You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to இல்லம் (your HOME)
எவ்வளவுதான் வளர்ந்திருந்தலும் அம்மா என்றாலே அருமைதான். அம்மா மட்டுமா அருமை அவள் புடவையும் கூடத்தான்! அந்த நினைவலையில் உதித்த கவிதை இது! அம்மாவின் புடவை! அடுக்கி வைத்த நினைவுகளை கலைத்தது அலமாரியிலிருந்து நழுவிய அம்மாவின் புடவை! பதமாய் வந்த துணியின் வாசம் இன்றைக்கும் பொக்கிஷமாய் மனதில் பதுங்கியிருக்கும்! இஸ்திரிப்பெட்டி இல்லா காலம் நித்தம் அதன் இருமுனைப் பிடிக்க அடிபிடி யுத்தம்! அழகாய் நீவி மடித்து வைப்பதில் கிடைக்கும் அருமைப்பரிசாய் அம்மாவின் அன்பு முத்தம்! கட்டமும் வட்டமும் கண்டு கொள்ள உதவும் கணிதப்பலகையாய் ஆனது அழகுப்புடவை.! கண்ணீரோடு கசப்பையும் துடைக்கும் கலையை கச்சிதமாய் கற்றுத் தந்ததில் அது எங்கள் ஆசான்! பழுப்பேறிய முந்தானையில் முடிந்த காசு பால் ஐசாகவும், பஞ்சு மிட்டாயாகவும் இனித்தது. எங்களோடு புடவையும், பாலும் மோரும் சுவைத்து அழகுப் பாப்பாவிற்கு ஏணையாகிப் போனது! சுருக்கம் பல வந்தாலும், வருடம் பல போனாலும் நெருக்க இழை விலகாமல் நெருக்கிப் பிடித்தது ! மீண்டும் புடவையை வருடும் விரலுக்கு புரிபட்டது மறைந்திருந்த பாசமும் அம்மாவின் வாசமும்! பாகம்பிரியாள்.
vishalam raman
unread,
Feb 8, 2009, 3:31:55 AM2/8/09
Reply to author
Sign in to reply to author
Forward
Sign in to forward
Delete
You do not have permission to delete messages in this group
Copy link
Report message
Show original message
Either email addresses are anonymous for this group or you need the view member email addresses permission to view the original message
to il...@googlegroups.com
ஆம் காயத்ரி என்னிடமும் என் அம்மாவின் ஒரு புடவை இருக்கிறது அதை அப்படியே பத்திரப்படுத்தி வருகிறேன் அதைப்பார்க்கும் போது என் அம்மாவே என் முன் தெரிகிறாள்
Geetha Sambasivam
unread,
Mar 1, 2009, 3:07:11 AM3/1/09