Re: [வல்லமை] Re: ஊர்ப் பெயர்களின் காரணங்கள்

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
May 1, 2025, 6:03:38 AMMay 1
to vall...@googlegroups.com
On Tue, Apr 29, 2025 at 2:35 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///பூந்தண்மலி./// Dr.Ganesan wrote 3days ago

நன்றி, முனைவர் கணேசன் 
சக 

கழுகுமலையில் நடுகல் கல்வெட்டு உள்ளது. தமிழகத்தின் பல ஊர்களைக் குறிப்பிடும் முக்கியமான கல்வெட்டு. வட்டெழுத்து. அதில், தொண்டைநாட்டுப் பூந்தண்மலி என இப்போதைய பூந்தமல்லி ஊரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பூவால் பெயர்பெறும் இன்னும் சில சென்னை ஊர்கள்: அல்லிக்கேணி அறிவோம். 
இன்னொன்று: கோடன்பாக்கம் (= கோடல்+பாக்கம்). கோடா பாக் (Ghoda Bagh) என்பதில் இருந்து இப்பெயர் என்பது கற்பனை. சான்றே இல்லை. 
----------

கோடல் என்பதனைக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பாடினார். வெண்காந்தள் மலர் என நிகண்டுகளிலும், நச்சரும் உரைத்துள்ளனர். கோடன்பாக்கம் பற்றி இலக்கியங்கள் (நேரம் கிடைக்கையில்) பார்ப்போம். உடன்படுமெய் >> உடம்படுமெய் ... போல, கோடம்பாக்கம் (< கோடன்பாக்கம்). 

கோடல் -  Gloriosa rothschildiana Lutea (அ) Malabar Glory (yellow). வெயிலில், வெண்மையாய்ப் பார்க்கலாம். வெளிர்மஞ்சள். பூவிதழ் நீண்டு, நுனியில் கோடுவதால் கோடல். கோடல் காண்க:

நொச்சிநியமங்கிழார் ஊர் யாது? ஆராய்ந்து விளக்குகிறேன்.

பிற பின்,
நா. கணேசன்


On Wed, 30 Apr 2025, 1:04 am kanmani tamil, <kanmani...@gmail.com> wrote:

அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...
 
///தப்பு. பூந்தன்மலி கல்வெட்டுப் பெயர்///


புதிய தகவல்களுக்கு நன்றி சேஷாத்ரி ஐயா 

சக 

N. Ganesan

unread,
May 1, 2025, 6:21:56 AMMay 1
to vall...@googlegroups.com
கோடல் மலர் (Malabar Glory (yellow)) ஏன் வெண்காந்தள் எனப் பெயர் பெறுகிறது?
வெயிலில் பாருங்கள்:

On Thu, May 1, 2025 at 5:07 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
> 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை
> போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது 
> மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

கோடன்பாக்கம் - பெயர்க்காரணம் இதுவன்று.

N. Ganesan

unread,
May 1, 2025, 7:23:48 AMMay 1
to vall...@googlegroups.com
On Thu, May 1, 2025 at 6:14 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நிலைமொழியில் -ல் ஈறு, வருமொழியில் ப- வருக்கம் ==> -ன்ப- வருக்கம் எனப் புணரும் சொற்புணர்ச்சிக் காட்டுகள் உள்ளனவா? உ-ம்: கோடல்+பாக்கம் = கோடன்பாக்கம், நல்+பால் = நன்பால் (குறள்). நன்றி.

வினையொடு வினை எதிர்நிரல்நிறை -

{Entry: M13a__647}

முடிக்கப்படும் வினையும் முடிக்கும் வினையும் முறைமாறி அமைந்திருக்கும் நிரல்நிறை வகை இது.

எ-டு :

 ‘வன்சயிலம் ஏந்தி வளைமுழக்கி, வெண்தயிர்கட்(டு)
அன்புறக்கட் டுண்(டு)அமர்வென்(று) ஆஅளித்தான் - நன்புள்
கட(வு)எந்தை வானோர் கடிகா இடந்த
இடவெந்தை யில்வாழ் இறை.’

இடவெந்தைவாழ் இறை, வெண்தயிர்கட்டு, உரலில் கட்டுண்டு, வன்சயிலம் ஏந்தி, வினைமுழக்கி, அமர்வென்று, ஆ அளித்தான் எனப் பொருள் கொள்க. கட்டு, கட்டுண்டு, ஏந்தி, முழக்கி, வென்று, அளித்தான் - என வினைகள் மாற்றி............ எனவினைகள் மாற்றி இணைக்கப்படுவதனை வினையொடு வினை எதிர்நிறை என ஓர் அணியாக்கினார் மா. அ. ஆசிரியர். (சூ. 168)) https://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/M13a.html

வெண்தயிர் கட்டுதல் - Cf. களை கட்டுதல் (குறள்). நாமக்கல் கவிஞர் உரை:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று

Reply all
Reply to author
Forward
0 new messages