2012/8/1 Srimoorthy.S
<srimoo...@gmail.com>
அவர் இருந்த காலகட்டத்தில் பிராமணர் பெரும்பாலும் அப்படி இருக்கவே அதீதமாக திட்டினார்.
அவர் அப்ப செஞ்சதை இப்ப விமர்சிக்கலாமா தெரியாது. ஆனா அவர் வழி தொண்டன்னு சொல்லிகிட்டு இன்னமும் ப்ராமணன்னு திட்டுறவங்களுடன் எனக்கும் உடன்பாடு இல்லை.
சில பிராமணர்களின் நச்சுத் தன்மையை அனுபவித்தபின் கூட, நச்சுத் தன்மையை ஜாதியை வைத்து அளவிட முடியாது என்பதையும் புரிந்துள்ளேன். அதிகமா விமர்சிக்கப்படுபவர்கள் என்ற காரணத்தினால் ஒருத்தன் தப்பு பண்ணாலும் அச்சாதியினன் என்பதால்தான் இப்படி பண்றான் என்ற மனப்போக்கு பெரும்பாண்மையோருக்கு உள்ளது.
+1
நல்ல புரிதல்.
உயர்த்தப்பட்ட சாதி என்று ஒருவன் தன்னை நினைக்காமலும் தாழ்த்தப்பட்ட சாதி என்று ஒருவன் நினைக்காமலும் இருக்க ஒரு நிலைமை வர வேண்டும்....
அதற்கு பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்கள் உண்மையிலேயே தாழ்ந்த நிலையில் இருப்பது மிக முக்கிய காரணம்.
கருத்தியல் மட்டுமே காரணம் அல்ல. காட்சிகளும் அப்படி இருக்கிறதே...
கருத்தியலும் காட்சிகளும் மாற வேண்டும், அவைகளாகவே மாறும்.
நாம் அதற்கு என்ன செய்யப்போகிறோம் என்பதும் முக்கியம்...
தாழ்த்தப்பட்டவர்கள் அந்த நிலையில் இருந்து உயர்ந்து வர அனைத்து மக்களுக்கும் கடமை இருக்கிறது...
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் இவற்றில் பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னேறினால் இந்த நிலை முற்றிலும் மாறும் என்பதே திண்ணன்.
அரசின் சலுகைகளும் இட உரிமைகளும் அவர்கள் முழுவதுமாக பயன்படுத்தும் போது, இந்த நிலைமை கல்வியில் கொஞ்சம் மாற்றம் ஏற்படுத்தும்...
வேலைவாய்ப்பு, பொருளாதாரம்? தனியார் துறை வேலைவாய்ப்புகள் பெருகிவரும் போது, அதில் அவர்கள் அரசு சலுகைகள் வைத்து முன்னேற முடியாது....
நாம் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று வேலைவாய்ப்பும் தற்சார்பு பொருளீட்டல் பற்றி சொல்லும்போது அவர்களும் முன்னேற வாய்ப்புள்ளது...
அரசியல்வாதிகள், சாதித் தலைவர்கள், சாதி விரும்பிகள், மதத் தீவிரவாதிகள் இதனைச் செய்ய விரும்புதில்லை... இந்த கட்டமைப்பு மாறிவிட்டால் சுரண்டல் செய்ய முடியாதே... ஈட்டிய பொருளை காக்க முடியாதே...
தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்கு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பது முன்னேறிய அனைவரின் கடமை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்... இது தற்போதைய உடனடித் தேவை என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அதோடு அவர்களின் உரிமைகள் பறிக்கப்படும் போது நாம் ஒதுங்கி இருப்பதும் நம் முன்னேற்றத்தால் கல்வி அறிவால் இந்தச் சமுதாயத்துக்கு எந்த பலனும் இல்லை என்று பொருளாகும். அவர்களுக்கும் சேர்த்து நாம் போராடியே ஆக வேண்டும்... அவர்கள் தங்களுக்காக போராடும் போது பாராமுகமாக இருப்பது அதனினும் கொடுமை... இந்த கட்டுரை அதைத் தான் இடித்துரைக்கிறது....