Re: [MinTamil] அவள் ஏன் அபிராமி பட்டருக்கு மட்டும் அவ்வாறு அருள​வேண்டும்?

196 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Feb 3, 2019, 11:41:30 AM2/3/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் 
காத்தாளை, ஐங்கணை பாசாங் குசமும் கருப்புவில்லும் 
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. 

பாச + அங்குசம் =  பாசாங்குசம் என வரவேண்டும். புணர்ச்சிவிதி.
கருப்புவில்லும்: இதற்கு "கரும்பும்அங்கை" என்ற பாடமுண்டு.

மூன்றாம் அடி என்ன என்பதைப் பலர் சிந்தித்துள்ளனர்.
"அங்குச பாசம் குசுமம் கரும்புமங்கை" என்ற பாடத்தை கிவாஜ
ஊகித்துத் தருகிறார்.

              கட்டளைக் கலித்துறை:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூநிறத்  தாளைப், புவிஅடங்கக் 
காத்தாளை, ஐங்கணை பாசாங் குசமும் கரும்புமங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கொரு தீங்கில்லையே.

இப்பாடலின் நயம்: எளிய மக்கள் 'ஆத்தாள்' என்று வணங்குதலைச் 
சொல்லித் தொடங்குகிறார் பட்டர். 'கண்ணாலம்' என்ற பேச்சுவழக்கை
ஆண்டாள் பிரயோகிப்பதுபோலே.

வாழ்க வளமுடன்
நா. கணேசன்




On Sun, Feb 3, 2019 at 6:45 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
அம்மை, அபிராமிபட்டருக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே

images.jpg
எல்லோருக்கும் அன்னை அவள்!
அவள் ஏன் அபிராமி பட்டருக்கு மட்டும் அவ்வாறு அருளவேண்டும்?
அன்னையின் "அருள் ஆளுமை" பற்றி - அடியேனின் கருத்து,

அபிராமிபட்டருக்கு அருளிய அன்னை 
பிள்ளையைப் பெற்ற எந்த ஒருதாயும், தன்பிள்ளையைச் சான்றோன் எனப் பிறர் புகழவேண்டும் என்றே விரும்புவாள்.
கோடனகோடி மக்களைப் படைத்த அந்த அன்னை அபிராமிக்கு அது கொடுத்து வைக்க வில்லை!
ஏன் அப்படி?

அவளது ஒரு பிள்ளையை, அனைவரும்  அறிவிலி (அறிவில்லாதவன்) என்றும் அறிவிழி (அறிவில் இழிந்தவன்) என்றும் திட்டித் தீர்த்தனர்.
ஏன் அப்படித் திட்டினர்?

அன்னையின் அந்த  ஒருபிள்ளை மட்டும், கோயிலில் இருந்து கொண்டு,  அன்னையின் அவதாரங்களான பெண்களின் கால்களைப் பிடித்துக் கொண்டு,
அம்மா அபிராமித் தாயே!
அம்மா அபிராமித் தாயே!!
அம்மா அபிராமித் தாயே!!!
என்று வணங்கினால் யார்தான் திட்டமாட்டார்கள்?
பெண்பிள்ளைகளைக் கால்களைப் பிடிக்கும், அந்த ஒருபிள்ளையைக் கண்டால், அனைத்துப் பெண்களுக்கும் பயம்.  கோயிலுக்குள் சென்று அன்னை அபிராமியைக் கும்பிடவே பயந்தனர்.  கோயிலுக்கும் வரவே பயந்தனர்,

யார் அந்தப் பிள்ளை? 
அந்தப் பிள்ளை மட்டும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
அந்தப்பிள்ளைதான் அபிராமி பட்டர்!
அவருக்கு அனைத்துப் பெண்களுமே அன்னை அபிராமியாகக் காட்சியளித்தனர்.  அதனால்  கோயிலுக்கு வரும் பெண்களின் கால்களைப் பிடித்துக் கொண்டு,
அம்மா அபிராமித் தாயே!
அம்மா அபிராமித் தாயே!!
அம்மா அபிராமித் தாயே!!!  என்று வணங்கினார்,

இதனால்,  அபிராமிப் பட்டரின் பக்தியானது பகல்வேஷம் போலத் தோன்றியது.  
அபிராமிப் பட்டரின் செயல்கள் பொருளற்ற பொருளாகியது!!
அனைவரும் திட்டியதில் வியப்பில்லையே!
நாமக்கு இவ்வாறு நடந்திருந்தாலும் நாமும் இப்படித்தானே திட்டுவோம்??!??
அனைவரும் திட்டினர் அபிராமிப் பட்டரை!  அபிராமிபட்டரின் இந்தச் செயலுக்குப் பயந்து கோயிலுக்கு வருவதையே நிறுத்திக் கொண்டனர் சிலர்.

ஈன்ற  பொழுதிற்   பெரிதுவக்குந்  தன்மகனைச்
சான்றோ  னெனக்கேட்ட  தாய்  - என்கிறாரே தெய்வப் புலவர்,
அன்னை அபிராமிக்குத் 
தன்பிள்ளையைத் தனக்கு முன்னே,
தன்வடிவங்களாகிய பெண்கள் திட்டுவதைத் தாங்கிக் கொள்ள இயலுமா?

அபிராமிப்பட்டர் நினைப்பது போன்று, ஒவ்வொரு பெண்பிள்ளையும் அன்னையின் அம்சம் அல்லவா?
பெண்பிள்ளைகள் அபிராமிப்பட்டரைத் திட்டுவது என்பது, அன்னையே வேறுஒரு வடிவம் எடுத்துத் தன்பிள்ளையைத் திட்டுவது போல் ஆகாதா?
அன்னையின் அடிமனத்தை அறித்தது அபிராமிபட்டரின் செயல்கள்,
தன்பிள்ளையைச் சான்றோன் எனப் பிறர் புகழவேண்டும் - என விரும்பினாள்.

என்ன செய்வது?  எப்படிச் செய்வது?  தன்பிள்ளையைச் சான்றோன் எனக் காட்ட வேண்டுமே!
அதற்கான நாடகம் அறங்கேறியது!

மன்னன் வந்தான்.
அபிராமி பட்டரிடம்  -  இன்று என்ன திதி என்று கேட்டான்?
பெளர்ணமி - என்று பதில் வந்தது.
முழு நிலவு வரவில்லை யெனில், இவனைத் தீயிலிடுங்கள் என அரசாணை பிறந்தது.
அபிராமிப் பட்டரைத் தீ மேல் நிறத்தி வைத்தனர்.
அந்தாதி அரங்கேறியது.

தன்பிள்யைச் சான்றோன் எனக் காட்டிவிட்டாள், அன்னை அபிராமி.
வானில் நிலவும் வந்தது.
மக்கள் மனதில் இருளும் அகன்றது.
அன்னையின் அருள் உலகமெங்கும் பரவியது.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் 
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் 
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. 


அன்பன்
கி. காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Feb 4, 2019, 6:51:36 AM2/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, kanmani tamil


On Mon, Feb 4, 2019 at 2:39 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம் ஐயா.
தட்டச்சுப் பிழையைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா.  பாடலைத் திருத்திவிட்டேன்.

நன்றி, காசிஸ்ரீ. யாப்பிலக்கணப்படி பாட்டு இதோ:

              கட்டளைக் கலித்துறை:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூநிறத்  தாளைப், புவிஅடங்கக் 
காத்தாளை, ஐங்கணை பாசாங் குசமும் கரும்புமங்கை
சேர்த்தாளை, முக்கண் ணியைத்தொழு வார்க்கொரு தீங்கில்லையே.
 
இப்பாடம் ஏன் சிறப்பு என ஒரு கட்டுரை எழுதவேண்டும்.
குசுமம் (< குஸுமம்) என்பது பலரும் கேள்விப்படாத வடசொல். எனவே தான்
கிவாஜ ஊகித்த பாடம் பெரிதாகவில்லை. ஆத்தாளை - இதற்கியைய
சேத்தாளை என்பதும் கல்லா மாந்தர் பேச்சுவழக்கே, இப்பாட்டில்
குசுமம் இருக்குமா என்பது ஐயப்பாடு.

நூற்பயன் எனும் பலசுருதியில் அம்பாளின் நான்கு கைகளிலும்
இருப்பவற்றைச் சொல்கிறார்: 'ஐங்கணை, பாசம், அங்குசம், கரும்பும்
அங்கை சேர்த்தவள்' என்கிறார் பட்டர்பிரான். அவரது இயற்பெயர் சுப்பிரமணிய பட்டர்.
சிவாச்சாரிய குருக்கள் மரபு. இந்த நான்கும் காஞ்சி காமாட்சியிடம் காணலாகும்.
ஆனால், திருக்கடவூரிலே அப்படி இராது. லலிதா ஸஹஸ்ரநாமத்தின் சுருக்கமாக
அமைந்தது இப்பாடல். ஸஹஸ்ரம் > சாயிரம் (கன்னடத்தில்) > ஆயிரம் (தமிழ்)
என ஆவது பற்றி விரிவாக முன்னர் எழுதியுள்ளேன். 

அபிராமி அந்தாதி: கண்ணதாசன் உரை,

கர்ண மந்திரமும், அபிராமி அந்தாதியும்:

நா. கணேசன்



On Mon, 4 Feb 2019 at 15:01, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் 
காத்தாளை, ஐங்கணை பாசாங் குசமும் கருப்புவில்லும் 
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. 

பாச + அங்குசம் =  பாசாங்குசம் என வரவேண்டும். புணர்ச்சிவிதி.
கருப்புவில்லும்: இதற்கு "கரும்பும்அங்கை" என்ற பாடமுண்டு.

மூன்றாம் அடி என்ன என்பதைப் பலர் சிந்தித்துள்ளனர்.
"அங்குச பாசம் குசுமம் கரும்புமங்கை" என்ற பாடத்தை கிவாஜ
ஊகித்துத் தருகிறார்.
அருமை.
அருமை.
 

              கட்டளைக் கலித்துறை:
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம் 
பூத்தாளை, மாதுளம் பூநிறத்  தாளைப், புவிஅடங்கக் 
காத்தாளை, ஐங்கணை பாசாங் குசமும் கரும்புமங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கொரு தீங்கில்லையே.

இப்பாடலின் நயம்: எளிய மக்கள் 'ஆத்தாள்' என்று வணங்குதலைச் 
சொல்லித் தொடங்குகிறார் பட்டர். 'கண்ணாலம்' என்ற பேச்சுவழக்கை
ஆண்டாள் பிரயோகிப்பதுபோலே.

வாழ்க வளமுடன்
நா. கணேசன்
🙏 
அன்பன்
கி.காளைராசன்

N. Ganesan

unread,
Feb 5, 2019, 12:00:50 PM2/5/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Mon, Feb 4, 2019 at 4:10 AM nkantan r <rnka...@gmail.com> wrote:
I remember reading in a mir publication about the date and possible astro phenomenon-a supernova- . trying to get the information again. What is the actual date. Tried google but failed.

I think it was saroboji-I bhonsl . any one knows the exact date?

Or only a story?

I believe this is only a story. 

It is an interesting speculation about astro phenomenon. Who was the author of the book?  

May be one of these??
1667 or 1679The inferred date of the supernova explosion which produced the Cassiopeia (Cas) A supernova remnant (SNR 111.7-02.1), the last supernova known to have occurred in our (Milky Way) Galaxy. It has been somewhat puzzling to modern astronomers as to why there are no definitive observations by contemporaneous eastern or western astronomers of this supernova, although it has been suggested by Ashworth (1980, Journal for the History of Astronomy, 11, 1) that Flamsteed may have seen it, since there is a star marked in John Bevis's Uranographia Britannica (sky atlas), which was created in the 18th century, at the position at which Cas A lies.
Jun 1670The first definitive detection by Western astronomers of a classical nova, now called Nova Vul 1670 or CK Vul. The discoverer is believed to be Dom Anthelme, a Carthusian monk, who reported a new 3rd magnitude star in (what was then) the constellation of Cygnus. After CK Vul faded out of sight in 1672, it was not until 1982 that astronomers located the now much fainter star and the nebulosity ejected in the outburst: see Shara et al. (ApJ, 294, 271, 1985) for a review of this object. See the IAU Central Bureau for Astronomical Telegram's List of Novae in the Milky Way for the properties of this and later Galactic novae.



NG


rnk
Reply all
Reply to author
Forward
0 new messages