பொருளாதாரமா? ஊழலா? மதமா? மனித வளமா?
...
இல்லவே இல்லை. "ஜாதி" மட்டும்தான். பொருளாதார பிரச்சினை இருந்திருந்தால்
இந்நேரம் இந்தியா ஒரு சோமாலியா நாடாக மாறியிருக்கும். ஊழல்தான் பிரச்சினை
என்றால் இந்நேரம் இந்தியா ஒரு ஜிம்பாவே நாடாக மாறியிருக்கும். மதம்
மட்டும்தான் பிரச்சினை என்றால் இந்நேரம் தினமும் ரெண்டு குண்டு
வெடிக்கும் பாகிஸ்த்தான் போல ஆகியிருக்கும். மனித வளம்தான் பிரச்சினை
என்றால் இந்நேரம் இந்தியா ஒரு அமெரிக்காவாக மாறியிருக்கும்.
இதையெல்லாம் மீறி இந்தியா இன்னமும் பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதற்கு
காரணம் என்ன? "ஜாதியும் அதை சார்ந்த ஜாதி தீவிரவாதமும்தான்".
பெரும்பாலனா தனியார் துறைகளில் தலித்துகள் தங்கள் ஜாதியை மறைத்தே பணி
செய்கிறார்கள். அதனாலதான் தலித்துகள் அரசுத்துறையை நம்பிக்கொண்டு
இருக்கிறார்கள். ஒரு தனியார் துறையில் இருக்கும் ஒரு தலித்திடம் போய்
அம்பேத்கார் பற்றி கேட்டால் "அண்ணே நான் இருப்பது Corporate Sector
என்னிடம் இதெல்லாம் கேட்காதீர்கள்" இதுதான் பதில். அவர்களுக்கு அண்ணல்
மேல் மரியாதையை இல்லாமல் இல்லை, அவர்களுக்கு ஒரு பயம் தன் ஜாதி
தெரிந்தால் நமக்கு மரியாதையை இருக்கிறதோ என்ற பயம். இந்த பயம்
நியாயமனதுதானே? இன்று அந்த பயம் தெளிந்து கொண்டு இருக்கிறது அதற்க்கு
காரணம் தமிழ்நாட்டில் வெளிமாநில முதலீட்டாளர்கள்.
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று சொல்லுபவர்கள் அந்த கிராமங்களின்
நிலை என்னவென்று தெரிந்துதான் சொன்னார்களா? இந்தியாவின் பெரும்பாலனா
கிராமங்களில் இன்றும் ஜாதி தீவிரவாதம் அதிகமாகி கொண்டுதான் போகிறதே தவிர
குறையவில்லை.
ஜாதியை, தீண்டாமையை ஒழித்தால் இந்தியா கண்டிப்பாய் வல்லரசு ஆகும்.
எவனாவது முன்வருவானா ஜாதியை, தீண்டாமையை ஒழிக்க? ஒருகாலத்தில்
கம்முநிஷ்ட்கள் முன்வந்தார்கள், போராடவும் செய்தார்கள். ஆனால் இப்போது
கம்முநிஷ்ட்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை
Thanks
~ Balasubramanian Saraswathy ~
--
அன்புடன்
சி.பாலமுருகன்
- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் நலத்தை தீர்மாணிக்கின்றன. -.