(1) பெருங்கதையில் பாஞ்சாலராயனின் நண்பன் கும்பன். தமிழில் முதலில் கும்பன் என்ற சொல்லைக் கொங்குவேளிர் பயன்புடுத்துகிறார்.
(2) திருமங்கை மன்னன் பெரிய திருமொழியில் கும்ப-நிகும்ப சோதரரைப் பாடியுள்ளார்.
(3) கம்பர் 4 பாடல்களில் கும்பன் என்கிறார்.
ஒரு பாடல் மிகைப்பாடல், அதில் போருக்குப் பின் வந்து ராம லக்குவரைச் சந்திக்கும் ஒரு அசுரனாகக் கும்பன் உள்ளது. எனவே அதை விட்டுவிடலாம்.
ஏனை 3 பாட்டிலும், கும்பன் என்பவன் கும்பகர்ணன் மகன். எனவே, கம்பனின் கும்பன் இவன்.
மிகைப்பாடலில் கும்பன்:
கும்பன் - கம்பர் பாடல்கள்
எனவே, கும்பன் என கும்பகர்ணன் பெயரைச் சுருக்கிக் கம்பர் பாடவில்லை.
சரண்யா அவர்கள் குறிப்பிட்டதுபோல, திருப்புகழில் கும்பன் எனக் கும்பகர்ணன் வருகிறான்.
இவனை எதிர்த்து இராமனால் கொல்லப்பட்டான் என்றும் சொல்வதால், இவன் கும்பகன்னன்.
அம்ப கும்பனுங் கலங்க ... அம்பு முதலிய பாணங்களைக் கொண்ட
கும்பகர்ணனும் உள்ளம் கலங்குமாறு
வெஞ்சினம்புரிந்து நின்று ... மிக்க கோபத்துடன் போர்க்களத்தில்
நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே ... அம்புகளை
ஏவி வென்ற மேகவர்ணன் ராமனின் மருகனே,
20-ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் போலப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நா. கணேசன்