செந்தமிழில் ழ, ண மாற்றங்கள் கொண்ட சில உதாரணங்கள் காட்டத்
துழாவிக்கொண்டிருக்கும் போது நிழல் என்ற பொருளுடைய நிணல்
என்ற சொல்லைத் தெரிந்துகொண்டேன். சிலருக்குப் பயன்படக் கூடும்
என்பதால் இம்மடல். நிணல் - நிழல் (சாயை) பற்றி முதலில் எழுதியவர் பாவாணர்.
நிணல் இணல் என்றும் யாழ்ப்பாணத்தில் வழங்குகிறது. மலையாளத்தில்
நென்னல்/நெருநல் - இன்னெலெ என்றாவதுபோல், நிழல்/நிணல் > இணல்.
திருக்குறள் தமிழ்மரபுரை, தேவநேயப் பாவாணர்.
”ஆணி; ஆழ்-ஆழி-ஆணி=ஆழ்ந்திறங்கும் முட்போன்ற கூர்ங்கருவி. ஆணிபோல் ஆழ்ந்தூன்றும் வேரை ஆணிவேர் என்றும் சுவரில் ஆணி பதிதலை ஆணியிறங்குதல் என்றும், கூறுவது காண்க. ழ-ண, போலி. ஒ. நோ: தழல்-தணல், நிழல்-நிணல் ஆணி-ஆணி (வ.)”
(1)
”இணல், நிணல் - நிழல்”
தூரங்கள்
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
நிணல்....
(3)
நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தின் அன்னதான திருச்சேவை நிணல் படங்கள்.
(4)
நிணல் பிரதி இயந்திரம் = copying machine
(5)
காலமும் கோலமும்
திரியில்லா விளக்காய்
கரியில்லா கங்கலாய்
கொட்டிச் சிதறிய தங்கத் தட்டாய்
கீழ்வான்!
அது எழுஞ் சூரியக்
கதிர்சூழ் காலை
நீள் நில
நிணல்
கூனிக் குறுகிய
கொடுங்கோல் சூரியன்
உச்சத்தில்!
மீண்டது மாலை
நீண்டது நிணலே!
எப்போதும்
குடை பிடிக்கும்
மரம்.
(7) சந்திரனை முதல்முதல் நிணல் படம் எடுத்தவர்யார்?
ஜான்-டபிள்யு-டிராபர்
etc. etc.,
-----------
செந்தமிழின் அரிய சொல்லாக்கம் இன்றும் ஈழத்தில்!
வள்ளுவரின் தொடிப்புழுதி கஃசா உணக்குதல் (= உழக்குதல்) என்றால் பொருந்தும்.
உணக்குதல் = சூடாக்குதல்/காயவிடுதல்/வாட்டுதல் என்று
நெல்வேளாண்மைக்கு அறவே பொருந்தவில்லை:
இதனை எழுதியபோது நான் தெரிந்துகொண்ட ஈழநாட்டுச் சொல்: நிணல் < நிழல் (தணல் - தழல், உணக்குதல் - உழக்குதல் போல.) தமிழ்நாட்டு நூல்களில் இல்லாத பழஞ்சொல்.
நா. கணேசன்