Re: [பண்புடன்] நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி....

1 view
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 9:04:38 AM8/14/12
to பண்புடன், நட்புடன், Save_Tamils, தமிழ் சிறகுகள், இளவேனில்
 Inline images 1

 
 
"அணு உலை ஆபத்தில்லை, பாதுகாப்பானது என்று நிரூபித்தால் ஒரு கோடி உரூபாய் பரிசு" - ஒரு வெளிப்படையான சவால்.
 
யாரும் அணு உலை ஆபத்தில்லாதது என நிரூபிக்கத் தயார இல்லை என்பதுதான் உண்மை.
 
(ஆபத்து எனத் தெரிந்தும் தங்களின் சித்தாந்தத்திற்கு முட்டுக்கொடுக்க அணு உலை மிகவும் நல்லது, அணு சக்தியை தினமும் உண்டு வந்தால் உடல் வலிமை பெரும் என்பது போல பொய்ப்பிரச்சாரம் செய்யும் சமூக, ஜனநாயக விரோதிகளைத் தவிர)
அணு உலை ஆபத்தானது தெரிந்த பின்னும் வழக்கம் போல தான் குடும்பத்திற்கான பிரச்சனைகளை மட்டுமே பார்க்கும் நமது சமூக மக்கள் ஓட்டுப்போடுவதுதோடு தங்கள் அரசியல் கடமை முடிந்ததாக நம்பவைக்கப்படுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.
 
அணு உலை ஆபத்தானது எனத் தெரிந்தும் நமது சமூகம் முழுதும் திரண்டெழுந்து எந்த ஒரு அரசியல் போராட்டத்தையும் நிகழ்த்தாது வேதனை... காரணம் ஒன்று சுயநலம். இரண்டாவது அரசியல் அமைப்பின் மீதும் அரசியல் போராட்டங்கள் மீதும் நம்பிக்கையின்மை. மக்கள் தான் ஜனநாயக அரசை நிர்மானிக்கிறார்கள் என்ற அடிப்படை அரசியல் அறிவு ஏனோ அவர்களுக்கு விளங்கவைக்கடுவதில்லை. ஓட்டுபோடும் சாமானியர்களைக் காட்டிலும் ஓட்டைக் கூட போட நேரம் கிடைக்காத கல்வி அறிவில் உயர்ந்த இளைஞர்கள் தான் ஜனநாயகத்தை அரசை அரசியலை விட்டு எங்கோ இருக்கிறார்கள். அதனால் ஜனநாயகப்போர்வையில் தேசியம் என்ற அமைப்பினும் இந்த இந்திய தேசியவாதிகள், அரசியல்வாதிகள், ஆதிக்கச் சக்திகள், முதலாளித்துவ வெறியர்கள் மக்களுக்கு எதிராக செயல்பட்டு மக்களின் உரிமைகளை எளிதாக பறித்துவிடுகிறார்கள்.... ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுபவர்களும் அவர்களே... கேட்டால் ஜனநாயக சுதந்திர நாடு. உண்மை நிலவரம், வெள்ளைக்காரன் போய் கொள்ளைக்காரன் கையில் இந்த தேசம்...
 
யாரெல்லாம் அணுஉலை ஆபத்தானது, கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டம் நியாயமானது, அவர்களை ஒடுக்கி வாழ்வுரிமைகளைப் பறித்து அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி இயற்கையை அழித்து அணு உலைகளை நிர்மாணிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருதுகிறீர்களோ... கீறல் விழுந்த, ஜனநாயகத்திற்கு எதிரான, இந்தப் போலி ஜனநாயக அரசின் கற்பனைச் சுதந்திரத் தினத்தை கொண்டாடாமல் கறுப்புத் தினமாக கொண்டாடுங்கள்.
 
உண்மையான ஜனநாயகம் மலரும் நாள்தான் நமது தேசத்தின் சுதந்திர நாள். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள், வளங்கள், அரசியல் அதிகாரங்கள் அவர்களுக்கு கிடைக்கும் நாள்தான் உண்மையான சுதந்திரநாள். நமது குழந்தைகள் காலத்திலாவது நமது அரசியல் போராட்டங்கள் வெற்றிபெறட்டும். ஜனநாயகம் நிலைப்பெறட்டும். இயற்கை மற்றும் மானுட அழிப்பு நிறுத்தப்படட்டும்.
 
நன்றி.
 
-எஸ்.வி.
vvv.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages