அதிகம் பரவலாய்த் தெரியாத பொருள்கள் தோகை (> சோகை)க்கு உண்டு. அவற்றில் சில பார்ப்போம்.
(1) தோகை = வால். திவாகர நிகண்டு, மற்றும் கல்லாடம்: தோகைமண் புடைக்குங் காய்புலி (கல்லாடம் 6).
வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழும் - அகநானூறு. இதில் “தோகை” = நாய்வால்.
(2) குதிரைவாலி (அ) குதிரைத்தோகை (Horsetail millet)
(3) Stalk, sheath of millet or plantain; தினை வாழை முதலியவற்றின் தோகை. பரூஉக்குரற் சிறுதினை (புறநா. 168, 6).
The banana plant is a gigantic herb that springs from an underground stem, or rhizome, to form a false trunk 3–6 metres (10–20 feet) high. This trunk is composed of the basal portions of leaf sheaths and is crowned with a rosette of 10 to 20 oblong to elliptic leaves that sometimes attain a length of 3–3.5 metres (10–11.5 feet) and a breadth of 65 cm (26 inches). A large flower spike, carrying numerous yellowish flowers protected by large purple-red bracts, [A - வாழையின் தோகை]
சூகம்¹ cūkam , n. < šūka. (யாழ். அக) 1. Beard or awn of a spike of rice, barley, etc.; நெல்முதலியவற்றின் தோகை.
தோகைச் செந்நெல் (கொங்குவேளிர், பெருங்கதை) = Wild Rice with awn
we introduced splinter which it grew really of rice.
There is rice with long splinter when we look at ear of rice well.
Part of red arrow is splinter.
This splinter is called "awn" (nogi) and is prickly when we touch.
When rice grew wild, we were effective in protecting fruit from animal and seemed to help because it stuck to hair of animal and was carried far.
However, long awn sticks in handle and it sticks to clothes and interferes with crop.
Therefore rice without long awn was created.
காட்டுநெல்லும் தோகையும் (wild rice with awn).
By necessity, wild grasses are mean little things; for example, the seeds of many wild grass species have awns, large, barbed spikes that can fend off seed-eating animals, assist in seed dispersal, and help plant the seeds. In wheat (Triticum spp), changes in humidity cause the awns to flex, which can help bury the seeds. After thousands of years of artificial selection, our domesticated cereal crops have shorter or nonexistent awns to facilitate grain harvesting, handling, and storage. Rice (Oryza sativa) domestication also involved alterations in many traits, including growth habit, seed shattering, panicle architecture, grain size, and hull color (reviewed in Sang and Ge, 2013).
-------------------------------------
barley = தமிழில் வால்கோதுமை (அ) தோகைக்கோதுமை.
நா. கணேசன்
கவி காளமேகம், எண்ணாயிரம் ஊரினர், ஆனால் பணிபுரிந்தது சீரங்கம் மடப்பள்ளியில் பரிசாரகராக.
கன்னட நாட்டில் கௌந்தி அடிகள் எனும் சமணக் குரத்தியாரைச் சந்தித்ததை இளங்கோ அடிகள் ‘நாடுகாண் காதையில்’
குறிப்பிடுகிறார். அதற்கு சில சான்றுகளாக, காவதம், காதம் என்னும் அளவைகளை இளங்கோ அடிகள் 5-ஆம் நூற்றாண்டு
வாக்கில் தமிழில் அறிமுகம் செய்வதும், அவை வடசொற்கள் என்பதும் விளக்கியுள்ளேன். இன்னொன்று:
கன்னடத்தில் சாயிரம் என இந்தோ-இரானிய ஸஹஸ்ரம் விளங்குதலும், கன்னடத்தின் சாயிரம் > ஆயிரம் எனத் தமிழில்
சாயிரம் என கன்னடத்தில் ஆயிரம் வழங்கியது என பர்ரோவோ, தமிழில் அறிஞர்களோ இன்னுங் குறிப்பிடவில்லை. பார்த்தால் தமிழில் ஆயிரம் என்ற சொற்பிறப்பு
பற்றி மக்கள் தெளிவுறுவர் என்பது திண்ணம். கன்னட அறிஞர் குறிப்பிடும் கல்நாடு, அங்கே பிறந்து ஓடி அகல்நாடு என்னும் கொங்குநாட்டில்
(அகல் விளக்குப் போல திரியாய் காவிரி பாயும் நாடு. அகல் = விளக்கு என்னும் சொல் ஏராளமான தமிழ் ப்ராமி பானையோடுகளில் பார்க்கலாம்.)
இருப்பதும் சங்க இலக்கியத்தில் உண்டு. கன்னாட்டிலும், அகல்நாட்டிலும் சமணமும், சைவமும் மோதின. தமிழிலே முதன்முதல்
திருநீறு அணிதல் பற்றிய பாடல் அகல்நாடு உள்ள பாடல். மிக அண்மைக்காலம் வரை கொங்குநாடு -அகல்நாட்டு கைம்பெண்டிர்
வெள்ளைச்சீலையும், திருநீறு தரித்த கோலமுமாய் இருப்பதை தினமும் காணலாம். உ-ம்: கொடுமுடிக் கோகிலம் கே.பி. சுந்தராம்பாள்.
இந்தச் சங்கப் பாடல் பற்றி ”இராவண காவியம்” பாடிய புலவர் அ. மு. குழந்தை போன்றோர் குறிப்பிடுவர் என்கின்றனர் புலவர் செ. இராசு போன்றோர்.
தமிழ் சைவ மடங்கள் தமிழைக் காத்தளித்த திருமடங்கள். அங்கேதான் தமிழுணர்ச்சியை உவேசா போன்றோர் அடைந்தனர்.
அழகான, மங்கலமான மொழிவழக்குகள் உருவாகிய இடங்கள் சைவமடங்கள். அதன் தமிழ் அழகானது. அப்படி ஒரு மடப்பள்ளி
வழக்கத்தை வெண்பாவில் காளமேகம் படம்பிடித்துக்காட்டியுள்ளார். திருவானைக்காத் தாசியுடன் அம்மடத்தில் பாடியதாகலாம்.
எங்கள் மடத்துக்கு எரிகரும்பு வெட்டுதற்குப்
புங்கங்கொம் பங்கிங்கொன் பதுபுளி - யங்கொம்பங்
கிங்கொன் பதுவெட்டி நறுக்கிய வெள்வேலங் கொம்பங் கிங்கொன் பது.
வெள்வேல் - வென்வேல் என தட்டுப்பிழை (ப்ராஜக்ட் மதுரையில்). ள்-ன் எழுத்துமயக்கம் கையெழுத்தில் எளிது.
சோழநாடு சோறுடைத்து என்றாள் ஔவை. திருமடங்களில் தலைவாழை இலையில் தினமும் சாப்பாடு பரிமாறினர்.
மடம் என்ற சொல்லே மடுத்தல் “உண்ணுதல்” என்னும் தமிழ்ச்சொல் என இரா. நாகசாமி விளக்கியுள்ளார். மடம் Mutt
e.g. Kanchi Mutt என இந்தியா முழுதும் பிரபலம். வாழையிலையை தோகை என்பதும் தமிழ்ச் சைவ மரபுகளில் ஒன்று.
யாகசாலை நிர்மாணத்துக்கு “வாழைத் தோகை” என்றி வாழையிலைகளைக் குறிப்பிடுகின்றனர். கவிஞர் வாலி
திருப்பராய்த்துறை ஊர்க்காரர். சீரங்கத்தில் இளைஞராய் வாழ்ந்தவர். வாழை மிகுதியும் காவிரியால் பயிராகும்
ஊர்கள் அல்லவா? ”வாழைத் தோகை” என்பதை அடிமைப்பெண் (எம்ஜிஆர் படம், 1969) பாடலில் தன் மண்வாசனை
தெரியப் பாடியுள்ளார் வாலி. இங்கே முதல்வர்கள் இருவர் ஆடக் காண்போம்,
வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ?
வாழை போல தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ?
அழகும் கலையும் வாழும் நாடு
ஆண்டவன் வீடாய்த் திகழாதோ ?
இவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ ?
இந்தனத்திற்கு எரிகரும்பு என்பதும், கரும்பு, நெல், சோளம், வாழை இலைகளை தோகை என்பதும் தமிழின் அழகுகளில் ஒன்று. ~NG