மார்கழியோ ஓடியாச்சு!
போகி தானே வந்தாச்சு!
பழையதெல்லாம் கழிச்சாச்சு!
தைத் திருநாளாம் வந்தாச்சு!
உள்ள மெல்லாம் இன்ப வெள்ளம்!
புதுப் பானை புது நெல்லு!
பொங்கலோ பொங்கலென்று!
வாய் நிறைய குலவைச் சத்தம்!
தித்திப்பாய் செங்கரும்பு!
நெஞ்சமெல்லாம் இனிக்குதடி!
கணித் தமிழாம் உன்னைத்தானே!
அகம் மகிழ வாழ்த்துகிறோம்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
-ஜெய்சிங்.த
உதவி பேராசிரியர்,
கணனிப் பொறியியல் துறை,
சுரங்கப் பல்கலை கழகப் பள்ளி
தன்பாத்-826004