"நேரில் அவளை பார்க்கும் போதெல்லாம்
எரிமலை என்னுள் வாய்பிளக்கிறது
பிரிந்த நேரத்தில்
என்னுள் ஊற்று சுரக்கும்
நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
நிதர்சனங்களை நிந்திக்கவும்
நினைவுகளை பூஜிக்கவும்
எப்பொது நான் கற்றுக்கொண்டேன்?
விக்கிரகத்தை துதிக்கவும்
தெய்வ தரிசனத்தை ஒதுக்கவும்
செய்பவன் உண்மை பக்தனோ?
பிரிவில் தேவதையாய்
உறாவில் அரக்கியாய்
உன்னை நினைப்பது குற்றம் தான்
குற்ற கூண்டுகளில் என்னை
மாற்றி மாற்றி ஏற்றி இறக்கும்
இந்த மனதை என்னவென்பது"
*புத்தகம் : உயரத்திலிருந்து
எழுதியவர்: என்.ஆர்.தாசன்
3)தாத்தாவும் பல்லியும்
(சேவியர்)
( என் சுரேஷ்)
பூக்களே நலமா?
நீங்கள்
பறிக்காதவரையில்
நலம்தான் மனிதா...
பெண்ணின் கூந்தலுக்கு
பறித்தல் தவறா?
காலை அழகாய்ச்
சிரிக்கும் எங்களை
மாலை அழ அழ
தூர எறிகின்றனரே பெண்கள்?
வாடியபின்னர்
நீங்கள் தேவையில்லைதானே?
உங்கள் பார்வையில்
வாடுகிறோம்
எங்களுக்கு அது
நீண்ட உறக்கம்.
சரி சரி கோபம் வேண்டாம்
உங்கள் வாழ்க்கை பற்றி..
தண்டவாளம் அருகில்
பூத்தாலும் அழுவதில்லை
நாங்கள்.
குப்பைத்தொட்டியில் பூத்தாலும்
கலங்குவதில்லை
நாங்கள், விண்ணோக்கியே
பார்க்கிறோம்..
கவலை ஏதேனும்?
மனிதம் மறந்த
சில மனிதர்களின்
சவ ஊர்வலத்தில் கூட
மணம் வீசும் எங்களை,
சாலைகளில் நீங்கள்
வீசி எறியும் பொழுதுகளில்
கவலைப்பட்டு வாடிப்போகிறோம்.
கேள்விகள் ஏதேனும்?
காதலில் பரிசாகவும்,
திருமணத்தில் மாலையாகவும்,
வாழ்வெல்லாம்
மனிதர்களுக்காக பூத்துச் சிரித்தாலும்
சில பொழுதேனும்
எங்களுடன் நேரம் செலவிட
உங்களுக்கு நேரமிருக்கிறதா?
நன்று [சுய-அலசல் (self-analysis) எல்லோருக்கும் தேவை]
இக்கவிதையை விட நன்று, மற்றவர் படைப்பைப் பாராட்டிய உங்கள் குணம்.
இரட்டிப்பு நன்று, உங்கள் துறையிலேயே உள்ளவரின் படைப்பைப் பாராட்டியது!
இத்தகைய 'உண்மையான' பாராட்டு ஆன்மாவில் நிலைக்க பெரிதும் உதவும் என்பது
எனது பணிவான அபிப்பிராயம்.
பேரன்புடன்
விஷி
On Dec 13, 10:08am, "N Suresh, Chennai" <nsureshchen...@gmail.com>
திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்!![]()
கிழிந்து போனக் கைப்பையைத் தைக்க
வீதிதோறும் கடைகள்.
அறுந்த செருப்பை
உடனே தூக்கி எறிய முடியாது.
தைத்து தைத்து போட்டுக் கொள்ளலாம்.
பர்ஸ் வாய் பிளந்து தெரிந்தாலும்
தைத்துக் கொள்ளலாம்.
வளையல்களை ஒட்டிக் கொள்ள
உயர்ந்த பசை உள்ளது.
பிய்ந்த நகத்தைக் ஒட்டக்கூட
அறுவை சிகிச்சை உள்ளது.
" இது எல்லாவற்றையும் சேர்க்கும்-
உடைந்த இதயத்தைத் தவிர"
என்கிறது ஒரு பசை விளம்பரம்.
கணவனுடன் பிணக்கு என்றபோது
" பிரிந்து விடு, போதும் சமரசம்
புறபட்டு வா " என்கிற என் தோழியே
நீ சிநேகிதிதானா.
கைப்பையைக் கேட்பவன் கூட
சில சமயம் காசு கேட்பதில்லை.
2.
ஒற்றைக் கீற்றாய் கண்மை
கால்களை இறுக்கும் சுரிதார்.
பளிச்சென்ற பவுடர்
உதட்டில் சாயம்.
குட்டைத் தலைமயிர்
இடுங்கிய கன்னம்.
நகப்பூச்சு.
ஒல்லியான கவரிங் வளையல்.
சற்றே உயரம் காட்டும் ஹைகீல்ஸ்.
செதுக்கிய புருவம்.
எல்லாம் பழசுதான்
நீதான் புதுசு என்கிறாய்.
3.
அறுபதுக்கு நாற்பது அடி வீடு.
வெளி மூலையில் குப்பைக்கான இடம்
தாள்கள், இலைகள்
மக்காத குப்பை
மக்கும் குப்பை.
நகராட்சிக்காரனுக்குப் போடவென்று
மக்காத குப்பை
மக்கும் குப்பையென
தனித்தனியேப் பொட்டலங்கள்.
பார்த்துப் பேசி
கடிதம் பரிமாறி
நேசம் வளர்த்து
நகராட்சிக்காரனுக்கு போடும்
மக்காத குப்பைப் பொட்டலத்தில்--
நீ சேகரித்ததும்
நான் கொடுத்ததும்.
நீ கொடுத்ததும்
நான் சேகரித்ததும்.
4
புத்தனே
தியானம் போதும்
எழுந்திரு.
யசோதராவின் கனவுகளில் வந்து போகும் ஆண்களை
விரட்ட வேண்டாமா.
யசோதராவுக்கு கனவுகள் அபூர்வம்.
ஆனால் சமீபமாய் வரும் கனவுகளில்
ஆண்கள் வந்து போகிறார்கள்.
யசோதராவுக்கு தியானம் பழக்கு.
அல்லது கை கோர்த்துக் கொள்.
யசோதராவாகி பார் புத்தனே.
உனக்கும் அவள் தெரிவாள்.
அவள் உடம்பை உணர்வாய்.
தியானம் தனி ஒருவனின் நிம்மதிக்காகவா.
எல்லோருக்கும் தான்.
தியானம் என்றால் உலகம்.
புத்தர் என்றாலும் உலகம்.
புத்தனே தியானம் போதும்.
6.
பேசி நாளாகின்றன்.
பார்வை கூட
நேருக்கு நேர் இல்லை.
கேள்வி கேட்கும்போது
சுவர் பார்த்து கேள்.
பதில் சொல்லும் போது
வானம் பார்த்துச் சொல்.
மேஜையில் வைக்கப்படும்
உணவில் சூடில்லை.
வார்த்தைகளில் வெப்பம் தொடாமல்
அறைக்குள் நடக்கப் பழகு.
யாரோ உறவினர்கள் வருகிறார்கள்.
கேட் திறக்கும் சப்தம்.
புன்னகை முகமூடியை அணிந்து கொள்.
சிரித்து வரவேற்பு தா.
உறவினர் போன பின்
புன்னகை முகமூடியை கழற்றி எறி.
அடுத்து
பக்கத்துவீட்டுக்காரன் அல்லது தபால்காரன்
வரும் வரை
புன்னகை முகமூடி
இருட்டில் கிடக்கட்டும்.
தீபாவளி!
-இமாம்.கவுஸ் மொய்தீன் -
எப்போதோ
அழிந்து விட்ட
அரக்கனுக்காக
வெடி வெடித்து
உற்சாகம்
உவகையுடன்
இன்னும்
எத்தனை ஆண்டுகள் தான்
விழா எடுப்பது?
இன்றும்
நம்மோடு
வாழ்ந்து
கொண்டிருக்கும்
அரக்கர்களை
எப்போது தான்
அடையாளம்
காண்பது?
வறுமை
இலஞ்சம் ஊழல்
அராஜகம்
மோசடி
மதவெறி
தீவிர வாதம்
அணுவாயுதம் என
எத்தனை யெத்தனை
அரக்கர்கள்
இன்றைக்கும்
நம் சமுதாயத்தில்...
இவர்களை
அழித்து விட்டுக்
கொண்டாடப் போகும்
தீபாவளித் திருநாள் தான்
என்னாளோ..?
அவ்வினிய நாளைச்
சந்திப்போமா?
இவ் வினிய
திருநாளில்
சிந்திப்போமா?
On 14/12/2007, N Suresh, Chennai < nsuresh...@gmail.com> wrote:
5)
நிலா ரசிகன்
பட்டம் வாங்கலியோ
பட்டம்….
ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
ஓழியப்போது…! ஓழியப்போது…!
பெயருக்கேற்ற
பெரிய பட்டம்…
காசிக்கேற்ற
கலக்கும் பட்டம்….
கூட்டங்களில் கூப்பிட
'கூலான' பட்டம்…
'சிவில'டிக்கத் தக்க
சிறப்பான பட்டம்…
பட்டம் வாங்கலியோ
பட்டம்…
ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
ஓழியப்போது…! ஓழியப்போது…!
எழுத்தாள னுக்கேற்ற
எடுப்பான பட்டம்…
கவிஞனாயிருந்தால்
'கலர்புல்' பட்டம்.
கலைஞனா யிருந்தால்
கவர்ச்சியான பட்டம்…
கல்லா திருப்பினும்
'கலாநிதி'ப் பட்டம்;;;…
பட்டம் வாங்கலியோ
பட்டம்…
ஓடிவாங்கோ…! ஓடிவாங்கோ…!
ஓழியப்போது…! ஓழியப்போது…!
வண்ண வண்ணமான பட்டம்
வகை வகையான பட்டம்
படித்தவனை பேயனாக்கும்
'பவர்'மிக்க பட்டம்..
பட்டமொன்று வாங்கினாக்கா
பொன்னாடை இலவசங்க..
வள்ளுவன் நீயென்று
வாழ்த்துப்பாவும் தருவமுங்க…
பிந்தினவங்க இந்த
பிற்குறிப்ப கேளுங்க…
பழைய அல்லது
பாவித்தபின் கொடுக்கக்கூடிய
பொன்னாடைகளை எம்மிடம்
பொறுப்பாய் தாருங்கள்…
அமைச்சரை வைத்துப் போர்த்தி
அழகுபடுத்துவோம்…
ஆனா லொன்று
விழாச்செலவை நீங்களே
விரும்பி யேற்கவேண்டும்!!
நன்று [சுய-அலசல் (self-analysis) எல்லோருக்கும் தேவை]
இக்கவிதையை விட நன்று, மற்றவர் படைப்பைப் பாராட்டிய உங்கள் குணம்.
இரட்டிப்பு நன்று, உங்கள் துறையிலேயே உள்ளவரின் படைப்பைப் பாராட்டியது!
இத்தகைய 'உண்மையான' பாராட்டு ஆன்மாவில் நிலைக்க பெரிதும் உதவும் என்பது
எனது பணிவான அபிப்பிராயம்.
பேரன்புடன்
விஷி
On Dec 13, 10:08am, "N Suresh, Chennai" <nsureshchen...@gmail.com>
| நானோர் கனாக்கண்டேன் தோழி!- தமிழ் நாட்டின் விடுதலை கேட்கப் பிறந்தவர் தானை நடத்தினார் தோழி ! - அங்கு சட்டம் உடைந்தது! பகைவர் தலைகள் வானில் பறந்தன தோழி! - இந்த வையம் குருதியில் தோய்ந்து கிடந்தது ! மானத்தின் வேகமோ தோழி! - தமிழ் மாந்தரின் வீரத்தை என்னென்று சொல்வேன்! ஈழத்தில் சிங்களம் என்றார்! - தமிழ் இல்லத்தில் இந்திதான் என்றும் குலைத்தார்! வேழத்தை வென்றவர் நாட்டில் - இந்த வீணர்கள் ஏன் வந்து மோதினார் தோழி? கூழுக்கு வழியற்றுப் போனோம் - என்றால் குலவீரம் கூடவா இல்லாமல் போனோம்? பாழுக்கு வந்தார்கள் தோழி - வந்த பகைவரை வணங்காத தமிழ்நாடு வாழி! வீண் சண்டை போட்டதும் இல்லை!- தமிழன் வீணாக வந்ததை விட்டதும் இல்லை! தூணொன்று சாய்ந்தாலும் சாயும் - தமிழர் தோள்வீரம் இதுவரை சாய்ந்ததே இல்லை! ஆணென்று வாழ்ந்தவரெல்லாம் - இங்கே ஆமைபோல் அடிமைபோல் உயிர் வாழ்ந்ததில்லை! பூணாத போர்க்கோலம் பூண்டார்! - பகைவர் புலியோடு மோதினார் என்செய்வோம் தோழி? காதலர் வரவில்லை தோழி! - அவர் களத்திலே இருக்கட்டும்! இங்கென்ன வேலை? மோதட்டும் பகைவர்கள் முன்னால் - தோழி முத்தமும் சத்தமும் வெற்றிக்குப் பின்னால் ! மாதர்கள் வீரமே பெரிதாம்! - அவர் மாண்டாலும் போரிலே மாளட்டும் என்பேன்! ஆதலால் இசைபாடு தோழி - தமிழ் அன்னையின் புகழ்பாடு ! வாழட்டும் நாடு! |
- காசி ஆனந்தன் |
On Dec 14, 2007 12:13 PM, N Suresh, Chennai <nsuresh...@gmail.com> wrote:
> 18
--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
|
| புனிதமானது கவிஞர் புகாரி
நீ தேடாத ஒரு சுகம் | | |
18-20 +
அப்துல் ரகுமானின் 'பித்தன்' தொகுப்பிலிருந்து…
கதவு
—–
பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது
நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா
கதவுதட்டும்
ஓசை கேட்டால்
'யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
அப்துல் ரகுமானின் 'பால்வீதி' தொகுப்பிலிருந்து…
தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும்
*******************
சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம்
திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்டு
மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவி
சித்தர் பாடல்க்ள்
உடம்புயிர் எடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்புயிர் இழந்தபோது உயிரிறப்ப தில்லையே
உடம்புமெய்ம் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே! (1)
ஆதியான தொன்றுமே அநேகநேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குஞ் சுத்தமா யிருப்பரே. (2)
மலர்ந்ததாது மூலமாய் வையக மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்
புலங்களைந்து பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இனங்கலங்கி நின்றமாயம் என்னமாய மீசனே. (3)
உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிருடம்பு ஒழிந்தபோதில் ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாய்கையாகி ஒன்றையொன்று கொன்றிடும்
உயிரும்சக்தி மாய்கையாகி ஒன்றைஒன்று தின்னுமே. (4)
நெட்டெழுத்து வட்டமே நிறைந்தபல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குட்டெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படுமவ் வீசனே. (5)
அவ்வெனும் எழுத்தினால் அகண்டுயேழு மானதும்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றதும்
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (1)
அவ்வுதித்த மந்திரம் அகரமாய் உகரமாய்
எவ்வெழுத் தறிந்தவர்க் கெழுபிறப்ப திங்கில்லை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத் திருத்தினால்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (2)
மூன்றுமண்ட லத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. (3)
மூன்றும்மூன்றும் மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்மஞ் செழுத்துமாய் முழுங்குமவ் வெழுத்துளே
ஈன்றதாயு மப்பரும் எடுத்துரைத்த நாதமய்
தோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே. (4)
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் எழுந்துநின்ற நீர்மையால்
செவ்வையொத்து நின்றதோ சிவாயமஞ்செ ழுத்துமே. (5)
அவ்வெழுத்தி லுவ்வுவந் தொகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றிலொன்று நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரலாம்
இவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. (6)
விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலென் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே. (1)
அறத்திறங் களுக்கும்நீ அண்டமெண் திசைக்கும்நீ
திறத்திறங் களுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறைவதேது மன்றுளே. (2)
விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களித்த உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
என்கலந்த ஈசனோடு இசைந்திருப்ப துண்மையே. (3)
உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்த தெங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு தெங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே! (4)
அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு வனாதியோ. (5)
நாலொடாறு பத்துமேல் நாலுமூன்று மிட்டபின்
மேலுபத்து மாறுடன் மேவிரண்ட தொன்றவே
கோலியஞ் சனைத்துளே குருவிருந்து கூறிடில்
தோணுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோலமே. (6)
ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்யதெங் கிளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்ப தில்லையே. (7)
நட்டதா பரங்களும் நவின்றசாத் திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இவையெல்லாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே. (8)
உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் நினைத்திருந்த போதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே. (9)
அல்லிறந்து பகலிறந்து அகபிரம்மம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்து அநேகநேக ரூபமாய்
சொல்லிறந்து மனம்இறந்த சுகசொரூப உன்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை யானதே. (10)
உம்பர்வான கத்தினும் உலகுபார மேழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
எம்பிரானை யல்லது ஏற்றமிக்க தில்லையால்
எம்பிரானை யல்லது தெய்வமில்லை யில்லையே. (11)
பூவிலாய ஐந்துமாய்ப் புனலில்நின்ற நான்குமாய்த்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகாலி ரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயறாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே. (12)
அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகாலி ரண்டுமாய்
செந்தழல்கள் மூன்றுமாய் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரி லைந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்
சிந்தைவைத் திருந்ததை யாவர்காண வல்லிரே. (13)
நீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை
நீரிலே கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப்ப ராபரம்
பாரிலே கூடிநின்ற பண்புகண்டி ருப்பிரே. (14)
தங்கியே தரித்தவச்சு நாலுவால் துளையதாம்
பொங்கியே எழுந்ததந்தப் புண்டரீக வெளியிலே
அங்கியுட் சனித்தபோது வடிவினுள் ளொளியுமாய்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே. (15)
வாடிலாத பூமலர்ந்து வண்டினோசை நாலிலே
ஓடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்ததும்
ஆடியாடி அங்கமு மகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. (16)
மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுணின்ற என்னுளீசன் என்னுளே யடங்குமே
கண்ணுணின்ற கண்ணினீர்மை கண்ணறி விலாமைபோல்
என்னுணின்ற என்னியானை யானறிய வில்லையே. (17)
மண்கிடார மேசுமந்து மலையிலேறி மறுகுவார்
எண்படாத காரியங்க ளியலுமென்று கூறுவார்
தம்பிரானை நாள்கடோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தில்லையே. (18)
தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
வித்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
எந்தைநீ இறைவநீ யென்னை யாண்டஈசனே. (19)
பரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா
கரமுனக்கு நித்தமும் குவித்திடக் கடமையான்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவு நாதனே
புரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே. (20)