைவருமே இவரைத் தவறாய்ப்
புரிந்து கொண்டனரே?
Geetha Sambasivam
unread,
Jun 28, 2010, 9:13:41 AM6/28/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
பிருஹத்பாலனின் மனம் ஜராசந்தனுக்காக எதுவேண்டுமானாலும்
செய்யும் அளவுக்குக் கசிந்து உருக ஆரம்பித்திருந்த்து. ஜராசந்தனின்
கேள்விக்குப் பதிலாய் அவன் தன் பாட்டனுடன் இருந்து வந்ததாய்த்
தெரிவித்தான். தன் தாயும் கூட இருந்து பாட்டனைக் கவனித்துக் கொண்டதாயும்
தெரிவித்தான். பிருஹத் பாலனின் இளக்கமான மன நிலையை நன்கு கவனித்துக்கொண்ட
ஜராசந்தன் அவனிடம்,”நீ உன் பாட்டனுக்கு மிகவும் பிரியமான பேரன் என்று
கேள்விப் பட்டேனே? மகதத் தலைநகரம் கிரிவிரஜத்துக்கு ஒரு முறை நீ விஜயம்
செய். மதுராவுக்கும், எங்கள் மகதத்துக்கும் உள்ள உறவுகள் பலமடையும்.” என்று
மிக மிக மென்மையான குரலில் கூறினான். பிருஹத்பாலனுக்கு இந்த முகஸ்துதி
மிகவும் பிடித்திருந்தது. கண்ணன் வரும் முன்வரையிலும் அனைவரும் அவனையே
பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். கண்ணன் வந்தான், ஓரிரவில் அனைத்தும்
மாறிவிட்டதே! கடைசியில் நம்மைப் புரிந்து கொண்டவன் ஒருவனாவது இருக்கிறானே?
ம்ம்ம்ம்ம் இதுதான் சமயம், நம் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள. எங்கிருந்தோ
வந்த கண்ணனை மதுராவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுகொண்டு ஆட்சி புரிந்து வா
எனக் கேட்ட யாதவத் தலைவர்கள் என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லையே!
உண்மையில்
நானல்லவோ இந்த ஆட்சிக்கு உரிமை பெற்றவன். தாத்தா அவர்கள் என்னையல்லவோ
அழைத்திருக்கவேண்டும்? போகட்டும், இப்போது அந்தப் பொல்லாத வாசுதேவ
கிருஷ்ணன் ஊரை விட்டு, நகரை விட்டு, நாட்டை விட்டே ஓடிவிட்டான். அதுவும்
நன்மைக்கே. நம் எண்ணத்தை இப்போது இதோ, இந்த ஜராசந்தன் மூலம் நிறைவேற்றிக்
கொள்வோம். இதுதான் சரியான சமயம் நம் எண்ணத்தைச் சொல்வதற்கு, இந்த ஜராசந்தனோ
நம்மிடம்மிக மிக நட்போடு பழகுகிறான். யார் கண்டது? நம் தலைமையில் மதுரா
நகரும், அதன் மக்களும் பெரும் புகழையும், செல்வத்தையும் செல்வாக்கையும்
அடையப் போகிறார்களோ என்னமோ? நம் மூலம் இவை எல்லாம் நிறைவேறவேண்டுமோ என்னமோ?
மாமன் கம்சனைப் போல, இல்லை, இல்லை, அவனையும் விடச் சிறந்ததொரு அரசனாக
ஆட்சி புரியலாம். ஆஹா, பிருஹத்பாலனின் கனவுகள் விரிந்தன. ஜராசந்தனைப்
பார்த்துப் பணிவோடும், வணக்கத்தோடும் பேச ஆரம்பித்தான்.
“பேரரசே!
மதுராவும், அதன் யாதவத் தலைவர்களும், மக்களும் அனைவரும் உங்களுக்குப் பூரண
விசுவாசத்தைக் காட்டுகிறோம். அதில் தங்களுக்கு எவ்வித சந்தேகமும்
வேண்டாம்.” பின்னர் மெதுவாக, மிக மிக மெதுவாக அவன் கூறிய சில வார்த்தைகள்,
அக்ரூரரைப் பொய்யர் என்று சொல்லும்படியாக அமைந்தன. தனக்குள்
சிரித்துக்கொண்ட ஜராசந்தன், “ ஆம், ஆம், குழந்தாய், அந்தக் கோழைகள்
இருவரும் தான் ஓடிவிட்டனரே!” ஜராசந்தன் பிருஹத்பாலனின் கண்களில் தெரிந்த
பேராசையைக் கண்டு மனதுக்குள் சிரித்துக்கொண்டான். பிருஹத்பாலனோ, ஜராசந்தன்
தன்னை நம்பிவிட்டதாய் நினைத்துக்கொண்டான். ஆஹா, இப்போது மட்டும்
ஜராசந்தனின் தாக்குதலை நாம் நிறுத்திவிடவேண்டும். நட்பாகப் போய் நாம்
ஜராசந்தனின் தாக்குதலை நிறுத்தினால் இரட்டை ஆதாயம். ஜராசந்தனின்
நட்பும்கிடைக்கும். யாதவத் தலைவர்களும் வாசுதேவக் கிருஷ்ணனால் கூட முடியாத
ஒன்றை பிருஹத்பாலன் சாதித்து வந்துவிட்டான் எனப் பெருமையாகப் பேசுவார்கள்.
அருமையான சந்தர்ப்பம். அனைவர் மத்தியிலும் தான் ஒரு முக்கியமான வீரனாக
மதிக்கப் பட்டுப் புகழப் படுவோம் என நினைத்தான் பிருஹத்பாலன்.
ஜராசந்தனைப்
பார்த்து, “அந்த இடைச்சிறுவர்கள் இருவரும் தான் கோழைகளாய் ஓடிவிட்டனரே?
தாங்கள் தயவு கூர்ந்து, கருணை காட்டி, மதுராவின் மேல் தாக்குதல் நடத்தாமல்
இருந்தால்………………..” தயங்கிக்கொண்டே இழுத்தான் பிருஹத்பாலன். ஜராசந்தனோ,”
ஆம், ஆம், நான் முதலில் மதுராவை நாசம் செய்துவிடலாம் என்றே எண்ணினேன்.
ஆனால் உன் போன்றதொரு வீரனை, இளைஞனைப் பார்த்ததும் எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன். ஆஹா, இந்த மதுரா நகருக்கு நீ மட்டும் அரசனாக
இருந்தால்??? ஆஹா, எவ்வளவு பொருத்தமாய் இருக்கும்? ஆம், ஆம், நீதான்
மதுராவுக்கு ஏற்ற தலைவன்.” கிராமங்களில் விவசாயிகள் வானத்தின் மேகங்களின்
நகர்வைக் கொண்டே மழை வருமா, வராதா என அநுமானிப்பதைப் போல் தெள்ளத் தெளிவாக
பிருஹத்பாலன் மனதைப் படித்தான் ஜராசந்தன். பிருஹத்பாலன் சட்டெனத் தன்
ஆசனத்திலிருந்து எழுந்து ஜராசந்தனை வணங்கினான்.
“பெருமதிப்பு
வாய்ந்த சக்கரவர்த்தியே! ஆஹா, நீங்கள் மட்டும் மதுரா நகரை விட்டு வைத்தால்,
உங்களிடம் மதுராவை விட்டுவிடுமாறு பிச்சை கேட்கிறேன். ஆம், என் மாமன் ஆன
அக்ரூரர் சொன்னதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். எங்கள் அனைவரின்
வேண்டுகோளையும் அனைவர் சார்பாகவும் அவர் இங்கே அறிவித்திருப்பாரே? நீங்கள்
மட்டும் இதற்குச் சம்மதித்தால் அளவற்ற நன்றி கொண்டு இருப்பேன். என்றென்றும்
உங்களுக்கு நன்றி பூண்டவனாக இருப்பேன். நான் இன்னும் அரச பதவியில்
அமரவில்லைதான். ஆனால் என் பெரியப்பா வசுதேவர் ஷூரர்களின் தலைவராக
இருக்கிறார். அவரின் இரு குமாரர்களும் ஓடிவிட்டனர். என் பாட்டனுக்கு என்னை
விட்டால் வேறு பேரன் எவரும் இல்லை. மேலும் என்னிடம் மிகுந்த நம்பிக்கை
வைத்துள்ளார் என் பாட்டன்.” அவசரம், அவசரமாக பிருஹத்பாலன் பேசியது தனக்குத்
தானோ என்னும்படி தோன்றினாலும் எவ்வாறேனும் மகதச் சக்கரவர்த்தியைத்
திருப்தி செய்ய எண்ணுவதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
கெட்டிக்காரனான
ஜராசந்தன் பிருஹத்பாலனை நன்கு புரிந்து கொண்டான். அவன் மனம் யாதவர்களின்
நலனுக்கும், தன் சுய லாபத்துக்கும் இடையில் ஊசலாடுகிறது என்பதைக் கண்டான்.
அவன் சுயலாபத்தைத் தூண்டிவிடும் வகையில் மேற்கொண்டு பேசினான் ஜராசந்தன்.
“பிருஹத்பாலா, நீ மட்டும் மதுராவின் பட்டத்து இளவரசனாக இருந்தால்???? ஆஹா,
நாம் நினைப்பது எல்லாமேவா நடக்கிறது? பார்க்கலாம், ஆனால், யாருக்குத்
தெரியும்? ம்ம்ம்ம்? நீ பட்டத்து இளவரசனாக ஆகிவிடலாம்.” யோசிப்பவன் போல்
பேசினான் ஜராசந்தன். பிருஹத்பாலனோ தன் நோக்கத்தைக் கூறி அதற்கேற்றாற்போல்
பேரம் பேசிக்கொள்ளும் சமயம் வந்துவிட்டது என்றே நினைத்தான். தன்னுடைய
ராஜதந்திரத்தை நினைத்து தானே மெச்சிக்கொண்டான் அவன். ஒரு கை தேர்ந்த
அரசியல் சாணக்கியனால் கூட முடியாத ஒன்றை நாம் நடத்திக் காட்டப் போகிறோம்
என்று எண்ணினான் அவன். “அரசர்க்கரசே, மதுராவை என்னிடம் ஒப்படைத்து
விடுங்கள். பிறகு பாருங்களேன், தாங்கள் நினைத்தது கை கூடும்.” ஜராசந்தனோ
பிருஹத்பாலனின் முட்டாள் தனத்தை நினைத்து உள்ளூரச்
சிரித்துக்கொண்டிருந்தான். ஆனால் வெளியே தான் மிகவும் நட்போடு இருப்பதாய்க்
காட்டிக்கொண்டான். யோசிப்பவன் போல, “ம்ம்ம்ம்ம்??? அது நல்ல யோசனைதான்,
ஆனால் அந்தக் கிருஷ்ணன் வந்துவிட்டானென்றால்???” என்று கேட்டான்.
“கிருஷ்ணனா?
அவன் ஒரு போதும் வர மாட்டான் அரசே! அவனால் வர முடியாது” திட்டவட்டமாய்த்
தெரிவித்தான் பிருஹத்பாலன். “ஏன் வரமாட்டான்? அவனால் எவ்வளவு தூரம்
சென்றிருக்க முடியும்?? இங்கே தான் ஹஸ்தினாபுரத்துக்குச் சென்று பீஷ்மரின்
உதவியைக் கேட்டிருப்பான்.” என்றான் ஜராசந்தன். அவசரம், அவசரமாக மறுத்தான்
பிருஹத்பாலன். “இல்லை, இல்லை, கிருஷ்ணனால் வரவே முடியாது. அவன் தெற்கே வெகு
தூரம் சென்றுவிட்டான்.”
“ம்ம்ம்ம்?? அங்கே???”
“எங்கேயோ
தூரத்தில்!”
“நர்மதை நதிக்கரையின் காடுகளில் ஒன்றில்
புகுந்துவிட்டானோ?”
“இல்லை, இல்லை, ம்ம்ம்ம்ம்?? கோமந்தகம்
தாண்டி…..” இழுத்தான் பிருஹத்பாலன். நம்மை நம்பி,ஒரு பொருட்டாய் மதித்து
இவ்வளவு தூரம் பேசும் ஒரு மஹா சக்கரவர்த்தியிடம் எப்படி பொய் சொல்வது?
உண்மையும், சொல்லாமல், பொய்யும் சொல்லாமல் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டான்.
ஆனால் ஜராசந்தன் அதை லக்ஷியம் செய்து கேட்காதவன் போலவே காட்டிக்கொண்டான்.
“ஓஹோ, அங்கே கரவீரபுரம் சென்றிருக்கிறானோ?” என்று ரொம்பவும் அலட்சியமாய்க்
கேட்பது போல் கேட்டான். அவன் கேட்ட தொனியில் இதற்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்காதது போல் காட்டிக்கொண்டான். பிருஹத்பாலன் என்ன பதில் சொல்வது எனப்
புரியாமல் குழம்பினான்.
Geetha Sambasivam
unread,
Jul 3, 2010, 9:42:35 AM7/3/10
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to இல்லம் (your HOME)
ஜராசந்தனின் சாமர்த்தியமும், தாமகோஷனின்
கலக்கமும்!
ஜராசந்தனின் கூற்றை ஒப்புக்கொள்ளும்
நோக்கு பிருஹத்பாலனின் முகத்தில் தோன்றியது. அதைக் கண்ட ஜராசந்தன் அவனிடம்,
“பிருஹத்பாலா, இதோ பார், நீ கேட்டபடி நான் ஒத்துக்கொண்டது உன் சொந்த
நன்மைக்காகவே. ஒரு நாள் இல்லையெனில் ஒரு நாள் நீ தான் யுவராஜாவாக ஆகி உன்
பாட்டனுக்குப் பின்னர் அரசாளப் போகிறாய் என்பதாலேயே. அதை நினைவில் கொள்.”
என்றான். பிருஹத்பாலன் பணிவோடு மெளனம் காத்தான். தனக்குள்ளே பேசிக்கொள்வது
போல் ஜராசந்தன் மீண்டும் தொடர்ந்தான். “யார் கண்டது? உன் பெரியப்பன்
வசுதேவனும், இந்த அக்ரூரனும் சும்மா இருக்க மாட்டார்கள். உன் வழியில்
குறுக்கிட்டாலும் குறுக்கிடுவார்கள். நீ எதற்கும் கவனமாய் இருந்து கொள்.
அவ்வப்போது எனக்குத் தகவல் கொடுத்து வந்தாயானால் உனக்கு உதவி
தேவைப்படும்போது நான் உதவுவேன்.” என்றான். ஜராசந்தன் இவை அனைத்தையும் ஒரு
பேரரசன் பேசுவது போன்ற ஆணையிடும் தொனியில் பேசாமல் ஒரு தந்தை மகனுக்கு
அறிவுரை கூறும் பாணியிலேயே மிகவும் மென்மையாகவும், குழைவாகவும், குரலில்
பாசத்தைக் கூட்டியும் கூறிவந்தான். ஆகவே பிருஹத்பாலனால் அவனுடைய உண்மையான
கருத்தை அறிந்து கொள்ள இயலவில்லை.
மறுநாள் தன் மந்திராலோசனை சபையைக்
கூட்டிய ஜராசந்தன் அதில் பங்குபெறுமாறு அக்ரூரர், பிருஹத்பாலன், கடன்
ஆகியோரையும் அழைத்திருந்தான். தன் படைத் தளபதிகளிடம் அவன் கண்ணனும்,
பலராமனும் நாட்டை விட்டே ஓடிவிட்ட நிலையில் மதுராவின் தாக்குதல் நடத்துவது
அபத்தமாய் இருக்கும் என்று தனக்குப் புரிந்துவிட்டதாயும், அதனால் தாக்குதல்
வேண்டாம் என்றும் கூறினான். அவனுடைய படைத் தளபதிகளும், அமைச்சர்களும்
ஆச்சரியமும், திகைப்பும் அடைந்தார்கள். மன்னனின் இந்தப் பெருந்தன்மையான
மனமாற்றம் அவர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. எனினும் சேதி நாட்டு அரசன் ஆன
தாமகோஷன் இதில் ஏதோ உள் விஷயம் இருக்கவேண்டும். அவ்வளவு எளிதில் ஜராசந்தன்
விட்டுவிடமாட்டான். ஆகவே இன்னும் வேறே ஏதோ திட்டம் போட்டிருக்கவேண்டும்
என்று பரிபூர்ணமாய் நம்பினான். ஜராசந்தன் அவ்வளவு எளிதில் தன் எதிரிகளை
மன்னிக்கும் குணம் கொண்டவன் அல்ல என்பதையும் தாமகோஷன் நன்கு
அறிந்திருந்தான். ஆகவே அவனுக்கு இந்த முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை.
வேறு ஏதோ பெரியதாக நடக்கப் போவதை எதிர்பார்த்தான் அவன்.
ஜராசந்தனோ
அறிவிப்போடு நிறுத்தாமல் அக்ரூரையும், பிருஹத்பாலனையும் பார்த்து,
“மதுராவின் யாதவர்களோடு நான் நட்பாகவே இருக்க விரும்புகிறேன். அவர்கள்
அனைவரையும் நன்கு மதிக்கிறேன். குறிப்பாக உக்ரசேனரையும் அவருடைய பதவியையும்
மதித்து வணங்குகிறேன். அக்ரூரா, உன்னைப் போன்றதொரு அருமையான ஆலோசனைகள்
சொல்லும் அமைச்சரையும், பிருஹத்பாலனைப் போன்றதொரு வீரனைப் பேரனாய்ப்
பெற்றதிலேயும் உக்ரசேனர் பாக்கியசாலி. உங்கள் இருவராலும் மதுரா நகரம்
வருங்காலத்தில் ஒளிவீசிப் பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள்
நட்புக் கிடைக்கப் பெற்றதில் நானும் அதிர்ஷ்டம் செய்தவன் ஆவேன்.” என்றான்.
பின்னர் சற்று நிறுத்தி விட்டு ஆலோசனை செய்பவன் போல் காணப்பட்டன்.
தாமகோஷனுக்கு இனிதான் முக்கிய விஷயமே பேசப் போகிறான் என்று தோன்றியது. அவன்
வரையிலும் அதை எதிர்பார்த்தான். ஜராசந்தன் மேலே பேசத் தொடங்கினான்.
“அக்ரூரா, மிகப் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவுக்குக் கப்பமாவது
எதிர்பார்க்கிறேன் நான். மிகப் பெரும் சுமையை ஏற்றவில்லை உங்களுக்கு. நல்ல
தரமான நூறு ரதங்களும், இருபத்தைந்து யானைகளும், அதற்குரிய வீரர்களோடு
வேண்டும். பலவான்களான இரு மனிதர்களின் எடைக்கு எடை பொன்னும் வேண்டும். இவை
எனக்குப் பூர்ணிமைக்குள்ளாக, ஏன் அதற்கு முன்னராக,ம்ம்ம்ம்ம் பூர்ணிமைக்கு
இன்றிலிருந்து பத்து நாட்கள் இருக்கின்றனவா? ஓ, அப்போ தேவையான நேரம்
இருக்கிறது உங்களுக்கு. அதற்குள்ளாக என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.”
சற்றே யோசித்த வண்ணம், “அக்ரூரா, கண்ணனும் பலராமனும் எப்போது வந்தாலும்
என்னிடம் ஒப்படைக்கப் படவேண்டியவர்களே. அவர்கள் உயிர் என் கையில். அதை
மறவாதே!” என்றான்.
“பேரரசே, நீங்கள் கேட்டிருக்கும் கப்பத்தைக்
கொடுக்க முயல்கிறோம். அதுவும் நீங்கள் கேட்டிருப்பதாலேயே கொடுக்கவேண்டும்.”
என்றார் அக்ரூரர். “நான் கேட்டால் தான் கொடுப்பீர்களோ? சாமர்த்தியமாய்ப்
பேசாதே அக்ரூரா, இப்போது நீ செல்லலாம். எங்கே சால்வன்? சால்வா, நீ
இவர்களோடு மதுராவுக்குச் சென்று உக்ரசேனரிடம் இவர்கள் நான் சொன்னதை
அப்படியே சொல்கிறார்களா என்பதையும் கவனித்துவிட்டு, அதற்கு உக்ரசேனர்
சொல்லும் பதிலையும் பெற்றுக்கொண்டு வா. “ தன் கை அசைப்பால் அந்த மூவரையும்
போகச் சொன்னான் ஜராசந்தன். அவர்கள் சென்றதுமே தாமகோஷனைப் பார்த்து,
“சேதிநாட்டு மன்னா! நாம் இப்போது அந்த இடைச்சிறுவர்களைத் தேடிச்
செல்லவேண்டும். எப்பாடு பட்டாவது அவர்களைப் பிடித்து அவர்கள் தலையை வாங்க
வேண்டும். அவர்களைத் தலை வேறு, உடல் வேறாக ஆக்கும் என்னுடைய சபதம் முற்றுப்
பெறவில்லை. அதை நான் திரும்ப வாங்கவும் இல்லை. அது அப்படியே இருக்கிறது.
எங்கே சென்றுவிடுவார்கள் அவர்கள்? நாம் இப்போது அவர்களை வேட்டையாடச்
செல்வோம்.” என்று ஆவேசமாய்க் கூறினான்.
அங்கே இருந்த விதர்ப்ப
இளவரசன் ஆன ருக்மி உடனே தயாரானான். “ஆம், அரசே, அந்த இடைச்சிறுவனை உடல்
வேறு, தலைவேறாக்கிவிட்டுத் தான் மறு வேலை. உடனே கிளம்புவோம் நாம்.” என்று
உடனுக்குடனே தயாரானான். ஆனால் தாமகோஷனோ? வேறு வழியில்லாமல் ஜராசந்தனோடு
கூட்டுச் சேர்ந்த அவனுக்கு ஜராசந்தனின் வேண்டுகோளைத் தான் மறுத்த அடுத்த
கணமே தனக்கு முடிவு நேரிடும் என்பதைப் புரிந்து கொண்டிருந்தான். எனினும்
இந்த விபரீத விளையாட்டைத் தொடரும் எண்ணமும் இல்லை. தள்ளிப் போடும்
எண்ணத்தோடு, சற்றே யோசனையோடு அவன் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும்
இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்று கேட்டான். கப்பமாய் வரும் நூறு
ரதங்களிலிருந்து பொறுக்கி எடுத்த இருபத்தைந்து ரதங்களோடும் ஐம்பது
வீரர்களோடும் செல்லலாம் என ஜராசந்தன் திட்டம் தீட்டினான். மேலும்
தாமகோஷனுக்கு வர முடியவில்லை எனில் அவன் மகனும் சேதிநாட்டு இளவரசனும் ஆன
சிசுபாலனை அனுப்புமாறும் கூறினான். கப்பம் வந்த்தும் இங்கிருந்து செல்லலாமே
என தாமகோஷன் கூறியதற்குத் தான் ஏற்கெனவே கரவீரபுரத்திற்குத் தன்
நம்பிக்கைக்கு உகந்த தன் வீரத் தளபதிகளில் ஒருவனை அனுப்பி இருப்பதாயும்,
அவன் ஸ்ரீகாலவ வாசுதேவனோடு பேசிக் கண்ணனும், பலராமனும் ஒளிந்திருக்கும்
இடத்தைக் கண்டு பிடிப்பான் என்றும் கூறினான். தாமகோஷன் தன் மைத்துனனும்,
கண்ணனின் சித்தப்பனும் ஆன தேவபாகனின் குமாரன் ஆன பிருஹத்பாலன் முட்டாள்
தனமாக ஜராசந்தனிடம் உளறி இருக்கிறான் என்பதைத் தெள்ளத் தெளிவாய்ப் புரிந்து
கொண்டான். மேலும் ஜராசந்தன் தன்னை இந்தத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்
பார்ப்பதையும் அறிந்து கொண்டான். என்னதான் சேதிநாடு சுதந்திர நாடாக,
மகதத்தின் ஆளுமைக்கு உட்படவில்லை எனினும், அவன் படைகள் ஜராசந்தனுக்கு
ஊழியம் செய்யத் தான் உடன்படவில்லை எனில் தன் கதி அதோகதிதான் என்பதும்
புரிந்தது. சேதிநாடும் மகதம் போல் ஆகவேண்டும் என தாமகோஷன் உள்ளூர
விரும்பினாலும் கண்ணனோ, பலராமனோ தலை எடுத்துத் தலைமை தாங்குவதில் அவனுக்கு
எந்த ஆக்ஷேபணையும் கிடையாது. சொல்லப் போனால் அம்மாதிரியான ஒரு தலைமை தனக்கு
உதவியாகவே இருக்கும் என்றும் நம்பினான்.
ஜராசந்தனைக் கொடூரமான
பழிவாங்கும் செயலில் இருந்து தன்னால் ஓரளவாவது தடுக்க முடியும் என்று
எண்ணியதாலேயே இந்தப் படை எடுப்பில் அவன் தன் படைகளையும் இணைத்துக்கொண்டான்.
எவ்விதமேனும் ஜராசந்தனின் மனப்போக்கையும், படைகளின் தாக்குதலையும் தடுத்து
மதுராவையும், அதன் தலைவர்களையும், அங்கே இருக்கும் தன் உறவினர்களையும்,
தன் மனைவியின் உறவினர்களையும் காக்கவே எண்ணினான். ஆனால்?? அவன் எண்ணம்
வீணாகிவிட்டது. முடியாது, முடியாது. மதுரா அழிந்து போகும்படியாக
தாமகோஷனால் நினைக்கவே முடியாது. அவன் மைத்துனன் ஆன வசுதேவனின் இரு
குமாரர்களும் அழிந்து போகவேண்டும் என்றும் தாமகோஷனால் நினைக்கக் கூட
முடியாது. நடு நிலையைக் காக்கவும், நடுநிலையாக நடக்கவும் வேண்டியே அவன் மகத
நாட்டு அரசனை மாற்றும் எண்ணத்தோடு இந்தப் படையில் சேர்ந்து கொண்டான்.
எவ்விதத்திலும் மகதத்திற்குச் சேதி நாடு கட்டுப்படவில்லை. ஆனால்??
சிசுபாலன்? இதை ஏற்பானா? அவன் மகத நாட்டுச் சக்கரவர்த்தியின் பெயருக்கும்,
புகழுக்கும், வீரத்துக்கும் அவன் திறமைக்கும், திட்டமிடும் போக்கிற்கும்
மயங்கிக் கிடக்கிறானே? என்ன செய்யலாம்???