பிட்ஸ்பர்க், நியூஜெர்ஸி, மேப்பிள் மற்றும் மல்லிபூ போன்ற இடங்களிலும்,
இத்தகு கோவில்கள், சிறப்பாக இந்தியர்களால் (பெரும்பாலும் ஆந்திர
மாநிலத்தவரால்) நிர்வகிக்கப்பட்டுச் செய்லாற்றிக் கொண்டிருக்கின்றன.
அங்கு சென்றால் நீங்கள் சொன்ன உணர்வுதான் - நாம் இந்தியக் கலாசாரத்தை
விடாமல், எல்லா நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார்கள். அந்த நாட்டு
மனிதர்களும் ஆர்வமுடன் பங்கேற்கிறார்கள் என்பதே சிறப்பு.
நியம நிஷ்டைகள் நம் நாட்டை விடச் சிறப்பாக இருக்கிறது. இங்கும்
சிருங்கேரி மடத்தால் பராமரிக்கப்படும் கோவில்களில், அர்ச்சகர்/குருக்கள்/
பட்டாச்சாரியார்கள் பணத்திற்காக அலைவதில்லை. அவர்களின் தேவைகளை மடம்
சிறப்பாகக் கவனிப்பதால், தங்கள் கடமைகளை (நித்ய அனுஷ்டானங்களை) முறை
தவறாது செய்கிறார்கள். ஒரு வேளை தவறு செய்து பிடிபட்டால், அவர்கள்
நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற அச்சமோ தெரியவில்லை.
இசைக் கச்சேரிகள் பஜன் எல்லாம் உண்டு.
பெரும்பாலும் மஹாவிஷ்ணுவின் கோவில்கள் அதிகம் இருக்கிறார் போலத்
தோன்றுகிறது. காரணம் தெரியவில்லை.
கோவிலைத் தூய்மையாக வைத்திருக்கிறார்கள். ஒரு வேளை எல்லோருமே
படித்தவர்கள், நாகரீகம் தெரிந்த ஒரு சமுதாயம் என்ற காரணமோ ? சிறிது பிற
மதக் காழ்ப்பு (மல்லீபூ கோவில் சம்பவம் பற்றிப் படித்திருப்பீர்கள் என
நினைக்கிறேன்) உணர்ச்சி இருக்கிறது. இதற்கு இங்கு நடக்கும் மதக் கலவர
நிகழ்ச்சிகளும் மூலகாரணமாக இருக்கலாம்.
மொத்தத்தில் சிறப்பான அனுபவம்.
அன்புடன்
செபரா