: ஜோதிடம் கற்கலாமா ?

1,324 views
Skip to first unread message

vishalam raman

unread,
Aug 3, 2009, 5:59:32 AM8/3/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
அன்பர்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் இன்று சோம்வார பிரதோஷம்  அருமையான
நாள் ...என்னை ஜோதிடம் பற்றிஎழுத ஊக்கம் கொடுத்த என் அன்புக்குரிய
திருமதி சீதாம்மாவுக்கு என் பணிவான நம்ஸ்காரங்கள். நான் ஜோதிடத்தில்
பெரிய கல்லூரியோ
அல்லது பெரிய இடத்தைத்தொட்டு மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரோ
இல்லை ,என் தந்தை திரு ராஜகோபாலன்  ஜோசியத்தில் புலியாக இருந்தார் ,
அவரிடம் பாடம் படித்து அவரே என்  குருவானார் .நிறைய பிராக்கிடிகல்
பாடங்கள் மூலம்  அதாவது பல தெரிந்தவர்களின் ஜாதகங்களை வைத்து அவரது
வாழ்க்கையை
அலசி அவரது இறந்தக்காலம் கண்டுபிடிக்கச்சொல்வார் . அதே போல் நிகழ்காலமும்
 தான் ,வருங்காலம் அவர் மிகவும் சரியாகச்சொல்லிவிடுவார் ,தன் மரணத்தை
முதலிலேயே சொல்லி என்னிடம் சொல்லி விட்டார் ,நான் அவரை மும்பயில்
பார்க்கச்சென்ற போது " நீ இன்னொருதடவை வரும் போது நான் இந்த உலகத்தில்
இருக்க மாட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள் தான்  கெடு "என்றார் அதே போல்
ஆனது ,,,, ..அவர் மூலம் தான் கைரேகை ந்யூமராலஜி  வாஸ்து என்று பல
கற்றுக்கொண்டேன்
அவர் கணக்கில் புலி ஆனதால் ஒரு நிமிடத்தில் குரு சனி போன்றவர்களின்
புள்ளி விவரங்கள் கூறிவிடுவார் ,ஆனால் எனக்கு கணக்கு அத்தனை
விருப்பமில்லை ஆகையால் ரொம்ப ஆழமாக போகமாட்டேன் ,
என் குருவான என் அப்பாவிற்கு இதை சமர்ப்பிக்கிறேன்
எனக்குத் தெரிந்த அளவு எழுதுகிறேன் ஜோசியம் தெரிந்தவர்கள்
எனக்கு மார்கதர்சியாக இருந்து உதவ வேண்டும் இதை நல்லபடியாக எழுதி முடிக்க
சாய்ராமின் அருளையும் அன்னையின் அருளையும் வேண்டி நிற்கிறேன் ,


ஜோதிடக்கலை ஒரு கடல் தான் .அதைப்படிப்பது மட்டுமில்லாமல் அனுபவத்திலும்
இதைக் கூற வேண்டும் ஜோதிடம்  கைரேகை
ந்யூமராலஜி என்ற மூன்றுக்கும் தொடர்ப்பு இருக்கிறது  நம் உள்ளங்கையிலும்
குரு மேடு ,சனி மேடு சூரிய மேடு  புதன் மேடு என்று எல்லா கிரகங்களும்
வந்துவிடுகின்றன ,அதுவும் நம் ஜாதகமும் அநேகமாக சரியாகத்தான் இருக்கும்
அதேபோல்  நம்பர்களிலும்  கிரகங்கள் வருகின்றன
ஒன்று சூரியனைப்பிரதிபலிக்கிறது  2 சந்திரனையும் மூன்று குருவையும்
நாலு ராகுவையும்  ஐந்து புதனையும்  ஆறு சுக்கிரனையும் ஏழு கேதுவையும்
எட்டு சனியையும்  ஒன்பது செவ்வாயையும் குறிக்கின்றன ,


ஜோசியம் என்ற கடலில் முழுவதும் தேர்ச்சி பெறுவது என்பது லட்சத்தில்
ஒருவர்தான் எனினும் முயற்சியும் தனனம்பிக்கையும்  பலன் எதிர்ப்பாராது
பிறர் நலனுக்காகவும்  படிக்க  அங்கு கடவுள் அருளும் சேர்ந்து உதவுகிறது
ஆனால் மிகவும்  அதிக உழைப்பு வேண்டும்
அந்தக்கலையைப்படிப்பதற்கு சில கிரகங்களின் ஒத்துழைப்பும் வேண்டும்
ஜோசியத்தில் மிகச்சிறந்த திரு பி வி ராமன்   வித்துவான் இலட்ச்மணன்
போன்றவர்களின்  ஜாதகங்களில் ஜோசியக்கலையில் திறமையாக விளங்கும்
கிரகங்களின் அமைப்பும் இருக்கிறது

Geetha Sambasivam

unread,
Aug 3, 2009, 6:51:12 AM8/3/09
to pals...@googlegroups.com, nambikkai, இல்லம் (your HOME)
காத்திருக்கோம். தொடருங்கள் விசாலம்.

2009/8/3 vishalam raman <rvis...@gmail.com>

RAMANATHAN GOPALAN

unread,
Aug 3, 2009, 8:47:03 AM8/3/09
to il...@googlegroups.com
காத்திருக்கோம். தொடருங்கள் விசாலம்.
http://www.jaxtr.com/gopalan1949



2009/8/3 vishalam raman <rvis...@gmail.com>

AKR

unread,
Aug 3, 2009, 2:01:28 PM8/3/09
to il...@googlegroups.com
சீதாம்மா திரும்பவும் எப்போது இந்தியா வருவார் என்று கணித்துக் கூறுங்களேன். அவரைப் பாடச் சொல்லிக் கேட்க வேண்டும். அத்துடன் மழலைஸ், இல்லம், பல்சுவை குழுவினரின் பரஸ்பர சந்திப்பும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

vishalam raman

unread,
Aug 8, 2009, 5:35:55 AM8/8/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 2

ஜோசியத்தில் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டியது பன்னிரண்டு
ராசிகள்,,இந்தப்பன்னிரண்டு ராசிகள் எங்கிருந்து வந்தன ? நம்
பூமியைச்சுற்றி இருக்கும் ஒரு பெரிய வெட்டவெளி
12 பகுதி அல்லது பாகங்களாகப்பிரிக்கப்படிருக்கிறது ,
இதன் பெயர்கள்
மேஷ்ம் , ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி

துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்

நம்மைச்சுற்றிஅதாவது பூமியைச்சுற்றி வளைய வருகின்றன ஒரு ஒன்பது கிரகங்கள்

மேற்சொன்ன இந்த 12 ராசிகளிலும் இந்த ஒன்பது கிரகங்க்ள்
சஞ்சரிக்கின்றன.

அந்தக்கிரகங்களின் பெயர்கள்

சூரியன் சந்திரன் செவ்வாய் அல்லது அங்காரகன் , புதன் வியாழன் அல்லது
குரு சுக்கிரன் சனி ராகு கேது .


இந்தக்கிரகங்கள் ஒன்பது ராசியில் வந்து போக ஒவ்வொரு ராசியிலும்
ஒருவிதமான சக்தி அல்ல்து பலமின்மை ஏற்படுகிறது ,

சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம் ,,சொந்த வீடு என்பதே ஆட்சி என்றும் ஆகிறது ,

சந்திரனுக்கு கடக ராசி சொந்த வீடு அல்லது ஆட்சி ஆகிறது

சூரியன் சந்திரன் இருவருக்கும் ஒரோர் வீடுகள் தான் ,ஆனால்

மற்ற எல்லா கிரகங்களுக்கும் ராகு கேதுவைத்தவிர இரண்டு

வீடுகள் உண்டு ,

செவ்வாய்க்கு மேஷ்மும் விருச்சிகமும் சொந்தவீடுகள்

புதனுக்கு மிதுனமும் கன்னியும் ஆட்சி வீடுகள்

குருவுக்கு தனுசும் மீனமும் ஆட்சிவீடுகள்

சுக்கிரனுக்கு ரிஷ்பமும் துலாமும் ஆட்சிவீடுகள் நாம் ஜனிக்கும்

போது இது போல் கிரஹங்கள் ஆட்சி வீட்டில் இருக்க ஜாதகம்

பலம் பெருகிறது

இதை நம் சொந்த வாழ்க்கைக்கு ஒப்பிட்டால் நாம் நம் சொந்த வீட்டில்
இருக்க நம் மனம் வலுவாக, மனதில் ஒரு திருப்தியும்
ஏற்படுகிறது இல்லையா ? இதுவே நாம் ஒரு வாடகை வீட்டில் இருந்தால் அந்த
வீட்டில் எப்போது எந்த மாதிரி பிரச்சனைத் தோன்றும் என்று தெரியாததல்லவா ?
அந்த வாடகை வீடு கொடுத்தவர் சிறந்த நண்பனாக இருந்தால் ஒரு பிரச்சனையும்
இல்லை ஆனால் அதுவே நாம் இருக்கும் வாடகை வீடு
பகைவனுடையது ஆனால் தினம் தினம் பிரச்சனைத்தான்

இதுவே தான் நம் கிரஹங்களுக்குள்ளும் ஏற்படுகிறது ,

உதாரணமாக சூரியன் சிம்மத்தில் தன் வீட்டில் இருக்க அதிக பலம்

பெறுகிறான் ஆனால் அவன் தன் பகைவன் சனி வீட்டில் இருக்க

நல்லது எப்படி கிடைக்கும் ? நல்லது கிடைக்க வழி உண்டா ?

என்று கேட்டால் வழி உண்டு ,,

ஒருவன் குடியிருக்கும் வீட்டில் சண்டைகள் வர அவனுக்கு சமரசம் செய்து

வைக்க சில நல்லோர்கள் வருவது போல இங்கும் குருஎன்னும்

கிரகத்தின் பார்வையினால் அங்கு கெடுதல் மிகவும் குறைகிறது

இனி யார் யாருக்கு யார் யார் நட்பு யார் யார் பகை எனப்

பார்க்கலாம்

சூரியனுக்கு நட்பு வீடுகள் கடகம் விருச்சிகம் தனுசு மீனம்
.........அதாவது சந்திரன் செவ்வாய் குரு

சந்திரனுக்கு நட்பு வீடுகள் மிதுனம் சிம்மம் கன்னி
அதாவது புதன் சூரியன்

செவ்வாய்க்கு நட்பு வீடுகள் சிம்மம் தனுசு மீனம்
அதாவது சூரியன் குரு

புதனுக்கு நட்பு வீடுகள் ரிஷபம் சிம்மம் துலாம் அதாவது
சுக்கிரன் சூரியன்

குருவுக்கு நட்பு வீடுகள் மேஷம் சிம்மம் விருச்சிகம் அதாவது
செவ்வாய் சூரியன்

சுக்கிரனுக்கு நட்பு வீடுகள் மிதுனம் மகரம் குமபம் அதாவது
புதன் சனி

சனிக்கு நட்பு வீடுகள் ரிஷபம் மிதுனம் கன்னி அதாவது
சுக்கிரன் புதன்

இராகுவுக்கு நட்பு வீடுகள் மிதுனம் கன்னி துலாம் தனுசு மகரம் மீனம் ,

கேதுவுக்கு நட்பு வீடுகள் ராகு போலவே தான் மிதுனம் கன்னி துலாம் தனுசு
மகரம் மீனம் ,,,


அன்புடன் விசாலம்

vishalam raman

unread,
Aug 10, 2009, 6:54:41 AM8/10/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 3

நமக்கு சிலர் "ஹலோ" என்று மட்டும் சொல்லி ஒரு புன்னகைப்புரிந்து
விட்டுப்போவார்கள் அவர்களிடம் பகையும் இல்லை அத்ற்காக மிகவும்
ஒட்டிப்பழுகும் நட்பும் இல்லை
இது போல் தான் நம் கிரகங்களுக்கும் நட்பும் இல்லாமல்
பகையுமில்லாமல் ஒரு நிலைமை ஏற்படுகிறது இவைகளுக்கு
"சமவீடுகள் "என்று பெயர்
சூரியனுக்கு புதனின் வீடுகள் அதாவது மிதுனம் கன்னி சம்வீடுகள்

சந்திரனுக்கு பல கிரஹங்கள் சமநிலையாகிறது
அவைகள் மேஷ்ம் துலாம் தனுசு மகரம் கும்பம் மீனம்

புதனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் தனுசு மகரம் குமபம் ,

குருவுக்கு சம்வீடு குமபம் ஒன்றுதான்

சுக்கிரனுக்கு சம்வீடுகள் மேஷம் விருச்சிகம் , தனுசு

சனிக்கு சம வீடுகள் தனுசு மீனம்

இராகுவுக்கும் கேதுவிற்கும் சம்வீடு என்று ஒன்றும் கிடையாத் அது
எந்தகிரஹத்துடன் எந்த இடத்தில் சேருகிற்தோ அதன்
படி பலனைக்கொடுக்கும்

மூலத்திரிகோண வீடுகள்

எல்லாவற்றைவிட அதிக பலம் கொடுப்பது மூலத்திருகோணவிடுகள் தான்

இதை வரிசைப்படித்தினால் முதலில் ப்கைவீடு ,பின் வருவது
சமவீடு அங்கு பலம் பகைவிட்டைவிட சற்று அதிகம் அதன் பின்
வருவது நட்பு வீடு .இங்கு பலம் கூடுகிறது
அதன் பின் வருவது ஆட்சி வீடு அதாவது சொந்த வீடு
அந்தவிட்டில் அதிக அளவு பலம் தான் அதையும் விட அதிக
பலம் மூலத்திரிகோண வீட்டில் ஏற்படுகிறது
இப்போது எந்தந்த் கிரகத்திற்கு எந்த இடம் மூலத்திரிகோண்மாகிறது
என்பதைப்பார்க்கலாம்

சூரியனுக்கு அதிக பலம் தரும் மூலத்திரிகோண வீடு சிம்மம்

சந்திரனுக்கு மூலத்திரிகோணவீடு ரிஷபம்

செவ்வாய்க்கு மூலத்திரிகோணவீடு மேஷம்

புதனுக்கு மூலத்திரிகோண வீடு கன்னி

குருவுக்கு மூலத்திரிகோண வீடு தனுசு

சுக்கிரனுக்கு மூலத்திரிகோணவீடு துலாம்

சனிக்கு மூலத்திரிகோண வீடு கும்பம்

அடுத்து வருவது உச்ச வீடுகள்
இந்த உச்சவீடுகளுக்கு பவர் அல்லது சக்தி அதிகம்
இந்த உச்ச வீடுகள் மூலத்திரிகோண்ததைக்காட்டிலும் அதிக சக்தியை அல்லது
பலனை அளிக்க வல்லது

இனி கிரகங்களின் உச்ச வீடுகள் என்னென்ன என்பதைப்


பார்க்கலாம்

சூரியனுக்கு உச்சவீடு மேஷம்
சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷபம்
செவ்வாய்க்கு உச்சவீடு மகரம்
புதனுக்கு உச்ச வீடு கன்னி
குருவுக்கு உச்சவீடு கடகம்
சுக்கிரனுக்கு உச்சவீடு மீனம்
சனிக்கு உச்ச வீடு துலாம்
இராகுவுக்கு உச்ச வீடு விருச்சிகம்
கேஎதுவுக்கும் உச்சவீடு விருச்சிகம்

பகைவிட்டைக்காட்டிலும் பலம் குறையும் வீடுகளை நீச வீடு
என்பார்கள் இந்த நீச வீடு உச்ச வீட்டிற்கு ஏழாவது இடத்தில் இருக்கும்
சூரியன் மேஷத்தில் உச்சவீடானதால் அதனின் ஏழாவது ஸ்தானம்
துலாம் ஆகையால் துலாம் சூரியனுக்கு நீச வீடு

இதே போல் சந்திரனுக்கு நீச வீடு விருச்சிகம்
செவ்வாய்க்கு நீச வீடு கடகம்
புதனுக்கு நீச வீடு மீனம்
குருவுக்கு நீச வீடு மீனம்
சுக்கிரனுக்கு நீச வீடு கன்னி
சனிக்கு நீச வீடு மேஷம்
இராகுவுக்கு நீச வீடு ரிஷபம்
கேதுவுக்கு நீசவீடு ரிஷபம்

அன்புடன் விசாலம்

vishalam raman

unread,
Aug 11, 2009, 1:35:05 PM8/11/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 4
சரியான கட்டங்கள் போடும் வழி தெரியாதலால் மேலே இருக்கும் வரிகள்
மூலம் ராசிகளை எழுதி இருக்கிறேன்

12 மீனம் 1 மேஷம் 2 ரிஷ்பம் 3 மிதுனம்

11 குமபம் 4 கடகம்
ராசி
10 மகரம் 5சிம்மம்

9 தனுசு 8 விருச்சிகம் 7 துலாம் 6 கன்னி

இராசி மண்டலம் என்பது ஒரு மாபெரும் வட்டம் .. பூமியைச்சுற்றி இருக்கும்
வட்டம் ஒரு வட்டம் என்றால் அதற்கு 360டிகிரிகள் இருக்க வேண்டும் இனி
மேஷ்ம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் முப்பது டிகிரி
இருக்கவேண்டும்
இந்த முழு ராசி வட்டத்தில் தான் 27 நட்சத்திரங்கள் சம்மாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றன ,அந்த 27 நட்சத்திரங்களின் பெயர்கள் ,

1 அஸ்வனி 2 பரணி 3 கிருத்திகை 4 ரோகிணி 5 மிருகசீர்ஷம்

6 திருவாதிரை 7 புனர்ப்பூசம் 8 பூசம் 9 ஆயில்யம் 10 மகம்

11 பூரம் 12 உத்திரம் 13 ஹஸ்தம் 14 சித்திரை 15 சுவாதி

16விசாகம் 17 அனுஷம் 18 கேட்டை 19 மூலம் 20 பூராடம்

21 உத்திராடம் 22 திருவோணம் 23 அவிட்டம் 24 சதயம்

25 பூரட்டாதி 26 உத்திரட்டாதி 27 ரேவதி

வானத்தில் பல நட்சத்திரங்கள் இருக்கின்றன ஆனால் இந்த 27 நட்சத்திரங்கள்
தான் ஜோசியத்திற்கு உபயோகமானவை

ஒரு கார் புதுச்சேரியில் போய்க்கொண்டிருக்கிறது என்று
ஒரு குறிப்பிட்ட இடத்தைச்
சொல்வது போல் இந்தக்கிரஹம் ரேவதி ந்டசத்திரத்தில் சஞ்சாரிக்கிறது என்று
நட்சத்திரத்தைக்குறித்து சொல்வதும் அதனால் என்ன பலன் என்று சொல்வதும்
ஜோசியத்தில் உண்டு
ஒவ்வொரு நட்சரத்திற்கும் அதனதன் பண்புகள் உண்டு ,

RAMANATHAN GOPALAN

unread,
Aug 11, 2009, 9:43:54 PM8/11/09
to il...@googlegroups.com
 thank u very much for the information if you kindly show in sketch it will be helpful
http://www.jaxtr.com/gopalan1949



2009/8/11 vishalam raman <rvis...@gmail.com>

vishalam raman

unread,
Aug 12, 2009, 5:23:00 AM8/12/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 5

சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம் என்று சொல்லியிருந்தேன் மூலத்திரிக்கோண்
வீடும் சிம்மம் தான் இந்த நிலைமையில் அதை ஆட்சி என்று வைத்துக்கொள்வதா
?அல்லது திரிக்கோணம் என்று வைத்துக்கொள்வதா ? இதைப்பற்றி இப்போது நாம்
பர்ர்ப்போம் .ஒவ்வொரு ராசியிலும் 30 டிகிரி இருக்கின்ற்ன சிம்மத்தில்
முதல் 20 டிகிரி சூரியனின் ஆட்சி பின் வரும் பத்து டிகிரி
மூலத்திரிக்கோணம

இதே போல் சந்திரனுக்கு ரிஷப ராசியில் முதல் மூன்று டிகிரி உச்சம் மற்ற
27 டிகிரி மூலத்திரிக்கோணம்

செவ்வாய்க்கு மேஷராசியில் முதல் 12 டிகிரிமூலத்திரிக்கோணம்
பின் வரும் 18 டிகிரி ஆட்சி

புதனுக்கு கன்னிராசியில் முதல் 10 டிகிரி ஆட்சி அடுத்து வரும் 5
டிகிரி மூலத்ரிக்கோணம் மீதி உள்ள 15 டிகிரி உச்சம்

குருவுக்கு தனுசு ராசியில் முதல் 10 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி இருக்கும் 20 டிகிரி ஆட்சி

சுக்கிரனுக்கு துலா ராசியில் முதல் 27 டிகிரி ஆட்சி கடைசி
3 டிகிரி மூலத்திரிக்கோணம்

சனிக்கு கும்பராசியில் முதல் 20 டிகிரி மூலத்திரிக்கோணம்
பாக்கி பத்து டிகிரி ஆட்சி

கிரஹங்கள் சில ராசிகளில் மிகுந்த நட்பாகவும் சில ராசிகளில் சம்மாகவும்
சில ராசிகளில் பகையாகும் இருப்பது போல்
கிரகங்களுக்குள்ளேயும் நட்பு சமம் பகை என்பது உண்டு

சூரியனுக்கு நட்பு கிரகங்கள் சந்திரன் செவ்வாய் குரு

ப்கை கிரகங்கள் சுக்கிரன் சனி இராகு கேது

சம கிரகங்கள்,,,,,,,,,,,புதன் மட்டும்தான்

சந்திரனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் புதன்

பகை கிரகங்கள் இராகு கேது

சம கிரகங்கள் செவ்வாய் சுக்கிரன் குரு சனி

செவ்வாய்க்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் குரு

பகை கிரகஙகள் புதன் இராகு கேது

சம கிரகங்கள் சுக்கிரன் சனி

புதனுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன்

பகை கிரகங்கள் சந்திரன் மட்டுமே

சம கிரகங்கள் செவ்வாய் குரு சனி ராகு கேது

குருவுக்கு நட்பு கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

பகை கிரகங்கள் புதன் சுக்கிரன்

சம கிரகங்கள் சனி ராகு கேது

சுக்கிரனுக்கு நட்பு கிரகங்கள் புதன் சனி ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன்

சம கிரகங்கள் செவ்வாய் குரு

சனிக்கு நட்பு கிரகங்கள் புதன் சுக்கிரன் ராகு கேது

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் குரு மட்டுமே

ராகு கேது நட்பு கிரகங்கள் சுக்கிரன் சனி

பகை கிரகங்கள் சூரியன் சந்திரன் செவ்வாய்

சம கிரகங்கள் புதன் குரு

vishalam raman

unread,
Aug 16, 2009, 1:25:43 PM8/16/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 6

நாம் முன்பு 12 ராசிகள் இருப்பதைப் பார்த்தோம்

மேஷம் முதல் மீனம் வரை 360 டிகிரி உண்டு இதை ஒவ்வொரு ராசிக்கும்
சமமாக பிரித்தோமானால் ஒவ்வொன்றும் முப்பது டிகிரி கொண்டது , இப்போது
12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள் உள்ளே புகுத்த வேண்டும் இதை
எப்படிப்பிரிப்பது?

ஒவ்வொரு நட்சத்திரதையும் நாலு சம பாகங்களாய் பிரிக்கப்பட்டிருக்கிறது
இதையே தான் முதல் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
என்று குறிபிடுகிறார்கள். முதல் பாகம் என்றால் கால் நட்சத்திரம் என
எடுத்துக்கொள்ளலாம்
இதன்படி மொத்தம் 108 பாதங்கள் இருக்கும் ஒவ்வொரு ராசியிலும் 9
பாதங்கள் வரும் ஆக மொத்தம் இரண்டேகால் ந்டச்த்திரம் ஒரு ராசியில்
வரும் என்று எடுத்துக்கொள்ளலாம்

மேஷ் ராசி நட்சத்திரம்
அசுவனி 4 பாதங்கள் பரணி 4 பாதங்கள்
கிருத்திகை முதல் பாதம் { மொத்தம் 9 }

ரிஷப ராசி கிருத்திகை 2 , 3 4 {3 பாதங்கள்} ரோஹிணி 4 பாதங்கள்
மிருகஷீர்ஷம் முதல் பாதம் 2 ம்பாதம் {மொத்தம்9}

மிதுனராசி மிருகஷீர்ஷம் 3ம் பாதம் ,4ம் பாதம்
திருவாதிரை 4 பாதங்கள்
புனர்பூசம் 1,2 , 3 பாதங்கள் {மொத்தம் 9}

கடக ராசி புனர்பூசம் 4ம் பாதம் பூசம் 4 பாதங்கள்
ஆயில்யம் 4 பாதங்கள் மொத்தம் 9}

சிம்ம ராசி மகம் 4 பாதங்கள் பூரம் 4 பாதங்கள்
உத்தரம் முதல் பாதம் மொத்தம் 9}

கன்னி ராசி உத்திரம் 2 3 ,4 பாதங்கள் ஹஸ்தம் 4
சித்திரை 2 பாதங்கள் {
மொத்தம் 9}

துலாராசி சித்திரை 3, 4 பாதங்கள்; ஸ்வாதி 4
விசாகம் 2. 3
பாதங்கள் மொத்தம் 9

விருச்சிகம் விசாகம் 4ம்பாதம் அனுஷம் 4
கேட்டை 4
{மொத்தம் 9}

தனுசு ராசி மூலம் 4 பாதங்கள் பூராடம் 4 பாதங்கள்
உத்திராடம் 1ம் பாதம் {மொத்தம் 9}

மகரராசி உத்திராடம் 2 , 3 4 பாதங்கள்
திருவோணம் 4 பாதங்கள்
அவிட்டம் 1, 2 பாதங்கள் {மொத்தம் 9}

கும்ப ராசி அவிட்டம் 3 4 பாதங்கள் சதயம் 4 பாதங்கள்
பூரட்டாதி 1,, 2,, 3,, பாதங்கள்

மீன ராசி பூரட்ட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி 4
ரேவதி 4 பாதங்கள்

ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடம் நம் நட்சத்திரமாகும்

vishalam raman

unread,
Aug 19, 2009, 1:27:43 PM8/19/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 7

ஜோதிடப்பலன்கள் அறிய முதலில் ஒவ்வொரு கிரஹமும் ஒவ்வொரு ராசியில்
எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என அறிந்துக்கொளவது அவசியம்
முதலாவதாக சந்திரன் ஒன்றுதான் 12 ராசிகளை முப்பது நாட்களில்
சுற்றி வருகிறான் அதாவது ஒவ்வொரு ராசியிலும் அவன் 2 1/2
நாடகள் தான் தங்குவான்

அடுத்தபடியாக நாம் சூரியனைச்சொல்லலாம் .சூரியன் 12 ராசிகளை ஒரு ஆண்டில்
சுற்றிவருகிறான் ஒரு ராசியில் ஒரு மாதம் தங்குகிறான்

சுக்கிரன் புதன் செவ்வாய் இம்மூன்று கிரகங்களும் 1 1/2
ஆண்டுகளில் 12 ராசிகளைக் கடக்கின்றன .இவை ஒவ்வொரு ராசியிலும் சுமாராக
45 நாட்கள் தங்கி இருக்கும் ஆனால் சில சம்யம்
செவ்வாய் ஒரு ராசியில் அதிக மாதங்கள் தங்க வாய்ப்புண்டு.
சிலசமயம் ஆறு மாதங்கள் கூட அந்த இடத்திலேயே இருக்கும்
இது அடிக்கடி நேர வாய்ப்பு இல்லை எப்போதாவதுதான் நிகழும்
இந்த நிகழ்வு ஏற்பட உலகத்தில் பல்விதமான தீமைகள் நம்பமுடியாத
நிகழ்ச்சிகள் இயறகையின் சீற்றங்கள் தீ விபத்து போன்ற்வைகள் நிகழும்
ஒருசில வருடங்களுக்கு முன் நம் நாட்டிலும் இதைக்கண்கூடாக கண்டோம்
.இது போல் நிகழ்வு செவ்வாய் எந்த ராசியில் தங்கி இருக்கிறது
என்பதைப்பொருத்தது
கன்னியா ராசியில் இது போல் செவ்வாய் தங்க கடலும் வற்றும் என்று சொல்வது
வழ்க்கம் அத்தனைத்தண்ணீர் பஞ்சம் ஏற்படும்
மழையே பொழியாது ,நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடும்
என்று சொல்லப்பட்டிருக்கிறது

பின் வருவது குரு ,இந்தக்கிரகம் 12 ராசிகளை 12 ஆண்டுகளில் கடக்கிறது
ஒரு ராசியில் ஒரு வருடம் தங்கி இருக்கும் சில சம்யம் வக்ரமாகி ஒரு சில
மாறுதல் ஏற்பட வாய்ப்பு உண்டு

ராகு கேது 18 ஆண்டுகளில் 12 ராசிகளைக் கடக்கின்றன இவை
ஒரு ராசியில் 1 1/2 வருடம்தங்கி இருக்கும்

மந்தன் என்ற பெயரிலேயே தெரிகிறது சனி மிகவும் மெதுவாக 12 ராசிகளைக்
கட்க்கும் என்று ,,,,சனி 12 ரசிகளைக்கடக்க முப்பது ஆண்டுகள் பிடிக்கின்றன
இவர் ஒரு ராசியில் 2 1/2 வருடங்கள் தங்குகிறார் .எல்லா கிரகங்களும்
முறைப்படி ராசிகளை வலம் வர
இந்த ராகு கேது மட்டும் ராசிகளை இடது பக்கமாக எதிர்திசையில்
செல்கின்றன மேலும் இரண்டும் ஒரே நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு
ராசிக்கு செல்கின்றன மற்ற எல்லா கிரகங்களும் தனித்தனியே நகர ராகு கேது
மட்டும் சேர்ந்தே நகருகின்றன ராகு கேது பெயர்ச்சி என்று இரண்டையும்
சேர்த்தே
தான் சொல்லுவார்கள் ராகு கேது ஒருவர்க்கொருவர் பார்த்த வண்ணம்
ஒருவர்க்கொருவர் 7 ம் இடத்தில் சஞ்சரிப்பார்கள்
உம்... மேஷ்த்தில் ராகு இருந்தால் அதற்கு 7ம் இடமான துலாத்தில்
கேது இருக்கும் ரிஷ்பத்தில் ராகு இருந்தால் விருச்ச்சிகத்தில் கேது இருக்கும்
ஒரு குழந்தையின் ஜாதகம் அது பிறந்த சரியான நேரத்தைக்
கண்கெடுத்து அதன் அடிப்படையில் கணித்தால் தான் சரியான பலன் சொல்ல
முடியும் கொடுக்கும் நேரத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் அதை
வைத்துக்கொண்டு சொல்லபடும் பலன்கள் மாறிப்போய்விடும் இதற்கு ஜ்ன்ம
லக்னம் என்பது மிகவும் முக்கியம்

ஒரு குழந்தைப் பிறந்த நேரத்தில் அதன் இடத்திலிருந்து கீழத்திசையை நோக்க
அப்போது எந்த ராசி அடிவானத்தில் உதயமாகிக் கொண்டுஇருக்கிறதோ அதுவே ஜன்ம
லக்கினம் .
இதைத்தெரிவிக்க பஞ்சாங்கம் உதவுகிறது அதில் அந்தப்பிறந்த தேதியில்
சூரியன் எந்த ராசியில் பிரவேசித்திருக்கிறார் என விவரமாக எழுதி
இருக்கும் அதைப்பார்த்து லகன்ம் மிகவும் எளிதாக
சொல்லிவிடலாம்

vishalam raman

unread,
Aug 24, 2009, 5:52:09 AM8/24/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 8

சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் இருப்பார் பின் வைகாசியில்
ரிஷபம் ,ஆனியில் மிதுனம் ஆடியில் கடகம்
ஆவணியில் சிம்மம் என்று போய் பங்குனி மாதத்தில் மீன ராசியில் வந்துவிடுவார்

ஒரு குழந்தை ஆவணி மாதத்தில் மாதக்கடைசியில் பிறந்தால்
அந்தக்குழந்தை சிம்ம லகன்மாக இருக்கும் பஞ்சாங்கத்தில் முழு
விவரம் எழுதப்பட்டிருக்கும் ஆகையால் எத்தனாவது பாகையில்
இருக்கிறது என்பதைக்கண்டுப்பிடித்தால் என்ன பாதம் என்றும் தெரிய வரும்
.அதாவது ஒரு இராசியை முப்பதாகப்பிரித்தால்
அதன் ஒவ்வொரு பாகமும் ஒரு பாகை என்கிறோம் அந்த ராசியை
ஒன்பதாகப்பகுத்தால் ஒவ்வொரு பகுதியும் ஒரு நட்சத்திர பாதம் என்கிறோம்
பஞ்சாங்கத்தில் இந்த table கொடுத்திருப்பதால் நாம் மிக எளிதாக இதை
எழுதிவிடலாம்

சந்திர ராசி ,,,

குழந்தைப்பிறந்த நேரத்தில் எந்த ராசியில் சந்திரன் இருக்கிறார்
என்றும் என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார் என்றும் எந்த பாகத்தில்
இருக்கிறார் என்றும் பஞ்சாங்கத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.
குழந்தைப்பிறந்த் போது அனுஷம் நட்சத்திரமாக இருந்தால் விருச்சிக ராசி
என்று கொள்ள வேண்டும்
அங்குதான் சந்திரனும் இருப்பார் அது என்ன பாதம் என்பதை
பஞ்சாங்கம் பார்த்து எழுதி விடலாம்

வக்ரகதி ..

ராகு கேது எப்போதுமே இடமிலிருந்து வல்மாக் எல்லா
ராசிகளையும் வளைய வரும் anticlockwise .

எல்லா கிரகங்களும் மேஷ்த்திலிருந்து ஆரம்பித்து ரிஷபம் மிதுனம்
என்று சுற்ற ராகு கேது கடகத்திலிருந்து ஆரம்பித்து
மிதுனம் ரிஷபம் மேஷம் என்று பின்னுக்கு வந்து சுற்றும்
இதே போல் தான் நட்சத்திர நிலை.யும் .எல்லா கிரகங்களும்
அசுவனி பரணி கிருத்திகை ரோஹிணி என்று சுற்றி வர ராகு கேது ரோகிணி
கிருத்திகை பரணி அஸ்வினி என்று
சஞ்சரிக்கும்
ஆனால் சில சந்தர்ப்பங்க்ளில் செவ்வாய் புதன் குரு சுக்கிரன்
சனி என்ற ஐந்து கிரகங்க்ளும் திடீரென்று பின்னுக்கு வருவதுண்டு
இதைத் தான் வக்கிரகதி என்கிறார்கள் இந்த வக்கிரகதி தன்மை
சில சமயம் வரைதான் நீடிக்கும் பின் வழக்கம் போல் சுற்ற ஆரம்பித்துவிடும்
உதாரணமாக குரு தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்குப்போனபின் சில
சம்யங்க்ளுக்கு திரும்பவும் தனுர் ராசிக்கே வந்துவிட்டு பின் திரும்ப
மகர ராசிக்கு செல்லும் ,இதையே குரு வக்கிரகதியில் சஞ்சரிக்கிறார்
என்பார்கள்

சூரிய சந்திரனுக்கு இதுபோல் வக்ரகதி கிடையாது

vishalam raman

unread,
Sep 4, 2009, 5:14:58 AM9/4/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 9

மேஷத்திலிருந்து மீனம் வரை 12 வீடுகள் ,ஒருவருக்கு
ஜாதகத்தில் லகன்ம் எதுவோ அதுவே அவருக்கு முதல் வீடு
ஜாதகருடைய வாழ்க்கை ஓரளவுக்கு இதில் தெரிந்துகொள்ள முடியும் அவருடைய
உடல் வலிமை குணாதிசியங்கள் மனவலிமை அவருடைய உயரம் நிறம் என பல இந்த
முதல் வீட்டிலிருந்து தெரிந்துக்கொள்ளலாம் இதற்கு மற்ற கிரகங்க்ளின்
அமைப்பும் தேவைப்படும் எல்லாம் பார்த்தப்பின் தான் ஒரு
நிர்ணயத்திற்கு வரமுடியும்
ஒரு ஜாதகருக்கு லகன்ம் பலமில்லாமல் இருந்தால் உடனே அவருக்கு
வாழக்கைசரியாக அமையாது என்று முடிவு செய்ய
முடியாது ஏனென்றால் மற்ற கிரகங்கள் உச்சனாகவோ ஆட்சியாகவோ இருக்க வாழ்க்கை
மிகச்சிற்ப்பாகவும் அமையலாம்

இரண்டாம் வீடு இது தனஸ்தானம் குடும்பஸ்தானம் வாக்கு
ஸ்தானம் ஆகிறது இந்த இரண்டாம் வீடு கண்களையும் குறிக்கிறது
.கல்வியைப்பற்றியும் அறிய முடிகிறது அனுபவத்தில்
சில சமயம் வெளிநாட்டுப் பிரயாணங்கள் கூட தெரிய வருகிறது
உடலுக்கு கண் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியத்தவம்
இந்த இரண்டாம் வீடு அடைகிறது

மூன்றாம் வீடு ...சகோதர சகோதரிகளின் ஸ்தானம் அவர்களது
மனோவலிமை அவர்களின் செயல் வேலைக்காரர்களின்
நிலை ஜாதகரின் காதுகளின் தன்மை துணிவு வீர பராக்கிரம்ம்
எல்லாம் தெரிய வரும் லக்னதிற்கு மூன்றம் வீடு நன்றாக அமைந்தால் குறை
இல்லாத வாழ்க்கை எதிர்ப்பார்க்கலாம்

நான்காம் வீடு ஜாதகரின் தாயின் நிலைமையைக்க்காட்டும் இதை மாத்ருஸ்தானம்
என்பர் ,இதுவே சுகஸ்தானமும் ஆகும்
வீட்டு வசதி வீடு வாகனம் சொத்து வீட்டில் வளர்க்கும் செல்லப்
பிராணிக்ள்; கால் நடைகள் தாய்மாமன் நண்பர்களின் தன்மை
பரம்பரைச்சொத்து போன்றவைகள் அறிய உதவுகிறது உடலில் அவனது வயிற்றின் நிலை
மார்பின்நிலையை அறிய முடிகிறது
நான்காம் வீடு பலமாக அமைந்தால் தாயும் ஆரோக்கியமாக இருப்பார் இது
விதயாஸ்தானமும் ஆகிற்து

ஐந்தாம் வீடு இதுவே பூர்வ புண்யஸ்தானம் குழ்ந்தைகள் பிறப்பது பற்றியும்


தெரிந்துக்கொள்ளலாம்

இதன் வலிமை இங்கு இருக்கும் கிரகங்கள் வேறு கிரகங்களின் பார்வை எல்லாம்
சேர்த்து பார்த்தப்பின்னர்
தான் இதைப்பற்றிச்சொல்ல வேண்டும்
புத்தியின் தெளிவு அல்லது மந்தநிலை கௌரவம் புதல்வர் புதல்விகளின் நிலை
முற்பிறவியின் செய்த பாப புண்ணியங்களின் நிலை என்று இதில் இடம்
பெற்றிருக்கின்றன தவிர உடல் பகுதியில் இருதயம்
, முதுகு பகுதி இவற்றின் நிலைய்யும் அறியலாம்
இதைக்கீர்த்திஸ்தானம் என்றும் புத்திரஸ்தானம் என்றும் சொல்லலாம்

ஆறாம் வீடு , ஒருவனது தேகத்தில் வரும் நோயை பற்றி இதிலிருந்து அறியலாம்
இதை ரோகஸ்தானம்என்று
சொல்லுவார்கள் இந்த வீடே உடல் சம்பந்தப்பட்ட
பிரச்சனைகள் அதனால் அமைதி இழக்கும் வாழ்க்கை
கடன் தொல்லைகள் மனதுக்குள் ஒரு பயம் முதலியவைகளைக் குறிக்கும் இதில்
சுபகிரகப்பார்வை
விழுந்தால் தொல்லைகள் அல்லது பிரச்சனைகள் குறைய
வழி பிறக்கும் எந்த வீட்டையும் முதலிலேயே நல்லதாகவோ கெட்டதாகவோ
முடிவுக்கு வரக்கூடாது
நல்ல வீட்டிலும் சுமாரானப்பலன் கிடைக்கலாம் கெட்டதிலும் நல்ல பலன்
கிடைக்கலாம் அதில் அமர்ந்திருக்கும் கிரகங்களைக்குறித்தும் மற்ற
கிரகங்களின் பார்வைக்குறிதுமே முடிவு செய்ய வேண்டும்
கெட்டவன் கெட்டிடில் கிட்டும் ராஜயோகம் " என்ற ஜோதிட பழமொழி உண்டு
இந்த இடத்தை சத்ருஸ்தானம் என்றும் அழைப்பர் பெயரிலிருந்தே நம்க்கு இது
என்ன என்று புருந்துவிடுகிறது சிலருக்கு அவர்கள் நல்லது செய்தாலும்
அதைப்புரிந்துக்கொள்ளாமல் பகைவராக
மாறும் நண்பர்கள் அமைவார்கள்
இதை ருணஸ்தானம் என்றும் கூறுவார்கள் சம்ஸ்கிருதத்தில் ருணம் என்றால் கடன் ,,,,,

ஏழாவது ஸ்தானம் களத்திரஸ்தானம் அதாவது மனைவி
அல்லது கணவன் அமையும் ஸ்தானம் மனைவி கணவன் தாம்பத்ய உறவைக்குறிப்பிடும் ஸ்தானம்
இது காதல் திருமணமா உறவில் திருமணமா எத்தனை
மனைவிகள் எல்லாமே இதில் தெரியவருகிறது
இதைத்தவிர மனைவி மூலம் வரும் சொத்து நீதிமனற வழக்குகள் இல்லற இன்பம்
சுதந்திர மனப்பான்மை
உடலில் கீழ முதுகு இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட
விவரம் எல்லாம் தெரிய வருகிறது
இந்த ஏழாம் வீட்டில் நல்ல கிரகம் தங்கி இருக்க ஜாதகரின் வாழக்கை மிகவும்
இன்பமாக இருக்கும்
அவர் ம்னதில் உதிக்கும் எண்ணங்கள் ஏழாம் வீட்டின் அதிபர்
நிலையைப்பொருத்தே இருக்கும் ஜாதகத்தில்
இரண்டாம் இடம் ஏழாம இடம் நன்றாக இருந்துவிட்டால்
கவலையே இல்லை

vishalam raman

unread,
Sep 11, 2009, 5:39:55 AM9/11/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 10


எட்டாம் வீடு என்பது நமது ஆயுள் ஸ்தானத்தைக் குறிக்கும்
இந்த வீடு நல்ல கிரஹங்க்ளைக்கொண்டிருக்க நீண்ட ஆயுளையும் நல்ல
ஆரோக்கியமும் பெற்று இருப்பார்கள் குரு நல்ல இடத்தில் அல்லது தன் சொந்த
வீட்டில் அல்லது கேந்திரங்களில் தங்கினாலும் ராகு மேஷம் ரிஷபம் கடகம்
மகரம் போன்ற ராசிகளில் இருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டு
இதே போல் செவ்வாய் சனி சொந்த வீட்டிலோ அல்ல்து உச்சமாகவோ இருந்தாலும் கவலை இல்லை
இந்த ஆய்ள் ஸ்தானத்தில் ஜாதகருக்கு வரும் ஆபத்துக்கள் விபத்துக்கள்
மர்ம உறுப்புக்க்ளின் நிலைமையும் அறியலாம்
பெண்ணிற்கு மாங்கலய பலம் இந்த எட்டாம் இடத்தைக்கொண்டு


அறிய முடிகிறது

ஒன்பதாம் இடம் பிதுர்ஸ்தானம் இது தந்தையின் உடல் நலம்
அவருடைய தன்மைகள் மகனுக்கும் அவருக்கும் வரும் உறவு
வரும் அதிர்ஷடம் தர்மம் கர்மம் போன்றவற்றைக்
குறிக்கிறது தவிர ஜாதகரின் முந்தியப்பிறவியின் தன்மை தெய்வபக்தி
தூரப்பயணங்க்ள் அவனது பேரக்குழந்தைகள்
எல்லாம் ஓரளவு தெரிந்துக்கொள்ளலாம்
உடல் உறுப்புக்ளில் ஜாதகரின் இடுப்பு தொடை இதில் வரும்
ஒன்பதாம் இடத்திற்கு பாக்கியஸ்தானம் என்றும் சொல்லப்படுகிறது .

பத்தாம் இடம் ,,, இதுவே கர்மஸ்தானம் தொழில் ஸ்தானம்
எனப்படும் ஒருவனது தொழில் உத்தியோகம் ,வியாபாரம்
வாழ்க்கை நிலை அவனது நல்ல அல்லது தீயச்செயல்கள்
தெரிய வரும் ,, பத்தாவது வீடு காலியாக இருக்கக்கூடாது,
எதாவது ஒரு கிரகமாவது அமர்ந்து இருக்க வேண்டும்
பத்தில் குரு அமர ஜாதகருக்கு சாப்பாட்டுக்குக் கவலை இல்லை
சூரியன் அல்லது செவ்வாய் அமர தொழில் நன்றாக அமையும்
உடலில் அவனது முழங்கால் இந்த இடத்தில் வரும்

பதினொன்றாம் வீடு ,,, இது லாபஸ்தானம் ஆகும் அத்துடன்
மூத்த சகோதரர் ஸ்தானமும் ஆகும் செய்யும் தொழிலில் வரும்
நன்மை நண்பர்களின் ஆதரவு சுற்றத்தார்களின் நட்பு ஆதரவு
வாழ்க்கையில் வரும் ஆசைகாள் அடை அணிகலன்கள்
சொத்து சுகம் எல்லாம் இந்த வீட்டைப்பார்த்து முடிவு செய்யலாம்.
வெளிநாட்டுப்பிரயாணமும் இந்த வீட்டைப்பார்த்து நிர்ணியிக்கலாம்
இந்த வீடு கால்களைக்குறிக்கும்

பன்னிரண்டாம் வீடு ,,,, இதை விரயஸ்தானம் என்று சொல்வார்கள்
ஒருவனுடைய சிலவு பொருள் இழப்பு பகைவர்களாகும்
உறவினர்க்ள் உடல் நலம் மனக்கவலை சயன சுகம்
மறைமுகமானப்பகைவர்க்ள் உடலில் அவனது பாதங்கள்
கால்விரல்கள் அவனது இடக்கண் எல்லாம் இதன் மூலம் தெரிய
வரும் அவனுடைய விவேகம் ஞான சாதனைக்ள் அறிய
முடிவதால் இதை மோக்ஷ்ஸ்தானம் என்றும் கூறுவர் ,

vishalam raman

unread,
Sep 30, 2009, 5:26:38 AM9/30/09
to nambikkai, இல்லம் (your HOME), palsuvai
ஜோதிடம் 11

நவகிரஹங்கள் ஒவ்வொன்றும் சில அதிகாரங்க்ள் பெற்றிருக்கிறது,இதை
காரகத்துவம் என்று சொல்வார்வார்கள்

சூரியன் ,,,,தந்தையின் இன்ப துன்பங்க்ளையும் அவரது வாழ்நாளையும்
நிர்ணியிக்கக்கூடியவன் இவரை பித்ருகாரகன்
என்பார்கள் தவிர ஜாதகருடைய துணிவு பராக்ரமம் உடல்வலிமை மனோ வலிமை
காய்ச்சல் கண்க்ள் நிலை எல்லாம் சூரியனால் அறியலாம்

சந்திரன் மாத்ருகாரகன் தாயின் நலன் தாயின் நிலை
ப்ற்றி அறியலாம், ஜாதகரின் மன நிலை உடல் நிலை அறிவு சொத்து உத்தியோகம்
உற்க்கத்தில் நிலை ஆரோக்கியம்
நுரையீரல் தன்மை ஆடுமாடு மற்ற வாகனங்கள் பற்றி
அறியலாம்

செவ்வாய் ,,, சகோதர காரகன் ஜாதகரின் துணிவு வாழ்நாள்
உடல் நிலை நிலபுலன்கள் அவனது பழக்க வழக்கங்க்ள்
பகைவர்கள் வெட்டுக்காயங்கல் கடன்கள் அறுவைச்சிகிச்சை
சண்டைக்ள் முன் கோபம் இவற்றை எல்லாம்
தெரிந்துக்கொள்ளலாம் ஆயுதங்களுக்கும் இரத்ததிற்கும் செவ்வாய்
அதிதேவதை செவ்வாய் சிறந்த இடத்தில் இருக்க புகழ் பெற்ற
சர்ஜன் ஆவார் .மெகேனிகல் இஞ்சினியர்களுக்கு செவ்வாய் முக்கிய
பங்கு வகிக்கிறது

புதன் வித்யாகாரகன் ஜாதகரின் கல்வி நிலை தாய் வழி மாமன்
நண்பர்களின் இயல்பு நரம்பு மண்டலம் கணிதம் ஜோசியம் வியாபாரம்
சொல்வனமை கல்வி நகைச்சுவை மேடைப்பேச்சு
திறமை எல்லாம் புதன் மூலம் தெரிய வரும்

குரு புத்திரகாரகன் கர்ம தர்மாதிபதி ,,ஜாதகரின் குழந்தைகளைப்
பற்றியும் அவரது தயாள குணம் தெய்வபக்தி மத சம்பந்தம்
உடல் வளர்ச்சி வலது காது, கல்லீரல் இரத்தக்கோளாறுகள் ந்ற்குணம் என்பது
பற்றி அறிய முடியும் வக்கீல் ஜட்ஜ் மதகுருக்கள் பலசரக்கு வியாபாரிகள்.
ஆசிரியர்க்ள் இவர்களுக்கு
இவரே அதிதேவதை

சுக்கிரன் களத்திரகாரகன் காதல் விவகாரம் இன்பம் காமம் வீடு
வாகனங்க்ள் மர்ம உறுப்புகல் சிறுநீர் ஸ்தானம் கலைத்திறன
கலாரசனை ஓவியம் ஆடல் பாடல் வாசனைப்பொருடகள் எல்லாம் இவரால் தெரிய
வரும்.ஆபரணங்கச்ள் செல்வத்தின் நிலை சூதாட்டத்தில் வெற்றி மன மகிழ்ச்சி
ஆகியவை கிட்ட இவரே காரணகர்த்தா ஆகிறார் ,

சனி ,,,ஆயுள்காரகன் வாழ்வு மரணம் இரண்டிற்கும் அதிபதியாக இருப்பவர்
ஜாதகரின் தொழில் வாழ்க்கையில் வரும் தடைகள் தீராதநோய்கள் ,
மனக்கஷ்டங்கள் துக்கம் திருட்டால் ஏற்படும் நஷ்டங்கள் ,தீர்வு
காணமுடியாதப்பிர்ச்சனைகள் போன்றவைகளுக்கு இவரே காரணம்
இவர் மாளிகையிலும் அமர வைப்பார்
குடிசையிலும் தள்ளிவிடுவார்

ராகு பிதாமகக்காரன் தந்தை வழி உறவு கடல் கடந்து போய் தொழில்
துன்பம் அவமானம் சிறை வலிப்பு நோய் பித்த நோய் கான்ஸர்
இவற்றுக்கெல்லாம் அதிபதி
கல்வித்திறன பேச்சுத்திறனையும்
ராகுவால் அறியலாம்

கேது ,,மாதாமக காரகன் இவரை ஞானகாரகன் என்றும் அழைக்கிறார்கள் . பிறவித்துன்பத்தை
அறுக்க வழி செய்வான் தாயின் பெற்றோர்களைப்பற்றி தெரிந்து
கொள்ளலாம் தந்திரங்கள் பாபச்செயல் கடன்கள் புனிதஸ்தல
யாத்திரை புதையல் வெளிப்படுத்தல்
ஆகியவைகளுக்கு இவரே வழிக்காட்டி,
பாம்பாட்டிகளுக்கு கேதுதான் அதி தேவதை சின்னம்மை தோலில் சிறங்குகள்
தொழுநோய் இவைகளுக்கும் இவர்தான் காரணம் ,

பொதுவாக கிரஹங்கள் ஆட்சியாக வலுவாக இருந்தால் அவை நல்ல பலன்களைத் தருகின்றன ,

AKR Consultants

unread,
Jul 23, 2012, 4:24:00 PM7/23/12
to il...@googlegroups.com
http://www.astrotimers.com/astrology/20090803_learn-astrology.php

Dear friends,

I have given a face lift to the astrotimers.com site. I have also published all the chapters of astrology guidance article by Vishalam amma. I started this website to help my senior Engineer and astrologer friend, philos. opher and guide.

Horoscopes and biodata of boys and girls seeking alliances for marriage are published free of cost in astrotimers.com/ Please make the best use of the site for your benefit and of your friends and relatives.

Articles from astrologers are also welcome for publication. We give free publicity to astrologers who contribute contents to the site.

with best regards,

akr

2009/9/30 vishalam raman <rvis...@gmail.com>
--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---




--
    AKR 
Reply all
Reply to author
Forward
0 new messages