Sidhars of South India

50 views
Skip to first unread message

Venkatram Shrinivas

unread,
Aug 29, 2010, 3:56:41 PM8/29/10
to maza...@googlegroups.com, mazalais, இல்லம் (your HOME)


சித்தர் பாடலகள்

சித்தர்ளைப் பற்றி எழுதுவதாகத்துடங்கி இவ்வளவு நாட்கள் தானும் ஒரு சித்தன் தான் என்று ஒரு பெரும் பொய்யை உண்மை போல் காட்டுவதற்கு ப்ல நாட்கள் 'சும்மாயிரு'ந்துவிட்டு இப்பொழுது  வழக்கம் போல் எல்லோருடைய கருணையுள்ள மன்னிப்பையும் மிகப் பணிவுடன் கோரிக்கொண்டு இப்பொழுது முதலிலிருந்தே துடங்கு கிறேன்


நான் முன்பே அறிவித்துள்ளேன் தமிழ்ப் பல்கலை இணயத்திற்கு அறிவித்து இணையத்தின் முனைவரில் ஒருவரான் திரு நக்கீரன் அவர்களுக்கு அறிவித்து அவர்களது அனுமதியுடன் tab fontடிலுருந்து யூனிகோடில்
மாற்றி வழங்குகிறேன்

சித்தர்களின் எண்ணிக்கையைப் பொதுவாகக் குறிக்குமிடத்துப் பதினெண் 
சித்தர் என்று குறிப்பிடுவர். பதினெண் சித்தர் யார் யார்?

     1. திருமூலர்,   2. இராமதேவர்,  3. கும்பமுனி,  4. இடைக்காடர்,  5. 
தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 
10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு, 
15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18. 
கோரக்கர்.

     இது ஒரு பட்டியல்.

     1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் 
சித்தர், 4. சதோகநாதர்,  5. இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7. 
புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9. மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் 
சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14. 
விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17. 
சங்கிலிச் சித்தர், 18. திரிகோணச்சித்தர்.

     இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும் 
அடங்குவர்.

     1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி, 
6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்சமுனி,  9. வியாசர், 10. கௌதமர் - இது 
இன்னொரு  பட்டியல்.  பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் 
என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

     1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணானந்தர், 6. 
போகர்,  7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. 
புலிப்பாணி, 12, அழுகணி,
13. பாம்பாட்டி,  14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. 
பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 
22. நந்தீசர்,  23, அகப்பேய்,  24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத 
நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. 
காகபுசுண்டர்,  32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 
36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர் 
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், 
ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்டவசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

     இப்படி   சித்தர்கள்   பட்டியல்  கணக்கில்லாமல்  பெருகிக்கொண்டே 
செல்கிறது.  ஆயினும்   பதினெட்டுப்  புராணங்கள்,  பதினெட்டுப்  படிகள், 
பதினெண்  குடிமை,  பதினெண்  பாஷை என்று வரையறை செய்தது போல் 
சித்தர்களையும்  பதினெண்  சித்தர்களாக ஒரு வரையறை செய்தனர். சங்கப் 
புலவர்கள்   செய்த  நூல்கள்  பத்துப்பாட்டு,   எட்டுத்தொகை,  பதினெண் 
கீழ்க்கணக்கு  என்று  எண்ணிக்கையில் தொகுத்தது போலவே இப்பதினெண் 
சித்தர்  பாடல்களும்  பெரிய  ஞானக்கோவை என்ற நூலாகத் தொகுத்தனர். 
ஏனைய சித்தர் பாடல்கள் அவரவர் பெயராலேயே தொகுக்கப்பட்டன.

     இந்தப் பதினெண் சித்தர் பாடல் தொகுதியினுள் அகப்பேய், அழுகணி, 
கடுவெளி,  குதம்பை, பாம்பாட்டி, சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், 
காகபுசுண்டர்,  ஞானசித்தர்,  கந்துளிச்  சித்தர், கஞ்சமலைச் சித்தர், இடைக் 
காட்டுச்  சித்தர்,  புண்ணாக்குச்  சித்தர்,  குதம்பைச் சித்தர், விளையாட்டுச் 
சித்தர், ஆகிய பாடல்கள் தொகுக்கப்பட்டு உங்கள்முன் அறிமுகமாகின்றன.
(தொடரும்)



--
V.Shrinivas (Seenu)

Venkatram Shrinivas

unread,
Aug 30, 2010, 2:48:44 PM8/30/10
to maza...@googlegroups.com, mazalais, இல்லம் (your HOME)
சித்தர் பாடல்கள்

பெரிய ஞானக்கோவை

1. சிவவாக்கியர் பாடல்
     சித்தர் இலக்கியத்தில் சிவவாக்கியர் பாடலுக்குத் தனி மரியாதை 
தரப்படுவதுண்டு,  காரணம்,   இவர் பாடல்களில் வழக்கமான சித்தர் 
கருத்துக்கான யோகம்,  குண்டலினி,  நிலையாமை.  வாசி கருத்துக்களுடன் 
புரட்சிகரமான கருத்துக்களையும் கூறுவதால் இவர் புரட்சிச் சித்தர் என்றும் 
கூறப்படுகின்றார். சமுதாயப் புரட்சி செய்த இந்தச் சித்தர் ஆரம்ப காலங்களில்
நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறினார் என்பதை இவரின்  பாடல் 
கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. இதனையொட்டி  இவர் முதலில் நாத்திகராக 
இருந்து பிறகு சைவராகி சிவவாக்கியரானார் என்றும்; பிறகு வீர வைணவராக 
மாறி திருமழிசை ஆழ்வாரானார் என்றும் கூறுவதுண்டு.

     சிவவாக்கியரின்  பாடல்களும்  திருமழிசை  ஆழ்வார்   பாடல்களும் 
சந்தத்தில்  மட்டுமே  ஓரளவு  ஒத்துப்  போவதாலும் இவர் பாடல் சாயலில் 
ஏனைய சித்தர் பாடல்களும் இருப்பதால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளுமாறு இல்லை.

விக்கிரக ஆராதனை

     சிவவாக்கியர் பாடல்களில் விக்கிரக ஆராதனை வெகுவாகப் பழிக்கப் 
படுகின்றது.

நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே 
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா 
நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் 
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
     சுவை மிகுந்த உணவுப் பதார்த்தங்களைச் சமைத்த சட்டியானது. அந்த 
உணவின்  ருசியை  உணர்ந்து  கொள்ளாதது  போலவே மனக்கோயிலினுள் 
இறைவன்  இருப்பதை  அறியாமல்  வெறும் கல்லை  நட்டு வைத்து தெய்வ 
மென்று  பெயரிட்டு  பூக்களாலும்  மந்திரங்களாலும்   வழிபாடு   செய்வது 
அறியாமையே யாகும் என்கிறார்.

“ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே 
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் 
பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் 
ஈசனுக்குகந்த கல்லெந்தக் கல்லு சொல்லுமே”
     நட்டு  வைத்த கல்லை  தெய்வம் என்று  நினைத்து அக்கல்லின் மேல் 
மலர்களைச்  சாத்திவிட்டு அதைச் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள். மொண மொண 
என்று ஏதோ மந்திரங்களையும்  சொல்லுகிறீர்கள். அந்த மந்திரத்தால் என்ன 
பயன் என்று யோசித்துப் பார்த்தீர்களா? அட  மூடர்களே, கடவுள் என்பவர் 
தனியாக வெளியில் இல்லை, உள்ளத்திலே இருக்கிறான். அப்படி இருக்கையில் 
நட்ட கல்லைச் சுற்றி வந்தால் அது பேசுமோ?

 அடுப்பில் வைத்துச்  சுடப்பட்ட சட்டியும் அதனுள்ளே இருக்கும் 
அகப்பையும்   அதில்   சமைக்கும்  உணவின்  ருசியை   அறியாதது 
போலவே நீர் செய்யும் புற  வழிபாட்டினால் இறைவன் வெளித்தோன்ற 
மாட்டார்.  இறைவனை உள்ளத்தால் மட்டுமே காண இயலும். அவனை 
கல்லில்  காண  முடியும்   என்று   சொல்லுவது  வெறும்  பிதற்றலே 
என்கிறார்.

    கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும், 
அவைகளுக்குத்  தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று 
தொட்டு  நடந்து  வருபவை.  இவைகளையெல்லாம்  மூடப்பழக்கங்கள் 
என்று  சாடுவதென்றால்  எவ்வளவு  துணிவு  வேண்டும்?  புனிதமான 
அடிப்படைக்  கொள்கையையே  ஆட்டிப்  பார்ப்பதென்றால் அதனை 
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?

     இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் 
தேவைப்படுகின்றது.

     ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள் 
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது. 
சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத் 
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான் 
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை 
தரக்  காத்திருக்கின்றார். ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப் 
போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில் 
கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்; 
கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப் 
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறது.  பலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு 
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. 
உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம் 
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில் 
இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும், 
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்   என்று 
வாதிடுகின்றனர்.

     சித்தர்களின்  இந்தக்  கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட 
வாறு  உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம் 
செய்து  அதைப்  பல  பெயர்களால்  அழைப்பது  அறிவின்மை;  அறிவற்ற 
மூடர்கள்தாம்  இவ்விதம்  செய்வார்கள்.   உலகைப்   படைத்துக்   காத்து, 
அழிக்கவும்  வல்ல  ஒரு  பொருள்  கல்லிலா  இருக்கிறது? இல்லை அந்தக் 
கடவுளின்  வடிவம்  உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால் 
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

     பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் 
     எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள்
     பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
     ஒண்ணும் ஆகி உலகு அளித்த ஒன்றை நெஞ்சில் உன்னுமே

2010/8/30 Venkatram Shrinivas <see...@gmail.com>



--
V.Shrinivas (Seenu)

Sudars Anan

unread,
Aug 31, 2010, 3:09:59 AM8/31/10
to il...@googlegroups.com
hi ,
 it is wonderful subject , which  i was looking for long time.
Thanks for the effort you put it.
thanks
sudarsan

--- On Mon, 30/8/10, Venkatram Shrinivas <see...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "ILLAM [இல்லம்], your HOME".
To post to this group, send email to il...@googlegroups.com
To unsubscribe from this group, send email to illam-un...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/illam?hl=en

Venkatram Shrinivas

unread,
Sep 1, 2010, 9:51:46 AM9/1/10
to il...@googlegroups.com
Dear Sri Sudarsan
I was indeed very pleased to receive such an encouraging response to my posting of Sidddar songs. I have a huge collection which may take quite few months to complete. I hope you would have the sustaining interest and patience to receive and store the whole of it.
Thank You & God Bless You

2010/8/31 Sudars Anan <sudar...@yahoo.com>



--
V.Shrinivas (Seenu)
Reply all
Reply to author
Forward
0 new messages