15 எழுத்துள்ள பல அட்ட நாகபந்தம் பார்த்தாயிற்று. அதனினும் பெரிய அஷ்ட நாகபந்தம் பார்ப்போம்.
சுவாமி விவேகானந்தரை ஹிந்து சமயப்பெற்றியை உலகுணர அமெரிக்காவின் சிக்காகோ மாநகருக்கு
அனுப்பிய பாஸ்கர சேதுபதி மீதான அட்டநாகபந்தம். யாழ்ப்பாணப் புலவர் இயற்றியது.
சீதரா பாற்கரா சீல நிறையாளா
சேது பதியான சீரைய - போதப்
பகவனக லாதமா பாங்கினக நேய
சகல பயனுந்தா தா
-உடுப்பிட்டி அ. சிவசம்புப் புலவர்
இதனை எழுத எளிதாக, இதன் நூற்பா (சூத்திரம்) என்ன? எந்தெந்த எழுத்துக்கள் ஒன்றாக அமைக்கவேண்டும்?
-------------