அன்புடையீர் வணக்கம்,
" யாதும் ஊரே யாவரும் கேளிர்! " என்ற கணியன் பூங்குன்றனார் வாக்கு
மெய்ப்பட தமிழையும் தமிழினத்தையும் உலகறியச்செய்ய நமக்கு ஓர் வாய்ப்பு
கிடைக்கப்பெறவுள்ளது.
தரணி போற்றும் அறிஞர்களை உருவாக்கும் தொண்மையான
பல்கலைக்கழகங்களில் அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழகமும் ஒன்று என்றால்
அது மிகையாகாது.
இப்பல்கலைக்கழகம் உலகின் பண்மையான மற்றும் தன்னிறைவு
அடைந்த மொழிகளுக்கு இருக்கை ஒன்று அமைத்து, அம்மொழிக்குண்டான வரலாற்றை
அறியவும் , மேலும் அம்மொழியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு
உறுதுணையுற்று மிளிர்கின்றது. அதுபோல் செந்தமிழிலின் செம்மையையும் ,
வளமையையும் பறைசாற்றும் வகையில் மொழி உணர்வாளர்களின் பங்களிப்போடு
ஹாவர்டில் தமிழ் இருக்கை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்விருக்கை
அமைக்க வேண்டி ஹாவர்டு பல்கலைக்கழகத்திற்கு ஆரம்பகட்டத்தில் 6 மில்லியன்
டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் உருவாய் 40 கோடி ) நிர்வாக கட்டணமாக
செலுத்த வேண்டி உள்ளது.
தமிழ் மொழியின் வளத்தையும் அதன் வளர்ச்சியின்
தேவையையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுவரும்
தருணத்தில் இப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்தவர்களுக்கு நன்றி
பாராட்டும் வகையில் இந்தியாவின் தலைசிறந்த கல்விநிறுவனங்களில் ஒன்றான
இந்திய தொழிற்கல்வி கழகம் தில்லியின் அங்கங்களான நாம் அவர்கள் எடுத்துவரும்
முயற்சியில் வெற்றிப்பெற உதவ வேண்டும் என வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம்.
எனவே,
"பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளருக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று"
என்பதற்கிணங்க இ.தொ.க தமிழ் மன்றம் சார்பாக நம்மாலான பொருளுதவி செய்யது
நம் தமிழ் மொழியினை தரணியெங்கும் சென்று வளர்ச்சிகள் பல அடைய வழிவகைகள்
செய்யவோம்.
இதன் பொருட்டு இ.தொ.க பேராசிரியர்கள் சிலரின் கருத்துக்களை
மனதில் கொண்டு, பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என பிரிவுகள் அமைத்து
குறைந்தபட்ச நன்கொடைத் தொகையை நிர்ணயம் செய்யதுள்ளோம்.
| பிரிவு | குறையந்தபட்ச தொகை (உருவா ) |
| பேராசிரியர்கள் | 5000/- |
| ஊழியர்கள் | 2000/- |
| மாணவர்கள் | 1000/- |
எனவேஉதவ
விரும்பும் நல்லுள்ளங்கள் காசோலையாகவோ (Cheque ) , வரைவோலையாகவோ (Demand
Draft ) " SATHIYASEELAN R " என்ற பெயரில் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்
பணமாக கொடுக்க விரும்புபவர்கள் 'சத்தியசீலன் - 9582840364' (அ) 'கதிரேசன் -
8800264504' ஐ தொடர்பு கொண்டு நேரில் கொடுக்கவும்.
மின்னணு பரிமாற்றம் (Electronic Transfer )
செய்ய விரும்புவோர் "HTC Donation " என்ற குறிப்புடன் "32136016226 IFSC :
SBIN0001077 பெயர்: Sathiyaseelan R " என்ற சேமிப்பு வங்கி கணக்கிற்கு
அனுப்பவும்.
நாம்
சேகரிக்கும் நன்கொடை தொகை முழுவதையும் "இ.தொ.க தில்லி தமிழ் மன்றம்" என்ற
பெயரில் கொண்டு சேர்க்கப்படும் என்பதை பேருவகையுடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி
இ.தொ.க தில்லி தமிழ் மன்றம்