Rose (= ரோசா) - ஏன் தமிழில் ‘ரோஜா’ ஆகிறது?

12 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 2, 2009, 8:09:59 AM11/2/09
to தமிழமுதம், mint...@gmail.com, santhav...@googlegroups.com, tamil_...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, anb...@googlegroups.com
கோவை ஸ்ரீ செல்வன் தமிழமுதம் ஜி-க்ரூப்பில் எழுதினார்:

>> ரோஜா = 116,000 hits VS. ரோசா=24300 hits

>> ரோஜா தான் நாவுக்கு எளிது போல
>> --
>> செல்வன்

மனிதர் நாவுக்கு ரோசாவும், ரோஜாவும் ஒன்றுதான்.
ரோஜா என்றாவதற்கு ஒரு சமூக-மொழியியல் பரிமாணம்
உள்ளது. இன்னும் சற்றே விளக்குகிறேன்.

வட தமிழகத்தில் (உ-ம்: சிதம்பரம் பகுதி) ரசம் > ரஜம்,
வெங்கடாசலம் > வெங்கிடாஜலம், அருணாசலம் > அருணாஜலம்,
ரோசா (Rose) > ரோஜா என்று மெல்லொலிகள் ஆவது மேல்வர்க்க
(high class indicator) பண்பு. ரோசா என்று தமிழ்மட்டுமே
பேசுவோரிடம் (monolinguals) ஒலிக்கக் கேட்கலாம்.
ஐரோப்பிய மொழிகளின் மூலச் சொல்லும் ரோசா என்பதற்கே
ஒத்துவருவது கண்கூடு. ஆனால், ரோஜா என்று இணைய
எழுத்துக்களில் பரவ மேல்குடிகளின் மேட்டிமைத்தனம்
வேரூன்றுகிறது என்று அறியலாம்.

வசனத்தை வஜனம் என்றும் உச்சரிப்பது உண்டல்லவா?
அதுபோன்றதே, ரோசாவை ரோஜா என்பதும்.
ரோசாப்பூ ரவிக்கைக்காரி vs. ரோஜா திரைப்படங்களை
நினைத்துப் பாருங்கள். ரோசாவைக் கொச்சை என்றும்,
ரோஜாவை உயர்ச்சி என்றும் கொள்வது மேட்டிமைக்
குடி வழக்கம்.

நிற்க.

இந்த மேட்டிமைத் தனத்தைத் தமிழ் வார்த்தைகளை
ஆங்கிலத்தில் இணையத்தில் எழுதும் போதும்
காணலாம். ரோசாவை ரோஜா என்று எழுதுதல் போல,
மூக்கொலி (nasal sound) கொண்டு தமிழ்
வார்த்தைகளான அகம், முருகன், உருகு, அழகு, ...
agam, murugan, urugu, alagu என்று பலரும்
மேல்தட்டு மேட்டிமைத் தனத்தால் எழுதுகின்றனர்.
aham, muruhan, uruhu, alahu, .... என்ற ஒலியைச்
சிறப்பாக பாடும் பாடல்கள் (டிஎம்எஸ், பி. சுசீலா,
வாரியார், மதுரை சோமு, வைரமுத்து, ...) பாடல் மற்றும்
பேச்சு யுட்யூப் விடியோக்கள் பல கொடுத்து
மின்தமிழ் குழு ஆவணங்களில் இருக்கின்றன.
பாருங்கள். பாட்டைக் கேட்டால் aham, muruhan, uruhu, alahu, ...
எனக் கேட்கும், ஆனால் எழுத்தில் agam, murugan, urugu, alagu, ..
என்றிருக்கும்!! இது ஒரு பண்டைத் தமிழின் உண்மையான
ஒலிப்பைக் கொச்சை என்று தள்ளும் ஒருவகை
மேட்டிமைத்தனம் ஆகும்.

தொல்திராவிட மொழியின் பழைய ஒலிப்பு
2 உயிரெழுத்தின் நடுவே வரும் ககரம் ஒருவகை
ஹகர ஒலியே (dorso-velar voiceless fricative)
என்று பல மொழியியல் (ஒலியனியல் = ஃபோனெடிக்ஸ்)
அறிஞர் அறுதியிட்டுளர்.

S. Ilakkuvanar, TholkAppiyam in English with critical studies,
1963 (second edition 1994), Madras
p.272
> "In the spoken language there are ten more additional sounds.
> The hard class consonants are pronounced as voiced ones when
> preceded by their respective nasals [10]. k is pronounced
> as h when standing alone in the middle of a word as in aham
> and when preded by Aytam as in eHku."
(S. Ilakkuvanar was a pure Tamil movement leader.)

Let us also hear Kanchi Periyavar, Sri. Chandrasekharendra Saraswathi:
http://www.kamakoti.org/hindudharma/part6/chap5.htm
"I heard him silently because I thought a Northerner learning a Tamil
song deserved to be encouraged. But soon I found that I could no
longer suffer his erratic reading. So I told him in a friendly manner
that his pronunciation was faulty. To this he said: "What can I do? It
is all in the book. " What he said was right and it showed that in
Tamil too the words are not always written according to how they are
pronounced. Letters that come in the middle of a word are not
pronounced as they are written. We write "makalotu" but say
"mahalodu"; we write "atarkaka" but say "adarkaha". "Ka" becomes "ha"
in the middle and end of the word. "Ta" in the beginning of a word
remains "ta" but in the middle becomes "da". For instance,
"tantai" (father) is pronounced as "tandai" and "Katavul" (God) and
"itam" (place) pronounced as "Kadavul" and "idam". Such matters are
dealt with in detail in Tamil grammar books. "

On the intervocalical -k- pronounced as -h-,
also refer to G. L. Hart, H. Heifetz, The four hundred
songs of war and wisdom: An anthology of poems
from classical Tamil, 1999, Columbia UP.
Esp. Short guide to Tamil pronunciation on pages ix and x
From p. x., George Hart writes,
"Single k between vowels is like English h (only a bit
harder): *akam* is pronounced as if it were aham.
*Gk* is like ng in anger."

Kamil Zvelebil, Drav. linguistics today, 1984 writes:
"Proto-Dravidian phonology may be very much like (Old) Tamil;
In morphology and syntax, Tamil and South Dravidian had their
far-reaching innovations".

செந்தமிழ் நிலங்கள் என்று தமிழ் இலக்கண மரபு
வரையறுக்கும் மதுரைப் பகுதிகளிலும்,
தென், ஈழ தமிழ்நிலங்களிலும் இந்த தொல்லொலியான
உராய்வொலி இன்றும் நிலவிவருகிறது.

கவிஞர் புகாரி இந்த ஒலிப்பை விளக்கி வருகிறார்:
புகாரி என்று எழுதினால், மக்கள் புஹாரி என்று
சரியாக உச்சரிப்பதை பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றி மே 2009-ல்
வெளியிட்ட சாசனத்திலும் Prabaharan என்றே
எழுதியுள்ளமை காண்க.

தமிழ் எழுத்தை ஒலியாக்கும் கணிமுறை கண்டுள்ள
ஐஐஎஸ்சி (வெங்காலூர்) பேரா. ஆங்கரை கணேசன் ராமகிருஷ்ணனும்,
நானும் தமிழ் பலுக்கலில் சிறந்த பாடகர்கள் என்று
எல்லோரும் போற்றும் டிஎம்எஸ், சுசீலா, ... போன்றோரின்
பாடல்களை எடுத்து அலைக்கற்றை அதிர்வெண் ஆய்வு (spectral
frequency analysis) செய்து வெளியிட உள்ளோம்.

நா. கணேசன்

R. Radhakrishnan

unread,
Nov 5, 2009, 12:19:22 PM11/5/09
to housto...@googlegroups.com
கணேசன்,
சிறப்பான மின்மடல். நுட்பமாக கவனத்தில் இருத்தவேண்டிய கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள்.  பலரும் பயன்பெறுவர்.
வாழ்க வளமுடன்.
ராதாகிருஷ்ணன்
நவம்பர் 5, 2009
2009/11/2 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages