








'ஒன்று கூடுவார்கள்! கோஷமிடுவார்கள்! பின் கலைந்து சென்று விடுவார்கள்' என்று எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா? செய்தார்கள். அந்நிய சக்திகளிடமிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் விஷத்தைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை. ஆகவே பரப்புங்கள்! கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள். எளிய மக்களை கடித்துக் குதற இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.

ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள்! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள். கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்கள் முழுதும் ஒரு மக்கள் சமூகமே "போராட்டக்காரர்களாக" சுருக்கப்பட்டது. பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், 'அந்த உதயகுமார அடிங்கடா!' என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்துப் போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமிருந்தது அவர்களிடம். எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 வருடங்களுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டாலும் முழு புரிதலோடு ஒரு மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த வருடம் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம், வழக்குகள், சிறை வாசம், தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.
போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பணம் கொடுத்ததாக விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே? பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ? எண்ணிறந்த குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் போலிப் பரப்புகளும் இப்போது என்ன ஆனது? அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.

எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது புளுத்து நாறுகிறது என்ற பதில் மட்டுமே.
மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள் குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை. மக்களின் அச்சமும் தீர்க்கப்படவில்லை. மேலும் அம்மக்களை சமனப்படுத்த பல கோடி லஞ்சத்திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம், பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை. அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். இது தான் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்த லட்சணம்.
அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை. ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.

அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும் செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்குப் பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தித் தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும் படி பழக்கப்பட்டிருக்கிறார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.
போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.
சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அநீதமான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களின் போராட்டங்களை கவனத்தோடு கற்று வருகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.
Staff Reporter
Unique protest
Addressing the anti-KKNPP protestors at Idinthakarai on Monday evening, Dr. Ramadoss said the nation had never witnessed such an “intense but peaceful agitation” in any part of the country in the past.
Like the developed nations that were gradually closing down the nuclear power programmes, Indian Government should also have scrapped the KKNPP and the Tamil Nadu Government should have pressed this demand if they were really concerned about people’s welfare.
Since the protesters were so intelligent and had understood very well the demerits of nuclear energy, they were fighting against it for the past several months.
“Valiant soldiers”
“The recent judgement by Madras High Court (on granting permission for fuel loading) has not dashed the hopes of these protesters, who have planned to go for an appeal in the Supreme Court and hence they are valiant soldiers,” he lauded.
PMK leader G.K. Mani accompanied Dr. Ramadoss.
| ஒரு வழக்கு... ஒரு வரலாறு! - கீழவெண்மணி முதல் கூடங்குளம் வரை! |
|
செவ்வாய்க்கிழமை, 04 செப்டம்பர் 2012 10:47
|
இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன ஆகும், இந்த பேரழிவின் போது யார் இழப்பீடு வழங்குவது, எவ்வளவு வழங்குவது என்பது தொடர்பான ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளது. அதாங்க "அணு உலை விபத்து காப்பீடு சட்டம் 2010". இந்த சட்டத்திலுள்ள சாதக, பாதகங்களை பற்றி பார்ப்போம்...
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.

ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது மட்டுமின்றி அணு உலை விபத்து அடுத்து வரும் தலைமுறைகளையும் பாதிக்கக்கூடியது. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விபத்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து நடந்து பல பத்தாண்டுகள் ஆனபின்னரும் அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு பன்மடங்காகவே உள்ளது. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள இடங்களில் இன்றும் பிறக்கும் குழந்தைகள் கதிர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டே வருகின்றார்கள்(1). செர்னோபில் விபத்து நடந்தது 1986 ஏப்ரலில் என்பதை நினைவில் கொள்க.
சில விளக்கங்களை இந்த இடத்தில் சொல்வது சரியாக இருக்கும்..
மேலும் இந்த சட்டத்தின் படி அணு உலை விபத்து சிறிதா, பெரிதா என்று கூற வேண்டியது இந்திய அணுசக்தி ஆணையம். 1947லிருந்து இதுவரை அவர்களுடைய
1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விபத்திற்கு அவர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த கொஞ்ச பணத்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வங்கியில் தான் வைத்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை. அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த ஆலை கழிவுகளை அரசு இன்னும் அகற்றக்கூட இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற பல தீர்ப்புகள் இதற்கு முன்னர் வந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த தீர்ப்பை உடனே செவிமடுத்து ஆலைகழிவுகளை உடனே அகற்றப்போவதும் இல்லை. ஒரு பேரழிவு ஏற்படும் பொழுது இந்திய அரசு எப்படி செயல்படும் என்பதற்கு போபால் நிகழ்வு ஒரு சாட்சியாகும். இந்த சட்டத்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரே பிரிவு 17, அதாவது அணு உலை விபத்திற்கு காரணம் அணு உலையை கட்டியவர்கள், அந்த பொருட்களை வழங்கியவர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை அணு உலையை நிர்வகிக்கும் அமைப்பு வாங்க முடியும். கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள 1,2 அணு உலைகளுக்கு இந்த பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் கட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைகளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும் இந்த பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான அணு உலைகளை கட்டும் இரசியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற நாட்டு நிறுவனங்களும் இந்தியாவை வற்புறுத்தி வருகின்றன என்பதை அணு உலையை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.
இது மட்டுமின்றி அதிகபட்ச இழப்பீடாக அரசு நிர்ணயத்திருப்பது 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விபத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்ய குறைந்த பட்சம் 72 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அரசு சொல்கின்றது.(5) அது போன்ற ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால் 1500 கோடி ரூபாயை மட்டுமே இரசியாவோ, அமெரிக்காவோ, அல்லது ரிலையண்சோ, டாட்டாக்களோ கொடுப்பார்கள் மீதமுள்ள 70ஆயிரம் கோடி ரூபாய்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே எடுக்கப்படும். அதாவது இரசியாவும், மற்ற நாட்டு நிறுவனங்களும் கூறுவது என்னவென்றால் அணு உலை கட்டுவதன் மூலம் உருவாகும் இலாபம் முழுக்க அவர்களுக்கு, அதனால் விபத்து ஏற்பட்டு யாரேனும் பாதிக்கப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இந்த மக்கள் விரோத சட்டத்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகளை பெறுவதற்காக போராடுவோம்.
தரவுகள்:
--
அன்பு இனியது.
அன்பில் விளையும் இன்பம் இனியது.
இன்பத்தில் பாடும் தமிழ் இனியது.