http://mymintamil.blogspot.com/2016/07/vinnil-irunthu-varum-virunthaaligal-by-singanenjam.html
முனைவர் சிங்கநெஞ்சனின் விண்கல்கள் (மீட்டியோரைட்ஸ்) பற்றிய பதிவு படித்தேன்.
எரியோடு, ஈரோடு, வெள்ளோடு, பச்சோடு, .... போன்றவற்றின் பெயர்க்காரணம் வேறு,
அது தமிழரின் பண்டைச் சமயங்களைச் சார்ந்ததாகும்.
நான் கேட்டறிந்தவரையில் "எரியோடு" என்னும் ஊர்ப்பெயருக்கும்
விண்கல்லுக்கும் தொடர்பில்லை. அவ்வூரில் விண்கல்லோ, அதனானல் ஏற்பட்ட
பள்ளமோ கிடையாது.
-ஓடு என்னும் முடியும் கொங்குநாட்டு ஊர்ப்பெயர்கள் பல. அவற்றுக்கு
மகாவித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர், புலவர் செ. இராசு
(கல்வெட்டியல் துறை, தமிழ்ப் பல்கலை) போன்றோர் கூறும் காரணத்தை முன்னர்
சிலமுறை குறிப்பிட்டுள்ளேன். பாசுபதர், மாவிரதியர், காபாலிகர்,
காளாமுகர், அகோரிகள், .... என்று பலவிதமான சிவனை வழிபடும் குழுமங்கள்
இருந்தன. ராசிகணம் என்றும், ருத்ரகணத்தார் என்றும் அறியப்பத்தவர்கள்.
ராசிகணத்தாரால் ஏற்பட்ட ஊர்ப்பெயர் ராசிபுரம். பிரபல எழுத்தாளர் ஆர். கே.
நாராயண் என்ற பெயரில் உள்ள ஆர் ராசிபுரந்தான். ஆர். கே. லக்ஷ்மண் அவர்
தம்பி. மேலும், ராசிகணம் பற்றி அறிய, கோவை வாணவராயர் அறக்கட்டளைச்
சொற்பொழிவு,
கல்வெட்டறிஞர் ர. பூங்குன்றன் (தொல்பொருள் துறையில் 50 ஆண்டு அனுபவம்
வாய்ந்தவர்.)
http://kongukalvettuaayvu.blogspot.com/2018/05/24-12-2017.html
"தமிழகத்தில் இலகுலீச பாசுபதம்
கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம்
செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்)
மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது.
இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில்
பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக்
கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக்
கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது
கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை” என்னும் தொடர்
காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில்
கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய
குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.
1 கலிசோரேச்0வர பல்லவேச்0வர
2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர
6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு
க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள்
ஸாஸனம்
காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர்
வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள் காஞ்சீ ,
”புஜங்கர சிஷ்யர்” , “வித்யாராசி” ஆகிய சொற்கள் இச்செய்தியைச்
சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது. ”லாகுளாகமிக”
என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக” எனப்பிரித்துப் பொருள்கொண்டால்
லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவி “வித்யாராசி” என்பது
பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி” என்னும்
பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது."
எரியோடு என்றால் சுடலையில் எரியும் தீயைத் தாங்கி ஆடும் சிவபிரான் ஊர்
என்பதால் வைத்த பெயர்.
பிரமனின் மண்டையோட்டைத் திருகி அப்படியே ரத்தம் கசியக் கசிய
வைத்திருக்கும் ஈசுவரன் கோயில் உள்ள இடம் ஈரோடு.
அங்கே சுவாமி பெயர் ஈரோட்டுநாதர். இது வடமொழியில் ஆர்த்ரகபாலீசுவரர்.
ஆர்த்ரம் என்பது ஈரம்.
http://aalayamkanden.blogspot.com/2010/09/aarudhra-kabaaleeswara-temple-erode.html
http://karaimodumalaigalmathangi.blogspot.com/2014/11/blog-post_31.html
பேரோடு - இங்கே இருந்து இரா. வடிவேலன் என்ற தமிழாசிரியர் 'கொங்குப்
புலவர்கள்' பற்றி நூலெழுதியுள்ளார்
10 ஆண்டு முன் எழுதிய பதிவு:
ஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு
(பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே
உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு.
கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக
சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய
வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost
Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம்
என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும்.
பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும்.
ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று:
ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர
கபாலம் = ஈர ஓடு.
அடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர்
வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர்
திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக்
காத்தளித்த இடம். தமிழிசைக் கருவூலம் பஞ்சமரபு. ஈரோடு, வெள்ளோடு,
சித்தோடு, பச்சோடு, பேரோடு, எரியோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின்
உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.
http://nganesan.blogspot.com/2009/12/erode-meeting.html
நா. கணேசன்
>>>>>> உ
>>>>>> புலிக்கரை ஐயனார் துணை
>>>>>>
>>>>>>
>>>>>> விண்ணிழி விமானம்
>>>>>>
>>>>>>
>>>>>> மதுரை அருள்மிகு சோமசுந்தரேசுவரருக்கு (சுயம்புலிங்கத்திற்கு) மேல் உள்ள விமானம் ஒரு விண்பொருளாகும். இது ஒரு “விண்கல்“. விண்கல்லால் ஆன விமானங்கள் இரண்டு கோயில்களில் உள்ளதாகப் புராணங்களில் குறிப்புகள் உள்ளன. ஒன்று மதுரை மற்றொன்று திருவீழிமிழலை. இந்த இரண்டு விமானக் கற்களும் விண்ணில் இருந்து வந்து சேர்ந்த காரணத்தினால், இவற்றை “விண்ணிழி விமானம்“ எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
>>>>>>
>>>>>> தேவர்களின் தலைவன் இந்திரன். இவன் கொலைப்பாவத்தை போக்கிக் கொள்ள வேண்டிப் பல திருத்தலங்களுக்கும் சென்று வழிபாட்டான். அப்போது, சிவபெருமானின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய மதுரையில் ஓர் அழகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட்டான். வழிபட்ட உடனேயே அவனது பாவம் நீங்கியது. இந்திரனும், அச் சுயம்பு லிங்கத்திற்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான். தேவலோகத்திலிருந்து ஒரு விமானத்தை (ஒரு பெரிய கல்) எடுத்துவந்து சுயம்புலிங்கத்திற்கு மேலே விமானமாக அமைத்தான். எனவே இந்த விமானத்திற்கு இந்திர விமானம் என்ற காரணப் பெயர் உண்டானது. இந்த விமானம் விண்ணில் இருந்து இழிந்து (இறங்கி) வந்த காரணத்தினால் “விண்ணிழி விமானம்“ என்ற காரணப் பெயரும் உண்டானது.
>>>>>>
>>>>>> இந்த விண்ணிழி விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்துநான்கு பூதகணங்களும் தாங்கி நிற்கின்றன.
>>>>>>
>>>>>> முன்னொரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டுத் தமிழகம் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்வளவு பெரிய பிரளயத்திலும் இந்த விண்ணிழி விமானம் மட்டும் அழியவில்லை(1). மதுரையானது, பிரளயகாலத்தில் வந்த கடல்நீர் வற்றிய பின்னர் கடம்ப மரங்கள் அதிகமாக முளைத்துக் கடம்பவனக் காடாக இருந்தது. இந்தக் கடம்ப வனத்தை அழித்து வங்கிய சேகர பாண்டியன் தற்போதுள்ள மதுரை மாநகரை நிர்மாணம் செய்தான்.
>>>>>>
>>>>>> அப்போது மதுரையின் பண்டைய எல்லைகளைக் காட்டுமாறு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டான். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கச் சிவபெருமானும் ஒரு சித்தர் வடிவில் இந்த விண்ணிழி விமானத்திலிருந்து தோன்றி அருளினார்.
>>>>>>
>>>>>> சிவபெருமாள் தோன்றி அருளிய இந்த விண்ணிழி விமானத்தை வணங்கினால் சிவபெருமானையே நேரில் வணங்குவதற்குச் சமமாகும். எனவே மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதரின் விமானத்தை வணங்கி வேண்டிய வரங்களைப் பெற்று நல்வாழ்வு வாழ்வோம்.
>>>>>>
>>>>>> இதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலையின் விமானமும் விண்ணிழி விமானம் ஆகும். திருமால் விண்ணுலகிலிருந்து விமானத்தைக் கொண்டு வந்து, அதில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து, பூசனை செய்து, அருச்சித்து சக்கராயுதம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.
>>>>>
>>>>>
>>>>> அறிவியல் அடிப்படையில் இந்தப் புராணக் கருத்தை நோக்கினால்,
>>>>> சந்திரனில் விண்கற்கள் விழுந்ததால் உண்டான பள்ளங்கள் போன்று, மதுரைக்கு அருகிலும் விண்கற்கள் விழுந்த இடங்களில் பெரும் பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லவா?
>>>>>
>>>>> மதுரையைச் சுற்றிலும் விண்கற்கள் விழுந்ததற்கான அடையாளங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.
>>>>> விண்கற்கள் விழுந்த இடங்களாக ஐந்து இடங்களைச் சிவப்பு மையினால் குறித்து இத்துடன் இணைத்துள்ளேன்.
>>>>
>>>> மேற்கண்ட படத்தில் எரிகற்கள் விழுந்த இடங்களாக நான் கருதும் இடங்களை வட்டமிட்டுக் காட்டி யிருந்தேன்.
>>>
>>>
>>> விண்கோள் விழுந்ததா ?
>>>
https://www.thehindu.com/sci-tech/science/did-an-asteroid-hit-south-india-millions-of-years-ago/article26039498.ece?homepage=true&utm_campaign=socialflow
>>>
>>> அன்பன்
>>> கி.காளைராசன்
>>>
>>>>
>>>> இதில் வேடசந்தூருக்குக் கிழக்கே எரிகல் என்ற ஊருக்கு அருகில் விண்கல் விழுந்திருக்க வேண்டும் என வட்டமிட்டுச் சுட்டிக்காட்டி இருந்தேன்.
>>>> அறுபடைவீடு பாதயாத்திரை சென்ற போது 06.05.2016 வெள்ளிக்கிழமை யன்று வேடசந்தூரிலிருந்து புறப்பட்டு எரியோடு என்ற ஊர் வழியாக ஐயலூருக்கு (அய்யலூர்) நடந்துசென்றோம்.
>>>>
>>>> அப்போது எரியோடு என்ற இந்த ஊரில் எரிகல்லின் ஓடு விழுந்திருக்கும் வாய்ப்புகள் உள்ளனவா? என்ற அடிப்படையில் தேடிப்பார்த்தேன்.
>>>> எனது தேடலில் எரியோடு ஊரில் உள்ள பெருமாள் கோயில் அருகே மிகப்பெரிய பாறைஒன்று தென்பட்டது. இந்தப் பாறை நாம் சாதாரணமாகக் காணும் பாறை போன்று இல்லாமல் மாறுபட்டுள்ளது.
>>>>
>>>> (கூகிள் படங்களை இணைத்துள்ளேன்)
>>>>
>>>> விண்கல் எரிந்து விழுந்து பெரும் வட்டவடிவிலான மேட்டுப் பகுதியை உருவாக்கியுள்ளது. எரிகல் விழுந்த போது அதிலிருந்து பெயர்ந்த எரிகல் ஓடுமட்டும் தனித்து இந்த இடத்தில் விழுந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
>>>> புவியியல் வல்லுனர்கள் இந்த இடத்தில் உள்ள பாறையை இதற்கு முன் ஆராய்ந்துள்ளார்களா? என எனக்குத் தெரிவில்லை. அறிவியல் அடிப்படையில் இந்தப் பாறையை புவியியல் வல்லுனர்கள் ஆராய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.
>>>> எரியோடு ஊரில் உள்ள பெருமாள்கோயிலின் அருகே உள்ள பாறையானது ஒரு விண்கல்லாக இருக்க வேண்டும்.
>>>>
>>>>>> அன்பன்
>>>>>> கி.காளைராசன்
>>>>>> திருவிளையாடற் பராணம் ஆய்வாளர்,
>>>>>> திருப்பூவணப் புராணம் முனைவர் பட்ட ஆய்வாளர்,
>>>>>> திருவாப்புடையார் புராணம் ஆய்வாளர்,
>>>>>>
>>>>>>