sivapurANam - urai by Krupananda Variyar

700 views
Skip to first unread message

Siva Siva

unread,
Oct 28, 2006, 11:57:59 PM10/28/06
to housto...@googlegroups.com, mutht...@googlegroups.com
2006-10-28
I recently came across a small booklet (about 45 pages) of Sivapuranam with meaning and commentary by Sri Krupananda Variyar. In the next few days/weeks I will type it up and post in installments here.
anbudan
V. Subramanian
==============================================================================================

திருச்சிற்றம்பலம்

 

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்

அருளிய

சிவபுராணம்

திருவாசகம்

 

உரையாசிரியர்

: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்

===============================================================

முன்னுரை

தமிழ் மறையாய்

, எட்டாந் திருமுறையாய்ச், சிகாமந்திரமாய்ச் , சிவானுபவச் செல்வமாய்த், தெவிட்டாத இன்ப அமுதாய் விளங்குவது திருவாசகம். திருவாசகத்தை ஓதுவார்க்குப் பிறவித் துன்பம் நீங்கிச் சிவப்பேறு சித்திக்கும். இத்திருவாசகத்தை உள்ளங் குழைந்து ஓதுவார் எண்ணில்லாத அருள் நலங்களைப் பெறுவார் .

திருவாசகத்தில் முதலில் விளங்குவது சிவபுராணம்

. இது எல்லையில்லாத பெருமையுடையது. நூற்றெட்டு உபநிஷதங்களின் சாரமாக விளங்குவது .

"

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் " என்று கூறியிருப்பதினால், பொருள் தெரிந்து பாராயணஞ் செய்தல் சாலப் பயனுடையது . சிவானுபவம் பெற்றவர்க்கே இது தெற்றென விளங்குஞ் சீருடையது. எனினும் திருவருளைச் சிந்தித்துச் சிறிது எழுதினேன்.

அன்பர்கள் அன்பு கூர்ந்து படித்துப் பாராயணம் புரிந்து அருட்செல்வர்களாய் விளங்குவார்களாக

.

அன்பன்

,

கிருபானந்தவாரி

============================================================= 

திருச்சிற்றம்பலம்

திருவாசகச் சிறப்பு

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே

- எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்

.

ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய

திருவாசகத்துள்

சிவபுராணம்

(

திருப்பெருந்துறையில் அருளியது)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க

5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

10

ஈசன் அடி போற்றி எந்தை அடி போற்றி

தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி

15

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்

. 20

கண் நுதலான்தன் கருணைக் கண்காட்ட வந்து எய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய்

, விளங்கு ஒளியாய்,

எண் இறந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்

, எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

35

வெய்யாய்

, தணியாய், இயமானனாம் விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய்

, அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்

நாற்றத்தின் நேரியாய்

, சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

45

கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய்

, விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய்

, எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை

அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்

புறம் தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி

,

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய

, 55

விலங்கு மனத்தால்

, விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி

,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரனே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் எம் காவலனே காண்பரிய பேர் ஒளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய் சொல்லாத நுண் உணர்வாய்

80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக் குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து

. 95

-----

திருச்சிற்றம்பலம்


--
http://www.geocities.com/nayanmars

Siva Siva

unread,
Oct 29, 2006, 7:46:48 AM10/29/06
to housto...@googlegroups.com, mutht...@googlegroups.com

சிவமயம்

திருவாசகம்

நூற்சிறப்பு

வெண்பா

தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி

அல்லலறுத்(து) ஆனந்தம் ஆக்கியதே - எல்லை

மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவா சகமென்னும் தேன்.

உரை

:

எல்லை மருவா நெறி அளிக்கும்

- முடிவு இல்லாத வீட்டு வழியைத் தருகின்ற, வாதவூர் எம்கோன் - திருவாதவூரில் தோன்றிய எமது மாணிக்கவாசகப் பெருமானுடைய திருவாய் மலரில் தோன்றிய, திருவாசகம் என்னும் தேன் - திருவாசகம் என்று கூறுகின்ற தேன், தொல்லை இரும் பிறவி - தொன்று தொட்டு வரும் பெரும் பிறவியாகிய, சூழும் தளை நீக்கி - உயிரைச் சூழ்ந்துள்ள கட்டினை அகற்றி , அல்லல் அறுத்து - துன்பத்துக்குக் காரணமாகிய அறியாமையை அறுத்து , ஆனந்தம் ஆக்கியது - இன்பத்தை விளைத்தது. ( - தேற்றம்).

விளக்கவுரை

:

இப்பாடலில் திருவாசகம் என்ற அரிய அருள் நூலை நமக்குப் பரம கருணையினால் வழங்கிய பரமகுருநாதருடைய பெருமையைச் சுருக்கமாகக் கூறுகின்றார்

. சரியை கிரியை யோகம் ஞானம் என்பனவற்றுள் நான்காவது பாதமாகிய ஞானத்தின் வழியைச் சொன்னவர் ஆதலின் , எல்லை மருவா நெறி அளிக்கும் என்று நான்கு சொற்களால் சிறப்பித்தார்.

எல்லை மருவா நெறி

வீட்டின்பந் துய்க்குந்தொறும் முடிவு காணப்படாது நீளும் இயல்புடையது ஆதலின் எல்லை மருவா நெறி என்று கூறினார்.

வாதவூர் எங்கோன்

திருவாதவூரில் திருவவதாரம் புரிந்த மாணிக்கவாசகப் பெருமானார் எமக்கு அருட்பெருந் தலைவர்; அருளரசர். ஆதலின் எங்கோன் என்றார்.

திருவாசகம்

கண்டாரால் விரும்பப்படும் திருவினை உடைய அருள்வாசகம்.

தேன்

தேன் மலரிலிருந்து வண்டு தரக் கிடைப்பது. வாதவூரராகிய வண்டு வேதாகமங்களாகிய மலர்களிலிருந்து எடுத்துச் சுவைபட வழங்கிய தேன் திருவாசகம் .

தேன் தானுங் கெடாது

; தன்னைச் சார்ந்த பொருளையும் கெட விடாது. அதுபோல் திருவாசகம் தானும் அழியாது நின்று , தன்னை ஓதுவாரையும் பிறவித் துயரில் வீழ்ந்து அழியாத அருட்பாங்கினை வழங்குவது.

தேன்

- பித்தத்தை நீக்கும்; அரோசகத்தை (உணவில் வெறுப்பை) மாற்றும்; உடலுக்கு உறுதி செய்யும் .

இதுபோல் திருவாசகமாகிய தேன் நெடுங்காலமாக உயிரைச் சூழ்கின்ற பெரும் பிறவியாகிய கட்டினை நீக்கும்

. அறியாமையை அகற்றும் . சிவபோகமாகிய பேரின்பத்தைத் தரும்.

திருவாசகம்

- எழுவாய்; ஆக்கியது - பயனிலை.

திருவாசகம் பிறவித் துன்பத்தையும்

, அதற்கு ஏதுவாகிய அறியாமையையும் நீக்கி ஆனந்தம் ஆக்கியது எனக் கொள்க.
================
anbudan,
On 10/28/06, Siva Siva wrote:

Siva Siva

unread,
Oct 29, 2006, 8:29:43 AM10/29/06
to housto...@googlegroups.com, mutht...@googlegroups.com
இப்பாடல் (நூற்சிறப்பு - "தொல்லை இரும்பிறவி") மாணிக்கவாசகர் எழுதியது அன்று.
தருமை ஆதீன உரையிலிருந்து:
"இவ்வெண்பா பிற்காலப் பெரியோர் மொழி. இதனை, 'எல்லை' என்பதினின்றுந் தொடங்கி நேரே சென்று, 'ஆக்கியதே' என முடிக்க. இதுபோலும் பாடல்கள் பிறவும் உளவேனும், இஃது ஒன்றே முதற்கண் மரபாக ஓதப்பெற்று வருகின்றது"
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
--
http://www.geocities.com/nayanmars
 
On Oct 29, 8:12 am, "வேந்தன் அரசு" wrote:
> ஐயா,
>
> இந்தப் பாடல் மாணிக்க வாசகர் எழுதியதா அல்லது பிறரா?
>
> வேந்தன் அரசு
> சின்சின்னாட்டி

 

Siva Siva

unread,
Oct 29, 2006, 10:06:56 AM10/29/06
to housto...@googlegroups.com, mutht...@googlegroups.com

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

சிவபுராணம்

சிவனது அனாதி முறைமையான பழைமை

(

திருப்பெருந்துறையில் அருளிச் செய்தது)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க

5

பதவுரை

நமச்சிவாய வாழ்க

:

நமச்சிவாய என்ற திரு ஐந்து எழுத்து வாழ்க

; நாதன் தாள் வாழ்க - நாத தத்துவத்தில் விளங்கும் தலைவனுடைய திருவடி வாழ்க .

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்

- கண் இமை ஒருகால் பொருந்தும் ஒரு கண நேரமும் என் உள்ளத்தினின்றும் அகலாதவனுடைய , தாள் வாழ்க - திருவடி வாழ்க.

கோகழி ஆண்ட

- திருப்பெருந்துறையில் எழுந்தருளி அடியேனை ஆட்கொண்ட, குருமணி தன் தாள் வாழ்க - நாதனாகிய மாணிக்க மணியின் மலரடி வாழ்க.

ஆகமம் ஆகி நின்று

- ஆகமமாகிய ஞான நூலின் பொருளாகி நின்று, அண்ணிப்பான் தாள் வாழ்க - அணுகி அருள்புரிவானுடைய திருவடி வாழ்க.

ஏகன் அனேகன்

- ஒருவனாக இருந்தே பல உருவங்களை உடையோனாய், இறைவன் - எப்பொருளிலும் தங்குவோனுடைய, அடி வாழ்க - திருவடி வாழ்க .

விளக்கவுரை

நமச்சிவாய வாஅழ்க

:-

திருப்பெருந்துறையுள் மாணிக்கவாசக சுவாமிகட்கு இறைவன் குருவடிவாக எழுந்தருளிவந்து திரு ஐந்தெழுத்தை உபதேசித்தருளினார்

. செவி வழியாகச் சென்ற அத் திருவைந்தெழுத்து உள்ளே பெருகிப் பொங்கித் ததும்பி உலகம் உய்ய அப் பெருமானாருடைய வாய் மலர் வழியே தேனாக வழியத் தொடங்கிற்று .

எது வாழ்ந்தால் உலகம் யாவும் வாழுமோ

, எது அகில உலகங்களையும் ஆக்கியும் அளித்தும் அழித்தும் மறைத்தும் அருளவல்லதோ , எது உலகங்கெட்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றதோ, அம் மகா மந்திரமாகிய ' நமசிவாய' என்ற அருள்வாக்கியம் வாழ்வதாக என்று வாழ்த்துகின்றனர்.

வடமொழியில் ய என்ற எழுத்து

, தமிழில் நான்காம் வேற்றுமை உருபாகிய கு என நின்று பொருள்படும். " நமசிவாய" - வணக்கம் சிவபெருமானுக்கு என்று பொருள்படும். இம்மந்திரம் வேதத்தின் நடுவில் உயிர்போல் விளங்குகின்றது .

வேதங்கள் மூன்று

. (அதர்வண வேதம் எல்லாம் கலந்த ஒரு கலவை). வேதத்ரயம் என்பர் . இந்த மூன்று வேதங்களில் நடுவில் உள்ளது யஜுர்வேதம். அவ்வேதம் 101 சாகைகளை உடையது . அவற்றின் நடுவில் உள்ளது 51-ம் சாகை. அதுவே ஸ்ரீ போதாயன சாகை என்று சொல்லப்படும். அது ஏழு காண்டங்களை உடையது. அவற்றின் நடுவில் உள்ளது நாலாவது காண்டம் . அக்காண்டம் ஏழு சம்ஹிதைகள் கொண்டது. அந்த சம்ஹிதைகளின் நடுவிலுள்ளது ஐந்தாவது பிரச்னம் . அதன் நடுவிலுள்ளது "நம: சோமாயச" என்று தொடங்குகிற அநுவாகம். அவ்வநுவாகத்தில் நடுவிலுள்ளது சகல வேதசாரமான திருஐந்தெழுத்து ..

- திரோத மலம்; - ஆணவ மலம்; சி - சிவம்; - திருவருள்; - ஆன்மா ; இந்த ஐந்து பொருள்களையும் பஞ்சாக்கரம் என உணர்க.

சிவன் அருள் ஆய சிவன்திரு நாமம்

சிவன் அருள் ஆன்மாத் திரோதமல மாயை

சிவன் முதலாகச் சிறந்து நிரோதம்

பவம தகன்று பரசிவன் ஆமே

- திருமந்திரம்.

இரண்டாவது வரியில் திருவைந்தெழுத்தாகிய சிவாயநம என்பதற்குப் பொருள் கூறியுள்ளார்

.

வேத

[ம்] நான்கினும் மெய்ப் பொருளாவது

நாதன் நாம

[ம்] நமச்சிவாயவே - சம்பந்தர்.

நாவினுக்

(கு) அருங்கலம் நமச்சிவாயவே - அப்பர்.

நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்

நமச்சிவாயவே நானறி விச்சையும்

நமச்சிவாயவே நாநவின் றேத்துமே

நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே

- அப்பர்.

நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு

[ம்] நா நமச்சிவாயவே - சுந்தரர்.

நமசிவயப் பொருளானே

- அருணகிரிநாதர்.

நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்

நமச்சிவாயத்தை நான் மறவேனே

- வள்ளலார்.

இத்தகைய திருஐந்தெழுத்தை ஓதுந்தோறும் ஓதுந்தோறும் ஆணவ மலம் தேய்ந்து ஆன்ம சக்தி மிகுந்து சிவவொளி வாய்க்கப்பெற்றுப் பேரின்பமுறுவர்

.

ஒன்று கண்டீர் உலகுக் கொருதெய்வமும்

ஒன்று கண்டீர் உலகுக் குயிராவது

நன்று கண்டீர் இனி நமச்சிவாயப் பழம்

தின்று கண்டேற்கிது தித்தித்தவாறே

- திருமந்திரம்.

நாதன் தாள் வாழ்க

:-

மேற்போந்த திருஐந்தெழுத்தினை ஓதுங்கால் நாதந் தோன்றும்

. அந்த நாத தத்துவத்தில் விளங்குகின்ற தலைவனுடைய திருவடி வாழ்க ..

விந்துவில் திருவருட் சத்தி தோய்தலும்

, அதன் வேகத்தை ஆற்றாத விந்து தத்துவம் எண்ணில்லாத வேகத்துடன் சுழன்றது . அதனின்றும் நாதம் தோன்றியது.

சுழன்றது விந்து

; நீண்ட ஒலியுடன் வந்தது நாதம்; இதுதான் பிள்ளையார் சுழி "".

சுழன்று படுத்திருப்பது பாம்பு

. அது விந்து. அதனை அணிவது நாதம் .

"

நாகமணிகின்ற நாதனிலை கண்டு

நாடியதில் நின்று தொழுகேனே"

என்ற அருணகிரியாருடைய பாடல் இந்தத் தத்துவத்தைக் குறிக்கின்றது

.

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்

:-

உயிர்களின் இதய தாமரையில் இறைவன் வீற்றிருக்கின்றான்

.

"

ஸர்வானன சிரோக்ரீவ: ஸர்வபூத குஹாசய "

-

கிருஷ்ண யஜுர்வேத சுவேதாசுவதரோபநிஷத்

எங்கும் முகத்தையும் தலையையும் உடையவன்

. எல்லா உயிர்களின் உள்ளத்திலும் உள்ளவன். " மலர்மிசை யேகினான்" என்பது வள்ளுவனார் வாக்கு.

அவனை நினையாதார் உள்ளத்துள் பாலில் படு நெய்போல் மறைந்திருக்கின்றான் இறைவன்

. இடையறாது நினைந்துருகும் அடியார் நெஞ்சில் தயிரில் நெய்போல் விளங்கித் தோன்றுவான் .

"

நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்" - அப்பர் .

கோகழியாண்ட

:-

கோகழி என்பது திருப்பெருந்துறையைக் குறிக்கும்

. இதற்குத் திருவாவடுதுறை எனவும் பொருள் கொள்வார்; அது சிறப்புடையதாகாது. அடிகளாரை இறைவன் குருவடிவாக வந்து ஆட்கொண்ட இடம் திருப்பெருந்துறையே ஆகும்.

கோ

- தலைமை; கழி - துறை; கோகழி - பெருந்துறை.

கோ

- பசுபோதத்தை; கழி - கழித்து ஆட்கொண்டான் என்று கூறினும் அமையும்.

குருமணி

:-

இறைவன் குருமூர்த்தமாக வந்தான்

. அப்பெருமான் திருமேனி மாணிக்கமணி அன்ன செம்மேனியாக ஒளி செய்தது.

மாணிக்கம் ஒத்து மரகதம் போன்ற வயிரம் மன்னி

ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே

- அப்பர்

ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்

:-

- என்ற உப சர்க்கம் அண்மைப் பொருளையும், கம் - என்ற சொல் போதலையும் உணர்த்தும். எனவே, ஆகமம் என்ற சொல் போய்ச் சேர்தல் என்று பொருள்படும் .

சிவபெருமானைச் சென்று அணுக வைக்கும் ஞான நூல்கள் ஆகும்

.

அண்ணித்தல்

- நெருங்கி வந்து அருள்புரிதல்;

அண்ணித்தல்

- இனித்தல் என்றும் பொருள்படும்;

ஆகமப் பொருளாகி நின்று

, நெருங்கி வந்து இனிக்க அருள்புரிவான் இறைவன்.

ஏகன் அனேகன் இறைவன்

:-

சிவமூர்த்தி ஒருவரே அகில உலகங்கட்கும் தனிப் பெருந் தலைவர்

. அவரே பரம்பொருள்.

"

ஸ சிவ ஏகோதேவ"

"

ஸர்வஸ்ய ப்ரபும் ஈசானம்"

"

ஏக ஏவ சிவோ நித்ய"

"

ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாயதஸ்தே"

என்று உபநிஷதங்கள் முறையிடுகின்றன

.

அப்பெருமான் அடியார்கள் பொருட்டுப் பல்வேறு திருமேனி எடுத்துக்கொள்கிறார்

. அதனால் அனேகன் என்றார்.

இறைவன்

- எப்பொருளிலும் தங்குகின்றவன்; இறு என்ற பகுதியடியாகப் பிறந்தது இறைவன் என்ற சொல் . வாழ்த்துவது ஏன்?

அழிவில்லாத ஆண்டவனை நாம்

- சிற்றறிவும் சிறு தொழிலும் அற்ப ஆயுளும் உடைய நாம் வாழ்த்துவது ஏன்? நீர், நெருப்பு, கனி, நெல் , காற்று, மரம், செடி , கொடி முதலிய அனைத்தும் வாழ்ந்தால்தான் உயிர்களாகிய நாம் வாழ முடியும். நீர் வாழ்க , நிலம் வாழ்க, செடி வாழ்க, கொடி வாழ்க என்று எல்லாவற்றையும் வாழ்த்துவது இயலாத காரியம் . ஆயிரம் மணிகள் ஒரு நூலால் கோவைப்பட்டுள்ளன. ஆயிரம் மணிகளையும் தனித்தனியே அசைப்பது கடினம் . ஆயிரம் மணிகளிலும் நுழைந்துள்ள நூலை அசைத்தால் மணிகள் யாவும் அசையுந்தானே? அதுபோல் எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்ற சிவபெருமானை வாழ்த்தினால் அகில உலகங்களும் வாழும் என உணர்க . இங்கே சுவாமிகள் ஆறுமுறை வாழ்க என்று வாழ்த்துகின்றார்.

இனி

, இறைவனுடைய திருவடியே வெற்றி பெறுவதாக என்று கூறத் தொடங்குகின்றார்.

===============================================================

அன்புடன்

,
வி. சுப்பிரமணியன்
Reply all
Reply to author
Forward
0 new messages