பண்ணை, பண்ணாங்குழி (பல்லாங்குழி)

174 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 3, 2021, 8:49:30 AM12/3/21
to Santhavasantham
பண்ணை, பண்ணாங்குழி (பல்லாங்குழி)
-------------------------------------

பண்ணை என்பதற்கு அடிப்படையான பொருள் குழி என்பதாகும். எனவே, குளம், தாழ்ந்த நிலம், எனவே மருதத் திணையில் வளமான நிலம் (வயல்) ... எனப் பொருள் விரியும். வேளாண்மைத் தொழில் செய்யும் நிலம், தொழில் எல்லாம் பண்ணையம் எனப்பட்டது. விவசாயம் செய்யும் கிழாரின் பெயர்: பண்ணையாடி > பண்ணாடி என்று அழைக்கப்படும் சொல்.  சலவைத் தொழிலாளர் வாழ்ந்த பகுதிகள் வண்ணார்பண்ணை. யாழ்ப்பாணத்தில் இங்கே தான் ஐரோப்பியர்களின் மதமாற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் தொடங்கினார்.

பண்ணை - Tank, pond; lake; நீர்நிலை. (பிங்.)
            விசும்பிழி தோகைச் சீர்போன் றிசினே
            பசும்பொன் அவிரிழை பைய நிழற்றக்
            கரைசேர் மருதம் ஏறிப்
            *பண்ணை பாய்வோள்*  தண்ணறுங் கதுப்பே. . . . . ஐங்குறுநூறு 74
பொருளுரை:
கரையிலிருந்த மருதமரத்தில் ஏறி அவள் குளத்தில் பாய்ந்தாள். அது வானத்திலிருந்து மயில் இறங்குவது போல இருந்தது. அவள் அணிந்திருந்த அணிகலன்கள் மயில் தோகையையும்,கண்களையும் போல விளங்கின. – தலைவன் வியப்பு.

பண்ணை Stream; A basin or trench for water round the root of a tree; மரத்திற்கு அடியில் நீர் பாய்ச்சு மாறு இடும் பாத்தி. மரத்திற்குப் பண்ணை பிடிக்க வேண்டும். Tinn.; பண்ணைக்கீரை - நீர்நிலை அருகே வளரும் கீரை. வெள்ளநீர்ப் பண்ணையும் விரி நீரேரியும் (சிலப். 13, 192). வெள்ளம் வரும் போது நிறையும் வயல்.
பண்ணை - large dhoney, மரக்கலம்.

தவிடு, பிண்ணாக்கு, கழுநீர் கலந்த திரவத்தை மாடு, எருமைகளுக்குப் பண்ணையில் ஊற்றுவது வழக்கம். புல், தட்டு வைக்கும் தொட்டி, காடி எனப்படும். நாய்களுக்கு இராகியில் இருந்து காய்ச்சும் கூழ் அம்பிலி. மாடுகளுக்கு நோய் வந்தால் அம்பிலியில் மருந்தைக் கலந்து மூங்கில் குழாயில் ( = கொட்டம்) ஊற்றிக் கொடுப்பர். Force feeding = கொட்டம்பிடித்தல். கூழ் அம்பிலியை நாய்களுக்கு ஊற்றும் கல்தொட்டியின் பெயர்: பண்ணை. அம்பிலி என்ற சொல் பற்றி அறிய:
DEDR 174 Ta. ampali porridge, esp. of rāgi (< Te.); amalai boiled rice. To. obely watery mess of rice, rāgi, etc. Ka. ambali, ambakaḷa, ambila, ambuli, amli pap or porridge made of jōḷa, rice, or rāgi, with buttermilk (also tamarind) generally added. Tu. ambuli pap or gruel of rāgi or rice. Te. ambali, ambakaḷamu porridge, pap. Kol. (Kin.) amba cooked rice; (Haig) aṁbāl food; (SR) vallambā rice (val rice). Nk. ambal boiled rice. Go. (Y.) ambil gruel, pēj (Voc. 65). Konḍa ambeli porridge prepared with ḍēra (Eleusina coracana). Kuwi (Isr.) ambeli porridge prepared with rāgi flour. Kur. amṛī, amḍī, ambṛī water in which rice has been cooked. / Cf. Mar. ãbīl gruel. DED(S) 146.

தொல்காப்பியர் கூறும் இரு விளையாட்டுகள்:
--------------------------------------

தொல்காப்பியம் உரியியல் (தொல். 317) என்ற பகுதியில் கெடவரல், பண்ணை எனும் இரு சொற்களால் விளையாட்டைக் குறிக்கின்றது.
"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு" - தொல்காப்பியம்

‘கெடவரலாயம்’. ‘பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளும்’ (மெய்ப்பாட்டியல்-1).

(1) கெடவரல்:
-------------

தொல்காப்பியர் காலத்தில் வன விலங்குகள் தாக்குதல் மிகுதி. புலி, சிறுத்தை, ... போன்றன எருமை, மாடு, மக்களைத் தாக்குவது அன்றாட நிகழ்ச்சி. புலிக்குத்திக் கற்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆகோள் பூசலும் உண்டு. ஆனைகள் கரும்புத் தோட்டத்தை அழிக்கும். ”பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமும் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பும் உளவாகின்றே” (இளம்பூரணர்). கேடு வருகிறது என வருந்துவது போல் அபிநயித்து சிறுவர்கள் ஆடும் விளையாட்டு, “கெடுவரல்” எனப்பட்டது போலும். புலி வருகிறது என்று கூறி அஞ்சி நடித்து ஆடும் விளையாட்டு எனலாம். ஒரு சிறுமி புலியாகவும், மற்ற சிறுவர்கள் வருந்தி ஓடுவதாகவும் அமையலாம். இந்த விளக்கத்தைக் கல்லாடம் நூலில் உள்ள பாட்டால் உணர முடிகிறது:

https://www.chennailibrary.com/saiva/kallaadam.html
18. உலகியல்பு உரைத்தல்

பழமை நீண்ட குன்றக் குடியினன்
வருந்தாது வளர்த்தும் குடங்கை துயிற்றியும்
*மானின் குழவியொடு* *கெடவரல் வருத்தியும்*
பந்து பயிற்றியும் பொற்கழங்கு உந்தவும்
பாவை சூட்டவும் பூவை கேட்கவும் 5

கெடவரல் என்பது இயற்கை நிகழ்ச்சியை நடித்து விளையாடுவது என்பது கல்லாடச் செய்யுளால் விளங்கும். மான் குட்டிகள், புலி போன்றவை தாக்க வர, வருத்தம் மிக்கு அஞ்சி இரிதலைக் காட்டும் விளையாட்டு.
http://www.ulakaththamizh.in/uploads/book/pdf/Vellai_Varananar_17.pdf

(2) பண்ணை:
----------------

பண்ணை விளையாட்டு உலகம் முழுதும் உள்ள பண்ணாங்குழி விளையாட்டு ஆகும். பண்ணை என்பதன் அடிப்படைப் பொருளை மேலே பார்த்தோம். பண்ணை = குழி. பண்ணை+ஆடி = பண்ணாடி. அது போலவே, குழியில் பலகறை, கூழங்கல் போன்றவை இட்டு ஆடும் ஆட்டம் பண்ணாங்குழி. பண்ணை+அம்+குழி = பண்ணாங்குழி. போஸ்ட்-கம்பம் என்கிறோமே, அதுபோன்ற சொல்லாக்கம்: பண்ணாங்குழி, ஒரே பொருள்கொண்ட இருசொற்கள் சேர்ந்து வருவது பண்ணாங்குழி. பல குழிகள் இருப்பதால் பல் + அம் + குழி = பல்லாங்குழி. இச்சொல் தமிழின் முதல் மிக நீண்ட செப்பேடு ஆகிய பள்ளன்கோவில் செப்பேட்டிலே வந்துவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*வனத்திடைப் பண்ணையாட* (சீவக சிந்தாமணி 1579). காட்டுக்குச் சென்று, மரத்தடியே உள்ள பாறைகளில் உள்ள பண்ணாங்குழிகளில் விளையாடுதல். நாய்க்கு அம்பிலிக் கூழ் காய்ச்சி ஊற்றும் பண்ணை பற்றிக் குறிப்பிட்டேன். அந்த அம்பிலிப் பண்ணை உருவாக, பண்ணாங்குழி இரண்டு லட்சம் ஆண்டுகளாக உலக முழுதும் மக்கள் தனிக்கற்களிலும், பாறைகளிலும் செய்துள்ள neolithic, megalithic ஊழிகளின் கலைவெளிப்பாடு தூண்டுதலாக அமைந்துள்ளது. பண்ணாங்குழி 2 லட்சம் ஆண்டுகளாய் இந்தியாவில் கிடைக்கிறது. எப்படிச் செய்தனர்? காணொளிகள் பார்க்கவும்: https://roaringwaterjournal.com/tag/cupmarked-stones/

அம்பிலிப் பண்ணை அமைய மாதிரி: Cupmarked “pocket-stones” from Late Neolithic contexts by Casper Sørensen
https://www.rockartscandinavia.com/adoranten-2018-ac27.php
https://www.rockartscandinavia.com/images/articles/a18casper.pdf

தொல்காப்பியர் உரியியலில் இந்த மிகப்பழைய இரண்டு விளையாட்டுகளையும் குறிப்பிட்டுச் சூத்திரம் செய்துள்ளார். "கெடவரல், பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு". பண்ணை ஆட்டம் = பண்ணாங்குழி, பல்லாங்குழி. கெடவரல் - கேடு வரக் கண்டு வருந்துதலை அபிநயித்து ஆடும் விளையாட்டு.

-----------

மிகப் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி:
---------------------------------

Cup marks or Cupules are widely spread phenomenon throughout the world. https://en.wikipedia.org/wiki/Rock_cupule
I think the Tamil term is first recorded in the PaLLankOyil inscription as "pallaanguzhi".

பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. *வஜ்ரநந்தி குரவர்க்குப் பள்ளிச் சந்தமாகக்* கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது: "வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்". கொங்குநாட்டுச் சமணர் விருத்தம் என்னும் யாப்பில் காப்பியம் முழுமையும் இயற்றக் கற்றுக்கொடுத்தவர் திருத்தக்கதேவர். தாராபுரத்தார் (செ. இராசு, கொங்நாட்டில் சமணம்). சிந்தாமணி காவியத்தில் அழகில் மயங்கிக் கிடந்தான் சோழச் சக்கிரவர்த்தி. அவனை மடைமாற்ற முதலமைச்சர் சேக்கிழார் செய்தது குடிமக்கள் காப்பியமான பெரியபுராணம் என்பது தமிழ் இலக்கிய வரலாறு. சிந்தாமணி உடையார் பெண்கள் “வனத்திடைப் பண்ணையாட” என்றார்.

Cupules/Cupmarks உள்ள காடு “பல்லாங்குழிக் கா” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம்.  "Anthropomorphic Axe" எனத் தொல்லியலர், கலைவரலாற்று நிபுணர்கள் குறிப்பிடும் சின்னம், சங்க இலக்கியத்தில் “மழுவாள் நெடியோன்” (வேதத்தில் வருணன், குடிமல்லம் இலிங்கமாக உள்ளது) எனத் தமிழ்ப் பெயரில் குறிப்பிடப்படுகிறது.  
https://ia601603.us.archive.org/7/items/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC.pdf
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC
அது போல, Cupules/Cupmarks தமிழ்ப் பெயரால் “பல்லாங்குழி” எனச் சுட்டுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். https://commons.wikimedia.org/wiki/File:Cup_marks_India.jpg

These cupules have a very old history in India:
TSS, https://www.asiaville.in/article/the-indian-school-teachers-who-are-pioneering-archaeology-51969
"It is to the credit of 77-year-old Pancholi that he also discovered what he called "the oldest site of petroglyphs [cupules] in the world" at  Daraki-Chattan in the Chambal valley. Daraki-Chattan is a narrow and deep cave made of hard quartzite rock in Bhanpura tehsil and its vertical walls have 530 cupules. These cupules are hollow, cup-marks hammered into rocks by pre-historic man. Hammerstones, which were used to make the cupules, were found in the Daraki-Chattan cave. The cupules here form various patterns. The cupules at Daraki-Chattan belong to the lower Paleolithic age and they are estimated to be two lakh years old.

R.C. Agrawal, retired joint director-general, Archaeological Survey of India (ASI), said on July 17, 2020: "The cupules at Daraki-Chattan were first noticed by Pancholi in 1989. But its significance was not established then. Later, they were seen by Dr Giriraj Kumar who realised their significance. The entire credit goes to Dr Giriraj Kumar for establishing the site's importance."

Dr Agrawal, who is a specialist in rock art, was sure that the cupules at Daraki-Chattan belonged to the lower Paleolithic age. "They are about two lakh years old. This is not absolute dating but conservative dating", he said.  "

https://www.academia.edu/43285895/Cupmarks_in_Central_India
https://www.rockartscandinavia.com/images/articles/a19india.pdf

https://www.bradshawfoundation.com/india/pachmarhi/index.php
http://www.heritageuniversityofkerala.com/JournalPDF/Volume6/28.pdf
https://www.researchgate.net/publication/276496368_Cup_marks_Rock_art_of_Megalithic_Stone_Circles_of_Junapani
https://www.jstor.org/stable/2800386 (in 1976!)

Rock Art of Bodinayakkanur Taluk, Teni District, Tamil Nadu    
P. Jothiswaran
http://www.heritageuniversityofkerala.com/JournalPDF/Volume7/64.pdf

https://www.researchgate.net/publication/51968211_The_Astronomical_Significance_of_'Nilurallu'_The_Megalithic_StoneAlignment_at_Muradoddiin_Andhra_Pradesh_India
https://www.researchgate.net/publication/338410649_Locating_an_Antiquarian_Initiative_in_a_Late_19th_Century_Colonial_Landscape_Rivett-Carnac_and_the_Cultural_Imagining_of_the_Indian_Sub-Continent

பிற பின்,
~NG

N. Ganesan

unread,
Dec 7, 2021, 10:09:03 AM12/7/21
to Santhavasantham
On Fri, Dec 3, 2021 at 8:09 PM Erode Tamilanban <erodetam...@gmail.com> wrote:
> பண்ணாங்குழி, பல்லாங்குழி தொடங்கிப் பல்வேறு வேர்கள் தோண்டி வெளிப்படுத்திய
> நுட்பங்களுக்கு நூறுவணக்கம் போடலாம்.
> பண், பண்ணைச்சூடம் ஆகியவற்றைறையும் இணைத்துப் பண்பாடு வரையிலும் வளர்க்கலாம்.
> Cult -culture- Agriculture எல்லாம்கூட அடிப்படை ஒற்றுமை உடையன.

> இப்படிப்பட்ட சொல்லாய்வுகளைத் தொகுத்து நூலாக வெளியிடுங்கள். தமிழன்பன்

பண்ணை என்பது அடிப்படையில் குழி, தாழ்வான நிலம். அங்கே தான், ஆற்றங்கரைகளில்
பயிர்த்தொழில் தொடங்கிற்ற்று. நாகரிகம் வளர அடிப்படைக் காரணம் மக்கள் ஓரிடத்தில்
நிலைத்து வாழ்ந்து வேளாண்மை செய்ததால் தான். வேளிர் வருகையால் வேளாண்மை
என்ற பெயர் ஏற்பட்டது. இதனால், பல்வேறு மக்கள் கூடி, வணிகம், நகரங்கள், சமயம் என
ஏற்படுத்த முடிந்தது. பல ஆயிரம் ஆண்டுகள் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த
தமிழ்ச் சமுதாயம், வடக்கே இருந்து 3000 ஆண்டு முன்னர் வேளிரும், பிறரும் வருகையால்
குதிரை, இரும்பு, நெல் சாகுபடி, .... எனப் புதிய தொழிநுட்பங்கள் வருகின்றன. சிந்து சமவெளியில்
ஏற்பட்ட பயிர்த்தொழில், வேளாண்மை, உலோகத் தொழில் நுட்பங்கள் பரவுகின்றன.
வேள்- என்ற வேரொடு தொடர்புடையது வேளாண்மை. அவர்கள் தொழில் ஊருக்கே
உணவை அளிக்கிறது.  பின்னர் கி.மு 5, 4 நூற்றாண்டுகளில் எழுத்து வருகிறது. தமிழ் மொழிக்கு  
ஏற்ப இயைக்கின்றனர் (ஐராவதம் நூல்). இவற்றை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம். உ-ம்:

சமயம் என்று எடுத்துக்கொண்டால், லிங்க வழிபாட்டின் தோற்றத்தைத் தெளிவாகக் காட்டுவது
மெகாலித்திக் கால சிற்பங்களும், அவர்றுக்கு அடிப்படையான வடநாட்டு Ochre-Colored Pottery Culture ஆகும்.
சங்க காலத்தில் வருணனில் இருந்து சிவபிரானுக்கு மாறும் இலிங்க வழிபாடு
http://nganesan.blogspot.com/2020/08/civasvami-in-edakkal-cave-brahmi.html
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC
for twitter, whatsapp etc., direct PDF link for download,
https://ia601603.us.archive.org/7/items/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/IVC_Religion_in_IronAge_TamilNadu_by_NGanesan_2016_16th_WSC.pdf

வந்தோரை வாழ வைக்கும் அடிப்படையான தொழில். வேளாண்மைக்கு ஆகுபெயராய்
உதவி/உபகாரம் என்ற பொருளை வள்ளுவர் ஆளுகிறார்:
       இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
       வேளாண்மை செய்தற் பொருட்டு
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0081.aspx

வள்ளுவர்க்குப் பின்வந்த சம்பந்தர் இக்குறளை விளக்குமாப் போலச் சொல்கிறார்:
            வாளார்கண் செந்துவர்வாய்  மாமலையான் தன்மடந்தை
            தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்
            வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
            தாளாளர் ஆக்கூரின்  தான்தோன்றி மாடமே.

*தொல்கோவில்* என்பதனாலே, காவேரி நதி தீரத்தில் வேளாண்மை தோன்றிய முக்கியமான
பகுதியாக, ஆக்கூர் பிரதேசம்.

பண்ணை குலத்தார் Totemic symbol பண்ணைக்கீரை. எனவே, பண்ணைக் கீரையை உண்ணார். அமெரிக்காவில் ஆதி அமெரிக்கர்கள் (கொலம்பஸ் காலத்தில் செவ்விந்தியர் என்றனர்) இந்த மாதிரிக் குலச் சின்னங்கள், தாவரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள், ... உண்டு. மாந்தவியல் நிபுணர் விக்டர் டர்னர், ... போன்றோர் நூல்களில் காண்க. ஏ. கே. ராமாநுஜனும் சொல்லியுள்ளார். வாலசுந்தரக் கவிராயர் கதிராமங்கலத்துச் சடையனை - கம்பனைத் தாங்கிய வள்ளல் - பண்ணை கூட்டத்தான் எனப் பாடியுள்ளார்.  பண்ணை குலத்தாரின் குலதெய்வக் காணிக்கோவில்களின் பாடல் ஒன்று:  http://kongubloods.blogspot.com/2018/04/pannai-kulam.html

பண்ணைக்கீரை:
https://efloraofindia.com/2011/02/14/celosia-argentea/ (அனேகமாக, வெண்மை நிறப் பூ)
https://www.jcu.edu.au/discover-nature-at-jcu/plants/nq-weeds-by-scientific-name2/celosia-argentea
https://www.ifoundbutterflies.org/nectar-plants/908/Celosia-argentea
http://ta.wikipedia.org/wiki/பண்ணைக்கீரை
http:www.facebook.com/1655627611346588/photos/பண்ணைக்கீரை08012019/2230450787197598/
http://rajiyinkanavugal.blogspot.com/2019/10/blog-post.html
https://www.tamilwealth.com/health/giving-nourishment-to-farm-beans/c80846-w3070-cid725457-s11987.htm

பண்ணைச்சூடு சிவப்பாக இருந்தால், அதன் பெயர்: சேவற்சூட்டுப் பண்ணை/சாவச்சூட்டுப்பண்ணை.  Cockscomb (Cock's comb).
https://www.ifoundbutterflies.org/nectar-plants/908/Celosia-argentea
https://www.missouribotanicalgarden.org/PlantFinder/PlantFinderDetails.aspx?taxonid=267315&isprofile=0&

விவசாயம் செய்தல் என்கிறோம். முற்காலத்தில் இதன் தமிழ்ச்சொல்: பண்ணைமை ஆகும். பண்ணாமை என்போம், அதாவது வெள்ளாமை (< வேளாண்மை) பயிர்த்தொழில். பண்ணை+ஆடு - பண்ணாடி. அதாவது, பண்ணைக்கு அதிகாரி. பொதுவாக, மேனேஜர் என்ற பொருளிலும் வரும். சென்ஸஸ் எடுக்கும் காலங்களில் வாத்தியார்கள், வீடுகளுக்குச் சென்று ‘உங்கள் பண்ணாடி எங்கே?” எனக் கேட்பார்கள்.  .... பண்ணாட்டு = management, அதிகாரம்/மேலாண்மை செலுத்தல். பண்ணாடி = அதிகாரி, மானேஜர், பண்ணையார்.

நா. கணேசன்


 

On Fri, Dec 3, 2021 at 8:09 PM Erode Tamilanban Erode Tamilanban <erodetam...@gmail.com> wrote:
பண்ணாங்குழிபல்லாங்குழி
தொடங்கிப்பல்வேறு
வேர்கள்தோண்டிவெளிப்படுத்திய
நுட்பங்களுக்கு நூறுவணக்கம்
போடலாம்
பண்,பண்ணைச்சூடம்ஆகியவற்றைறையும்இணைத்துப்பண்பாடுவரையிலும்வளர்க்கலாம்.
Cult-culture-Agriculture எல்லாம்கூட
அடிப்படை ஒற்றுமைஉடையன.

இப்படிப்பட்ட சொல்லாய்வுகளைத்
தொகுத்துநூலாக வெளியிடுங்கள்.

N. Ganesan

unread,
Dec 9, 2021, 7:32:50 PM12/9/21
to
பண்ணை அடித்தல்:
---------------

மன்னார்குடி வட்டம், பேராசிரிய நண்பர் ஒருவர் கேட்டிருந்தார்:
> பண்ணையடித்தல்  என்றால் என்ன?

NG> அப்படி ஒரு சொல் இருக்கிறதா?

> எங்கள் பகுதியில் யார் மீதாவது கோபமாக இருந்தால் இவ்வளவு நேரம் எங்கே போய் பண்ணை அடிச்சுட்டு வர என்று கேட்பார்கள்.

பரம்படித்தல், பரம்பு அடித்தல் உண்டு.  https://youtu.be/BppXCDbtqO0
பரம்படித்தல் என்பது தான் பண்ணையடித்தலா?
இணையத்தில், பண்ணை அடித்தல் துழாவினால், https://twitter.com/kaviikanna/status/1396034599382183936
கோவணம் கட்டி ஆண்டை கொல்லையில பண்ணை அடிச்சுட்டு இருந்து இருப்பேன்

கொங்குநாட்டில், நெல் குத்தும் பண்ணை, நாய்களுக்கு அம்பிலி ஊத்தும் பண்ணை எல்லாம் உண்டு.
'மரத்துக்குப் பண்ணை பிடிக்கவேண்டும்' - குழி எடுத்து நீரைத் தேக்கல் (நெல்லை வழக்கு. MTL).

தண்செய்(தஞ்சை), திருச்சி மாவட்டத்தார், உழவுத் தொழிலில் பண்ணையடித்தல் என்பதைப்
பற்றி விளக்கினால் நன்றி. பண்ணையடித்தல் உழவுத்தொழிலில் ஒன்று எனில் அகராதிகளில் ஏறவேண்டும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 10, 2021, 2:17:01 AM12/10/21
to
Thanks to Dr. Ravindran Venkatachalam, Tamil poet and Prof. of Surgery, SRM Medical College
for pointing me to this URL:
https://solalvallan.com/பண்ணையடித்தல்-அக்கறையா/
சொல் பொருள்
பண்ணையடித்தல் – அக்கறையாக வேலை செய்தல்

சொல் பொருள் விளக்கம்
பண்ணை என்பது உழவர் பெருங்குடி; அக்குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர் பண்ணையில் வேலை மிகுதியாக இருக்கும். வேலைக்கு அஞ்சியவர் பண்ணையில் வேலை செய்ய முடியாது. ஆதலால் பண்ணையடித்தல் என்பது கடுமையாக உழைத்தல் என்னும் பொருளில் வழங்குவதாயிற்று. சிலர் வேலை செய்வதாக நடிப்பர்; இன்னும் சிலர் ஏய்ப்பர்; அத்தகையரை “நீ பண்ணையடித்தது போதும்; போய்வா” என அனுப்பி விடுவர். “நீ பண்ணையடிக்கும் சீரைப்பார்த்தால் விதைத் தவசமும் வீட்டுக்குவராதே” என்பர். இதனால் அக்கறையாக வேலை செய்தல் பண்ணையடித்தல் எனப்படுவது என அறியலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு பண்ணையடிக்கும் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம்
https://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/10-sp-1018815376/11607-2010-11-24-08-51-44
Reply all
Reply to author
Forward
0 new messages