அன்புத் தோழி

3,022 views
Skip to first unread message

malai

unread,
Dec 9, 2007, 11:37:51 AM12/9/07
to இல்லம் (your HOME)
சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

GEETHA SAMBASIVAM

unread,
Dec 9, 2007, 8:38:49 PM12/9/07
to il...@googlegroups.com
"சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
 
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !"
 
அற்புதமான தோழமை, இப்படி ஒரு தோழமை கிடைக்க அந்தத் தோழி கொடுத்து வைத்திருக்கிறாள். வாழ்த்துக்கள், தோழமையைப் பகிர்ந்து கொண்டதற்கும், நல்ல தோழியை இனம் காட்டியதற்கும். நன்றி.
 அருமையான கவிதை!

விஸ்வநாதன்

unread,
Dec 10, 2007, 1:04:16 AM12/10/07
to இல்லம் (your HOME)
நன்கு உரைத்தீர், தோழரே!


Love ALL Serve ALL. God is Great.
B. Viswanathan - from azhagi.com
--------------------------------------------------------------------------------
Azhagi - Your fastest, easiest and most sophisticated Tamil
Transliterator.
If you can find a better one, may you please show it to us. Visit us
at http://azhagi.com

vishalam raman

unread,
Dec 10, 2007, 3:35:43 AM12/10/07
to il...@googlegroups.com
மிக உண்மையான் அழமான நட்பு ,,கவிதை நன்றாக உள்ளது
அன்புடன் விசாலம்

 

N Suresh, Chennai

unread,
Dec 10, 2007, 4:12:29 AM12/10/07
to il...@googlegroups.com
அன்பின் பெருமாள்/மாலை,
 
நட்பின் வெளிப்பாடுகளை சித்தரிக்கும் நல்லதோர் கவிதை.
 
வாழ்த்துக்கள்
 
அன்புடன்
என் சுரேஷ்

 
Reply all
Reply to author
Forward
0 new messages