அனைவருக்கும் கருப்பு நாள் அனுதாபங்கள்!

84 views
Skip to first unread message

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 2:20:22 PM8/14/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
 
சுதந்திர தினம் கொண்டாடும் ஒவ்வொருவரின் உணர்வையும் மதிக்கிறோம், உங்களின் தேசப்பற்று எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது...
 
சுதந்திரத் தினம் கொண்டாடுவதற்கு முன் இந்த நாடு என்ற தேசிய ஜனநாயக அமைப்பு சுதந்திரம் ஆகி இவ்வளவு நாள் ஆனபின்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அடித்தட்டு மக்களுக்கும் விடுதலை வழங்க்கிற்றா என்று யோசிக்க சொல்கிறோம்.
 
தமிழினத்தின் உரிமைகளுக்கும் தமிழர்களின் இறையாண்மைக்கும் எதிராக இருக்கும் இந்தப் போலி ஜனநாயக விரோதத் தன்மையே அப்படி யோசிக்க சொல்கிறதே ஒழிய இந்தியத்தை எதிர்ப்பது இந்திய சுதந்திரத் தினத்தை புறக்கணிப்பது ஏதாவது புரட்சி செய்யவேண்டும் என்ற கருத்தில் உதிக்கவில்லை என்ற எங்களின் நிலைப்பாட்டையும் உணர்வையும் மதிப்பீர்கள் என நம்புகிறேன்.
 
ஈழத்தில் தமிழர்கள் அழிப்பிற்கு துணைபோன, இராமேஸ்வரத்தில் பல நூறு மீனவர்களை கொன்ற சிங்கள ராணுவத்திற்கு உதவி புரிகிற, ஒடுக்கப்பட்டோர், கூடங்குளம், கல்பாக்கம், முல்லைப்பெரியாறு, காவிரி, பாலாறு, மூன்றுத் தமிழர் தூக்கு, ஈழத் தமிழர்களின் முகாம் அவலம் என பல அநீதிகள், தமிழர்களின் மீதான உரிமைகள் பறிப்பு, உணர்வுகளை மதிக்காமல் செயல்படுவதன இருக்கும் ஒரு நாட்டின் அரசு, அதன் குடிகளின் இறையாண்மைக்கு எதிராகவே இருக்கும் அரசு எப்படி ஒரு ஜனநாயகக் குடியரசாக இருக்க முடியும்? எப்படி சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கொண்டாட முடியும்?
 
அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடும் சமத்துவத்தோடும் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்கும் சுதந்திரத்தோடும் உருவாவதே ஒரு ஜனநாயகக் குடியரசுத் தேசம் என்கிறோம். நம் தேசம் நம் இனம் சுதந்திரம் அடையும் நாள் எந்நாளோ?? கண்டிப்பாக வெள்ளையன் போய் மக்களுக்கான அரசை அமைக்காமல் கொள்ளையன் முதலாளித்துவமாக, பார்ப்பனியமாக, ஆதிக்கவாதியாக, தேசியவாதியாக, அரசியல் "வியாதி"யாக வந்த ஆகஸ்டு பதினைந்து அல்ல...
 
அனைவருக்கும் கருப்பு நாள் அனுதாபங்கள்.

Snabak Vinod (SV)

unread,
Aug 14, 2012, 2:24:58 PM8/14/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
·
IF U GUYS LOVE THIS NATION, U CAN UNDERSTAND THIS POOR RULING SYSTEM WHICH IS AGAINST DEMOCRACY, THEN U WILL START TALKING AND WORKING FOR MAKING TRUE DEMOCRACY AND WILL ALSO STAY AWAY FROM THIS INDEPENDENCE DAY CELEBRATIONS...

THE WORK FOR DEMOCRACY IS MORE THERE THAN THIS CELEBRATION THAT IS MY STATEMENT. I ALSO WISH TO CELEBRATE BUT WHEN MANY OF MY BROTHERS AND SISTERS ARE LONGING FOR FREEDOM AND THEIR RIGHTS, I CAN'T CELEBRATE TODAY AS INDEPENDENCE DAY. I BELIEVE THAT DAY WILL COME SOON AND I WILL ALSO CELEBRATE WITH ALL MY NATION'S PEOPLE.

UNTIL THEN CELEBRATING AND NOT CELEBRATING THIS DAY, IS UR WISH... I AM NOT AGAINST U. LIKE THAT HOPE U GUYS ALSO UNDERSTAND MY POINT TOO.

SAD BLACK DAY!

Snabak Vinod (SV)

unread,
Aug 16, 2012, 3:22:43 AM8/16/12
to நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்

காஷ்மீர் முதல் கூடங்குளம் வரை என்ன அருகதை இருக்கு சுதந்திரம் கொண்டாட?

ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினம் சொக்கபானைனு கொண்டாடுறோம் .நாம அடுத்தவங்களுக்கு சுதந்திரம் கொடுக்கோமா?காஷ்மீர் என்பது தனி நாடு என்று சொன்னால் சுதந்திரமாய் அடியும் உதையும் விழும்.சரி காஷ்மீர்  சுதந்தர இந்தியாவின் ஒரு பகுதி என்றால் அவங்க எவ்வளவு சுதந்திரத்துடன் இருக்காங்க என்று அறீவிர்களா?கூடங்குளத்தில் 144..நமக்காக போராடும் அவங்க சுதந்திரத்தை யோசித்தோமா?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால்  எப்படி இருக்கும் என்று?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால்  எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும்  தாமதப்படுத்தும்போதும்  எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து   தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

ஈழத்தில் லட்சத்திர்க்கு மேல்.
உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும்  ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற  ஊற்றப்பட்டது.வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?

எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.


இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?


காஷ்மீர் மட்டும் இல்லை மணிப்பூர் சத்தீஷ்கர், இப்படி அநேக இடங்களில் இந்தியாவில் சுதந்திரம் கேள்விக்குறியாகவே உள்ளது.இந்த நிலையில் அவர்களை கொடி பிடித்து கொண்டாடுங்கள் என்பது எப்படி?இன்று கூடங்குளமும் கருப்பு கொடி ஏந்தியுள்ளது.



கூடங்குள மக்களும் இந்த சுதந்திர தினத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.அவர்கள் வேறு யாருக்கோ போராடவில்லை.நம் எதிர்கால சந்ததிகளுக்காக அமைதியான முறையில் போராடும் அவர்களின் கோரிக்கைக்கு இந்திய அரசு என்ன பதில் கொடுக்கிறது?144ம் காவதுறை குவிப்புமா?
மணிப்பூரில் சர்மிளாக்கு என்ன பதில் தருகிறது இந்தியா?ஆயுத போராட்டம் ,அகிம்சை போராட்டம் எதுவுமே இந்திய செவிட்டு காதுகளுக்கு கேட்காத போது என்ன செய்வான் சாதாரண மனிதன்?புறக்கணிப்பை விட பெரிய ஆயுதம் எதுவுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.அன்று காந்திக்கும் தோன்றியது போல...ஒத்துழையாமை இயக்கம்.


இந்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்குதான் இன்று தமிழகத்திலும் கருப்பு கொடி ஏற்ற வைக்கிறது.காவேரி தண்ணீர்,முல்லை பெரியாறு,கூடங்குளம், இலங்கையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும் அநியாயம்,ஈழப் படுகொலைகள் என்று அனைத்து பக்கமும் தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய அரசுக்கு எப்படித்தான் நமது எதிர்ப்பை தெரிவிப்பது? அதன் ஆரம்பம்தான் கூடங்குளத்தில் ஆகஸ்ட் 15ல் கருப்புக்கொடி ஏற்றப்படும்.

அதற்காக இந்தியாவை உடைப்பதா? அது எப்படி என்று பொறுக்க முடியும்? இதற்கான அருந்ததி ராயின் அழகான பதில் படிக்க இங்கே சிரமம் பார்க்காமல் சுட்டவும்

அதெல்லாம் இருக்கட்டும் நண்பர்களே எங்கள்(எல்லை பாதுகாப்பு படை) சுதந்திரத்தை கேப்பீர்களா? சில நாட்களுக்கு முன் நான் தந்த முக நூல் நிலைத் தகவலை படிக்கவும்.

DOCTOR OF BORDER SECURITY FORCE TRAINING CENTRE JODHPUR (NOT MUNNA BHAI MBBS) SAYS TO OFFICER'S COLONY GATE GUARD... 

##"...IF ANY PERSONS OTHER THEN OFFICER RANK ARE(CONSTABLE& HC CONSTABLE) NOT ALLOWED TO RIDE A BICYCLE INSIDE THE OFFICER'S COLONY ... THEY SHOULD GO BY WALK WITH THEIR CYCLE....##"WEATHER WE ARE LIVING IN DEMOCRACY COUNTRY OR NOT? WHICH ACT&RULE SAID ABOUT THIS?



இது எப்படி இருக்கு ? எப்படிங்க சுதந்திர தினம் கொண்டாட?

சக மனிதர்களின் உரிமைகளின் மேல் கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.கீழே காணும் கொண்டாட்டத்திற்கும்  நாளை தொலைக்காட்சி சகிதம் நாம் கொண்டாடப்போகும் கொண்டாட்டத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?கார்ப்பரேட் உலகின் ஆட்சியில் மறைமுக அடிமையாய்  இருக்கும் இந்திய அரசை நாம் இந்த கொண்டாட்டத்தின் மூலம் ஆதரிக்கிறோம் நண்பர்களே.
இதைத்தானே கேட்டாய் பாலகுமாரா ....

நான் கூடன்குளத்து போராட்டத்தை,காஷ்மீர் தேசத்து அடிமை மக்களின் உரிமை போராட்டத்தை,சட்டீஸ்க்கரில் போராடும் பழங்குடி இனத்தின் போராட்டத்தை,சர்மிளாவின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.இவர்களை ராணுவம் மற்றும் காவல் துறை கொண்டு அடக்கி ஒடுக்கும் இந்திய அரசுக்கு  இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தை புறக்கணிப்பதன் மூலம் நான் எனது எதிர்ப்பை  அறிவிக்க விரும்புகிறேன்.

வரும் காலங்களில் ஓட்டு மொத்த தமிழகமும் தேர்தல்களை, சுதந்திர தின கொண்டாட்டங்களை புறக்கணிப்பதன் மூலம் காவேரி நீர் முல்லை பெரியாறு,ராமேஸ்வரம் மீனவர்கள் படுகொலைகளுக்கு ,கூடங்குளத்திற்க்கு நீதி பெற முடியும் என நம்புகிறேன்.ஓட்டு மொத்த தமிழகமும் இணைந்தால் மட்டுமே இது முடியும்.கூண்டுக்குள் அடைத்து வைத்து பாட சொல்லி ஆட சொல்லி கேப்பது போலத்தான் காஷ்மீர் மக்களிடம் நாம் எதிர்பார்ப்பது.காஷ்மீராகட்டும்,சட்டீஷ்கராகட்டும் இறப்பது என்னவோ ஏழை  மக்களும் ஏழை சிப்பாயும்தான்.உங்களுக்கென்ன நீங்கள் கொண்டாடுங்கள்.

ஆகஸ்ட் 14கை  நாகலாந்தில் சுதந்திர தினமாக கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.அது குறித்து அறிந்தவர்கள் தகவல் தரலாம்.

மனதில் தோன்றியது எழுதி விட்டேன்.இதோ எனது தோழன் இதை படித்துவிட்டு திட்டி செல்கிறான்.என் மனைவி எனக்கு ஏதோ நோய் இருப்பதாய் சொல்கிறார்.எனது உடன் பிறந்த அண்ணன் நாட்டை அவமானப்படுத்துகிரவன் தன் தாயை அவமானபடுத்துகிறான் என்று கமென்ட் செய்கிறான்.அளவுக்கு மீறிய தேச பற்று நமக்கும் சக மனிதனுக்கும் இழைக்கும் கொடுமைகளை மறைக்க கூடாது.என்னை துரோகி என்று அழைப்பீர்கள் என்றால் எவ்வித சங்கடமும் இல்லாமல் வரவேற்பேன்.

டிஸ்கி;ஆர்ப்பாட்டமான  கொண்டாட்டங்கள்  போராட்டங்களின் வலியை புரிந்து கொள்வது கஷ்டமே.சுதந்திர போராட்ட வீரர்களின் ஆன்மா ஒரு நாளும் கார்ப்பரேட் அடிமை அரசுகளை மன்னிக்காது.

Posted by சதீஷ் செல்லதுரை at செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

Snabak Vinod (SV)

unread,
Aug 16, 2012, 3:30:59 AM8/16/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்

க. உதயகுமார்

வயிறு காய்ந்த மனிதர்களை எப்படி உங்களால் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்கச் சொல்ல முடியும் ? எழுந்து நிற்கவேணும் அவன் உடம்பில் தெம்பிருக்க வேண்டுமா இல்லையா ? இல்லை இல்லை நீ இந்தியன் . நீ வறுமை கோட்டுக்கு கீழே இருந்தால் என்ன .? சிவப்பு விளக்கு சுழலும் மகிழ்வுந்தில் பயணிக்கும் நான் சொல்கிறேன் விறைப்பாக எழுந்து நில் . உன் தங்கை ராணுவத்தால் கற்பழிக்கப் பட்டாளா , பரவாயில்லை பிறகு அழுதுகொள். இப்போதைக்கு நீ எழுந்து நின்று தேசிய கொடியை உயரப் பறக்கவிடு . நான் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் சொந்த மகளிடம் படுப்பதை போல சொந்த மக்களின் பணத்தை களவாடினால் நீ எழுந்திருக்க மாட்டாயா ..? ஹ்ம்ம் சொல் "வந்தே மாதரம் " . எங்கள் சட்டம் நாங்கள் தாயை கூட்டிகொடுத்தால் கூட நின்று வேடிக்கை பார்க்கும் , ஆனால் நீ ஆளுவோரை எதிர்த்து ஒரு கருத்துப் படம் வரைந்தாலோ , காட்டில் வாழும் பழங்குடி இன மக்களுக்கு, எங்களை எதிர்த்து எங்கள் ஈவு இரக்கமற்ற அரக்கத்தனத்தை எதிர்க்கும் பழங்குடி இன மக்களுக்கு வைத்தியம் பார்த்தாலோ உன் விலா எலும்பை எங்கள் சட்டம் உடைத்து நொறுக்கும்.

என்னது ..? இன்னமும் ஒரு சகோதரி ராணுவத்தினை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறாளா ..? அவள் கிடக்கிறாள் ..நீ வா நாம் சுதந்திர தினம் கொண்டாடுவோம் .

என்ன...? தண்ணி வேண்டுமா ...? இல்லை இல்லை இப்போதைக்கு முடியாது . இப்போதைக்கு உங்கள் மாநிலத்தில் தேர்தல் எதுவும் இல்லை . அப்படியே தேர்தல் வரும்போதும் , நாங்கள் உங்களுக்கு தண்ணீர் பெற்றுத் தருவோம் என்று நரம்பு புடைக்க பேசுவோம் . தண்ணீர் தருவது கொஞ்சம் கஷ்ட்டம் தான் .

என்ன ..? உங்கள் ஊரில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்களா ? பிறந்தால் எல்லோரும் சாக வேண்டிதானே ... செத்தவன் செத்தான் அதை விடு ..இந்தா இந்த கொடியை உன் சட்டையில் குத்திக்கொள் .

என்னது ..? உன் தொப்புள் கொடி உறவுகள் செத்து மடிகிறார்களா ...? உன்னை பற்றியே எனக்கு கவலை இல்லை , இதில் என்ன தொப்புள் கொடி உறவு ? ஒருவேளை நீ இத்தாலி விந்துக்கு பிறந்திருந்தால் எங்கள் செங்கோல் உன்னை காக்க நீளும் . நீ தமிழன் தானே ...பிறகென்ன கூச்சல் போடுகிறாய் . வழியும் குருதியை துடைத்துவிட்டு எனக்கு வந்தனம் செய் .
.
.
.
நண்பர்களே சொல்லுங்கள் ...நான் என்ன காரணத்திற்காக சுந்தந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என்று சொல்லுங்கள் .

பாவேந்தர் பாரதிதாசன் சொல்லுவாரே

"சித்திரச்சோலைகளே--உமைநன்கு
திருத்த இப் பாரினிலே--முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ!
உங்கள் வேரினிலே! என்று ....அந்த ரத்தம் சொரிந்த வேர்களை நான் இந்நாளில் நினைத்துப் பார்க்கிறேன் . அடிமை சங்கிலியை அறுத்தெறிய எத்தனை வீரர்கள் அன்று ரத்தம் சொரிந்தனர் என்று மட்டுமே இந்நாளில் நினைக்கத்தோன்றுகிறது . இன்னொருவன் வந்து எமை ஆளுதல் தகுமோ என உயிர் தந்து தியாக தழும்பேற்ற அம்மாந்தர்களின் சுயநலமற்ற வாழ்வை மட்டுமே நினைவுகூரத் தோன்றுகிறது . இவையல்லாமல் இந்நாளை கொண்டாடித் தீர்க்க வேண்டிய காரணம் எதுவும் எனக்கு கிடைக்கவில்லை .

சுதந்திர தினம் என்ற நாளை நினைவுகூர முடிகிறது . ஆனால் அந்நாளை கொண்டாடவேண்டிய யாதொரு நியாயமான காரணங்களும் இருப்பதாக தோன்றவில்லை . மண்ணை காக்க தன் உயிர் ஈந்த அந்த வீரர்களை எந்நாளும் தொழுகிறோம் . க்யூபா விடுதலைக்கு போராடியவனை போற்றுகிற நாங்கள் இந்த மண்ணின் விடுதலைக்கு போராடி போராடி இந்த மண்ணிலேயே மக்கி உரமானவர்களை எப்படி நினைக்காமல் போற்றாமல் தொழாமல் போய் விடுவோம் . அதை நாங்கள் எப்போதும் செய்கிறோம் . ஆனால் இந்த நாளை நீ கொண்டாடத் தான் வேண்டும் என்றால் ஒரே ஒரு காரணம் சொல்லுங்கள் . சுதந்திரக் கொடியை குத்திக் கொள்ளச் சொல்கிறீர்கள் . ஆனால் அந்த கொடியை குத்திக் கொள்ள சட்டையே இல்லாத பல்லாயிரம் மக்கள் வாழுகிற நாட்டில் கொண்டாட்டம் ஒரு கேடா ?

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எங்கள் பூலிதேவனையும் ஊமைத்துரையையும் ராணி மங்கம்மாளையும் நீங்கள் திட்டமிட்டு மறைத்தீர்கள் . ஆனால் நாங்கள் அப்படி எந்த பாகுபாடும் இன்றி போராட்ட வீரர்கள் எல்லோரையும் நேசிக்கிறோம் . எங்களுக்கு கட்டபொம்மனைப் போலத்தான் பகத் சிங்கும் . எங்களுக்கு சுப்ரமணிய சிவாவை போலத்தான் சுகதேவும் . பாரதிக்கும் தாகூருக்கும் நாங்கள் வித்யாசம் பார்த்ததே இல்லை . நாங்கள் உங்களைப் போல இல்லை . நாங்கள் எப்போதும் நியாயமாக நடந்திருக்கிறோம் . ஆனால் கொண்டாட எங்களை அழைக்காதீர்கள் . சொந்த இன மக்களை கூண்டோடு வாரிக் கொடுத்துவிட்டு ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறோம் . இழவு வீட்டில் புகுந்து "ஹ்ம்ம் கொண்டாடு கொண்டாடு " என்று சொல்கிறீர்களே ..இது அநியாயமில்லை ? வெளிநாட்டில் உன் சகோதரன் செத்தால் இங்கேன் ஒப்பாரி வைக்கிறாய் வந்து ஜன கன மன பாடு என்று சொல்வதில் என்ன ஞாயம் இருக்கிறது ?

"எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும் ! ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும் !" என்று பாடினான் செந்தமிழ் புலவன் பாரதி . பாரதி சொன்னதை போல இந்தியா மற்ற நாடுகளுக்கு நன்னெறி எதுவும் கொடுத்ததா என்று எனக்கு தெரியவில்லை . ஆனால் ஈழ மண்ணிற்கு என்ன கொடுத்தது என்பது உலகிற்கே தெரியும் .தாலி அறுத்தவன் ஒருவன் . தாலியை அறுக்க கத்தி கொடுத்தவன் ஒருவன் . தாலி அறுத்தவனை கத்தி கொடுத்தவன் இந்த மண்ணுக்கே கூப்பிட்டு விருந்து வைக்கிறான் . நாங்கள் தொண்டை கிழிய கத்தினோம் . "பண்பட்ட வரலாறு கொண்ட இந்தியா இப்படி ஈரம் இல்லாமல் நடக்கக்கூடாது . அவனுக்கு துணை போகாதே" என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதோம் . எங்களை அப்போது எட்டி உதைத்து விட்டு , இப்போது நீயும் இந்தியன் தான் வா வந்து எங்களோடு கொண்டாடு என்று சொல்கிறீர்களே ..இது அடுக்குமா ? நீங்கள் எங்கள் ஈரக்குலையில் சொருகிய கத்தியை இப்போது எடுத்துவிட்டு வா வந்து கொண்டாடு என்று சொல்கிறீர்கள் . ஆனால் நீங்கள் குத்திய இடம் சீழ் பிடித்து புரையோடி வலிக்கிறதே . வலியோடும் நான் வந்து கொண்டாடத் தான் வேண்டுமா ?

பாரதி என்றொரு கவிஞன் .பெருங்கவி அவன் . சுதந்திர தேவி நின்னை மறக்கிலேனே என்று உருகி உருகி பாட்டெழுதி செத்துப்போன எங்கள் பாட்டுக்காரன் . அவனொரு கவிதை எழுதினான் . அதை அப்படியே கீழே வாசியுங்கள் .

தொண்டு செய்யும் அடிமை! - உனக்குச்
சுதந்திர நினைவோடா?
பண்டுகண்ட துண்டோ - அதற்குப்
பாத்திர மாவாயோ?

ஜாதிச் சண்டை போச்சோ? - உங்கள்
சமயச் சண்டை போச்சோ?
நீதிசொல்ல வந்தாய் - கண்முன்
நிற்கொ ணாது போடா!

அச்சம் நீங்கி னாயோ? - அடிமை!
ஆண்மை தாங்கினாயோ?
பிச்சைவாங்கிப் பிழைக்கும் - ஆசை
பேணுத லொழித்தாயோ?


கப்ப லேறுவாயோ? - அடிமை!
கடலைத்தாண்டு வாயோ?
குப்பை விரும்பும்நாய்க்கே - அடிமை!
கொற்றத் தவிசுமுண்டோ?

ஒற்றுமை பயின்றாயோ? - அடிமை!
உடம்பில் வலிமையுண்டோ!
வெற்றுரை பேசாதே – அடிமை!
வீரியம் அறிவாயோ?

சேர்ந்து வாழுவீரோ? உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?
சோர்ந்து வீழ்தல்போச்சோ - உங்கள்
சோம்பரைத் துடைத்தீரோ?

வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி
வெருவலை ஒழித்தாயோ?
உள்ளது சொல்வேன்கேள் - சுதந்திரம்
உனக்கில்லை மறந்திடடா.

நாடு காப்பதற்கே - உனக்கு
ஞானஞ் சிறிதுமுண்டோ?
வீடுகாக்கப் போடா – அடிமை!
வேலைசெய்யப் போடா!

சேனை நடத்துவாயோ? - தொழும்புகள்
செய்திட விரும்பாயோ?
ஈனமான தொழிலே - உங்களுக்கு
இசைவதாகும் போடா!

பாரதி வெகுண்டு உனக்கு சுதந்திரம் அனுபவிக்க தகுதி இல்லை என்று பட்டியலிட்ட எல்லா காரணங்களும் இங்கே இன்னும் இருக்கிறதா இல்லையா ? பாரதியின் இந்தப் பாடலை விடவும் நான் என்ன சொல்லப் போகிறேன் .

இப்போதும் சொல்கிறேன் . வெள்ளையனிடம் இருந்து இந்த மண்ணை மீட்க போராடிய எல்லா வீரர்களையும் தியாகிகளையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் . இந்த நாளை கொண்டாடத் தயாரில்லை .


வலியோடு
உங்கள் சக சகோதரன்.
 
(முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது... ஏற்கனவே பகிர்ந்தேன், இங்கே பேசுபொருளுக்கு சம்பந்தம் இருப்பதால் மீண்டும் பகிர்கிறேன்)

Snabak Vinod (SV)

unread,
Aug 16, 2012, 3:36:46 AM8/16/12
to பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்

 
    
 
 

##1968 Olympics Black Power salute ##
1968 ஆம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் வென்ற ஆப்பிரிக்க- அமெரிக்க தடகள வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லஸ், பதக்கம் பெறும்போது பாடப்பட்ட தேசியகீதத்தின் போது, கையில் கறுப்பு பட்டைகளோடு "(BLACK SALUTE)கறுப்பு வணக்கம்" வைத்தார்கள்;

##வாழ்க தன்மானம்; வாழ்க போராட்ட உணர்ச்சி

Balamurugan ..

unread,
Aug 16, 2012, 4:18:07 AM8/16/12
to ilav...@googlegroups.com
அடக்குமுறைக்கு எதிராக கேள்வி எழுப்பினால் துரோகி என்கிறார்கள்..

On 8/16/12, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
> **
>
>
> <http://www.facebook.com/Anandhi.Chennai>
> Anandhi Thangam <http://www.facebook.com/Anandhi.Chennai>


>
> ##1968 Olympics Black Power salute ##
> 1968 ஆம் ஆண்டு, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் வென்ற ஆப்பிரிக்க- அமெரிக்க தடகள
> வீரர்கள் டாமி ஸ்மித், ஜான் கார்லஸ், பதக்கம் பெறும்போது பாடப்பட்ட
> தேசியகீதத்தின் போது, கையில் கறுப்பு பட்டைகளோடு "(BLACK SALUTE)கறுப்பு
> வணக்கம்" வைத்தார்கள்;
>
> ##வாழ்க தன்மானம்; வாழ்க போராட்ட உணர்ச்சி
>

> --
> அன்பு இனியது.
> அன்பில் விளையும் இன்பம் இனியது.
> இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.
>


--


அன்புடன்

சி.பாலமுருகன்

- தூக்கமும் உணவும் மனிதனின் உடல் ந‌லத்தை தீர்மாணிக்கின்றன. -.

Snabak Vinod (SV)

unread,
Aug 16, 2012, 8:13:12 AM8/16/12
to நட்புடன், பண்புடன், தமிழ் சிறகுகள், Save_Tamils, இளவேனில்
யாருக்காக சிங்கார சென்னை?
சென்னை மாநகரில் அவ்வப்போது குடிசைகள் எரிவதும், அங்கு வாழ்ந்து வரும் மக்களை சென்னை மாநகருக்கு வெளியே கட்டாயப்படுத்தி அனுப்புவதும் வாடிக்கை. 'சிங்கார சென்னை' என்ற பெயரில் சாதாரண மக்களை அப்புறப்படுத்திய முந்தைய நிகழ்வுகள், அந்தத் திட்டம் கைவிடப்பட்டும், இன்னமும் தொடர்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் வெளியூர்களில் இருந்து வந்து இங்கு குடியேறிய லட்சக்கணக்கான மக்களுக்கும், ஆங்காங்கே முளைத்துவரும் அடுக்குமாடி வீடுகளுக்கும் விடுதிகளுக்கும், ஊருக்குள் இடமிருக்கும்போது, காலங்காலமாய் இதே மண்ணில் குடிசைகளில் வாழும் இந்த மக்களுக்கு ஊருக்குள் இடமில்லையாம்! ''ஊருக்கு வெளியே போ'' என்கிறது அதிகார வர்க்கம்!
 
யாருக்காக எரிகிறது இந்தத் ''தீ''?
வளர்ச்சி என்ற பெயரில் நம் கண் முன்னே, ஒரு வர்க்கம் சுரண்டப்பட்டு தூக்கி தூர எறியப்படுவதை பதிவாக்கியுள்ளது. நவீன சென்னையின் இன்னுமொரு பக்கம் இது.

யாருக்காக சிங்கார சென்னை? (Singaara Chennai) 1
http://www.youtube.com/watch?v=X8YN-oTiWL0


யாருக்காக சிங்கார சென்னை? (Singaara Chennai) 2
http://www.youtube.com/watch?v=2wPmcxXBdGY

Reply all
Reply to author
Forward
0 new messages