வருமான வரியை குறைக்கலாம்!

22 views
Skip to first unread message

Balamurugan ..

unread,
Jul 3, 2012, 11:27:20 PM7/3/12
to
டெல்லி: வரி செலுத்தும் நபர்கள் பொதுவாக தங்களின் வரித் தொகையை சேமநல
நிதி அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர்.
ஆனால் இவற்றை தவிர வரி விலக்கு பெற பல வழிமுறைகள் உள்ளன.

வரி செலுத்துபவர்கள் பொதுவாக ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்துகின்றனர்.
இதன்மூலம் வருமான வரிச் சட்டம் பிரிவு 80டி மூலம் அதிகபட்சமாக ரூ.15
ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தங்களுடன் தங்களுடன்
தங்கியுள்ள பெற்றோர்களின் பராமரிப்பிற்காக ரூ.15 ஆயிரம் வரி விலக்கு
பெறலாம். வரி செலுத்துபவரின் பெற்றோர் மூத்த குடிமகனாக இருந்ததால்,
ரூ.20 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.

எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு
சிகிச்சை பெறும் நபர்கள், ரூ.40 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். இதில் மூத்த
குடிமகன்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்கு கிடைக்கிறது. வரி
செலுத்துபவர் இது தொடர்பான மருத்துவ சான்றிதழை சமர்பித்து வரி விலக்கு
பெறலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கான செலவீனங்களுக்கும் வரி விலக்கு பெற
முடியும். மாற்று திறனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு அல்லது
மாற்று திறனாளியின் பராமரிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை முதலீடு
செய்தால் கூட வரி விலக்கு பெறலாம்.

இதன்மூலம் வரி செலுத்தும் நபர்கள் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற
முடியும். மாற்று திறனாளியின் நிலை மோசமாக இருந்தால், ரூ.1 லட்சம் வரை
வரி விலக்கு பெற முடியும். இந்த சலுகையை வரி செலுத்தும் மாற்றுத்
திறனாளியும், மாற்று திறனாளியை பாரமரிக்கும் நபரும் பெறலாம்.

தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர், 80 சிசிடி சட்டப்
பிரிவின் கீழ், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தேசிய
பென்சன் திட்டத்தில் பணியாளர் மூலம் செலுத்தப்படும் நிதியில் 10 சதவீதம்
தொகை வரி விலக்காக பெறலாம்.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 ஜிஜி கீழ், வீட்டு வாடகை தொகையாக ரூ.2
ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால் வரி செலுத்துபவர் அல்லது அவருடன்
தங்கி இருப்பவருக்கு சொந்த வீடு இருக்க கூடாது. மேலும் வரி செலுத்துபவர்
சொந்த தொழில் செய்பவராக இருக்க கூடாது.

அவ்வப்போது வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் நபர்கள், தங்கள்
சம்பாதிக்கும் பணத்திற்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வரி செலுத்த
வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்திய வரி சட்டத்தின் கீழ் அவர்களும் வரி
விலக்கு வாய்ப்புள்ளது.

வெளிநாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாற்றம் அல்லது குறிப்பிட்ட கால
அளவிற்கு அனுப்பப்படும் நபர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வரி
சமநிலை (tax equalisation) அல்லது வரி சேமிப்பு திட்டத்தை (protection
policy) அமல்படுத்தி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

வரி சமநிலை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வரி செலுத்தும் ஒரு நபர், உள்
நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வரி செலுத்துவாரோ அதே அளவுக்கு அந்த
நாட்டிலும் செலுத்தினால் போதும்.

ஆனால், உள்நாட்டில் அவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாடுகளில் வரும்
வருவாய்க்கு வரி சமநிலை திட்டத்தை அமல்படுத்தி உள்ளதா என்பதை முதலில்
அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வீட்டு கடனுக்காக செலுத்தப்படும் நிதியிலும் வரிச் சலுகை பெறலாம்.
அதேபோல வீட்டு கடனுக்கான வட்டி, வீட்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட
காரணங்களுக்காக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி
விலக்கு பெற முடியும்.

ஒரு வீடு விற்கப்பட்டது மூலம் கிடைத்த தொகையின் மூலம் ஒராண்டு
இடைவெளியில் ஒரு வீடு வாங்குவது அல்லது 3 வருட இடைவெளியில் புதிய வீடு
கட்டினால் அதற்கு வரி விலக்கு கிடைக்கும்.

மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி வரி செலுத்துபவர்கள் வரி விலக்கு பெற
முடியும். ஆனால் வரி விலக்கு பெற அளிக்கப்படும் மனுவில் முதலீடு,
அன்பளிப்பு போன்றவற்றின் ரசீதுகள் இணைத்து அளிக்க முடியாது.

http://tamil.goodreturns.in/classroom/2012/07/do-not-forget-claim-these-lesser-known-tax-deductions-000049.html


--


அன்புடன்

சி.பாலமுருகன்

Reply all
Reply to author
Forward
0 new messages